Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

என்னைக் கவர்ந்த முகப்புத்தக பதிவுகள்


Recommended Posts

 

Amirthanayagam Nixon

கூட்டமைப்பு உருவாக்கம்- சில நேரடித் தகவல்கள்-
-- ------------------ - ------------------------- ----------------------- --- 
2004ஆம் ஆண்டு கொள்பிட்டி அல்விஸ் பிளேஸில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆனந்த சங்கரியுடன் முரண்பட்டு அடி தடி ஏற்பட்டது. (செய்தியாளராக இருந்ததால் அடிதடி சண்டையை என்னால் நேரில் பார்க்க முடிந்தது)

இறுதியில் பொலிஸாரே விலக்குப் பிடித்தனர். அதன் பின்னர் சின்னம் குறித்து எழுந்த பிரச்சினையில், அமரர் ரவிராஜ் யோசனையின் படி வீட்டுச் சின்னம் தெரிவானது. பின்னர் ஆனந்த சங்கரி, முகுந்தன் ஆகிய ஒரு சிலரைத் தவிர, தமிழர்விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் பலரும் தமிழரசுக் கட்சியில் இணைந்தனர்.

அந்தக் கட்சி, பின்னர் கூட்டமைப்பின் பிரதான கட்சியாக விளங்கியது. வீட்டுச் சின்னத்திற்கு முன்னர் பொதுச் சின்னம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் காலம் என்பதால் புதிய சின்னம் ஒன்றை பெறுவதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வீட்டுச் சின்னம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

-- ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்- தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியபோது புலிகள் இணக்கம் தெரிவித்தனர். ஆனால் கூட்டமைப்பு உருவாக்கத்தில் புலிகள் தலையிடவில்லை.

எனினும் கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னர் மூன்றாம் நபர்கள் மூலமாக சில யோசனைகளை முன்வைத்தனர்-- (குறிப்பாக 2004 ஆம் ஆண்டுபொதுத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல் விடயம்)--

1999 ஆம் ஆண்டு அமரர் குமார் பொன்ம்பலத்தின் வீட்டில் உருவாக்கப்பட்ட, பதினொரு தமிழ் கட்சிதான் பின்னர் தமிழ்க் கட்சி கூட்டமைப்பாக செயற்பட்டு, பின்னாலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மாறியது.

பதினொரு கட்சிகளின் கூட்டமைப்பில் ஈபிடிபி தவிர்ந்த, அதாவது புளொட் உட்பட அனைத்து இயக்கங்களும் தமிழர் விடுதலைக் கூட்டணி, மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக தொழிலாளா் கங்கிரஸ் ஆகியவை அங்கம் வகித்திருந்தன. (இது பற்றிய தகவல்கள் இன்னமும் உண்டு. ஆனால் அவற்றை இங்கு எழுத முடியாது)

2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி குமார் பொன்னம்பலம் கொலை செய்ய்ப்பட்டார். ஆனாலும் அவருடைய முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

2001 ஆம் அண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கொழும்பில் வசித்த பிரபல வர்த்தகர் வடிவேற்கரசன் முக்கிய முக்கிய பங்காற்றினார். அவரது வீட்டில்தான் சந்திப்புகள் இடம்பெற்றன.

அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவராக இருந்த கைலாசபிள்ளை, சட்டத்தரணி கந்தையா நீலகண்டன், தில்லைக் கூத்தன் எனப்படும், அமரர் தில்லைநடராஜா, நிமலன் காத்திகேயன், ஆகியோரும் அந்த சந்திப்புகளில் பங்கெடுத்தனா்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கான உடன்படிக்கையில் சம்பந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிக்காந்தா, கலாநிதி நல்லையா குமரகுருபரன் ஆகிய நான்கு பேரும் கையொப்பமிட்டனர்.

கொழும்பில் உள்ள வடிவேற்கரசனின் இல்லத்தில்தான் உட்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. 2001ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் கொழும்பு ஹொலிடேயின் ஹோட்டேலில் வைத்து வெளியிடப்பட்டது.

கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கான அடித்தளம் மட்டக்களப்பில் போடப்பட்டது. கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சிவராம் உட்பட பலர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் சந்தித்து உரையாடினார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (அப்போது செய்தியாளராக இருந்தவர்) ஜெயானந்தமூா்த்தி உள்ளிட்ட பலர் அதில் கலந்து கொண்டனர்.

2001 இல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்களாகவே கிளிநொச்சிக்குச் சென்று தமிழச் செல்வனை சந்தித்து, பின்னர் உறவை ஏற்படுத்தினர். பாவ மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.

நோர்வேயின் சமாதான பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இவர்களுடன் முரண்படாமலும் அதேவேளை அரசியல் ரீதியாகவும் செயற்பட வேண்டும் என்ற நோக்கில் முரண்பாட்டில் ஓர் உடன்பாடாக புலிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் பயன்படுத்திக் கொண்டனர்.

கூட்டமைப்பு உருவாக்கம் பற்றிய செய்திகளை, அன்று ஸ்ரீகஜனும் நானும் வீரகேசரியில் பணியாற்றியபோது எழுதியிருந்தோம். நான் உட்பட தற்போது வீரகேசரி ஆசிரியராக பதவி வகிக்கும் எஸ். ஸ்ரீகஜன் ஆகிய இருவரும் நேரடி சாட்சியங்களாக இருக்கின்றோம்.

(மற்றுமொரு சாட்சியான தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் பி. ரவிவர்மன் இன்று உயிருடன் இல்லை)

வவுனியாவில் உள்ள மூத்த செய்தியாளா் பி. மாணிக்கவாசகம் அன்று இது பற்றிய விடயங்களை, ஞாயிறு வீரகேசரியில் எழுதினார்.

கூட்டமைப்புக்கான உடன்படிக்கை கையிலைநாதனின் வீட்டில் கைச்சாத்திடும் நிகழ்வு பற்றிய செய்தியை சேகரிப்பதற்காக அவருடைய வீட்டுவாசலில் முக்கிய பிரமுகர்கள் வரும் வரை நானும், எஸ்.ஸ்ரீகஜனும் நீண்ட நேரம் வாசலில் காத்திருந்தோம்.

இது பற்றிய செய்திகளை, அன்று எனது கையடக்கத் தொலைபேசிக்கு, தற்போது லன்டனில் வசிக்கும் நடராஜா குருபரன் தொடர்பு கொண்டு கேட்பார்.

ஆகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டமைக்கான தகவல்கள், வரலாறுகள் இன்னும் உண்டு சில தகவல்களை இங்கு எழுத முடியாது.

தமிழ்ச் செல்வன் 2004இல் கிளிநொச்சியில் வைத்து விரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக பல தகவல்களை தந்தார். ஆனால் அவற்றில் சில விடயங்களை வீரகேசரியில் எழுத முடியவில்லை.

காலம் வரும்போது அந்த தகவல்கள், வரலாறுகள் எழுதப்படும்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

 

கந்தன் ஓவர்டேக் டூ கண்ணன் .......! tw_blush:   நல்லூர்க் கந்தன் என்றால் சும்மாவா, அவன் அலங்காரக் கந்தன், அழகிகளைத் தெறிக்க விடுவான்.....!  tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

சிங்கப்பூர் தமிழ் சகோதரிகள் #ஐஸ்வர்யா மற்றும் #சுருதி யின் அசத்தலான ஒரு நடனக்காட்சி
(4 நிமிடங்கள்)

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

சிறுவனின் பேச்சு நகைச்சுவையாக இருந்தாலும் இடையிடையே ஓங்கி கன்னத்தில் அறைவது போலவும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
.
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . *". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."*
.
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....
.
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் *"Being Professional & Focus only on what you are trained""*
.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றொருவன் சொன்னான் , பொறு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்
*This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""*
.
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
.
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . *This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.*
.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .
.
""கலியுகம் "" என்பது இது தான் . *This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.*
.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான். 
.
*True.*

*Knowledge is nowadays very important than money in this world.*

-படித்ததில் பிடித்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசாத்திய திறமைசாலி. ஒரே.. நேரத்தில், மூன்று வேலை செய்கின்றார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நடைபாதையில் வரிசையாக படையெடுத்து போகும் வாத்துக்கள்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.
இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும் (paste)


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.