-
Tell a friend
-
Topics
-
Posts
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
இலங்கையை அழிக்க லசந்தவின் மகள் முயற்சி! - அரசு குற்றச்சாட்டு.! சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கு இலங்கை அரசு நீதியைத் தராமல் மறுத்து வருகின்றது என அவரது மகள் அகிம்ஸா விக்கிரமதுங்க வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு எழுதியிருந்த கட்டுரையை அரசு கடுமையாக விமர்சித்துள்ளது. இலங்கைத் தலைவர்கள் மீது பயணக் கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதிப்பதற்காக சர்வதேச சமூகத்தை திரட்டி இலங்கையை அழித்து அதன் வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு அகிம்ஸா விக்கிரமதுங்கவும் மேலும் பலரும் முயற்சிக்கின்றனர் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இதேவேளை, புலம்பெயர் குழுக்கள் மற்றும் எதிரணி அரசியல்வாதிகள் உள்ளிட்ட சில தரப்பினர் அகிம்ஸா விக்கிரமதுங்கவை இயக்குகின்றனர் என்று அமைச்சரவைப் பேச்சாளரான ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை சவால்களை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் லசந்தவின் மகள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது துரதிஷ்டவசமானது. குற்றவாளிகளை ஒருநாள் நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வழங்கும் முயற்சியில் அகிம்ஸா வெற்றி பெறுவதற்காக வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்" - என்றார். வொஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அகிம்ஸா விக்கிரமதுங்க எழுதியுள்ள கட்டுரையில், "2007 இல் பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்ச இருந்தபோது நடந்த ஆயுதக் கொள்வனவின்போது 10 மில்லியன் டொலர் ஊழல் நடந்திருப்பது பற்றி எனது தந்தை லசந்த விக்கிரமதுங்க வெளிப்படுத்தியிருந்தார். கோட்டாபய ராஜபக்ச அவரை அவதூறு குற்றச்சாட்டில் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார். பின்னர் எனது தந்தையின் பதிப்பகம் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. குறித்த ஆயுத ஊழல் தொடர்பில் எனது தந்தையிடம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதற்கு சில வாரங்களே இருந்த நிலையில், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி எனது தந்தை பணிக்குச் சென்று கொண்டிருக்கும்போது இராணுவப் புலனாய்வாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். கோட்டாபய ராஜபக்சவையே அதற்கு நான் பொறுப்பாளியாக்குகின்றேன" - என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வெற்றி பெற்று விட்டதால், தனது தந்தையின் படுகொலைக்கு நீதி கோரும் முயற்சிகள் வெற்றியளிக்காத நிலை நீடிக்கின்றது எனவும் அந்தக் கட்டுரையில் அகிம்ஸா தெரிவித்துள்ளார். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளும் சாட்சியங்களும் ராஐபக்ச அரசால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளது எனவும் அகிம்ஸா தனது நீண்ட கட்டுரையில் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://aruvi.com/article/tam/2021/03/06/23350/ -
By தமிழ் சிறி · Posted
மொழி பெயர்ப்புக்கு, நன்றி... நாதம்ஸ். இந்தக் கட்டுரையை.... வாசிக்க, எனக்கு இரண்டு நாள் எடுக்கும் ஐயா. சுருக்கமாக என்ன எழுதியிருக்கு என்று சொன்னால், நல்லது ராசா. -
By நியாயத்தை கதைப்போம் · Posted
அவரவராய் பார்த்து திருந்தினால்தான் உண்டு. கொரனா ஆட்டத்தில் இவ்வளவுபட்ட பின்பும் ஆபத்து புரிய இல்லை, சமூக பொறுப்பு இல்லை என்றால் நாம் என்ன செய்யமுடியும்? முககவசம் அணியாமல் அருகில் வருபவர்கள் உள்ளார்கள். முகக்கவசத்தை மூக்கின் கீழ், நாடியின் கீழ் இறக்கிவிட்டு பாசாங்கு செய்பவர்கள் உள்ளார்கள். சமூக இடைவெளியை பேணாதவர்கள், சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதவர்களில் நாங்கள்தான் ஆறு அடி தள்ளி நின்று ஏதோ முடியுமான அளவு எங்களை காப்பாற்றி கொள்ளவேண்டும். பொது இடங்களில் இவர்களுடன் வாயை திறந்தால் தேவை இல்லாத பிரச்சனைகளே வரலாம். அவர்கள் ஏற்கனவே தெரிந்துகொண்டுதான் சுகாதார வழிகாட்டுதல்களை உதாசீனம் செய்கின்றார்கள். தெரிந்துகொண்டு தவறு செய்பவர்களிடத்தில் வாயை கொடுத்து ஏன் நாம் ஏன் நமது அமைதியை, மரியாதையை இழக்க வேண்டும்? கொரனா காலத்தில் கடந்த வருடம் ஓர் தமிழ் கடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மரணத்தில் முடிந்தது. -
By Nathamuni · பதியப்பட்டது
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். 2007ம் ஆண்டு, இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவரான எனது தந்தை லசந்தா விக்ரமதுங்கே, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்சே அரசாங்க நிதியில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த ஆயுத ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினார். அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு, எனது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த, சண்டே லீடரின் அச்சகம், நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டது. ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டனர், பத்திரிகைகளுக்கு தீ வைக்கப்பட்டது. ஜனவரி 8, 2009 அன்று, ஊழல் நிறைந்த ஆயுத ஒப்பந்தம் குறித்து எனது தந்தை சாட்சியமளிக்க சில வாரங்களுக்கு முன்பு, இராணுவ உளவுத்துறை அதிகாரிகள், வேலைக்குச் சென்றபோது அவரை பதுங்கியிருந்து, கொலை செய்தனர், எனது குடும்பத்தினரைக் பிரித்தெறிந்து, என் ஆத்மாவில் ஒரு பெரும் துவாரம் உண்டாக்கியதுடன்,அதன் மூலம் இலங்கை முழுவதும் இருந்த பத்திரிகையாளர்களைப் பயமுறுத்தினர். நான் ராஜபக்சேவையே இதுக்கு பின்னால் இருந்தார் என்று சொல்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸில், நீதிமன்றில், என் தந்தையின் கொலையில் பங்கு வகித்ததற்காக நான், அவர் மேல் வழக்குத் தொடுத்தபோது இதை நான் தெளிவுபடுத்தினேன். இலங்கை ஜனாதிபதியாக அவர் தேர்வு செய்யப்பட்ட, நவம்பர் 2019 தேர்தல் எனக்கும் எனது குடும்பத்திற்கும் அளவிட முடியாத வேதனையையும், இலங்கை சிவில் சமூகத்தின் ஒழுங்கமைப்புக்கு பெரும் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. என் தந்தையின் கொலை குறித்து பிபிசி நிருபர் ராஜபக்சரிடம் கேள்வி எழுப்பியபோது, அவர் கேள்வியைத் தவிர்த்து, சிரித்தபடி கடந்து சென்றார். கடந்த வாரம், யு.என். மனித உரிமைத் தலைவர் மைக்கேல் பேச்லெட் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து பெரும் அதிர்வு தரும் அறிக்கையை முன்வைத்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தொடர்ச்சியாக தோல்வியுற்றதற்கு இலங்கையை பொறுப்புக்கூற வைக்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். அடுத்த வாரங்களில், யு.என். மனித உரிமைகள் கவுன்சில் சாத்தியமான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கும். நவம்பர் 2005 இல் மஹிந்த ராஜபக்ச இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவர் தனது சகோதரர் கோட்டபயாவை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பில் வைத்தார். ஒன்றாக, அவர்கள் இலங்கையில் சில மோசமான அட்டூழியக் குற்றங்களை நடாத்தினர், மேலும் அவர்களுக்கு எதிராக பேசுவதற்கு துணிந்த எந்த பத்திரிகையாளரையும் திட்டமிட்டு குறிவைத்தனர். 2015 இல் தனது சகோதரரின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து சுருக்கமாக பதவியை இழந்த போதிலும், குற்றம் சாட்டப்பட்ட இந்த போர்க்குற்றவாளி - கோட்டபய ராஜபக்ச, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டபடி, 2009 இல் எனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த மறைப்பு நாடகம், மிகச்சிறப்பாக இருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கை, மரணத்திற்கான காரணம் குறித்த மருத்துவமனையின் கண்டுபிடிப்புகளுக்கு முரணாக இருந்தது. புலனாய்வாளர்கள் அச்சுறுத்தப்பட்டனர். சான்றுகள் வேண்டுமென்றே குளறுபடிக்குள்ளாகின. போலி சான்றுகளும் உருவாக்கப்பட்டன. கொலை தாக்குதலுக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்று இரண்டு அப்பாவி பொதுமக்கள் கைதாகி பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர், அவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. மற்றொருவர் கைது செய்யப்பட்டு காவலில் இறந்தார். எனது தந்தை கொல்லப்பட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜனவரி 8, 2015 அன்று, இலங்கையர்கள் ராஜபக்ஷ ஆட்சிக்கு வாக்களித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர், இது முந்தைய ஆட்சியின் கீழ் பல கொடுமைகளுக்கு பலியானவர்களுக்கு நீதி வழங்குவதாக உறுதியளித்தது. பொலிஸ் புலனாய்வாளர்கள் விரைவில், அப்போது, பாதுகாப்பு செயலாளர் ராஜபக்சரால் கட்டுப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும், 'திரிப்போலி' படைப்பிரிவில் 'ஸீரோ', எனும் பெயரில், ஒரு இராணுவ கொலைக் குழு இயங்கியதை கண்டறிந்தனர். ஆனால் புலனாய்வாளர்கள் ராஜபக்ஷவின் பங்கை அம்பலப்படுத்தியபோது, அவர்களின் விசாரணைகள் தடுமாற தொடங்கின. இலங்கை நீதித்துறையைப் பொறுத்தவரை, அவர் சட்டத்துக்கு மேலானவர். அவர் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவுகளை பிறப்பிக்க நீதிபதிகள், பல நூற்றாண்டுகள் நாட்டில் நீடித்த, நீதி பாரம்பரியங்களை, உடைத்து எறிந்தார்கள். இரண்டு மனித உரிமை ஆர்வலர்கள், கொல்லப்பட்டமை தொடர்பாக நீதிமன்றம் அவரிடம் கேள்வி கேட்க முயன்றபோது, ஒரு மேல் நீதிமன்ற நீதிபதி அந்த வழக்கினை விசாரிக்க தடை விதித்தார். மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டபோது, வேறு, நீதிபதிகள் அந்த விசாரணைகள், முன்னோக்கி செல்வதைத் தடுக்க உத்தரவுகளை பிறப்பித்தனர். இதனாலேயே, நான் அமெரிக்க நீதிமன்றங்களுக்கு, நீதி தேடி போக முடிவு செய்தேன். அந்த வேளையில், ராஜபக்சே ஏற்கனவே ஜனாதிபதி பதவிக்கான ஒரு புதிய தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருந்தார். அவரது முழக்கமாக இருந்தது: உளவுத்துறையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் அட்டூழியங்கள் குற்றம் சாட்டப்பட்ட உளவுத்துறை அதிகாரிகளை விடுவித்தல். எனது தந்தையை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவரை இலங்கையர்கள் ஜனாதிபதியாக 15 மாதங்களுக்கு முன்பு, தேர்ந்தெடுத்தபோது, நான் அதனை, திகிலுடன் பார்த்தேன். ஜனாதிபதியாக அவரது புதிய அந்தஸ்து அவருக்கு வழக்குகளில் இருந்து விடுவிக்கும் சட்டப்பூர்வ, சக்தியைக் கொடுத்தது. ஜனாதிபதியாக, ராஜபக்ச, குற்றவாளிகள், தண்டனை பெறாதிருப்பதை உறுதிசெய்வதில், நேரத்தை வீணாக்கவில்லை. அவரை சட்டத்திற்கு மேலாக வைத்திருந்த நீதிபதிகளை அவர் பதவி உயர்த்தினார். குழந்தைகளை கொன்றதற்காக போர்க்குற்றத்தில் தண்டனை பெற்ற ஒரு சிப்பாய்க்கு அவர் மன்னிப்பு வழங்கினார். இத்தகைய கொடுமைகளை விசாரித்த துப்பறிந்த, நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர். இலங்கையின் குற்றவியல் புலனாய்வுத் துறையை நடத்தி, பல விசாரணைகளில் முன்னேற்றங்களை வழிநடத்திய FBI பயிற்சி பெற்ற பொலிஸ் நிர்வாகி ஷானி அபேசேகர, போலியான குற்றச்சாட்டுக்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2020 மே மாதத்தில், ராஜபக்ஷ சிஐடியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தார் - எனது தந்தையின் கொலைக்கான ஆதாரங்களை மூடிமறைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு போலீஸ்காரரே அவர். இத்தகைய ஒருவரின் இலங்கை அரசிடம் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் என்று சர்வதேச சமூகம் தொடர்ந்து எதிர்பார்க்கிறது. ராஜபக்சேவின் தேர்தல் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒவ்வொரு கதவையும் மூடியுள்ளது என்பதை பாதிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் சர்வதேச சமூகம் நன்கு அறிவார்கள். மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மற்றும் ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவையின், பொருளாதாரத் தடைகள், பயணத் தடைகள் மற்றும் ஒரு சுயாதீனமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை உட்பட, வலுவான சர்வதேச நடவடிக்கை இல்லாமல் - இலங்கையர்கள் கடந்தகால மனித உரிமை மீறல்களை மீண்டும் மீண்டும் உள்ளாகும் பேர் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். தனது கொலையை முன்கூட்டியே உணர்ந்து கொண்டிருந்த, என் தந்தை, தனக்கே ஒரு இரங்கல் கட்டுரையினை எழுதி இருந்தார். அதில் "கருத்து சுதந்திரத்தை" கட்டுப்படுத்துவதற்கான, முதன்மை கருவியாக படுகொலைகள் நடக்க தொடங்கிவிட்டது என்று கூறி இருந்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், எதேச்சதிகாரம் மிக்கவர்களால் ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதை காண்கின்றோம். இது விசயத்தில், உலகம் ஒரு உறுதியான நிலைப்பாடினையும், கொலைகார எதேச்சதிகாரர்கள் தமது, அநியாயங்களுக்கு விலை கொடுப்பதை உறுதிசெய்யவும் வேண்டிய, நேரம் இது. அதேவேளை இன்று, அணா பொலிட்கோவ்ஸ்காயா, ஜமால் கஷோகி மற்றும் என் தந்தை போன்ற ஹீரோக்களின் கொலையாளிகள், உலக அரங்கில், நாடுகளின் தலைவர்களுடன் தோள்பட்டை தேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ஒரு பத்திரிகையாளரைக் கொல்வது வளர்ந்து வரும் எதேச்சதிகாரர்களுக்கான மற்றொரு சாதாரணமான சடங்கு என்று தெரிகிறது. உபயம்: வாஷிங்டன் போஸ்ட் யாழுக்காக எனது மொழிபெயர்ப்பு. 🙏
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.