Jump to content

கார் வாங்கலாம் வாங்கோ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாங்கலாம் வாங்கோ

மேற்குலகில் வாழும் நாங்கள் பொதுவாகப் போக்குவரத்திற்காக எப்போதுமே ஒரு வாகனத்தை வைத்திருப்போம்.கார் வசதி இல்லாத சிலர் தங்கள் தூரப் பயணத்திற்கு புகையிரதமோ  அல்லது பேருந்தோ அல்லது விமானமோ எனப் பல வேறு வழிகளில் பண விரயத்துடன் தங்கள் பிரயாணத்தைச் செய்யவேண்டியிருக்கும்.

சோ பொதுவாக நீங்கள் பாவனைக்கு வைத்திருக்கும் காரை வாங்கும்போது பல விடயங்களை அலசி ஆராய்ந்து தான் அந்தக்காரை வாங்கியிருப்பீர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரும் வாகனத்தை வாங்குவதை இரும்புவதில்லை.

பலர் முதலில் யோசிப்பது பதிய காரா? அல்லது ஏற்கனவே பாவிப்பில் இருந்த  காரா?  எந்தக் கொம்பனிக் கார் வாங்கலாம் அந்தக்காரின் அமைப்பு, வேகம் எப்படி இருக்கும்  என்றுதான் என  நான் நினைக்கின்றேன்.

அடுத்த பிரச்சனை எப்படி வாங்கும் காரின் பணத்தைச்  செலுத்துவது என்பது இன்னும் முக்கியமான பிரச்சனையாக இருக்கும்.
ஒரே தவணையில் செலுத்துவதா? அல்லது மாதாந்த அடிப்படையில் கடன் மூலம் தீர்ப்பதா எனவும் யோசிக்கலாம்.

இப்போது நான் ஒரு கார் வாங்க விரும்புகின்றேன் என வைத்துக் கொண்டால் அதில் வரும் எங்களுக்குத் தெரியாத பல சிக்கலகள் இருக்கும். இந்தச் சிக்கல்களை எவை? அவற்றை எப்படிச் சமாளிப்பது?
கார் வாங்கும்போது எங்களுக்குத் தெரியாத பல தொழில் நுட்பப் பிரச்சனைகளை எவ்வாறு கண்டு அறிந்து கொள்ளலாம்?

எந்தக்காரை வாங்கினால்  அளவிற்கதிகமாகப்  பெறுமதி குறையாமல் மீண்டும் விற்பனை செய்யலாம்?
புதிய கார் வாங்குவது நல்லதா? அல்லது பாவனையில் இருக்கும் காரை வாங்குவது நல்லதா? அல்லது என்னைப்போல நன்றாக அடிபட்ட பழைய காரை வாங்கி அது உடையும் வரை :D:lol: பாவித்து விட்டு இரும்புக்கு மிகுதியை விற்று விடுவது நல்லதா?
உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

வாங்கோ கார் வாங்கலாம் வாங்கோ :D

Link to comment
Share on other sites

இதுக்கெல்லாம் நான் கனக்க சிந்திக்கிறேல்ல.. மனதில் தோன்றுவதை பாரியாருடன் கலந்து பேசிவிட்டு செயற்படுத்துவதுதான். :D

கனடாவுக்கு வந்த புதிதில், கார் வாங்கியே ஆக வேண்டும் என்கிற கட்டாயத்தில் ஒரு Camry வாங்கினேன். அப்போது வேலை கிடைத்திருக்கவில்லை. காரும் 14 வருடப் பழசு.. சில தடவைகள் பழுதாப் போய் தொல்லை கொடுத்துவிட்டது.. வேலைகிடைத்து பிறகு குழந்தையும் பிறக்க புதிய வாகனம் ஒன்றை வாங்கினேன். (RAV 4) பிறகு சில வருடங்களில் corolla ஒன்றையும் வாங்கினேன். இருவருக்கும் வாகன சுதந்திரம் வேண்டும் என்பதற்காக.

இரண்டையுமே தவணைப் பணத்தில் வாங்கியே கட்டி முடித்தேன். உண்மையில் இங்கு வாகனத்தில் காசைப் போடுவது ஆற்றில் போடுவதுக்கு சமம். ஆனாலும் குளிர்காலத்தில் நடுவழியில் நின்று விடுவதைப்போன்ற சிக்கல்/ஆபத்து வேறெதுவும் இல்லை. இந்த அனுபவத்தினால்தான் புதிய கார்களை வாங்கினேன். வேலை விடயமாக தூர இடங்களுக்கு சென்றுவர இந்த உத்தரவாதம் தேவையாக உள்ளது.

இரண்டாவது காரையும் ஏன் டொயட்டாவில் வாங்கினேன் என்றால் முதல் காருக்கு அவர்கள் வழங்கிய தரமான சேவையே காரணம். இரண்டு வாகனங்களையும் டொயட்டா டீலரிடம் மாத்திரமே பராமரிப்பு சேவைக்கு கொடுத்து எடுக்கிறேன்..

ஆகவே இனிமேல் காரை மாத்தினாலும் புது கார்தான் வாங்குவேன்.. :D அந்த வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

Link to comment
Share on other sites

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

விரலுக்கு ஏத்த வீக்கம்தானே இருக்க வேணும்.. நம்மட லெவலுக்கு அவ்வளவுதான் வரும்.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
புதுக்கார் வாங்குகையில் விற்பனை வரி 20% கட்டணும். ஒரு முறை தான் அறவிடுவார்கள்.
 
பசை உள்ளவர்களும், பெரு நிறுவன உயர் அதிகாரிகளும் தமது வாகனங்களை 6 மாதங்களுக்கு ஒரு முறையோ, அல்லது பிடிக்காவிடில் அதற்கு முன்னரோ மாத்துவார்கள்.
 
ஆகவே நான் எப்போதும் 6 மாத வயதுள்ள புதுக்கார் வாங்கி 20% சேமித்துக் கொள்வேன். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் இரண்டு கார்களையும் ஏலத்தில்தான் வாங்கினேன்! அதன் பின்னர் ஏலத்தில் சென்று கார் வாங்குமளவிற்கு நேரம் இல்லாததால் கார் டீலர்களிடமே சென்று வாங்கினேன்.

ஏலத்தில் கார் வாங்குவது சூதாட்டம் போன்றது. எனவே சிலவேளை கார் எடுத்துக்கொண்டு வரும்போதே இடையில் நின்றாலும் நின்றுவிடும்!!

ஆனாலும் ஏலத்தில் வரும் கார்களின் தகவல்கள் முன்கூட்டியே இணையத்தில் கிடைப்பதால் அவை பற்றிய விமர்சனங்களைப் படித்துப் பார்த்துவிட்டுச் செல்லுவது நல்லது. குறைந்த பட்சம் எவ்வளவு விலைக்கு மேல் கேட்கக்கூடாது என்று அறிந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

காரை ஓடிப் பார்க்க அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் விருப்பமான காரை அவர்கள் ஸ்ரார்ட் செய்யும்போது அதன் சத்தத்தை வைத்து எஞ்சின் எப்படி இருக்கும் என்று ஓரளவு அனுமானிக்கலாம். அத்தோடு எக்ஸோஸ்ற்றில் கைவைத்து புகையுடன் நீராவியைத் தவிர்த்து எண்ணைக் கசிவு வருகின்றதா என்று பார்க்கவேண்டும். காஸ்கற் போயிருந்தால் அதைப்போலச் செலவு இல்லை. வேறு ஏதாவது கசிவுகள் நிறுத்துமிடத்தில் உள்ளனவா என்று பார்த்து எல்லாம் திருப்தி என்றால் வாங்க முயற்சிக்கலாம்.

பலருடன் போட்டிபோட்டு வாங்கவேண்டிவருவதால் விருப்பமான கார் கிடைக்காமல் போகலாம். எனவே மூன்று நான்கு கார்கள் பார்க்கவேண்டி வரும். இரண்டு மூன்று தடவைகள் போகவேண்டிவரும். பொறுமை இருந்தால் நல்ல கார் நியாயமான விலைக்கு வாங்கலாம்.

குதிரைக்குக் குணம் அறிந்துதான் கொம்பைக் கடவுள் கொடுக்கவில்லையாம். அதனை நினைவில் வைத்திருப்பதால் ஒருபோதும் பவர் கூடின கார்களை நான் வாங்கியதில்லை. என்றாலும் கார் ஓட ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் ஒவ்வொரு வாரமும் கேம்பிரிட்ஜ் - இலண்டன் பயணங்களில் என்னை முந்தி ஒரு காரையும் போகவிட்டதில்லை! ஒருமுறை என்னுடன் போட்டிக்கு ஓடியவனை முந்தவிடாது கண்டபடி ஓடி அவன் பின்னுக்கு வந்து மோதும்படி திடீரென்று பிரேக் அடித்துவிட்டேன். இப்படியான மோட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாது என்று அதற்குப் பின்னரும் ஒவ்வொருமுறையும் நினைத்துக்கொண்டாலும் விரைவுப்பாதைகளில் போகும்போது மைக்கல் சூமாக்கர் போன்று நினைத்துக் கொள்வது மாற்றமுடியாத பலவீனமாக உள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில்... ஒரு முறையாவது, புதுக்கார் வாங்கி ஓட வேண்டும் என்பதற்காக, "மெர்சிடஸ் 190" வாங்கி... 18 வருடம், 280,000 கி.மீ. வரை ஓடி Katalysator  இல்லாமல் எமது நகரத்துக்குள் ஓட முடியாது என்ற சட்டம் வந்த பின் அதனை விற்றேன்.
 

புதுக்காரில் சௌகரியம், அசௌகரியம் என்று இரண்டும் உண்டு.
அதனை குறிப்பிட்ட கால அளவுகளில் அதனை பராமரிப்புக்கு விட்டு, அதன் புத்தகத்தில் பதிந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை பராமரிப்புக்கு.... 500 - 1000€ வரை செலவாகும்.

 

இங்கு வாகனம் வைத்திருந்து 28 வருடங்களானாலும், இப்போ வைத்திருக்கும் காருடன் மூன்று கார்களையே வாங்கியுள்ளேன்.
கார் வாங்கப் போவது என்று தெரிந்தவுடன் எந்தக் கொம்பனி கார் வாங்கலாம்.... என்று மனைவியுடனும், நண்பர்களுடனும் கலந்து ஆலோசிப்பேன்.

 

இன்ன கார்தான் ... வாங்க வேண்டும் என்று முடிவு எடுத்தவுடன் ஊரில் உள்ள அது சம்பந்தம்பட்ட கார் கொம்பனிகளின் விற்பனை நிலையங்களையும், பத்திரிகைகளையும் தனியே... நோட்டமிடுவேன்.(இதற்கு 2 மாதம் எடுக்கும்)
 

நிறமும், விலையும், கி.மீ எவ்வளவு உள்ளது என்பது பிடித்துக் கொண்டவுடன் மனைவியுடன் சென்று அந்தக் காரை மீண்டும் நோட்டமிட்டு, அதன் முன்னைய உரிமையாளர்... எத்தனை வயது உடையவர் என்பதை அறிய முயற்சிப்பேன்.

அதனை பென்சன் எடுத்தவர் பாவித்திருந்தால்... இன்னும் சந்தோசம்.
இளையவர்களும், துருக்கியரும் பாவித்த காரை வாங்கவே மாட்டேன்.

 

எல்லாம் சரி வந்து விட்டால்..... காரின் தரத்தை அறிய ஒரு Hobby மெக்கானிக் ஒருவரையும், குறிப்பிட்ட விலையிருந்து 1500 € குறைக்க இன்னுமொரு நண்பர் உள்ளார், அவரையும் அழைத்துச் சென்று பேரம் பேசி.....   :D

விற்பனையாளர் உங்களுக்கு காரே விற்பதில்லை... என்று சொல்லும் அளவுக்கு, அரியண்டம் கொடுத்து.... காரை வாங்கி வந்து விடுவேன். :)

Link to comment
Share on other sites

உண்மையில் எனக்கு பிடித்த கார்கள் டோயார்ரா ......மஸ்டா ...........இதைத்தவிர வேறு எந்தக்கார்களையும் நான் வாங்குவதில்லை  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார் வாங்கும் போது...நாம பாக்கிறது

1. வருடம்
2. நிறம்
3. கிலோ மீற்றர்
4. காரின் வரலாறு
 

பெரும்பாலும் ஜேர்மன் கார்களும்... அமெரிக்க வாகனங்களுமே வாங்க பிடிக்கும்... ஜேர்மனி கார்களில் பிடிக்காத விடயம் அதன் மெயின்ரெனன் .... யானை விலை.... குதிரை விலை... உதிரிப்பாகங்கள்...$120 மணித்தியால லேபர்.

 

BMW விட Audi உள்ளும் வெளியும் நன்றாக இருக்கும்.... ! 

வாங்குங்க... ஏ 8 8 சிலின்டர்....4.2 லீட்டர் இன்ஜின்.... பறக்கலாம் அதிவேக பாதையில்.....

சோகம் என்ன என்றா....12மாதத்தில் 11 ஸ்பீடிங் ரிக்கற்.... :(   (சத்தியமாக)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது காரையும் ஏன் டொயட்டாவில் வாங்கினேன் என்றால் முதல் காருக்கு அவர்கள் வழங்கிய தரமான சேவையே காரணம். இரண்டு வாகனங்களையும் டொயட்டா டீலரிடம் மாத்திரமே பராமரிப்பு சேவைக்கு கொடுத்து எடுக்கிறேன்..

ஆகவே இனிமேல் காரை மாத்தினாலும் புது கார்தான் வாங்குவேன்.. :D அந்த வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :lol:

 

ரொயோட்டா கார்கள் தான் தற்சமயம் உலகில் விற்பனையில் முன்னணியில் நிற்கின்றன. குறைந்தளவு பெற்றோல் செலவில் ஓடக்கூடியதாக அதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கின்றது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் அதிவேக பாதையில் வேகமான காற்றுக்குச்

சிறிது அசைவும் இருக்குமாம் உண்மையா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் சொன்னாலும் Toyota - Toyota தான் :D

 

Me it is LEXUS.

 

என் கனவு தேவதையே......

 

LS.png

 

1445068258134588994.jpg

 

lexus-nx-interior_a_mid.jpg?itok=tPytWjS

Link to comment
Share on other sites

Me it is LEXUS.

 

ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை காணும் என நான் நினைப்பதால் Lexus பாவித்து பாத்ததில்லை :icon_idea:

Lexus ன் விலைக்கு தகுந்தமாதிரி அது நன்றாகத்தானே இருக்கும் நாதமுனி அண்ணா :)

Link to comment
Share on other sites

ரொயோட்டா கார்கள் தான் தற்சமயம் உலகில் விற்பனையில் முன்னணியில் நிற்கின்றன. குறைந்தளவு பெற்றோல் செலவில் ஓடக்கூடியதாக அதன் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டிருக்கின்றது எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

ஆனால் அதிவேக பாதையில் வேகமான காற்றுக்குச்

சிறிது அசைவும் இருக்குமாம் உண்மையா ? :D

எந்த வாகனத்தின் சில்லிலும் 4 ஆணிகள் மட்டும் இருந்தால் அசையத்தான் செய்யும்.. :D சின்னக் கார்களில் அநேகமாக 4 ஆணிகள்தான் இருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏழைக்கேற்ற எள்ளுறுண்டை காணும் என நான் நினைப்பதால் Lexus பாவித்து பாத்ததில்லை :icon_idea:

Lexus ன் விலைக்கு தகுந்தமாதிரி அது நன்றாகத்தானே இருக்கும் நாதமுனி அண்ணா :)

 

ஜேர்மன் காரர்கள் அது எக்ஸ்ட்ரா, இது எக்ஸ்ட்ரா என்று ஒவ்வொரு சிறு மேலதிக விசயங்களுக்கும் காசு பறிப்பார்கள். (உதாரணம்: electric window, electric mirror, etc)
 
ஒரு நண்பரின் C கிளாஸ் merc பார்த்து விட்டு அப்படியே வேண்டும் எண்டு போனால், அங்க அந்த கார் very basic நிலையில் இருந்து டீலருக்கு, டீலர், உங்களுக்கு ஏத்த மாதிரி, உங்களுக்கு என்னென்ன தேவை என்று கேட்டு விலை சொல்லுவார்கள். 
 
ஆனால் lexus ரகத்தில் இது எல்லாமே basic ஆக தருவதே சிறப்பு. அதுவே அவர்களது சந்தை தந்திரம். டொயோடா  குடும்ப luxury brand என்பதால்...
 
Lexus, இந்த வகை பிராண்டில் இது, இது கிடைக்கும், இது தான் விலை என்று நம்பி போகலாம்.. :wub:

 

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில்   volkswagen passat வாங்கினேன் ஐரோப்பாவில் முதல் முதல் வாங்கிய கார் .....நல்ல இதமாக இருக்கும் ........ஒரு நாள் நண்பருடைய toyota corolla  காரை ஓடும்படி வந்தது .ஆகாக என்ன இதமாக இருந்தது  ஜெர்மன் காருக்கும் ஜப்பான் காருக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தெரிந்தது ..............சில மாதங்களின் பின் toyata corolla  stationwagon ஒன்று வாங்கினேன் பல நாட்கள் என்னோடு சேர்ந்து உழைத்தது .........தற்போது மஸ்டா வைத்திருக்கிறேன் ஸ்பீட் breaker .........உண்மையில்  இது வரை காலமும் என்னுடன் எனது நிலைக்கு என்னுடன் சேர்ந்து பயணிக்குது .............எனக்கு பிடித்த சில்வர் கலரிலும் அது  அமைந்தது தான் இன்னும் சிறப்பாக தெரிந்தது :D  :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரியை  திறந்த வாத்தியாருக்கு நன்றிகள்

 

 

கார் வாங்கும்போது நான் கவனிப்பவை..

 

1- காரை வாங்கியபின்னர் ஏற்படக்கூடிய பராமரிப்புச்செலவு( விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும்)

 

2- நிறம்

 

3- வாகனத்தின் நிறை (நம்ம ஓட்டத்துக்கு வழுக்காது பறக்காது :lol:  இருக்கணும்)

 

4- வாகனத்தின் குதிரைவலு - பரிசுக்குள் (நகரம்) அதிகம் ஓடுவதால் குதிரைவலு குறைந்த வாகனத்தையே தெரிவு செய்வேன். அத்துடன் காப்புறுதியும் குறைவு.

 

5- விமானநிலையம் உட்பட கார் தரிப்பிடங்களுக்குள் செல்லக்கூடிய  உயரம் - 1 M 90க்கு மேலிருக்கக்கூடாது)

 

6- புதிய காரைவிட (0 கிலோமீற்றர்) சில ஆயிரம் கிலோமீற்றர்கள்ஓடிய வாகனத்தையே வாங்குவது வழமை. புதிது என்றால் திறப்பை  வாங்கிவிட்டு  திருப்பிக்கொடுத்தாலும் 10 வீதம் அடிபட்டுவிடும். இரண்டாவது கையாகிவிடும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன பா சிவில் engineer மார் எல்லாம் 120 k மேல உழைக்கிராக்கள் எல்லாம் Toyota ஓடையே நிக்குறீங்க :D

 

ரொயோட்டா என்றாலும் பரவாயில்லையே .சிலர் இன்னும் சைக்கிள்தானாம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

குதிரைக்குக் குணம் அறிந்துதான் கொம்பைக் கடவுள் கொடுக்கவில்லையாம். அதனை நினைவில் வைத்திருப்பதால் ஒருபோதும் பவர் கூடின கார்களை நான் வாங்கியதில்லை. என்றாலும் கார் ஓட ஆரம்பித்த முதல் இரண்டு வருடங்களில் ஒவ்வொரு வாரமும் கேம்பிரிட்ஜ் - இலண்டன் பயணங்களில் என்னை முந்தி ஒரு காரையும் போகவிட்டதில்லை! ஒருமுறை என்னுடன் போட்டிக்கு ஓடியவனை முந்தவிடாது கண்டபடி ஓடி அவன் பின்னுக்கு வந்து மோதும்படி திடீரென்று பிரேக் அடித்துவிட்டேன். இப்படியான மோட்டு வேலைகளைப் பார்க்கக்கூடாது என்று அதற்குப் பின்னரும் ஒவ்வொருமுறையும் நினைத்துக்கொண்டாலும் விரைவுப்பாதைகளில் போகும்போது மைக்கல் சூமாக்கர் போன்று நினைத்துக் கொள்வது மாற்றமுடியாத பலவீனமாக உள்ளது!

 

ஏலத்தில் வாங்கும் வாகனங்கள் பற்றிய அறிவித்தல்களை முன்னரே அறிந்துகொண்டு செயற்பட்டால் மிகுந்த இலாபத்துடன் வாங்கலாம்.

ஆனாலும் பல பெரிய முதலைகளுடன் மோதத் தயாராக இருக்கவேண்டும்.

 உங்கள் அனுபவத்தைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கிருபன். :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார் வாங்கும்பொழுது அதன் சம தரத்திலுள்ள பல்வேறு நிறுவனங்களோடு ஒப்பிட்டு புதுக் கார்(ஏற்கனவே கார் ஓட்டுவதில் போதிய அனுபவம் இருந்தால்) வாங்குவதே நீண்ட காலத்திற்கு நல்லது.

முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது.. :o

ஒரு லிட்டர் எரிபொருளுக்கு கார் செல்லும் தூரம் (KmpL)
கார் இயந்திரத்தின் குதிரை திறன்(BHP)
காரின் பாதுகாப்பு அம்சங்கள்(ABS, EBD, Air bags, Auto lock/open etc)

காரின் உட்புற வசதிகள் (ICE, Leg Room, seat adjustments, cooling etc)
சாலைகளில் காரின் பாவனை(easy manoeuvrability, road handling, turning radius etc)
விற்பனைக்கு பிந்திய சர்வீஸ் வசதி(After sales service)

உத்திரவாதம்(Warranty)
எளிதில் கிடைக்கும் உதிரிப் பாகங்கள்(Spareparts availability)
விலை/வசதி விகிதாச்சாரம்(Cost/benefit ratio)
மறு விற்பனைக்கான பெறுமதி(Resale value)
கார் வண்ணங்களுக்கான தேர்வும், வடிவும்(availability of colors, aerodynamic design)

 

வசதிக்கேற்ற எள்ளுருண்டை என்னுடைய கார்.. :)

147_349X215.jpg
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபாரு என்று ஒரு கார் இருக்கிறது. ஜப்பானியக் கார்களில் மிகவும் தரமானது. ஓடுவதற்கும் இதமானது. 4சில்லுகளும் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் மிகவும் வசதியான ஓட்டம்.

 

பொக்ஸர் எனும் நேர் 4 அல்லது 6 சிலிண்டர்களைக் கொண்டது.

 

விலையும் கைக்கு அடக்கமானது.

 

எம்மவர்கள் பலருக்குத் தெரியாத ஒரு கார்.

 

டொயோட்டா , மஸ்டா , கொண்டா என்று நிற்காமல் மற்றைய கார்கள் பற்றியும் தேடிப் பாருங்கள்.

 

 

Link to comment
Share on other sites

நான் அவுஸ் வந்து முதன் முதல் வாங்கிய கார் Holden Commodore. 
 
நான்கு வருடங்கள் பழையது. எந்த விதமான என்ஜின் பிரச்சனையும் தரவில்லை.  V6 3.6 லீட்டர் என்ஜின்.
 
அதன் பின் புத்தம் புதிய Holden Commodore ஒன்று வாங்கினேன் $ 39,000. வியாபரத்திற்கு என்று பதிவு செய்ததால் 5 வருடத்தில் மொத்தத்தையும் வரிக்கழிப்பு செய்து விட்டேன்.
 
நன்றாகப் பெற்றோல் குடிக்கும். ஆனால் அமுத்தினால் அமுத்து தான். பறக்கும். அவுஸில் 110 கிலோ மீட்டர் தான் உச்ச வேகம். சிட்னியில் இருந்து கன்பெறா போகும் போது 170 இல் ஓடியிருக்கிறேன். பொலிஸ் பிடித்தால் உட்னேயே லைஸென்ஸ் பறிப்பார்கள்.
 
 
Holden ஐ அமெரிக்கவில் Pontiac என்பார்கள்.
 
2008-holden-ve-commodore-sportwagon-fron
 
 
 
 
Holden_Commodore_sv6_2009_Holden-downloa
 
 
   
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mercedes-Benz-C-KLasse-W-205-C-250-AMG-L

 

ஜேர்மனியர் அதிகம் விரும்பும் காரின் நிறம்..... சாம்பல் கலந்த சில்வர், மற்றும் கறுப்பு.

பிடிக்காத நிறம்..... ஒரேஞ், வயலட்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.