Jump to content

ஓரு மார்க்சீயரின் முன்னுரிமைகளை அவர் வாழ நேர்ந்த காலத்தின் சூழலே தீர்மானிக்கிறது - யமுனா ராஜேந்திரன் நேர்கானல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு மார்க்சீயரின் முன்னுரிமைகளை அவர் வாழ நேர்ந்த காலத்தின் சூழலே தீர்மானிக்கிறது *

மே 2012 தொறான்ரோ பயணத்தையொட்டி கனடா சுயாதீனத் திரைப்படக் கழகத்தின் செயல்பாட்டாளரான ரதன் என்னுடன் மேற்கொண்ட நீண்ட உரையாடலின் பதிவு

*

கடந்த பல வருடங்களாக ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றீர்கள். ஒரு சக தமிழன் என்பதற்கு அப்பால் உங்களைத் தூண்டியவை என்ன?

குழந்தைப் பருவத்திலிருந்தே எனது வாழ்க்கைப் பின்னணி என்பது பல்கலாச்சார-பல்மத-பல்சாதியச் சூழலால் ஆட்கொள்ளப்பட்டிருந்தது. எனது தந்தை கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர். எனது தாய் ஒரு பஞ்சாலைத் தொழிலாளி. எனது தாய்தான் எமது குடும்பத்தின் ஆதாரம். ஒரு குடும்பமாக நாங்கள் தெருவுக்கு வராமல் இருந்ததற்கு அவரது கடுமையான உழைப்பே ஆதாரம். அவரது உழைப்பில்தான் எங்களுக்கென எமது வளர்ந்த பருவத்தில் வாழ்வதெற்கென ஒரு சொந்த வீடு அமைந்தது. எனது தந்தை குழந்தைகளாக எங்களுக்குத் தீபாவளிக்கு புதுத்துணி எடுத்துத் தந்தது ஞாபகம் இருக்கிற அளவு, அவர் வெளியூர் சென்று திரும்பவரும்போது கொண்டுவரும் புத்தகங்கள் எனக்கு ஞாபகம் இருக்கிறது. நாங்கள் மூன்று சகோதரர்கள், இரு சகோதரியர். ஓரு சகோதரி குழந்தைப் பருவத்திலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். மிக எளிமையான வாழ்வு. வறுமை, பட்டிணி, அன்றாட வாழ்வுப் போராட்டம் இவற்றுக்கிடையிலும் பாசமும் அன்பும் கொண்டு எம்மை எமது பெற்றோர் வளர்த்தனர்.

தனது 83 வது வயதில் மரணமுற்ற எனது தந்தை உணர்ச்சிவசமான மனிதர். சமூகக் கொடுமைகள் மீதான அதிகமான தார்மீகக் கோபம் அவரது இயல்பாக இருந்தது. அவரது தலைமுறையைச் சார்ந்த பொதுவுடமை இலட்சியவாதிகள் இன்று அருகிவிட்ட உயிரினங்களாகிவிட்டவர்கள். குடும்பத்தில் கல்லூரிப் படிப்புப் படித்தது நான் ஒருவன்தான். கம்யூனிஸ்ட் கட்சி முழு நேர ஊழியராக, வருமான நிரந்தரமற்ற எனது தந்தையால் எனது இரு மூத்த சகோதரர்களதும் படிப்பை பள்ளிக் கல்விக்கு அப்பால் நகர்த்த முடியவில்லை. எனது இரு சகோதரர்களும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் ஆனார்கள். அவர்களால்தான் நான் படிக்க முடிந்தது. என்னைத் தவிர வீட்டில் அனைவரும் அதிகாலை 5 மணிக்கு பஞ்சாலைத் தொழிலுக்குப் புறப்படுபவர்கள் ஆனதால் எனது சகோதரி அவர்களுக்குச் சமைத்துக் கொடுக்கவென பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டார். அமையப்போகும் கம்யூனிச சமுதாயம் சமூகத்துக்கும் எமக்கும் சேர்த்து சுபிட்சத்தையும் விடுதலையையும் கொண்டுவரும் என்கிற நம்பிக்கையில் எனது தந்தை ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கடப்பாடு கொண்ட கம்யூனிஸ்ட்டுகளான கே.பாலதண்டாயுதம், ப.விருத்தகிரி போன்றவர்களை, கலைஞர்களான இளையராஜா, அறந்தை நாராணயணன் போன்றவர்களை, மிகப் பெரும் படிப்பாளிகளான எஸ்என்.நாகராசன், எல்.ஜி.கீதானந்தன் போன்றவர்களை அருகிருந்து பார்க்கிற வாய்ப்பு எனது வளர்பருத்திலேயே எனக்கு வாய்த்தது. எனது தந்தையே எனது முதல் ஆதர்ஷம்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழவிடுதலைப் போராளிகள் தமிழகம் வந்தபோது இயல்பாகவே என்போன்ற இடதுசாரிப் பின்புலம் கொண்ட இளைஞர்கள் ஈழவிடுதலையின்பால் ஈரக்கப்பட்டார்கள். வானம்பாடிக் கவிஞர் புவியரசுவின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘தமிழர்கள் ஆயுதம் ஏந்தி விட்டார்கள், தமிழர்கள் ஆயுதம் ஏந்தி விட்டார்கள், தமிழர்கள் ஆயுதம் ஏந்தி விட்டார்கள்’ (இப்படித்தான் அதனை அவர் மூன்று முறை திருப்பித் திருப்பிச் சொல்வார்) என்பது எமக்கெல்லாம் சிலிர்ப்பூட்டக் கூடிய விஷயமாக இருந்தது. நான் மட்டுமல்ல எனது தலைமுறை இளைஞர்கள் அனைவரும் கட்சி பேதமற்று ஈழவிடுதலையின்பால் ஈர்க்கப்பட்டோம். ஈழவிடுதலையோடுதான் தமிழகத்திற்கு சே குவேரா, ஜெனரல் கியாப் போன்றவர்கள் அறிமுகமானார்கள். ஆயுதவிடுதலைப் போராட்டம் என்பது புரட்சிகரப் போராட்டத்தின் உச்சபட்ட வடிவம் அல்லவா? தமிழன் என்கிற இனம் சார்ந்த அடையாளத்திற்கும் முதலாக உலகின் ஒடுக்கப்பட்ட மக்களது போராட்டத்தின் பகுதியாகவே நான் ஈழ விடுதலைப் போராட்டத்தினைப் பார்த்தேன். அன்றும் இன்றும் இதுவே எனது நிலைபாடு.

தமிழன் என்பதற்கு இன்று நிறைய வரையறைகள் முன்வைக்கப்படுகின்றன. இப்படியான வரையறைகளின்படி தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பிறிதொருவரை தமிழன் இல்லை என்று சொல்லிவிட முடியும். வை.கோபாலசாமி ஆதாரத்தில் தெலுங்கு மொழி பேசுபவர். நான் வாழ்ந்த கோவை மண்ணிலும் கணிசமானவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள். நானும் இந்த வேரிலிருந்து வந்தவன்தான். தமிழகத்தில் இன்று நாற்பது இலட்சம் மக்கள் ஆதாரத்தில் தெலுங்கு மொழி பேசுபவர்கள். இவர்களுக்கு தெலுங்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. வீட்டில் மட்டும் நெருங்கிய உறவுகள், உறவினர்க்கிடையில் தெலுங்கு பேசிக் கொள்வார்கள். எனது அடுத்த தலைமுறையினர் அநேகமாக தெலுங்கைப் பேசுவது கூட இல்லை. எனது துணைவியாருக்கு தெலுங்கு பேச மட்டுமே தெரியும். என்னால் ஆற்றொழுக்காகத் தெலுங்கு பேசமுடியாது. மேற்கில் வாழும் எனது ஏழு வயது மகளுக்கும் நான்கு வயது மகனுக்கும் தெலுங்கு தெரியாது. நான் கற்பிக்கவும் முயற்சி செய்யவில்லை. தமிழ் கற்பிக்கவே முயற்சி செய்கிறேன். கல்வி, வாசிப்பு, எழுதுதல், வாழும் சூழல், சிந்தனை, பண்பாடு அனைத்திலும் தமிழகத்தில் வாழும் ஆதாரமான தெலுங்குமொழி பேசுபவர்கள் தமிழர்கள்தான். தமிழ் வாழ்வுதான் அவர்களது வாழ்வு. தமிழகத்தில் வாழும் தெலுங்குமொழி பேசுவோர் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்குமொழி மண்ணோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள்தான் என்றாலும், இன்றைய நிலையில் ஆந்திராவுக்கும் தமிழகத்தில் வாழும் தெலுங்குமொழி பேசுகிற மக்களுக்கும் எந்தவிதமான ஒட்டுமில்லை உறவுமில்லை. தமிழை பூர்வீக மொழியாகக் கொண்டிராத வை.கோபாலசாமி, கி.ராஜநாராயணன், ஈ.வே.ரா.பெரியார், சுப்ரபாரதி மணியன், விட்டல்ராவ் போன்றவர்களது மரபில் வந்த தமிழன் நான். ஓருவர் வாழும் சூழலும் அவன் சிந்திக்கும் மொழியும்தான் அவனது அடையாளம். தமிழ் எனது இருத்தலுடனும் சிந்தனையோடும் உடலோடும் கலந்தது. எனக்கு மிக அத்யந்தமான தமிழன் எனும் இந்த உணர்வு என்பது, ஈழப் போராட்டத்தின் பாலான எனது ஈடுபாடு என்பது, ஈழ தேசியத்தை சோசலிச சமூகம்நோக்கி நகர்த்தும் எனும் அந்த மனிதவிமோசனம் சார்ந்த நம்பிக்கையில் இருந்தே தோன்றுகிறது.

ஒரு மார்க்சிய விமர்சகர், சீரிய இலக்கிய ஆய்வாளர், சினிமா விமர்சகர், உலக அரசியல் ஆய்வாளர் என பல பரிமாணங்களையும் உலகங்களையும் உங்களது எழுத்தில் தரிசிக்கலாம். நீங்கள் எழுத்து உலகத்து வர காரணமாக இருந்தவை என்ன? உங்களது ஆரம்பம் பற்றி கூறுங்கள்.

எழுத்தாளன், கவிஞன், நாவலாசிரியன், சிறுகதையாசிரியன், விமர்சகன் என்பதெல்லாம் மிகக் குறுகிய அடையாளங்கள். இன்னும் ஒரு மார்க்சியர் இவை எதன் ஒன்றினுள்ளும் தங்கிவிடுவதில்லை. கார்ல் மார்க்ஸ் காதல் கவிதைகள் எழுதியவர். நாவல் எழுதியவர். மிகப்பெரும் இலக்கிய வாசகர். அவரது எழுத்துக்களில் அவர் மேற்கோள் காட்டும் உலக இலக்கியப் படைப்புக்கள் பற்றி மட்டுமே ஒரு விரிவான ஆய்வு நூல் வந்திருக்கிறது. இலண்டன் வெர்சோ பதிப்பகம் அதனைப் பதிப்பித்திருக்கிறது. மார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரான்சிஸ் வீன் மார்க்சின் மூலதனத்தை இலக்கியப் பிரதியாகப் பார்த்து ஒரு முழுநூலை எழுதியிருக்கிறார். லெனின் இலக்கியம் பற்றி எழுதியவை தொகுக்கப்பட்டிருக்கிறது. கே. பாலதண்டாயுதம் இலக்கியம் பற்றி எழுதியிருக்கிறார். கலாச்சாரம் குறித்து மிகவிரிவாக எழுதியவர் அந்தோனியோ கிராம்ஸி.

கலை, இலக்கியம் உலகை மாற்றுவதில்லை. அது உலகு குறித்த ஒரு தரிசனத்தைத் தருகிறது. மனிதர்களைப் புரிந்துகொள்ள, நேசிக்க இலக்கியம் கற்றுத் தருகிறது. அரசியல் உலகை மாற்றுகிறது. கலையும் இலக்கியமும் தம்மளவில் ஒரு கற்பனாபூர்வமான, சாத்தியமான மாற்று உலகங்களைப் படைக்கிறது. அவ்வகையில் இலக்கியம் என்பதும் ஒரு கருத்தியல் நடவடிக்கைதான். தமிழகத்தில் சீரிய மார்க்சிய சிந்தனையாளர்களான எஸ்.வி.ராஜதுரை, ஞானி போன்றவர்கள் ஆரம்பநாட்களில் படைப்பிலக்கியத்தில் ஈடுபாடு செலுத்தியிருக்கிறார்கள். ராஜதுரை மனோ என்னும் பெயரில் சிறுகதை எழுதியிருக்கிறார். ஞானி கல்லிகை என கவிதைக் குறுங்காவியத்தைப் படைத்திருக்கிறார். எஸ்.என். நாகராசன் பழந்தமிழ் இலக்கிய வாசிப்புக் கொண்டவர். ஆர்.கே.கண்ணன் அதிகம் எழுதாத, இசைநுட்பங்கள் தெரிந்த மார்க்சியர். இவர்களது எழுத்துத் தேர்வுகளுக்கு அவரவர்களுக்கு நிச்சயம் சமூகத்தேவைகள் இருந்திருக்கின்றன. இந்த அளவில் இவர்களை கவிஞர்கள், சிறுகதையாசிரியர்கள், விமர்சகர்கள் என வகைப்படுத்த முடியாது. முழுநேரத்தையும் இலக்கியத்திற்கென அர்ப்பணிக்க ஒரு மார்க்சியரால் இயலாது.

யோசித்துப் பார்க்கும்போது ஒரு மார்க்சியனுக்கு இருக்கிற பல்துறை ஈடுபாடு, பரந்த வாசிப்பு, பல்துறை ஆற்றல் பிற துறைகளில் ஈடுபடுபவர்களுக்கு இல்லை. இன்னும் மார்க்சியர்கள் கலை இலக்கியம் மட்டுமில்லை, அனைத்துத்துறைகள் சார்ந்தும் உருவாக்கிய தாக்கம் போல பிற தனித்த துறைகள் சார்ந்து ஈடுபடுபவர்கள் உருவாக்கவில்லை. 2000 ஆண்டுகளில் தோன்றிய தனியொரு சிந்தனையாளர் என கார்ல் மார்க்ஸ் போற்றப்படுவது இதனால்தான்.

தோழர். தியாகுவை எடுத்துக் கொள்ளுங்கள். தனது வாழ்வை உக்கிரமாக வாழ்ந்தவர். அவரது சுவருக்குள் சித்திரங்கள் புனைவுத்தன்மையும் நாடகீயமும் கொண்டிருந்த சுயவாழ்க்கை அனுபவங்கள். அவர் பிற்பாடு அத்தகைய நூல்களை எழுதவில்லை. அவர் பல்லாண்டுகள் உழைப்பில் மூலதனத்தை மொழிபெயர்த்தார். அவரிடம் திருக்குறளைப் பற்றியும் பாரதிராஜாவின் திரைப்படங்களைப் பற்றியும் பேசிப்பாருங்கள். மிகச் சிறந்த இலக்கியத்தோய்வும் திரை ரசனையும் கொண்டவர் அவர். அவர் இது குறித்து ஏதும் எழுதியதில்லை. அவரது முன்னுரிமைகளும் தேர்வுகளும் வேறு. மார்க்சியர்கள் இப்படித்தான். கட்சிப் பிரசுரத்திற்குக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த, பிழைதிருத்துனராகச் செயலாற்றிய ஜோஸே ஸரமாகோ தனது பிற்காலத்தில்தான் புனைவிலக்கியத்தில் ஈடுபாடு காட்டத்துவங்கினார். இலக்கியத்திற்கான நோபல் பரிசையும் அவர் பெற்றார். கம்யூனிச இயக்கம்தான் ஜெயகாந்தனைத் தோற்றுவித்தது. எனது கம்யூனிச ஈடுபாட்டின் பகுதியாகத்தான் எனது அனைத்துவிதமான அக்கறைகளும் பிறக்கிறது. இலக்கியம், திரைப்படம், அரசியல், புகைப்படம், ஓவியம் என அனைத்திலும் சாதனை செய்த படைப்பாளிகளை எடுத்துப் பாருங்கள். அதில் முன்வரிசையில் மார்க்சியத்தினால் ஆதர்ஷம் பெற்ற படைப்பாளிகளை நீங்கள் காண்பீர்கள். ஓரு மார்க்சீயரின் முன்னுரிமைகளை அவர் வாழ நேர்ந்த காலத்தின் சூழலே தீர்மானிக்கிறது.

கோவை நகரம் கவிஞர்களின் நகரம். வானம்பாடி இயக்கம் அங்குதான் தோன்றியது. அவர்கள் கவிதையை சமூக இயக்கமாக எடுத்துச் சென்றார்கள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இலக்கிய இதழான தாமரையில் இருந்து வந்த படைப்பாளிகள்தான் பூமணி, பா.செயப்பிரகாசம், வண்ணநிலவன், பிரபஞ்சன், பொன்னீலன் போன்றவர்கள். நான் முதலில் நிறையக் கவிதைகள் எழுதினேன். தோழர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் பாடுவதற்கென பாடல்கள் எழுதினேன். நிறையக் கவிதைகள் மொழிபெயர்ப்புக்கள் செய்தேன். வேறு வேறு காரணங்களால் இவை அனைத்தையும் என்னால் தொகுக்க முடியாது போனது. பிற்பாடு கோட்பாடு, திரைப்படம் குறித்து குறுநூல்கள் கொண்டு வந்தேன். ஈழவிடுதலைப் போராட்டமும் அதனைத் தொடர்ந்த காலமும் நிறைய வாசிப்பையும் புரிதலையும் கோரிய காலம். எனது முன்னுரிமைகள் இப்போது அரசியல் மொழிபெயர்ப்புகள் சார்ந்ததாக ஆனது. என்றாலும் அவ்வப்போது தமிழ் சினிமா வரலாற்றாசிரியரான தோழர். அறந்தை நாராணயணன் நடத்திவந்த கல்பனா இதழில் திரைப்படக் கட்டுரைகள் எழுதினேன். தொண்ணூறுகள் வரை நான் எழுதிய பல கட்டுரைகள், செய்த மொழிபெயர்ப்புக்கள், எனது அசலான கவிதைகள் என்பது தொகுக்கமுடியாமலே போனது.

புலப்பெயர்வின் பின்தான் எனது எழுத்துக்கள் தொகுக்கப்படலாயின. தாமரைச் செல்வி பதிப்பகம் எனது திரைப்பட எழுத்துக்களையும் கவிதை மொழிபெயர்ப்புக்களையும் நூல்களாக்கின. கவிஞர் அருந்ததி, தமிழ் தகவல் நடுவம் வரதகுமார், உயிர்நிழல் லக்சுமி, கலைச்செல்வன் போன்றோர் இதன் பின்னணியில் இருந்தனர். புகலிடத்தில் வெளியான இலக்கிய அரசியல் சஞ்சிகைகள் அனைத்திலும் நான் எழுதினேன். மனுஷ்யபுத்திரனின் உயிர்மை இதழின் வழி என்னால் பரவலான வாசகர்களைச் சென்றடைய முடிந்தது. உயிர்மை மட்டும் என்னுடைய 13 நூல்களைப் பதிப்பித்தது.

எனது தேர்வுகளும் முன்னுரிமைகளும் குறித்த ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு நாவலுக்கான முன்வரைவை எழுதினேன். எனது பாலுறவுத் தேடல்களும் அரசியல் பிரக்ஞையும் முகிழ்ச்சி பெற்ற எழுபதுகள் குறித்தது அந்த நாவல். இந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது அதனது அரசியல் பின்னணி. 2009 மே மாதம் நிகழ்ந்த பேரழிவு என்பது எனது தலைமுறையின் எல்லாத் தமிழர்களும் போலவே தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. உலக விடுதலை இயக்க அனுபவங்களுடன் ஈழவிடுதலைப் போரட்டத்தை முன்வைத்து வரலாற்றை உற்று நோக்கத் துவங்கினேன். கடந்த மூன்று ஆண்டுகளில் இது குறித்து மட்டும் 60 கட்டுரைகள் எழுதினேன். இதில் 48 கட்டுரைகளைத் தொகுத்து அடையாளம் பதிப்பகம், ஈழம் : எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம் என 650 பக்கங்களில் நூலாக வெளிக்கொண்டுவருகிறது. 2011 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட மிகப்பெரும் அரசியல் எழுச்சியான அரபுப் புரட்சியை மார்க்சியர்களால் புரிந்துகொள்ளவே முடியவில்லை எனும் எண்ணம் எனக்கு இருந்தது. அது குறித்து நான் எழுதிய 25 கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுத்த 18 கட்டுரைகள் அரபுப் புரட்சி எனும் தலைப்பில் அடையாளம் பதிப்பகத்திலிருந்து நூலாக வெளியாகிறது. இடையில் 1000 பக்கங்களில் இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளிலும் வெளியான அரசியல் திரைப்படங்கள் குறித்த நூலை முழுமை செய்திருக்கிறேன். எவ்ஜனியா மரியா பிரேவோ மற்றும் கிஸ்வர் நஹீத் எனும் சிலி மற்றும் பாகிஸ்தான் பெண் கவிஞர்களின் கவிதைகளை எனது நண்பன் உதயகுமாருடன் சேர்ந்து இறுதிப்படுத்தியிருக்கிறேன். ஒரே சமயத்தில் குறைந்த பட்சம் ஏழெட்டு நூல்களை வாசிக்கிறேன். இரண்டு மூன்று திரைப்படங்களைப் பார்க்கிறேன். நாவல், வரலாறு, கோட்பாடு, சமகால அரசியல் என அனைத்தும் சார்ந்ததாக, இரு மொழிகளிலும் நான் தேர்ந்து செயல்படுகிறேன். ஓராண்டாக குளோபல் தமிழ் நியூஸ் இயக்குனர் நண்பர் குருபரனுடன் சேர்ந்து செயல்படுவது என்பது எனது எழுத்து வாழ்வின் வசந்தகாலம் என்பேன்.

சமூக மனிதனாக உங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம். உங்களது தனிப்பட்ட, குடும்ப வாழ்வு குறித்துச் சொல்லுங்கள்.

நான் எப்போதும் தனிமையை மிகவும் விரும்புபவன். அந்தரங்க வாழ்வை எப்போதும் பேண விரும்புபவன். தமது தனிப்பட்ட வாழ்வு குறித்த கேள்விகளுக்கு மிஷேல் பூக்கோ சொன்ன பதில் எனக்கும் பொருந்தும். எழுத்துக்கு அப்பால் எனது தனிப்பட்ட வாழ்வுக்கு எதுவும் முக்கியத்துவமிருப்பதாக நான் கருதவில்லை. எனது தனிப்பட்ட வாழ்வு என்பது கூட பிறரது சந்தோஷங்களுடனும் வலிகளுடனும் தோல்விகளுடனும்தான் பிணைக்கப்பட்டிருக்கிறது. எந்த அளவில் என்னோடு சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புபடுத்தாமல் இதனைப் பற்றிப் பேசமுடியும் என எனக்குத் தெரியவில்லை. இங்கு எனது எல்லைகள் என்ன, எனது சுதந்திரம் என்ன என்கிற கேள்விகளும் எனக்கு இருக்கிறது. சுருக்கமாகச் சொல்கிறேன். கணக்காளரான எனது துணைவியுடன் நான் வாழ்ந்து வருகிறேன். எனக்கு இரண்டு குழந்தைகள். இதுவே எனது தனிப்பட்ட வாழ்வு குறித்து நான் சொல்ல விரும்புவது.

முள்ளிவாய்க்கால் மரணங்கள்.. இதனைத் தொடர்ந்து வரும் சம்பவங்கள். உங்கள் பார்வை என்ன? இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்குமா? நாடு கடந்த தமிழீழம் போன்ற முயற்சிகள் சாத்தியாமானவையா?

முள்ளிவாய்க்கால் மரணங்கள் மட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு அனுபவங்கள் நாம் வாழும் உலக நிலைமையில் தனித்த நிகழ்வுகள் அல்ல. குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலான் இம்ராலியில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பெரு சைனிங்பாத் இயக்கத் தலைவர் அபிமல் குஸ்மான் தனிமைச் சிறையில் இருக்கிறார். கொலம்பிய பார்க் விடுதலை இயக்கத்தலைவர் அல்பான்சோ கெனோ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்திய நக்ஸலைட் இயக்கத் தலைவர் கிஸன்ஜி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் ஆயுதப் போராட்டங்களை வழிநடத்திய தலைவர்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதிலும் சிலர் கொல்லப்பட்டதிலும் இவர்களது தந்திரோபாயத் தவறுகள் மட்டும் இல்லை. மாறிவரும் உலகத்தில் இவர்களது தந்திரோபாயத்தின் செயல் எல்லைகள் வளர்ந்து செல்வது சாத்தியம்தானா என்ற கேள்வியோடு சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. ஈழவிடுதலையின் எதிர்கால திசைவழி குறித்து நிதானமாக சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. இதுவரைத்திய உலக விடுதலைப் போராட்ட அனுபவங்கள், 1989 மற்றும் 2001 என மாற்றப்பட்ட உலக அரசியல் வரைபடம் என இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈழவிடுதலைப் போராட்டத்தை நாம் அணுகவேண்டும். துரதிருஷ்டவசமாக நான் கடவுள், மற்றவன் சாத்தான் என நிலைநாட்டுவதும், பகடிப் பின்னூட்டங்களும்தான் இங்கு விமர்சன மரபாக இருக்கிறது. சுயவிமர்சனம் எனும் கருத்தாக்கமே இங்கு கொச்சையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

அரசியல் என்பது இயற்கை விஞ்ஞானம்போன்று சூத்திரங்களால் ஆனது அல்ல. இது சாத்தியங்களின் கலை. தமிழர்களுக்கு எது உரிமை, எது நியாயமான தீர்வு என்பதற்கே கூட தமிழ்சமூகத்தின் உள்ளேயே ஜனநாயக மரபு வளர்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கிறது. தனிநபர்களால் தலைமை தாங்கப்படுகிற ஆயுத இயக்க அரசியலாயினும் சரி, ஆயுதமற்ற கட்சி அரசியலாயினும் சரி, கூட்டு முடிவு, வெகுமக்களினுடனான ஊடாட்டம் என்பது அல்லாமல் ஒரு சமூகம் ஜனநாயகப்படுதல் என்பது முடியாது. இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு மக்கள் கூட்டமாக ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள், ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு நூறு நூறு வரலாற்றுச் சான்றுகள் குவிந்து கிடக்கின்றன. இதிலிருந்து மீட்சி கிடைக்குமா என சந்தேகம் எழுப்புவதனைவிட, மீட்சி கிடைப்பதற்கு என்ன வழியைத் தேர்வது என்பதுதான் இன்று முக்கியம்.

வேறுபட்ட பார்வைகள் இருப்பினும் இன்று ஈழநிலத்தில் யதார்த்த அரசியல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயல்பாடுகளில்தான் தங்கியிருக்கிறது. புகலிடத்தில் சாத்தியமான அரசியல் மனித உரிமை அரசியல்தான். இது அழுத்த அரசியலாக மட்டும்தான் இருக்க முடியும். நாடு கடந்த தமிழீழ அரசு அதனைத்தான் இங்கு செய்ய முடியும். அதனை அவர்கள் செய்கிறார்கள். ஓரு ஜனநாயக அரசியலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் ஒரு முனை எனில், அதனது மறுமுனைதான் நாடு கடந்த தமிழீழ அரசியல் எனவே நான் கருதுகிறேன். உண்மையில் தமிழர்கள் இன்று தேடவேண்டிய அரசியல், பிறரது அரசியல் உரிமைகளை அங்கீகரித்துக் கொண்டு, சதா பிறரை விமர்சித்துக் கொண்டிருக்காமல், அவரவர் அரசியலை முழுமையாகக் கண்டடைய முயற்சிப்பதுதான். முள்ளிவாய்க்காலின் பின்னான கால அரசியல் பிறரைக் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் மட்டும் முழுமைபெற்றுவிட முடியாது.

இந்தியா – இலங்கைப் பிரச்சினையில் என்ன பங்கை முறையாக செய்துள்ளது? தவறாக செய்துள்ளது? என்ன செய்யும் என நினைக்கின்றீர்கள்?

எந்தப் பிரச்சினையிலும் எந்த வெளிச் சக்திகளும் முறையானது முறையற்றது எனும் அடிப்படையில் ஈடுபடுவது இல்லை. அமெரிக்கா, சீனா, ரஸ்யா, இந்தியா, மேற்கத்திய நாடுகள், கியூபா என அனைத்து நாடுகளுக்கும் இது பொருந்தும். தத்தமது நாடுகளின் புவியியல், பிராந்திய, பொருளியல் நலன்களின் அடிப்படையில்தான் உலகின் ‘பிற’ பிரச்சினைகளை எந்த நாடும் அணுகும். இலங்கையைப் பொறுத்து சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை இருக்கிறது என்பதனை இந்தியா அறிந்திருக்கிறது. ஈழத் தமிழர்களோடு உறவுகொண்ட தமிழகத் தமிழர்கள், தமிழகத்திற்கு வரும் ஈழ அகதிமக்களின் பெருக்கம் என்பது அதனது பிரச்சினை. இலங்கை நிலைமையில் தனது அதிகார நலன்களை இலங்கையில் வைத்திருக்க தமிழர்களைச் சார்ந்திருப்பதா அல்லது சிங்களவரைச் சார்ந்திருப்பதா எனும் தேர்வு இந்தியாவின்முன் இருக்கிறது. இந்தத் தேர்வுகளையும் இந்தியாவின் பிராந்திய அரசியல் பொருளியல் நலன்கள் எனும் அடிப்படையில்தான் அது மேற்கொள்ளும்.

பிற எந்த நாடுகளின் தலையீடு அல்லது ஈடுபாடு எனப் பார்க்கும்போது இந்தியாவின் அரசியல் சக்தியை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் திருப்புக்கூடிய வாய்ப்பும் சாத்தியமும் இருக்கிறது. அது தமிழகத் தமிழர்களின் வாக்கு வங்கியின் சக்தி. இந்த அழுத்த அரசியலை தமிழகத் தமிழர்கள் ஒருங்கிணைந்து செய்கிறபோது ஈழத்தமிழர்களுக்குச் சாதகமான மாறுதல்கள் இலங்கைத் தீவில் உருவாகச் சாத்தியம் உண்டு. அமெரிக்கா முன்னிலை வகித்து ஐநா சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது இலங்கை அரசைப் பொறுத்து ஒரு மீளமுடியாத பொறி. இலங்கை அரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது எனத் தமிழர்கள் அறிந்து கொண்டிருந்ததனை இப்போது முழு உலகமும் அறிந்து கொண்டிருக்கிறது. இலங்கை அரசு உலக நாடுகளிடம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு இதுவே காரணம். விடுதலையை அவாவி நிற்கிற மக்கள் உயிரூக்கமுள்ள வெகுமக்கள் அரசியலைக் கொண்டிருக்க வேண்டும். வெளிச்சக்திகளை எவ்வாறு கையாள்வது என்பதனைத் தெரிந்திருக்க வேண்டும். இந்த இரு செயல்பாடுகளும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போது இந்தியா என்ன செய்யும் அல்லது பெற்றுத்தரும் என்பது முதன்மையான கேள்வியாக இருக்காது.

உலகில் மார்க்சியம் தேய்ந்து வருகின்றது. பல மார்க்சிய நாடுகள் முதலாளித்துவ நாடுகளாக மாறியுள்ளன. மார்க்சியம் மீண்டும் தழைப்பதற்கான சாத்தியக் கூறுகள் எவ்வாறு உள்ளன? சற்று விரிவாக கூறுங்கள்.

சில குறிப்பிட்ட விஷயங்களை அங்கீகரித்துக் கொண்டுதான் நாம் இன்று மார்க்சீயம் பற்றிப் பேசமுடியும் என நினைக்கிறேன். லெனின் தோற்றுவித்த சோவியத் யூனியன் இன்று இல்லை. அதனது அரசியல்-பொருளியல் மாதிரிகளாக கிழக்கு ஐரோப்பாவில் நிலவிய சோசலிச நாடுகள் இன்று இல்லை. மாவோ கனவு கண்ட சீனம் அல்ல இன்று மூலதனத்தை ஆப்ரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் வட்டிக்கு ஏற்றுமதி செய்யும் சீனா. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம் என்ற லெனினியக் கோட்பாட்டையும், நாடுவிட்டு நாடுகடக்கும் மூலதனம் பற்றிய ரோஸா லக்சம்பர்க்கின் பார்வையையும் இன்று நாம் சீனாவுக்கும் பொருத்திப் பார்க்கவேண்டும். ‘சோசலிசம் முதலாளித்துவம் என இரண்டிலும் இருக்கிற நல்லதை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்’ என்கிறார் வியட்நாமிய மக்கள் யுத்தக் கோட்பாட்டின் பிதாமகர் ஜெனரல் கியாப். தனியார் தொழில், சொத்து மற்றும் நிலம் வாங்குதல் என்பதனை கியூபக் கம்யூனிஸ்ட் கட்சிக் காங்கிரஸ் அங்கீகரித்திருக்கிறது. ‘இலத்தீனமெரிக்காவில் இனி ஆயுதப் போராட்டத்திற்கு இடமில்லை, அது கடந்த காலம்’ என்கிறார் கொலம்பிய ஜனாதிபதி சேவாஸ். கியூபப் புரட்சியின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ அதனை மௌனமாக அங்கீகரிக்கிறார். நாம் வாழும் உலகு அமெரிக்கா-சோவியத் யூனியன் என இருந்த இரட்டைத்துருவ உலகு அல்ல. அமெரிக்கா மட்டுமே அனைத்தும் என ஆகின ஒற்றைத் துருவ உலகும் அல்ல. அமெரிக்கா-ரஸ்யா-சீனா-ஐரோப்பா-இந்தியா எனும் சக்திகளால் பங்குபோடப்படும் பல்துருவ உலகு இது.

இனப் பிரச்சினை, மனித உரிமை, மாற்றுக் கருத்து, பெண்ணுரிமை, விளிம்புநிலையாளர்கள் உரிமை, சூழலியல் அழிவு போன்றவை குறித்து மார்க்சியம் தன்னை அகலித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இன்று தொடரக் கூடிய இலட்சிய சோசலிச சமூகம் என்பதற்கான எடுத்துக் காட்டு என எதுவும் இல்லை. கூட்டுத்தலைமையை அழித்த ஸ்டாலின் மார்க்சிய மரபில் இருந்திருக்கிறார். தேசியக் கலாச்சாரத்தின் பெயரில் இனப்படுகொலை புரிந்த போல்பாட் இருந்திருக்கிறார். மாவோவின் கலாச்சாரப் புரட்சிக் கொடுமைகள் இருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சி என்பது சோசலிச நாடுகளில் மூன்றாவது வர்க்கமாகச் சீரழிந்த வரலாறு இருக்கிறது. இதனை சோசலிசம் எனும் இலட்சியத்தின் அழிவாகப் பார்க்க முடியாது, இவை அனைத்தையும் வேறுவேறு நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட சோசலிச மாதிரிகளின் சோதனை முயற்சியாகவே பார்க்க வேண்டும் எனும் பார்வையை இன்று மார்க்சீயத்தை மறுகட்டமைப்பு செய்யும் மார்க்சீயர்கள் பேசுகிறார்கள். இந்த நிலைபாட்டை நாம் ஒப்புக் கொண்டாலும், மார்க்சியம் முன்வைத்த சுரண்டலற்ற, அந்நியமாதல் நீங்கிய, அரசு உதிர்தலை நோக்கிய சமூகத்திற்கு, இதுவரை நடந்தவை பெரும்பாலானவை தீங்கு விளைவித்தன எனில் நாம் அவைகளைக் கறாராக நிராகரித்துவிட்டுத்தான் மேலே செல்ல வேண்டும்.

இதற்கான கோட்பாடுகளை மறுவரையறை செய்வதற்கான முயற்சிகளை கிழக்கு ஐரோப்பிய நாடுகளினதும், மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும், இலத்தீனமெரிக்க நாடுகளினதும் மார்க்சியர்கள் தொடர்ந்து முயன்று வருகிறார்கள். கடந்த கால் நூற்றாண்டில் ஆயிரக் கணக்கிலான நூல்கள் இது குறித்து எழுதப்பட்டுள்ளன. நியூலெப்ட் ரிவியூ, ரேடிகல் பிலாசபி, ரீதிங்கிங் மார்க்சிசம், ஹிஸ்ட்டாரிகல் மெட்டிரியலிசம் போன்ற அச்சிதழ்கள் இவ்வாறான கட்டுரைகளைத் தாங்கி வருகின்றன. ஆப்டர் பால், மார்க்சிஸ்ட் ரிவியூ ஆப் புக்ஸ், டிரான்ஸ் நேசனல் இன்ஸ்டிட்யூட், கலச்சர் அன்ட் ஹிஸ்ட்டரி போன்ற இணைய மார்க்சிய இதழ்கள் இதற்கெனவே நடத்தப்படுகின்றன. ஹிஸ்ட்டாரிகல் மெட்டிரியலிசம் இதழ் அதிஅற்புதமான நூல் தொகுதிகளைக் கொண்டுவந்திருக்கிறது. இதில் மிகமுக்கியமான நூல் எ கம்பேனியன் டு கன்டம்பரரி மார்க்சிசம் எனும் நூலாகும். ஜிஸாக், தாரிக் அலி, ஆன்டர்சன், அலைன் பதியு, கிரிகரி எலியட், சாம் சாயர்ஸ், அந்தோனியோ நெக்ரி, ரொனால்ட் மங்க், பிரெடரிக் ஜேம்ஸன்,ஜேம்ஸ் பெட்ராஸ் போன்றவர்கள் இந்தப் போக்கின் முக்கியமான கோட்பாட்டாளர்கள். இந்தக் கோட்பாட்டாளர்கள் குறித்த சில அறிமுகக் கட்டுரைகள் பாரிஸ் நண்பர் அசோக் யோகன் தொகுத்த அசையின் மூன்று இதழ்களில் வெளியாகியிருக்கின்றன.

அரபுப் புரட்சி, வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுங்கள் என்பதனை நாம் இடதுசாரிகளின் மறுவருகைக்கான புதியவெளி எனவே பார்க்க வேண்டும். சோசலிசம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது எனும்போது நாம் அதனை முதலாளித்துவத்தின் வெற்றி எனப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. முதலாளித்துவத்திற்கு மாற்று உலகம் சாத்தியம் என்பது இன்று இடதுசாரிகளின் ஒற்றுமை அரசியலாகப் பரிணமித்து வருகிறது. மார்க்சீயப் பகுப்பாய்வு என்பது ஒரு அறிவு வெளிச்சம். அது கடந்த காலத்தில் அனைத்து அறிவுத்துறைகளின் மீதும் மாபெரும் பாதிப்பைச் செலுத்தியிருக்கிறது. இன்றும் அது அவ்வாறாகவே பாதிப்புச் செலுத்தி வருகிறது. மார்க்சியம் இன்று நூறு நூறு பார்வைகளில் பயிலப்பட வேண்டும். நிராகரிக்க வேண்டிய கடந்த காலத்தைக் கறாராக நிராகரித்து, புதிய நிலைமைகளில் புதிய தேடல்களில் மார்க்சிய வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும். கருத்தியல் எனும் அளவில் உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மனிதர்களின் விடுதலைக் கருத்தியலாக, விமோசனத் தத்துவமாக இன்னும் மார்க்சியமே இருக்கிறது என்பதனை அறிவார்ந்து சிந்திக்கிற எவரும் மறுக்கவியலாது.

மார்க்சியம் ஒரு கடவுள் போன்ற மறைபொருள், அது சாத்தியமற்றது என கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

மார்க்சியத்திற்கும் மதங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டும் உலகளாவிய பார்வைகள். மனித வாழ்வின் அர்த்தம் குறித்து இரண்டும் பேசுகின்றன. இரண்டும் வேறு வேறு வாழ்க்கை முறைகள். மதங்கள் விண்ணில் சொர்க்கத்தைக் காட்டுகின்றன. மார்க்சியும் மண்ணில் படைக்க முயல்கிறது. இரண்டும் ஒரு வகையில் கனவு மயமான திட்டங்கள்தான். மதநிறுவனங்கள் மனித மேன்மைக்கு என்ன செய்தன எனப் பாருங்கள். மார்க்சியம் என்ன செய்தது எனப் பாருங்கள். தொழிலாளர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், சமூகநலத் திட்டங்கள், கல்வி,மருத்துவ நலம், சமூகப் பாதுகாப்பு இவை அனைத்தும் எந்த இயக்கத்தினது பெருபேறுகள் எனப் பாருங்கள். காலனியாதிக்கத்திலிருந்து ஆசிய-ஆப்ரிக்க-இலத்தீனமெரிக்க மக்கள் விடுதலை பெற்றதன் ஆதார ஊற்று எதுவென உரசிப் பாருங்கள். இவற்றை நிறுவனமயப்படுத்தி நிரந்தரப் படுத்துவதற்கான ஆதர்ஷம் எங்கிருந்து வந்தது எனப் பாருங்கள், அவை மதங்களிடமிருந்தல்ல மார்க்சியத்திடம் இருந்துதான் வந்தன. அதனது ஆதார இடம் அக்டோபர் புரட்சி என்பதனை நாம் காணமுடியும்.

மார்க்சியம் மதம் போலவே ஒரு கற்பனாவுலகை முன்வைக்கிறது. சுரண்டலற்ற, ஒடுக்குமுறையற்ற, கருணை சுரக்கிற, அன்புமயமான, கலைகள் செழிக்கிற, அந்நியமாதலற்ற, ஆண்டான் அடிமை உறவுகள் அற்ற ஒரு கனவுலகை அது முன்வைக்கிறது. அதனை அடைவதற்கு அது பிரார்த்தனையை, சடங்குகளை வழிமுறையாக வைப்பதில்லை. இரத்தமும் சதையுமான மனிதச் செயல்பாடுகளை முன்வைத்து அதற்கான ஸ்தாபனங்களை, அமைப்புக்களை அது உருவாக்குகிறது. கனவு காணுதல் என்பது மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட வரம். அதனால்தான் கனவு காணுங்கள் என்றார் லெனின். மார்க்சியர்கள் கனவுமயமானவர்கள்தான். அதனால்தான் உலகின் மகத்தான இலக்கியவாதிகள், ஓவியர்கள், திரைப்பட இயக்குனர்கள், கோட்பாட்டாளர்கள், விஞ்ஞானிகள் மார்க்சியத்தினால் ஆகர்ஷிக்கப்பட்டவர்களாக ஆனார்கள். சாத்தியமற்றது எனக் கனவு காண்பதை மறுப்பது அல்ல மார்க்சியம். சாத்தியமற்றதையும் சாத்தியமாக்கக் கனவு காண்பதுதான் தான் மார்க்சியம். புதிய கடவுளர்களை நாம் உருவாக்குவோம் என மார்க்சிம் கார்க்கி இதனால்தான் சொன்னான்.

அண்மைக் காலங்களில் எழுந்துள்ள அராபிய எழுச்சி என்பது தற்சமயம் இஸ்லாமிய எழுச்சியாக மாறிவருகின்றது என மேற்கத்திய பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. உங்கள் கருத்து என்ன? இதன் தொடர்ச்சியாக எழுந்த மக்கள் போராட்டங்கள் வட அமெரிக்க நகரங்கள் பலவற்றில் வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுங்கள், வாசிங்டனைக் கைப்பற்றுங்கள் என பங்குச் சந்தை போராட்டங்களாக மாறி சடுதியாக தேய்ந்து விட்டன. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இந்த மக்கள் போராட்டங்கள் வளர்ந்து வரும் நாடுகளில் ஏன் தோன்றவில்லை?

அரபுப் புரட்சி என்பது தத்தமது சமூகங்களை ஜனநாயகப்படுத்துவதற்காக எழுந்த எழுச்சி. அதனது கோரிக்கைகள் முடிவற்றவை. ஏகாதிபத்தியம் அதற்கு ஒரு பொருட்டில்லை. காலனியாதிக்கம் அதற்குப் பொருட்டில்லை. இவர்களால் தாங்கப்படும் அரபு அரசுகளை எதிர்த்து, முடிமன்னர்களை எதிர்த்து, சர்வாதிகாரிகளை எதிர்த்து தீர்மானமான போராட்டத்தினை அவர்கள் முன்னெடுத்தார்கள். இந்தப் போராட்டங்களில் எகிப்து, துனீசியா போன்ற நாடுகளில் இஸ்லாமியவாதிகள் முதலில் பங்கெடுக்கவில்லை. போராட்டங்களில் இருந்து விலகி நின்றார்கள். போராட்டம் வெகுஜனமயப்பட்டபோது அதனது பெறுபேறுகளை அவர்கள் ஸ்வீகரிக்க முயன்றார்கள். எகிப்தில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தை மதச்சார்பற்ற இடதுசாரிகளும் தாராளவாதிகளும் இளைஞர்களும் இன்றுவரையிலும் தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள். இஸ்லாமியவாதிகளான சகோதரத்துவ இஸ்லாம் இயக்கத்தவர்கள் எகிப்திய ராணுவத்துடன் சமரசம் செய்து கொண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். அரபுப் புரட்சியின் முதல் கட்டம் இப்போது முடிந்திருக்கிறது. இடதுசாரிகள்-தாராளவாதிகள்-இளைஞர்கள் ஒரு புறமும், ராணுவ இயந்திரமும் இஸ்லாமியவாதிகளும் சேர்ந்து பிறிதொரு புறமும் இருக்க இரண்டாம் கட்டப் போராட்டம் இந்த நாடுகளில் தொடர்ந்து நடக்கத்தான் போகிறது. எகிப்தில் அது ஏற்கனவே துவங்கிவிட்டது.

எகிப்தியப் பாராளுமன்றத்தில் ஒரு அவமானகரமான நடைமுறையைச் சட்டமாக்க விவாதிக்கப் போவதாக அல்ஜஜீரா தொலைக் காட்சியும் அல் அஹ்ரம் பத்திரிக்கையும் தெரிவித்திருக்கின்றன. மனைவி இறந்து ஆறுமணி நேரத்திற்குள் அந்த உடலுடன் பாலுறவுகொள்ள கணவனுக்கு உரிமை உண்டு என்பது விவாதிக்கவிருக்கும் சட்ட முன்வரையறை. ‘மனைவிக்கு விடைதரும் உடலுறவு’ என இதற்குப் பெயரிட்டிருக்கிறார்கள். பெண்ணின் பிணத்துடன் உறவு கொள்வதற்கு மதம்சார் புனிதத்தன்மையையும் சட்டமுறை அங்கீகரத்தையும் தர இவர்கள் விளைந்திருக்கிறார்கள். இடதுசாரிகளும், தாராளவாதிகளும், பெண்ணுரிமைவாதிகளும் பெண்களை அவமானப்படுத்தும் இந்த விவாதத்தை நிறுத்துங்கள் என அறைகூவல் விடுத்திருக்கிறார்கள். இடதுசாரிகளிடமிருந்தும் தாராளவாதிகளிமிருந்தும் இஸ்லாமியவாதிகள் அரபுப் புரட்சியைத் தற்காலிகமாகக் கடத்தியிருக்கிறார்கள் என்பது உண்மைதான். இது தற்காலிகமானது. அதற்கு எதிரான இடதுசாரிகளின் தாராளவாதிகளின் போராட்டம் ஏற்கனவே அங்கு துவங்கிவிட்டது என்பதும் உண்மை.

துனீஷியாவில் பவாசூசி தன்னை எரியூட்டிக் கொண்டதன் மூலம் எகிப்து தாஹிரர் சதுக்கத்தில் எழுந்த அரபு எழுச்சி பல்வேறு ஜனநாயகக் கோரிக்கைகளைக் கொண்டிருந்தது. சர்வாதிகாரிகளை அவர்கள் பதவி விலகக் கோரினார்கள். ராணுவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரக் கோரினார்கள். சிவில் சமூக நிர்வாகத்தை, பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை, மதநல்லிணக்கத்தை, பெண்ணுரிமையை அவர்கள் கோரினார்கள். சர்வாதிகாரிகளை அவர்கள் பதவியை விட்டு அகற்றினார்கள். பிற கோரிக்கைகளுக்கான அவர்களது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

போராட்ட வழிமுறை எனும் அளவில் அரபுப் புரட்சி ஸ்பெயினின் இன்டிக்னோக்களுக்கு, அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் கிளர்ச்சியாளர்களுக்கு மிகப்பெரும் ஆதர்ஷமாக அமைந்தது. வன்முறை தவிர்த்து, இடையறாத மக்கள்திரள் கொண்டு நகரின் சதுக்கங்களை நிரந்தரப் போராட்ட மையங்களாக அரபுப் புரட்சியாளர்கள் மாற்றினார்கள். நாட்கணக்கிலல்ல மாதக் கணக்கில் அவர்கள் இலட்சக் கணக்கில் ஒரே இடத்தில் திரண்டு போராட்டங்களை நடத்தினார்கள். இந்தப் போராட்ட முறை உலகெங்கிலும் தாக்கத்தை உருவாக்கியது. தாஹிரர் சதுக்கத்துக்கும் வால்ஸ்ட்ரீட் போராட்டத்திற்கும் ஒற்றுமைகளும் உண்டு. வேற்றுமைகளும் உண்டு. இரண்டு போராட்டங்களுக்கும் ஒன்றுபட்ட, திரட்டிக் கொள்ளப்பட்ட தலைமை என்பது இல்லை. இரண்டு போராட்டங்களும் நகரச் சதுக்கங்களை எதிர்ப்பு மையங்களாகக் கொண்டிருந்தன. இரண்டும் அமைதிவழிப் போராட்டங்கள். இவை அனைத்தும் ஒற்றுமைகள். தாஹிரர் சதுக்கப் போராட்டம் சர்வாதிகாரியை அகற்றுதல், பாராளுமன்ற பிரதிநிதித்துவ ஜனநாயகம் என இரண்டு கோரிக்கைகளைத் திட்டவட்டமாக முன்வைத்தது, அதற்காகப் போராடியது, அதில் முதலாவதைச் சாதித்தது. வால்ஸ்ட்ரீட் போராட்டம் திட்டவட்டமான கோரிக்கைகள், இலக்குகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. ஜிஸாக்கும், சோம்ஸ்க்கியும் இதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள். திட்டவட்டமான இலக்குகளும் போராட்டத் தலைமையும், தொடர்ந்த வெகுமக்கள் திரட்டலும் தேவை என்பதனை அவர்கள் இப்போது வலியுறுத்துகிறார்கள். அரபுப் புரட்சி பற்றிய அமித் தபாசியின் புத்தகமும், வால் ஸ்ட்ரீட் பற்றிய சோம்ஸ்க்கி, ஜிஸாக் போன்றோரின் புத்தகங்களும் இப்போதுதான் வெளியாகி இருக்கின்றன. அதனது அனுபவங்களைப் பயில வேண்டிய காலம் நமக்குமுன் திறந்திருக்கிறது.

கடந்த வருடம் இலண்டனில் நடைபெற்ற நிறக் கலவரம் என்ன எச்சரிக்கையை காட்டுகின்றது? பிரித்தானிய அரசு கறுப்பின மக்களுக்கு உரிய நீதி வழங்கியுள்ளதா?

முதலாவதாக ஆப்ரோ-கரீபிய இளைஞர்கள் பெண்களின் கோபத்திற்கான காரணமாக அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் காரணங்களைப் பார்ப்போம். வன்முறை துவங்கிய டோட்டன்ஹாம் பகுதியில் நான்கில் மூன்று பகுதியிலான இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் பிரித்தானிய அரசு வழங்கிவரும் சமூகநல உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டமை கலவரத்திற்கான அடிப்படைகளில் ஒன்றாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. டோட்டன்ஹாம் பகுதியில் வாழும் இருவரில் ஒருவர் வேலையின்மையினால் அவதிப்படுபவராக இருக்கிறார் எனப் புள்ளிவிவரங்கள் கோருகின்றன. பிரித்தானிய இனமுரண்பாடுகளால் கலகம் ஏற்படுவது இது முதற்தடவையல்ல எனவும், இக்கலவரங்கள் குற்றவாளியான மார்க் துக்கன் கொலை செய்யப்பட்டதற்கான எதிர்ப்பு அல்ல எனவும் இனரீதியாக ஒடுக்கப்பட்ட ஆப்ரோ-கரீபியன் சமூகம் பொருளாதார ரீதியில் மிகக் கீழ்நிலையில் உள்ள பிரதான சமூகத்திலிருந்து அந்நியமான கறுப்பின இளைஞர் சமூகம் தனது எதிர்ப்பை ஒருவகையில் வெளிப்படுத்த இக்கலவரங்களின் வழியில் முயன்றுள்ளது எனவும் பல்வேறு விதமான ஆய்வுகளை சமூகநல உளவியலாளர்களும், வன்முறை குறித்த கோட்பாட்டு ஆய்வாளர்களும் முன்வைத்து வருகிறார்கள்.

அடிக்கடி தடுத்துநிறுத்தப்பட்டு காவல்துறையினரின் சோதனைக்கு ஆளாகிறவர்களில் அதிகமானவர்கள் ஆப்ரிக்க இனத்தவர்கள்தான். காவல்துறையினரின் ஆபாச வசவுகளுக்கு ஆளாகிறவர்களாக கறுப்பின இளம் பெண்களே இருக்கிறார்கள். காவல்துறைக்குள் நிறவாதம் ஊடுறுவியிருக்கிறது எனும் நினைவுகள் ஸ்டீபன் லாரன்ஸ் எனும் கறுப்பு மாணவரின் படுகொலையை அடுத்து அவர்களிடம் பதிந்துபோயிருக்கிறது. காவல்துறையினரால் மென்டிஸ் எனும் தென் அமெரிக்க இளைஞர் அநியாயமாகச் சுட்டுக் கொல்லப்பட் நினைவுகளையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். இவ்வகையில் காவல்துறையினர் மீதான வெறுப்புணர்வு அவர்களிடம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

வேலையின்மை, கல்லூரிக் கட்டண அதிகரிப்பினால் படிப்பைத் தொடர இயலாமை, வறுமை இவற்றினால் அந்நியத்தன்மை வாழ்வின் மீதான சலிப்பு விரக்தி போன்றனவே ஆப்ரிக்க இளைஞர்களையும் இளம்பெண்களையும் வன்முறைக்குத் தூண்டியிருக்கிறது. அவர்கள் தமது குரல் கேட்கப்படவும், தமக்குப் பிரச்சினை இருக்கிறது என்பதனைத் தெரியப்படுத்தவும் விரும்புகிறார்கள். அதனது விளைவே இந்த வன்முறைகள் என கறுப்பின சமூகநல ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இப்போது ஆட்சியிலிருக்கும் கன்சர்வேடிவ் கட்சி என்பது பாரம்பர்யமாகவே கறுப்பின மக்களின் மீதான துவேஷ உணர்வும் குடியேறிய மக்களின் மீதான பாரபட்ச உணர்வும் கொண்ட அரசியல் கட்சியாகும். கடுமையானக் குடியேற்றச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கும் இக்கட்சியின் பிரதமரான டேவிட் கமரூன் ஆட்சிக்கு வந்தவுடன் சொன்ன ஒரு முக்கியமான வாசகம் ‘பல்கலாச்சாரக் கொள்கை என்பது தோற்றுவிட்டது’ என்பதுதான். இதனையே பிற்பாடு ஜெர்மானிய ஆட்சியாளர்களும் பிரதிபலித்தார்கள். பல்கலாச்சாரம் என்பதற்கு மாறாக வெள்ளையின ஆதிக்கம் கொண்ட ஒற்றைக் கலாச்சார ஆட்சியை நிறுவ விரும்புகிற ஒரு ஆட்சியினால் அரசியலையும், சமூகப்பிரச்சினைகளையும் குற்றத்தன்மை வாய்ந்ததாக ஆக்க முடியுமே அல்லாது அடிப்படையில் பிரச்சினையின் தீர்வுக்காக அவர்கள் யோசிப்பார்கள் எனக் கருதமுடியாது.

இலண்டனில் பல தமிழ் தொலைக்காட்சி சேவைகளும் பத்திரிகைகளும் இணையத்தளங்களும் வெளிவருகின்றன-இயங்குகின்றன. இவை பற்றிய சற்று விரிவாக கூறுங்கள்.

சில குறிப்பிட்ட காலங்களில் தொடர்ந்து புகலிடத் தமிழ் தொலைக் காட்சிகளைப் பார்த்ததுண்டு. வானொலிகளையும் கேட்டதுண்டு. அன்றாடம் நிரந்தரமாக இவை இரண்டையும் நான் பார்ப்பவன்-செவிமடுப்பவன் என்று சொல்ல முடியாது. பொதுவாகவே இப்போது நான் சில குறிப்பிட்ட சேனல்கள், குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் என்பது தவிர நான் தமிழ்-ஆங்கிலம் என இரு தொலைக்காட்சிகளையும் வழமையாகப் பார்ப்பது இல்லை. ஆவணப்படங்களுக்காக நான் சேனல் நான்கு பார்ப்புது உண்டு. உலகத் திரைப்படங்களுக்காக பிலிம்நான்கு பார்ப்பதுண்டு. பிற கலை இலக்கிய நிகழ்வுகளுக்கு என பிபிசி மூன்று மற்றும் நான்கு பார்ப்பது உண்டு. தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அரசியல் விவாத நிகழச்சிகள் பார்ப்பது உண்டு. மற்றபடி தமிழ் தொலைக்காட்சி பார்க்காததால் நான் தகவல் பெறுதல் அலலது அறிவுறுதல் என இரு தளங்களிலும் எதனையும் இழப்பதாகத் தோன்றாததால் எனது நேரத்தை நான் விரயம் செய்ய விரும்புவதில்லை.

மேற்கில் வாழ்கிற, தமிழ் அரசியல் விவாத நெறிப்படுத்தல் செய்பவர்கள் சேனல் நான்கு மற்றும் பிபிசி இரண்டு போன்ற சேனல்களில் இதே வகையில் நிகழச்சிகள் நடத்துபவர்களிடமிருந்து சில விஷயங்களைப் பயில வேண்டும் என நான் நினைக்கிறேன். முதாவதாக நிகழ்ச்சியின் பேசுபொருள் குறித்து வாசிப்பு அளவிலான விரிவான அறிதலை நெறிப்படுத்துனர்கள் தேடிக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக இரு தரப்பிலிருந்தும் விவாதிப்பவர்கள் எல்லை மீறிப் போகிறார்கள் எனத் தெரியவரும் தருணத்தில் அவர்களைக் கட்டுப்படுத்தி நிகழ்வைத் தன் கட்டப்பாட்டுக்குள் கொணர அவர்கள் பயிலவேண்டும் என நினைக்கிறேன். வன்மம் காட்சியாகச் சிலரைப் பரவசப்படுத்தலாம், வேடிக்கையாகவும் இருக்கலாம். ஓருபோதும் அது கருத்துவலிமையை முன்வைப்பதாக இருக்காது. சில விவாத நிகழ்வுகள் எதிர்தரப்பினரை இகழ்வதாக, குழாயடிச் சண்டையாக ஆனதாக இருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. இவை தவிர்க்கப்பட வேண்டும்.

இணையங்கள் எனப் பார்த்தால் சமகால அரசியல் கலை இலக்கிய திரைப்படத் தகவல்களுக்காக மட்டுமே அவைகளை நான் பார்க்கிறேன். குளோபல் தமிழ் நியூஸ், பொங்கு தமிழ் போன்ற சில தளங்கள் மட்டுமே வெளிப்பாட்டு முதிர்ச்சியையும் ஆசிரியக் கட்டுப்பாட்டையும் பகுப்பாய்வுக் கட்டுரைகளையும் கொண்டிருக்கின்றன. பல தளங்கள் செய்திகளை வியாக்யானப்படுத்தி அவைகளை முன்வைக்கின்றன. இதனை வாசக சுதந்திரத்தின் மீதான மிக மோசமான அத்துமீறலாக நான் நினைக்கிறேன். நான் மிகவெறுப்பது அனைத்தையும் பகடியாக்கிவிடும் அனாமதேயர்களின் பகடிப் பின்னூட்டங்களைத்தான். எத்தனை தீவிரமான மனநிலையில் எழுதப்படும் கட்டுரைகளாயினும், எத்தனை உழைப்பின் பின் எழுதப்படும் கட்டுரைகளாயினும் இத்தகைய பின்னூட்டங்கள் அதனை ஒரிரு வார்த்தைகளில் நிராகரித்துவிட்டுப் போய்விடுகின்றன. இந்த நிலைமை எந்தவிதமான அறிவார்ந்த உரையாடலையும் சாத்தியமில்லாமல் ஆக்கிவிடுகிறது. பல்வேறுவிதமான விமர்சனங்களும் பகுப்பாய்வுகளும் தேடல்களும் நிகழ்த்த வேண்டிய அவசியத்திலுள்ள ஈழத்தமிழர்களுக்கு மேற்கில் இயங்கும் தமிழ் தொலைக்காட்சிகளும் இணையங்களும் எத்தனையோ செய்ய முடியும். அந்த இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது.

புலம் பெயர் சினிமாவை மிக ஆழமாக கூர்ந்து கவனித்து வருகின்றீர்கள். விமர்சித்துள்ளீர்கள். பல கட்டுரைகளையும் வரைந்துள்ளீர்கள். இப்படங்கள்-குறும்படங்கள் தனித்துவமான ஒரு திரைப் பட மொழியை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? புலம் பெயர் படைப்பாளிகள் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்ன?

உலகிலேயே சினிமாவின் சக்தியை தமிழர்களைவிடவும் வேறு எவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். தமிழ் சினிமா தமிழகத்தின் ஐந்து முதலமைச்சர்களை உருவாக்கி இருக்கிறது. சினிமாவைப் புறக்கணிப்பவர்கள் தம்மையே புறக்கணித்துக் கொள்கிறார்கள் என்றுதான் நான் சொல்வேன். நிதர்சனம் தொலைக் காட்சியைத் தோற்றுவித்ததும் அதனூடே குறும்படங்கள்-ஆவணப்படங்கள்-முழுநீளப் படங்கள் என உருவாக்கி அதனை நிறுவனமயமாக்கியதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீரக்கதரிசனம் என்று நான் சொல்வேன். லெனின், மாவோ, பிடல் என எல்லோரும் சினிமாவின் வல்லமையை அறிந்திருந்தார்கள். வேண்டுமானால் இட்லரும் இதனது வல்லமையை அறிந்து கொண்டிருந்தார் எனச் சேர்த்துக் கொள்ளலாம். அது அவரவரது அரசியல் சார்பைப் பொறுத்த விடயம். எவ்வாறெனினும் சினிமா ஒரு மகத்தான கலை மற்றும் தொடர்பு சாதனம். அனைத்துக்கும் மேலாக அது வெகுமக்களை உடனடியில் சென்றடையும் ஊடகம்.

தமிழ் குறும்படங்களுக்கென உலக அளவிலான திரைப்பட விழாக்களை முன்னெடுத்தவர்கள் ஈழத்தமிழர்கள்தான். இலண்டன் சினி சங்கம், விம்பம், கனடா சுயாதீனத் திரைப்படக் கழகம் போன்றன அதனை முன்னெடுத்தன. அதனது வளர்ச்சியாக இப்போது பிரான்ஸ் லிப்ட் வரை அது நிறுவனமயப்பட்டிருக்கிறது. இதற்கான சூழல் புகலிடத்தில் நிலவியது. தொண்ணூறுகளில் ஆர்வம் கரைபுரண்டோட குறும்படங்கள் புகலிடத்தில் வெள்ளமெனப் பெருகி வந்தது. கதைப் பொருளில் இருந்த கவனம் ஊடகத் தேர்ச்சியில் இருக்கவில்லை. பிரான்ஸ் அருந்ததியின் முகம், சுவிட்சர்லாந்து ஜீவன் உருவாக்கிய படங்கள் ஊடகத் தேர்ச்சி குறித்த விழிப்பை புகலிடப் படைப்பாளிகளிடம் உருவாக்கின. குறும்படங்களிலிருந்து முழுநீளப்படமாக இப்போது இது வளர்ச்சி பெற்றிருக்கிறது. சதா பிரணவன், லெனின் சிவம், ஐ.வி.ஜனா போன்ற தனித்துவம் மிக்க படைப்பாளிகள் உருவாகி இருக்கிறார்கள். தொழில்நுட்பம், திரைக்கதை, இவை இரண்டுக்கும் ஆதரமான அசலான ஈழத்தமிழர் வாழ்வு சார்ந்த கதைக்களங்கள் என இவர்களது படைப்புக்கள் விரிவுகொண்டிருக்கின்றன.

என்னதான் அதியற்புதமான திரைப்படங்களை எடுத்தாலும் அது பார்iவையாளர்களைச் சென்று அடையவில்லையானால் அதற்கான முக்கியத்துவத்தினைப் பெறுவதென்பது கடினம். ஈழத்தமிழர்களின் திரைப்படங்கள் பரவலாகத் தமிழகத்திலும் பிறநாடுகளிலும் திரையிடப்படுவதற்கான மிகப்பெரும் தடைகளாக அரசியல் காரணங்களே இருக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கிடையிலான அரசியல் முரண்கள், வாழ்வுச் சிக்கல்கள், வன்மறை தோய்ந்த அவர்தம் அன்றாட வாழ்வு, புகலிடத்து அனுபவங்கள் போன்றவை குறித்து வெளியான காத்திரமான ஈழத்தமிழ்க் குறும்படங்கள், முழுநீளப்படங்கள் புகலிடம் தவிர பிற இடங்களை எட்ட முடியாமைக்கு இதுவே காரணம். இவைகளைத் திரையிட வேண்டும் எனும் ஆர்வமுள்ளவர்களுக்கு உள்ள மிகப்பெரும் தடை அரசியல் பிரச்சினைதான். ஈழத் தமிழர் அரசியலில் ஜனநாயக ஆர்வங்கள் அதிகமாகி வரும் புதிய சூழலில் இதற்கான கதவுகள் திறவுபடும் என நம்புவோம்.

ஈழத் தமிழர்களுக்கு என திரைமொழி உருவாகி இருக்கிறதா எனும் பிரச்சினைக்கு வருவோம். உலகெங்கிலும் திரைப்படத்தினை உருவாக்கும் ஆதாரமான தொழில்நுட்பக் கருவிகள் என்பது ஒன்றுதான். ஓரு சில படத்தொகுப்பு மென்பொருள்களைத்தான் எவரும் தேர்வு செய்ய வேண்டும். பிற்பாடு, தனித்த, பிரத்யேகமான திரைமொழி என்பது எவ்வாறு உருவாகிறது? ஓருவரது வாழ்நிலம், பருவகாலங்கள், சொலவடைகள், உடல்மொழி, அவர்களுக்கே மட்டுமே உரிய தனித்த பிரச்சினைகள், அவர்களைச் சுற்றிய சப்தங்கள், அவர்கள் மட்டுமே எதிர்கொள்ளும் சவால்கள் என்பவற்றை ஒரு சமூகத்தின் படைப்பாளி எப்போது பற்றிப் பிடிக்கிறானோ அப்போதே அவன் தனது சமூகத்திற்கு மட்டுமே உரியதான திரைமொழியை உருவாக்குகிறான். ரஸ்யாவின் ஐஸன்ஸ்டைன், கியூபாவின் கிதராஸ் அலியா, செனிகலின் செம்பேன் ஒஸ்மான், வங்காளத்தின் சத்யஜித் ரே, கிரீஸின் தியோ ஆஞ்ஜல பெலோஸ், இங்கிலாந்தின் கென்லோச் போன்றோரிடம் அவர்களுக்கே உரித்தான திரைமொழியை ஒருவர் கண்டடைய முடியும். இந்த நிலையில் இருந்து நோக்கும் போது அருந்ததி, ஜீவன்,புதியவன் துவங்கி சதா பிரணவன், லெனின் சிவம், ஐ.வி. ஜனா போன்றவர்களின் திரைப்படங்களில் புகலிட ஈழ சினிமாவுக்கான தனித்த திரைமொழி உருவாகி வந்திருக்கிறது என்று நான் சொல்வேன். இன்னும் கணிசமான குறும்படங்களைக் கொடுத்தவர் எனும் அளவில் சதா பிரணவனின் படங்களில் அது துலக்கமாக இருக்கிறது என்றும் சொல்வேன்.

புகலிட படைப்பாளிகள் கவனிக்க வேண்டிய மிகமுக்கியமானதொரு விடயம் என நான் கருதுவது, பின்னணி இசையை எங்கு பாவிக்க வேண்டும், எங்கு பாவிக்கக் கூடாது எனும் விடயத்தின் அடிப்படைகளை அவர்கள் கவனமாகப் பயில வேண்டும் எனச் சொல்வேன். இதனைப் பயிலுவதற்கான நடைமுறைப் பயிலிடம் என சத்யஜித்ரேவின் திரைப்படங்களை நான் சொல்வேன்.

புலம் பெயர் இலக்கிய முயற்சிகளையும் நன்கறீவீர்கள். அவற்றின் தரம் பற்றியும் கருத்தியல் வளர்ச்சி பற்றியும் உங்களது கருத்து என்ன?

புகலிட இலக்கியத்தின் தனித்த ஆளுமைகளாக வருவார்கள் எனக் கருதப்பட்ட கலாமோகன், பாரத்திபன் போன்ற சிறுகதையாசிரியர்கள் அநேகமாக எழுதுவதை நிறுத்திவிட்டார்கள் என்பது ஒரு சோகம். பார்த்திபனது மிக வலிமையான அம்சம் அவரது உரையாடல்கள். பார்த்திபனது எல்லாச் சிறுகதைகளுமே மிகச் சிறந்த திரைப்படத்திற்கான திரைக்கதை அமைப்பைக் கொண்டவை. கச்சிதமான கதை முடிச்சு, சம்பவங்கள், உரையாடல்களைக் கொண்டது அவரது சிறுகதைகள். பார்த்திபனது உரைநடை மிக எளிமையானது. ஆழமானது. யதார்த்தமானது. பாசாங்கற்றது. நேரடியிலானது. பார்த்திபனது குறுநாவல்களும் சிறுகதைகளும் தொகுக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன்.

புகலிடம் உருவாக்கிய மிகச் சிறந்த புனைவுமொழி கொண்ட, தனித்துவமான சிறுகதையாசிரியன், நாவலராசிரியன் ஷோபா சக்தி. அவரது நாவல்களின் அரசியலுடனும் அவரது அரசியலுடனும் என்னால் உடன்பாடுகொள்ள முடியாது என்பதனை முன்னிறுத்தியபடியே இதனை நான் சொல்கிறேன். அ.முத்துலிங்கத்தின் சிறுகதைகளைவிடவும் அவரது பிற எழுத்துக்களையே நான் அதிகம் விரும்பி வாசிக்கிறேன். கருணாகரமூரத்தி, சந்திரா ரவீந்திரன், அ.இரவி போன்றவர்களையும் நான் வாசிக்கிறேன். கருணாகரமூர்த்தியின் பெர்லின் இரவுகள் தமிழில் வெளியான முக்கியமான அனுபவப் பதிவு என்பது எனது எண்ணம். தேவகாந்தன், சயந்தன், குழந்தைவேல் போன்றவர்கள் முக்கியமான நாவல்களைத் தந்திருக்கிறாரகள். செழியனது வானத்தைப் பிளந்த கதை முக்கியமான வரலாற்றுப் பதிவு. ஈழத்தின் அறியப்பட்ட கவிஞர்களில் பெரும்பாலுமானவர்கள் இன்று புகலிட நாடுகளில்தான் வாழ்கிறார்கள். மு.புஷ்பராஜன், வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், இளைவாலை விஜயேந்திரன், சபேசன், றஷ்மி போன்றவர்கள். புகலிடம் உருவாக்கிய கவிஞர்கள் என என்னால் சிலரைக் குறிப்பிட முடிகிறது. ஆழியாள்,திருமாவளவன்,சுகன், ரஞ்ஜினி, வாசுதேவன் போன்றவர்கள். சுகனின் அரசியல் மீது எனக்கு ஒவ்வாமைகள் இருப்பினும், தனக்கான மொழி கொண்ட உக்கிரமான கவிதைகளின் சொந்தக்காரர் சுகன் என்பதில் எனக்கு மறுபேச்சில்லை. டி.சே.தமிழன், மெலிஞ்சி முத்தன், அருண்மொழி வர்மன் போன்று காத்திரமாக எழுதுகிற இன்னொரு தலைமுறையினரின் எழுத்துக்களையும் நான் வாசிக்கிறேன். காலம் செல்வம் போன்றவர்கள்தான் புலம்பெயர் இலக்கியம் குறித்து அறுதியாகக் கருத்துச் சொல்லமுடியும் என நினைக்கிறேன்.

உலக சினிமாவின் வளர்ச்சி இன்று பல விடயங்களை ஆய்வுக்குட்படுத்தியுள்ளன. அண்மைக் காலங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பு பற்றிய எதிர்மறைக் கருத்துக்கள் வெளிவருகின்றன. அதே சமயம் சிவத்தம்பி போன்றோர் தமிழ் பண்பாட்டின் ஒரு அடையாளமாக சிவாஜியை குறிப்பிடுகின்றார்கள். உங்களது கருத்து என்ன?

சிவாஜி கணேசனை முன்னிறுத்திய கேள்வி என்பதால் பதிலும் அவரை முன்னிறுத்தியதாவே சொல்ல விரும்புகிறேன். பராசக்தி, பாசமலர், பாகப்பிரிவினை, வியட்நாம் வீடு, தங்கப்பதக்கம், உயர்ந்த மனிதன், முதல் மரியாதை என்கிற படங்கள்தான் சிவாஜி கணேசனை நினைக்கும் போது உடனடியில் ஞாபகம் வருகின்றன. சிவாஜி கணேசன், அவரை தீவிரமாகப் பிரதி பண்ணிய எஸ்.வி.சுப்பையா, வி.எஸ்.ராகவன், அவரை மென்மையாகப் பிரதி பண்ணும் கமல்ஹாஸன் மற்றும் ரஜினிகாந்த் போன்றோரை ஒரு புறமும், ரகுவரன், நாஸர், சத்யராஜ் போன்றோரை பிறிதொரு புறமும் நிறுத்தி தமிழ் சினிமா நடிகர்களின் நடிப்பு சார்ந்த வித்தியாசங்களைப் பேச முனைகிறேன். தாம் ஏற்ற பாத்திரப் படைப்புக்களை ‘மெருகுபடுத்தி’ அல்லது அதீத ‘நாடகீயமாக்கி’ அதனை ஒரு ‘பாணியாக’க் கடைப்பிடித்தவர்கள் என முன்னவர்களைச் சொல்லலாம். தாம் ஏற்ற பாத்திரங்களை நான் முன்னே சொன்ன எதுவும் செய்யாமல் இயல்பில் அந்தப் பாத்திரமனிதர்களாகவே ஆகும் நடிப்பை ரகுவரன், சத்யராஜ், நாஸர் போன்றவர்களிடம் காணலாம். இவர்கள் மூவரையும் பிற எந்தவொரு நடிகரோடும் வைத்து நாம் ஒப்பிட்டுப்பேசமுடியாது. இதே விதமான பண்பு கொண்ட இளையதலைமுறை நடிகர்கள் என அஜீத்தையும் தனுஷையும் நாம் குறிப்பிடலாம். சிவாஜிகணேசனது நடிப்பு அதீதமாக உணர்ச்சி ஊட்டப்பட்ட நடிப்பு. ரகுவரனின் நடிப்பு பாத்திரத்துக்குத் தேவையான இயல்பான நடிப்பு. சிவாஜி கணேசன் படம்முழுக்க நவரச உணர்ச்சிவசம் கொண்டவராகவே தோன்றுவார். ரகுவரன் காட்சிக்குத் தேவையான உணர்ச்சிகளை மட்டுமே இயல்பாக வெளிப்படுத்துவார்.

சிவாஜி குறித்த சிவத்தம்பியின் மதிப்பீடு தமிழ்சினிமாவில் இருக்கிற படங்களில், அதிகமாகப் பார்க்கப்பட்ட படங்கள், எண்ணிக்கையில் அதிகமான தனிப்பட்ட நடிகர் ஒருவர் நடித்த படங்களின் தன்மை குறித்த மதிப்பீடு எனும் அளவிலேயே வருகிறது என நினைக்கிறேன். பி.யூ.சின்னப்பா, கிட்டப்பா, தியாகராஜ பாகவதர் போன்றோரின் புராண, சரித்திரப் படக் காலத்தையடுத்து, திரைப்படம் நவீன சமூகம், உறவுகள் சார்ந்ததாக ஆகும்போது, எம்.ஜி.ஆர்-சிவாஜி எனும் பெரும் எதிர்மையில் எம்.ஜி.ராமச்சந்திரனின் படங்கள் அதிகமும் புறநிலைச் சமூகம், சமூகத்திற்கான தனிநபரது பொறுப்புக்கள், சமூகத்திற்கான அவரது கடமைகள், அதற்காக உறவுகளை இரண்டாம்பட்சமாகக் கருதுவது போன்றவற்றையே சித்தரித்தன. சிவாஜி கணேசனின் பெரும்பாலுமான படங்கள் குடும்ப வாழ்வும், உறவுச் சிக்கலும், கூட்டுக் குடும்பச் சிதைவும், கைவிடப்பட்ட முதியவர்களும் பெற்றோர்களும் குறித்ததாகவே இருந்தன. குடும்பம் ஒரு சமூகத்தின் பண்பாட்டைப் பேணும், வெளிப்படுத்தும் உடனடி சமூக அலகு எனக் கருதுவோமானால் சிவாஜி கணேசன் ஏற்ற பாத்திரங்கள் அவரைத் தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாக முன்வைத்தது என்பதனைப் புரிந்து கொள்வதில் நமக்குப் பிரச்சினைகள் இருக்காது. பிள்ளைகளால் கைவிடப்படும் வியட்நாம் வீடு ரிடையர் முதியவர், தங்கைக்காகவே வாழ்ந்து அவமானத்தையும் துயரையும் சுமக்கும் பாசமலர் அண்ணன், மனைவியால் அவமானப்படுத்தப்படும் முதல்மரியாதைக் கணவன். இந்த வழியில் முதல் மரியாதையில் சிவாஜி கணேசனின் சித்திரம் அவரது திரைவாழ்வின் உச்சம் என்றே நாம் சொல்ல வேண்டும்.

மார்க்சிய விமர்சகர்கள் உட்பட பலர் கே. பாலச்சந்தரை பாராட்டுகின்றார்கள். பாலச்சந்தர் நாடக மொழிக்கு அப்பால் தமிழ் சினிமாவிற்கு எதையும் செய்யவில்லை என்ற கருத்தும் உள்ளது. நீங்கள் அவரை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

பாலச்சந்திரன் முக்கியத்துவம் அவர் காட்சிரூப சினிமா எடுத்தவரா அல்லது நாடகமேடைச் சட்டகத்தை திரைச்சட்டகத்திற்குப் பெயர்த்தவரா என்பதில் இல்லை என நினைக்கிறேன். வேலைக்குப் போகிற மத்தியதர வர்க்கத்துக் கூட்டுக்குடும்பப் பெண்கள் எதிர்கொள்கிற பாலுறவு சார்ந்த உளவியல் சிக்கல்களை, பொருளியல் சார்ந்த உறவுச் சிக்கல்களை அவரது படங்கள் பேசின என்பதில்தான் அவரது படங்களின் முக்கியத்துவம் இருக்கிறது. தனித்த ஆளுமையாகப் பெண்கள் சமூகத்தில் இடம்பெறும்போது குடும்பத்தினுள் ஏற்படும் உறவுச் சிக்கல்களையும் அவர் படங்கள் வெளிப்படுத்தின. சுருக்கமாகச் சொல்வதானால் மத்தியதரவர்க்கப் பெண்களை மையமான கதாபாத்திரங்களாகக் கொண்டதாக அவரது பெரும்பலுமான படங்கள் இருந்தது. ஆண்மையச் சினிமாவாக இருந்த தமிழ் சினிமாவை பெண்மையப் பாத்திரப் படைப்பு கொண்டதாகவும் நகர்த்தியதில்தான் அவரது முக்கியத்துவம் இருக்கிறது. அவரது படங்களை ஒரு பட்டியலுக்குள் நாம் நிரல்படுத்துவோமானால் அதுவரைத்திய தமிழ் மரபுச் சட்டகங்களில் இருந்து பாலுறவு மீறல் புரிய யத்தனித்த பெண்களையும், பாலுறவு மீறல் புரிந்த பெண்களையும் அவரது படங்கள் அதிகமாகச் சித்திரித்தன என்பதனை நாம் பார்க்க முடியும். நாடக மேடைச் சட்டக சினிமாகவே தமிழ் சினிமா இருந்த காலகட்டத்தில்தான், அதே நாடக மேடைச் சட்டக சினிமாவுக்குள் பெண்களை மையப்படுத்தியதாக பாலச்சந்தரின் படங்கள் பிரவேசித்தன. தமிழ் சினிமாவின் முக்கியமான பெண் ஆளுமைகளான சிறிவித்யா, பிரமிளா, சிறிப்ரியா, ஜெயந்தி, ஜெயப்பிரதா, ஜெயசித்ரா, சரிதா, சுஹாசினி, கீதா, சுஜாதா போன்றவர்கள் பாலச்சந்தரின் படங்களில் இருந்துதான் தோற்றம் பெற்றார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாஸன் போன்றவர்கள் நடித்த படங்களிலும் கூட பிரதான பாத்திரங்களை பெண்களே ஆளுமை செய்தார்கள். இதுதான் பாலச்சந்திரன் முக்கியத்துவம் என நினைக்கிறேன்.

ஆனால், பாலச்சந்தர் ஒரு இயக்குனராகத் தனது படைப்புக்களில் மிகமோசமாக இடையீடு செய்து, பாத்திரங்களை இயல்பாக வளர்ச்சியடைய விடாமல் செய்து, தனது சமூக நம்பிக்கைகளின் பொருட்டு, மரபார்ந்த சமூகத்தை மீறும் பெண்களை பைத்தியங்களாக, நரம்புத்தளர்ச்சியாளர்களாக, தற்கொலை செய்து கொள்கிறவர்களாக அழித்தொழித்தார் என்ற அவப்பெயருக்குப் பொருத்தமானவராகவும் ஆனார் என நினைக்கிறேன். புதிய தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் வளர்ச்சியுற்ற காட்சிரூப சினிமாவின் காலத்தில், பாலுறவு மீறல்கள் என்பது கலாச்சார அதிர்ச்சியாக அல்லாமல் மிக இயல்பாக தமிழ் சினிமாவில் ஆகின காலத்தில் பாலச்சந்தரின் பின்னைய படங்கள் காலப் பொருத்தமற்றவையாக, கவனிக்கப் பெறாமல் போனது என நான் நினைக்கிறேன்.

அண்மைக் காலங்களில் தமிழ்த் திரைப் படங்களில் ஒரு மாற்றம் தெரிகின்றது. இது வெகுஜன சினிமாவின் பெரிய நடிகர்களால் தாங்க முடியாமலும் உள்ளது. இந்த மாற்றம் தொடருமா?

இணையம் என்பது சினிமா பார்க்கும் பார்வையாளர் கலாச்சாரத்திலும், சினிமாவை உருவாக்கும் இயக்குனர் கலாச்சாரத்திலும் நிறைய பாதிப்புக்களைக் கொண்டு வந்திருக்கிறது. முதலில் ஹாலிவுட் படங்களின் வீடியோக்களைப் போட்டுப் பார்த்து கதைகளைத் தயார் செய்தவர்கள் இப்போது ஐரோப்பிய, ஜப்பானிய, ஈரானிய, தென் கொரிய சினிமாக்களின் டிவிடிக்களைப் போட்டுப் பார்த்து அல்லது இணயத்தில் பார்த்து கதைகளைத் தயார் செய்கிறார்கள். இன்றைய இளம் இயக்குனர்களும் உதவி இயக்குனர்களும் காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து போன்ற இடைநிலை இதழ்களை வாசிக்கிறார்கள். சுஜாதா, பாலகுமாரன் போன்றோருக்குப் பதில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்றவர்களை வாசிக்கிறார்கள். இப்படி மூன்றாம் உலக, ஆசிய-ஆப்ரிக்க-இலத்தீனமெரிக்க நாடுகளின் சினிமா அல்லாத ஹாலிவுட், ஐரோப்பிய, ஜப்பானிய, ஈரானிய சினிமாக்கள் தமிழ் சினிமா இயக்குனர்களின் மீது பாதிப்பைச் செலுத்தியிருக்கின்றன.

இடைநிலை இதழ் இலக்கியவாதிகள் தமிழ் சினிமாவின் மீது பாதிப்புச் செலுத்தியிருக்கிறார்கள். இலக்கியத்தில் உன்னதமும், அகஎழுச்சியும் பேசுகிற இலக்கியவாதிகள் கடைசியில் சிந்து சமவெளிக்கும், அவன் இவனுக்கும், சண்டக் கோழிக்கும் வசனம் எழுதுகிறார்கள். இந்த விசுவாசத்துக்காக நிலவும் சந்தைச் சினிமாவை இவர்கள் போற்றிப் பாடவும் செய்கிறார்கள். இவர்களது வாசகர்கள் தாஸ்த்தயாவஸ்க்கியும் இயக்குனர் சாமியும் ஒரே மாதிரி ஆட்கள் எனக் குழப்பம் அடையாமல் இருந்தால் அது தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் நல்லது.

தமிழ்சினிமா தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. திரைக்கதைகளை நுட்பமாக அமைக்கிறார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற ஓர்மை கொண்ட கலைஞர்களை அவர்களுக்குப் பின்னான தமிழ் சினிமா உருவாக்கி இருக்கிறதா? சேரன், பாலாஜி சக்திவேல், ஜனநாதன், சற்குணம் என விரல் விட்டு எண்ணத்தக்கவர்களையே நாம் இப்படி ஒப்பிட்டுப் பார்க்க முடியும். குமாரராஜா ஆரண்ய காண்டம் என ஒரு கல்ட் பிலிம் கொடுத்திருக்கிறார். ஆக, தமிழ் சினிமாவில் இன்று நடந்திருக்கும் மாற்றம் என்ன? திரைக் கதை எழுதுதலில் புத்திசாலித்தனம் தெரிகிறது. ஓளிப்பதிவில் புதுப்புது சோதனை முயற்சிகள் தெரிகிறது. படத் தொகுப்பில் வேகம் தெரிகிறது. ரஹ்மான் உலகவயமான கலப்பிசையைத் தருகிறார். ஓரு வார்த்தையில் சொல்வதானால், அதியற்புதமான தொழில்நுட்ப நேரத்தியுடன், தேர்ந்த நடிகர்களை வைத்து, வேறு வேறு விதமாகக் கதை சொல்லிப் பார்க்கிற புத்திசாலித்தனம் வந்திருக்கிறது. ஆனால், தமிழ் வாழ்வும், அரசியலும், மாறிவரும் சமூகம் குறித்த பிரச்சினைகளையும் உட்கொண்ட ஓர்மையுள்ள திரைப்பட இயக்குனர்கள் மற்றும் ஆளுமைகள் உருவாகி இருக்கிறார்களா? வங்கத்தின் கௌதம்கோஷ் போல, கேரளத்தின் டி.வி.சந்திரன் போல, கர்னாடகத்தின் கிரிஸ் காஸரவள்ளி போல, தெலுங்கின் நரசிங்கராவ் போல தமிழ் சினிமாவில் நாம் ஒரு ஆளுமையைச் சொல்ல முடியுமா?

அத்திபூத்தார்போல வருகிற ஒரு சில படங்கள் எமக்கு ஆச்சர்யத்தைத் தரலாம். ஆளுமைகளைத் தமிழ் சினிமாவில் உருவாக்க முடியாது. இந்தச் சினிமாக்களை உருவாக்குகிறவர்கள் விருது பெற்ற உடனே அப்துல் கலாமிடம் சென்று ஆசிவாங்குகிறார்கள். எனக்குக் கூடங்குளம் மக்கள் ஞாபகம் வருகிறார்கள். அஜீத் நடித்த மங்காத்தா படத்தை நாம் எங்கு வைப்பது? வேகமும் பார்வையின்பம் தரும் படம் அது போல வேறு ஏதாவது உண்டா? பத்து நாட்களின் பின் அந்தப்படத்தை மீளநினைவுறுத்திப் பார்ப்பதற்கு அதில் என்ன இருக்கிறது? பாலாவின் நான் கடவுள், அவன் இவன் போன்ற படங்களும் கூட இந்தத் தரத்திலுள்ள படங்கள்தான்.

உலகின் எந்தச் சினிமாவைப் பார்த்தாலும் அதனது பாதிப்பை அதனது வரலாறு மற்றும் மண் சார்ந்த பின்னணியில் தமிழ் சினிமா பார்வையாளனும் சரி இயக்குனரும் சரி புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. தனது அறிவு மட்டத்திற்கே அதனைத் தன்வயப்படுத்தி அந்தப்பாதிப்பினை நீர்த்துப் போகச் செய்துவிடுகிறான். சில படங்களை ஒப்பீடுகளுக்காகத் தருகிறேன். தமிழ் சினிமாவில் நேர்ந்த மாற்றத்தை நாம் அப்போது சரியாக எடைபோட்டுப் பார்த்துக் கொள்ளலாம். அறிமுகமற்ற சிறுவனுக்கும் முதிர்ந்த வயதுள்ள ஆணுக்கும் பயணத்தில் நேரும் உறவு குறித்த படம் தியோ ஆஞ்ஜல பெலோசின் எடர்னிடி அன்ட எ டே, பிற்பாடு ஜப்பானியப் படமான கிகுஜிரோ பாருங்கள். அதற்குப் பிறகு மிஸ்கினின் நந்தலாலா பாருங்கள். அனாதைச் சிறுவர்களும் ஒரு கடற்கரை நகர வாழ்வும் பற்றிய ஈரானியப் படம் ரன் பாருங்கள். பிற்பாடு பாண்டிராஜின் பசங்க படம் பாருங்கள். தமிழ் சினிமாவில் ஆளுமைகள் தோன்றியிருக்கிறார்கள் என்றோ அல்லது தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்திருக்கிறது எனவோ என்னால் நம்பிக்கை கொள்ன முடியவில்லை.

இறுதியாக, கருணாநிதி ஜெயலலிதா இதற்கப்பால் தமிழகம் நகராதா?

கடைசியாக மிகுந்த சோர்வு தரும் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். இடதுசாரிகள்-தலித்தியர்கள்-பெரியாரியர்கள்- இடதுசாரித் தமிழ்த் தேசியர்கள் இணைந்த ஒரு அரசியல் கூட்டணி தமிழகத்தின் எதிர்காலத்திற்கான இலட்சிய அரசியல் கூட்டணியாக இருக்கும். இன்றைய நிலையில் வைத்துப் பார்க்கிறபோது அதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக-அதிமுக கூட்டணிகளில் அங்கம் வகிக்கத்தான் விரும்புகிறார்களேயல்லாது திருமாவளவன், பா.கிருஷ்ணசாமி போன்றவர்கள் உள்ளிட்ட தலித் கூட்டணிக்கு அவர்கள் முயல்வது கூட இல்லை.

மருத்துவர் ராமதாஸினது மிகப் பச்சையான வன்னியர் சாதி அரசியல். அவர் உருவாக்குகிற தனது கட்சியின் துணை அமைப்புக்களான வெகுஜன அமைப்புக்களைக் கூட சாதி அமைப்புக்களாகவே அவர் உருவாக்குகிறார். மருத்துவர் ராமதாசுடன் ஒப்பிட திருமாவளவன் பேசுகிற அரசியல் இடதுதிசைவழியிலான அரசியலாக இருக்கிறது. தலித் அரசியலை, குறிப்பிட்ட சாதிய அடையாள அரசியலுக்கு அப்பால் ஜனநாயக உரையாடல் அரசியலாக அவர் நகர்த்திச் செல்கிறார். இன்றுள்ள அரசியல் தலைவர்களில் தமிழகத்தின் முன்னோக்கிய அரசியல் என அவருடைய அரசியலையே நாம் சொல்ல முடியும்.

ஈழ அரசியலை மட்டுமே முன்னிறுத்திக் கொண்டு, ஜெயலலிதா ஆதரவு நிலைபாட்டை எடுக்கும் நெடுமாறன், சீமான் போன்றவர்களது அரசியல் தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளில் இடதுதிசையிலான அரசியல் எனச் சொல்ல முடியாது. வை.கோபாலசாமி இளைஞர்களால், சிந்திப்பவர்களால் மதிக்கப்படும் ஆளுமை கொண்ட ஒரு அரசியல்வாதி எனினும் திராவிட அரசியலின் சாபமான உணர்ச்சி அரசியல்தான் அவரை முழுமையாக வழிநடத்துகிறது என்பது ஒரு அவலம். இன்று அரபுப் புரட்சியையும், வால்ஸ்டீரீட்டைக் கைப்பற்றுங்கள் எழுச்சியையும் நாம் வரவேற்கிறோம். தமிழகத்தில் கூடங்குளம் மக்கள் போராட்டத்தையும் மனித உரிமை அமைப்புக்களின் போராட்டங்களையும், சேவ்தமிழ் போன்ற சிவில் சமூக அமைப்புக்களின் போராட்டங்களையும் நாம் நம்பிக்கையுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கங்கள் தொடர்பான விமர்சனங்களை இந்த புதிய சமூக இயக்கங்கள் கொண்டிருக்கின்றன. இவை பிரதான கட்சிகளுக்கு அழுத்தம் தரும் வெகுமக்கள்திரள் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் எனும் எதிர்கால சாத்தியம் இருக்கிறது என்று மட்டும் சொல்லலாம். இதுவே ஐநா சபையில் இந்தியா மனித உரிமைத் தீரமானத்தை ஆதரிக்கும் நிர்ப்பந்தத்தை, தமிழக அரசியல் கட்சிகளின் வழி உருவாக்கியது என்பது நம் சமகால நிகழ்வு. இப்படியான நடவடிக்கைகள் நோக்கித்தான் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.

—————

மே 2012

http://yamunarajendran.com/?p=1763

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓரு மார்க்சீயரின் முன்னுரிமைகளை அவர் வாழ நேர்ந்த காலத்தின் சூழலே தீர்மானிக்கிறது *

முள்ளிவாய்க்கால் மரணங்கள்.. இதனைத் தொடர்ந்து வரும் சம்பவங்கள். உங்கள் பார்வை என்ன? இலங்கைத் தமிழ் மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்குமா? நாடு கடந்த தமிழீழம் போன்ற முயற்சிகள் சாத்தியாமானவையா?

முள்ளிவாய்க்கால் மரணங்கள் மட்டுமல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு அனுபவங்கள் நாம் வாழும் உலக நிலைமையில் தனித்த நிகழ்வுகள் அல்ல. குர்திஸ் விடுதலை இயக்கத்தின் தலைவர் அப்துல்லா ஒச்சலான் இம்ராலியில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். பெரு சைனிங்பாத் இயக்கத் தலைவர் அபிமல் குஸ்மான் தனிமைச் சிறையில் இருக்கிறார். கொலம்பிய பார்க் விடுதலை இயக்கத்தலைவர் அல்பான்சோ கெனோ சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்திய நக்ஸலைட் இயக்கத் தலைவர் கிஸன்ஜி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இவர்கள் அனைவரும் ஆயுதப் போராட்டங்களை வழிநடத்திய தலைவர்கள். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதிலும் சிலர் கொல்லப்பட்டதிலும் இவர்களது தந்திரோபாயத் தவறுகள் மட்டும் இல்லை. மாறிவரும் உலகத்தில் இவர்களது தந்திரோபாயத்தின் செயல் எல்லைகள் வளர்ந்து செல்வது சாத்தியம்தானா என்ற கேள்வியோடு சம்பந்தப்பட்ட பிரச்சினை இது. ஈழவிடுதலையின் எதிர்கால திசைவழி குறித்து நிதானமாக சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டிய தருணம் இது. இதுவரைத்திய உலக விடுதலைப் போராட்ட அனுபவங்கள், 1989 மற்றும் 2001 என மாற்றப்பட்ட உலக அரசியல் வரைபடம் என இரண்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஈழவிடுதலைப் போராட்டத்தை நாம் அணுகவேண்டும். "துரதிருஷ்டவசமாக நான் கடவுள், மற்றவன் சாத்தான் என நிலைநாட்டுவதும், பகடிப் பின்னூட்டங்களும்தான் இங்கு விமர்சன மரபாக இருக்கிறது. சுயவிமர்சனம் எனும் கருத்தாக்கமே இங்கு கொச்சையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது."

அரசியல் என்பது இயற்கை விஞ்ஞானம்போன்று சூத்திரங்களால் ஆனது அல்ல. இது சாத்தியங்களின் கலை. தமிழர்களுக்கு எது உரிமை, எது நியாயமான தீர்வு என்பதற்கே கூட தமிழ்சமூகத்தின் உள்ளேயே ஜனநாயக மரபு வளர்த்தெடுக்கப்பட வேண்டி இருக்கிறது. தனிநபர்களால் தலைமை தாங்கப்படுகிற ஆயுத இயக்க அரசியலாயினும் சரி, ஆயுதமற்ற கட்சி அரசியலாயினும் சரி, கூட்டு முடிவு, வெகுமக்களினுடனான ஊடாட்டம் என்பது அல்லாமல் ஒரு சமூகம் ஜனநாயகப்படுதல் என்பது முடியாது. இலங்கைத் தமிழ் மக்கள் ஒரு மக்கள் கூட்டமாக ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள், ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு நூறு நூறு வரலாற்றுச் சான்றுகள் குவிந்து கிடக்கின்றன. இதிலிருந்து மீட்சி கிடைக்குமா என சந்தேகம் எழுப்புவதனைவிட, மீட்சி கிடைப்பதற்கு என்ன வழியைத் தேர்வது என்பதுதான் இன்று முக்கியம்.

வேறுபட்ட பார்வைகள் இருப்பினும் இன்று ஈழநிலத்தில் யதார்த்த அரசியல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயல்பாடுகளில்தான் தங்கியிருக்கிறது. புகலிடத்தில் சாத்தியமான அரசியல் மனித உரிமை அரசியல்தான். இது அழுத்த அரசியலாக மட்டும்தான் இருக்க முடியும். நாடு கடந்த தமிழீழ அரசு அதனைத்தான் இங்கு செய்ய முடியும். அதனை அவர்கள் செய்கிறார்கள். ஓரு ஜனநாயக அரசியலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அரசியல் ஒரு முனை எனில், அதனது மறுமுனைதான் நாடு கடந்த தமிழீழ அரசியல் எனவே நான் கருதுகிறேன். உண்மையில் தமிழர்கள் இன்று தேடவேண்டிய அரசியல், பிறரது அரசியல் உரிமைகளை அங்கீகரித்துக் கொண்டு, சதா பிறரை விமர்சித்துக் கொண்டிருக்காமல், அவரவர் அரசியலை முழுமையாகக் கண்டடைய முயற்சிப்பதுதான். முள்ளிவாய்க்காலின் பின்னான கால அரசியல் பிறரைக் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் மட்டும் முழுமைபெற்றுவிட முடியாது.

—————

மே 2012

http://yamunarajendran.com/?p=1763

இணைப்புக்கு நன்றி கிருபன். பயனுடைய பதிவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.