Sign in to follow this  
putthan

லின்சன்

Recommended Posts

லின்சன் குடும்பத்தின் கடைக்குட்டி, மூத்தவர்கள் இருவரும் பெண்கள் .தந்தை இளம் வயதிலயே இறக்க தாயின் மீது குடும்ப சுமை விழுகின்றது.வீட்டின் செல்லப்பிள்ளை லின்சன் .சிறுவயது முதல் பெண்களுடன் தான் அவன் அதிகமாக விளையாடுவான்,ஆண் நண்பர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

சகோதரிகளின் உடைகளை சிறுவயதில் அவனுக்கு அணிந்துவித்து அழகுபார்ப்பாள் தாயார்.அவனுக்கு அந்த ஆடைகள் மிகவும் பிடித்தமானதாகவிருந்தது.பாடசாலைக்கு செல்லும் வயதிலும் சகோதரிகளின் ஆடைகளை அணிந்து மகிழ்வான்,தாயார் சகோதரிகள் பேசி தடுத்தாலும் அவர்களுக்கு தெரியாமல் தனிமையில் அணிந்து மகிழ்வான்.

பாடசாலையிலும் அவன் பெண்களுடனே அதிகம் பழகினான் .இது பாடசாலை அதிபருக்கு ஒரு பிரச்சனையாக இருந்தது.அந்த சமுகம் ஆண்கள் பெண்களுடன் பழகுவதை ஒரு மதகுற்றமாக கருதுகின்ற சமுகமாகும்.இதனால் அவனை ஆண்கள் கல்வி பயிலும் தனியார் பாடசாலைக்கு அனுப்பி வைக்கும்படி அதிபர் தாயாருக்கு அறிவுறுத்தினார்

அதிபரின் வேண்டுகொளின்படி அவனை தனியார் பாடசாலையில் அனுமதித்தாள் தாயார் .அவர்களின் கிராமத்திலிருந்து சில மைல் தொலைவில் பாடசாலை இருந்தபடியால் ,விடுதியில் தங்கியிருந்து படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

முதல் நாள் பாடசாலை விடுதியில் தாயாரிடமிருந்து பிரியாவிடை பெறும்பொழுது அந்த விடுதியே அதிரும் படி அழுதான்.விடுதி மாணவர்கள் அவனை சமாதனப்படுத்தினார்கள் .விடுதி ஆசிரியர் அவனை மடியில் இருத்தி அன்பாக பேசினார். அவன் அமைதியானவுடன் அவனுக்கு அவனது கட்டில் , கோப்பை போன்றவற்றை காட்டினார்.

தாயாரும் பிரிய மனமில்லாது அவனிடமிருந்து விடை பெற்று சென்றாள்.விடுதியில் முதல்நாள் இரவு படுக்கைக்கு செல்லும் பொழுது தனியாக படுக்க பயமாக இருக்கிறது என விடுதி ஆசிரியரிடம் சொல்லி அழுதான் , விடுதியில் பலர் இருக்கின்றனர் நீ பயப்படாமல் தூங்கு நான் இரவு வந்து உன்னை பார்க்கின்றேன் ,இவனின் பெயர் கென்ட் உனது பக்கத்து கட்டிலில் படுத்திருப்பான் அவசர உதவி தேவை என்றால் இவனிடம் கேள் ,இவன் தான் இந்த விடுதியின் மொனிட்டர் என அறிமுகப்படுத்தி வைத்தார் .கென்ட் உயர்தர வகுப்பில் கல்வி கற்றுகொண்டிருந்தார். லின்சனை கண்ட கென்ட் தன்நிலை மறந்தான் .கென்டினின் அன்பான உபசரிப்பால் லின்சனுக்கு வீட்டின் ஞாபகங்கள் மெல்ல மெல்ல அகலத்தொடங்கியது.

அன்று கென்ட் தன்னிடம் உள்ள சில ஆபாசபடங்களை மேசையில் வைத்து பார்த்து கொண்டிருந்தான்.தற்செயலாக அங்கு வந்த லின்சன் அதை கவனித்துவிட்டான். இருந்தாலும் அதை அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.கென்ட் அந்த புத்தகத்தை வேண்டுமென்றே லின்சன் பார்க்கும் படி மறைத்துவைத்துவிட்டு அங்கு இருந்து சென்றுவிட்டான். அவன் சென்றவுடன் லின்சன் அந்த புத்தகத்தை எடுத்து பார்க்க தொடங்கினான்.அதை பார்க்க தொடங்கியவுடன் அவனது அந்தரங்க உறுப்பு அவனது சொல்லை கேட்காமல் சுதந்திரமாக செயல்பட தொடங்கிவிட்டது. கென்ட் தனது திட்டம் சரியாக செயல்படுவதை லின்சனின் அந்தரங்க உறுப்பின் செயல்களின் மூலமறிந்து கொண்டான்.

அவனுக்கு அருகில் சென்று லின்சனின் உணர்ச்சிகளை தூண்டி தனது கட்டளைகளுக்கு அடிபணியவைத்தான்.

ஒவ்வொரு தடவையும் கென்ட தனது உணர்ச்சிகள் தீர்ந்தவுடன் லின்சனை ஆடைகளை அணிந்து கொண்டு உடனே வெளியே சென்றுவிடு யாராவது பார்த்துவிடுவார்கள் என எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுவான்.இதனால் லின்சன் தனது உணர்ச்சிகளுக்கு வடிகால் தேட தன்னையே நம்பவேண்டிய சூழ்நிலை பல தடவை ஏற்பட்டது.

சகமாணவர்களுக்கு இந்த விடயம் தெரிய தொடங்கிவிட்டது."பக்லா" என்று சக மாணவன் ஒருத்தன் இவனை அழைத்தான் .அந்த கிராமத்தில் பக்லா என்றால் அலி என்று அர்த்தம். இதனால் ஆத்திரமடைந்த லின்சன் அவனை பலமாக தாக்கி அருகிலிருந்த கூறிய ஆயுதத்தை காட்டி குத்தி போடுவேன் என மிரட்டினான்.என்னை ஆண் என்று சொல்லுங்கள் அல்லது பெண் என்று அழையுங்கள் ஆனால் பக்லா என்று அழைக்காதீர்கள் மீறி அழைத்தீர்கள் என்றால் கொலை செய்து விடுவேன் என எச்சரித்து பாடசாலையை விட்டு வெளியெ சென்றுவிட்டான்.

உல்லாச விடுதியில் பணியாளர் வேலையில் அமர்ந்தான் அங்கு வரும் வெளிநாட்டு ஆண்களுடன் இவனுக்கு தொடர்புகள் உண்டானது .அப்படி தொடர்பில் வந்தவன் தான் மைக்கல் .மைக்கல் புகைப்படக்கலைஞன் மொடல் அழகிகளை புகைப்படம் எடுப்பவன்.அவன் எடுத்த பல அழகிகளின் படங்களை காட்டினான் .உனக்கு மார்பகங்கள் இருந்தால் நீயும் பிரபல மொடலாக வந்திருப்பாய்,என சொல்லிய படியே அவனது கன்னத்தில் முத்தமிட்டான்.

"உன்னை திருமணம்செய்து அவுஸ்ரேலியாவுக்கு அழைத்து செகின்றேன் உனக்கு சம்மதமா?" .

"என்னையா?நான் ஆண் என்னை எப்படி, திருமணம் செய்ய முடியும் "

"எங்கள் நாட்டில் இதற்கெல்லாம் சட்டமிருக்கு "

"அடுத்த தடவை வரும்பொழுது சகல ஏற்பாட்டுடனும் வருகின்றேன்,நீ பாஸ்போர்ட்டை எடுத்து தயாராக இரு"

மேலதிகாரியுடன் அவுஸ்ரேலியா செல்வதாக தாயாரிடம் சொன்னான்.தாயார் சகோதரிமார் எல்லோரும் மகழ்ச்சியடைந்தனர்

மூன்று மாத்தின் பின் சிட்னி விமான நிலையத்தில் மைக்கலுடன் வந்திறங்கினான்.மைக்கல் அவனை தனது உதவியாளராக சகலருக்கும் அறிமுகப்படுத்தினான்.சிலருக்கு மட்டும் தன்னுடைய ஆசைநாயகன் என சொல்லி வைத்தான்,.

இவன் ஒரு ஆண் என ஒரு மொடலழகியை காட்டினான்.அவன் அதிர்சியடைந்தான் அது எப்படி அவளுக்கு /அவனுக்கு மார்பகங்கள் இருக்கு ?

"சத்திர சிகிச்சை மூலம் அவன் அவளாக மாறிவிட்டாள்"

அதன்பின்பு அவளை கண்டாள் தானாக சென்று அவளிடம் சுகம் விசாரிப்பான் அவளும் இவனுடன் நெருங்கி பழகதொடங்கி விட்டாள்.மொடல் மூலம் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என அவள் கூறியதை கேட்ட லின்சனுக்கு தானும் மொடலக வேண்டுமென்ற ஆசை வரதொடங்கி விட்டது.தனது விருப்பத்தை மைக்கலிடம் சொன்னான் .மைக்கல் சம்மதம் தெரிவித்து தன்னை விவாக ரத்து செய்யும் படி கேட்டு கொண்டான்.

லின்சன் லின்சியாக மாறி பல மொடல்ழகிகளுகு போட்டியாக பணம் சம்பாதித்தான்/ள்.

சில வியாபார பெரும்புள்ளிகளுக்கு ஆசைநாயகியாகவும் இருந்து பணம் சம்பாதிதாள்/ன்.ஒரு வாடிக்கயாளன் அவளை தன்னுடன் நிரந்தரமாக தங்கும்படி கேட்டுகொண்டான் லின்சியும் பணத்துக்கு ஆசைப்பட்டு சம்மதித்தாள்.ஒருநாள் இருவரும் வாக்குவாதத்தில் இடுபட்டனர்.ஆத்திரமடைந்த லின்சி தனது ஆண்குணத்தை வெளிக்காட்டினாள் உன்னை குத்தி கொலைசெய்து அடுப்புக்குள் போடுவேன் என எச்சரித்துவிட்டு உறங்க சென்றுவிட்டாள்/ன் . .இதை ஒரு கெளரவ குறைச்சலாக அவளது வாடிக்கயாளன் உணர்ந்தான்.

அன்று இரவு லின்சி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள் .இதையறிந்த வாடிக்கையாளன் சமையலறையிலிருந்த மாமிசம் வெட்டும் கத்தியால் அவளது கழுத்தை வெட்டி ,அங்கங்களையும் வெட்டி அவண்னில் போட்டு விட்டான்....தூர்நாற்றம் அந்த வீட்டை சுற்றி வருவதாக பொலிசார்க்கு அயலவர்கள் தகவல் கொடுத்தனர்.பொலிஸ் படை வருவதை அறிந்த வாடிக்கையாளன் பெரிய குப்பை தொட்டியுனுள் ஒடி மறைந்து தனது கையை வெட்டி தற்கொலை செய்து கொண்டான்.

உனது மகள் லின்சி அவுஸ்ரெலியாவில் இறந்து விட்டார் என தூதரக அதிகாரிகள் தாயாருக்கு செய்தி அனுப்பினார்கள்,ஆனால் அவள் நம்பவில்லை.எனது மகன் தான் அவுஸ்ரேலியாவில் இருக்கின்றான் ,மகள்மார் இருவரும் என்னுடன் இங்குதான் இருக்கிறார்கள் ,தப்பான விலாசத்திற்க்கு செய்தியை அனுப்பிருக்கிறார்கள் என புலம்பத்த்தொடங்கிட்டாள்....

 • Like 9

Share this post


Link to post
Share on other sites

இந்த கதைக்கு(கிறுக்களுக்கு) பச்சை புள்ளியும் ஒருத்தரும் இடவில்லை கருத்தும் வைக்கவில்லை என்ன காரணமாக இருக்கும் ?வாசகர் சொன்னல் நான் திருந்தலாமல்லோ :D :D

Share this post


Link to post
Share on other sites

இப்ப கிறிஸ்மஸ் ரைம் எல்லோ!! சனத்துக்கு கதை வாசிக்கிற அளவுக்கு மனபக்குவம் வராது...இன்னும் ஒருகிழமையாலை பாருங்கோ எல்லாரும் ஆகா ஓகோ எண்டுவினம்.  :)  :D

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

புத்தா... இது,
கதை,கவிதை .... எழுதுற... நேரமா.. இது?
பேசாமல்.... நாலு, பகிடியை விட்டு, மூன்று பேருக்கு... கடுப்பு ஏத்துங்கோ..... பாப்பம். :rolleyes:  :)  :D  :lol:  :icon_idea:

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாசிச்சனான், நல்ல கதை. பச்சை முடிந்துவிட்டது. பிள்ளைகளை விடுதியில் விடுவது நல்லதில்லை.

 

ஆஸியில் நடந்த பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமென்று நினைக்கின்றேன்

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

பத்துக்கு எட்டு அரவாணிகளுக்கு இதுதான் பிரச்சினை...! நல்ல கதை புத்ஸ்...!!

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

இப்பிடியான கதைகளை எம்மவர் விரும்பாததுதான் காரணம் புத்தன் உங்களுக்குப் பச்சை குவியாததுக்கு. என்னிடம் பச்சை இல்லை போட :D இது ஓட ஓட எழுதியதுபோல் இருக்கு. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் புத்தன்.

 • Like 1

Share this post


Link to post
Share on other sites

புத்தன் இந்தக் கதையைப் போட்டபோதே வாசித்திருந்தேன். கதையை அவரசத்தில் எழுதிய மாதிரி இருந்ததால் கதையா அல்லது செய்திவிவரணமா என்ற குழப்பம் வந்தது.

Share this post


Link to post
Share on other sites

லின்சன் குடும்பத்தில்.... கடைக்குட்டி, தந்தை இல்லை, இரண்டு சகோதரிகள்....
இளவயதில் அவனுக்கு.  கிடைத்த செல்லமான கவனிப்பும்... அவனில் ஒரு பெண்தன்மையை... உருவாக்கியிருக்கலாம்.
இந்த உலகில்... லின்சன் போன்றவர்கள் பலர் நன்றாக வாழும் போது...
அவுஸ்திரேலிய சென்ற, லின்சனின் முடிவு கவலைக்குரியது.
மனதை... பாதித்த கதை புத்தன்.

Share this post


Link to post
Share on other sites

அனைவருக்கும் புத்தனின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

இப்ப கிறிஸ்மஸ் ரைம் எல்லோ!! சனத்துக்கு கதை வாசிக்கிற அளவுக்கு மனபக்குவம் வராது...இன்னும் ஒருகிழமையாலை பாருங்கோ எல்லாரும் ஆகா ஓகோ எண்டுவினம்.  :)  :D

 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றிகள் கு.சா ....நானும் நேற்றுத்தான் கிறிஸ்மஸ் விடுமுறையிலிருந்து வீடு திரும்பினேன்....

புத்தா... இது,

கதை,கவிதை .... எழுதுற... நேரமா.. இது?

பேசாமல்.... நாலு, பகிடியை விட்டு, மூன்று பேருக்கு... கடுப்பு ஏத்துங்கோ..... பாப்பம். :rolleyes:  :)  :D  :lol:  :icon_idea:

 

நன்றிகள் தமிழ்சிறி அதுவும் சரிதான் ...இப்ப கதை ,கவிதை எழுதுற நேரமா? :D

வாசிச்சனான், நல்ல கதை. பச்சை முடிந்துவிட்டது. பிள்ளைகளை விடுதியில் விடுவது நல்லதில்லை.

 

ஆஸியில் நடந்த பிரச்சனைகள் உங்களுக்கு தெரியுமென்று நினைக்கின்றேன்

 

நன்றிகள் உடையார் ...இதுவும் அவுஸ்ரேலியா பிரிஸ்பேர்னில் நடந்த ஒரு உண்மைசம்பவம்....

Share this post


Link to post
Share on other sites

நானும் கதையை வாசிச்சனான்.பதில் போட ரேப்பிரச்சனை.வேற ஒன்டும் இல்லை. :)

Share this post


Link to post
Share on other sites

இந்தக் கதையை வாசிக்கும் போது " கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, புதிய வார்ப்புகள்" போன்ற மண்வாசனைக் கதைகளை (சுரேஸ் ) எடுத்துகொண்டிருந்த பாராதிராஜா , "டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள்"  போன்ற மண்வாசனை அற்ற (லின்சன்) படங்களை எடுத்தது போல  இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, கந்தப்பு said:

இந்தக் கதையை வாசிக்கும் போது " கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, புதிய வார்ப்புகள்" போன்ற மண்வாசனைக் கதைகளை (சுரேஸ் ) எடுத்துகொண்டிருந்த பாராதிராஜா , "டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள்"  போன்ற மண்வாசனை அற்ற (லின்சன்) படங்களை எடுத்தது போல  இருக்கிறது.

ஆகா ஆகா ....தலைவா என்னை அந்த மாதிரி குளிரப்பண்ணிட்டியள்.....அதற்கு நன்றிகள்....அதுசரி என்ன பழைய கதைகளை தூசிதட்டி எடுத்து வாசிக்கிறீயள்....

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல்  தகனம்  2019 செப்டெம்பர் 23 திங்கட்கிழமை, பி.ப. 02:41     முல்லைத்தீவு, நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் விஹாரையை அமைத்து, சர்ச்சைகளை ஏற்படுத்திய, கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை ஆலய வளாகத்துக்கு அப்பால் உள்ள இராணுவமுகாம் அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்யுமாறு முல்லைத்தீவு நீதவான்  நீதிமன்றம் இன்று (23) தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல்  கொழும்பு மேதாலங்கார கீர்த்தி தேரரின் பூதவுடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நடவடிக்கைகளை ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் முன்னெடுத்திருந்ததாகவும், இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  நீதிமன்ற உத்தரவு எழுத்துமூலம் வழங்கப்படுவதற்கு முன்னர் பௌத்த பிக்குவின் உடலை இவ்வாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் தகனம் செய்ய நடவடிக்கையெடுத்துள்ளமைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். http://www.tamilmirror.lk/வன்னி/ஆலய-வளாகத்தில்-தேரரின்-பூதவுடல்-தகனம்/72-239103
  • இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று இருபதுக்கு - 20 தொடரை சமன் செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20, 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலவதாக இடம்பெறும் இருபதுக்கு - 20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா அணி வெற்றிபெற்றிருந்தது. இந் நிலையில் இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.  முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை 20 ஓவர்கள் நிறைவில் பெற்றது. இந்திய அணி சார்பில் தவான் 36 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.  பந்து வீச்சில் தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபடா 3 விக்கெட்டுக்களையும், பெலக்வாயோ மற்றும் போர்டுயின் ஆகியோர் இரு விக்கெட்டுக்களையும், ஷம்மி ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.  135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி 16.5 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் ஹெண்ரிக்ஸ் 28 ஓட்டத்தை பெற்று ஆட்டமிழந்ததுடன் பவுமா 27 ஓட்டத்தையும், அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 52 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டம் அடங்கலாக 79 ஓட்டங்களையும் குவித்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரானது 1:1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. https://www.virakesari.lk/article/65356
  • 😁😂  த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ளும் என்ர‌ ந‌ண்ப‌ன்ட‌ கேஸ் போல‌ ,  கும‌ராசாமி தாத்தா ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே சொல்லி போட்டார் த‌ன‌க்கு வ‌ன்டி கொஞ்ச‌ம் பெரிசு என்று ,  கா  ஓலை விழ‌ குருத்து ஓலை சிரிக்கிற‌து , த‌மிழில் இப்ப‌டி ஒரு ப‌ழ‌ மொழி இருக்கு , அத‌ தான் த‌மிழ் சிறி அண்ணா நினைப்பார் , த‌மிழ் சிறி அண்ணாவோடு எப்ப‌டி காமெடி செய்தாலும் கோவிக்க‌ மாட்டார் 😁😂 /
  • தாயாக மாறவா தாலாட்டு பாடவா......!   😁
  • இந்த கொலையை நான் ஒருபோதும் நியாயப்படுத்தவில்லை. இது மிகவும் காட்டு மிராண்டித்தனமான செயல். கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். ரோட்டில் ஒட ஓட விரட்டி ஒர் பெண்ணை கொல்வதில் எந்த வீரமும் இல்லை.  இவர் என்ன மனநிலையில்? ஏன் இந்த கொலைசெய்தார்? என்று இவரை தீர விசாரித்து உண்மையை அறிவதே சால சிறந்தது.  இக்காணோலியை பார்த்தால் ஏதோ ஓர் இந்தோசமான நிகழ்வில் எடுக்கப்பட்டது போல் தெரிகின்றது. இதில் பெண்கள் / ஆண்கள் ஆடிப் பாடி மகிழ்வது வழமை.  இதை வைத்து ஒருவரது குணவியைபுகளை தீர்மானிப்பது தவறு.