Jump to content

லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகளுக்கு 19 வருட சிறைத்தண்டனை - அதிா்ச்சித் தகவல்


Recommended Posts

லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகளுக்கு 19 வருட சிறைத்தண்டனை - அதிா்ச்சித் தகவல்  

 
 

1407584010849799_1428314237458505_243043

லண்டனில் வசித்து வரும் தமிழ் தம்பதிகள், 145 மில்லியன் பவுன்டுகளை வெள்ளையடித்து இறுதியில் டாக்ஸ் ஆபீசிடம் சிக்கிக்கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் 19 வருட சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கியுள்ளார்.

 

நடந்தது என்ன ?

லண்டனில் உள்ள பிரபலமான ஆக்ஸ்பேட் வீதியில் மேலும் 2 இடங்களில் பணமாற்று சேவை நிலையத்தை வைத்து நடத்தி வந்துள்ளார் மூத்ததம்பி சிறீஸ்கந்த ராஜா. இவரது மனைவியின் பெயர் திலகேஸ்வரி. இவர்கள் இருவரும் லண்டனில் உள்ள பெரும் கிருமினல் குழுக்களிடம் பணத்தை பெற்று அதனை ஐரோப்பாவில் உள்ள நாடுகளுக்கு அனுப்புவதும், பின்னர் அதனை மீண்டும் லண்டனுக்கு அனுப்பி அந்த கறுப்பு பணத்தை வெள்ளையடிப்பதில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். லண்டன் மத்திய நகரில் உள்ள ஹரட்ஸ் என்னும் உயர்தரக் கடைகளில் காணப்படும் லாக்கர்களை இவர்கள் பயன்படுத்தி அதில் பணத்தை பதுக்கிவைப்பது வழக்கம். பின்னர் அதனை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி , மீண்டும் அதனை லண்டனுக்குள் வங்கி மூலம் கொண்டுவந்துள்ளார்கள்.

இதனால் காசு வெள்ளையடிக்கப்படுகிறது(அதாவது உத்தியோகபூவர் காசாக மாறுகிறது) அல்லவா. இப்படியாக இவர்கள் மொத்தம் 145 மில்லியன் பவுன்டுகளை வெள்ளையடித்து கொடுத்து, அதற்காக பெரும் பணத்தை தமது பங்காகப் பெற்றுள்ளார்கள். என்ன ஒரு விடையம் இவர்கள் டாக்ஸ் ஆபிஸ் மற்றும் வருமான வரித்துறையை இழிவாக எண்ணிவிட்டார்கள். குறித்த தமிழர்களது நிறுவனத்தில் இருந்து பெரும் பணம், ஐரோப்பிய நாடுகள் செல்வதும். பின்னர் அவை மீண்டும் லண்டனுக்குள் வருவதையும் அவதானித்த வருவாய்துறை அதிகாரிகள். மாறுவேடத்தில் இந்த தம்பதிகளை அவதானிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இவர்கள் இருவரும் சகோதரிகளான மார்லின் மற்றும் லூசியா ஆகிய பெண்களை வைத்து, பெரும் பணத்தை ஐரோப்பாவுக்கு கடத்துவதை அதிகாரிகள் எப்படியோ மோப்பம்பிடித்துவிட்டார்கள். அவர்களை பிந்தொடர்ந்த அதிகாரிகள், முதலில் மார்லீனை மடக்கிப் பிடிக்க அவரிடம் பணமாக 90 ஆயிரம் பவுன்சுகள்(90 லட்சம் இந்திய ரூபாய்) இருந்துள்ளது. மேலும் லூசியாவை மடக்கிப் பிடித்தவேளை அவரிடம் மட்டும் 30 ஆயிரம் பவுன்சுகள் இருந்துள்ளது. பின்னர் அனைத்தையும் விசாரித்து அறிந்துகொண்ட அதிகாரிகள், பொலிசாரின் உதவியோடு சென்று சிறீஸ்கந்த ராஜாவையும் மனைவியையும் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்திவிட்டார்கள். இவர்கள் இருவருக்குமாக 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி நேற்றைய தினம் தீர்பளித்துள்ளார்.

http://newtamils.com/fullview.php?id=11309

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இனி அடிச்ச காசை கொண்டு சென்று உள்ளுக்குள் இருந்து எண்ணுவதா?
 
ஏன் இப்படி இவர்களுக்கு புத்தி போகிறதோ தெரியவில்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஷ்டப் படாமல் காசு பாக்கிற ஆசை.

Link to comment
Share on other sites

இவர்கள் முன்பு யேர்மனியில் வசித்தவர்கள். மூன்று பிள்ளைகள். மூவரும் பெண்கள். அவர்களுக்கு ஆங்கிலக் கல்வியை ஊட்டுவதற்காக லண்டனுக்குச் சென்றவர்கள். ஆங்கிலத்தில் படித்தால் வெள்ளையர்போல் ஆகிவிடலாம். காசுக்கு வெள்ளையடித்தால் கொள்ளையர்போல் ஆகிவிடுவோம் என்பது அவர்களுக்குத் தெரியலவில்லை. :(  

Link to comment
Share on other sites

இவர்களும் "தேசிய மீட்பு நிதியை" ஆட்டையை போட்ட ஆட்களா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் "தேசிய மீட்பு நிதியை" ஆட்டையை போட்ட ஆட்களா?

 

நல்லதொரு ஆராய்ச்சி

தண்டனையை  எடுத்துவைத்துக்கொண்டு

ஆட்களைத்தேடும் முயற்சி

தொடர்க.... :(  :(  :( 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் மேலதிக தகவல்கள் இருக்கின்றன. ஜேர்மனியில் இருந்து இலண்டனுக்கு குடிபெயர்ந்தவர்கள் என்பது சரி.

Four jailed in £145 million money laundering plot

Press Release  •  Dec 19, 2014 12:47 GMT

<img alt="Four jailed in £145 million money laundering plot" src="http://d20tdhwx2i89n1.cloudfront.net/image/upload/t_next_gen_article_large_480/er72u7ogwrnpa5pwfhe8.jpg">er72u7ogwrnpa5pwfhe8.jpg

Two people who ran a money laundering service to criminals through their family-owned London bureaux de change have been jailed for 19 years, after ‘cleaning up’ £145 million of dirty cash. Two others who acted as money couriers were also jailed.

The three bureaux gave the impression of being legitimate, high street currency exchanges serving the London tourist market. But a criminal investigation by HM Revenue and Customs (HMRC) found their main trade was actually exchanging large amounts of Sterling for high denomination Euro notes for organised crime groups.

Peter Millroy, Assistant Director, Criminal Investigation, HMRC, said:

“This gang of criminals were under the delusion they could escape detection – they were wrong and are now paying the price behind bars. Their activities bore no relation to what is expected from high street bureaux de change. Instead they used their business as a front to launder the profits made by many of the UK’s most serious and dangerous crime gangs.”

The bureaux were run by two different companies; Universal Money Exchange (UME), operating from premises on Shaftesbury Avenue and Oxford Street, and Buckingham Money Exchange (BME), operating from premises on Buckingham Palace Road.

Both companies were under the control of husband and wife, Moothathamby and Thilageswary Sriskantharajah.

Masterminded by Moothathamby Sriskantharajah, the companies would place significant orders for high denomination Euro notes from money wholesalers. The deliveries of this cash would coincide with visits from money couriers – Marlene Cumbo and her sister Lucia Cumbo. The sisters transported Sterling to the bureaux on behalf of their criminal associates to be exchanged for Euros. Once this was done they would return the Euros to their ‘customers’.

HMRC officers raided Universal Money Exchange in September 2011 and found more than £100,000 in cash on the premises. They also found a set of keys that fitted two safe deposit boxes at Harrods, registered to Thilageswary Sriskantharajah and containing over £250,000 in cash and high value gold jewellery. The items were seized and all four defendants were arrested on suspicion of money laundering offences.

Marlene Cumbo was caught by HMRC officers in August 2011 after she had visited one of the bureaux and left with a Harrods carrier bag containing nearly €91,000 in €200 notes. During a search of her home her sister Lucia arrived carrying an envelope in her handbag containing a further €34,750 mostly in €200 notes. Both women were arrested on suspicion of money laundering offences.

All four defendants were later charged under the Proceeds of Crime Act 2002.

Notes for editors

  • Photographs of the defendants and cash and jewellery seized are available on request or from HMRC’s Flickr channel www.flickr.com/hmrcgovuk
  • Details of the defendants sentenced yesterday (Thursday 18 December 2014) at Southwark Crown Court
  •  
    • Moothathamby Sriskantharajah (DOB 07.03.55) a German national of Marlborough Road, Isleworth, Middlesex TW7, was found guilty and sentenced to 12 years in jail and banned from being a director for 12 years.
  •  
    • Thilageswary Sriskantharajah, Mrs (DOB 07.04.66) a German national of Marlborough Road, Isleworth, Middlesex TW7, was found guilty and sentenced to seven years jail and banned from being a director for eight years.
  •  
    • Marlene Cumbo,Ms (DOB 13.12.61) of Compton Street, London EC1V, pleaded guilty and was sentenced to three and a half years jail.
  •  
    • Lucia Lucy Cumbo, Ms (16.04.60) of Worcester Point, Central Street, London EC1V, was found guilty and sentenced to two years jail. 
Issued by HM Revenue & Customs Press Office

 

http://www.mynewsdesk.com/uk/hm-revenue-customs-hmrc/pressreleases/four-jailed-in-ps145-million-money-laundering-plot-1101107

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இனி அடிச்ச காசை கொண்டு சென்று உள்ளுக்குள் இருந்து எண்ணுவதா?
 
ஏன் இப்படி இவர்களுக்கு புத்தி போகிறதோ தெரியவில்லை.

 

எமது முன்னோர்கள்

எல்லாவற்றையும் சொல்லி வைத்துள்ளனர்

 

பணம் என்றால் பிணமும் வாயைத்திறக்கும்

பணம் பாதாளம்வரை பாயும்...

 

இந்த பணத்துக்கு ஒரு எல்லை இல்லை

வரம்பு இல்லை

உலக முதல் பணக்காரன்  ஒரு நாளைக்கு எத்தனை மணித்தியாலம் உழைக்கிறார்

எத்தனை மணித்தியாலம் நிம்மதியாக உறங்குகின்றார் என அறிந்தால்....

பணம் போதும் என எவராலும் உணரமுடியாது என்பதை புரிந்து கொள்ளலாம்.....

 

பணத்தால்  கட்டியெழுப்பப்பட்ட இந்த வாழ்வை

மனத்தால் கட்டுப்படுத்தாதுவிட்டால்....

 

இவர்கள் பிடிபட்டதால் இதற்கு ஒரு சாட்சி  மட்டுமே...

மற்றும்படி

உலகப்பணக்காரரும் ஒழுங்காக கணக்கு காட்டி வரி  கட்டுவதில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்புப்பணத்தை வெள்ளையடித்தவருக்கே இந்தத் தண்டனை என்றால்
கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு தண்டனை அதிகமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு, இருக்கும் போது.... மிகவும் கடவுள் பக்தியுடன், மிகவும்... ஆச்சாரமாக வாழ்ந்தவர்கள்.
இங்கிலாந்து போய்......... பணத்துக்கு ஏன் அதிக ஆசைப்பட்டு,

சட்டத்துக்கு புறம்பான வழிகளை...  கடைப்பிடித்தார்கள் என்பது புரியவில்லை? :o

 

இவர்களா.... இப்படிச், செய்தார்கள் என்று....
இந்தச் செய்தியை... வாசிக்க மிகவும், அதிர்ச்சியாக இருக்கின்றது. :o

 

நேர்மையான வழிகளில், சம்பாதிக்காத பணம்.... கடைசி வரை துணை நிற்காது.
இப்போ.... அவர்களின், பிள்ளைகளின் எதிர்காலம்?
ஏன் தான்.... மனுசருக்கு, இப்பிடி புத்தி போகுதோ..... :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன்,  "Ads Free"  கள்வர்களையும்... இங்கிலாந்து பொலிசார் கண்டு பிடிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களும் "தேசிய மீட்பு நிதியை" ஆட்டையை போட்ட ஆட்களா?

 

நிச்சயமாக...... இல்லை, நான்தான்.

சும்மா.... கிடைக்கிற சந்தில, சிந்து பாடாதீங்க ப்ளீஸ்...

 

Link to comment
Share on other sites

தமழ்சிறீ ஒப்பீட்டு ரீதியில் அதிக சமய நம்பிக்கை உடையவர்களாக ஆசார சீலர்களாக இருப்பவர்கள் தான் சமூக சிந்தனை அறவே இல்லாத சுயநலவாதிகளாக இருப்பதுடன் வழமை. கிறிமினல் மனப்பான்மை இல்லாது விடினும் பேராசையால் இப்படிப்பட குற்றவலையில் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமழ்சிறீ ஒப்பீட்டு ரீதியில் அதிக சமய நம்பிக்கை உடையவர்களாக ஆசார சீலர்களாக இருப்பவர்கள் தான் சமூக சிந்தனை அறவே இல்லாத சுயநலவாதிகளாக இருப்பதுடன் வழமை. கிறிமினல் மனப்பான்மை இல்லாது விடினும் பேராசையால் இப்படிப்பட குற்றவலையில் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள்.

 

ருல்பன்,

அவர்களை... அறிந்த, எம் ஆட்களுக்குக்கே.....

மிகவும், ஆச்சரியமான விடயம்.

 

என்னால்.... இப்பவும், நம்ப முடியாதுள்ளது. :(

Link to comment
Share on other sites

கொலை செய்தவர்கே பிணையில் வந்துவிட வாய்ப்புகள் உண்டு. இவர்கள் மேல் முறையீட்டுக்கு போகலாம்.. அது முடியாவிட்டால் ஓரிரு வருடங்களில் பிணையில் வெளியே வந்துவிடுவார்கள் என நினைக்கிறேன்.. வெளியில் வந்து வெள்ளையடிப்பில் ஈடுபடாவிட்டால் சரி.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை குட்டிகளையும் வைச்சுக் கொண்டு இவைக்கு எல்லாம் இது தேவையா...???

Link to comment
Share on other sites

இவர்களும் "தேசிய மீட்பு நிதியை" ஆட்டையை போட்ட ஆட்களா?

 

 

ஏன் மக்களின் பணத்தை கொள்ளை இட்ட மீதிப்பேரின் மேல் உங்கள் சந்தேகம் திரும்பவில்லை?  :huh:
 
நான் கேள்விப்பட்டதன் படி பணமாற்று செய்தவர்கள் தான் இவர்கள். இது பற்றி அர்ஜுன் அண்ணா நேர்மையான, அதிக தகவல்களுடன் பதிலை தருவார் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இது பற்றிய முகப்புத்தக பதில் (ஒருவரின்) மிகச்சரியாக படுவது போல் தென்பட்டது.அர்ஜுன் அண்ணா விழுந்தடித்து விருப்பு தெரிவித்ததன் அடிப்படையில் மேலும் தகவல்கள் தெரிந்து இருக்கலாம் என  எதிர்பார்க்கிறேன். :mellow:  :mellow:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடினமாக உழைக்காமல் மற்றவர்களை விட விரைவாக பணக்காரனாக வேண்டும் என்ற பேர் ஆசை இவர்களுக்கு ...... அதில வேற தாங்கள் புத்திசாலிகள் என்ற எண்ணம் வேற எல்லாத்துக்கும் கிடைத்த ஆப்பு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமழ்சிறீ ஒப்பீட்டு ரீதியில் அதிக சமய நம்பிக்கை உடையவர்களாக ஆசார சீலர்களாக இருப்பவர்கள் தான் சமூக சிந்தனை அறவே இல்லாத சுயநலவாதிகளாக இருப்பதுடன் வழமை. கிறிமினல் மனப்பான்மை இல்லாது விடினும் பேராசையால் இப்படிப்பட குற்றவலையில் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள்.

 

உண்மை

Link to comment
Share on other sites

சிவாஜி படத்தில் ரஜனி இதனைத்தான் செய்தார்.
கறுப்பு பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பி அங்கிருந்து திரும்பி வரும்போது வெள்ளையாக்கி...
ஐடியா கொடுத்த அவர் ஹீரோ...
கைதட்டல்...
காப்பி யட்டித்த  சிறிஸ்கந்தாவுக்கு 
சிறை...
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலை செய்தவர்கே பிணையில் வந்துவிட வாய்ப்புகள் உண்டு. இவர்கள் மேல் முறையீட்டுக்கு போகலாம்.. அது முடியாவிட்டால் ஓரிரு வருடங்களில் பிணையில் வெளியே வந்துவிடுவார்கள் என நினைக்கிறேன்.. வெளியில் வந்து வெள்ளையடிப்பில் ஈடுபடாவிட்டால் சரி.. :D

 

பிரித்தானியாவில் உந்த விளையாடுக்கள் முடியாது.
 
கீழ் நீதிமன்ற ஜட்ஜ் ஐயா உள்ளார போட்டால், உள்ள இருந்து தான் மேல் முறையீடு. அதில வெண்டால் தான் வெளியால வரலாம். 
 
மேன் முறையீடு காலத்தில் பிணை எல்லாம் உங்க இல்லை. சட்டம் மாத்தியாச்சு. ஆனால் கொலனிகளில் அரசியல் வாதிகள் தங்கள் வசதிக்காக மாத்த வில்லை.
 
ஜெயலலிதா  போன்றவர்களுக்கு உது வசதியாக இருந்தது. சரவணபவன் ராஜகோபால், கொலைக்கான ஆயுள் தண்டனை பெற்றார். அப்பீல் பண்ணி விட்டு பல ஆண்டுகளாக வெளியில் இருக்கின்றார். என்ன சட்டமோ ?     :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் ஐரோப்பிய நாடுகளில் திருடி விட்டு குடும்பத்தோடு ஓடிவரும் தமிழர்களின் பெனிபிட் கூடாராமாகி கனகாலமாச்சுது.

 

பிரித்தானியாவின் குடிவரவுக் கொள்கையை இறுக்காமல்.. இதற்கு முடிவு வராது..!!

 

தமிழர்களுக்கு எல்லாமே கூடிப்போச்சுது. ஒரு போரை வைச்சு நாட்டை கைவிட்டதை விட வேறு எதனையும் சாதிக்காத தமிழர்கள்.. உலகத்தை சுருட்டி கைக்குள்ள வைக்கலாம் என்று கனவு காண்கிறார்கள். அதன் விளைவு எங்கும்.. எதிலும் பிராடு.. பித்தலாட்டம்.

 

முன்னம் எல்லாம்.. வங்கிக் கணக்கு தொடங்க.. ஒரு பாஸ் போட் போதும். இப்ப சிறீலங்கன் என்றாலே வங்கிக்காரன் விழுதடிச்சு ஓடுறான். :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

தீர்ப்பில் "without the possibility of parole" என்கிற வசனம் இருந்ததா?? இந்த வசனத்துடன் அமைந்த தீர்ப்பு முதல்தர கொலைகாரர்களுக்குத்தான் வட அமெரிக்காவில் கிடைக்கும்.. அது இல்லாத பட்சத்தில் சில வருடங்களில் வெளியே வந்துவிட இங்கு வாய்ப்பு உள்ளது. மிகுதி ஆண்டுகளை வெளியில் நிபந்தனைகளுடன் கழிக்கவேண்டும் என நினைக்கிறேன். இங்கிலாந்தின் நிலைமை தெரியவில்லை. (அங்கு பொதுவில் படுமோசம் என்பது தெரியும். :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பில் "without the possibility of parole" என்கிற வசனம் இருந்ததா?? இந்த வசனத்துடன் அமைந்த தீர்ப்பு முதல்தர கொலைகாரர்களுக்குத்தான் வட அமெரிக்காவில் கிடைக்கும்.. அது இல்லாத பட்சத்தில் சில வருடங்களில் வெளியே வந்துவிட இங்கு வாய்ப்பு உள்ளது. மிகுதி ஆண்டுகளை வெளியில் நிபந்தனைகளுடன் கழிக்கவேண்டும் என நினைக்கிறேன். இங்கிலாந்தின் நிலைமை தெரியவில்லை. (அங்கு பொதுவில் படுமோசம் என்பது தெரியும். :lol: )

 

இங்கிலாந்து பல விடயங்களில் நெகிழ்வோடு இருந்தே வந்துள்ளது. அதனை இந்திய உபகண்ட குடிவரவாளர்கள் புரட்டிப்போட்டு விட.. அவர்களோடு.. திறந்து விட்ட பட்டிகள் போல நுழைந்த கிழக்கு ஐரோப்பியர்களும்.. மிச்ச சொச்சத்துக்கு சுருட்ட.. இப்பதான் இங்கிலாந்து விழிச்சுக் கொண்டிருக்குது.

 

எனித்தான் இருக்குது.. எம்மவர்களுக்கு ஆப்பு. இது அவர்களே தாங்களாக தேடிக் கொண்டது. :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீர்ப்பில் "without the possibility of parole" என்கிற வசனம் இருந்ததா?? இந்த வசனத்துடன் அமைந்த தீர்ப்பு முதல்தர கொலைகாரர்களுக்குத்தான் வட அமெரிக்காவில் கிடைக்கும்.. அது இல்லாத பட்சத்தில் சில வருடங்களில் வெளியே வந்துவிட இங்கு வாய்ப்பு உள்ளது. மிகுதி ஆண்டுகளை வெளியில் நிபந்தனைகளுடன் கழிக்கவேண்டும் என நினைக்கிறேன். இங்கிலாந்தின் நிலைமை தெரியவில்லை. (அங்கு பொதுவில் படுமோசம் என்பது தெரியும். :lol: )

 

உலகம் முழுவதும் ஒப்பீடளவில் பிரித்தானிய சட்டங்கள், நீதிமன்றுகள், நியாயமானவை. OJ Simpson வழக்கு சுத்துமாத்து எல்லாம் இங்கே சாத்தியமில்லை. :D

இங்கிலாந்து பல விடயங்களில் நெகிழ்வோடு இருந்தே வந்துள்ளது. அதனை இந்திய உபகண்ட குடிவரவாளர்கள் புரட்டிப்போட்டு விட.. அவர்களோடு.. திறந்து விட்ட பட்டிகள் போல நுழைந்த கிழக்கு ஐரோப்பியர்களும்.. மிச்ச சொச்சத்துக்கு சுருட்ட.. இப்பதான் இங்கிலாந்து விழிச்சுக் கொண்டிருக்குது.

 

எனித்தான் இருக்குது.. எம்மவர்களுக்கு ஆப்பு. இது அவர்களே தாங்களாக தேடிக் கொண்டது. :icon_idea::)

 

Skill Migration என்று விசா கொடுக்க, இங்கே IT காரர் என்று புகுந்து supermarket, கட்டிட வேலை என்று புகுந்து விட்டார்கள்.
 
விழித்துக் கொண்ட அரசு, Skill Migration னை முழுவதாக நிறுத்தி, வருட முடிவில் Tax Return செய்கையில், அவர் செய்த வேலை என்ன என கணித்து, அவரை அனுப்பும் முயற்சியில் ஈடு படுகின்றது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.