Jump to content

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: செடி

மருத்துவ குணம் கொண்ட பானத்தை வருடத்தில் ஒரு முறையாவது குடியுங்கள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்....

ஒரு மரத்துக் பனங்கள் குடித்தால்
அடி மரமாய் உடம்பு வரும் !
பனை மரத்துக் கள் குடித்தால்
கட வெலும்பும் இரும்பாகும் !

கள் நமக்குச் சுகமளிக்கும் !
வெள்ளை ரத்தம் – அந்தக்
கரும்பனையும், தென்னையும் நம்
கழனித் தெய்வம் !

கள் குடித்துக் கெட்டாரைக்
கேட்ட துண்டா?
கள் குடித்துச் செத்தாரைப்
பார்த்த துண்டா?

எலும்புருக்கி நோய் தீரும்
தென்னங் கள்ளால் !
எரிசூட்டு நோய் தீரும
பனையின் கள்ளால் !

அதிகாலைக் கள் கடித்தால்
அச்சம் போகும் !
அந்திக் கள் குடித்தால்
ஆயுள் நீளும் !

தாகம் எடுக்கையிலே
தமிழ்க்கிழவி ஔவ்வை
கள்ளை அருந்தித்தான்
களிப்போடு வீற்றிருந்தாள் !

கடையேழு வள்ளல்களும்
கவிஞர்கள் எல்லோர்க்கும்
கள் விருந்து கொடுத்தன்றோ
கௌவரம் செய்தார்கள் !

வில்வேந்தர் வேல்வேந்தர்
வீரவாள் வேந்தர்
கள்ளை அருந்தியன்றோ
கட்டுடம்பு வளர்த்தார்கள் !

சித்தர்கள் நமக்குச்
சீதனமாய் கொடுத்த
முத்தனைய கள் வேண்டி
முழக்கம் செய்திடுவோம் !

விருந்தாகி மருந்தாகி
விடிகாலை உணவாகி
விவசாயி வாழ்க்கையிலே
வருமானம் வழங்குகிற
வரம் கொடுக்கும் தேவதைகள் !

அளவான போதை
அளிக்கும் பொருளென்றால்
அருந்தலாம் என்று
அரசியல் சாசனமே
அதிகாரம் தருகிறது!

அளவான போதை
அளிக்கின்ற கள்ளை
ஏனருந்தக் கூடாது?
ஏனிறக்கக் கூடாது?

FB

 

Link to comment
Share on other sites

  • Replies 709
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பனங்கள்ளை கண்டு பருக ஆசை கொண்டு 

சனம் திரண்டது இன்று, கள்முட்டி காலியானது என்று 

வனம் சென்ற கந்தன்  மரமேறி கள்ளிறக்கி வந்து 

மணம் வீசும் கள்ளில் வண்டுகள் உண்டு மயங்கி விழ  

குணங்கொண்ட கள்ளை  வள்ளளாய் ஈந்தனன் காண்.....!   😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மானங்கெட்டத் தமிழனே.
***************************
உலக மக்களின் பார்வை படும்
மெரினாவில்
அண்ணா சமாதி,
எம்ஜிஆர் சமாதி,
ஜெயலலிதா சமாதி,
பெரியார் சிலையென்று
எல்லா எளவும் இருக்குது

எங்கடா அந்த 
ராஜராஜ சோழன் சமாதி ?

எங்கடா அந்த
ராஜேந்திர சோழன் சமாதி ?

எங்கடா போனது என்
சூர்யவர்மன் சிலை?

எங்கடா அந்த 
குலோத்துங்கன் நினைவிடம்?

எங்கடா போனது அந்த 
பாண்டிய மன்னனின் 
நினைவு மண்டபம்.?

எங்கடா அந்த 
கரிகால சோழனின் சிலை?

எங்கடா இருக்கு என் 
வேலுநாச்சியார் சமாதி ?

எங்கதான்டா இருக்கு 
சேரன் செங்குட்டுவனின் சமாதி ?

எங்கடா அந்த அழகுமுத்தோட
நினைவு மண்டபம்.?

எங்கு பார்த்தாலும்

அண்ணா அறிவாலயம்
அண்ணாநகர்,
அண்ணா சாலை
அண்ணா சிலை

பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை 
பெரியார் சிலை

எம்ஜிஆர் மணிமண்டபம்
எம்ஜிஆர் பல்கலைகலகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர்
எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை
எம்ஜிஆர் சிலை

அடுத்தால அம்மா, சின்னம்மா
புஜ்ஜிமா,கட்டுமரம்
இப்படி சொல்லியே 
நாசமா போங்க..

உலக சாம்ராஜ்யங்களை
வென்றுகாட்டி நம் தேசத்திற்கு
வெள்ளையனைத் தேடி 
வரவழைத்த நம் 
முன்னோர்களுக்கு சரியான
சிலைகளுமில்லை,
நினைவு கட்டிடங்களும் இல்லை.

அவர்களின் வரலாறும் 
வகுப்பறைப் பாடத்திட்டத்தில் 
ஒழுங்காக இல்லை

இடையில் வந்த அத்துனை
கழிசடைகளின் வரலாறும்
பாடத்திட்டத்தில் 
ஓங்கி ஒலிக்கிறது.

கரிகாலன் கட்டியக் கல்லணை
இன்றுவரை சுற்றுலாத் தலமாக
மாற்றப்படவில்லை.

மாபெரும் கடற்படையை கட்டமைத்து
உலகின் பல நாடுகளை வென்று
மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய
ராஜேந்திர சோழனை பற்றி
இங்கே கற்பிக்கப்படவில்லை!

ஒவ்வொரு தமிழனும் தினமும் 
கோவிலுக்கு செல்கிறான்
அந்தக் கோவிலைக் கட்டியவன்
யாரென்று கூடத் தெரியாமல்

அந்தக் கோவிலைக் கட்டிய
மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் 
இருந்தாலும் கூட 
அப்பேற்பட்ட அவனது 
நடுநிலைத்தன்மையைப்
பாராட்டி நீ அல்லவா
அவனது பெயரை 
உலகம் போற்றிட 
செய்திருக்க வேண்டும்.?

ஒன்றுமே செய்யாமல்
இருந்துவிட்டாயே 
நன்றி கெட்டவனே.

பசுவுக்காக தன் மகனையே
கொன்ற சோழனின் 
கல்லறையை பாரடா..

கஜினி முகமதுவை 
பதினேழு முறை 
ஓடவிட்டு விரட்டிய
நம் சோழனின் 
கல்லறையை பாரடா..

தான் கட்டியக் கோவிலில் 
தன் பெயரை எழுதாமல் 
அதில் வேலை செய்த 
சிற்பக்கலைஞர்களின் 
பெயரை எழுதி வைத்த 
நம் ராஜ ராஜ சோழனின் 
கல்லறையை பாரடா..

தெற்காசியாவை ஆண்ட
ஒரு மாமன்னனின் 
கல்லறையை நீ வைத்திருக்கும் 
கோலத்தைப் பாரடா
மானங்கெட்டத் தமிழனே.

அப்படி என்னாடா இந்த 
இடையில் வந்தவன் 
உனக்கு செய்துவிட்டான்?

இடையில் வந்த ரெண்டு 
நல்ல மனுஷன் கக்கனும்,
காமராஜரும்

கக்கன் யாரென்று 
யாருக்குமே தெரியாது.
காமராஜரை சாதிசங்க 
தலைவராய் மாற்றி 
வைத்துவிட்டாய்.

மாகராஷ்ட்ராவில் எத்தனையோ
தலைவர்கள் ஆண்டாலும் 
இன்றும், முதல் மரியாதை 
சத்திரபதி சிவாஜிக்குத்தான்.

அந்த மான உணர்வு 
உனக்கு ஏனடா 
இல்லாமல் போனது
மானங்கெட்டத் தமிழனே..

Link to comment
Share on other sites

🌷நேபாளத்திலிருந்து இந்தியா வரும் வழியில் சாலையும்,நதியும் ஒன்றாக பயணிக்கும் அற்புதமான , ரம்மியமான காட்சி. 🌷

 

Link to comment
Share on other sites

 

படித்ததில்_பிடித்தது

ஒரு காட்டில் வாழ்நாள் முழுக்க வேட்டையாடி அலுத்துப்போன புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது.
அங்கே ஒரு எறும்பு வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது.

நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்ம ஆட்சியாளர்களுக்கு தோனுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோனுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது.

அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுது.

புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவுநாளா இது தோனலையேன்னு ஒரு முயலை செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவனையாவும் கொடுக்கனும்"னுது.

"ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரின்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னது, அப்படியே வாங்கிகிச்சு ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு.

இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி.

'எதைத்தான் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்"

"யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பைதான" அதிரடியாக சொன்னது ஆந்தை.

இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான். வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தாத்தா…...யோவ் பெரிசு? 😎

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு அருமையான குரல்......ஒரு நிமிடம் இதயமே நின்று விட்டது......!

பி.கு: லதா மங்கேஸ்வரின் குரலில் அற்புதம். அன்று இந்தப் படத்தைப் பார்த்தபோது ஜீனத்அமன் சிவலிங்கத்தை தழுவி தழுவி கழுவி கழுவிக்கொண்டு வருவார்.கோவில் சுத்தமாகி விடும். மனமெல்லாம் குப்பையாகி வெளியே வருவோம்......!    😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

என்ன ஒரு அருமையான குரல்......ஒரு நிமிடம் இதயமே நின்று விட்டது......!

பி.கு: லதா மங்கேஸ்வரின் குரலில் அற்புதம். அன்று இந்தப் படத்தைப் பார்த்தபோது ஜீனத்அமன் சிவலிங்கத்தை தழுவி தழுவி கழுவி கழுவிக்கொண்டு வருவார்.கோவில் சுத்தமாகி விடும். மனமெல்லாம் குப்பையாகி வெளியே வருவோம்......!    😁

சார்! அந்த அற்புத காட்சிய நம்ம கொழந்தைங்க தமிழ்சிறி ஈழப்பிரியன் பார்த்து ரசிச்சிருப்பாங்களா சார்?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

சார்! அந்த அற்புத காட்சிய நம்ம கொழந்தைங்க தமிழ்சிறி ஈழப்பிரியன் பார்த்து ரசிச்சிருப்பாங்களா சார்?😎

https://youtu.be/QcfLJfVqS1c

பாருங்கள் கொண்டாடுங்கள்.வீடியோ வருகுதில்லை......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, suvy said:

https://youtu.be/QcfLJfVqS1c

பாருங்கள் கொண்டாடுங்கள்.வீடியோ வருகுதில்லை......!   😁

https://youtu.be/O15o19ZCD2Y 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.