Jump to content

அழகான சில படங்கள்


Recommended Posts

EV_SKN_7799.JPG

மழையின் வருகையை எதிர்நோக்கி ஏகாந்தமாய் தோகை விரித்து கொண்டாடும் மயில். இடம். கிண்டி சிறுவர் பூங்கா

ELARGE_20160827012006234769.jpeg

ஊட்டி அருகே உள்ள பைக்காரா படகு இல்லத்தில் தண்ணீரின் அளவு, 45 அடியாக குறைந்துள்ளது. பச்சை நிறமாக காணப்படும் தண்ணீரை, சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் ரசித்து செல்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • Replies 892
  • Created
  • Last Reply

ELARGE_20160828111830130052.jpeg

தாமரைப்பூ பூத்து குலுங்கும் இடம் ; விருதுநகர் புறநகர் பகுதி.

ELARGE_20160828102446106357.jpeg

திருப்புத்தூரில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாட்டிற்காக தயாராகும் பல வண்ண பிள்ளையார் சிலைகள்.

ELARGE_20160828101957240648.jpeg

கண்மாய் வறண்டதால் சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வரத்து குறைந்தன.

ELARGE_20160828013455410792.jpeg

வால்பாறையில் பரவலாக பெய்து வரும் மழையால் மீண்டும் பசுமைக்கு மாறியுள்ள தேயிலை செடிகள் இடம் : நல்லகாத்து எஸ்டேட்.

Link to comment
Share on other sites

ELARGE_20160831114656151689.jpeg

அருகே ஓர் ஆபத்து...! 'ஓடி வந்து முட்டினேனா, ஒரு டன் 'வெயிட்டு' பாக்குறியா' என, பேசாமல் பேசும், காட்டெருமை முன் நின்று, ஆபத்தை உணராமல் 'போட்டோ' எடுத்த சுற்றுலா பயணி. இடம்: குன்னுார் லேம்ஸ் ராக் தேயிலை தோட்டம்.

ELARGE_20160831075301117182.jpeg

சென்னை மழையில் ஆனந்தமாக நனைந்தபடி செல்லும் கல்லூரி பெண்கள்.

ELARGE_20160831031354560647.jpeg

பசுமை போர்வை போர்த்திய மலைகளும், அதன் நடுவே ஓடும் அணை நீரின் அழகும் இயற்கை நமக்கு அளித்த வரம் இடம்: பரம்பிக்குளம் அணை

ELARGE_20160831003720558207.jpeg

இருவர் செல்லும் வாகனத்தில் மூவர் செல்வதே தவறு.... அதுவும் மழை நேரத்தில் இப்படி பயணிப்பது விபத்திற்கல்லாவா வழிவகுக்கும்! இடம்: திண்டுக்கல்.

Link to comment
Share on other sites

ELARGE_20160901105242506287.jpeg

சூரியனின் அழகோ அழகு ., இடம் ; ராமேஸ்வரம் .

ELARGE_20160901074108470166.jpeg

 

மெல்லிய இழைகளாய், பூமிக்கு வானம் அனுப்பிய தூது. இடம்: ஏ.வி.பாலம், மதுரை.

ELARGE_20160901043209662928.jpeg

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதுச்சேரி அருகே திருக்கனூர் - திருமங்கலம் சாலையில், விநாயகர் சிலை தயார் செய்து வண்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.

ELARGE_20160901033032121556.jpeg

  மழை பெய்வதற்கு முன் தவழ்ந்து வந்த காரிருள் மேகம் பார்ப்போரை மிரள வைத்தது. இடம் : சிவகங்கை ரயில்வே மேம்பாலம்

ELARGE_20160901023202818782.jpeg

பழநி பைபாஸ் அருகே இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யும் பணி நடந்தது.

ELARGE_20160901012240589622.jpeg

ராமநாதபுரம் வாலிநோக்கம் கடற்கரையில் பாறைகளுக்கு நடுவில் சீறிப்பாயும் கடல் அலைகள் காண்பவர் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

Link to comment
Share on other sites

EV_SKN_8820.JPG

சென்னையில் கொட்டிய மழை. இடம். கோயம்பேடு.

ELARGE_20160902031214620531.jpeg

கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் மழையால், வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

ELARGE_20160902013440059693.jpeg

பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணை நீர்மட்டம் சரிந்துள்ளது.

Link to comment
Share on other sites

ELARGE_20160904113206819421.jpeg

ஓணம் நெருங்குவதையொட்டி திண்டுக்கல்லில் கல்லூரி மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டனர்.

ELARGE_20160904113102979104.jpeg

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டியில் தயாராகும் சிலைகள்.

ELARGE_20160904105807652173.jpeg

வால்பாறை அடுத்துள்ள கேரள சாலக்குடி பகுதியில், பெய்துவரும் மழையால் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.

ELARGE_20160904105332755004.jpeg

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை ஆர்.எஸ்.புரம் சாலையில் விற்பனைக்கு வந்துள்ள விநாயகர் சிலைகள்.

ELARGE_20160904044101533021.jpeg

எந்நேரம் வரும் என்று தெரியாது; எப்படி வரும் என்றும்புரியாது. வரும் வேளையில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது, நம்முடைய பொறுப்பு. யானைகளுக்கு தெரியாது நம்முடைய உயிரின் மதிப்பு. கொஞ்சம் அசந்தாலும் அவ்ளோ தான்.

Link to comment
Share on other sites

ELARGE_20160906112859756309.jpeg

வண்ண, வண்ண பூச்சிகள் வட்டமிடும் பழநி மலை பகுதி.

ELARGE_20160906101459361545.jpeg

பயிராக்கி, உணவாக்கும் தேனி மாவட்ட பெண் பிரம்மாக்கள்,

ELARGE_20160906091742754259.jpeg

காதல் மொழி கொஞ்சி பேசுகிறதோ மதுரையில் பூத்த இந்த ரோஜா ஜோடி ,

ELARGE_20160906001633465615.jpeg

வறட்சி... தென்மேற்கு பருவ மழை பெய்தாலும் தணணீர் வரத்து இல்லாததால் காய்ந்த நிலையில் இருக்கும் சாஸ்தா கோவில் அணை.

ELARGE_20160905212554743144.jpeg

விநாயகர் சதுர்த்தியை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து மூசிக வாகனத்தில் எழுந்தருளிய விநாயகரை வணங்கிய கோயில் யானை ராமலெட்சுமி.

Link to comment
Share on other sites

ELARGE_20160907100226009587.jpeg

துள்ளி விளையாடும் பருவமாம்...கடலில் விளையாடுவது என்றால் மகிழ்ச்சி தான் இந்த மாணவர்களுக்கு. இடம் : ராமநாதபுரம் மாயாகுளம் பாரதிநகர் கடற்கரை.

ELARGE_20160907095758812319.jpeg

முள் வளரும் பூமியில் குளிர்ச்சி தரும் மரக்கன்றுகளும் வளர்கிறது. இடம் : ராமநாதபுரம் கல்கிணற்று வலசை அரசு தோட்டக்கலை பண்ணை.

ELARGE_20160907095351674679.jpeg

கொடைக்கானல் பியர்சோழா அருவியில் அபாயகரமான பாறை மீதேறி செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

Link to comment
Share on other sites

ELARGE_20160908100536035260.jpeg

மேகத் திரையில் கோட்டு ஓவியம். இடம்: சிவகங்கை.

ELARGE_20160908100519093631.jpeg

பறவைகளும் உதட்டுச் சாயம் பூசுமோ? இடம்: மதுரை.

ELARGE_20160908100507034810.jpeg

வண்டுச் சத்தம் கேட்டு நாணுகிறதோ மொட்டு! இடம்: மதுரை.

ELARGE_20160908100958817722.jpeg

இறைவனே தீட்டிய ஓவியம். இடம்: திண்டுக்கல்.

ELARGE_20160908100422137929.jpeg

வண்ண வண்ண மழலைகள்! இடம்: பழநி.

ELARGE_20160908064538368793.jpeg

ஊட்டி படகு இல்ல ஏரியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்ட வெலிங்டன் ராணுவ மைய வீரர்கள்.

ELARGE_20160908020208808249.jpeg

ஆழியாறு அணைக்குள் மூழ்கியிருந்த ஆங்கிலயேர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் மற்றும் வால்பாறைக்கு செல்லும் பழைய ரோடும் வெளியே தென்படத் துவங்கியுள்ளன.

Link to comment
Share on other sites

ELARGE_20160909100749187215.jpeg

பசி இருப்பதால்தான் இந்த போராட்டம். இடம்: ராமநாதபுரம்.

ELARGE_20160909100656225121.jpeg

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் செவ்வானமாக இருந்த இடம் மதுரை வான பகுதி.

ELARGE_20160909055131738740.jpeg

கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையால் பழநி கோடை கால் நீர்த்தேக்க குழாயில் கொட்டும் தண்ணீர்.

ELARGE_20160909024251973623.jpeg

நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழா, கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.

Link to comment
Share on other sites

ELARGE_20160910064216675463.jpeg

மாலை வேளையில் வானை சிவப்பு முகத்தால் குளிரச்செய்த கதிரவன். இடம்: விருதுநகர் - மதுரை ரோடு.

ELARGE_20160910065832224183.jpeg

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி பூக்கள் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் பூத்துள்ளன.

தமிழகத்தின் கண்ணாடி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புரி அருகே வயல்வெளியில் இரை தேடும் பறவைகள்.

தமிழகத்தின் கண்ணாடி

சிலந்தி விரித்த வலையில் சிக்கிய பனித்துளிகள். இடம்: திண்டுக்கல்.

Link to comment
Share on other sites

ELARGE_20160911035618586179.jpeg

கதிரவன் கதிர்களால் அலங்கரிக்கப்பட்ட வானம். இடம்: விருதுநகர் - மதுரை ரோடு

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

சென்னையில் கடலில் கரைக்கப்பட்ட பிரம்மாண்ட விநாயகர் சிலைகள்.

தமிழகத்தின் கண்ணாடி

ஓணம் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் குவிந்துள்ள வாடாமல்லி பூக்கள்.

 

தமிழகத்தின் கண்ணாடி

கோடநாடு காட்சிமுனையில் இருந்து பார்த்தால் தெரியும் தெங்குமரஹாடா சுற்றுப்புற பகுதிகள், பருவமழை பொய்த்ததன் காரணமாக வறட்சியின் தாக்கத்தில் சிக்கி உள்ளன.

 

Link to comment
Share on other sites

ELARGE_20160915010234535311.jpeg

திருப்பூரில், ஓணம் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது. அதையொட்டி, காலேஜ் ரோடு, ஐயப்பன் கோவிலில், கண்களை கவரும் வகையில் வரையப்பட்ட அத்தப்பூ கோலம்.

ELARGE_20160915074317296786.jpeg

சிவகங்கை அண்ணாமலை நகர் அருகே நாற்றுகள் பறிக்கப்பட்டு, கட்டுகளாக மாற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

ELARGE_20160915085923978086.jpeg

கோயிலில் தீபம் ஏற்றி ஓணம் பண்டிகையை கொண்டாடிய இளம் பெண்கள். இடம் : சென்னை.

ELARGE_20160915090028453001.jpeg

சென்னையில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடிய பெண்கள்.

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

இருளில் வானில் தோன்றிய வர்ணஜாலம். இடம் : தேனி.

தமிழகத்தின் கண்ணாடி

வால்பாறை, தேயிலை எஸ்டேட்களில் பறிக்கப்பட்ட பச்சை தேயிலையை சுமந்து செல்லும் தொழிலாளர்கள்

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

இரைதேடி வயலில் முகாமிட்டுள்ள அரிவாள் மூக்கன் பறவைகள். இடம்: சின்னமனூர், தேனி.

தமிழகத்தின் கண்ணாடி

நீண்ட தோகையுடன் அன்னநடை போடும் ஆண் மயில். இடம் ; ராமநாதபுரம் அருகே சுந்தரமுடையான் மாதிரி தோட்டம்.

Link to comment
Share on other sites

தமிழகத்தின் கண்ணாடி

வால்பாறையில் பெய்துவரும் சாரல் மழையில், தேயிலை செடிகளை தாலாட்டி விட்டு, சோலையாறு அணையை நோக்கி பாயும் தண்ணீர். இடம்: சோலையார் எஸ்டேட்.

தமிழகத்தின் கண்ணாடி

திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், நிரம்பும் நிலையில் காணப்படும் செங்குளம்

தமிழகத்தின் கண்ணாடி

மேகம் கருக்குது... மழை வர பாக்குது...சாரல் அடிக்குது... இதயம் துடிக்குது...என பாடும் அளவிற்கு நேற்று பிற்பகலை இரவாக்குவதை போல் கருமேகங்கள் சூரியனை சூழ்ந்து, மண்ணிற்கு மழையை கொண்டு வர முயற்சி செய்கின்றனவோ. இடம்: மதுரை எல்லீஸ் நகர்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.