Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

 • Replies 689
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

மலரே மௌனமா ... என்ன குரல் வாவ்....  நீங்களும் கேட்டுப் பாருங்கள்.

கருணா கைது முதற் கொண்டு இலங்கையில் இன்று அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் "அரசியல் ஆற்றுகைகளை" (Political Performances) அனைத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமாயின் எல்லாத்தையும் திரும்ப ஆரம்பத்தில் இருந்

வரும்கால விவசாயி.

திருமதி கமலினி செல்வராஜனும் கலையும்..!!!

தமிழ் - நாடகம், திரைப்படத் துறைகளில் திறமையான நடிகையாகவும் வானொலி, தொலைக்காட்சி ஒலி, ஒளிபரப்பாளராகவும் விளங்கிய கமலினி செல்வராஜன் அவர்களின் மறைவு, கலைத்துறைக்குப் பேரிழப்பாகும். 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தனது அறிவிப்புப் பணியை ஆரம்பித்த அவர், பின்னர் ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வந்த ஆயுபோவன் என்ற நிகழ்ச்சியை 1990 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் முதன் முதலில் நடத்திய பெருமைக்குரியவர்.

இலக்கியவாதியும், எழுத்தாளருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, வயலின் கலைஞர் தனபாக்கியம் ஆகியோரின் மூத்த மகளான கமலினி, கொள்ளுப்பிட்டி சென். அந்தனீஸ் பாடசாலையில் பாலர் வகுப்பில் இணைந்து, பின்னர் பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றார். பின்னர் களனிப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற்றார். 

தந்தை மு. கணபதிப்பிள்ளை - இலங்கை வானொலியில் இலக்கியப் பங்களிப்பு வழங்கியபோது, அவரது நண்பராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராசஜனைக் காதலித்துத் திருமணம் புரிந்து கொண்டார்.

மேலும், சில்லையூர் செல்வராசன் எழுதிய 'தணியாத தாகம்' வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக 'கமலி' பாத்திரத்தில் இவர் நடித்தார். இலங்கை வானொலியில் 'கலைக்கோலம்' முதலான சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியுள்ளார் .

ரூபவாஹினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே. எஸ். பாலச்சந்திரன் எழுதிய 'திருப்பங்கள்', எஸ். ராம்தாசின் 'எதிர்பாராதது', எஸ். எஸ். கணேசபிள்ளை எழுதிய 'சமூக சேவகி' போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். கமலினி செல்வராஜன் ரூபவாஹினியிலும், ஐ.ரி. என். தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார்.

இலங்கையில் 1976 இல் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்ற “கோமாளிகள்” திரைப்படத்தில் அவரது கணவர் சில்லையூர் செல்வராஜனின் காதலியாக கமலினி செல்வராஜன் நடித்தார். 

இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்ட புகழ் பெற்ற “கோமாளிகள் கும்மாளம்” என்ற வானொலித்தொடர் நாடகமே கோமாளிகளாக திரைப்படமாக்கப்பட்டது. 

S. ராம்தாஸ், T. ராஜகோபால், S. செல்வசேகரன், B. H. அப்துல் ஹமீட், K. சந்திரசேகரன், சுப்புலட்சுமி காசிநாதன், ஆனந்தராணி பாலேந்திரா (இராசரத்தினம்), சில்லையூர் செல்வராஜன், கமலினி செல்வராஜன், K.A. ஜவாஹர் போன்ற பலர் அத் திரைப்படத்தில் நடித்தனர்.

ஏற்கனவே, வானொலி மூலம் பிரபலம் பெற்ற கலைஞர்களைக் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டமை அத்திரைபடத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.

'ஆதர கதாவ" என்ற சிங்களத் திரைப்படத்திலும் தமிழ்ப் பெண்மணியாக கதாபாத்திரமேற்று கமலினி செல்வராஜன் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பெற்ற விருதுகள் சில வருமாறு:

- நாட்டுக்கூத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக கலாசார அமைச்சின் விருது (1995)

- கொழும்பு றோயல் கல்லூரி நாடகத் துறைக்காக ஆற்றிய பங்களிப்புக்காக கொழும்பு றோயல் கல்லூரியின் விருது (2008)

- நோர்வே கலை மன்றம் நாட்டுக்கூத்து பாரம்பரியத்தை பேணி வளர்ப்பதில் காட்டிய ஆர்வத்திற்கான கெளரவ விருது (2010)

- 35 ஆண்டு கலைச் சேவையைப் பாராட்டி கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் இளைஞர் நற்பணி மன்றம் விருது

1995 ஆம் ஆண்டில், கணவர் செல்வராசனின் இறப்பை அடுத்து இவர் கொழும்பில் தனது மகன் அதிசயனுடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக டிமென்ஷா என்ற மறதி நோய்க்கு உட்பட்ட அவர், சுகயீனமுற்ற நிலையில் 2015 ஏப்ரல் 7 ஆம் திகதி அன்று கொழும்பில் காலமானார்.

அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தார், நண்பர்கள் அபிமானிகள், அனைவருடனும் நாமும் பங்கெடுக்கின்றோம்.

தமிழ் மொழிக்கும், தமிழ் வானொலி / தொலைக்காட்சி மற்றும் கலைத்துறைக்கும் அவர் ஆற்றிய அரும்பணி என்றும் போற்றுதற்குரியது.

அன்னாரின் ஆத்மா அமைதியாக உறங்கட்டும்...!!!

- நினைவுப் பகிர்வு : உதயன் எஸ். பிள்ளை -

— with Kavitha Uthayan.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Facebook

[#வசீகரா என் நெஞ்சினிக்க எனும் இனிமையான பாடலினை தன் நாத இசை மூலம் மேலும் இனிக்கச் செய்து ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட #குமரன்....... என்னவென்று சொல்ல....!!!! சொல்ல வார்த்தைகளே இல்லை.... நீங்களே பாருங்கள் பிடித்தால் #பகிருங்கள்...!!!]

 

 

Edited by Knowthyself
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Facebook

[நாங்கள் யாழ்ப்பாணம்]

இப்படியும் சாகலாம் ..

 

 • Like 1
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

C0j72ZgUQAA6DT4.jpg

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜஸ்டின் .....
அரசியலில் என்னைக் கவர்ந்த வெகு சொற்பமான  விரல் விட்டு எண்ணக் கூடிய நாயகர்களில் ஒருவர்......

 

 

Link to post
Share on other sites

உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி வெனிசூலாவில் உள்ளது

 

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.


×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.