Jump to content

பொட்டம்மானை நோக்கி வந்த ஆபத்து (அவலங்களின் அத்தியாயங்கள்- 86) – நிராஜ் டேவிட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மண்ணை நனைத்த சிங்கள இரத்தம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 77) – நிராஜ் டேவிட்
  • by admin
  • October 30, 2013

395265_3346319982951_1417337913_33375402

இறந்தவர் உடல்களில் காயங்கள்?

குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள் மரணமடைந்த செய்தி மக்கள் மத்தியிலும், விடுதலைப் புலி போராளிகள் மத்தியிலும் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்தது. ஒரு தொகுதி மக்கள் மத்தியில் சோகம், இயலாமை போன்ற உணர்வுகள் ஏற்பட்டிருந்த போதிலும், பெரும்பாண்மையான தமிழ் மக்கள் மத்தியில் பயங்கரமான கோப உணர்வு ஏற்பட்டிருந்தது.

தமது போராளிகள் அநியாயமாக இறக்க நேரிட்டது பற்றி தமிழ் மக்கள் மிகுந்த அச்சம் கொண்டார்கள்.

அதேவேளை, சயனைட் உட்கொண்டு தம்மை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்பட்ட போராளிகள் சிலரது உடல்களில் காயங்கள் காணப்பட்டதாக வெளிவந்திருந்த செய்தியும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலி உறுப்பினர்களையும் கோபத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றிருந்தது.

குறிப்பாக புலேந்திரனின் உடலின் முதுகுப் புறத்திலும், பின் கழுத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டிருந்தன. துப்பாக்கி முனையில் பொருத்தப்படும் ஷபயனைட்| என்ற கத்தியினால் புலேந்திரன் குத்தப்பட்டதாக விடுதலைப் புலிப் போராளிகள் மிகுந்த சினத்துடன் தெரிவித்திருந்தார்கள்.

கைதுசெய்யப்பட்ட போராளிகளை உயிருடன் கொழும்புக்கு அழைத்துச் செல்லமுடியாத தமது இயலாமையை, ஸ்ரீலங்காப் படையினர் அவர்களின் உயிரற்ற உடல்களின் மீது காண்பித்திருந்தார்கள்.

மாவீரர்களின் இறுதி ஊர்வலத்தின் போதே, போராளிகளின் உடல்கள் ஸ்ரீலங்கா இராணுவ வீரர்களின் கத்திக்குத்துக்களுக்கு இலக்கான கதை பொதுமக்கள் மத்தியிலும், போராளிகளிடையேயும் பரவியிருந்தது. மரணச் சடங்குகள் முடிவடைந்ததும் மக்களினதும், சக போரளிகளினதும் சோகம் கோபமாக மாற ஆரம்பித்தது.

அன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வெளியான தினசரிகள் அனைத்துமே, மிக அண்மையில் திருமணமான குமரப்பா, புலேந்திரன் போன்றோரது திருமண புகைப்படங்களை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தன. இந்தப் புகைப்படங்களைப் பார்த்த தமிழ் மக்களின் மனங்கள் ஏற்கனவே கணன்றுகொண்டிருந்தது. மரணமடைந்தவர்களது உடல்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்ட செய்தி வெளியானதைத் தொடர்ந்து மக்கள் தமது கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள்.

அடுத்த சில நாட்கள், வடக்கு-கிழக்கு இரத்தமயமாகக் காட்சியளித்தது.

இரத்தம் தோய்ந்த நாட்கள்:

வல்வெட்டித்துறையில், இறந்த 12 போராளிகளினதும் மரணச் சடங்கு முடிந்து, மிகுந்த கோபத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிலரது கண்களில் ஒரு சிங்கள இராணுவ வீரன் தென்பட்டான். மதுபாணச் சாலை ஒன்றில் மது அருந்துவிட்டு நிறை போதையுடன் வெளிவந்த அந்தச் சிங்களப் படை வீரனைக் கண்டதும், ஏற்கனவே ஸ்ரீலங்காப் படையினர் மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்த அந்தக் கூட்டத்தினருக்கு மிகுந்து எரிச்சல் ஏற்பட்டது.

ஷசிங்கள நாய்கள்.. எங்கள் ஊருக்குள்ள வந்து எங்கட பொடியளிலையோ கைவைக்கிறியள்?..| என்று கேட்டபடி ஒரு பெரியவர் அந்த இராணுவ வீரரை தாக்க ஆரம்பித்தார். அந்தக் கூட்டத்தில் வந்தவர்களும் பெரியவருடன் சேர்ந்து கொண்டார்கள். சிறிது நேரத்தில் அந்த இராணுவ வீரன் உணச்சிவசப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தின் கோபத்திற்கு பலியானான்.

விடுதலைப் புலி உறுப்பினர்களும் ஸ்ரீலங்காப் படையினர் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தார்கள். தமது முக்கிய தளபதிகள் உட்பட 12 போராளிகளினதும் மரணங்களின் காரணமாக, அவர்களது உச்சக்கட்ட கோபம் ஸ்ரீலங்காப் படையினர் மீது திரும்பியிருந்தது.

கொல்லப்பட்ட படையினர்:

6ம் திகதி காலை யாழ் பஸ் நிலையத்தின் முன்னால் 8 ஸ்ரீலங்காப் படைவீரர்களின் உடல்கள் போடப்பட்டிருந்தன. அவர்களது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன.

ஏற்கனவே சண்டையொன்றின் போது புலிகளினால் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த 8 ஸ்ரீலங்காப் படையினரின் உடல்களே அவை.

புலிகளின் எல்லைகடந்த கோபம் ஸ்ரீலங்காப் படையினரை நோக்கித் திரும்பியிருந்ததை அது வெளிப்படுத்தியது.

அவலத்தைத் தந்தவனுக்கே அதனைத் திருப்பிக்கொடுக்கும் பாணியைப் புலிகள் கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்த காலம் அது. நியாயமான யுத்த முறைகள் எதனையும் ஸ்ரீலங்காப் படையினர் கடைப்பிடிக்க மறுத்ததுடன், நேர்மையான யுத்த வழிமுறைகள் எதனையும் பின்பற்றும் பக்குவத்தையும் ஸ்ரீலங்காப் படையினர் இழந்து, அக்காலத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால் ஸ்ரீலங்காப் படையினரின் பாணியில் செயற்பட்டால் மட்டுமே புலிகளின் போராட்டத்தின் பாஷையை அவர்களுக்கு புரியவைக்கமுடியும்; என்பதைப் புலிகள் உணர்ந்துகொண்டு, அந்த முறையிலேயே பதில் கொடுக்கவும் ஆரம்பித்திருந்த காலம் அது.

அந்தவகையில், 8 ஸ்ரீலங்காப் படைவீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் மூலம் புலிகள் தமது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

இது ஸ்ரீலங்காப் படையினருக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு எதிராக நெல்லியடியில் புலிகள் தமது முதலாவது தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடாத்தி மூன்று மாதங்களே கடந்துவிட்டிருந்தது. புலிகளின் கோபம் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் வடிவத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஸ்ரீலங்காப் படை முகாம்களின் மீது நடைபெற்றுவிடலாம் என்ற அச்சம் ஸ்ரீலங்காப் படைத்துறைத் தலைமையினிடையே ஏற்பட்டிருந்தது. புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் விழைவு எப்படி இருக்கும் என்பதை ஸ்ரீலங்காப் படையினர் அனுபவவாயிலாக நன்றாகவே அறிந்திருந்தார்கள். எனவே தமது முகாம்களை புலிகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு இந்தியப்படையினரிடம் அவர்கள் உதவி கோரினார்கள். ஜே.ஆர். இனது வேண்டுகோளின்படி, ஸ்ரீலங்காப் படையினரின் முகாம்களைப் பாதுகாக்கும் பணிப்புரை இந்தியப்படைகளுக்கு தீட்ஷித்தினால் வழங்கப்பட்டது.

இது விடுதலைப் புலிகளை மேலும் சினமூட்டியது.

தமது போராளிகளுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்திருந்த இந்தியப்படை, ஸ்ரீலங்கா படையினருக்கு பாதுகாப்பு வழங்க முன்வந்ததைக்கண்டு விடுதலைப் புலிகள் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்கள்.

அடுத்த சில தினங்களில் பொதுமக்களுடன் இனைந்து சில விடுதலைப் புலி உறுப்பினர்களும், தமது கோபத்தை சிங்களப் படையினருக்கும், சிங்கள மக்களுக்கும் எதிராகத் வெளிப்படுத்த ஆரம்பித்தார்கள்.

சிங்கள இரத்தத்தால் நனைந்த தமிழ் மண்:

காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையின் பொது முகாமையாளர் ஜெயமண்ண மற்றும் உதவி முகாமையாளர் கஜநாயக்க போறோர் விருந்தினர் விடுதி ஒன்றில் ஷஉற்சாக பாணம்| அருந்திக்கொண்டிருந்தார்கள். அவர்களுடன் உள்ளூர் பொறியியலாளர்களான சோதிலிங்கம், வேலாயுதம் போன்றோரும் இருந்தார்கள்.

தமிழ் தேசமே சோகத்தில் மூழ்கி இருக்கையில் இவர்கள் விருந்து உட்கொண்டு மகிழும் விடயம் சில இளைஞர்களுக்கு சினத்தை ஏற்படுத்தி இருந்தது. ஷபுலேந்திரன் இறந்ததை, சில சிங்களவர்கள் விருந்து வைத்துக் கொண்டாடி மகிழ்வதாக| செய்தி பரவியதைத் தொடர்ந்து, ஆதிரம் கொண்ட ஒரு கூட்டம் விருந்தினர் விடுதியைச் சூழ்ந்துகொண்டது. அந்தக் கூட்டத்தில் சில விடுதலைப் புலி உறுப்பினர்களும் அடங்கியிருந்தார்கள்.

இரண்டு சிங்கள அதிகாரிகளும் வெளியில் இழுத்துச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். மறுநாள் அவர்களிருவரது உடல்களும் காங்கேசன்துறை சீமேந்துத் தொழிற்சாலையின் முன்பாக கிடந்தன. அவர்களுடம் இணைந்து விருந்துண்ட தமிழ் பொறியியலாளர்களும் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.

சுன்னாகத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றது. சுன்னாகத்தில் பேக்கறி வைத்திருந்த ஒரு சிங்கள முதலாளி, ஷபோராளிகளை ஸ்ரீலங்காப் படையினர் கைது செய்ததில் சட்டரீதியாக நியாயம் இருப்பதாக சில உள்ளூர்வாசிகளுடன் விவாதம் நடாத்திக்கொண்டிருந்தார். ஏற்கனவே பலவித உணர்ச்சிகளுடன் காணப்பட்டிருந்த இளைஞர்களுக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது. வாய்த்தர்க்கம் வன்செயலாக வடிவெடுத்தது. இறுதியில் அந்த பேக்கரி உரிமையாளர் கொலைசெய்யப்பட்டார்.

தமிழ் பிரதேசங்கள் முழுவதும் வன்முறை வெடித்தது. 83ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தமிழ் மக்களின் மனங்களில் பல ஆண்டுகளாகக் கனன்றுகொண்டிருந்தது. அதற்குப் பதில் வழங்கச் சரியான ஒரு தருணம் இதுவென்று பல இளைஞர்கள் பேசிக்கொண்டார்கள். தமது போராளிகளை அனியாயமாகச் சாகடித்துவிட்ட சிங்களவர்களைப் பலிவாங்கவென்று மேலும் பல இளைஞர்கள் புறப்பட்டார்கள்.

அடுத்த சில தினங்கள், தமிழ் பிரதேசங்கள் எங்கும் இரத்த வெள்ளமாக காட்சி தந்தன.

ஆனால், இம்முறை சிந்தப்பட்ட இரத்தம் தமிழருடையது அல்ல. காலாகாலமாகவே தமிழர்கள் சிந்திய குருதியினால் நனைந்து வந்த தமிழ் மண்ணை, முதல்முறையாக சிங்கள இரத்தம் செந்நிறமாக்கியது.

தொடரும்…

 

வன்முறையாக உருவெடுத்த தமிழ் மக்களின் கோபம் (அவலங்களின் அத்தியாயங்கள்- 78) – நிராஜ் டேவிட்
  • by admin
  • October 30, 2013

04-150x150.jpg

என்னதான் உணர்ச்சியின் வேகம் என்று கூறிக்கொண்டாலும், 1987ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில், வடக்கு கிழக்கில் சிங்கள மக்கள் மீது தமிழ் தரப்பினர் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை, மனவருந்தத்தக்க ஒரு நிகழ்வுதான் என்று இந்தச் சம்பவங்கள் பற்றிப் பதிவுகள் மேற்கொண்ட பல வரலாற்று ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

சிங்களத்தின் வெறித்தனமான பிடிவாதத்தைத் தொடர்ந்து, 12 போராளிகள் அநியாயமாக தமது உயிர்களை இழக்க நேரிட்டதன் சோகம், இப்படியான ஒரு ரூபத்தில் வெளிப்பட்டதாக இந்தச் சம்பவங்களுக்கு காரணம் கற்பிக்கப்பட்டாலும், ஈழ வரலாற்றில் இது ஒரு கறைதான் என்று வாதிடும் பல தமிழ் அறிஞர்கள் இப்பொழுதும் எம்மத்தியில் இருக்கவே செய்கின்றார்கள்.

வன்முறைகள் மலிந்திருந்த அந்தக் காலத்தில், அதுவும் குறிப்பாக சிங்களப் படையினராலும், சிங்களக் காடையர்களினாலும் தொடர்ந்து வன்முறைக்கு இலக்காகி வந்த தமிழ் சமுகம், ஆற்றமுடியாத தமது கோபத்தை வெளிப்படுத்திய ஒரு சந்தர்ப்பம்தான் அதுளூ இப்படியான சம்பவங்கள்; தவிர்க்கமுடியாத ஒன்று – என்றும்; சில வரலாற்று ஆய்வாளர்கள், வடக்கு கிழக்கில் இடம் பெற்ற சிங்கள மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு நியாயம் கற்பிக்கின்றார்கள்.

சரித்திரத்திலும் இதுபோன்ற உணச்சிகளின் வெளிப்பாடுகள் பல சந்தர்ப்பங்களிலும் நடைபெற்றிருக்கின்றன.

1984ம் ஆண்டு, இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியத் தீவிரவாதிகளினால் கொலைசெய்யப்பட்ட போது, ஆத்திரம் அடைந்த இந்திய மக்கள் நாடுமுழுவதும் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளில் இறங்கியிருந்தார்கள். இரண்டு நாட்களில் இந்தியா முழுவது நூற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இந்தியாவின் இராணுவத்திலும் சரி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திலும் சரி, இந்தியாவின் விளையாட்டுத்துறையிலும் சரி, பாரிய பங்களிப்பைச் செய்துவந்த சீக்கிய இன மக்கள் ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்டார்கள்.

டீல்லி, கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களின் தெருக்களிலெல்லாம் அப்பாவிச் சீக்கியர்களின் பிணங்கள். சில நாட்களில் பிரதமர் பதவி ஏற்றுக்கொண்ட ராஜிவ் காந்தியிடம், சீக்கியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறைகள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள். அதற்குப் பதிலளித்த ராஜீவ் காந்தி, ஷஷஒரு பெரிய மரம் சாயும் போது, சில அதிர்வுகள் அங்கு ஏற்படத்தான் செய்யும். அந்த அதிர்கள் காரணமாக அருகில் இருக்கும் சில புல்பூண்டுகள் அழிந்துவிடுவது தவிர்க்கமுடியாதது|| என்று பதில் அளித்திருந்தார்.

இதேபோன்று, 83ம் ஆண்டு ஜுலையில், புலிகளின் கன்னிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி 13 படைவீரர்கள் யாழ்பாணத்தில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைமுழுவதும் அயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். தமிழர்களுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. சிங்கள இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதால் கோபம் கொண்ட சிங்கள மக்கள் உணர்ச்சிவசப்பட்டு, இப்படியான காரியத்தைப் புரிந்துவிட்டதாக இந்தச் சம்பவத்திற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சந்தர்ப்பத்திலும், தமிழ் நாட்டிலும், பெங்களுரிலும் வாழ்ந்துவந்த நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இந்தியப் பொலிசாரினால் வகைதொகையின்றிக் கைதுசெய்யப்பட்டார்கள். அடித்து நொறுக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார்கள். கடைகளுக்குச் சென்ற இலங்கைத் தமிழ் பேசிய பலர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். (இத்தனைக்கும் ராஜீவ்காந்தியை புலிகள்தான் கொலைசெய்தார்கள் என்ற ஒரு சந்தேகம் மட்டுமே அப்பொழுது அங்கு நிலவியிருந்தது). பிரதமரை இழந்த சோகத்தில் மக்கள் இவ்வாறு நடந்துகொள்ளுகின்றார்கள் என்று நியாயம் கூறப்பட்டது.

2001ம் ஆண்டு செப்டெம்பர் 11 இல், நியுயோர்க் மற்றும் வோஷிங்டனில் இஸ்லாமிய அல்கயிதா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பிரதிபலிப்பு, முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியிருந்தது. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் அமெரிக்கத் தெருக்களில் தாக்கப்பட்டார்கள். கொலை செய்யப்பட்டார்கள். போதாததற்கு அமெரிக்க காவல்துறையும் அமெரிக்காவில் வாழ்ந்த பல முஸ்லிம் மக்களை கைதுசெய்து துன்புறுத்தியது. தாடியுடன் தலைப்பாகை அணிந்து காணப்படும் சீக்கியர்களைக் கூட, முஸ்லிம்கள் என்று நினைத்து தாக்குதலை நடாத்தியிருந்தார்கள். இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர், ஷஷமக்கள் தமக்கு ஏற்பட்ட தாங்கமுடியாத இழப்பினால் கோபம் கொண்டிருக்கின்றார்கள்|| என்று கூறியிருந்தார்.

சில வருடஙகளுக்கு முன்னர்; மத்திய கிழக்கு நாடொன்றில் ஒரு உல்லாச ஹோட்டலில் இடம் பெற்ற குண்டுவெடிப்பொன்றில், அவுஸ்திரேலிய பிரஜைகள் சிலர்; கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலியாவில் பல முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவம் பற்றியும் ஊடகங்களில் அறிய முடிந்தது. இந்தச் சம்பவத்திற்கும், ஷஇயல்பான கோபம்| காரணமாகக் கூறப்பட்டது.

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், இழப்புகள் நோர்ந்து, தாங்க முடியாத சோகம் ஏற்படும் போது ஷஇயல்பான கோபம்| வரலாம்ளூ ஆனால் தமிழ் மக்களுக்கு மட்டும் அப்படியான கோபம் எதுவும் வந்துவிடக் கூடாது.

சில தமிழ் புத்திஜீவிகளும் இப்படியான எண்ணப்பாடுடன் காணப்படுவதுதான் மிகுந்த மனவேதனைக்குரியது.

07.09.1996 இல் கிருஷாந்தி போன்றவர்கள் கொல்லப்பட்டதுடன், யாழ்குடாவில் 600இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படையினரால் கொலை செய்யப்பட்டால், அது புலிகள் முல்லைத் தீவு மீது தாக்குதல் நடாத்தியதால் படைவீரர்களுக்கு ஏற்பட்ட ஷமனப்பாதிப்பின் வெளிப்பாடு| என்று நியாயம் கற்பிக்கும் எமது புத்திஜீவிகளுக்குளூ

1992ம் ஆண்டு ஆகஸ்ட மாதம் 9ம் திகதி மைலந்தனையில் 12 சிறுவர்கள் உட்பட 36 தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட்டதற்கு, – அது டென்சில் கொப்பேகடுவ கொலை செய்யப்பட்டதால் படையினருக்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு என்று நியாயம் கற்பிக்கத் தெரிந்த எமது வரலாற்று ஆசிரியர்களுக்கு, – ஷதமிழ் மக்களுக்கு தாங்கமுடியாத சோகம் ஏற்படும்போது, அவர்களுக்கும் கோபம் ஏற்படத்தான் செய்யும்| என்று புரிந்துகொள்ளும் பக்குவம் ஏன் இல்லாமல் போனது என்பதுதான் ஆச்சரியம்.

காலாகாலமாகவே சிங்களவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்டு, பலவிதமான துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வந்த தமிழ் சமுகம், கிளர்ந்து எழுந்ததை ஒரு பொழுதும் பிழை என்று கூறிவிட முடியாது.

தமிழ் மக்கள் தமது உரிமையைக் கேட்டாலும் அடி, உண்ணாவிரதம் இருந்தாலும் அடிளூ சத்தியாக்கிரதம் இருந்தாலும் அடிளூ தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடாத்தினால் வெடிளூ சரி எதுவுமே வேண்டாம் என்று கொழும்புக்கு ஒதுங்கிச் சென்றவர்களுக்கு எதிராகவும் வன்முறை, கலவரம்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஒருவாறு சமாதானம் திரும்பிவிட்டது என்று நினைத்து, புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து, படிப்படியாக சுமுக நிலைக்குத் திரும்புகின்ற வேளையில், இப்படியான ஒரு சம்பவம் இடம்பெற்றுவிட்டதை நினைத்து தமிழ் சமுகம் சோகமும், ஆதங்கமும், கோபமும் கொள்ளத் தலைப்பட்டதில் என்னைப்பொறுத்தவரை பெரிதாக தவறெதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மக்கள் மத்தியில் தாராளமாக நடமாடத் தொடங்கியிருந்தார்கள். அதுவரை சில போராளிகளின் வீர தீர சாகாசங்களை வாய்வழியாகவே கேள்விப்பட்டு வந்த பல தமிழ் மக்கள் அந்த காவிய நாயகர்களை நேரில் தரிசித்து மகிழ்ந்ததுடன், அவர்களுடன் புதிய நட்பை ஏற்படுத்தி களிகூர்ந்தும் வந்தார்கள். இப்படியான சந்தர்ப்பத்தில் தமது அன்புக்குப் பாத்திரமான போராளிகள் சிங்களத்தின் சூழ்ச்சிக்குப் பலியானார்கள் என்பதை சாதாரணமாகவே தமிழ் மக்களால் ஜீரனித்துக்கொள்ள முடியவில்லை.

தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட சோகத்தினதும், கோபத்தினதும் வெளிப்பாடு வன்முறைகளாக தமிழ் பிரதேசங்களில் சில நாட்கள் தொடர்ந்தன…

அந்த வன்முறையின் சில அத்தியாயங்களை தொடர்ந்து வரும் வாரங்களில் சுருக்கமாகப் பார்க்கலாம்

தொடரும்…

 

இந்தியப் படையினரைத் தூண்ட ஸ்ரீலங்கா இராணுவம் மேற்கொண்ட சதிகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 80) – நிராஜ் டேவிட்
  • by admin
  • October 30, 2013

tamilTigerDM0306_468x252-150x150.jpg

ஈழத் தமிழ் மக்களின் காவலன் என்று தன்னை வெளிப்படுத்திக்கொண்டு இலங்கைக்கு வந்த இந்தியா, சிங்களத் தலைவர்கள் விரித்த வலையினுள் தெரிந்துகொண்டே விழுந்திருந்த சந்தர்ப்பங்கள் பற்றி கடந்த சில அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்திருந்தோம்.

இந்தியப் படைகளையும், விடுதலைப் புலிகளையும் சின்டு முடித்து வேடிக்கைபார்க்க விரும்பிய சிங்களத் தலைவர்கள், திட்டமிட்டுக் காரியமாற்றிக்கொண்டிருந்த அதேவேளை, சிங்கள இராணுவத்தினரும் தம்பங்கிற்கு இந்தியப் படையினரை திசைதிருப்பக்கூடிய பல சதிகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார்கள்.

இந்தியப் படையினர் இதனை நன்கு அறிந்திருந்த போதிலும், அந்தச் சதியில் இருந்து தம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாமல், காப்பாற்றிக்கொள்ளவும் விரும்பாமல், ஈழத்தமிழருக்கு எதிரான தமது துரோகங்களை தொடர்ந்ததுதான் வேடிக்கை.

இந்தியப்படையினரைத் தாக்கிய ஸ்ரீலங்கா இராணுவத்தினர்:

தமிழ் மக்களையும், அக்காலகட்டத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பு அரனாக நின்றுகொண்டிருந்த விடுதலைப் புலிகளையும் தனிமைப் படுத்த ஸ்ரீலங்கா படைகள் எப்படியான தந்திரங்களையெல்லாம் கையாண்டிருந்தன என்பது பற்றி, இந்தியப் படைகளின் தளபதிகள் பின்நாட்களிலேயே தமது சுயசரிதைகளிலும், செவ்விகளிலும் நினைவுகூர்ந்திருந்தார்கள்.

இது பற்றி, இந்திய அமைதிகாக்கும் படையின் தளபதியாக இருந்த லொப்.ஜெனரல் திபீந்தர் சிங், இவ்வாறு தெரிவித்திருந்தார்: ஷஷகிழக்கு மாகாணத்தின் இனவிகிதாசாரம் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களச் சமுகங்களிடையே சமமாகப் பிரிந்து காணப்பட்டது. தமது சமுகமே அங்கு பெரும்பாண்மையாக உள்ளதாக ஒவ்வொரு சமுகத்தைச் சேர்ந்தவர்களும் தெரிவித்து வந்தார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கை இணைப்பது சம்பந்தமாக கிழக்கில் மேற்கொள்ளப்பட இருந்த சர்வசன வாக்கெடுப்பில் சிங்களவர்கள் இணைப்பிற்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. தமிழ் முஸ்லிம் சமுகத்தினர் இந்த இணைப்பிற்கு சார்பாக வாக்களிப்பார்கள் என்றும் கூறப்பட்டது. அதனால் உண்மையிலேயே வடக்கும், கிழக்கும் இணைய வேண்டியது அவசியமென்று தமிழ் மக்கள் விரும்பினால், அவர்கள் தம்முடன் முஸ்லிம் சமுகத்தினரையும் அரவணைத்துச் செல்லவேண்டியது அவசியமாக இருந்தது. அவர்கள் அவ்வாறுதான் நடந்துகொள்ளவும் தலைப்பட்டார்கள். ஆனால் கிழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆங்காங்கு வன்முறைகள் வெடித்தன. சில முஸ்லிம்கள் கடத்தப்பட்டார்கள். காணாமல் போனார்கள். புலிகளே முஸ்லிம்களைக் கடத்தியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது தமிழ்-முஸ்லிம் உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும்படியாக அமைந்தது. படிப்படியாக தமிழ்-முஸ்லிம் கலவரமாகவும் வளர்ச்சியடைய ஆரம்பித்தது. ஆனால் உண்மையிலேயே முஸ்லிம்களைக் கடத்திய சம்பவங்களின் பின்னால், ஸ்ரீலங்காப் படைகளின் கரங்கள் காணப்பட்டது அப்பொழுது எவருக்கும் தெரியாது. விடுதலைப் புலிகள் உடனடியாகவே இதனை வெளிப்படுத்தியிருந்தார்கள். வடக்கு கிழக்கு இணைவது தொடர்பான அபிப்பிராய வாக்கெடுப்பின் பொழுது முஸ்லிம்கள் அதற்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் முஸ்லிம்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையில் பிளவை உண்டுபண்னுவதற்காக ஸ்ரீலங்கா பொலிஸாரே இந்தக் கொலைகளைப் புரிந்துவருவதாக விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருந்தார்கள். புலிகளின் இந்தக் கூற்று உண்மையாக இருந்த போதிலும் இந்திய அமைதிகாக்கும் படையினால் எதுவுமே செய்ய முடியாத நிலையே இலங்கையில் காணப்பட்டது. திருகோணமலையைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்காப் பொலிஸ்படையில் பெருமளவில் சிங்களவர்களே இருந்ததால், எங்களால் இதுபோன்ற சதிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருந்தது.|| இவ்வாறு திபீந்தர் சிங் தெரிவித்திருந்தார்.

துப்பாக்கிச் சூடு

இதேபோன்று இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிராக ஸ்ரீலங்காப் படையினர் நேரடியாகவே சதிகளில் இறங்கியிருந்த சந்தர்ப்பங்கள் பற்றியும், திபீந்தர் சிங் எழுதியிருந்த வுhந ஐPமுகு in ளுசi டுயமெய என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார். இந்தியப் படையினருக்கு எதிராக ஸ்ரீலங்காப் படையினர் தாக்குதல்களை நடாத்திவிட்டு, விடுதலைப் புலிகள் மீது பழியைப் போடுவதற்கு முயன்றதாகவும் அவர் தனது நூலில் தெரிவித்துள்ளார்: ஷஷதிருகோணமலையில் இந்திய அமைதிகாக்கும் படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. சாதாரன ஆடைகள் அணிந்து ஒரு ஷவானில்| வந்த சிலரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள். இந்தியப் படையினரும் பதில் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். எங்கள் தரப்பில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை. எங்கள் துருப்புக்கள் பதில் தாக்குதலை மேற்கொண்டதைத் தொடர்ந்து தாக்குதலை நடாத்தியிருந்த வாகனம் தப்பிச் சென்றது. தொடர்ந்து எமது துருப்புக்கள் அந்த வாகனத்தைத் துரத்திச்சென்றபோது, அந்த ஷவான்| நேரடியாக ஸ்ரீலங்கா இராணுவ முகாம் ஒன்றுக்குள் நுழைவதை எனது துருப்புக்கள் அவதானித்தார்கள். அதே வாகனம் திருகோணமலையில் உள்ள ஸ்ரீலங்கா இராணுவ முகாம் ஒன்றினுள் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதை பின்னர் எமது துருப்புக்களில் சிலர் உறுதிசெய்தார்கள். இந்தியத் துருப்புக்கள் மேற்கொண்ட பதில் தாக்குதல்களினால் ஷவானில்| ஏற்பட்டிருந்த ஓட்டைகளையும் எமது துருப்புக்கள் இலகுவாக அடையாளம் கண்டுகொண்டார்கள். இதுபற்றி நாங்கள் ஸ்ரீலங்காப் படை அதிகாரிகளிடம் கூறியபோதும், அவர்கள் அதனை ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்கள்.

அதேபோன்று மற்றுமொரு சந்தர்ப்பத்தில், சாதாரண ஆடையில் வந்த ஒரு இளைஞன் இந்தியப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு நேரடியாகவே ஸ்ரீலங்காப் படைமுகாம் ஒன்றிற்குள் ஓடி மறைந்ததை எமது படைவீரர்கள் கண்டுள்ளார்கள்.||

இவ்வாறு திபீந்தர் சிங் தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

தரையிறக்கத்தைத் தடுத்த இந்தியப்படையினர்

இதேபோன்று, இந்தியப் படைகளுக்கு எதிராக ஸ்ரீலங்காப் படையினர் நேரடியான நகர்வுகளில் இறங்கியிருந்த சம்பவங்களும் ஆங்காங்கு நடைபெறத்தான் செய்தன.

ஸ்ரீலங்காப் படைகளையும், அதன் அரச சக்திகளையும் பொறுத்தவரையில், அரசியல் அரங்கில் அவர்களுக்கு பல அவசரத் தேவைகள் இருந்தன.

முதலாவது இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பிரச்சினைகளை உண்டுபண்ணுவது. இரண்டாவது இந்தியப் படைகளுக்கு இலங்கையில் ஏதோ ஒரு வழியில் சிக்கல்களை உருவாக்குவது.(இந்த நோக்கத்தை அடைவதற்கு வெளிநாடுகளின் அனுசரனையும் ஸ்ரீலங்காவிற்கு இருந்தது குறிப்பிடத்தக்கது.)

தமது அரசியல் இருப்புக்கும், சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்கும் இந்தக் காரியங்களைச் செய்யவேண்டிய தேவைகள் அவர்களுக்கு இருந்தன.

அதற்காகவே திருகோணமலையில் குழப்பத்தை ஏற்படுத்தி, தமது நகர்வுகளை ஆரம்பிக்க முயன்றார்கள்.

ஒரு சந்தர்ப்பத்தில் வவுனியாவில் இருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒரு படைப்பிரிவை திருகோணமலைக்கு அனுப்புவதற்கு எத்தனிக்கையில் இந்தியப் படைகள் அதனைத் தடுத்து நிறுத்தினார்கள். திருகோணமலையில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்கென்று கூறி ஸ்ரீலங்காவின் ஒரு படைப்பிரிவு திருகோணமலைக்கு அனுப்பப்பட்டது. நகர்வை மேற்கொண்டிருந்த ஸ்ரீலங்காப் படைகளை இந்தியப் படையின் 340வது காலாட் படைப்பிரின் அதிகாரி இடைமறித்து எச்சரித்து திருப்பி அனுப்பினார். இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல் மூழும் சந்தர்ப்பம் கூட ஏற்பட்டது.

இதேபோன்று ஸ்ரீலங்காவின் படைப்பிரிவு ஒன்றை வான்வழி; மூலமாக திருகோணமலையில் தரையிறக்கும் நகர்வொன்றும் மேற்கொள்ளப்பட்டது. ஸ்ரீலங்கா விமானப்படை அதிகாரி எயார் மார்ஷல் ஏ.டபிள்யூ.பெர்னாண்டோ தலைமையில் இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது. இதனை அறிந்த இந்தியப்படையினர் தமது சில யுத்தத் தாங்கிகளை திருகோணமலை விமானத்தள ஓடுபாதையில் நிறுத்தி, ஸ்ரீலங்காப் படைகளின் தரையிறக்கத்தை தடுத்திருந்தார்கள்.

இந்தியப் படைகளுக்கு நெருக்கடிகளை உருவாக்குவதற்காகவும், கஷ்டங்களைக் கொடுப்பதற்காகவுமே, ஸ்ரீலங்காப் படைத்துறைத்தலைமை இப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தலைப்பட்டது.

இதனை இந்தியா நன்கு உணர்ந்திருந்தும், நிதானமாக நடந்துகொள்ளத் தவறியதுதான், இந்தியா தமிழ் மக்களுக்கு இழைத்திருந்த துரோகமாக இங்கு குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்காவின் அரசியல்தலைவர்களும், அதன் படைத்துறையும், இந்தியாவைச் சிக்கலில் மாட்டவைக்கும் நகர்வுகளையெல்லாம் செய்துவந்தபோது, இந்தியா அவற்றை நன்றாகவே அறிந்திருந்தது. அப்படியிருக்க, இந்தியா எதற்காக மறுபடியும் ஸ்ரீலங்காவின் சதிகளில் தன்னை சிக்கவைத்துக்கொண்டது என்பதுதான் விடைதெரியாத கேள்வியாக இன்றும் இருக்கின்றது.

ஈழத்தமிழருக்கு எதிரான பயணங்கள்:

இது இவ்வாறு இருக்க, இந்தியா ஸ்ரீலங்கா விரித்திருந்த வலையில் முழுமையாக அகப்பட்டுக்கொள்ளும் தனது அடுத்த நகர்வை மேற்கொள்ள ஆரம்பித்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஜே.ஆர். விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, அது பற்றி கலந்தாலோசிக்க இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கே.சீ.பந்த் கொழும்புக்குப் பயணமானார்.

அதே நோக்கத்துடன் இந்திய இராணுவத்தின் பிரதம தளபதி ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜியும் பலத்த பாதுகாப்புடன் யாழ்பாணத்தில் வந்திறங்கினார்.

இந்திய வரலாற்றில், இந்தியாவிற்கு மிகவும் மோசமான ஒரு அவப்பெயரைப் பெற்றுத்தருவதற்கு காரணமாக அமைந்திருந்த பயணங்களாக இந்த இரண்டு முக்கியஸ்தர்களின் பயணங்களும் அமைந்திருந்தன.

இந்த இருவரது பயணங்களும், இந்தியாவை நம்பியிருந்த ஈழத்தமிழர்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடக்கூடிய பயணங்களாக மட்டும் அமைந்துவிடாது, முழு ஈழத்தமிழர்களையுமே அழித்துவிடக்கூடிய பயணங்களாகவும் அமைந்திருந்தன.

துரோகங்கள் தொடரும்…

 

Link to comment
Share on other sites

  • Replies 60
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகள் – இந்தியா யுத்தத்திற்கு புலிகளின் வன்முறைதான் காரணமா? (அவலங்களின் அத்தியாயங்கள்- 81) – நிராஜ் டேவிட்
  • by admin
  • December 7, 2013
ipkf_mi8_palaly-150x150.jpg
 

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் நடவடிக்கைகளில் இறங்கியதற்கு புலிகளின் வன்முறைகளேதான் காரணம் என்று இப்பொழுதும் புலம்பெயர் நாடுகளில் பலர் விமர்சித்து வருகின்றார்கள்.

குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 போராளிகள் மரணமடைந்ததைத் தொடர்ந்து சிங்கள மக்கள் மீது புலிகள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதனாலேயே இந்தியப் படைகள் வேறு வழி இல்லாமல் புலிகள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டதாக சில இந்திய படையதிகாரிகள் தமது சுயசரிதைகளிலும், இலங்கை சம்பந்தமாக அவர்கள் எழுதிய புத்தகங்களிலும் தெரிவிக்கின்றார்கள்.

ஆனால் உண்மையிலேயே குமரப்பா, புலேந்திரன் போன்றவர்களது மரணத்திற்கு முன்னரேயே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும் முடிவை இந்தியாவின் அரசியல் தலைமை எடுத்திருந்ததாக பல அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

அதாவது விடுதலைப் புலிகள் இடைக்கால நிர்வாக சபையை ஏற்காமல் முரண்டு பிடித்ததைத் தொடர்ந்து புலிகள் மீது மிகவும் சினம் கொண்ட இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி புலிகள் அமைப்புக்கு ஒரு பாடம் படிப்பிக்கும் தீர்மானத்தை எடுத்திருந்தார்.

புலிகளை பலவந்தமாக நீராயுதபாணிகளாக்கினால் மட்டுமே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை ஒழுங்காக அழுல்படுத்த முடியும், அந்த ஒப்பந்தத்தின் அறுவடையையும் இந்தியாவினால் பெற்றுக்கொள்ள முடியும் என்று ராஜிவ்காந்தியும், அவரது ஆலோசகர்களும் எண்ணினார்கள்.

இடைக்கால நிர்வாகசபையை தம்மால் ஏற்கமுடியாது என்ற முடிவை இந்தியத் தூதருக்கு 30.09.1997 அன்று விடுதலைப் புலிகள் அறிவித்த உடனேயே புலிகள் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முடிவு இந்தியத் தலைமையினால் எடுக்கப்பட்டுவிட்டது. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

பின்னர் குமரப்பா, புலேந்திரன் போன்றவர்கள் ஸ்ரீலங்காப் படையினரால் கைதுசெய்யப்பட்டு, கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட இருந்த போது, அவர்கள் விடயத்தில் தலையிட வேண்டாம் என்று களத்தில் நின்ற இந்தியப்படை அதிகாரிகளுக்கு டில்லியில் இருந்து உத்தரவு வந்ததும், புலிகள் மீது இந்தியா நடவடிக்கை மேற்கொள்ள ஆரம்பித்திருந்த தீர்மானத்தின் ஒரு வெளிப்பாடு என்றுதான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்தியாவின் கடும்போக்கு:

03.10.87இல் பருத்தித்துறைக் கடலில் புலிகளது நடமாட்டம் பற்றிய தகவலை ஸ்ரீலங்காப் படையினருக்கு இந்தியாவே வழங்கியிருந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட 17 விடுதலைப் புலிகளையும் மரணத்தின் பாதைக்கு இட்டுச் செல்லும் உத்தரவை 5ம் திகதி வழங்கியது. இவ்வாறு, புலிகளுக்கு எதிரான வெளிப்படையான கடும்போக்கை இந்தியா ஒக்டோபர் மாதத்தின் ஆரம்பம் முதலே கடைப்பிடிக்க ஆரம்பித்துவிட்டது.

குமரப்பா, புலேந்திரன் போன்றோர் இறந்தது ஒக்டோபர் 5ம் திகதி அன்று. அதன் பின்னரே வடக்கு-கிழக்கில் சிங்கள மக்களுக்கு எதிராக வன்முறைகள் வெடித்திருந்தன. ஆனால், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் இலங்கை விஜயமும், இந்திய இராணுவத்தின் பிரதம தளபதி கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜீயினது இலங்கை விஜயமும், இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டிருந்தன என்பதும் நோக்கத்தக்கது.

இந்திய இராணுவத்தின் பிரதம தளபதி ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி அக்டோபர் மாதம் 4ம் திகதி கொழும்புக்குச் சென்று ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். ஜேயவர்த்தனாவையும், தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார்.

புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருக்கும் முடிவை அவர் உத்தியோகபூர்வமாக அங்கு வெளிப்படுத்தி இருந்தார்.

இந்தச் சந்திப்பின் பின்னர் புதுடில்லி திரும்பிய இந்தியப்படைத் தளபதி ராஜிவ் காந்தியுடன் ஆலோசனை நடாத்திவிட்டு, குமரப்பா, புலேந்திரன் உட்பட 17 போராளிகள் விடயத்தில் இந்தியப் படையினர் ஒதுங்கி நிற்கவேண்டும் என்ற உத்தரவை களத்தில் இருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தார்.

ஒக்டோபர் 5ம் திகதி 12 போராளிகள் மரணமடைந்த செய்தி கிடைத்ததும், இலங்கையில் இருந்த அனைத்து இந்தியப் படையினருக்கும் அதி உச்ச பாதுகாப்பு நிலையை எடுக்கும்படியான உத்தரவை அவர் பிறப்பித்திருந்தார். அதாவது ஒக்டோபர் 5ம் திகதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சிங்கள மக்களுக்கு எதிரான வன்முறை வடக்கு கிழக்கில் வெடிப்பதற்கு முன்பாகவே இந்தியா புலிகளுக்கு எதிரான கடும்போக்கை எடுக்கும் முடிவிற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒக்டோபர் 6ம் திகதி இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் சுந்தர்ஜி பலாலி இராணுவத் தளத்திற்கு மறுபடியும் வந்திருந்தார். இந்தியப்படை அதிகாரிகளை அவர் அங்கு சந்தித்து, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் களமிறங்க வேண்டும் என்ற செய்தியைத் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் எவ்வாறு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது பற்றி இந்தியப்படை அதிகாரிகளுடன் பலவிதமான ஆலோசனைகளையும் நடாத்தினார். திட்டங்களையும் தீட்டினார்.

அப்பொழுது இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரியான லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் இந்தக் கலந்துரையாடல்கள் பற்றிக் குறிப்பிடும் போது, விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற இந்திய இராணுவத் தளபதியின் நிலைப்பாட்டை நான் வரவேற்கவில்லை.

புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் நடவடிக்கைகளில் இறங்குவது அவ்வளவு நல்லதல்ல என்பதை தளபதியிடம் நான் தெளிவாக தெரிவித்திருந்தேன். புலிகளுக்கு எதிராக நாம் இராணுவ அனுகுமுறையைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், அடுத்த 20 வருட காலத்திற்கு இந்தியப் படைகள் மீளமுடியாத இக்கட்டிற்குள் மாட்டிக்கொள்ள நேடிடும் என்பதையும் நான் எடுத்துரைத்தேன்.

ஆனால் புதுடில்லி திரும்பிய தளபதி சுந்தர்ஜியிடம் இருந்து மறுநாள் கிடைக்கப்பெற்ற செய்தி அதிர்ச்சி தருவதாக இருந்தது. புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டேயாக வேண்டும் என்ற உத்தரவு எனக்கு வழங்கப்பட்டது…. இவ்வாறு திபீந்தர் சிங் தனது நூலில் தெரிவித்திருந்தார்.

அதாவது புலிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் இராணுவ நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்ற உத்தியோகபூர்வமான உத்தரவு 7ம் திகதியே யாழ்ப்பாணத்தில் இருந்த இந்தியப் படையினருக்கு வழங்கப்பட்டுவிட்டது.

கடலில் ஏற்பட்ட மாற்றம்

ஒக்டோபர் 8ம் திகதி, கடலிலும் சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. இலங்கைக் கடற்பரப்பில் ரோந்துக்கடமைகளில் ஈடுபடவேண்டும் என்ற உத்தரவு இந்தியக் கடற்படையினருக்கு புதுடில்லியால் வழங்கப்பட்டது. இந்தியக் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைளில், ஸ்ரீலங்கா கடற்படையினரும் தம்மை இணைத்துக் கொண்டதும், புலிகளுக்கு எதிரான இந்திய-ஸ்ரீலங்காப் படைகளின் கூட்டு நடவடிக்கைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்ததை வெளிப்படுத்துவதாக இருந்தது.

இப்படி இருக்கையில், வடக்கு கிழக்கில் புலிகள் சிங்களவர்களுக்கு எதிராக வன்முறையில் இறங்கி, 260 சிங்களவர்களைக் கொலை செய்ததன் பிரதிபலிப்பால்தான் இந்தியப் படைகள் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டி ஏற்பட்டது என்று இன்றும் பலர் கூறித்திரிகின்றார்கள்.

உண்மையிலேயே சிங்கள மக்களுக்கு எதிரான வன்முறைகள் வடக்கு கிழக்கில் வெடிப்பதற்கு முன்னரேயே, புலிகளுக்கு எதிரான கடுமையாக நிலைப்பாட்டை எடுக்கும் தீர்மானத்திற்கு இந்தியத் தலைமை வந்துவிட்டிருந்தது என்பதுதான் உண்மை. இந்த உண்மை, புத்திஜீவிகள் என்று தம்மைக் கூறிக்கொண்டு கட்டுரைகள் எழுதித்தள்ளும் சிலருக்குப் புரியாமல் போனதுதான் வேடிக்கை.

புலிகளின் தலைமையைச் சந்திக்கப் புறப்பட்ட இந்தியப்படை அதிகாரிகள்:

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியப் படையினரைக் களமிறக்க வேண்டும் என்ற கடுமையான உத்தரவு புதுடில்லியில் இருந்து கிடைக்கப் பெற்றதும், ஈழத்தில் இருந்த இந்தியப் படை உயரதிகாரிகள் சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். புலிகளை எதிர்கொள்வது – அதுவும் புலிகளை அவர்களது மண்ணில் எதிர்கொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பதை, கடந்த சில மாதங்களாக களத்தில் நின்ற இந்திய அதிகாரிகளால் தெளிவாக உணரக்கூடியதாக இருந்தது.

புலிகளின் மன உறுதி, அவர்களின் போர்க்குணம், தியாக மனப்பான்மை, முக்கியமாக புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு என்பன, புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் இறங்குவதால் ஏற்படக்கூடிய விபரீதத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தின.

மிக முக்கியமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் உறுதியும், நிதானமும் அவர்களை அதிகம் அச்சமடைய வைத்திருந்தன.  அதேவேளை, புலிகளுக்கு எதிராக களமிறங்கியேயாக வேண்டும் என்ற தமது தலைமைப் பீடத்தின் உத்தரவையும் அவர்களால் மீறமுடியவில்லை. அந்த விடயத்தில் இந்தியாவின் அரசியல் தலைமை உறுதியாக இருப்பதையும் அவர்களால் நன்றாகவே உணர்ந்துகொள்ள முடிந்தது.

எனினும், புலிகளுடனான யுத்தத்தை தவிர்க்கும் இறுதி முயற்சி ஒன்றில் ஈடுபட்டுப் பார்ப்பதற்கு இலங்கையில் இருந்த இந்தியப் படை உயரதிகாரிகள் திட்டமிட்டார்கள்.

இலங்கையில், நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கும், இந்தியப் படைகளின் 54வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான மேஜர்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கும், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்கொப்டரில் பறப்பட்டு விடுதலைப் புலிகளின் தலைவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.

இந்தியத் தலைமையின் முடிவைச் சொல்லி, இடம்பெற இருக்கும் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு புலிகள் தமது ஆயுதங்களை உடனடியாக இந்தியப் படையிடம் கையளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதே அவர்களது நோக்கமாக இருந்தது.

யாழ் பல்லைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய இந்தியப்படை அதிகாரிகளுக்கு அங்கு பாரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

தொடரும்…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அதிகாரிகள் அவதானித்த மாற்றங்கள் : (அவலங்களின் அத்தியாயங்கள்- 82) – நிராஜ் டேவிட்
  • by admin
  • December 7, 2013
ltte1256-150x150.jpg
 
இறுக்கமான முகங்களுடன் புலிகள்
 

புலிகளுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்கான இறுதி முயற்சி ஒன்றை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்தியப் படை உயரதிகாரிகள் இருவர் புலிகளின் தலைவரைச் சந்திக்கப் புறப்பட்டார்கள்.

இலங்கையில்; நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் கட்டளையிடும் அதிகாரி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங்கும், இந்தியப் படைகளின் 54வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரியான மேஜர்.ஜெனரல் ஹரிக்கிரத் சிங்கும், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிக்காப்டரில் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கினார்கள்.

விடுதலைப் புலிகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை இந்தியப்படையினரிடம் ஒப்படைக்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுப்பதே அந்த அதிகாரிகளின் நோக்கமாக இருந்தது.

இந்தியப்படையினரின் இராணுவ பலம் பற்றி விபரித்து, பலவந்தமாக புலிகளிடம் இருந்து ஆயுதங்களைக் களைவதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் விடயத்தை விளக்கி, இந்தியப்படையினரிடம் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கும்படி வற்புறுத்துவதே அவர்களின் திட்டமாக இருந்தது.

புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப் படையினருடன் அவர்கள் மோத வேண்டி ஏற்படும் என்பதுடன், அதன் காரணமாக புலிகள் அமைப்பு முற்றாகவே அழிக்கப்பட்டு விடவும் சந்தர்ப்பங்கள் உள்ளன என்பதையும் அவர்கள் புலிகளின் தலைவரிடம் தெளிவுபடுத்த விரும்பினார்கள்.

மாற்றங்கள்

யாழ் பலகலைக்கழக மைதானத்தில் இந்தியப் படை அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் வந்திறங்கியது. அதில் இருந்து இறங்கிய இந்தியப்படை அதிகாரிகளால் அங்கு காணப்பட்ட சில மாற்றங்களை அவதானிக்க முடிந்தது.

மைதானம் முழுவது ஆயுதம் தாங்கிய விடுதலைப் புலிகள் காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் முகங்கள் இறுக்கமடைந்து, கடுமையாக காணப்பட்டதை அந்த இந்திய அதிகாரிகள் அவதானித்தார்கள்.

ஹரிக்கிரத் சிங், திபீந்தர் சிங் போன்ற இந்தியப்படை அதிகாரிகள் கடந்த இரண்டு மாதங்களாக விடுதலைப் புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழகியவர்கள். விடுதலைப் புலிகளின் திருமணச் சடங்குகள் உட்பட பல குடும்ப நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு புலிகளுடன் நெருக்கமான நட்பைப் பேணி வந்தவர்கள்.

அந்த அதிகாரிகளை புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று, முல்லைத்தீவிலுள்ள தமது தளங்களையும், காடுகளையும் சுற்றிக் காண்பிக்கும் அளவிற்கு புலிகளுடன் அன்னியோன்யமாகப் பழக்கத்தையும், நெருக்கத்தையும் கொண்டிருந்தவர்கள்.

புலி உறுப்பினர்களும் அந்த இந்தியப்படை அதிகாரிகளை மிகவும் மதித்ததுடன், அவர்களைக் காணும் சந்தர்ப்பங்களில் கைகளை அசைத்து தமது அன்பைப் பரிமாறும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள்.

ஆனால் அன்றைய தினம் அந்த இந்திய அதிகாரிகள் பல்கலைக்கழக மைதானத்தில் வந்திறங்கிய போது, புலி உறுப்பினர்கள் எவருமே முன்னர் போன்று இந்திய அதிகாரிகளுடனான தமது நட்பை வெளிக்காண்பிக்க முன்வரவில்லை.

காவல் கடமைகளில் ஈடுபட்டிருந்த புலி வீரர்களின் முகங்கள் மிகவும் இறுக்கமாக காணப்பட்டன. நிலைத்த பார்வைகளுடன், ஆயுதங்களை ஊறுதியாகக் கரம்பற்றி தமது காவல் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். சிறிய புன்முறவல் கூடச் செய்யாத அந்த இளைஞர்களைப் பார்த்ததும் இந்தியப்படை அதிகாரிகளுக்கு மிகுந்த ஆச்சரியமாகப் போய்விட்டது.

புலிகளுடனான தமது நட்பைப் பயன்படுத்தியும், சிறிது பயமுறுத்தல்களைப் பிரயோகித்தும் புலிகளைப் பணியவைத்துவிடலாம் என்ற எண்ணத்துடன் அங்கு சென்றிருந்த இந்தியப்படை அதிகாரிகள் இருவருக்கும், புலிகளின் முகங்களில் ஏற்பட்டிருந்த அந்தப் புதிய மாற்றம், தாம் நினைத்துவந்தது போன்று நிலமை அவ்வளவு இலகுவாக இருக்கப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்தது.

விடுதலைப் புலிகள் சூழ்நிலைகளுக்கேற்ப தமது உணர்வுகளையும், தங்களையும் மாற்றிவிடும் பக்குவத்தைப்; பெற்றிருந்தது மறுபடியும் அன்று அவர்களுக்குப் புரிந்தது.

நாங்கள் சாகத் துணிந்துவிட்டோம்

புலிகளின் தலைவர் பிரபாகரைச் சந்திப்பதற்கென்றே அந்த அதிகாரிகள் அங்கு வருகை தந்தார்கள். பல்கலைக்கழக் மைதானத்தில் வந்திறங்கிய இந்தியப்படை அதிகாரிகளை புலிகளின் உள்ளூர் தலைவர் ஒருவர் புலிகளின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர்களைச் சந்தித்த புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையா, தலைவர் பிரபாகரன் அங்கு இல்லை என்பதைத் தெரிவித்து, இந்திய அதிகாரிகள் தலைவரைத் தேடி வந்ததன் காரணத்தை விசாரித்தார்.

இந்தியப் படை அதிகாரிகள் தாம் அங்கு வந்த நோக்கத்தை விளக்கினார்கள். புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறும் பட்சத்தில் இந்தியப்படைகள் அவற்றைப் பலவந்தமாகக் களைய நேரிடும் என்பதையும், அவ்வாறு ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் பட்சத்தில் புலிகள் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தார்கள்.

புலிகள் அமைப்பின் அரசியல் எதிர்காலம் இதனால் பாதிக்கப்பட்டுவிடும் என்று விளக்கிய அதிகாரிகள், இந்த முறுகல் நிலையைத் தவிர்த்து புலிகள் அரசியல் ரீதியாக எவ்வாறு நகர்வுகளை மேற்கொண்டு வெற்றிபெறலாம் என்றும் ஆலோசனைகள் வழங்கினார்கள்.

அனைத்தையும் பொறுமையாகச் செவிமடுத்த மாத்தையா, முகத்தில் எந்தவித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல், புலிகளின் நிலைப்பாட்டை இந்தியப்படை அதிகாரிகளிடம் உறுதியாகத் தெரிவித்தார்.

நாங்கள் சாகத் துணிந்து விட்டோம். மரியாதையை இழந்து வாழ்வதைவிட சாவை அணைத்துக்கொள்வது மேல் என்று மாத்தையா தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுவதற்கு அங்கு எதுவுமே இருக்கவில்லை. இரண்டு தரப்பினரும் கைகுலுக்கி விடைபெற்றார்கள்.

புலிகளின் உணர்வுகளையும், அதில் காணப்பட்ட நியாயப்பாட்டையும் இந்தியப் படை அதிகாரிகளால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. தமது கொள்கையிலும், தமது மக்களின் விடுதலை தொடர்பாகவும், புலிகள் காண்பித்த உறுதியைக் கண்ட இந்திய அதிகாரிகளுக்கு, புலிகள் அமைப்பு தொடர்பாக பாரிய ஒரு பிரமிப்பு ஏற்பட்டது. அதிக மரியாதையும் ஏற்பட்டது.

(பின்நாட்களில் இந்த இரண்டு அதிகாரிகளும் புலிகள் பற்றியும், அவர்களுடனான யுத்தம் பற்றியும் தமது சுயசரிதைகளிலும், செவ்விகளிலும் குறிப்பிடும் போது, தமது இந்த உணர்வுகளை பிரமிப்புடன் வெளிப்படுத்தியிருந்தார்கள்.)

ஆனால் ஒரு இராணுவ அதிகாரி என்ற ரீதியில் இந்திய அரசியல் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடந்தேயாகவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதனால், புலிகளுக்கு எதிரான அடுத்த நடவடிக்கைகளை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற யோசனைகளுடன், மீண்டும் பலாலி விமானத் தளத்தை வந்தடைந்தார்கள்.

யுத்த ஏற்பாடுகள்:

புலிகள் மீது யுத்தத்தைத் திணிப்பது என்பது முடிவாகிவிட்டபின்னர், அதனை எவ்வாறு மேற்கொள்ளுவது என்பது பற்றி இந்தியப்படை அதிகாரிகள் மந்திராலோசனை நடாத்தினார்கள். அவர்களைப் பொறுத்தவரை புலிகள் மீது உடனடியாக இராணுவ நடவடிக்கை எடுப்பதில் அவர்களுக்கு மூன்று சிக்கல்கள் இருந்தன.

முதலாவது, இந்தியப் படையினர் இலங்கைச் சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டது போதுமானதாக இருக்கவில்லை. யாழ்ப்பாண வரைபடங்கள் போதியளவு அவர்களிடம் கிடையாது. புலிகளின் மறைவிடங்கள், பதுங்குகுழிகள், ஆயுதக் கிடங்குகள் போன்றனவற்றின் அமைவிடங்கள் பற்றி இந்தியப்படையினருக்கு கிடைத்த தகவல்கள் போதுமானதாக இருக்கவில்லை.

உடனடியாக புலிகள் மீது தாக்குதல்கள் நடாத்தி, புலிகளும் பதில் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டால்; அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது. புலிகள் வேறு கெரிலாப் பாணியிலேயே போரிடப் போவதால், அவர்களை எதிர்கொள்வதற்கு இந்திய ஜவான்களுக்கு போதிய பயிற்சியை அளிப்பதற்கு கால அவகாசம் தேவைப்பட்டது.

இரண்டாவதாக, யாழ்குடாவில் சண்டைகள் ஆரம்பமானால் அதிக அளவில் ஏற்படக்கூடியதான பொதுமக்கள் உயிரிழப்புக்கள் இந்தியப் படை அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்துவதாக இருந்தது.

மூன்றாவதாக, புலிகளுடனான யுத்தத்திற்கு தென் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஏற்படக்கூடியதான உணர்வலைகள் தொடர்பான அச்சமும், இராணுவ நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. விடுதலைப் புலிகள் எம்.ஜி.ஆர். உடனும், அவர் தலைமையிலான அ.தி.மு.க. உடனும் மிகுந்த நெருக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

அக்காலத்தில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. கட்சியே தமிழ் நாட்டில் ஆட்சியில் இருந்தது. அத்தோடு மத்திய இந்தியாவில் ஆட்சி நடாத்திக்கொண்டிருந்த இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஒரு தோழமைக் கட்சியாகவும் அ.தி.மு.கா. இருந்ததால், தமிழ் நாடு அரசின் ஆதரவைப் பெறுவது, இந்தியப்படைகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கு இன்றியமையாததாக இருந்தது.

அத்தோடு, தமிழ் நாட்டில் அலுவலகம் அமைத்துத் தங்கியிருந்த விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டு மக்களிடையே இந்திய நடவடிக்கைகளுக்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொள்ளவும் சந்தர்ப்பம் இருந்ததால், தமிழ் நாடு அரசின் ஆதரவைப் பெறுவது புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மாணித்திருந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு அவசியமாக இருந்தது.

இவற்றைக் கருத்தில் எடுத்துக்கொண்ட இந்தியப்படை அதிகாரிகள், இவை அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடியதான ஒரு திட்டத்தைத் தீட்டினார்கள். அந்தத் திட்டத்தில் முதலாவதாக இந்தியாவின் தமிழ் நாட்டுத் தலைவர்களைச் சமாளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்திய இராணுவ அதிகாரி திபீந்தர் சிங் சென்னைக்குப் பயணமானார்.

அதேவேளை, புலிகளுக்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கைக்கு நாள் குறிக்கப்பட்டது.

1987ம் ஆண்டு அக்டோபர் 10ம் திகதியே அந்த நாள்.

 

புலிகளின் தலைவர் பிரபாகரனை கைதுசெய்யும் நடவடிக்கை (அவலங்களின் அத்தியாயங்கள்- 83) – நிராஜ் டேவிட்
  • by admin
  • December 7, 2013
Frame-062-150x150.jpg

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினமாக 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதியை இந்தியப்படை அதிகாரிகள் தேர்ந்தெடுத்தார்கள்.

விடுதலைப் புலிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் திடீர் தாக்குதல்களை நடத்துவதுடன், விடுதலைப் புலிகளின் தலைவரை கைது செய்வதும் இந்தியப் படையினர் வகுத்திருந்த திட்டங்களில் பிரதானமாக இருந்தது.

திடீர் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைதுசெய்துவிட்டால், அனைத்துச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டுவிடும் என்றே இந்தியப் படையினர் நினைத்தார்கள். அந்த அடிப்படையில் அவர்கள் தமது திட்டங்களை வகுக்க ஆரம்பித்தார்கள்.

அதேவேளை, புலிகளுக்கு எதிராக அவர்கள் மேற்கொள்ள இருந்த இந்த இராணுவ நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு மற்றொரு பக்கம் ஒருவித பயமும் இருக்கத்தான் செய்தது. அதாவது தமிழ் நாட்டில் இந்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்வலைகள் எழும்பிவிட்டால் என்ன செய்வது என்பதே அந்தப் பயம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும், தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆரிற்கும் இடையிலான நட்பு பற்றியும் இந்தியப்படை அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தார்கள். எனவே தமிழ்நாட்டை, குறிப்பாக தமிழ் நாட்டில் ஆட்சி அதிகாரத்தைத் தனதாகக் கொண்டிருந்த அ.தி.மு.கா.வை கைக்குள் போட்டுக்கொண்டால் இந்தியப் படைகளின் இராணுவ நடவடிக்கை தொடர்பாக தமிழ் நாட்டில் எழக்கூடியதான சிக்கல்களை ஓரளவு சமாளித்துவிடலாம் என்று நினைத்தார்கள்.

ஏற்கனவே இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் பாரிய ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, தமிழ் நாட்டு மக்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியை இந்திய அரசு ஆரம்பித்திருந்தது. ஜுலை மாதக் கடைசியில் அல்லது ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பான விளக்கத்தை இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி நேரடியாகவே வழங்கியிருந்தார். மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்திற்கு தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களையும் அழைத்து வருவதில் ராஜிவ் காந்தி வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும் தோன்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. (அப்பொழுது திரு. பிரபாகரன் அவர்கள் இந்திய அரசின் அழைப்பின் பெயரில் புதுடில்லி அழைத்துவரப்பட்டு அஷோக்கா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.) ஆனால் அந்தக் கூட்டத்திற்கு பிரபாகரன் அவர்கள் சமுகமளிக்கவில்லை.

பாரதியாரின் சிங்களத் தீவிற்கு ஓர் பாலம் அமைப்போம் என்ற பாடல் வரிகள் திரும்பத்திரும்ப ஒலிக்க, மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்தக் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தார்கள். சென்னையில் தங்கியிருந்த இலங்கைத் தமிழர்களும் ஆயிரக் கணக்கில் கலந்துகொண்டார்கள். ஈழத்தில் இந்தியா மேற்கொள்ள இருந்த நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இந்தியாவின் நடுவன் அரசு ஈடுபட ஆரம்பித்திருந்த முதலாவது சம்பவம் என்று இதனைக் குறிப்பிடலாம்.

அதனைத் தொடர்ந்து பல பத்திரிகையாளர் மாநாடுகள், பிரச்சாரங்கள் என்று இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு சார்பாக தமிழ் நாடு மக்களை திருப்பும் பலவித முயற்சிகளில் இந்திய அரசு தன்னை ஈடுபடுத்தி வந்தது. ஆனாலும், புலிகளுக்கு எதிரான ஒரு யுத்தத்தை தமிழ் நாடு மக்கள் எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ளுவார்கள் என்ற சந்தேகம் இந்தியாவின் மத்திய அரசாங்க அதிகாரிகளிடம் காணப்படவே செய்தது.

எனவே தமிழ் நாட்டில் இருந்து எழக்கூடியதான பிரச்சினைகளைச் சமாளிக்கும் நகர்வுகளை அவர்கள் ஒவ்வொன்றாக மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.

சென்னையில் யுத்தத் தாங்கிகள்

முதலில் இந்தியப் படையின் ஒரு பிரிவினர் சென்னையின் ~டிபென்ஸ் காலனியில் பகிரங்கமாக முகாம் அமைத்து பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சென்னையின் பறங்கிமலைப் பகுதிகளிலும், பட் றோட், ஆலந்தூர், மீனம்பாக்கம், கிண்டி, தாம்பரம் போன்ற பிரதேசங்களில் இந்தியப் படையினர் ஆயுதங்களுடன் வாகனங்களில் நடமாடவும், ரோந்து நடவடிக்கைகளிலும் ஈடுபடவும் ஆரம்பித்தார்கள்.

நிச்சயமாக இந்த நடவடிக்கைகள் தமிழ் நாட்டு மக்களை பயமுறுத்த மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகவே அமைந்திருந்தது. ஏனெனில், இந்தியப் படையினர் பயிற்சி நடவடிக்கைளில் ஈடுபட ஏராளமான இடங்கள் அவர்களுக்கு இருந்தன. பாரிய முகாம்களும், காட்டுப் பிரதேசங்களும், வளாகங்களும் இந்தியப் படையினர் பயிற்சிகளை மேற்கொள்ளும் முகமாக இருந்தன. அப்படி இருக்கையில் பொதுமக்கள் குடியிருப்புகளின் மத்தியல் இந்தியப்படை முகாம் அமைத்து நடவடிக்கைகளில் ஈடுபட ஆரம்பித்ததானது, தமிழ் நாட்டுத் தமிழ் மக்களை அச்சுறுத்தும் உள்நோக்கத்தைக் கொண்டதாகவே இருந்தது.

இந்தியப் படையினர் எதிர்பார்த்தது போலவே இந்தியப் படையினரைப் பார்ப்பதற்கென்று பெரும் திரளான மக்கள் திரண்டார்கள். ஆயுதங்களுடன் கூடிய இந்தியப்படையினரைக் கண்ட தமிழ் நாட்டு மக்கள் மிகுந்த வியப்படைந்தார்கள். சாதரணமாகவே வெறும் லத்தி கம்புகளுடன் நடமாடும் பொலிசாரைப் பார்த்தே அச்சப்பட்ட தமிழ்நாட்டு ஜனங்களுக்கு ஆயுதங்களுடன் கூடிய இந்தியப் படையினர் அதிக அச்சத்தையும், பிரமிப்பபையும் ஏற்படுத்துபவர்களாகவே தோன்றினார்கள். அதுவும் இந்தியப் படையினர் கைகளில் காணப்பட்ட எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளின் தோற்றம் அவர்களுக்கு அதிக பிரமிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்தது. அதிக துவாரங்களுடன் காணப்பட்ட எஸ்.எம்.ஜி. அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தன. இந்தத் துப்பாக்கியில் காணப்படும் ஒவ்வாரு துவாரங்களினூடாகவும் பல சன்னங்கள் ஒரே தடவையில் பறப்பட்டுச் சென்று எதிரிகளைத் தாக்கும் என்று எஸ்.எம்.ஜி. பற்றி பொதுமக்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

பறங்கிமலை டிபென்ஸ் காலனி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தியப்படை முகாமில் இரண்டு யுத்த தாங்கிகளும் நிறுத்தப்பட்டிருந்தன. பொது மக்களின் ஆச்சரிய விழிகளை இந்தக் காட்சிகள் மேலும் அகல விரியவைத்தன.

தமிழ் நாட்டு மக்களை ஆச்சரியப்படுத்தி, அச்சமடைய வைக்கும் இந்தியப்படைகளின் திட்டம் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தன. அத்தோடு, சாதாரணமாகவே நாட்டுப் பற்று அதிகம் கொண்ட தமிழ் நாட்டு மக்களுக்கு, தங்களது படைகளின் பிரசன்னத்தால் ஏற்பட்ட பிரமிப்பானது, அவர்களது நாட்டுப்பற்றை இன்னும் அதிகரிக்கச் செய்தன. தாம் ஒரு இந்தியன் என்பதில் மிகவும் பெருமைப்பட்டார்கள்.

மீனம்பாக்கம் விமானப்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்திருந்த மிராஜ் 2000 சண்டை விமானத்தின் சத்தங்களும், சாகசங்களும், இந்தியப் படை அதிகாரிகளின் நோக்கங்கள் அனைத்தையும் இலகுவாக நிறைவேற்றியிருந்தன.

தமிழ் நாட்டைச் சாமாளிப்பதில் வெற்றி

அடுத்ததாக, இந்தியப்படை அதிகாரிகள் தமது அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்தார்கள். தமிழ் நாடு அரசைப் பணியவைக்கும் நகர்வே அது.

உடல் நலக் குறைவு காரணமாக தமிழ் நாடு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் சிகிட்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தது அவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்திருந்தது.

அப்பொழுது பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களே தமிழ் நாட்டு அமைச்சரவைப் பொறுப்புக்களை தற்காலிகமாக கவணித்து வந்தார்.

பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழ் நாட்டு அமைச்சரவையில் மிகவும் பிரபல்யமான ஒருவர். எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர். அத்தோடு அண்மைக்காலமாக விடுதலைப் புலிகளுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையிலான தொடர்புகள் அனைத்திலும் பண்ருட்டியாரின் பிரசன்னமும் காணப்படவே செய்தது. எனவே பண்ருட்டி ராமச்சந்திரனை மடக்கிவிட்டால், தமிழ் நாட்டு அமைச்சரவையை வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்பதே இந்திய அதிகாரிகளின் திட்டமாக இருந்தது.

அக்டோபர் 7ம் திகதி இரவு சென்னை பயணமான திபீந்தர் சிங் பண்ருட்டி ராமச்சந்திரனைத் தனியாகச் சந்தித்து உரையாடினார்.

விடுதலைப் புலிகளுக்கு தனக்கும் இடையிலான நல்ல நட்பு பற்றி விபரித்த திபீந்தர் சிங், இந்திய தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டு புலிகளுக்கு எதிரான ஒரு சிறு மிரட்டலை மேற்கொண்டேயாகவேண்டிய கட்டாயத்திற்கு தாம் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

புலிகள் பாக்கிஸ்தான், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்திருப்பதாகவும், இது இந்தியாவிற்கு பாதகமாக மாறி வருவதாகவும் தெரிவித்த திபீந்தர் சிங், புலிகளை மிரட்டி இந்தியாவின் வழிக்குள் கொண்டு வரும் நோக்குடன், புலிகளுக்கு எதிராக ஒரு சிறு நடவடிக்கையை எடுப்பதற்கு தாம் யோசித்து வருவதாக நாசுக்காகத் தெரிவித்தார்.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை புலிகளை நிராயுதப்படுத்த மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும், இது ஓரிரு நாட்கள் மட்டுமே தொடர இருப்பதாகவும், பண்ருட்டி ராமச்சந்திரனிடம் தெரிவித்தார்.

இலங்கையில் சிங்களவர்களைக் கொலைசெய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் மீளவும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதால், புலிகளைத் தடுக்காத பட்சத்தில் இந்தியப்படை இலங்கையில் இருந்து வெளியேறியேயாகவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தெரிவித்த திபீந்தர் சிங், இது இந்திய நாட்டிற்கு சர்வதேச மட்டத்தில் பாரிய தலை குணிவை ஏற்படுத்திவிடும் என்றும் குறிப்பிட்டார்.

பண்ருட்டி ராமச்சந்திரனின் மனம் படிப்படியாக மாறியது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து பண்ருட்டி இராமச்சந்திரன் புதுடில்லி புறப்பட்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் சந்தித்தார்.

ராஜீவும் தம்பங்கிற்கு புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்திப் பேசியதுடன், தமிழ் நாட்டுத் தலைவர்கள் தேச நலனுடன் செயற்படுவார்கள் என்று தாம் எதிர்பார்பதாகவும் கூறிவைத்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியப்படைகளின் நடவடிக்கைளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டு, பண்ருட்டி இராமச்சந்திரன் தமிழ் நாடு திரும்பினார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டில் ஏற்டக்கூடியதான தடைகளை நீக்கிவிட்ட திருப்தியில் இந்தியப்படை அதிகாரிகள் தமது அடுத்த கட்ட திட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்தார்கள்.

இந்தியாவின் வரலாற்றில் அந்த நாடு மிகவும் வெட்கி தலை குணியவேண்டிய ஒரு செயலை இந்தியப்படை அடுத்ததாக மேற்கொண்டது.

புலிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை ஆரம்பிக்கு முன்னதாக, இந்தியப்படை மிகவும் கேவலமான நடவடிக்கை ஒன்றில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டது.

இந்தியா தன்னை ஒரு ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் தகைமையை இழக்கும்படியான அந்த நடவடிக்கைக்கு நேரு வழிப் பேரன் ராஜீவ் காந்தி அனுமதி அளித்ததுதான் மிகப் பெரிய கொடுமை.

 

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை (அவலங்களின் அத்தியாயங்கள்- 84) – நிராஜ் டேவிட்
  • by admin
  • December 7, 2013
 
Freme-0036-150x150.jpg
 

1987ம் ஆண்டு ஒக்டோபர் 9ம் திகதி இரவு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மாலைச் செய்தியறிக்கை நிலமையின் தீவிரத்தை யாழ்ப்பாண மக்களுக்கு நன்றாகவே விளக்கியிருந்தது.

புலிகளுக்கு எதிராக இந்தியப்படைகள் போர் பிரகடனம் செய்திருக்கும் விடயம் செய்தியறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.

புலிகளை நீராயுதபாணிகளாக்கும் நோக்கத்துடன் இந்திய அமைதிகாக்கும் படையினர் களமிறக்கப்பட்டிருப்பதாக லங்காப் புவத்தை மேற்கோள் காண்பித்து அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைவிட அதிர்ச்சிகரமான மற்றொரு விடயமும் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடைய தலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் விலை அறிவிக்கப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை உயிருடனோ, அல்லது பிணமாகவோ பிடிக்கும் ஒருவருக்கு ஒரு மில்லியன் ரூபாய் பணம் பரிசாக வழங்கப்படும் என்று சிறிலங்காவின் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அறிவித்திருந்தார்.

நிலமையின் தீவிரத்தை இந்த அறிவிப்பு யாழ்மக்களுக்கு தெள்ளெனப் புரிய வைத்திருந்து.

புலிகளின் தலைவரைக் குறிவைத்து நகர்வு:

9ம் திகதி இரவு இந்தியப் படைகளின் சீக்கிய அதிரடிப்படைப் பிரிவினர் ஒரு இரகசிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிப்பதற்கான அதிரடி நடவடிக்கையே அது.

யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து சுமார் அரை மைல் தொலைவில் உள்ள பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் முகாமிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாக இந்தியப் படையினர் நம்பியிருந்தார்கள். இந்தியப் படையினருக்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலான பல சந்திப்புக்கள் அந்த இடத்தில் நடைபெற்றும் இருந்தன.

9ம் திகதி காலை புலிகளின் தலைவர் அந்த இடத்தில் தங்கியிருப்பதாக உளவுத் தகவல்கள் நம்பகரமான தரப்பில் இருந்து இந்தியப் படைத்துறைக்குக் கிடைக்கப் பெற்றிருந்தது. அதனால்தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைதுசெய்யும் அந்த இரகசிய நடவடிக்கை திட்டமிடப்பட்டது.

ஒக்டோபர் 9ம் திகதி இரவு 9 மணியளவில் சுமார் 25 சீக்கிய அதிரடிப்படையினர் இந்தப் பிரம்படி முகாமைக் குறிவைத்து நகர்வொன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் பிரம்படி வீதிக்கு சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ள பிரவுன் வீதியில் வசித்துவந்த ஒருவரின் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்பட்டது. அவர் கதவைத் திறக்க வந்தபோது, வாசலில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு வெளியில் வருமாறு உத்தரவிடப்பட்டது. அவ் உத்தரவுக்கமைய செய்துவிட்டு வெளியில் வந்தவருக்கு பலத்த அதிர்ச்சி ஏற்பட்டது.

அவரது வீட்டைச் சூழ இராணுவ சீருடையில் ஆயுதம் தரித்த சுமார் 25 சீக்கியப் படை வீரர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அனைவரினதும் முகங்களிலும் பதட்டம் காணப்பட்டது.

யாழ் கோட்டைக்கு எப்படிச் செல்லவேண்டும் என்று அவர்கள் கேட்டார்கள். அந்த நபர் வழியைக் காண்பித்ததும், மதில்களைத் தாண்டிக் குதித்தபடி அவர்கள் அந்த திசையை நோக்கி புறப்பட்டார்கள். சிறிது நேரத்தில் காணாமல் போனார்கள்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்த பிரம்படி வீதி முகாம் மீது அதிரடித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு, புலிகளின் தலைவரைக் கைது செய்தும் திட்டத்துடன் அவர்கள் முயற்சி ஒன்றை மேற்கொண்டதாகவும், ஏதோ காரணத்தினால் அது கைகூடவில்லை என்றும் மக்கள் மத்தியில் மறு நாள் செய்தி பரவியிருந்தது.

இந்தியாவின் ஜனநாயக முகமூடியை கிழித்த நடவடிக்கை

அக்டோபர் 10ம் நாள், ஊரடங்கு உத்தரவுடனும், முன்னைய நாள் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தியப் படையினரின் இரகசிய நடவடிக்கைகள் பற்றிய செய்திகளுடனும் உதயமானது.

அன்று காலை யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளின் மராத்திய காலட்படையின் முதலாவது பட்டாலியன் ( First Battalion of Maharatta Light Infantry ) நகர்வொன்றை மேற்கொள்ள ஆரம்பித்தது.

இந்தியாவின் ஜனநாயக முகமூடியை கிழித்த ஒரு நகர்வென்று இந்தியப் படையின் அந்த நகர்வைக் குறிப்பிடலாம்.

யாழ் குடாவில் இயங்கிவந்த பத்திரிகைக் காரியாலயங்களையும், அச்சகங்களையும் முடக்கிவிடும் நோக்கத்துடன் இந்தியப் படையின் அந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டது.

யாழ்பாணத்தில் இயங்கிவந்த ஈழமுரசு, முரசொலி, ஈழநாடு போன்ற பத்திரிகை காரியாலயங்களைச் சுற்றிவழைத்த இந்தியப் படையினர் அந்த பத்திரிகை அலுவலகங்களை குண்டு வைத்துத் தகர்த்தார்கள்.

உலகின் மிகச் சிறந்த ஜனநாயக் கட்டமைப்பைக் கொண்ட நாடு என்று பெருமையாகத் தன்னைக் குறிப்பிட்டுக் கொள்ளும் இந்தியா, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட இந்த இழி செயலை, சரித்திரம் என்றுமே மன்னிக்க மாட்டாது.

எந்த ஒரு நாடுமே யுத்த காலங்களில் கூட நடுநிலையான பத்திரிகைகளின் மீது கைவைத்தது கிடையாது. அதுவும் பகிரங்கமாகச் சென்று பத்திரிகைக் காரியாலயங்களை குண்டுவைத்து தகர்ப்பதென்பது, எந்த ஒரு ஜனநாயகவாதியினாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒரு நடவடிக்கை என்றுதான் கூறவேண்டும்.

பத்திரிகை தர்மம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் பேசிக்கொள்ளும் தார்மீக உரிமையை இந்தியா முற்றாகவே இழந்துவிட்ட ஒரு சந்தர்ப்பம் என்று அதனைக் குறிப்பிட முடியும்.

அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் உதயன் பத்திரிகை காரியாலயத்தையும் சுற்றிவளைத்து சீல் வைத்தார்கள். பின்னர் கொக்குவில் பிரதேசத்தில் இயங்கிவந்த புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி நிலையத்தையும் கைப்பற்றி நிலை கொண்டார்கள்.

யாழ் நிலவரம் தொடர்பாக நடுநிலையான செய்திகள் வெளிவர வேண்டும் என்பதற்காகவே தாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, தமது இந்த நடவடிக்கைகளுக்கு இந்தியா பின்னர் நியாயம் கற்பித்திருந்தது. ஆனால் உண்மையிலேயே, அடுத்த சில நாட்களில் யாழ் குடாவில் இந்தியப் படைகள் ஆட இருந்த கோர தாண்டவம் பற்றிய உண்மையான செய்திகள் வெளிவராமல் தடுக்கவே இந்தியா இப்படியான கீழத்தரமான செயல்களை மேற்கொண்டிருந்தது.

புலிகளின் அலுவலகங்கள் முற்றுகை

இதே தினத்தில் சென்னையில் புலிகளின் அலுவலகங்கள் சிலவற்றைச் சுற்றிவளைத்த இந்தியப் பொலிஸார், புலிகளுக்கு சொந்தமான ஆறு தொலைத் தொடர்பு கருவிகளையும் கைப்பற்றி இருந்தார்கள்.

இதே தினத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த விடுதலைப் புலிகளின் சில முகாம்களும் இந்தியப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டன. சில விடுதலைப் புலி உறுப்பினர்களும், அப்பாவித் தமிழ் இளைஞர்களும் இந்தியப்படையினரால் கைதுசெய்யப்பட்டார்கள். இதுபற்றி அன்றைய ஆல் இந்திய ரேடியோ மாலைச் செய்தியில் 131 விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்தியப்படையினரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் இருந்து 27 ஆயுதங்களையும் இந்தியப்படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் யுத்தப் பிரகடனம்:

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி: விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது யுத்தத்தை இந்தியா உத்தியோகபூர்வமாகப் பிரகடனப்படுத்தியது.

தனது தங்கையைக் காப்பாற்ற, தனது தாயைக் காப்பாற்ற, தனது மண்ணை எதிரியிடம் இருந்து காப்பாற்ற ஆயுதம் தரித்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா அன்றைய தினம் மேற்கொள்ள ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை நாட்கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் அல்ல, வருடக்கணக்கில் அல்ல இரண்டரை தசாப்தகாலமாக நடைபெற்று, தற்பொழுதும் தொடர்ந்துகொண்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப்படையினருக்கும் இடையில் மிக மும்முரமான யுத்தம் ஆரம்பமாகியது. இந்த யுத்தத்தின் அத்தியாயங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டு ஒரு நீண்ட வரலாறு.

அந்த வரலாற்றின் மேலும் சில பக்கங்களை தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலி முக்கியஸ்தர்களின் தலைமறைவு வாழ்க்கை- (அவலங்களின் அத்தியாயங்கள்- 85): நிராஜ் டேவிட்
  • by admin
  • December 9, 2013
Freme-0159-150x150.jpg
 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையிலான மிக மும்முரமான யுத்தம் 1987ம் வரும் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஆரம்பமானது.

இந்திய -புலிகள் யுத்தத்தின் பல விடயங்களை ஏற்கனவே நாங்கள் இந்தத் தொடரின் முதல் 50 அத்தியாயங்களிலும் சற்று விரிவாகப் பார்த்திருந்தோம். யுத்த காலங்களில் இந்தியப் படையினராலும், இந்தியப் படையினரின் கைக்கூலிகளான சில தமிழ்க் குழுவினராலும் தமிழ் மக்கள் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் நிறைவே பார்த்திருந்தோம்.

இந்திய இராணுவம் தமிழ் பெண்கள் மீது நிகழ்த்திய பாலியல் வன்கொடுமைகள் பற்றி ஆதாரங்களுடன் பார்த்திருந்தோம். ஈழத் தமிழர்களைக் காக்கவென தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் தமிழர்கள் அடைக்கலம் புகுந்திருந்த அகதி முகாம்களையும், வைத்தியசாலைகளையும், பாடசாலைகளையும், மதஸ்தலங்களையும் எப்படி எப்படியெல்லாம் தாக்கியழித்து கோரதாண்டவம் ஆடியிருந்தது என்கின்ற வரலாறுகளைத் திகதிவாரியாக இந்தத் தொடரில் பதிவிலிட்டிருந்தோம்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற சண்டைகள், கிழக்கில் முஸ்லிம்கள் மீது இந்தியப் படையினர் நிகழ்த்திய தாக்குதல்கள் என்றும் பல விடயங்களையும் முன்னய சில அத்தியாயங்களில் பார்த்திருந்தோம்.

இந்திய-புலிகள் யுத்தத்தின் அந்த அந்தியாயங்களைப் பார்க்கத்தவறியவர்கள் கண்டிப்பாக அவற்றைப் படித்துவிட்டு இந்தத் தொடரின் இனிவரும் அந்தியாயங்களைப் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.

இனி இந்திய -புலிகள் யுத்தத்தின் மேலும் சில முக்கிய கட்டங்கள் பற்றி ஓரளவு மேலோட்டமாகப் பார்ப்போம்.

கனரகப் பிரிவுகள்:

பாரிய இழப்புக்களின் மத்தியில் யாழ் குடாவையும், வடக்கு கிழக்கின் ஏனைய பாகங்களையும் கைப்பற்றிய இந்தியப் படையினர், விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களை எதிர்கொள்ளமுடியாமல் மிகவும் திண்டாடினார்கள்.

புலிகளைச் சமாளிக்கவென சுமார் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் இந்தியப் படையினர் வடக்கு கிழக்கில் நிலை கொண்டிருந்தார்கள். யாழ் குடாவில் இந்தியப் படையின் 54வது காலாட் படைப் பிரிவும், திருகோணமலையில் 340வது காலாட் படைப்பிரிவும் நிலைகொண்டிருந்தது.

இவற்றிற்கு மேலும் பலம் சேர்க்குமாற்போன்று யுத்த தாங்கிகள் அணிகளும் இந்த காலாட் படைப் பிரிவுகளுடன் இணைக்கபட்டிருந்தன. இந்தியப் படை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சங்கர் பாதூரி மற்றும் மேஜர் ஜெனரல் அப்சார் கரீம் போன்றவர்கள் இந்தியப் படையினர் வசம் அப்பொழுது இருந்த கனரக ஆயுதங்கள் தொடர்பான சில விபரங்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களின் கூற்றுப்படி, 1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் திகதி நிலவரப்படி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினர் ஆகக் குறைந்தது பின்வரும் கனரக ஆயுதங்களை வைத்திருந்தார்கள்:

நான்கு ரீ-72 தாங்கிகளைக் கொண்ட ஒரு சிறிய அணியினர் யாழ்ப்பாணத்திலும், மூன்று ரீ-73 தாங்கிகளைக் கொண்ட மற்றொரு அணியினர் திருகோணமலையிலும் இந்தியப் படையில் இருந்தார்கள்.

கனரக துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட பன்னிரெண்டு கவச வாகனங்கள் (BMPI) யாழ்ப்பாணத்திலும், ஆறு கவச வாகனங்கள் திருகோணமலையிலும் இந்தியப் படையினர் வசம் இருந்தன. இதைவிட யாழ்ப்பாணத்தில் எட்டு முதல் பன்னிரெண்டு 120 மி.மீ. ஆட்டிலெறிகள் மற்றும் வேறு சில ஆட்டிலெறிகளும் இருந்தன.

இதேபோன்று அரை ஸ்குவாட்ரன் அளவில் கவச வாகனங்களும், யுத்த தாங்கிகளும், ஆட்டிலறிகளும் வவுனியாவிலும், மட்டக்களப்பிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலதிகமாக நாற்றுக்கணக்கான சிறிய ரக மோட்டார்கள், பீ-40 ரக ஏவகளைச் செலுத்திகள் இந்தியப் படைவசம் இருந்தன.

இவற்றைவிட இந்தியப் படையின் 36வது படையணியின் ஆட்டிலறி பிரிவொன்றும், 2வது இன்டிபெண்டன் ஆட்டிலறி ரெஜிமென் (2nd Independent Artillery Regiment) இனது ஒரு பிரிவும் சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேவை ஏற்பட்டால் மிக குறுகிய அறிவிப்பில் இலங்கைக்கு நகர்த்தக்கூடிய விதத்தில் அவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இதேபோன்று இந்தியப் படையின் 72வது படையணியின் ஆட்டிலறிப் பிரிவொன்றும் பெங்களூரில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இத்தனை ஆராவாரங்களும், சுமார் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரையிலான விடுதலைப் புலிகளைச் சமாளிக்க என்பது இரண்டாம் நூற்றாண்டின் மிகப் பெரிய நகைச் சுவை.

புலிகளின் முக்கியஸ்தர்கள்:

இந்தியப் படையினர் மிகப் பெரிய பலத்துடன் வடக்கு கிழக்கை ஓரளவு தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். சந்திக்கு சந்தி முகாம் அமைத்து இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தார்கள். சாதாரண மக்கள் புலிகளுக்கு உதவிவிட்டு இலகுவில் தப்பித்துவிட முடியாத அளவிற்கு அச்சம் ஊட்டப்பட்டிருந்தார்கள்.

மக்கள் மீது இந்தியப் படையினர் நிகழ்த்தியிருந்த கொடூரங்களின் வெளிப்பாடாக அது அமைந்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் உட்பட புலிகளின் முக்கிய அணிகள் வன்னிக்கு தமது தளங்களை இடம்மாற்றிக் கொண்டன. வன்னிக் காடுகளில் மறைந்திருந்து தமது போராட்டத்தைத் நெறிப்படுத்துவதே அப்போதைக்கு சிறந்த ஒரு ராஜதந்திரமாக இருந்தது.

இதேநேரத்தில் யாழ்.குடாவில் சிறுசிறு அணிகளாகப் பிரிந்து நின்ற விடுதலைப் புலிகள் இந்தியப் படையினருக்கு எதிராக கெரில்லாத் தாக்குதல்களைத் தொடர்ந்தபடி இருந்தார்கள். வன்னியில் இருந்து அவர்களுக்கு உத்தரவுகளும், வழங்கல்களும் கிடைத்தபடி இருந்தன.

இந்த கால கட்டம் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் மிகவும் இக்கட்டானதும், கஷ்டமானதுமான காலகட்டம் என்றுதான் கூறவேண்டும். யாழ் குடா முழுவதும் விதைக்கப்பட்டிருந்த இந்தியப் படையினர், வரிந்து கட்டிக்கொண்டு அவர்களுக்கு உதவ ஓடித்திரிந்த தமிழ் கூலிப் படைகள்: அச்சத்தில் உயிரைக் கைகளில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த தமிழ் மக்கள்: – இவைகளுக்கு நடுவில் விடுதலைப் புலிகள் தமது நடவடிக்கைகளையும், நகர்வுகளையும் மிகவும் கஷ்டத்துடன்தான் மேற்கொண்டு வந்தார்கள்.

இப்படியான கால கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தளபதிகளும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்டார்கள். துரத்தி வரும் இந்தியப் படையினரிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வது, அவ்வாறு பாதுகாத்தபடி எதிரியைத் திருப்பித் தாக்குவது என்பன அக்காலகட்டத்தில் மிகமிக கஷ்டமாக இருந்தது.

பிற்காலத்தில் உலகிற்கு நன்கு அறிமுகமான விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் இந்தியப் படை காலத்தில் எப்படியான சங்கடங்களை எதிர்கொண்டார்கள், எப்படியான ஆபத்துக்களைச் சந்தித்தார்கள், அவற்றில் இருந்து எப்படித் தப்பித்தார்கள் என்று அடுத்த சில அத்தியாயங்களில் மேலேராட்டமாகப் பார்க்க இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காயம் அடைந்து, அந்தக் காயம் சீழ் பிடித்த நிலையில் இந்தியப் படையினரிடம் இருந்து அவரைக் காப்பாற்ற போராளிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்:

விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் இந்தியப் படையினரின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக கரவெட்டி, நவின்டில், நெல்லியடி என்று தப்பி ஓடிய கதை: விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ் செல்வன், அக்காலத்தில் தென்மாராட்சியின் பிராந்தியத் தளபதியாக கடமையாற்றியபோது நிகழ்ந்த சம்பவங்கள்:

புலிகளின் மூத்த உறுப்பினரான பாலகுமார், காவல்துறைப் பொறுப்பாளர் (பின்னர் அரசியல்துறைப் பொறுப்பாளர்) நடேசன், நிதிப் பொறுப்பாளர் புகழேந்தி, கடற்புலிகளின் தளபதி சூசை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதி கேணல் ரமேஷ், போன்றவர்கள் இந்தியப் படை காலத்தில் எப்படியான கஷ்டங்களை அனுபவித்தார்கள், எவ்வாறு அவற்றை எதிர்கொண்டார்கள் என்பன பற்றி எதிர்வரும் வாரங்களில் பார்க்க இருக்கின்றோம்.

அதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வன்னி அலம்பில் காடுகளில் அனுபவித்த கஷ்டங்கள், பிரபாகரனைக் குறிவைத்து இந்தியப்படையினர் ஆப்பரேசன் திரீசூல் (Operation ‘Thrishul’ ) ஆப்பரேசன் வீரத் (Operation ‘Viraat’) ஆப்பரேசன் செக்மேட் (Operation Check-mate) என்ற பெயர்களில் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் பற்றியும், அந்த இராணுவ நடவடிக்கையில் இருந்து புலிகளின் தலைவர் எவ்வாறு தன்னையும் தன்னுடன் இருந்த போராளிகளையும் காப்பாற்றினார் என்ற வீர வரலாற்றையும் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

தொடரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொட்டம்மானை நோக்கி வந்த ஆபத்து (அவலங்களின் அத்தியாயங்கள்- 86) – நிராஜ் டேவிட்
  • by admin
  • December 18, 2013
images-3-150x150.jpg
 
 

ஈழத்தை இந்தியப் படையினர் ஆக்கிரமித்து நின்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கவேண்டி நேர்ந்தது.

பின்னைய காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதிகம் பிரசித்தி பெற்றுத்திகழ்ந்த சிலர், இந்தியப்படை ஆக்கிரமிப்பு காலத்தில் எப்படியான துன்பங்களை, சவால்களை அனுபவிக்க நோந்தது என்று மீட்டுப்பார்ப்பது காலத்தின் தேவையாகின்றது.

பொட்டு அம்மான்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்தியப் படையினருக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து களத்தில் முதலாவது காயமடைந்த போராளி பொட்டுஅம்மான் என்று கூறலாம். ஒக்டோபர் 10ம் திகதி யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மைதானத்தில் இந்தியப் படையினர் விமானங்களில் இருந்த தரையிறங்க முயன்றபோது, அவர்களது தரையிறக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைக்கு பொட்டுஅம்மான் அவர்கள் தலைமைதாங்கியிருந்தார்.

தரையிறங்க ஆரம்பித்த இந்தியப் படையினருக்கும், மைதானத்தைச் சுற்றிவளைத்திருந்த விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமானபோது முதன்முதலில் காயமடைந்தவர் புலிகள் அமைப்பின் மூத்த உறுப்பிரர்களுள் ஒருவரான பொட்டுஅம்மான் அவர்களே.

வயிற்றிலும், கமர்கட்டிலும் பாரிய காயங்களுக்கு உள்ளானார். துப்பாக்கி சூடு பட்டு முட்புரித் தசைநார்கள் கிழிந்து போயிருந்தன. காலிலும் பாதங்களிலும் கூட பயங்கரக் காயம். நிறைய இரத்தம் வெளியேறிவிட்டிருந்தது. காயமடைந்த பொட்டம்மானை மற்றைய போராளிகள் உடனடியாகவே களத்தைவிட்டு நகர்த்தி சிகிச்சைக்காக யாழ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

உயிர் பிரிந்துவிடும் நிலையில் ஒரு ஆபத்தான கட்டத்தில் பொட்டம்மான் இருந்தார். யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு அவசர சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

யாழ் குடாவை இந்தியப் படையினர் கைப்பற்றும் அபாயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பொட்டு அம்மானையும், அவருடன் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மற்றைய சில போராளிகளையும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தவேண்டி ஏற்பட்டது.

இந்தியப் படையினர் சகட்டுமேனிக்கு செல் தாக்குதல்களை மேற்கொண்டபடி இருந்தார்கள். வல்வெட்டித்துறையில் புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான கிட்டுவின் தாயார் காயமடைந்த போராளிகளுக்கு அபயம் அளிக்கும் ஒரு நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தார்.

பொதுவாகவே அக்காலப்பகுதியில் வல்வெட்டித்துறைப் பிரதேசம் புலிகளின் ஒரு கோட்டையாகவே இருந்தது. தமிழ் தேசியத்தின் வாஞ்சையை அப்பகுதி மக்கள் மிகவும் உறுதியுடன் வெளிப்படுத்தி வந்தார்கள். இந்தியப் படையினருடன் யுத்தம் மூண்டதைத் தொடர்ந்து காயமடைந்த போராளிகளுக்கு உறைவிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் வல்வெட்டித்துறைப் பிரதேசம் அமைந்திருந்தது. கிட்டு அம்மா என்று போராளிகளால் மிகவும் அன்புடன் அழைக்கப்பட்ட அந்த மூதாட்டியின் கவனிப்பில் பொட்டு அம்மான் ஒப்படைக்கப்பட்டார்.

கிட்டுவின் அம்மா:

கிட்டு அம்மாவின் வீடு ஒரு தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட்டிருந்தது. காயமடைந்த பல போராளிகளுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. புலிகளின் மருத்துவக் குழு போராளிகளுக்கு மும்முரமாகச் சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தது.

அப்பிரதேசவாசிகள் சந்தர்ப்ப வசத்தால் வைத்தியர்களாகவும், தாதிகளாகவும் மாறி போராளிகளின் சிகிச்சைகளுக்கு உதவிக்கொண்டிருந்தார்கள். புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் திரு அன்டன் பாலசிங்கம் அவர்களின் வெளிநாட்டு மனைவி அடேல் பாலசிங்கம் அவர்கள் பொட்டம்மானுக்கு சிகிச்சை அளிக்கும் பொறுப்பை ஏற்று சிறிது காலம் செயற்பட்டார்.

திருமதி பாலசிங்கத்தின் பராமரிப்பில்:

பொட்டம்மானுக்கு தான் சிகிச்சை அளித்தது பற்றி திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், தான் எழுதிய சுதந்திர வேட்கை என்னும் நூலில் இவ்வாறு விபரித்திருந்தார்:

’’நான் ஒரு மருத்துவத் தாதியாக இருந்த காரணத்தால் எனது உதவி மருத்துவப் போராளிகளின் சுமையை ஓரளவு குறைத்தது. பொட்டுஅம்மானையும் வேறு சில போராளிகளையும் பராமரிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். பொட்டு அம்மானின் வயிற்றுப்புண் நன்றாகக் குணமடைந்தது. ஆனால் கையில் ஏற்பட்ட காயம் மட்டும் மாறுவதாக இல்லை. பெரிய கட்டுப் போடவேண்டி இருந்தது. ஆனால் ஊணீர் கசிந்துகொண்டிருந்தது. பெரிய புண்: பயங்கர வலி. உள்ளூர் மருத்துவமனையில் மயக்க மருந்து எடுத்து, அதன் பின்னரே காயங்களைத் துப்பரவு செய்யவேண்டி இருந்தது. பொட்டு அம்மான் உட்பட கடுங்காயம் அடைந்த போராளிகளை பருத்தித்துறை மந்திகை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, நானும் உடன் சென்றுவந்தேன்.

வடமாராட்சிப் பிரதேசத்தில் வரவர விமானப்படை நடவடிக்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன. வடமாராட்சி எல்லைகளில் இந்திய காலாட் படையினரின் காவல் உலா அணிகளும், வேவு முயற்சிகளில் ஈடுபட்டுவருவதை அவதானிக்கமுடிந்தது. இந்திய இராணுவத் தலைமைப்பீடம் தனது கவனத்தை விடுதலைப் புலிகளின் முக்கிய தளம் மீது திருப்ப ஆரம்பித்துவிட்டன என்பதையே அவை உணர்த்திற்று. விரைவில் அந்தப் பகுதியில் இந்தியப் படையின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்போகின்றது என்பது தெளிவாகியது. யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதான வீதி வழியாக இந்தியக் காவல் உலாப் பிரிவு மெதுவாக நகர ஆரம்பித்திருப்பதாக எமது போராளிகள் மோப்பம் பிடித்து அறிவித்திருந்தார்கள். நாம் பாதுகாப்பாகத் தங்கியிருந்த அந்தப் பிரதேசத்தை விட்டு நகரவேண்டிய வேளையும், தேவையும் உருவாகிவிட்டதாக உணர்ந்தோம்.’’

இவ்வாறு திருமதி அடேல் பாலசிங்கம் தனது நூலில் விபரித்திருந்தார்.

கரவெட்டியில் ஆபத்து:

வல்வெட்டீத்துறை இந்தியப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டதைத் தொடர்ந்து காயமடைந்த போராளிகளையும், படுகாயம் அடைந்திருந்த பொட்டம்மானையும் கரவெட்டிக்குக் கொண்டு சென்றார்கள்.

வடமாராட்சியின் இதயப் புகுதியான கரவெட்டிக்கு அப்பொழுது இந்தியப் படையினர் வந்து சேரவில்லை. விடுதலைப் புலிகளின் கரவெட்டிப் பிரதேசப் பொறுப்பாளரான மூத்த உறுப்பினர் சுக்ளா கரவெட்டியின் கலட்டி பகுதியில் ஒரு பெரிய வீட்டை ஏற்பாடு செய்திருந்தார். பொட்டு அம்மான் உட்பட காயமடைந்த பல போராளிகளை இந்த விட்டில் தங்கவைத்து சிகிச்சை அளித்தார்கள்.

வல்வெட்டித்துறையில் இருந்து சுமார் 4 மைல்கள் தொலைவில் இந்த இடம் அமைந்திருந்தது. அக்காலகட்டத்தில் இந்தியப் படையினரின் நடமாட்டம் பெரும்பாலும் பிரதான வீதிகள் வழியாகவே இருந்ததால், கலட்டி பகுதியில் பொட்டம்மானின் இருப்பிடம் அமைந்திருந்த பிரதேசம் ஓரளவு பாதுகாப்பான பிரதேசமாகவே இருந்தது.

மருத்துவ சிகிச்சைக்காக பொட்டம்மான் அடிக்கடி மந்திகை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கரவெட்டியில் இவர்கள் தங்கவைக்கப்பட்ட இடத்திலிருந்து உள் வீதி வழியாக மந்திகைக்கு சென்றுவருவது ஓரளவு பாதுகாப்பானதாக இருந்தது.

படிப்படியான பொட்டம்மானின் காயங்கள் குணமடைய ஆரம்பித்த வேளையில் மற்றொரு ஆபத்து அவரை நோக்கி நகர ஆரம்பித்தது.

பொட்டம்மானும், மற்றய போராளிகளும், புலிகளின் முக்கியஸ்தர்களும் கரவெட்டியில் மறைந்திருக்கும் செய்தி இந்தியப் படையினரின் காதுகளை எட்டியது.

அவர்கள் மறைந்திருக்கும் வீடும் வரைபடங்களுடன் இந்தியப் படை அதிகாரிகளின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.

அந்த வீட்டில் தங்கியிருக்கும் அத்தனை பேரையும் பூண்டோடு அழித்தொழிக்கும் நோக்கத்தில் இந்தியப் படை ஹெலிக்காப்டர்கள் இரண்டு அவசரஅவசரமாகப் புறப்பட்டன.

இந்தியக் காலாட் படைப்பிரிவொன்றும் கரவெட்டியைக் குறிவைத்து மிக மூர்க்கமாக முன்னேற ஆரம்பித்தது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மான் மறைவிடம் முற்றுகை (அவலங்களின் அத்தியாயங்கள்- 87) – நிராஜ் டேவிட்
  • by admin
  • December 26, 2013

ipkf_vanni_1-150x150.jpg

முன்குறிப்பு கடந்த அத்தியாயத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரான பொட்டம்மான் யாழ் பொது மருத்துவமனையில் சிகிட்சை பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தேன். யாழ் பொது மருத்துவமனையைச்; சேர்ந்த மருத்துவ நிபுனர் ஒருவரால் பொட்டம்மான் சிகிட்சைக்கு உட்படுத்தப்பட்டாரே தவிர யாழ் பொது வைத்தியசாலையில் அவர் சிகிட்சை பெறவில்லை என்பதை அந்தச் சம்பவத்தின் பொழுது அங்கிருந்த ஒரு அன்பர் எனக்கு எழுதியிருந்தார். அவர் அனுப்பிய தகவல் இதுதான்: பொட்டம்மான் யாழ் பொது மருத்துவ மனையில் அப்போது அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவில்லை.ஏன் தெரியுமா? அப்பகுதியில் சண்டை தொடங்கும் அறிகுறி இருந்தது.அதனால் ஆனைப்பந்தியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் யாழ் பொது மருத்துவ மனையை சேர்ந்த ஒரு சத்திர சிகிச்சை நிபுணரே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்தார்.இதை ஏன் இவ்வளவு தெளிவாக சொல்கிறேன் என்று தெரியுமா? பொட்டம்மான் காயப்பட்டுள்ளார் என்று கேள்விப் பட்டதும் அவர் இருக்கும் இடத்தை எனது போராளிகளிடம் கேட்டேன்.அவர்கள் சொன்ன தகவலை வைத்துக் கொண்டே அங்கு சென்றேன்.அங்கே அவர் சத்திர சிகிச்சை முடிந்து மயக்க மருந்தின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருந்தார்.கையில் போடப்பட்டிருந்த நாள உணவை அறுத்து எறிந்து ஆர்ப்பாட்டம் செய்தார்.அந்த வேளையில்தான் அவரை அங்கே சந்தித்தேன்.மறக்க முடியாத நினைவு அது..

தகவலுக்கு நன்றிகள். இனி தொடர்ந்து கட்டுரைக்குச் செல்வேம்.

தேடிவந்த ஹெலிக்காப்டர்கள்

கரவெட்டி, களட்டியில் பொட்டுஅம்மான், காயமடைந்த போராளிகள், அன்டன் பாலசிங்கம் போன்றவர்கள் ஒரு வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருக்கும் செய்தி இந்தியப் படையினர் காதுகளை வந்தடைந்தது. அவர்கள் தங்கியிருந்த வீட்டைக் குறிவைத்து இரண்டு ஹெலிக்காப்டர்கள் பறந்து வந்தன. போர் தொடங்கிய காலத்திலிருந்தே யாழ் குடா முழுவதும் இந்தியப் படை விமானங்களின் நடமாட்டங்கள் அதிகமகவே இருந்து வந்தன. பொருட்களையும், படையினரையும் ஏற்றி இறக்குவதற்கும், வானில் இருந்து தாக்குதல் நடத்துவதற்கென்றும் இந்தியப் படை விமானங்கள் யாழ் குடா முழுவதும் ஆரவாரப்பட்டுத் திரிந்தன. விமானங்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனே பாதுகாப்பு நிலை எடுப்பதற்கு மக்கள் பல காலமாகவே பழகியிருந்தார்கள்.

பொட்டம்மான் உட்பட மற்றய முக்கியஸ்தர்கள் தங்கியிருந்த பிரதேசத்திலும் அடிக்கடி விமானங்கள் பறந்தபடிதான் இருந்தன. ஆனால் குறிப்பிட்ட அந்த தினத்தன்று அப்பகுதியில் பறந்து வந்த உலங்கு வானூர்த்திகள் தமது வழக்கமான பயனப்பாதையை திடீரென்று மாற்றி பொட்டம்மான் தங்கியிருந்த வீட்டை நோக்கி விரைந்து வர ஆரம்பித்தன. மாலை மங்கத்தொடங்கும் நேரம். சாதாரணமாகவே இப்படியான ஒரு நேரத்தில் உலங்குவானூர்த்திகள் தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்குவது கிடையாது. இலக்குகளை துல்லியமாகத் தாக்கமுடியாது என்ற காரணத்தால் பெரும்பாலும் மாலை நேரங்களில் தாக்குதல்களை ஆரம்பிப்பது கிடையாது.

ஆனால் பொட்டு அம்மான் தங்கியிருந்த வீட்டை நோக்கி விரைந்த வானூர்த்திகள் வீட்டை ஓரிருதடவைகள் சுற்றிவந்தன. பழுத்த அனுபவம் கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் நிலமையைப் புரிந்துகொண்டார்கள். நிலையெடுத்துக்கொண்டார்கள். கட்டிடங்களின் பின் மறைந்து கொண்டார்கள். காயமடைந்த நிலையில்இருந்த பொட்டு அம்மான் மற்றும் போராளிகளை ஒரு கொங்கிறீட்ட கூரையின் கீழ் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள்.

Ipkf-hele.jpg

திடீரென்று ஹெலிக்காப்டர்கள் தாக்க ஆரம்பித்தன. சகட்டுமேனிக்குத் தாக்குதலை நடாத்தின.

பொட்டு அம்மான் குழுவினருடன் தங்கியிருந்த அன்டன் பாலசிங்கம் மற்றும் அவருடைய மனைவி போன்றோர் வெளியே வளவின் மத்தியில் இருந்த தண்ணீர் தொட்டியின் சீமெந்து தூணுக்கு பின்னே மறைந்துகொண்டார்கள். சுற்றிச் சுற்றிவந்து தாக்குதல் நடாத்திய ஹெலியின் பார்வையில் இருந்து தப்புவதற்கு அவர்களும் தூனில் முதுகை ஒட்டியபடி தூணை சுற்றிச்சுற்றி அரக்கினார்கள். தாம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் குறைந்தது முப்பது புலிகளாவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்று இந்திய விமானப் படையினர் நம்பினார்கள். தளத்தில் இருந்த தமது மேலதிகாரிகளுக்கு அதனை அறிவிக்கவும் செய்தார்கள். திருப்தியுடன் அவர்கள் தமது விமானங்களை தளத்திற்குத் திருப்பினார்கள்.

இதில் Nடிக்கை என்னவென்றால் அன்றைய அந்தத் தாக்குதல் நடவடிக்கையில் எந்த ஒரு போராளிக்கோ அல்லது பொதுமக்களுக்கோ ஒரு சிறு காயம் கூட ஏற்படவில்லை. வீடுகள் கூரைகள் சேதமாகினவே தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.

இடப்பெயர்வு

பொட்டு அம்மான், அன்டன் பாலசிங்கம் மற்றும் காயமடைந்த போராளிகள் தங்கியிருந்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து இரண்டு விடயங்கள் போராளிகளுக்கு நன்றாகப் புரிந்தது.

ஒன்று, இந்தியப் படையினருக்கு தமது இருப்பிடம் பற்றிய செய்திகள் துல்லியமாகச் சென்றுகொண்டிருக்கின்றன.

அடுத்தது மறுநாள் தரைவழியான முற்றுகை ஒன்று நிச்சயம் அப்பகுதியில் இடம்பெறும் என்பது.

உடனடியாகவே தமது இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள அவர்கள் தீர்மாணித்தார்கள். அப்பகுதியில் இருந்து தகவல்கள் கசிய ஆரம்பித்திருந்தது அவர்களுக்கு புதிய சிக்கல்கலை ஏற்படுத்தியிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, ஈ.என்.டி.எல்.எப்., புளொட் உட்பட மற்றய இயக்க உறுப்பினர்களின் குடும்பத்தினரும் யாழ்குடா முழுவதும் வசித்து வந்ததால், தகவல் கசிவைத் தடுப்பது கடினம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அதேவேளை, மக்களோடு மக்களாகக் கலந்திருப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் அப்பொழுது இருக்கவில்லை. எனவே ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். ஒரே பெரிய குழுவாக இருந்து அனைவருமே அகப்பட்டுக்கொள்வதை விட சிறிய சிறிய குழுக்களாகப்; பிரிந்து சென்று தங்கியிருப்பது என்று முடிவுசெய்தார்கள்.

பொட்டு அம்மான் கரவெட்டியில் இருந்து சில மைல்கள் தூரத்திலுள்ள நவிண்டில் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அன்டன் பாலசிங்கம் குழுவினர் கரவெட்டியிலேயே வேறு ஒரு பகுதியில் தங்கவைக்கப்பட்டார்கள்.

வலியால் துடித்த பொட்டு அம்மான்:

பொட்டு அம்மானின் காயங்கள்; மிகவும் மோசமாக ஆரம்பித்தன. சரியாக சிகிட்சை அளிக்கப்படாமை, தொடர்ச்சியான நகர்வுகள், தேவையான ஓய்வின்மை போன்ற காரணங்களினால் மேலும் மோசமான நிலையை நோக்கி அவரது உடல் நிலை சென்றுகொண்டிருந்தது. அவரது கமர்கட்டு காயத்தால் ஊனம் வடிய ஆரம்பித்தது. வெப்ப அவியலான நிலையில் அவரது காயங்கள் சீழ் பிடிக்க ஆரம்பித்திருந்தன. அவரது வயிற்றுக் காயத்திலும் புதிய சிக்கல். விட்டு விட்டு வலிக்கத் தொடங்கின. காரணத்தைக் கண்டுபிடிக்க கருவிகள் எதுவும் இல்லை. மருந்துகள் கைவசம் இல்லை. வலியினால் மிகவும் வேதனைப்பட்டார். தொடர்ந்து முனகியபடியே கஷ்டப்பட்டார். அவரது முனகல் அவர்களது மறைவிடத்தை காட்டிக்கொடுத்துவிடுமோ என்று மற்றப் போராளிகள் அஞ்சினார்கள்.

அவர்கள் வீட்டினுள் மறைந்திருக்கும் விடயம் அயலவர்களுக்கு தெரிந்து அவர்கள் மூலமாக இந்தியப் படையினரின் காதுகளைச் சென்றடைந்துவிடும் என்ற பயம் ஒரு பக்கம்: இரவில் வீதி ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு;த்திரியும் இந்தியப் படையினர் காதுகளில் முனகல் சத்தம் விழுந்துவிட்டாலும் நிலமை ஆபத்திற்கு இட்டுச் சென்றுவிடும். மிகவும் அச்சமான, ஆபத்தான சூழ்நிலையில் அன்று பொட்டம்மானும், அவரது குழுவினரும் தங்கியிருந்தார்கள். இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டிருப்பதே தப்பிப்பதற்கு சிறந்த வழியாக இருந்தது.

பொட்டு அம்மானின் காயங்கள் அவரைக் காட்டிக்கொடுத்துவிடும் நிலையை ஏற்படுத்தியிருந்தது. அவரால் நீண்ட தூரம் நடக்கமுடியாத நிலையும் காணப்பட்டது. அவரை ஒரு சாய்மானைக் கதிரையில் இருத்தி போராளிகள் தமது தோள்களில் சுமந்தே நகர்வுகளை மேற்கொள்ளவேண்டி இருந்தது. நவிண்டில் பகுதியில் காயமடைந்த போராளிகள் தங்கியிருந்த விடையம் அப்பிரதேச மக்கள் மத்தியில் போதுமான அளவு கசிய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, பொட்டம்மானும், மற்றவர்களும் நெல்லியடியை நோக்கி நகர ஆரம்பித்தார்கள்.

ipkf_vanni-150x150.jpgநெல்லியடியில் புராதன வீடொன்றில் அனைவரும் தங்கவைக்கப்பட்டார்கள். அப்பிரதேசவாழ் மக்களும், அந்த போராளிகளுக்கு பல வழிகளிலும் உதவிகள், ஒத்தாசைகள் புரிந்தார்கள். நெல்லியடியில் ஓரளவு அசுவாசப்பட்டுக்கொள்ள அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது.

 

அப்படி இருக்கும் போது, ஒரு நாள் பொழுது சாயும் நேரம் அவர்களை நோக்கி ஒரு பாரிய ஆபத்து வந்துகொண்டிருக்கும் செய்தி அவர்களின் காதுகளை வந்தடைந்தது. பொட்டு அம்மான், அன்டன் பாலசிங்கம் மற்றும் அங்கு தங்கியிருந்த போராளிகளைக் குறிவைத்து இந்தியப் படையினர் ஒரு பாரிய முற்றுகையை மேற்கொள்ள ஆரம்பித்திருப்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

தொடரும்..

 

கடல் வழியாக தப்பித்தார் பொட்டம்மான் (அவலங்களின் அத்தியாயங்கள்- 88): நிராஜ் டேவிட்
  • by admin
  • January 2, 2014

Pottu-Amman.jpg

விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான பொட்டம்மான், அன்டன் பாலசிங்கம், நடேசன் போன்றவர்கள் உட்பட காயமடைந்த சில போராளிகள், புலிகளின் மருத்துவப் பிரிவினர், மேலும் சில போராளிகள் என்று பலர் நெல்லியடியிலுள்ள அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள்.

இந்தியப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் மூண்ட போது வல்வெட்டித்துறையில் தங்கியிருந்த இவர்கள், இந்திய இராணுவத்தின் வேட்டையில் இருந்து தப்புவதற்காக கரவெட்டிக்கும், பின்னர் நவிண்டிலிற்கும் இடம் யெர்ந்து கடைசியில் நெல்லியடிக்கு வந்திருந்தார்கள். படுகாயம் அடைந்திருந்த பொட்டு அம்மானின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்திருந்தது. சாய்மானக் கதிரையில் அவரை வைத்துச் சுமந்தபடிதான் எங்குமே நகரவேண்டியிருந்தது.

இரகசிய நகர்வு:

நெல்லியடியில் அவர்கள் வந்து தங்கியிருந்த இடம் சற்று பாதுகாப்பான இடம்போன்றுதான் தென்பட்டது. அனைவரும் தங்கக்கூடிய அளவிற்கு சற்று விசாலமானதும் கூட. மிகவும் புராதனமான அந்த வீடு, அப்பிரதேசத்தின் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய மார்க்கண்டு என்பவருக்குச் சொந்தமானது. மார்க்கண்டு அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஒரு தீவிர ஆதரவாளர். தனது ஒரு புதல்வனை அவர் போராட்டத்திற்கு ஒப்படைத்திருந்தார் (அவரது மகனின் பெயர் விஜயன்). பிரதேசப் பொறுப்பாளர் சுக்ளாவின் ஏற்பாட்டின்படி அவர் இந்த வீட்டினை விடுதலைப் புலி முக்கியஸ்தர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.

அயலவர்கள் அங்கு தங்கியிருந்த போராளிகளுக்கு பிரதான காவல் அரன்களாக நின்றுகொண்டிருந்தார்கள். உணவு முதல் அனைத்து ஆதரவுகளையும் அவர்கள் வழங்கிக்கொண்டிருந்தார்கள்.

அடுத்த முற்றுகை:

பொழுது சாயும்நேரம்தான் அந்தச் சம்பவம் இடம்பெற்றது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் மூச்சிறைக்க ஓடிவந்து அந்தச் செய்தியை போராளிகளிடம் தெரிவித்தார்கள்.

f0008679_05651100-150x124.gifகாவல் உலா வந்துகொண்டிருந்த ஒரு தொகுதி இந்திய இராணுவத்தினர் போராளிகள் தங்கியிருந்த அந்த வீட்டை நோக்கி இரகசியமாக நகர்ந்துகொண்டிருப்பதாக அந்த சிறுவர்கள் செய்திகொண்டு வந்திருந்தார்கள். சிறுவர்களைத் தொடர்ந்து அங்கு வந்த அப்பிரதேசவாசிகள் சிலரும் இந்தியப் படையினர் அப்பகுதியைக் குறிவைத்து நகர்ந்துகொண்டிருப்பதாகச் தகவல் தெரிவித்தார்கள். துவிச்சக்கர வண்டிகளில் தலைதெறிக்க விரைந்துவந்த ஒரு பெரியவரும் மூச்சிறைக்க இந்தியப் படையினரின் நகர்வுபற்றி தகவல் வழங்கிவிட்டுச் சென்றார். வேறு சிசையில் இருந்து மற்றொரு படை நகர்வொன்று இடம்பெறுவதாகவே அவர் தகவல் தந்திருந்தார்.

இதைக்கேட்டதும் பொட்டு அம்மான் எழுந்து உட்கார்ந்தார். விழிப்படைந்தார். சுற்றிவழைப்புக்களில் இருந்து எதிரியைத் தினறடித்து வெளியேறுவதில் அவருக்கு பல ஆண்டுகள் அனுபவங்கள் உண்டு. மட்டக்களப்பில் இருந்த போது அவரது காட்டு முகாம்களை; சுற்றிவழைத்த ஸ்ரீலங்காப் படையினரின் முற்றுகைகளை ஒரு பகுதியால் உடைத்துக்கொண்டு வெளியேறிய அனுபவங்கள் பல அவருக்கு உண்டு. இராணுவ நடமாட்டம் பற்றிய விபரம் கிடைக்கும் போது, எந்தக் கட்டத்தில் அதைப்பற்றி கவலைப்படவேண்டும் என்பதை அவர் அனுபவத்தால் உணர்ந்திருந்தார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் மற்றொரு திசையில் இருந்து இந்தியப் படையினர் அவர்கள் தங்கியிருந்த பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த செய்தியை வேவுப் புலிகள் கொண்டு வந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களும், காயமடைந்த போராளிகளும் தங்கியிருந்த அந்த நெல்லியடி வீடு இந்தியப் படையினரின் ஒரு மிகப் பெரிய முற்றுகைக்கு உள்ளாகப் போன்றது என்கின்ற உண்மை அங்கியிருந்த அனைவருக்கும் விளங்கியது.

பல திசைகளிலில் இருந்தும் பெரும் பலத்துடன் முன்னேறி, புலிகள் தங்கியிருந்த வீட்டிற்கான அனைத்துப்பாதைகளையும் துண்டிக்கும் இந்தியப் படையினரின் திட்டம் அங்கு தங்கியிருந்த பொட்டம்மானுக்கு புரிந்தது.

அவரது மூளை மிகவும் துரிதமாக வேலை செய்தது.

எந்த ஒரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும் என்பது அவருக்குத் தெரியும். அவரது ஆராய்ச்சிக் கண்கள் அந்தப் பலவீனத்தைத் தேடின. அவரது பணிப்பின் பெயரில் சகல சிசைகளிலும் விரைந்த போராளிகள் இந்தியப் படை நகர்வுகள் பற்றிய அனைத்து விபரங்களையும் கொண்டு வந்தார்கள்.

இந்தியப் படையினர் அந்த இல்லத்தில் தங்கியிருந்த அத்தனைபெயரையும் உயிருடன் பிடிக்கும் நோக்கத்தோடு நிதானமாக தமது நகர்வுகளை மேற்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் கடைப்பிடித்த அந்த நிதானம் புலிகள் தமது வேகத்தை கடைப்பிடிக்க உதவியாக இருந்தது. ஒரு பகுதியால் முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்திக்கொண்டு மூன்னேற சற்றுத் தாமதமேற்பட்டது. அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்த பிரதேசத்தில் இருந்த வீடுகளைச் சோதனையிட்டபடி அவர்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள் அப்பிரதேச கட்டமைப்பு, அதிகமான ஒழுங்கைகள், குறுக்குத் தெருக்கள், பனங்காணிகள் என்பனவும் அவர்களது நகர்வின் வேகத்தைச் சற்றுத் தாமதப்படுத்தியது.

Image-18-150x150.jpgஇந்த தாமதத்தை சரியாகக் கணிப்பிட்டு புலிகள் பயன்படுத்திக்கொண்டார்கள். சாய்மானைக் கதிரையில் இருந்து துள்ளிக்குதித்தெழுந்த பொட்டம்மான், தனது அபாயகரமான காயங்களையும், அதனால் ஏற்பட்ட தாங்கமுடியாத உடல் உபாதையையும் பொறுட்படுத்தாமல், ஒரு போராளியின் தோளைப் பிடித்தபடி அந்த வீட்டை விட்டு வெளியேறினார். ஆப்பிரதேசத்தின் மூலைமுடுக்குகள் அனைத்தும் அத்துப்படியான உள்ளூர் போராளியான கந்தையாவிடம், போராளிகளுக்கு வழிகாண்பிக்கும் பொறுப்பை ஒப்படைத்திருந்தார்.

எந்தவிதச் சேதமும் இல்லாமல், ஒரு துப்பாக்கிவேட்டைக் கூடத் தீர்க்காமல் அத்தனை முக்கியஸ்தர்களும், போராளிகளும் அந்த இடத்தை விட்டு இரகசியமாக, பாதுகாப்பாக வெளியேறினார்கள்.

இதையறியாத இந்தியப் படையினர், புலிகள் தங்கியிருந்த அந்த வீட்டை நாலாபுறமும் சுற்றிவழைத்தார்கள். பாதுகாப்பாக நிலையெடுத்து முற்றுகையிட்டார்கள்.

துப்பாக்கிச் சூடு

ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ஒருவர்தான் இந்தியப் படையினருக்கு வழி காண்பித்து அவர்களை அங்கு அழைத்து வந்திருந்தார். வீட்டை சுற்றி வியூகம் அமைத்த இந்தியப் படையினர் உள்ளிருப்பவர்களைக் குறி வைத்து நிலை எடுத்தார்கள்.

ஏராளமான இந்தியப் படையினர் சுற்றிவளைத்து நிலையெடுத்து சுடுவதற்கு தயார் நிலையில் இருக்க, ஒரு இந்தியப் படை அதிகாரி உள்ளிருப்பவர்களை வெளியே வருமாறு அறிவித்தலை விடுத்தார்.

உள்ளிருந்து எவரும் வெளிவரவில்லை.

மறுபடியும் மறுபடியும் அந்த அதிகாரி ஹிந்தியில் உரக்க கத்தினார். அருகில் காட்டிக்கொடுக்கும் பணிக்கென்று வந்திருந்த ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினரை அழைத்து அவரையும் தமிழில் கத்தும்படி உத்தரவிட்டார். அந்த உறுப்பினரும் தொண்டை கிழியக் கத்தினார்.

எந்தப் பலலும் இல்லை. வீட்டில் இருந்து எவரும் வெளியில் வரவில்லை. எந்த சத்தமும் உள்ளிருந்து வெளிவரவில்லை.

அதிகாரிக்கு கோபம் உச்சத்திற்கு ஏறியது. சுடும்படி உத்தரவு பிறப்பித்தார்.

வீட்டைச் சுற்றிவழைத்த இந்தியப் படையினர் சகட்டுமேனிக்குச் சுட்டுத்தீர்த்தார்கள். உள்ளிருந்து எந்தச் சஞ்சலமும் இல்லை. துணைக்கு வந்த ஈ.பி.ஆர்.எல். உறுப்பினரை வீட்டிற்குச் சென்று சோதனையிடும்படி அந்த இந்திய அதிகாரி உத்தரவு பிறப்பித்தார்.

பயத்துடனும் அதேவேளை தனது எஜமான் விசுவாசத்தைக் காண்பிக்கும் நாயைப் போலவும் விரைந்த அந்த உறுப்பினர் உள்ளே எவரும் இல்லை என்ற விடையத்தை கூறினார்.

இந்திய அதிகாரிக்கு கோபம் ஒருபக்கம், வெட்கம் ஒரு பக்கம். அந்த வீட்டின் சொந்தக்காரரை பிடித்துவர உத்தரவிட்டுவிட்டு, அயல் வீட்டார் சிலரையும் நையப்புடைத்துவிட்டு முகாம் திரும்பினார்.

கடல் கடந்த பொட்டு அம்மான்:

நெல்லியடி வீட்டில் இருந்து மயிரிழையில் தப்பிய பொட்டு அம்மானின் உடல் நிலை மேலும் மோசமானது. அவர் உயிர் பிழைப்பாரா என்கின்ற சந்தேகம் மற்றப் போராளிகளுக்கு ஏற்பட்டது. இதுபோன்ற சுற்றிவழைப்புகள், தேடுதல்கள் இனிவரும் காலத்தில் யாழ்குடா எங்கிலும் தொடர்ந்து நடைபெறும் என்பதால், இந்த நிலையில் பொட்டம்மானை அங்கு பாதுகாப்பது மிகவும் கஷ்டம் என்பதை மற்றய போராளிகள் உணர்ந்தார்கள்.

அவர் உயிர் பிழைக்கவேண்டுமானால் , அவர் யாழ்குடாவை விட்டு வெளியேறி, மருத்துவப் பராமரிப்பும், ஓய்வும் பெறுவது அவசியம் என்று பொறுப்பாளர்களுக்குப் புரிந்தது.

பொட்டம்மானின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவரை கடல்கடந்து தமிழ் நாட்டிற்குக் கொண்டு செல்வது என்று தீர்மாணித்தார்கள்.

ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அவரை மருத்துவ சிகிட்சைக்காகக் கொண்டுசெல்லவும் செய்தார்கள்.

தொடரும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனின் தலைமறைவு வாழ்க்கை (அவலங்களின் அத்தியாயங்கள்- 90) – நிராஜ் டேவிட்
  • by admin
  • February 13, 2014

Freme-0159-150x150.jpg

இந்தியப் படையின் ஆக்கிரமிப்பு இடம்பெற்ற காலங்களில் விடுதலைப் புலி முக்கியஸ்தர்கள், -அதுவும் பின்நாட்களில் ஊடகங்களில் பிரபல்யமாக இருந்த சில விடுதலைப்புலி முக்கியஸ்தர்கள் -எப்படி இன்னல்களை அனுபவித்தார்கள், அவற்றை எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றிக் கடந்த சில வாரங்களாக விரிவாகப் பார்த்து வந்தோம்.

புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் முதற்கொண்டு, கேணல் சூசை, தமிழ் செல்வன், கேணல் சொர்ணம் அடங்கலாக பலரது அனுபங்களையும் இந்தத் தொடரில் ஆராய்ந்திருந்தோம்.

அந்த வகையில் விடுதலைப் புலிகளின் தவைர் வே.பிரபாகரன் அவர்கள் இந்தியப் படையின் ஆக்கிரமிப்பு காலங்களில்; எப்படியான இன்னல்களை எதிர்கொண்டார், அவற்றை எப்படி சமாளித்தார் போன்ற விபரங்களை தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் மீட்டுப் பார்க்க இருக்கின்றோம்-சற்று விரிவாக.

தந்திரோபாய நடவடிக்கைகள்

இந்தியப்படை ஈழ மண்ணில் ஆக்கிரமிப்பு மேற்கொண்டிருந்த காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகள் தந்திரோபாய ரீதியிலான நகர்வுகளையே முழுக்க முழுக்க மேற்கொண்டிருந்தார்கள். மரபு, வீரம் என்று பம்மாத்துக் காண்பித்து, இந்தியப் படையினரை எதிர்த்து நின்று அநியாயத்திற்கு போராளிகளை பலிகொடுக்காமல், இந்தியப் படையினர் பாரிய எடுப்புக்களில் முன்னெறும் போது தந்திரோபாயமாகப் பின்வாங்குவதும், பின்னர் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைக்கும் போது பதுங்கியிருந்து பதிலடி கொடுப்பது என்றும் இந்தியப் படையினருக்கு எதிரான போரை புலிகள் மிகவும் லாவகமாக முன்னெடுத்துக்கொண்டிருந்தார்கள்.

கடலில் ஒரு பெரிய அலை அடித்து வரும்போது வீரம் என்று கூறிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அலைக்கு எதிரில் நின்றால், வேகத்துடன் வரும் அலை எம்மை அடித்து, சுருட்டி, தூக்கி எறிந்து கடலுக்குள் இழுத்துச் சென்றுவிடும். அதேவேளை அலையில் திசையில் அலையுடன் சேர்ந்து சிறிது நீந்திச் சென்று பின்னர் தருனம் பார்த்து எமக்கு விருப்பிய திசையில் நீந்துவதே பாரிய அலையைச் சமாளிப்பதற்குள்ள ஒரே வழி. சிறந்த வழியும் அதுதான்.

இந்தியப் படை என்கின்ற பாரிய அலை ஈழத்தில் அடித்து வந்தபோது விடுதலைப் புலிகள் அதனை அவ்வாறே சமாளித்தார்கள். அலையில் போக்கில் சிறிது ஓடி, போக்குக்காண்பித்து விட்டு, பின்னர் இந்திய அலையை எதிர்த்து நீந்த ஆரம்பித்திருந்தார்கள். இந்தியப் படையினர் பாரிய எண்ணிக்கையிலும், பலத்துடனும் புலிகள் மீது படையெடுத்தபோது இந்தியப் படையினருக்குப் போக்கு காண்பித்துவிட்டு தமது பலத்தைத் தக்கவைத்தபடி புலிகள் பின்வாங்கினார்கள். தமக்குச் சாதகமான இடங்களில் மட்டும் தாக்குதலை நடாத்திவிட்டு, இந்தியப் படையினர் பலவீனமாக இருந்த இடங்களில் மட்டும் பதம்பார்த்துவிட்டு அவர்கள் பதுங்கிக் கொண்டார்கள்.

பதுங்கிப் பாய்தல்

இந்தியப் படையினர் தமது யுத்தப்பாதையில் சந்தித்த உண்மையான இக்கட்டும் புலிகளின் இந்தப் பதுங்கலாகத்தான் இருந்தது. இந்தியப் படையினருக்குத் தாக்குப் பிடிக்க இயலாமல் போன விடயமும் புலிகளின் இந்தப் பதுங்கிப் பாய்தலுக்குத்தான். குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வன்னியில் வசமாகப் பதுங்கிக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்து வழிநடத்திக்கொண்டிருந்ததுதான் இந்தியப் படையினர் ஏறத்தாள இரண்டு வருடங்களான ஈழத்தில் திண்டாடுவதற்கு காரணமாக அமைந்திருந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பிடிக்கமுடியாததும், அவரை அழிக்கமுடியாததுமே இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் பெரிய தோல்வியாக இருந்தது. புலிகளின் தலைவரை மட்டும் அழித்துவிட்டால் புலிகளின் போராட்டத்தை ஒரேடியாக நசித்துவிடமுடியும் என்பது இந்தியப் படை அதிகாரிகளுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் நன்றாகவே தெரியும். அதற்கான பல முயற்சிகள் இந்தியப் படையினரால் மேற்கொள்ளவும் பட்டன. ஆனாலும் புலிகளின் தலைமை இந்தியப் படையினரின் அத்தனை அழுத்தங்களையும் சமாளித்தபடி தன்னையும் பாதுகாத்து, தேசிய விடுதலைப் போராட்டத்தையும் பாதுகாத்ததுதான் இந்தியப் படையினருடனான விடுதலைப் புலிகளின் சமருக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

ஆனாலும் அந்தப் பாரிய வெற்றியைப் புலிகள் இலகுவாக ஒன்றும் பெற்றுவிடவில்லை. பெறுமதிவாய்ந்த விலைகளைக் கொடுத்தே புலிகளின் தலைமை அந்த வெற்றியை பெற்றிருந்தது. பல கஷ்டங்களை அனுபவித்தும், பல சவால்களை எதிர்கொண்டுமே புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் தமிழ் தேசியப் போராட்டத்தையும், அதன் வீச்சையும் தக்கவைத்திருந்தார்.

லைவரைக் குறிவைத்து

இந்தியப் படையினர் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி புலிகளுடனான யுத்தத்தை ஆரம்பித்தபோது அவர்கள் புலிகளின் தலைவரைக் குறிவைத்தே தமது முதலாவது நகர்வை ஆரம்பித்திருந்தார்கள். முதலில் திடீர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்துவிடுவது, அல்லது அவரை கொலை செய்துவிடுவதே இந்தியப்படையினரது பிரதான திட்டமாக இருந்தது.

யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு தலைவரைக் கைப்பற்றி, மற்றைய போராளிகளிடம் இருந்து அவரை அகற்றிவிட்டால், புலிகள் அமைப்பே முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதை இந்தியப்படை அதிகாரிகள் திடமாக நம்பினார்கள். அத்தோடு, புலிகளின் தலைமைக் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி தலைமையகத்தையும், புலிகளின் தலைவரையும் கைப்பற்றிவிடும் பட்சத்தில், மற்றைய போராளிகளின் மனஉறுதி குலைந்து, அவர்களின் போரிடும் ஆற்றல் குன்றிவிடும் என்று கனித்திருந்தார்கள்.

முதலாவது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பின்னர் புலிகள் அமைப்பை மிக இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே அவர்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள்.

இந்திய இராணுவத்தில் அதிஉச்ச பயிற்சியைப் பெற்ற பராக் கொமாண்டோக்கள் 103 பேரை, யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் திடீரென்று தரையிறக்கி, புலிகளின் தலைவர் தங்கியிருந்த பிரம்படி வீட்டை முற்றுகையிட்டு தலைவரைக் கைது செய்வதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது. அதேவேளை, சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் 100 பேர், பரா துருப்பினர் தரையிறங்கிய பிரதேசத்திற்கு விரைந்து அந்தப் பகுதியைத் தளப்பிரதேசமாக தக்கவைத்திருப்பது அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.

ஆனால் புலிகளின் பதிலடி அவர்கள் திட்டத்தை சுக்குநூறாக்கியிருந்தது.

இந்தியப் படையினர் பாரிய எடுப்புடன் யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் தரையிறங்கும் முன்னதாகவே தலைவர் பிரபாகரன் அவர்கள் பிரம்படி வீதியில் இருந்த அவரது இருப்பிடத்தை விட்டு வெளியேறி வன்னி சென்றிருந்தார். இந்தியப் படையினர் தரையிறங்கி பல இழப்புக்கசை; சந்தித்தபின்னரே இந்தியப் படையினருக்கு புலிகளின் தலைவர் குறிப்பிட்ட இடத்தில் இல்லாத விடயம் தெரிந்திருந்தது.

உண்மைய அவர்கள் அறிந்துகொள்வதற்கு அவர்கள் கொடுத்த விலை கொஞ்நஞ்மல்ல.

இதேபோன்று புலிகளின் தலைமையை அழிப்பதற்கென்று ஆரம்பம் முதல் இறுதிவரை இந்தியப் படையினர் பல முயற்சிகளை எடுத்திருந்தனர். ஆனால் பலத்த விலை கொடுத்து அவர்கள் தோல்லியையே கண்டிருந்தார்கள்.

விடுதலைப் புலிகளின் தலைமையைக் குறிவைத்து இந்தியப் படையினர் மேற்கொண்ட நகர்வுகள் பற்றியும், அவற்றை முறியடித்த தேசியத் தலைமையின் வீரம் பற்றியும், அதேவேளை இந்தியப் படையினரின் இடைவிடாத அழுத்தம் காரணமாக புலிகளின் தலைவர் மற்றும் அவரது குடும்பம் அனுபவித்த இன்னல்கள் பற்றியும் இனிவரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்க்கவுள்ளோம்.

ஒரு சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைவரை ஒழித்துக்கட்டுவதன் மூலம்தான் புலிகளின் போராட்டப் பலத்தைச் சிதைக்கமுடியும் என்ற தீர்மானத்திற்கு வந்த இந்தியப் படையினர், அந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.

வன்னி, மணலாற்றுக் காடுகளில் மறைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பூண்டோடு ஒழித்துவிடும் நோக்கத்தில் இந்தியப் படையினர் மேற்கொண்ட மூன்று முக்கிய படை நடவடிக்கைகளான ஆப்பரேசன் திரீசூல் (Operation ‘Thrishul’), ஆப்பரேசன் வீரத் (Operation ‘Viraat’), ஆப்பரேசன் செக்மேட். (Operation Check-mate) போன்ற இராணுவ நடவடிக்கைகள் பற்றியும் அந்த இராணுவ நடவடிக்கைகளின் பொழுது இடம்பெற்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பற்றியும் தொடர்ந்து வரும் வாரங்களில் விரிவாக நாம் பார்க்க இருக்கின்றோம்

தொடரும்..

 

 

மக்களோடு மக்களாக தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதினி (அவலங்களின் அத்தியாயங்கள்- 91) – நிராஜ் டேவிட்
  • by admin
  • February 19, 2014

45786727_tv007313719-150x150.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் குடும்ப வாழ்க்கை பற்றிக் குறிப்பிடும் ஆய்வாளர்கள், இவருக்குச் சொந்தமானதென்று கூற ஒரு பிடி நிலம் கூட இல்லை என்று குறிப்பிடுவார்கள். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பெற்றோருக்குச் சொந்தமான வீட்டைத்தான் அனேகமானவர்கள் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீடு என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் திரு. பிரபாகரன் அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு அடி நிலம்கூடக் கிடையாது என்பதுதான் உண்மை.

திரு. பிரபாகரன் அவர்களுடைய திருமணகாலம் முதல்கொண்டு அவர்களை நன்கு அறிந்தவர்களாக அன்டன் பாலசிங்கம் தம்பதியினர் இருந்து வருகின்றார்கள். திருமதி அடேல் பாலசிங்கம், தனது சுதந்திர வேட்கை நூலில், பிரபாகரன் அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார்: ஷமதியை(திருமதி பிரபாகரன்) பொறுத்தவரையில் திருமண வாழ்க்கை ஒன்றும் அவருக்கு மலர் படுக்கையாக அமையவில்லை. இயல்பாகவே அமைதியும் பொறுமையும் கொண்ட மதி எத்தனையோ தடவைகளில் மிகவும் நெருக்கடியான துயர் சூழல்களை எதிர்கொண்டு சமாளிக்கவேண்டி இருந்தது. பிரபாகரன் அவர்களது போராட்டப் பணிகள் காரணமாக தம்பதிகளுக்கு இடையில் நீண்ட காலப் பிரிவுகளும் ஏற்பட்டதுண்டு. திருமணமான நாளில் இருந்து மதிக்கு ஒரு நிரந்தர வீடும் இருந்ததில்லை. பாதுகாப்பான குடும்ப வாழ்க்கையும் கிடையாது. இருந்த போதிலும் ஒரு கெரில்லா படைத்தலைவரின் மனைவிக்குரிய துணிச்சலுடனும், கண்ணியத்துடனும், அவர் செயற்பட்டிருந்தார்| என்று திருமதி அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அகதி வாழ்க்கை

இந்தியப் படை ஈழ மண்ணை ஆக்கிரமிக்க ஆரம்பித்த போது மற்றய தமிழ் அன்னையர் போலவே திருமதி பிரபாகரன் அவர்களும் திடீர் அதிர்ச்சிக்கு உள்ளானார். இந்தியப் படையினர் தம்மால் முடிந்த அளவிற்கு அடாவடித்தனங்களை மேற்கொண்டபடி யாழ்பானத்தை முற்றுகைக்குள்ளாக்கியபோது பல பெண்கள், தய்மார் இந்தியப் படையின் கொடூரங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்காக கோவில்களிலும், பாடசாலைகளிலும் அடைக்கலம் தேடிக்கொண்டார்கள். யாழ்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் ஆயிரக்கணக்கான அகதிகள் அடைக்கலம் தேடியிருந்தார்கள். பிரபாகரன் அவர்களின் மனைவி மதிவதனி அவர்களும், குழந்தைகளும் மக்களோடு மக்களாக நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அகதி வாழ்க்கை வாழவேடி ஏற்பட்டது.

தலைவர் பிரபாகரன் அவர்கள் போராட்டத்தை வன்னியில் இருந்து நெறிப்படுத்திக்கொண்டிருந்த போது அவரது மனைவி பிள்ளைகளோ மக்களுடன் மக்களாக இந்தியப் படையினரின் கொடூரங்களை அச்சத்துடன் எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது.

அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி என்று இந்தியப் படையினருக்கோ அல்லது தமிழ் இயக்க உறுப்பினர்களுக்கோ தெரிந்தால் அதோகதிதான். அவரை வைத்தே பிரபாகரன் அவாகளுக்கு வலை விரித்திருப்பார்கள். அவரைத் தொலைக்காட்சியில் காண்பித்து அசிங்கப்படுத்தியிருப்பார்கள். அவரது பிள்ளைகளைத் துன்புறுத்தி கொலை செய்திருப்பார்கள். அக்காலத்தில் அத்தனை அட்டூழியங்களை இந்தியப் படையினரும், அவர்களுடன் இணைந்திருந்த தமிழ் படை உறுப்பினர்களும் மேற்கொண்டிருந்தார்கள். அனாலும் தெய்வாதீனமாக அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அடைக்கலம் தேடியிருந்த பெரும்பாலானவர்களுக்கு மதிவதனி அவர்களை அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை. அனேகமானவர்கள் அச்சத்துடனும், பதட்டத்துடனும் அங்கு தவித்துக்கொண்டிருந்ததால், அருகில் இருப்பவர் யார்? எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்று விடுப்பு| விசாரித்துக்கொள்ள நேரமில்லாமல் இருந்தது.

பரவிய வதந்தி:

இப்படி இருக்கையில் இந்தியப் படையினரிடையேயும், தமிழ் இயக்க உறுப்பிர்களிடையேயும் ஒரு வதந்தி வேகமாகக் பரவ ஆரம்பித்தது. ஷதலைவர் பிரபாகரன் அவர்கள் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் மக்களுடன் மக்களாக மறைந்து தங்கி இருப்பதாக| அந்த வதந்தி வேகமாகப் பரவியது. பிரபாகரன் அவர்களின் துனைவியார் அங்கு மறைந்திருந்ததை அறிந்ததால் இந்த வதந்தி பரவ ஆரம்பித்திருந்ததா, அல்லது யாராவது வேண்டுமென்றே இப்படி ஒரு வதந்தியை பரவ விட்டிருந்தார்களா என்று தெரியவில்லை. நல்லூரும், கந்தசுவாமி கோயிலும் யாழ் உயர் சாதியினர் என்று கூறப்படுபவர்களின் ஒரு அடையாளமாகக் கருதப்பட்டதன் காரணமாக, இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கும் தமிழ் குழு உறுப்பினர்கள் இப்படி ஒரு கதையைக் கட்டிவிட்டிருக்கலாம் என்றும் அங்கு பேச்சடிபட்டது.Download-150x150.jpg

இந்த வதந்தி நல்லூர் கந்தசுவாமி கோயில் வளாகத்திற்குள் தங்கியிருந்த மக்களிடையேயும் பரவ ஆரம்பித்தது. அடுத்து என்ன நடக்கும் என்கின்ற அச்சம் அங்கு தங்கியிருந்த மக்களிடையே பரவ ஆரம்பித்தது. மற்ற அகதி முகாம்களில் நடந்துகொண்டதைப் போன்று இந்த முகாமிலும் இந்தியப் படையினர் கொடூரமாக நடந்துகொள்ள ஆரம்பித்தால் என்னசெய்வது என்கின்ற அச்சம் மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.

இந்தா இந்தியப் படையினர் வந்துவிட்டார்கள்.. அதோ அந்தப் பகுதியால் வந்துகொண்டிருக்கின்றாhகள்.. முகாமைக் குறிவைத்து விமானத்தாக்குதல்கள் நடைபெறப் போகின்றதாம்.., முகாமைக் குறிவைத்து யுத்த தாங்கிகள் நகர்ந்துகொடிருக்கின்றதாம்.. என்று பல வதந்திகள் அங்கு தங்கியிருந்த மக்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தன. பலர் இரவோடு இரவாக முகாமைவிட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அவ்வாறு வெளியேறிவர்களுள் மதிவதனி அவர்களும் ஒருவர்.

tamilmakkalkural-150x150.jpg

காட்டு வாழ்க்கை:

இந்தியப் படையினரின் நெருக்குதல் குடாநட்டில் அதிகமாக ஆரம்பித்தைத் தொடர்ந்து திருமதி மதிவதனி அவர்கள் வன்னிக்குச் சென்று தங்கவேண்டி ஏற்பட்டது. தனது பிள்ளைகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மனலாறுப் பகுதியில் உள்ள அலம்பில் காடுகளில் முகாம் வாழ்க்கை வாழ நேரிட்டது. இந்தியப் படையினரின் செல் மழை இந்த காடுகளில் தொடர்ந்து பொழிந்தவண்ணமே இருந்தன. விமானக் குண்டு வீச்சுக்களும், இடையறாத முற்றுகைகளும் இந்த காடுகளில் இடம்பெற்றவண்ணமே இருந்தன. ஒவ்வொரு நிமிடம் ஒவ்வொரு விதமான ஆபத்துக்கள்.

பல்வேறு வடிவங்களில் ஆபத்துக்கள் அவர்களைச் சூழ்ந்த வண்ணமே இருந்தன.

தொடரும்..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனின் குடும்பம் சுவீடனில் தலைமறைவு வாழ்க்கை (அவலங்களின் அத்தியாயங்கள்- 92) – நிராஜ் டேவிட்
  • by admin
  • February 26, 2014

268525-150x150.jpgஇந்தியப் படையினர் ஈழ மண்ணை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் ஈழத்தில் அப்பொழுது இருந்த ஒவ்வொரு தமிழ் குடும்பங்களும் அனுபவித்த துன்பங்களைப் போலவே, விடுதலைப் புலிப் போராளிகளின் குடும்பங்களும், தளபதிகளின் குடும்பங்களும் இன்னல்கள் அனுபவித்து வந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களது குடும்பமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்.

பிரபாகரன் அவர்களின் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் மக்களோடு மக்களாக அகதி முகாமில் இருந்ததும், சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்ததும் பற்றி கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

பின்னர் வன்னிக்குச் சென்ற திருமதி மதிவதனி அவர்களும், குழந்தைகளும் சிறிது காலம் அங்கு தங்கியிருந்தார்கள்.

சுவீடனில் தலைமறைவு:

இந்தியப் படையினரின் நெருக்குதல்கள் அதிகமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறித் தப்பிச்செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

திருமதி மதிவதனி பிரபாகரன் அவர்களும், இரண்டு குழந்தைகளும் சுவீடன் நாட்டில் சுமார் ஒன்றரை வருட காலங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதி பிரேமதாசா அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ‘தேன்நிலவு’ இடம்பெற ஆரம்பித்தத்தைத் தொடர்ந்துதான் பிரபாகரன் அவர்களுடைய குடும்பம் மீண்டும் தாயகம் திரும்பி தலைவருடன் இணைந்துகொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அதுவரையில் அவர்கள், அகதிகள் என்றும் அல்லாது, விருந்தினர்கள் என்றும் அல்லாது அச்சங்கலந்த ஒருவித தலைமறைவு வாழ்க்கையைத்தான் அன்னிய நாடுடொன்றில் வாழவேண்டி ஏற்பட்டது.tamilmakkalkural-150x150.jpg

மைத்துனர் மரணம்:

இந்தியப் படை காலத்தில் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை துனிவுடன் நடத்திக்கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், மற்றய தலைவர்கள் அனைவரும் அனுபவித்த அதே துன்பங்களையும், இழப்புக்களையும் அனுபவித்தார் என்பதும் இந்த இடத்தில் நோக்கத்தக்கது. மரணம் புலிகளின் தலைவரது வாசலையும் வந்து தட்டியிருந்தது.

தலைவர் பிரபாகரன் அவர்களது மனைவி மதிவதனி அவர்களின் தம்பியின் பெயர் பாலச்சந்திரன். அவரும் ஒரு போராளிதான். இந்தியப் படையின் காலத்தில் இந்தியப் படையின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் களமிறங்கி சுரசம்ஹாரம் செய்த பல போராளிகளுள் அவரும் ஒருவர்.

தலைவர் பிரபாகரன் அவர்களுடைய குடும்பம் இந்தியப் படையினருடனான சண்டையின் போது பாலச்சந்திரனை இழக்கவேண்டி ஏற்பட்டது. வன்னியில் இடம்பெற்ற ஒரு சண்டையில் பாலச்சந்திரன் வீரமரணம் அடைந்தார். இந்தப் போராளியின் ஞபகமாகவே பிரபாகரன்-மதிவதணி தம்பதியினருக்குப் பிறந்த மூன்றாவது குழந்தைக்கு பாலச்சந்திரன் என்று பெயர் சூட்டப்பட்டது. பாலச்சந்திரன் என்ற நபர் மதிவதணியின் தப்பி என்பதற்காக அல்ல- பாலச்சந்திரன் ஒரு போராளி என்பதற்காகவே இந்தப் பெயர் சூட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Ppluschild-150x150.jpg

சார்ள்ஸ் அன்டனி

பிரபாகரன் மதிவதனி தம்பதியினருக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். மூத்த மகனின் பெயர் சார்ள்ஸ் அன்டனி. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், தலைவர் பிரபாகரனின் நெருங்கிய சகாவும், யாழ்பாணத்தில் ஸ்ரீலங்காப் படையினருடனான தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டவருமான சார்ள்ஸ் அன்டனி சீலனின் ஞபகமாகவே இந்தப் பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. சார்ள்ஸ் அன்டனி என்பது ஒரு கிறிஸ்தவப் பெயர். சார்ஸ்ஸ் அன்டனி கிழக்கைச் சேர்ந்த ஒரு போராளி. போராட்டத்தின் போது வீரத்தையும், தேசிய விசுவாசத்தையும் வெளிப்படுத்திய அந்தப் போராளியின் ஞாபகமாக பிரபாகரன் தம்பதியினர் அந்தப் பெயரை தனது மூத்த புதல்வனுக்குச் சூடியிருந்தார்கள்.

துவாரகா

பிரபாகரன்-மதிவதனி தம்பதியின் இரண்டாவது பிள்ளையின் பெயர் துவாரகா. இதுவும் ஒரு போராளியின் பெயர்தான். மதிவதினி அவர்களின் மெய்பாதுகாவலராக இருந்த ஒரு பெண் போராளிதான் துவாரகா. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு சண்டையில் இந்தப் போராளி வீரச்சாவைத் தழுவியிருந்தார். அவரின் ஞாபகமாகவே தமது குழந்தைக்கு துவாரகா என்ற பெயரை சூட்டியிருந்தார்கள்.

வீரமரணமடைந்த போராளிகளை கௌரவப்படுத்தும் புலிகளின்; தலைவர் மிகவும் கவனமாகக் கடைப்பிடித்து வந்தார். தனது அனைத்துக் குழந்தைகளுக்கும் மரணித்த போராளிகளின் பெயர்களைச் சூடுவதன் மூலம் வீரமரணமடைந்த போராளிகளை கௌரவப்படுத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகளின் போராட்டவரலாற்றில் முதன்முதலாக மரணித்த போராளியின் ஞாபகமாக மாவீரர் தினத்தை ஏற்பாடுசெய்திருந்தார். வருடாவருடம் மாவீரர் தினத்தன்று போராட்டத்தில் மரணித்த அத்தனை போராளிகளையும் தமிழ் உலகமே நன்றியுடன் நினைவுகூறும்படி செய்திருந்தார். புதிய கண்டு பிடிப்புக்களுக்கும், வெடி குண்டுகளுக்கும் மாவீரர்களின் பெயர்களையே ச10ட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் போராளிகள் முன்டியடித்துக்கொண்டு தேச விடுதலைக்காகத் தம்முயிரை தியாயகம் செய்ய முன்வருவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று ஆய்வாரள்கள் கூறுகின்றார்கள்.050809040448apartment-150x150.jpg

விடுதலைப் புலிகளின் தலைவரைப் பொறுத்தவரையில் அவர் போராட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாது தனது சொந்த வாழ்க்கையிலும் ஒரு உதாரண புருஷராக இருந்து வந்ததால்தான் அத்தனை வெற்றிகளையும் அவரால் பெறமுடிந்திருந்தது.

புகைக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது, தகாத உறவு கூடாது என்கின்றதான கட்டுப்பாடுகளை போதனைகளாக மட்டும் செய்துவிட்டு நின்றுவிடாது, தனது சொந்த வாழ்க்கையிலும் அவர் கண்ணியத்துடன் கடைப்பிடித்து வந்தார்.

அவரது தலைமைத்துவ வெற்றிக்கும், தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிப் பயணத்திற்கும் இதுதான் காரணம்.

தமிழ்த் தேசியத்தலைவர் என்ற பெயர் அடையாளத்துடன் தமிழ் கூறும் நல்லுலகமே வியந்து அவரை ஏற்றுக் கொள்வதற்கும் இதுவே காரணம்.

புலிகளின் தலைவர் வன்னியில் மணலாற்றுக்; காடுகளின் மத்தியில் மறைந்திருந்து இந்திய ஆரக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக போராட்டங்களை நெறிப்படுத்திக்கொண்டிருந்த போது பல இன்னல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. இடையராத முற்றுகைகள், சகட்டுமேனிக்கு இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சுக்கள், பீரங்கித்தாக்குதல்கள் – என்பனவற்றிற்கு அப்பால் பாரிய உளவியல் முற்றுகைக்கும் அவர் உள்ளாகவேண்டி இருந்தது.

இவைபற்றி இனி வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

தொடரும்..

 

பிரபாகரனைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பரேசன் செக் மேட் (அவலங்களின் அத்தியாயங்கள்- 94) – நிராஜ் டேவிட்
  • by admin
  • March 20, 2014

ipkf_iaf-150x150.jpg

இந்தியப் படையினரின் பாரிய முற்றுகைக்குள் அகப்பட்ட நிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும், மேலும் சில நூறு போராளிகளும் இருப்பது பற்றிய செய்தி இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்திக்கு இந்தியப் படைத்துறைத் தலைமையினால் அனுப்பிவைக்கப்பட்டது.

சுமார் முப்பதினாயிரம் படைவீரர்களைக் கொண்ட இந்தியப் படையினரின் முற்றுகைக்குள் புலிகளின் தலைவர் அகப்பட்டு இருப்பதாகவும், ஒப்பரேசன் செக் மேட் என்று பெரிடப்பட்டிருந்த அந்த முற்றுகைக்கு இந்தியாவின் வான் படை மற்றும் கடற்படையும் உபயோகிக்கக்படுவதாகவும் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

வளையங்கள்

இந்தியப் படையினர் புலிகளின் தலைமை மீதான தமது சுற்றிளைப்பை ஒன்றன் பின் ஒன்றாக மூன்று அடுக்கு வளையங்களாக அமைத்திருந்தார்கள்.

ஏதாவது ஒரு வளைத்தினுள் புலிகளின் தலைவர் சிக்கியேயாகவேண்டும் என்பதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். இந்த வியூகம் பற்றியும் இந்தியப் பிரதமருக்கு விரிவாக விளக்கப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கோ மட்டற்ற மகிழ்ச்சி. புலிகளால் அரசியல் ரீதியாகத் தனக்கேற்பட்டிருந்த தலையிடி தீர்ந்துவிடப்போகின்றது என்கின்ற நிம்மதி ஒரு பக்கம். புலிகளுடன் நடைபெற்ற யுத்தம் காரணமாக இந்தியப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களினால் இந்தியாவிற்கு ஏற்பட்டிருந்த இழுக்கை நிவர்த்திசெய்துவிடலாம் என்கின்ற திருப்தி ஒருபக்கம். சந்தேசத்தில் துள்ளிக்குதித்தார்.

அடுத்த இரண்டு நாட்களுக்கான தனது அனைத்து அலுவல்களையும் ரத்துசெய்யும்படி தனது காரியதரிசியிடம் கூறிவிட்டு வன்னியில் இருந்து நல்ல செய்திக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டார்.

களமுன்னேற்றங்கள் பற்றி தனக்கு உடனுக்குடன் அறிவிக்கவேண்டும் என்று, இந்தியப் படைத் தளபதிகளிடமும், இந்தியத் தூதர் தீட்சித்திடமும், அவர் உறுதிபடத் தெரிவித்திருந்தார். புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியப் படைகளிடம் பிடிபட்டுவிட்டார் அல்லது கொல்லப்பட்டுவிட்டார் என்கின்ற செய்திiயை ஊடகங்களுக்கு தனது வாயால் கூறவேண்டும் என்கின்ற ஆர்வம் அவரிடம் காணப்பட்டது.

இந்தியத் தலைவரின் நிலை இவ்வாறு இருக்க, விடுதலைப் புலிகளின் தலைவரின் நிலை எப்படி இருந்தது?ipkf_vanni-150x150.jpg

அந்தச் சந்தர்ப்பத்;தில் விடுதலைப் புலிகளின் தலைவரது உணர்வுகள் எவ்வாறு இருந்தன என்பது பற்றி கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன் தனது கட்டுரை ஒன்றில் உணர்ச்சிபட எழுதியிருந்தார்.

காவிஞர் வாஞ்சிநாதன் ஈழ விடுதலைப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்து செயற்பட்டவர். விடுதலைப் போராட்டத்திற்காகவும், விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளுக்காகவும் பல காரியங்களை ஆற்றியிருந்தவர். உதாரணத்திற்கு இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களை பேச்சுவார்த்தைக்கு என்றழைத்திருந்த இந்தியத் தலைமை அவரை புதுடில்லியிலுள்ள அசோக்கா ஹோட்டலில் தடுப்புக்காவலில் வைத்து வஞ்சித்தது. அப்பொழுது புலிகளின் தலைவரை இந்தியா உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று கோரி ஈழ தேசமே கிழர்ந்தெழுந்தது. தலைவரை விடுவிக்கவேண்டும் என்று கோரி பாரிய ஒரு பொதுக்கூட்டம் யாழ் கோட்டை இராணுவ முகாமின் முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் கவிஞர் காசி ஆணந்தன், லோரன்ஸ் திலகர், தியாகி திலீபன் உட்பட பலர் உரை நிகழ்த்தியிருந்தார்கள். சரித்திரப் பிரசித்திவாய்ந்த அந்தப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து தலைமைதாங்கி நடாத்தியிருந்தவர் கவிஞர் மு.வே.யோ.வாஞ்சிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.

நித்திகைக்குள முற்றுகையின் போது புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களது நிலை, மன நிலை எவ்வாறு இருந்தது என்பது பற்றி கவிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் தனது கட்டுரை ஒன்றில் விழக்கியிருந்தார். 18.04.2004 அன்று வீரகேசரியில், ஷஇந்திய அமைதிகாக்கும் படையின் நித்திகைக்குள முற்றுகையை உடைத்தெறிந்த பிரபாகரன்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்த அந்தக் கட்டுரையில் நித்திகைக்குளச் சம்பவங்கள் பற்றி அவர் இவ்வாறு தெரிவிக்கின்றார்:

‘… தலைவர் பிரபாகரனைப் பிடிப்பதற்காகப் போடப்பட்ட எல்லா முற்றுகைகளிலும் நித்திகைக்குளம் முற்றுகைதான் மிகப் பெரிய முற்றுகை. கடல் – தரை-ஆகாயப் படைகள் இணைந்து நடாத்திய முற்றுகை அது. முற்றுகைச் செய்தி ஷறோ’வுக்கு அறிவிக்கப்பட்டதும் ‘ஓ.. பிரபாகரன் தொலைந்தார்.. இனி ஈழப்போராட்டம் முடிந்துவிடும்..’ என்று நினைத்த றோவின் முக்கிய அதிகாரிகள் சிலர் உடனடியாக டில்லியில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டார்கள்.

சென்னை திருவான்மையூரில் வீட்டுக் காவலில் இருந்த புலிகளின் முன்னாள் யாழ் மாவட்டத்தளபதி கேணல் கிட்டுவை ஷறோ’ வும், கியூ (ஞ-டீசயnஉh) பிரிவின் சில அதிகாரிகளும் நள்ளிரவில் சென்று சந்தித்தார்கள். ‘உங்கள் தலைவர் நித்திகைக் குளத்தில் மூன்று வலைப்பின்னல் முற்றுகைக்குள் திணறிக்கொண்டிருக்கின்றார். அவர் சில ஆயுதங்களை மட்டும் பத்திரிகையாளர்கள் முன்பாக எம்மிடம் ஒப்படைத்துவிட்டு, இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதாகக் கையெழுத்துப் போடுவதாக இருந்தால் எமது படையினர் உடனடியாக முற்றுகையை நீக்கிவிடுவார்கள். இல்லையேல் 200 தொன்களுக்கு மேல் வெடிபொருட்களை நிரப்பிய பொம்பர்களும், ஹெலிகொப்டர்களும் -முப்பதினாயிரம் படையினரும் புலிகளின் தலைவரையும், அவரைக் காத்துவரும் புலிகளையும், நித்திகைக் குளக் காட்டையும் பதினைந்து நிமிடங்களில் அழித்துச் சாம்பலாக்கிவிடுவார்கள்.’ Conel_Kittu16-1-93.jpeg

‘பின்னர் பிரபாகரன் உடலைக்கூட உங்களால் பார்க்கமுடியாது.’

‘நாங்கள் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்களே அவருடன் பேசிச் சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

கிட்டு இதைக்கேட்டு அதிர்ந்துவிட்டார்.

உடனே வான் அலை ஊடாகப் பிரபாகரனைத் தொடர்புகொண்டார்.

றோவும், கியூ பிரிவும் கூறியதை அப்படியே தலைவரிடம் ஒப்புவித்தார்.

ஆதற்குப் பிரபாகரன் என்ன சொன்னார் தெரியுமா?…

தொடரும்….

http://www.nirajdavid.com/பிரபாகரனைக்-குறிவைத்து-ம/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் இணைப்புகளுக்கு நன்றி . தொடர்ந்தும் இணையுங்கள். இவையெல்லாம் எங்கள் காலங்களில், எம் கண் முன் நடந்தேறியவை. வரலாறு கற்று தந்த பாடங்கள் பல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் இணைப்புகளுக்கு நன்றி . தொடர்ந்தும் இணையுங்கள். இவையெல்லாம் எங்கள் காலங்களில், எம் கண் முன் நடந்தேறியவை. வரலாறு கற்று தந்த பாடங்கள் பல.

எம் கண்முன்னே எமது ஊரில் எமது இனத்திற்கு எதிராக நடந்த அட்டூழியங்கள் இவை.
 
இதை கூட தெரியாது .....
1987இல் பெருத்த சந்தர்ப்பம் வந்தது புலிகள் தட்டிவிட்டார்கள் என்று ...
 
தமிழில் எழுதுகிறது ஒரு வேதாள கூட்டம். 
அந்த வேதாளங்களின் மூளை இயங்கு நிலையில் இருக்கும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் இணைப்புகளுக்கு நன்றி . தொடர்ந்தும் இணையுங்கள். இவையெல்லாம் எங்கள் காலங்களில், எம் கண் முன் நடந்தேறியவை. வரலாறு கற்று தந்த பாடங்கள் பல.

 

 

எம் கண்முன்னே எமது ஊரில் எமது இனத்திற்கு எதிராக நடந்த அட்டூழியங்கள் இவை.
 
இதை கூட தெரியாது .....
1987இல் பெருத்த சந்தர்ப்பம் வந்தது புலிகள் தட்டிவிட்டார்கள் என்று ...
 
தமிழில் எழுதுகிறது ஒரு வேதாள கூட்டம். 
அந்த வேதாளங்களின் மூளை இயங்கு நிலையில் இருக்கும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை.  

 

நன்றி எனக்கானது அல்ல திருவாளர் நிராஜ் டேவிட்டுக்கே  உரித்தாகும்  http://www.nirajdavid.com/www-nirajdavid-com-ஒரு-அறிமுகம்/நன்றி கூ றி  ஒரு மெயில் தட்டி விடுங்கள்.மற்றும் இனணப்பு தவறுகளை பெரியமனதுடன் பொறுத்து கொண்ட yarl நிர்வாகதிட்க்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.