Jump to content

இருக்கும் நண்பர்களையும் இழக்க வேண்டாமே......


Recommended Posts

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு"

மோகன் அண்ணா இந்த கருத்துகளத்தை உருவாக்கியதன் நோக்கம் என்னவென்று எனக்கு தெரியாது. ஆனாலும் எல்லைகள் மதங்கள் போன்ற பலதரப்பட்ட வேற்றுமைகளை கடந்து தமிழ்ஈழம் மீது ஆர்வம் கொண்ட தமிழர்களை தமிழின் மூலம் ஒன்றினைப்பதே காரணமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி முதலில் டென்மார்க்கிலும் பின் வேறுபல நாடுகளிலும் புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் கேலிசித்திரங்கள் வெளியிடப்பட்டன. அப்படியான கருத்து சுதந்திரத்தை அடிப்படை அளவிலேயே நான் வெறுக்கிறேன். ஜனநாயகத்தை பற்றி ஒரு வசனம் சொல்வார்கள் " உனது கைத்தடியை சுற்றுவது உனது உரிமை+ ஆனால் அது மற்றவரின் மூக்கை தொடாத மட்டிலும்தான்" என்று. இதையே கருத்து சுதந்திரத்துக்கு போட்டு பாருங்கள். எமக்கு சரியாக தெரியாத அல்லது விளங்காத விடயங்களுக்கு கூட நாங்கள் கற்பனை செய்து ஏதோ கருத்து எழுதி விடுகிறோம். அதனால் ஏற்படும் பாதிப்புகள்????

தலைவர் சொன்னதாக எங்கோ ஒரு பேட்டியில் படித்ததாக நினைவு. " இந்தியா எமக்கு தார்மீக ரீதியில் ஆதரவு வழங்கவேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் இந்தியாவை நம்பி எமது விடுதலைப் போராட்டதை ஆரம்பிக்கவில்லை+ எமது விடுதலையை நாமே வென்றெடுப்போம்+ எமது காலத்தில் முடியாமல் போனால் எமது சந்ததி அதை தொடரும்" ஆக எமது போராட்டம் எவரையும் நம்பி தொடங்க படவில்லை.

கருனாநிதி அவர்கள் பற்றி இங்கு பல விவாதங்கள் நடந்தது. அவர் இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறிப்பினர்களை சந்திக்க வில்லை என்பது பற்றியது. அவர் கடுமையாக தனிப்பட்ட முறையில் விமர்சிக்க பட்டார். எதற்காக??? மறவன்புலவு சச்சிதானத்தின் கட்டுரையின் பின் கூட்டமைப்பினரின் பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் எமது சில இந்திய நண்பர்கள் சிலர் கருத்து எழுதுவதை தவிர்த்து உள்ளார்கள். எனது தலைவர் திரு பிரபாகரன் பற்றி எவராவது குறை சொன்னால் நான் பொறுத்து கொள்ள மாட்டேன். அதுமாதிரித்தான் இந்தியர்களுக்கும் தமது தலைவர்களும்.

ஓருமாதிரி உங்கள் கருத்து சுதந்திரத்தால் இந்திய நண்பர்களை விலத்தி போட்டிங்கள் இப்போ புதிசா இலங்கை மததலைவர்களை விமர்சிக்க தொடங்கி இருக்கிங்கள். எங்க கொண்டுபோய் முடிக்க போறிங்களோ???? எமக்கு தேவை நண்பர்கள்.

இங்கு ஒரு நண்பர் தனது கையெழுத்து பகுதியில் எழுதி இருந்தார் " புதிதாக நண்பரை சேர்க்காட்டிக்கு கூட பறவாய்யில்லை இருக்கும் நண்பர்களையாவது காப்பாற்றிக்கொள்" என்ற கருத்து வரும்படீ எழுதி இருந்தார். இங்கு என்ன நடக்குது???

"உள்ளதையும் கெடுத்தான் நொள்ளை கண்ணன்" இப்படித்தான் இங்கு எமது கருத்து சுதந்திரம் பாவிக்க படுகிறது.

எமது ஆதங்களை சரியான சொற்தொடர்கள் மூலம் வெளிக்காட்டினால் பறவாயில்லை. எங்களில் சிலர் அடிமட்ட சொற்களை பாவிக்கின்றோம். அப்படியான சொற்களால் நாம் வெல்லபோவது ஒன்றும் இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 157
  • Created
  • Last Reply

வாசகன்

உங்கள் உளப்புூர்வமான கருத்துக்கு நன்றிகள். நீங்கள் எவ்வளவு தான் எடுத்துச் சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு தான். காரணம் களத்தில் களவிதி என்பது பக்கச் சார்பாக கையாளப்படும் போது அது இப்படி எழுதுபவர்களை ஊக்கப் படுத்துமே தவிர திருந்த இடமளிக்காது. ஆனால் இப்படியான தரக்குறைவான கருத்துக்களால் பாதிக்கப்பட போவது எம்மவர் சமூகமே. இதை அவர்கள் கண் கெட்ட பின்பே புரிந்து தெரிந்து கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

இங்கே 'வளர்த்தால் குடுமி அடித்தால் மொட்டை' பாணியில் தான் கருத்துக்கள் எழுதப் படுகின்றன. அதன் விளைவுகள் தான் இவை.

Link to comment
Share on other sites

அய்யா மாற்று கறுத்து ஜீவன்

அடித்தால் மொட்டை வழர்த்தால் குடுமி என்று நவீன digital சாதனங்கள் 0 இலும் 1 இலும் மாத்திரமே தொடர்பாடுகிற மாதிரித்தான் தொடர்பாட வேணும். ஆதிகாலத்து analog முறையில பூவாயும் இருக்கலாம் புட்டமாகவும் இருக்கலாம் தம்பி சொல்லிறமாதிரியும் இருக்கலாம் எண்ட கோட்டையில கொடி ஏத்திப்போடுவங்கள் கதையாலே. :lol:

Link to comment
Share on other sites

எதையும் தீர ஆராயாமல் எவருக்கும் சந்தேகம் வராது... அப்படி சந்தேகம் வருவது பிழையும் அல்ல... அப்படியான சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் இடமாக யாழ்களம் அமையவேணும்....

இங்கு ஒருவரும் மதத்தை நிந்தித்ததாக தெரிய வில்லை... அப்படி.... அப்படி நிந்த்திக்கப்பட்டது எண்றால் அது இந்து சமயம் மட்டும் தான்... அந்த மதத்தவனாக அதை செய்த்தில் எனக்கும் பங்கு இருந்தது... அது என் மத்தின் மீதான அக்கறை... அவ்வளவுதான்...

இங்கு யாராவது ஆயர் சம்பந்தமான பிரச்சினையை கொண்டு வந்தால் அது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட சந்தேகம் அதை வேண்டியவாறு மற்றவர்களைக்கு தீர்க்கவேணும் தீர்க்கப்படவேணும்... அதுதான் இங்கு களத்தின் நோக்கம் எண்று நினைக்கிறேன்...

Link to comment
Share on other sites

தனிப்பட்டவர்கள் சம்பந்தமான சந்தேகங்களை பொதுக்களத்தில் எழுதித் தான் தீர்க்க வேண்டுமாயின் அப்படித் தோன்றும் எல்லோரது சந்தேகங்களையும் இங்கு எழுதித் தீர்த்துக் கொள்ள முடியுமா?? சிலரின் சந்தேகங்களை தீர்க்க இங்கு எழுதும் போது அவரிடமே இது பற்றி நேரடியாக கேட்டுத் தீர்த்துக் கொள்ளுமாறு நிர்வாகம் கூறி அது சம்பந்தமான கருத்தையும் நீக்கி விடுகின்றார்கள். ஏன் அப்படியாயின் தனிப்பட்டவர்கள் பற்றிய எல்லாச் சந்தேகங்களையும் அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பொதுவாகவே கூறலாமே. இதனாலேயே இங்கு சிலர் தம் மனம் போனபடி தனிநபர் தாக்குதலையும் கற்பனைச் செய்திகளைப் புகுத்துவதிலும் முன்னிற்கின்றார்கள்.
Link to comment
Share on other sites

தனிப்பட்டவர்கள் சம்பந்தமான சந்தேகங்களை பொதுக்களத்தில் எழுதித் தான் தீர்க்க வேண்டுமாயின் அப்படித் தோன்றும் எல்லோரது சந்தேகங்களையும் இங்கு எழுதித் தீர்த்துக் கொள்ள முடியுமா?? சிலரின் சந்தேகங்களை தீர்க்க இங்கு எழுதும் போது அவரிடமே இது பற்றி நேரடியாக கேட்டுத் தீர்த்துக் கொள்ளுமாறு நிர்வாகம் கூறி அது சம்பந்தமான கருத்தையும் நீக்கி விடுகின்றார்கள். ஏன் அப்படியாயின் தனிப்பட்டவர்கள் பற்றிய எல்லாச் சந்தேகங்களையும் அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு பொதுவாகவே கூறலாமே. இதனாலேயே இங்கு சிலர் தம் மனம் போனபடி தனிநபர் தாக்குதலையும் கற்பனைச் செய்திகளைப் புகுத்துவதிலும் முன்னிற்கின்றார்கள்.

டக்கிளஸ்மீதான சந்தேகத்தை டக்கிளசிடம் கேட்கமுடியுமா? களத்தில் இருக்கும் டன்னிடம் கேட்கலாம், அதைதான் நிர்வாகம் கூறுகிறது. இதில என்ன தமாசு? :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரோகரா.....

"ஆடுகள் நனையுதாம், ஓநாய்கள் அழுகின்றனவாம்" ... இல்லை ... "முதலைக் கண்ணீர் விடுகிறார்கள்"!!!!!!!

அடியேனும், ஒருக்கால் உவர்களை அணைத்து அழ விருப்பம்!!! என்செய்வது உண்டியலை உட்டுட்டு வர முடியவில்லை!!!! ....

வாவ்வ்வ்வ்...... உந்தத் தலைப்பைப் போட்ட உடன் வந்து அடிச்சு அழுகிற கூட்டத்தை????? .... வசம்பு ... ஓஓஒல்ரனேற்றிவ் ..... இனி சமாதானம் வருவர்!!!

ஜனமில்லாநாயகம், மாட்டுக்கருத்து, ..... உதெல்லாத்துக்கும் மேலை இப்ப இது!!!!!!

விட்டால் விடுவியள்!!! "வாங்கோ, போங்கோ ஆனால் ...... ...... கையை வைச்சிடாதீங்கோ"!!! அது பிளையுங்கோ!!!

ரோகராவுங்கோ........ :wink:

Link to comment
Share on other sites

அரோகரா.....

"ஆடுகள் நனையுதாம், ஓநாய்கள் அழுகின்றனவாம்" ... இல்லை ... "முதலைக் கண்ணீர் விடுகிறார்கள்"!!!!!!!

அடியேனும், ஒருக்கால் உவர்களை அணைத்து அழ விருப்பம்!!! என்செய்வது உண்டியலை உட்டுட்டு வர முடியவில்லை!!!! ....

வாவ்வ்வ்வ்...... உந்தத் தலைப்பைப் போட்ட உடன் வந்து அடிச்சு அழுகிற கூட்டத்தை????? .... வசம்பு ... ஓஓஒல்ரனேற்றிவ் ..... இனி சமாதானம் வருவர்!!!

ஜனமில்லாநாயகம், மாட்டுக்கருத்து, ..... உதெல்லாத்துக்கும் மேலை இப்ப இது!!!!!!

விட்டால் விடுவியள்!!! "வாங்கோ, போங்கோ ஆனால் ...... ...... கையை வைச்சிடாதீங்கோ"!!! அது பிளையுங்கோ!!!

ரோகராவுங்கோ......

ஆழ்ந்த கருத்துக்கள்.. பாராட்டுக்கள் அரோகரா!!

Link to comment
Share on other sites

அப்படி இல்லைங்கோ

மாட்டுக் கருத்துக்கு அரோகரா என்று போடனும்.

Link to comment
Share on other sites

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே. இதை நான் எழுதியதன் நோக்கத்தை சற்று தெளிவுபடுத்தி விடுகிறேன். எவரையும் தனிப்பட்ட முறையில் குறை கூறுவதற்காகவோ அல்லது விமர்சிப்பதற்காகவோ நான் இதை எழுதவில்லை. அதற்கான நேரமும் எனக்கு உண்மையில் இல்லை கிடைக்கும் நேரங்களை செய்திகள் வாசிப்பதற்கும் கருத்துகளத்தில் உங்கள் அனைவரின் கருத்துகளையும் வாசிப்பதிலேயே பாவிக்கின்றேன். குறிப்பிட்ட சில செய்திகள் தகவல்கள் சம்மந்தப்பட்ட விமர்சனங்களினால் ஏற்பட்ட ஏற்படும் பாதிப்புகளே இதை எழுததூண்டியது.

தமிழ்ஈழ மக்களுக்கும் விடுதலைப் போராட்டத்தில் உயிரையே ஆயுதமாக பாவிக்கும் விடுதலைப்புலி போராளிகளுக்கும் நாம் செய்ய போகும் கைமாறு என்ன?

அவர்கள் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்க கூடும்?

1: நிதி உதவி

2: எமது ஆத்மார்த்தமான ஆதரவு

3: எமது போராட்டத்தின் நியாயத்தை கூறி உலகம் முழுவதும் தமிழ்ஈழ போராட்டத்துக்கு ஆதரவை பெருக்குவது.

இதைப்பொறுத்த மட்டில்லாமவது இங்க ஒத்த கருத்து இருக்கும் என்று நான் நம்புகிறன்.

ஆனால் இங்கு கருத்துகளத்தில் என்ன நடக்கிறது????

எமது கோபங்களிலினால் அல்லது தனிப்பட்ட விரோதங்களினால் நீங்கள் சொல்லும் கருத்துகள் மூலம் ஏற்படும் கருத்துக்கு எதற்கும் சம்மந்தமில்லாத சண்டைகள் நடக்கின்றன.இதனால் ஏற்பட போகும் நன்மைகள் என்ன? எங்களை கேவலபடுத்த வேண்டாம்.

Link to comment
Share on other sites

யோ அதான் தலைப்ப மத்தி பூட்டியாச்சில்ல...அப்பறம் என்ன....

அப்பிடியே யாழ் ஆயர பற்றி விமாசித்தாளே பயந்து போய் அரக்க பறக்க தலைப்பை மாற்றி செய்திகளை பூட்டும் கள நிர்வாக் தீபாவளிய பற்றி கேலயாக பேநி இந்தக்கள் மனதை புண்படுத்தும் தலைப்புக்களுக்கு வலு சேர்க்கும் முகமாக பழைய செய்திகளை எல்லாம் எடுத்து கொடுத்து..அவர்களுக்கு ஒத்து ஊதுகின்ற செயலில் ஈடுபடுகின்றது வாழ்க உங்கள் பனி...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.

முதலாவது, ஆயர் எழுதிய கடிதம் தொடர்பான விடயத்தை மதரீதியாகக் காட்ட முனைவது வருத்ததுக்குரியது. அது அவரது மதிப்புக்குரிய பதவியில் இருந்து கொண்டு அவ்வாறன கடிதம் வெளியிடும் போது ஏற்பட்ட வருத்ததால் ஆகும். இவ்வாறு ஒரு பொதுமகனோ, அல்லது பிரபல்யமற்றவர்களோ, வெளியிடுவது வேறு. ஆனால் ஆயர் அவர்கள் வெளியிடுவது வேறானது. முன்பும் இங்கே ரட்ண கூல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி தொடர்பான விவாதத்துக்கு, அதற்கு மதச் சாயம் பூசப்பட்டு, திசை திருப்ப முயற்சிகள் செய்யப்பட்டன என்பதையும் உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். ரட்ண கூல் கூட பத்திரிகையில் மதத்தை வைத்து, தனக்குச் சார்பானதாக மாற்ற முயற்சித்தார். ஆயருக்கு கறை பூசுவது யாருடைய எண்ணமும் அல்ல. அது எங்களையும் பாதிக்கும். ஆனால் விவாதத்தை திசை திருப்ப வேண்டாம் என்கின்றேன்.

இங்கே சுண்டல் சொல்வது போல, இந்து மதத்தை எப்படியும் விவாதிக்கலாம். அதில் விவாதிப்பவர்கள் எல்லோரும் உண்மையான இந்துக்களா என்று கூட யாருக்கும் சந்தேகம் வராது. முருகனுடைய கோவணத்தைப் பற்றிக் கூட நையாண்டி செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் மற்றய மதங்களைப் பற்றி இம்மியளவும் கதைக்க கூடாது என்பது, எவ்வகைக் கருத்துச் சுதந்திரம்?

அப்படி மற்றய மதங்களை விமர்ச்சிக்க கூடாது என்பது, அம் மதங்களை தூரத்தில் வைத்துப் பார்க்கும் ஒரு போக்காகும். அதை என்னும் நமக்குள் உள்வாங்காத சிந்தனையாகும்.

2வது விடயம் இந்திய நண்பர்களைப் பற்றி:

உங்கள் ஜுடி புதுசாக இருந்தாலும் நீங்கள் பழைய விடயங்களை அறிந்திருப்பதால், வேறு முந்தி வேறு ஜுடியில் வந்திருப்பீர்கள் என நம்பிச் சொல்கின்றேன். இந்திய நண்பர்கள் யாழ்களத்தில் இணைந்து கொண்ட சந்தர்ப்பம் என்பது, இந்தியாவைப் பற்றி, அல்லது ராஜிவைப் பற்றி விமர்சிக்கப்பட்ட காலத்தில் தான். அதனால் தான் இங்கே வந்தார்கள். எனவே இங்கே விவாதிக்கப்பட்டவை தான் அவர்களை விலத்த வைத்தது என்று சொல்வதை எள்ளவும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதை விட, சற்றும் குறைவில்லாமல் தான் அவர்களும் விவாதித்தார்கள். வைகோவைக் கபோதி என்று கூட விவாதம் வைத்தார்கள். இந்தியத் தலைவர்களை விவாதித்ததற்கு பதிலாக அவர்களும் வாதித்தனர்.

எனவே, விவாதங்கள் தான் பொறுப்பு என்ற குற்றச்சாட்டு, உண்மையை மறைப்பதாகும். யாழ்களத்தில் இணைகின்றபோது, இங்கே நட்புரீதியில் கொஞ்சிக் கூத்தாடி மகிழ்வதற்காக மட்டுமல்ல,( அதைத் தான் நிர்வாகம் அரட்டை என்கின்றது) என்பது தான் என் கருத்து. இக் களத்தில் நட்புக்களாக, அல்லது நல்ல சகோதர, சகோதரிகளாக பலர் பழகுகின்றனர். ஆனால் அதைத் தேடி நான் இங்கே வரவில்லை. அப்படி பழகுபவர்கள் தேவையாக இருந்திருந்தால், ஏதும் அரட்டைத் தளத்தில் இதை விட வசதிகள் இருக்கின்றன.

ஆனால் சில சொற்கள் தேவையில்லாது தான். துரோகி, விலைபோனவன் என்று சொற்கள். அதைப் போடுபவர்களைத் தனியே சுட்டிக் காட்டி விளக்கம் கேட்பது தான் சரியானது. பொதுவாக ஒரு தரப்புக்கான ஆதரவானவர்களைக் கேட்பது சரியல்ல!

காலத்துக்கு காலம் ஒவ்வொரு தலைப்புக்களைத் திறந்து, விலத்தப் போகின்றேன், வாக்கெடுப்பு நடத்துறேன் என்று சொல்லி பாவனை செய்தால் தான், மதிப்புக் கூடும் என்றால் நாம் ரெடி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யோ அதான் தலைப்ப மத்தி பூட்டியாச்சில்ல...அப்பறம் என்ன....

அப்பிடியே யாழ் ஆயர பற்றி விமாசித்தாளே பயந்து போய் அரக்க பறக்க தலைப்பை மாற்றி செய்திகளை பூட்டும் கள நிர்வாக் தீபாவளிய பற்றி கேலயாக பேநி இந்தக்கள் மனதை புண்படுத்தும் தலைப்புக்களுக்கு வலு சேர்க்கும் முகமாக பழைய செய்திகளை எல்லாம் எடுத்து கொடுத்து..அவர்களுக்கு ஒத்து ஊதுகின்ற செயலில் ஈடுபடுகின்றது வாழ்க உங்கள் பனி...

வரவர தமிழ் கெட்டுப் போகுது சுண்டல்! இப்போது யாருக்குப் பனி?? :lol::lol:

Link to comment
Share on other sites

வரவர தமிழ் கெட்டுப் போகுது சுண்டல்! இப்போது யாருக்குப் பனி?? :lol::lol:

சுண்டலுக்கு எப்பவும் அவசரம் தானே. இன்னும் 2 மாதத்திலே கொட்டத் தானே போகின்றது என்று நினைத்து அவசரப்பட்டு கொட்டி விட்டார் போலுள்ளது. :P :lol:

பி.கு: இப்போவெல்லாம் சுண்டல் ரொம்பத்தான் தேறிட்டார். அடிக்கடி சவுண்ட் எல்லாம் விட ஆரம்பித்திருக்கின்றார்........ :roll: :roll:

Link to comment
Share on other sites

வணக்கம் சுண்டல்

ஆயரை பற்றி விமர்சிக்க வேண்டாம் எண்டு சொல்லவில்லை தரக்குறைவாக விமர்சிக்கவேண்டாம் அவ்வளவே.ஏனேனின் தமிழர் போராட்டத்துக்கு பலம் சேர்ப்பவர்கள் அவ்ர்கள் சமூகசேவையாளர்கள் அவர்களுக்கு அரசியல் சாயம் பூசவேண்டாமே

தீபாவளி தமிழனின் கலாச்சாரத்துக்கு எதிரானது அதாவ்து தமிழன் விழா இல்லை.பொங்கலை விமரிசையாக கொண்டாடிய புலிகள் ஏன் இதை கொண்டாடவில்லை யோசித்துபாருங்கள்.நீங்கள் சொல்லிக்கொள்ள விரும்முபவ்து தமிழன் என்ரா அல்லது இந்து என்றா??.இதில் ஏதும் தப்பிருந்ததாக தெரியவில்லை

இந்தியரை பற்றி எழுதியதாக கூறினார்கள் இந்தியரை பற்றி நாம் தனிப்பட்ட ரீதியில் வைவாதம் நடத்தவில்லை எமக்கு நடந்த் கொடுமைகளை முன்வைத்தோம்.அதில் அவர்கள் பிழையாக எடுத்தால் அதற்கு நாம் பொறுப்பாகமுடியாது

அல்லது எல்லாத்தையும் மறக்கச்சொல்லுகிறீர்களா.என்ன

Link to comment
Share on other sites

இந்தியரை பற்றி எழுதியதாக கூறினார்கள் இந்தியரை பற்றி நாம் தனிப்பட்ட ரீதியில் வைவாதம் நடத்தவில்லை எமக்கு நடந்த் கொடுமைகளை முன்வைத்தோம்.அதில் அவர்கள் பிழையாக எடுத்தால் அதற்கு நாம் பொறுப்பாகமுடியாது

அவசரப்பட வேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தியும் இஷ்டத்துக்கு ஒரு தமிழர் தலைவர் மீது அவதூறு பூசிவிட்டு பின்னர் நீங்கள் அவசரப்பட்டு விட்டோமே என வருந்தியதை நாங்கள் அறிவோம் ஈழவன்.... கொட்டினால் அள்ள முடியாதது பாதரசம் மட்டுமல்ல... வார்த்தைகளும் தான்....

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரன் பரம்பரையில் வந்தவர்கள் தான் நாங்களும்......

Link to comment
Share on other sites

அவசரப்பட வேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தியும் இஷ்டத்துக்கு ஒரு தமிழர் தலைவர் மீது அவதூறு பூசிவிட்டு பின்னர் நீங்கள் அவசரப்பட்டு விட்டோமே என வருந்தியதை நாங்கள் அறிவோம் ஈழவன்.... கொட்டினால் அள்ள முடியாதது பாதரசம் மட்டுமல்ல... வார்த்தைகளும் தான்....

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்ன நக்கீரன் பரம்பரையில் வந்தவர்கள் தான் நாங்களும்......

அதற்காக நடந்த கொடுமைகளை மறக்கமுடியுமா? மறைக்கமுடியுமா? அதை செய்ய துனிந்தவர்களுக்கு அதனால் வரும் பின் விளைவுகளையும் எதிர் கொள்ளும் தைரியம் வேண்டும். 8)

Link to comment
Share on other sites

அதற்காக நடந்த கொடுமைகளை மறக்கமுடியுமா? மறைக்கமுடியுமா? அதை செய்ய துனிந்தவர்களுக்கு அதனால் வரும் பின் விளைவுகளையும் எதிர் கொள்ளும் தைரியம் வேண்டும். 8)

அமைதிப்படையின் அட்டூழியங்களை இதுவரை நான் மறுத்ததோ அல்லது மறந்ததோ அல்ல. என் தேசத்துக்கு எதிரான வார்த்தைகளையே இந்த விவகாரத்தில் பலமுறை நான் சொல்லியிருக்கிறேன்.

இதற்கு எங்களாலும் வேறு மாதிரியாக பதில் அளிக்க இயலும். ஆனால் வேண்டாம் என பார்க்கிறேன்.

பாண்டிபஜார், யுனைடெட் இந்தியா காலனி, திருப்பெரும்புதூர் சம்பவங்களை நினைவுபடுத்தி நாங்களும் வாதிட முடியும்.

Link to comment
Share on other sites

அமைதிப்படையின் அட்டூழியங்களை இதுவரை நான் மறுத்ததோ அல்லது மறந்ததோ அல்ல. என் தேசத்துக்கு எதிரான வார்த்தைகளையே இந்த விவகாரத்தில் பலமுறை நான் சொல்லியிருக்கிறேன்.

இதற்கு எங்களாலும் வேறு மாதிரியாக பதில் அளிக்க இயலும். ஆனால் வேண்டாம் என பார்க்கிறேன்.

பாண்டிபஜார், யுனைடெட் இந்தியா காலனி, திருப்பெரும்புதூர் சம்பவங்களை நினைவுபடுத்தி நாங்களும் வாதிட முடியும்.

இவற்றுக்கெல்லாம் ஒரு மூலகாரணம் இருக்கும்தானே அதை பற்றி பேசமுடியுமா?

அதுவும் நேர்மையுடன் ஏனெனில் அதுவும் நேர்மை பற்றிய விடயம்தான்.

Link to comment
Share on other sites

அகா பாண்டிபஜாரில் துப்பாக்கி சண்டை நடந்தது உண்மைதான் எத்தனை பேர் காயமடைந்தார்கல் அல்லது கொல்லப்பட்டார்கள் ஆனால் எம் தேசத்தின் தேசதுரோகியால் (டக்லஸ்) இனால் மக்கள் கொல்லப்பட்டதாக அறிந்தேன் அதற்கு மனம் வருந்துகிறேன்

ஆனால் எம்மால் உங்களுக்கான பாதிப்பிலும் இந்திய படைகளால் எமக்கான பாதிப்பு பெரியது என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நினைகிறேன்

Link to comment
Share on other sites

அகா பாண்டிபஜாரில் துப்பாக்கி சண்டை நடந்தது உண்மைதான் எத்தனை பேர் காயமடைந்தார்கல் அல்லது கொல்லப்பட்டார்கள் ஆனால் எம் தேசத்தின் தேசதுரோகியால் (டக்லஸ்) இனால் மக்கள் கொல்லப்பட்டதாக அறிந்தேன் அதற்கு மனம் வருந்துகிறேன்

ஆனால் எம்மால் உங்களுக்கான பாதிப்பிலும் இந்திய படைகளால் எமக்கான பாதிப்பு பெரியது என்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நினைகிறேன்

அந்த டக்கிளசுக்கு கொடுக்கப்படும் மரியாதை என்ன? தேசிய கூட்டமைப்புக்கு கொடுக்கப்பட்ட மரியாதை என்ன? இந்திய சட்டப்படி தேடப்படும் நபர் டக்கிளஸ்.

Link to comment
Share on other sites

அது உண்மை ஏன் அவரை கைது செய்யவில்லை இந்தியா வரும் போது தென்னாபிரிக்கா வீரரை விசாரிக்கும் இந்திய பொலீஸ் ஒரு கொலைக்குற்றவாளியை அரசினர் வீருந்தினராக வரவேற்பது நகைப்புக்கிடமாக இல்லை.அதுவும் பிரதமருடன் கைகுலுக்கல் வேற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயரின் பேச்சுக்கு எப்படி அரசியல் சாயம் பூசப்படுகிறதோ அப்படியே விடுதலைப் புலிகள் கொண்டாடவில்லை என்று தீபாவளிக்கும் பூசப்படுகிறது. புலிகள் நத்தாரும் தான் கொண்டாடுவதில்லை. அவர்கள் சமயம் சார்ப்பான திருநாட்களைக் கொண்டாடுவதை தவிர்ப்பது பொதுவான வழக்கமையாகும். பொங்கல் ஆடிப்பிறப்பு போன்றவை சமூகக் கொண்டாட்டங்கள். அந்த வகையில் அவை தமிழர்களின் இன அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் பாரம்பரிய வகையில் கொண்டாடப்படுகின்றன.

தயவுசெய்து விடுதலைப்புலிகளின் பெயரைப் பயன்படுத்தி தனிநபர்களும் தாங்கள் தாங்கள் விளங்கியமட்டுக்கு போலி விளக்கங்கள் அளிப்பதால் பாதிப்பு என்பது விடுதலைப்புலிகளையும் வந்து சேர்கிறது.

தனி நபர்களை எல்லாம் புலிகள் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. ஆனால் தனிநபர்கள் சிலர் எடுத்ததுக்கெல்லாம் விடுதலைப் புலிகளை சாட்சிக்கு அழைப்பதை மக்கள் நிதானமாக கவனித்து உள்வாங்க வேண்டும். அதேபோல் தனிநபர்கள் விடுதலைப் புலிகளைப் பாவித்து தரும் விளக்கங்களை பிறர் விடுதலைப் புலிகளைத் தவறாக எடைபோட பயன்படுத்த வேண்டாம் என்பதையும் கோர வேண்டியதாகிறது.

90 களில் விடுதலைப்புலிகள் களியாட்ட சினிமாவைத் தடை செய்தது மக்கள் விடுதலை உணர்வோடு வாழப்பழக வேண்டும் அதை உணர வேண்டும் என்பதற்கே. ஆனால் அன்று தமிழகத்தில் கூட அது தொடர்பான பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படட்து புலிகள் சினிமாவை எதிர்க்கின்றனர்,தடை செய்கின்றனர் என்று. அது இந்திய எதிர்ப்பாகவும் சித்தரிக்கப்பட்டது. இன்று தமிழகக் கலைஞர்களே தமிழீழம் சென்று தமிழீழ நிகழ்வுகளை சினிமாத் திரைகளுக்கு எடுத்து வருவதானது அதைப் பொய்யென்று ஆக்கியுள்ளது.

அந்த வகையில் சமயக் கொண்டாட்டங்களைப் புலிகள் ஒருபோதும் கொண்டாட வேண்டாம் இப்படித்தான் கொண்டாடுங்கள் என்று அறிவுறுத்துவதில்லை. அந்த வகையில் சில பார்ப்பர்ணிய ஆரிய எதிர்ப்பாளர்கள் சுய விளம்பரம் வேண்டித் தொடங்கியுள்ள குறுகிய கண்ணோட்டத்திலான தீபாவளி எதிர்ப் பிரச்சாரம் என்பதற்குப் புலிகள் மற்றும் தமிழ் தேசியச் சாயம் பூசுவதையும் அதை உணர்வுபூர்வமான விடயமாக்குவதையும் மக்கள் தெளிவாக வேறுபடுத்திப் பார்த்து உள்வாங்க வேண்டும் என்பது எமது அவா. மக்கள் கொண்டுள்ள விடுதலை உணர்வுகளைப் பாதிக்கத்தக்க இவ்வைகையான சமயச்சார்புப், எதிர்ப் பிரச்சாரங்களை யாழ் களம் கண்மூடி ஆதரிப்பதும் அதற்கு முற்போக்குவாதம் என்று பெயரிடுவதும் காலத்துக்கு காலம் இடம்பெற்று வருகின்றனர். ஆதார அடிப்படைகளற்ற விளக்களையும் விடுதலைப் புலிகளையும் தமிழ் தேசிய உச்சரிப்பையும் வைத்துத் தங்களை தமிழ் தேசிய உணர்வாளர்களாக இனங்காட்டிக் கொள்ள விரும்பும் சில சுயவிளம்பர காரர்கள் மக்களின் உணர்வுகளைச் சீண்டி விடுதலைப் புலிகள் மீதும் தமிழ் தேசியத்தின் மீதும் கறைகளை உண்டு பண்ணுவதை யாழும் அனுமதிக்கத்தான் செய்கிறது.

தீபாவளிக்கு விளக்கம் கொடுப்பவர்கள் விடுதலைப் புலிகளையோ தமிழ் தேசியத்தையோ அநாவசியமாக உள்ளிளுக்க வேண்டாம் என்பதை தயவோடு கூறி வைக்க விரும்புகின்றோம்.

உங்களின் ஒப்பீட்டியல் விளக்கங்களில் பல ஆதாரமற்ற நிரூபணத்துக்கு அப்பாலான பல விடயங்கள் விடயங்கள் இருப்பதால் அவை மக்களின் உணர்வுகளை நம்பிக்கைகளை அநாவசியமாக தாக்கத்துக்கு உள்ளாக்கும் நிலையில் அது விடுதலைப் புலிகள் மீதானதும் தமிழ் தேசியம் மீதானதுமான வெறுப்பாக மாறும் நிலையை ஏற்படுத்தும். இது ஒரு வகையில் எதிரிக்கு சேவகம் செய்தலாகவே கருதப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.