யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
putthan

லின்சன்

Recommended Posts

லின்சன் குடும்பத்தின் கடைக்குட்டி, மூத்தவர்கள் இருவரும் பெண்கள் .தந்தை இளம் வயதிலயே இறக்க தாயின் மீது குடும்ப சுமை விழுகின்றது.வீட்டின் செல்லப்பிள்ளை லின்சன் .சிறுவயது முதல் பெண்களுடன் தான் அவன் அதிகமாக விளையாடுவான்,ஆண் நண்பர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

சகோதரிகளின் உடைகளை சிறுவயதில் அவனுக்கு அணிந்துவித்து அழகுபார்ப்பாள் தாயார்.அவனுக்கு அந்த ஆடைகள் மிகவும் பிடித்தமானதாகவிருந்தது.பாடசாலைக்கு செல்லும் வயதிலும் சகோதரிகளின் ஆடைகளை அணிந்து மகிழ்வான்,தாயார் சகோதரிகள் பேசி தடுத்தாலும் அவர்களுக்கு தெரியாமல் தனிமையில் அணிந்து மகிழ்வான்.

பாடசாலையிலும் அவன் பெண்களுடனே அதிகம் பழகினான் .இது பாடசாலை அதிபருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது.அந்த சமுகம் ஆண்கள் பெண்களுடன் பழகுவதை ஒரு மதகுற்றமாக கருதுகின்ற சமுகமாகும்.இதனால் அவனை ஆண்கள் கல்வி பயிலும் தனியார் பாடசாலைக்கு அனுப்பி வைக்கும்படி அதிபர் தாயாருக்கு அறிவுறுத்தினார்

அதிபரின் வேண்டுகொளின்படி அவனை தனியார் பாடசாலையில் அனுமதித்தாள் தாயார் .அவர்களின் கிராமத்திலிருந்து சில மைல் தொலைவில் பாடசாலை இருந்தபடியால் ,விடுதியில் தங்கியிருந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

முதல் நாள் பாடசாலை விடுதியில் தாயாரிடமிருந்து பிரியாவிடை பெறும்பொழுது அந்த விடுதியே அதிரும் படி அழுதான்.விடுதி மாணவர்கள் அவனை சமாதனப்படுத்தினார்கள் .விடுதி ஆசிரியர் அவனை மடியில் இருத்தி அன்பாக பேசினார். அவன் அமைதியானவுடன் அவனுக்கு அவனது கட்டில் , கோப்பை போன்றவற்றை காட்டினார்.

தாயாரும் பிரிய மனமில்லாது அவனிடமிருந்து விடை பெற்று சென்றாள்.விடுதியில் முதல்நாள் இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது தனியாக படுக்க பயமாக இருக்கிறது என விடுதி ஆசிரியரிடம் சொல்லி அழுதான் , விடுதியில் பலர் இருக்கின்றனர் நீ பயப்படாமல் தூங்கு நான் இரவு வந்து உன்னை பார்க்கின்றேன் ,இவனின் பெயர் கென்ட் உனது பக்கத்து கட்டிலில் படுத்திருப்பான் அவசர உதவி தேவை என்றால் இவனிடம் கேள் ,இவன் தான் இந்த விடுதியின் மொனிட்டர் என அறிமுகப்படுத்தி வைத்தார் .கென்ட் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுகொண்டிருந்தார். லின்சனை கண்ட கென்ட் தன்நிலை மறந்தான் .கென்டினின் அன்பான உபசரிப்பால் லின்சனுக்கு வீட்டின் ஞாபகங்கள் மெல்ல மெல்ல அகலத்தொடங்கியது.

அன்று கென்ட் தன்னிடம் உள்ள சில ஆபாசபடங்களை மேசையில் வைத்து பார்த்து கொண்டிருந்தான்.தற்செயலாக அங்கு வந்த லின்சன் அதை கவனித்துவிட்டான். இருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.கென்ட் அந்த புத்தகத்தை வேண்டுமென்றே லின்சன் பார்க்கும் படி மறைத்துவைத்துவிட்டு அங்கு இருந்து சென்றுவிட்டான். அவன் சென்றவுடன் லின்சன் அந்த புத்தகத்தை எடுத்து பார்க்க தொடங்கினான்.அதை பார்க்க தொடங்கியவுடன் அவனது அந்தரங்க உறுப்பு அவனது சொல்லை கேட்காமல் சுதந்திரமாக செயல்பட தொடங்கிவிட்டது. கென்ட் தனது திட்டம் சரியாக செயல்படுவதை லின்சனின் அந்தரங்க உறுப்பின் செயல்களின் மூலமறிந்து கொண்டான்.

அவனுக்கு அருகில் சென்று லின்சனின் உணர்ச்சிகளை தூண்டி தனது கட்டளைகளுக்கு அடிபணியவைத்தான்.

ஒவ்வொரு தடவையும் கென்ட தனது உணர்ச்சிகள் தீர்ந்தவுடன் லின்சனை ஆடைகளை அணிந்து கொண்டு உடனே வெளியே சென்றுவிடு யாராவது பார்த்துவிடுவார்கள் என எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுவான்.இதனால் லின்சன் தனது உணர்ச்சிகளுக்கு வடிகால் தேட தன்னையே நம்பவேண்டிய சூழ்நிலை பல தடவை ஏற்பட்டது.

சகமாணவர்களுக்கு இந்த விடயம் தெரிய தொடங்கிவிட்டது."பக்லா" என்று சக மாணவன் ஒருத்தன் இவனை அழைத்தான் .அந்த கிராமத்தில் பக்லா என்றால் அலி என்று அர்த்தம். இதனால் ஆத்திரமடைந்த லின்சன் அவனை பலமாக தாக்கி அருகிலிருந்த கூறிய ஆயுதத்தை காட்டி குத்தி போடுவேன் என மிரட்டினான்.என்னை ஆண் என்று சொல்லுங்கள் அல்லது பெண் என்று அழையுங்கள் ஆனால் பக்லா என்று அழைக்காதீர்கள் மீறி அழைத்தீர்கள் என்றால் கொலை செய்து விடுவேன் என எச்சரித்து பாடசாலையை விட்டு வெளியெ சென்றுவிட்டான்.

உல்லாச விடுதியில் பணியாளர் வேலையில் அமர்ந்தான் அங்கு வரும் வெளிநாட்டு ஆண்களுடன் இவனுக்கு தொடர்புகள் உண்டானது .அப்படி தொடர்பில் வந்தவன் தான் மைக்கல் .மைக்கல் புகைப்படக்கலைஞன் மொடல் அழகிகளை புகைப்படம் எடுப்பவன்.அவன் எடுத்த பல அழகிகளின் படங்களை காட்டினான் .உனக்கு மார்பகங்கள் இருந்தால் நீயும் பிரபல மொடலாக வந்திருப்பாய்,என சொல்லிய படியே அவனது கன்னத்தில் முத்தமிட்டான்.

"உன்னை திருமணம்செய்து அவுஸ்ரேலியாவுக்கு அழைத்து செகின்றேன் உனக்கு சம்மதமா?" .

"என்னையா?நான் ஆண் என்னை எப்படி, திருமணம் செய்ய முடியும் "

"எங்கள் நாட்டில் இதற்கெல்லாம் சட்டமிருக்கு "

"அடுத்த தடவை வரும்பொழுது சகல ஏற்பாட்டுடனும் வருகின்றேன்,நீ பாஸ்போர்ட்டை எடுத்து தயாராக இரு"

மேலதிகாரியுடன் அவுஸ்ரேலியா செல்வதாக தாயாரிடம் சொன்னான்.தாயார் சகோதரிமார் எல்லோரும் மகழ்ச்சியடைந்தனர்

மூன்று மாத்தின் பின் சிட்னி விமான நிலையத்தில் மைக்கலுடன் வந்திறங்கினான்.மைக்கல் அவனை தனது உதவியாளராக சகலருக்கும் அறிமுகப்படுத்தினான்.சிலருக்கு மட்டும் தன்னுடைய ஆசைநாயகன் என சொல்லி வைத்தான்,.

இவன் ஒரு ஆண் என ஒரு மொடலழகியை காட்டினான்.அவன் அதிர்சியடைந்தான் அது எப்படி அவளுக்கு /அவனுக்கு மார்பகங்கள் இருக்கு ?

"சத்திர சிகிச்சை மூலம் அவன் அவளாக மாறிவிட்டாள்"

அதன்பின்பு அவளை கண்டாள் தானாக சென்று அவளிடம் சுகம் விசாரிப்பான் அவளும் இவனுடன் நெருங்கி பழகதொடங்கி விட்டாள்.மொடல் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என அவள் கூறியதை கேட்ட லின்சனுக்கு தானும் மொடலக வேண்டுமென்ற ஆசை வரதொடங்கி விட்டது.தனது விருப்பத்தை மைக்கலிடம் சொன்னான் .மைக்கல் சம்மதம் தெரிவித்து தன்னை விவாக ரத்து செய்யும் படி கேட்டு கொண்டான்.

லின்சன் லின்சியாக மாறி பல மொடல்ழகிகளுகு போட்டியாக பணம் சம்பாதித்தான்/ள்.

சில வியாபார பெரும்புள்ளிகளுக்கு ஆசைநாயகியாகவும் இருந்து பணம் சம்பாதிதாள்/ன்.ஒரு வாடிக்கயாளன் அவளை தன்னுடன் நிரந்தரமாக தங்கும்படி கேட்டுகொண்டான் லின்சியும் பணத்துக்கு ஆசைப்பட்டு சம்மதித்தாள்.ஒருநாள் இருவரும் வாக்குவாதத்தில் இடுபட்டனர்.ஆத்திரமடைந்த லின்சி தனது ஆண்குணத்தை வெளிக்காட்டினாள் உன்னை குத்தி கொலைசெய்து அடுப்புக்குள் போடுவேன் என எச்சரித்துவிட்டு உறங்க சென்றுவிட்டாள்/ன் . .இதை ஒரு கெளரவ குறைச்சலாக அவளது வாடிக்கயாளன் உணர்ந்தான்.

அன்று இரவு லின்சி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் .இதையறிந்த வாடிக்கையாளன் சமையலறையிலிருந்த மாமிசம் வெட்டும் கத்தியால் அவளது கழுத்தை வெட்டி ,அங்கங்களையும் வெட்டி அவண்னில் போட்டு விட்டான்....தூர்நாற்றம் அந்த வீட்டை சுற்றி வருவதாக பொலிசார்க்கு அயலவர்கள் தகவல் கொடுத்தனர்.பொலிஸ் படை வருவதை அறிந்த வாடிக்கையாளன் பெரிய குப்பை தொட்டியுனுள் ஒடி மறைந்து தனது கையை வெட்டி தற்கொலை செய்து கொண்டான்.

உனது மகள் லின்சி அவுஸ்ரெலியாவில் இறந்து விட்டார் என தூதரக அதிகாரிகள் தாயாருக்கு செய்தி அனுப்பினார்கள்,ஆனால் அவள் நம்பவில்லை.எனது மகன் தான் அவுஸ்ரேலியாவில் இருக்கின்றான் ,மகள்மார் இருவரும் என்னுடன் இங்குதான் இருக்கிறார்கள் ,தப்பான விலாசத்திற்க்கு செய்தியை அனுப்பிருக்கிறார்கள் என புலம்பத்த்தொடங்கிட்டாள்....

 • Like 9

Share this post


Link to post
Share on other sites

இந்த கதைக்கு(கிறுக்களுக்கு) பச்சை புள்ளியும் ஒருத்தரும் இடவில்லை கருத்தும் வைக்கவில்லை என்ன காரணமாக இருக்கும் ?வாசகர் சொன்னல் நான் திருந்தலாமல்லோ :D :D

Share this post


Link to post
Share on other sites

இப்ப கிறிஸ்மஸ் ரைம் எல்லோ!! சனத்துக்கு கதை வாசிக்கிற அளவுக்கு மனபக்குவம் வராது...இன்னும் ஒருகிழமையாலை பாருங்கோ எல்லாரும் ஆகா ஓகோ எண்டுவினம்.  :)  :D

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

புத்தா... இது,
கதை,கவிதை .... எழுதுற... நேரமா.. இது?
பேசாமல்.... நாலு, பகிடியை விட்டு, மூன்று பேருக்கு... கடுப்பு ஏத்துங்கோ..... பாப்பம். :rolleyes:  :)  :D  :lol:  :icon_idea:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாசிச்சனான், நல்ல கதை. பச்சை முடிந்துவிட்டது. பிள்ளைகளை விடுதியில் விடுவது நல்லதில்லை.

 

ஆஸியில் நடந்த பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமென்று நினைக்கின்றேன்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பத்துக்கு எட்டு அரவாணிகளுக்கு இதுதான் பிரச்சினை...! நல்ல கதை புத்ஸ்...!!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இப்பிடியான கதைகளை எம்மவர் விரும்பாததுதான் காரணம் புத்தன் உங்களுக்குப் பச்சை குவியாததுக்கு. என்னிடம் பச்சை இல்லை போட :D இது ஓட ஓட எழுதியதுபோல் இருக்கு. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் புத்தன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

புத்தன் இந்தக் கதையைப் போட்டபோதே வாசித்திருந்தேன். கதையை அவரசத்தில் எழுதிய மாதிரி இருந்ததால் கதையா அல்லது செய்திவிவரணமா என்ற குழப்பம் வந்தது.

Share this post


Link to post
Share on other sites

லின்சன் குடும்பத்தில்.... கடைக்குட்டி, தந்தை இல்லை, இரண்டு சகோதரிகள்....
இளவயதில் அவனுக்கு.  கிடைத்த செல்லமான கவனிப்பும்... அவனில் ஒரு பெண்தன்மையை... உருவாக்கியிருக்கலாம்.
இந்த உலகில்... லின்சன் போன்றவர்கள் பலர் நன்றாக வாழும் போது...
அவுஸ்திரேலிய சென்ற, லின்சனின் முடிவு கவலைக்குரியது.
மனதை... பாதித்த கதை புத்தன்.

Share this post


Link to post
Share on other sites

அனைவருக்கும் புத்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

இப்ப கிறிஸ்மஸ் ரைம் எல்லோ!! சனத்துக்கு கதை வாசிக்கிற அளவுக்கு மனபக்குவம் வராது...இன்னும் ஒருகிழமையாலை பாருங்கோ எல்லாரும் ஆகா ஓகோ எண்டுவினம்.  :)  :D

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கு.சா ....நானும் நேற்றுத்தான் கிறிஸ்மஸ் விடுமுறையிலிருந்து வீடு திரும்பினேன்....

புத்தா... இது,

கதை,கவிதை .... எழுதுற... நேரமா.. இது?

பேசாமல்.... நாலு, பகிடியை விட்டு, மூன்று பேருக்கு... கடுப்பு ஏத்துங்கோ..... பாப்பம். :rolleyes:  :)  :D  :lol:  :icon_idea:

 

நன்றிகள் தமிழ்சிறி அதுவும் சரிதான் ...இப்ப கதை ,கவிதை எழுதுற நேரமா? :D

வாசிச்சனான், நல்ல கதை. பச்சை முடிந்துவிட்டது. பிள்ளைகளை விடுதியில் விடுவது நல்லதில்லை.

 

ஆஸியில் நடந்த பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமென்று நினைக்கின்றேன்

 

நன்றிகள் உடையார் ...இதுவும் அவுஸ்ரேலியா பிரிஸ்பேர்னில் நடந்த ஒரு உண்மைசம்பவம்....

Share this post


Link to post
Share on other sites

நானும் கதையை வாசிச்சனான்.பதில் போட ரேப்பிரச்சனை.வேற ஒன்டும் இல்லை. :)

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கதையை வாசிக்கும் போது " கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, புதிய வார்ப்புகள்" போன்ற மண்வாசனைக் கதைகளை (சுரேஸ் ) எடுத்துகொண்டிருந்த பாராதிராஜா , "டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள்"  போன்ற மண்வாசனை அற்ற (லின்சன்) படங்களை எடுத்தது போல  இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, கந்தப்பு said:

இந்தக் கதையை வாசிக்கும் போது " கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, புதிய வார்ப்புகள்" போன்ற மண்வாசனைக் கதைகளை (சுரேஸ் ) எடுத்துகொண்டிருந்த பாராதிராஜா , "டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள்"  போன்ற மண்வாசனை அற்ற (லின்சன்) படங்களை எடுத்தது போல  இருக்கிறது.

ஆகா ஆகா ....தலைவா என்னை அந்த மாதிரி குளிரப்பண்ணிட்டியள்.....அதற்கு நன்றிகள்....அதுசரி என்ன பழைய கதைகளை தூசிதட்டி எடுத்து வாசிக்கிறீயள்....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • #TamilEntrepreneur #தமிழ் #தாய்மண் #பொருளாதாரம் #மரம் #மண் #பிராணவாயு #கரியமலவாயு #புவிவெப்பம் #வரட்சி #தண்ணீர் பாலை நிலமாகிறதா தமிழகம்? என்ன காரணம்? வடசென்னை பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. https://www.bbc.com/tamil/india-47928489?fbclid=IwAR0Hpc6boDCv1PhZGSfTJuWFB4q3FV08s5J7_y34Y5qBZRCJFLRx4xGHErk    
  • MI6 பிரித்தானியாவினது என்றாலும் அதன் வெளிநாடுகளுக்கான உளவுத்துறை. (foreign intelligence service). அவர்கள் ஏற்கனவே பல காலமாக பிரான்ஸ் மற்றும் வேறு பல நாடுகளில் தொழிற்பட்டு வருவோர். CIA, NSA போன்றன தாம் டயானாவின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டு அதை ஆவணப்படுத்தி வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டன. ஆனால் தாம் அதை கொலைக்கு பயன்படுத்தவில்லை என கூறினர். (அவர்கள் அதை சொல்ல மாட்டார்கள் தானே) முன்னாள் MI6 அதிகாரியே டயானாவின் கொலை பற்றி கருத்து தெரிவிக்கும் போது இதே முறையில் driver இன் கண்ணில் ஒளியை அடித்து remote control மூலம் பிரேக் செயலிழக்க வைத்து வாகன விபத்தை ஏற்படுத்தி கொலை செய்ய திட்டமிட்ட கலந்துரையாடல்கள் பற்றிய ஆவணங்களை முன்னரே பார்த்ததாக கூறினார். அவர் கூற வந்தது இதையும் MI6 செய்தது என்பது தான். பல நாடுகள் ஒன்றிணைந்து செய்யும் கொலைகள் என்பது பல இடங்களில் நடப்பது தான். இவர்கள் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து செயற்படுவர் (பல வைத்தியர்கள் உட்பட). வெளிநாடுகளில் “umbrella” என்று சொல்லுக்கு தனியொரு அர்த்தம் உள்ளது. தமிழர்களுக்கு அதிகம் இது பற்றி தெரியாது.
  • இப்படி எடுத்ததுக்கு டென்சனாகினால்  அநேகமா புர்காவை போட்டு குதிரை ஓடுன கூட்டமாய் இருக்கும் .
  • இலங்கையிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்து வந்த தமிழர்கள் மட்டுமின்றி, பிரிட்டனிலேயே பிறந்து வளர்ந்த புலம் பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறையினர் மற்றும் இலங்கையுடன் எவ்வித தொடர்பும் கொண்டிராத பிரிட்டன் வாழ் மக்கள், அந்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 2,500க்கும் மேற்பட்டவர்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். "பிரபாகரன் நடத்திய நிர்வாகம்"   இலங்கை அரசுப்படைகளுக்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போரின்போதோ அல்லது போர் முடிவுற்ற பிறகோ, உயிர் பிழைத்துக் கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கானோர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாகவும், பணிவாய்ப்பு மற்றும் கல்விக்காகவும் புலம்பெயர்ந்தனர். இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்தப் போரின் கொடுமைகளை விளக்குவதுடன், இலங்கை தமிழர்களின் வரலாற்றை இளம் சந்ததியினருக்கு எளிதில் புரிகிற வகையில் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த 'தமிழ் தகவல் நடுவம்' என்ற அமைப்பின் உறுப்பினரான ரோஷிணியிடம் பேசினோம். "இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்து இலங்கை உருவானது முதல் அங்கு வாழ்ந்த தமிழர்களின் பண்பாடு, கலாசாரம், உணவுப் பழக்கம், அரசியல் நிர்வாகம், இசை ஆகியவை மட்டுமின்றி உள்நாட்டுப் போரின்போது சந்தித்த பேரவலம் போன்றவற்றை விளக்கும் ஓவியங்களை உலகம் முழுவதுமுள்ள புகழ்பெற்ற ஓவியர்களிடமிருந்து பெற்று காட்சிப்படுத்தியிருந்தோம். தமிழர்களின் இன்பம் மற்றும் துன்பகரமான நிகழ்வுகளின்போது தவறாது இடம்பெற்ற இசைக்கருவியான 'பறை'யின் அருமை, பெருமைகளை இந்த கண்காட்சியின் ஊடாக வெளிப்படுத்தியதுடன், பயிற்சி பட்டறையையும் நடத்தினோம். குறிப்பாக, விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தலைமையில் நடந்த இடைக்கால தமிழீழ அரசின் தேசியக் கொடி, வரைபடம், படைப்பிரிவுகள், உள்துறை, பள்ளி-கல்லூரிகள், மருத்துவ வசதிகள், வங்கிகள், கலை பண்பாட்டு பிரிவு, புனர்வாழ்வு மையங்கள் உள்ளிட்ட முழுமையான அமைப்புமுறையுடன் செயலாற்றியதை, தக்க சான்றுகளுடன் விளக்கியிருந்தோம்" என்று ரோஷிணி மேலும் கூறினார். இந்த கண்காட்சியில், தமிழகத்திலிருந்து இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிவதற்காக அழைத்துச் செல்லப்பட்டு அன்று முதல் இன்று வரை போராட்டமான வாழ்க்கையை சந்தித்து கொண்டிருக்கும் மலையகத் தமிழர்களின் வரலாறும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாக கூறுகிறார் அந்த அமைப்பை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான ஆரதி ராஜாந்த். "மலையகத் தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை காட்சிப்படுத்துவதற்காக பிரிட்டனிலுள்ள இளம் தலைமுறையினருடன் சேர்ந்து பல மாதங்களாக வேலை செய்து உருவாக்கிய கருத்துருவாக்கம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதற்கான முதல்படியாக இதைப் பார்க்கிறோம்" என்று அவர் மேலும் கூறுகிறார். முள்ளிவாய்க்கால் நினைவலைகள் இலங்கை உள்நாட்டுப் போரின்போது, தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளை விளக்கும் வகையிலான காட்சி பொருட்கள் இந்த கண்காட்சியில் தத்ரூபமாக வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, போரின்போது ராணுவத்தின் தாக்குதலுக்கு இரையானவர்கள் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் மாதிரி அமைக்கப்பட்டிருந்தது. அதில், போடப்பட்டிருந்த ரத்தம் படிந்த ஆடைகளின் மாதிரிகள் பலரது நினைவுகளைத் தூண்டின. "போரின் இறுதிக்கட்டத்தின்போது, ராணுவத்தின் தாக்குதலிலிருந்து உயிர் பிழைப்பது மட்டுமின்றி உயிர்வாழத் தேவையான உணவை பெறுவதும் மிகவும் கடினமாக இருந்த சமயத்தில் எங்களுக்கு உப்பு, சப்பில்லாத கஞ்சி மட்டுமே கிடைத்தது. எனவே, போரின் உக்கிர நிலையை உணர்த்தும் வகையில், அதே சுவை கொண்ட கஞ்சியை கண்காட்சிக்கு வந்தவர்களுக்கு அளித்தோம். அது பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிட்டது" என்று கூறுகிறார் ரோஷிணி. https://www.bbc.com/tamil/global-48410310  
  • மொரகஹகந்த திட்டத்தின் மூலம் இரணைமடு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் விநியோகத் திட்டத்திற்கு நீர் கிடைக்கிறது. இந்நீர் யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் பேரின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்கிறது. கைத்தொழிலுக்கான நீர்த்தேவைகள் சூழலியல் சுற்றுலாத்துறை மற்றும் முறையான வெள்ளநீர் கட்டுப்பாடு ஆகியவை இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் இதர பயன்களாகும். மொரகஹகந்த - களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 2019 இல் 185,000 ஹெக்டயார் விளைநிலத்திற்கு தேவையான நீர்ப்பாசன வசதி பெரும்போகம் சிறுபோகம் ஆகிய இரு போகங்களின் போதும் கிடைக்கும். விளைச்சலை இது அதிகரிக்கும் நிலையில் 109,000 தொன் நெற்செய்கையை எதிர்பார்க்கலாம். வருடாந்த நிகர விவசாய பயனைப் பொறுத்தவரை இது 27.7 மில்லியன் டொலர் என கணக்கிடப்பட்டுள்ளது. மொரகஹகந்த - களுகங்கை ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் மூலம் 25 மெகாவோல்ட் மின்சாரம் உற்பத்தியாகும். இதனால் கிடைக்கும் வருடாந்த எரிபொருள் சேமிப்பு கிட்டத்தட்ட 2.19 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு நீர்த்தேக்கங்களிலிருந்து 4,700 தொன் நன்னீர் மீன் அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நிகர பயன் 1.67 பில்லியன் டொலர்களாகும். 1994 ஆம் ஆண்டு இப்போதைய ஜனாதிபதி கெளரவ மைத்திரிபால சிறிசேனவின் கட்சி ஆட்சிக்கு வந்ததுடன் சாத்திய வள ஆய்வறிக்கைகள் பரீட்சிக்கப்பட்டன. அதன் பின்னர் நீர்தேக்கத்தை நிர்மாணிப்பதற்காகஆரம்பிக்கப்பட்ட வரைபடங்களும் தயாரிக்கப்பட்டன. ஆயினும் மகாவலி அதிகார சபையின் மீள் கட்டமைப்பு செயற்பாடுகளினால் அப்பணி தாமதமடைந்தது.