Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

  • Replies 689
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மலரே மௌனமா ... என்ன குரல் வாவ்....  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கருணா கைது முதற் கொண்டு இலங்கையில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் "அரசியல் ஆற்றுகைகளை" (Political Performances) அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பத்தில் இருந்

வரும்கால விவசாயி.

திருமதி கமலினி செல்வராஜனும் கலையும்..!!!

தமிழ் - நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி செல்வராஜன் அவர்களின் மறைவு, கலைத்துறைக்குப் பேரிழப்பாகும். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனது அறிவிப்புப் பணியை ஆரம்பித்த அவர், பின்னர் ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வந்த ஆயுபோவன் என்ற நிகழ்ச்சியை 1990 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் முதன் முதலில் நடத்திய பெருமைக்குரியவர்.

இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோரின் மூத்த மகளான கமலினி, கொள்ளுப்பிட்டி சென். அந்தனீஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். 

தந்தை மு. கணபதிப்பிள்ளை - இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது, அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசஜனைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.

மேலும், சில்லையூர் செல்வராசன் எழுதிய 'தணியாத தாகம்' வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக 'கமலி' பாத்திரத்தில் இவர் நடித்தார். இலங்கை வானொலியில் 'கலைக்கோலம்' முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியுள்ளார் .

ரூபவாஹினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கமலினி செல்வராஜன் ரூபவாஹினியிலும், ஐ.ரி. என். தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார்.

இலங்கையில் 1976 இல் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற “கோமாளிகள்” திரைப்படத்தில் அவரது கணவர் சில்லையூர் செல்வராஜனின் காதலியாக கமலினி செல்வராஜன் நடித்தார். 

இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற “கோமாளிகள் கும்மாளம்” என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. 

S. ராம்தாஸ், T. ராஜகோபால், S. செல்வசேகரன், B. H. அப்துல் ஹமீட், K. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், K.A. ஜவாஹர் போன்ற பலர் அத் திரைப்படத்தில் நடித்தனர்.

ஏற்கனவே, வானொலி மூலம் பிரபலம் பெற்ற கலைஞர்களைக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டமை அத்திரைபடத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

'ஆதர கதாவ" என்ற சிங்களத் திரைப்படத்திலும் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று கமலினி செல்வராஜன் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பெற்ற விருதுகள் சில வருமாறு:

- நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது (1995)

- கொழும்பு றோயல் கல்லூரி நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது (2008)

- நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது (2010)

- 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் விருது

1995 ஆம் ஆண்டில், கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து இவர் கொழும்பில் தனது மகன் அதிசயனுடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக டிமென்ஷா என்ற மறதி நோய்க்கு உட்பட்ட அவர், சுகயீனமுற்ற நிலையில் 2015 ஏப்ரல் 7 ஆம் திகதி அன்று கொழும்பில் காலமானார்.

அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தார், நண்பர்கள் அபிமானிகள், அனைவருடனும் நாமும் பங்கெடுக்கின்றோம்.

தமிழ் மொழிக்கும், தமிழ் வானொலி / தொலைக்காட்சி மற்றும் கலைத்துறைக்கும் அவர் ஆற்றிய அரும்பணி என்றும் போற்றுதற்குரியது.

அன்னாரின் ஆத்மா அமைதியாக உறங்கட்டும்...!!!

- நினைவுப் பகிர்வு : உதயன் எஸ். பிள்ளை -

— with Kavitha Uthayan.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Facebook

[#வசீகரா என் நெஞ்சினிக்க எனும் இனிமையான பாடலினை தன் நாத இசை மூலம் மேலும் இனிக்கச் செய்து ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட #குமரன்....... என்னவென்று சொல்ல....!!!! சொல்ல வார்த்தைகளே இல்லை.... நீங்களே பாருங்கள் பிடித்தால் #பகிருங்கள்...!!!]

 

 

Edited by Knowthyself
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Facebook

[நாங்கள் யாழ்ப்பாணம்]

இப்படியும் சாகலாம் ..

 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

C0j72ZgUQAA6DT4.jpg

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜஸ்டின் .....
அரசியலில் என்னைக் கவர்ந்த வெகு சொற்பமான  விரல் விட்டு எண்ணக் கூடிய நாயகர்களில் ஒருவர்......

 

 

Link to post
Share on other sites

உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி வெனிசூலாவில் உள்ளது

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கிலாந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அரசு முடிவு! தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பில் இருந்து நீக்குவது குறித்து பிரித்தானிய பி.ஓ.ஏ.சி. ஆணைக்குழுவின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய போவதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து பிரதமர் டுவிட்டர் பதிவென்றை விடுத்துள்ளதுடன் வெளிவிவகா அமைச்சினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரதமரின் டுவிட்டர் பதிவில்,  இலங்கை விடுதலைப் புலிகளை தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தின் எச்சங்கள் உலகம் முழுவதும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டுள்ளன மற்றும் எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. எல்.ரீ.ரீ.ஈ மீதான தடையை பிரிட்டிஷ் அரசு நீடிக்கும் என்று நம்புகிறேன். என பதிவிட்டுள்ளார். இது குறித்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஐக்கிய இராச்சியத்தின் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் 2020 அக்டோபர் 21 ஆந் திகதிய திறந்த தீர்ப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 மார்ச் 08 ஆந் திகதியிட்ட ஐக்கிய இராச்சியத்தின் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க செயலாளரின் தீர்மானத்தை எதிர்த்து எல்.ரீ.ரீ.ஈ. முற்போக்கு அமைப்பால் 2019 மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் பிரதிபலிப்பாக அமையும் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் இந்த தீர்மானமானது, 2000 ஆம் ஆண்டின் ஐக்கிய இராச்சிய பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ.) மீதான தடையை நீக்குவதற்காக குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவில் இந்த நடவடிக்கைகளுக்கான ஒரு தரப்பாக இலங்கை அரசாங்கம் இல்லாத காரணத்தினால், நேரடியான பிரதிநிதித்துவங்களை மேற்கொள்ள முடியவில்லையாயினும், தொடர்ச்சியாக இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து பொருத்தமான தகவல்களை வழங்குவதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் திறந்த தீர்ப்பானது மேன்முறையீடு செய்வதற்கு அனுமதிக்கும் அதே வேளையில், மேலதிக விசாரணைகளுக்கும் சந்தர்ப்பங்களை வழங்குவதுடன், இங்கிலாந்தில் இடம்பெறும் வழக்கின் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் நெருக்கமான அவதானங்களை செலுத்தும். வன்முறையைத் தூண்டி, நாட்டின் ஸ்திரமற்ற தன்மைக்கு வழிவகுக்கும் வகையில் செயற்படும் எல்.ரீ.ரீ.ஈ. மற்றும் அதன் பயங்கரவாத சித்தாந்தங்களுடன் இணைந்த குழுக்களின் எச்சங்கள் வெளிநாடுகளில் செயலில் உள்ளன என்பதை நிரூபிப்பதற்கான போதுமான சான்றுகள் இலங்கை அரசாங்கத்திடம் காணப்படுகின்றன. இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய அச்சுறுத்தல்கள் தொடர்பில் இலங்கை அவதானமாக இருப்பதுடன், பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு எப்பொழுதும் தனது ஆதரவுகளை வழங்கும். https://www.virakesari.lk/article/92766
    • இரட்டை பிரஜாவுரிமை : அமோக வெற்றி ! இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 17 வது சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது நிறைவேற்றப்பட்டது. 20 ஆவது திருத்தத்தில் உள்ள இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சரத்துக்கு தனி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கோரியதையடுத்து பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜாவுரிமை சட்டத்திற்கு தனி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது இந்நிலையில் இரட்டை பிரஜாவுரிமை சரத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. இவ் வாக்கெடுப்பில் ஆதரவாக 157 வாக்குகளும் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியிலிருந்து 08 பாராளுமன்ற உறுப்பினர்கள்  இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். https://www.virakesari.lk/article/92765 இலங்கை வரலாற்றில் இன்று இருண்ட நாள் - சிவஞானம் சிறதரன் (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)  அதிகாரங்கள் ஓர் இடத்தில் குவிக்கப்படுவதால் தமிழர்களின் இருப்புக்கும் இறைமைக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கை வரலாற்றில் இன்று இருண்டநாள் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறதரன்  சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.  அவர் மேலும் கூறுகையில், 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டுவருவதன் மூலம் இந்த நாடு ஓர் இருண்ட யுகத்தை நோக்கி நகர்கிறது. முசோலினி, ஹிட்லர் அல்லது ஒரு இடியமீன்  யுகத்தை நோக்கியே  நாடு நகரப்போகிறது. 1978ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தன புதிய அரசிலமைப்பொன்றை கொண்டுவந்திருந்த சந்தர்ப்பதில் அதன் ஆபத்தை கொல்வின் ஆர்.டி.சில்வா விளக்கியிருந்தார்.  எந்தவொரு நபருடைய கருத்தையுத் செவி சாய்க்காது ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழலில் மீண்டும் 42 வருடங்களின் பின்னர் ஒரு தனிநபரிடம் அதிகாரத்தை குவிக்கும் முகமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாடு மிகப்பெரிய ஆபத்தை நோக்கிதான் நகரும். 1948 ஆம் ஆண்டு இலங்கையின் தலா தேசிய வருமானமும் ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளின் தலா தேசிய வருமானமும் சமமாக காணப்பட்ட நிலையில் இன்று அந்த நாடுகள் அடைந்துள்ள நிலையை பார்க்க வேண்டும். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் இந்த நாட்டை அதலபாதாளத்துக்கு தள்ளியள்ளது. ஜனாதிபதியிடம் இன்று குவிக்கப்படும் அதிகாரங்கள் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்கள்மீதான அதிகார துஷ்பிரயோகத்திற்கு அல்லது அவர்களுடைய வாழ்வுக்கு பாதகமாக இருக்கும். 42 வருடங்கள் இராணுவச் சிந்தையில் உள்ள ஒருவர்தான் ஜனாதிபதியாகியுள்ளார். அவர் பதவியேற்ற நாள்முதல் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் எந்தவொரு வார்த்தையும் பேசவில்லை. அநுராதபுரத்தில் நடைபெற்ற அவரது பதவியேற்பு உரையில் தமிழர்கள் இந்த நாட்டில் வாழ்கிறார்கள், அவர்களுக்கு பிரச்சினை உள்ளதென்பதைக் கூட அவர் கூறவில்லை. இந்தியாவுக்கு சென்ற போது அங்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய  பேட்டியிலும் கூட இனப்பிரச்சினை பற்றி அவர் பேசவில்லை. அதேபோன்று பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய கொள்கை விளக்க உரையிலும் இனப்பிரச்சினை பற்றி ஒருவார்த்தை பேசவில்லை. இவ்வாறான ஒருவரிடம் தான் அதிகாரங்கள் குவிக்கப்படுகிறது. ஏனைய இனங்களை மதித்து பல்லினங்கள் வாழும் இந்த நாட்டில் ஜனநாயகத்தை மதித்து அவர் ஆட்சி செய்வார் என்ற உத்தரவாதம் இந்தச் சட்டத்தினால் கொடுக்கப்படுமா? இதனை சிந்திக்க வேண்டும். சிங்கள மக்களை நினைத்து கவலையடைகிறேன். இந்த நாள் ஓர் ஆபத்தான இருண்ட நாள். இன்னும் 20 வருடங்களுக் பின்னர் இராணுவ மயப்படுத்தப்பட்ட நாடாக இது இருக்கும். நாம் பாதிக்கப்பட்ட இனம். 70 வருடங்களாக இந்த மண்ணில் இருப்புக்காகவும் இழந்துபோன இறைமையை மீட்கவும் போராடுகிறோம்.  எமக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை இருப்பது என்றால் இவ்வாறு அதிகாரம் குவிக்கப்படுவது ஆபத்தானது. அதன்hல் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். சிங்கள மக்கள் வழங்கியுள்ள அதிகாரத்தை நேர் வழியில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறந்த எதிர்காலம் அமையும். வரலாற்றின் கறுப்புநாளை வாக்களிக்கும் உறுப்பினர்கள் பதிவுசெய்து வைத்துக்கொள்ளுங்கள் நாளை இந்த அதிகாரங்கள் உங்களுக்கு எதிராகவே திரும்பும் என்றார்.https://www.virakesari.lk/article/92764
    • ஹஹ்ஹா... வழக்கப் போல் முஸ்லிம் காங்கிரஸ் பல்டி அடித்து விட்டது. இனி அமைச்சர் பதவிகள் தான்.  கிழக்கு முன்னாள் முதலமைச்சருக்கு அமைச்சு பதவி கொடுத்தால் கிழக்கு வாழ் தமிழ் மக்கள் மேலும் ஒதுக்கப்படுவார்கள்.
    • திராவிடர்கள் அண்மையில் வெளியிட்ட தமிழ்நாட்டு கொடி எடுபடாது!  
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.