Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

f329c88c80b793c8e58feed5b9f07cfc

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சிந்தனை, நத்தாருக்கு... வருசத்துக்கு முருங்கையில ஏறாமல் இருக்க வேண்டும்...! :)

  • Like 1
Link to comment
Share on other sites

நல்ல பதிவுகள்

தொடருங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

10885503_661463857296261_681797447545580

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து 

கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.

சுதந்திரம் கேட்டுப் போராடினாயா" நீதிபதி கேட்கிறார்.

"இல்லை நான் போராடவில்லை...என்னை விட்டுவிடுங்கள் " என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை.. இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!

அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!

சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!

கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.

தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்!

நாடு விடுதலை அடைகிறது...!

50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார். சித்ரவதைகளை அனுபவித்து சிறைவாசம் கண்ட தமிழ்நாட்டு இளைஞன் ஒரு சாதாரண சின்னப் பையனிடம் தேர்தலில் தோற்றுப் போகிறான்!

அந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான். இவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை முன்னெடுத்துப் போராடுகிறான்.

அவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்ளப் போகிறான். இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் உழைக்கிறான்!

90 வயது முடியும் போது, ஓய்வில் இருக்கும் அந்த வடநாட்டு இளைஞனுக்கு "பாரத ரத்னா" விருது கிடைக்கிறது! இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது!

இதுதான் இந்தியாவின் அரசியல்! தர்மம் வெல்லும்... உண்மை வெல்லும் என்று சொல்வதெல்லாம் நமது அரசியலுக்குப் பொருந்தாது என்கிற எண்ணமே மேலோங்குகிறது!

1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர். 

அவர் அடல் பிகாரி வாஜ்பேயி.

1925 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர்.

இவர் அருமை அய்யா நல்லகண்ணு!!!

அன்று அவர் தேசத் துரோகி, இவர் விடுதலைப் போராட்ட தியாகி.

இன்று அவர் தேசபக்தர்... இவர் தேச விரோதி!!!

பாரத் மாதாகி ஜே!!!.

நன்றி --- Dhamu Tharan

 

Link to comment
Share on other sites

இந்த மதத்தில் தீவிர பக்தனாக இருக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.
இங்கு இல்லை.
Link to comment
Share on other sites

இத்தனை  பேரைத்தள்ளி  விடுகின்ற இவரை தள்ளிவிட ஒருவரும் இல்லையா??

முடிந்தால்

பலருக்கு நிம்மதி....... :D

Edited by விசுகு
Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

இத்தனை  பேரைத்தள்ளி  விடுகின்ற இவரை தள்ளிவிட ஒருவரும் இல்லையா??

முடிந்தால்

பலருக்கு நிம்மதி....... :D

ஏன் உங்களுக்கு இந்த கொலைவெறி?
 
அப்படி விழுந்தால்தான் அவர்களுக்கு நிம்மதி எனும்போது .....
விழுதும் அவர் ஒரு சமூக தொண்டன்தான். 
 
தனது கடமையை அவர் சரிவர செய்கிறார்.
 
நாங்களும் அதில் சென்று அவர்களுடன் சேர்ந்து விழவேண்டும்.
விழுவது எவளவு ஆனந்தம் என்பது உங்களுக்கு அப்போது புரியும்..... எழுந்து எழுந்து விழுந்தால் சொர்கத்திட்கே போகலாம். 
Link to comment
Share on other sites

யாழ்ப்பாணம் நாச்சிமார்கோயிலடி

திட்டமிட்டு ஓர் இனத்தை அழிக்கும் முயற்சியில் அரசுகள்.

அறுபதாண்டுகளாகத் தொடரும் தமிழின ஒழிப்பு அரசுகள்.

20 இலட்சம் மக்கள் வாழவேண்டிய 1,000 சதுர கிமீ. பரப்பளவு.

6.5 இலட்சம் மக்கள் வாழும் 800 சதுர கிமீ. பரப்பளவு.

இன்றைய யாழ்ப்பாண மாவட்டத்தின் இழிநிலை இதுவே.

திறமைசாலி மாணவர் பல்கலையுள் புகமறுக்கும் கொள்கை.

திறமைசாலி இளைஞருக்கு வேலைவாய்ப்பா இல்லை.

திறமைசாலிகள் வெளியேறி உலகப் பல்கலைகளில் முதலிடம் பெறுநிலை.

திறமைசாலிகள் உலகநாடுகளில் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

எனதருமை அன்பர் காவலூரார் கரம்பனார் குகநாதனின் செல்வமகள் பிரான்சு நாட்டின் சட்டத்தரணிகளுள் இருபது வயதிலேயே புகழ்பெற்றவர்.

ஒபாமாவிடம் பரிசுவாங்கும் மட்டுவில் இளைஞன்.

பிரித்தானியா வானூர்திக்கு வாகான தொழிநுட்பம் வழங்கிய சாவகச்சேரி இளைஞன். 

இப்படி அடுக்கலாம் அருமை பெருமை தொடுக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் திறமைசாலிகளே இல்லையா?

புலமைக்கும் திறமைக்கும் வெற்றிடமா யாழ்ப்பாணம்?

அழிக்க விரட்ட முயன்றாலும் ஒருநாளும் தளர்வறியோம்.

அடக்கினாலும் ஒடுக்கினாலும் அயரோம் உயர்வோம்

பீனிக்சுப் பறவைபோல மீண்டெழுவோம்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு உரிய பராம்பரியச் செல்வம்.

கணித பாடத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் செல்வம்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் கூடுதலாகத் தொடரும் பராம்பரியம்.

அதே பராம்பரியத்தின் ஒளிவிளக்காக இந்த ஆண்டு ஒரு மாணவன்.

இலங்கை முழுவதிலும் ஆண்டு 13, (கபொத உயர்தரத்) தேர்வில் கணித பாடத்தில் முதல் மாணவன்.

பாக்கியராசா தாருகீசன்.

தென்மராட்சி மீசாலை ஈந்த பெருமகன்.

இலங்கை முழுவதிலும் உள்ள கணித பாட மாணவர்களுள் தலைசிறந்தவன். திறமைசாலி. புலமையாளன். அறிவார்ந்த செல்வன்.

யாழ்ப்பாணத் தமிழ்ப் பரம்பரையின் புகழ் காக்கப் பாக்கியராசா இணையர் பெற்றெடுத்த பெருமகன்.

மறவன்புலவின் மாணவச் செல்வங்கள் தாமே மாலை தொடுத்தனர்.

தாருகீசனிடம் சென்றனர், பாராட்டி மகிழ்ந்தனர்.

தாமும் அவரைப் போலத் திறமைசாலிகளாவோம் எனச் சூளுரைத்தனர்.

நானும் சென்றேன், பாராட்டினேன்.

16810_915494315127813_635681448801539157

10897059_915494318461146_764222035138577

 

1979506_915494295127815_5290562408393529

 

https://www.facebook.com/photo.php?fbid=915494295127815&set=pcb.915494611794450&type=1&theater

1979506_915494295127815_5290562408393529
1509683_915494351794476_8954050424614135
11403_915494305127814_699544033422102856
10885204_915494348461143_744858291641465
16810_915494315127813_635681448801539157

 

Link to comment
Share on other sites

மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் !

நாம் சாப்பிடுகிற எந்த உணவும் ஜீரணமடைந்த பிறகு சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பல்வேறு மாற்றங்களையும் பெறும். உடலின் தேவைக்குப் போக, மீதமுள்ள பல்வேறு சத்துக்களம் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும்.

அதுபோல மதுஅருந்தும் போது அது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு கல்லீரலைச் சென்றடையும். பல்வேறு உணவுகள், மருந்துகள் ஆகியவற்றின் வளர்ச்சிதை மாற்றங்களுக்கு உதவுவது போல, மதுவின் வளர்ச்சிதை மாற்றங்களிலும் கல்லீரல் பெரும் பங்கு வகிக்கிறது. மது முதலில் கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜீனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜீனஸ் என்ற நொதியால், அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப் பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிக்கும்.

மதுவை தொடர்ந்தும், அதிகமாகவும் அருந்தும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமிற்கு அதிகமாக ஆண்கள் குடிக்கும் போதும், பெண்கள் இருபது கிராமிற்கு அதிகமாகக் குடிக்கும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும்.
மது அதிகமாக அருந்தும் போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமாக கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன. அதே நேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாகவே செலவழிக்கப் படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரலை பெரிதாக்கிவிடும்.

மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் :
கல்லீரல் செல்களில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குதல், கொழுப்புப் பொருட்கள் அதிகம் மிகுந்து கல்லீரல் வீங்குதல், கல்லீரல் அழற்சியால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிவடைதல். ஹையலின் என்ற பொருட்கள் தோன்றுவதால் கல்லீரல் செல்கள் வீங்கி பெரிதாதல், ஹையலினால் நார் இழமைப் பொருட்கள் மிகுதல் போன்றவை தோன்றி இறுதியில் கல்லீரல் இறுக்கி நோயாக மாறும். அதிக மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப் படியும்.

பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.

மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டும் ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.ஒரு குடும்பத்தையே சிதைக்க கூடிய இந்த மதுவை விட்டு விடுங்கள் என்று இன்று ஒரு தகவல் சார்பாக நண்பர்களை கேட்டு கொள்கிறோம் மற்றும் உங்களுடைய நண்பர்களிடமும் இதை புரிய வைக்க முயற்சி செய்யுங்கள் .இதனால் ஒருவர் திருந்தினால் கூட நல்ல விடயம் தான்
அறிகுறிகள் துவக்கத்தில் அறிகுறிகள் தெரியாது, ஆரம்ப நிலையில் கல்லீரல் வீக்கம் இருக்கும். அதனைத் தொடர்ந்து பல்வேறு தொந்தரவுகளுடன் காமாலை, மூளை நலிவு, மகோதரம், வைட்டமின் சத்துக்குறைபாடு, பித்தநீர் குழாய் அடைப்பால் வயிற்றுவலி போன்றவையும் பிறகு கல்லீரல் இறுக்கி நோயும் வரும்.

சிகிச்சை :
கல்லீரல் செல்கள் தாங்களாகவே தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் பெற்றவை. அதனால் கல்லீரல் பாதிப்படைவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய சிகிச்சை மது அருந்துவதை விட்டுவிடுவதுதான். உடல் எடைக்குத் தேவையான வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்க வேண்டும். தேவையற்ற மருந்துகளை தவிர்க்க வேண்டும். கல்லீரல் இறுக்கி நோய் வருமுன் தடுப்பு முறைகளை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். இல்லாவிட்டால் கல்லீரல் தவிர, இதயம், மூளை, நரம்பு மண்டலம், இனவிருத்தி உறுப்புகள், கணையம், இரைப்பை குடல்கள் என பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படும்.

மது பழக்கத்திலிருந்து விலகும் வழிமுறைகள் :
1) உங்கள் மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள். 
உங்களின் மன உறுதி வலுவாக இருக்குமானால், நீங்கள் துரிதமாக மதுவை விட்டு விடுவீர்கள்.
2) மதுவின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் மது அருந்துவோர் வட்டத்தைத் தவிருங்கள்.
ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கிறீர்கள் என்பதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின் ஒரு தடவை குடித்தபின் அடுத்த தடவை குடிப்பதற்கான இடைவெளியை படிப்படியாக அதிகரியுங்கள்.
பின் ஒரு நாள் முழுதும் மது குடிப்பதை நிறுத்தி விடுங்கள்
இவற்றின் போது,உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதாவது செயலில் ஈடுபடுங்கள். இது மதுவிலிருந்து உங்கள் புலனை திசை திருப்ப உதவும்.ஒரு நண்பரிடமோ அல்லது நெருங்கிய உறவினரிடமோ உங்கள் பிரச்சினை பற்றி விவாதியுங்கள். இது மன அழுத்தத்தில் இருந்து ஆறுதல் தரும்.
3) மதுவுக்கு விடை கொடுங்கள்.
மதுவை மறுப்பதில் உறுதியாயிருங்கள்.
மதுவை விட்டு விடுவது கஷ்டமாகத் தோன்றினால், மனம் தளராதீர்கள். முயற்சியை விடாதீர்கள். தொடர்ந்து முயலுங்கள்.

மதுவை ஒழிப்போம் மனிதனாய் வாழ்வோம்.

10898125_406988459457467_581842548992600

 

Link to comment
Share on other sites

இவர்களின் சண்டையை பாருங்கள்
 

48c85346bcaee521b44ba711d012cd8e

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.