• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
காரணிகன்

ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே தயாரிக்கலாம்!!!

Recommended Posts

பயனுள்ள தகவல் 28 December at 14:16 · . ஆண்மையை அதிகரிக்கும் உண்மையான வைத்தியம்! நீங்களே தயாரிக்கலாம்!!! (+18) நாம் தற்போது எந்த செய்தித்தாள் ஊடகம் மற்றும் தொலைக்காட்சி பார்த்தாலும் ஆண்மைகுறைவு பற்றின செய்திகளும் சிகிச்சை நிகழ்சிகளும் வந்த வண்ணமே உள்ளன. இதில் சில சித்த மருத்துவர்கள் சரியான மருந்தையும் கொடுகின்றனர், சில அரை குறை போலி வைத்தியர்களும் போலியான பிரச்சாரம் செய்து ஆண்மகன்களை பயமுறுத்தி வருகின்றனர். உண்மையில் ஆண்மைக்குறைவு ஒரு பெரிய நோயா? சரியாக கவனிக்காமல் காலம் தாழ்த்தினால் அது பெரிய நோய்தான், சரியான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஆண்ன்மைகுறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை , இருந்தாலும் சுய இன்பம் ஒன்றே இந்த ஆண்மைக்குறைவுக்கு காரணம் என்று சொல்ல முடியாது, உயர் ரத்த அழுத்தமும், மன அழுத்தமும் காரணமாக அமைகின்றன. இதற்கு என்னதான் தீர்வு? இந்த குறைபாடு ஒன்றும் குணபடுத்த முடியாத ஒரு விசயமல்ல, மொத்தத்தில் இது ஒரு நோய் என்று சொல்வதே தவறு, இருந்தாலும் இபோதுள்ள இளைஞர்கள் சுய இன்ப கரபழக்கம் மற்றும் தவறான உறவுகளினால் தங்களது சக்தியை வீணடிக்கின்றனர். இதனால் உடலில் தாது உடைகிறது மற்றும் எழுச்சி தன்மை குறைகிறது, மீண்டும் நீங்கள் நல்ல சத்துள்ள உணவு வகைகளை உண்டால் இது அடிக்கடி தோன்றாது, மேலும் அளவுக்கு மீறின சுய இன்பத்தால் மீண்டும் இந்த குறைபாடு தோன்றி குற்ற உணர்வு தோன்றுகிறது, இதுவே இன்றைய தலைமுறையினரின் நிதர்சன பிரச்சினை, இதனை நீங்கள் உங்கள் கை வைத்தியதிலியே போக்கலாம். ஆண்மை தன்மையை அதிகரிக்கும் சக்தி இயற்கையிலயே தேனுக்கும் பேரிச்சம் பழத்திற்கும் உண்டு, இதனை சரியாக கையாண்டு ஒரு சிறப்பு மருந்தை நாமே தயாரித்து உண்டால் ஆண்மை குறைபாடு விரைவில் நீங்கும். இந்த மருந்து பக்க விளைவுகள் இல்லாத ஒரு அறிய வகை மருந்தாகும். உயர் ரக பேரிச்சம் பழம் ஒரு கிலோவும், உண்மையான தேன் ஒரு கிலோவும் வாங்கி கொள்ளுங்கள், பேரிச்சம் பழங்களை ஒரு அகன்ற பெரிய தட்டில் கொட்டி வைக்கவும், அதனை மூன்று மணி நேரம் வெயிலில் காய வைத்து பிறகு ஒரு பீங்கான் பாட்டிலில் பத்திரபடுதவும் பிறகு அதனுடன் தேனை ஊற்றி மீண்டும் மூன்று மணி நேரம் வெயிலில் வைத்து விடுங்கள். பிறகு தினமும் காலை உணவு சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு 3 பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு சிறிது வெந்நீர் அருந்துங்கள், பிறகு இரவு 12 பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு வென்னிருக்கு பதில் பசும்பாலை அருந்தவும், இப்படி தொடர்ந்து 60 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெருகிவிடும். ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க மலிவான வயாக்கரா !! ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் தக்காளியானது புற்றுநோய் செல்களை குணப்படுத்தும் என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இது ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கும் மலிவான வயாக்கரா என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். விந்தணு குறைபாட்டினால் புதிய சந்ததியை உருவாக்க முடியாத நிலை. அதனால் ஏற்படும் மனச்சோர்வு ஆண்களை பாதிப்பிற்குள்ளாக்குகிறது. இந்த குறைபாட்டை நீங்க மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகின்றனர். ஆண்மைக் குறைபாடுள்ள ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம் தக்காளி சூப் அவர்களுக்கு நிவாரணம் தருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். தினம் ஒரு கப் தக்காளி சூப் குடிப்பது விந்தணுக்களின் வீரியத் தன்மையை அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். லைகோபின் சக்தி போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழக த்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். நாற்பத்து இரண்டு வயதுக்கு மேல் இருக்கும் நபர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தினம் ஒரு கப் தக்காளி சூப் இரண்டு வாரங்களுக்கு கொடுக்கப்பட்டது. சோதனையின் முடிவில் ஆய்விற்குட் படுத்தப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களிலேயே பன்னிரண்டு சதவீதம் வரை விந்தணு வீரியம் அதிகரித்திருந்தது இது ஆராய்ச்சியாளர்களையே வியக்க வைத்தது. தினம் ஒரு கப் சூப் தக்காளியில் இருக்கும் லைக்கோப்பின் எனும் பொருள் தான் தக்காளிக்கு அடர் சிவப்பு நிறத்தைத் தருகிறது. அந்த மூலக்கூறு தான் ஆண்களின் விந்தணு வீரியத்திற்கு காரணமாய் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். லைக்கோப்பின் ஆனது புற்று நோயை தடுக்கும் சக்தி உடையதாக இருப்பதால் தக்காளி உட்கொள்வது புற்றுநோய் செல்களை அழிக்கும் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் தகவல். இப்போது “இந்த” புதிய பயனும் அதனுடன் இணைந்திருக்கிறது.. சும்மாவே தக்காளி விலை உச்சத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி முடிவை படித்தவுடன் தினம் வீட்டில் தக்காளி சூப் வைக்க சொல்லி நச்சரிக்கப் போகிறார்கள் ஆண்கள் – அதுக்காக ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் மட்டும்தான் சூப் குடிக்கணும் என்றில்லை. இல்லாதவங்களும் கூட குடிக்கலாம் – வராம தவிர்க்கலாம்ல.. தேவையான பொருட்கள் நன்கு பழுத்த தக்காளி – 5 பெரிய வெங்காயம் – 1 பூண்டு – 6 பல் சோள மாவு – 1 மேஜைக் கரண்டி வெண்ணெய் – 2 தேக்கரண்டி தக்காளி சாஸ் – 2 மேஜைக் கரண்டி மிளகுத்தூள் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை 1. வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 2. வெண்ணெயை உருக்கி, அதில் பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். 3. வெங்காயம் வதங்கியதும், தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும். 4. தக்காளி பச்சை வாசனை போக வதங்கியபின், 300 மில்லி தண்ணீர் (அல்லது கால் லிட்டர்) தண்ணீர் சேர்க்கவும். 5. சிறு தீயில் 10 நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும். 6. வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும். 7. பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்... .................................................................................................................................................................................................................................................................................................................................................................................நன.றி பயனுள்ள தகவல்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

அப்ப இனி என்னை அடுத்த 20 வருசத்துக்கு அசைக்க ஏலாது! :D

Share this post


Link to post
Share on other sites

அண்டைக்கு ஒரு நாள் முகத்தார் பகிடியாய் ஒரு ரெசப்பி சொல்லக்கை  அவனும் இருந்தவன் மணித்தியாரும் இருந்தவர் .அவன்தான் அக்கறையாய் கேட்டான்.மணித்தார் அதை கணக்கு கூட எடுக்கவில்லை.

 

வாட்டர்மெலனை அந்த சிவத்த பகுதியை உள்ளுக்காலை எல்லாத்தையும் வழிச்சு  ஒரு கிறைன்டரில் போடவேணும் என்று சொல்லக்கை வலப்பக்க வாயை ஒருபக்கமாக வைச்சு கொண்டு சொன்னார் . கை அளவு றெட் பெரி பழத்தையும் கொஞ்சம் சேர்க்கோணும் என்று சொல்லக்கை கையை ஒரு மாதிரி காட்டினார் .பிறகு பச்சை எலும்பிச்சபழத்தையும் சிவத்த எலிமிச்சபழத்தையும் புளிஞ்சு அதோடை சேர்க்கவேணுமென்று அப்பவும் கையை ஒரு விதமாக அசைத்து ஒரு நமிட்டு சிரிப்புடன் கூறினார்  .உதெல்லாம் சேர்த்து அடிச்சப்போட்டு  ஒரு கப்பிலை விட்ட குடித்து அரை மணித்தியாலத்துக்கு பிறகு உங்களுடைய உடம்பு உங்களுக்கு என்ன் சொல்லும் என்று  அப்படி செய்து குடித்து பார்த்துட்டு  அதை கேளுங்கோ ....என்றார்

 

 

அவளும் அந்த மூன்று பேரும் என்ற சிறுகதையில்  ஒரு பாத்திரம் இயற்கை வயகாரவின் மகிமையை பற்றி சொல்லுகிறது

 

அந்த சிறுகதையை வாசிக்க விரும்பின்  கீழே உள்ள லிங்கை தட்டவும்

 

http://mithuvin.blogspot.co.uk/2014/09/blog-post.html

Share this post


Link to post
Share on other sites

ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்: ஆய்வில் தகவல்!

அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது.

 
ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்
ஆண்மையை பாதிக்கும் 4 உணவுகள்  |  Photo Credit: Getty Images
 

பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆபத்தானவை என்பதை தற்போது உறுதியாக கூறலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகளால் சிறு வயதிலேயே மரணம், பல்வேறு நோய்கள் மற்றும் குறைபாடுகள் ஏற்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆண்மை குறைவுக்கும் காரணமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிக கொழுப்புச் சத்து மிக்க உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆண்களின் விந்து உற்பத்தியை பாதிப்பதாக தெரிய வந்துள்ளது. 

ஹார்வேர்டு பல்கலைக்கழகம்  சார்பில் 18 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், காய்கறிகள், பழங்கள் நிறைந்த சைவ உணவு பழக்கம் உடையவர்கள் மற்றும் சிக்கன், மீன் உணவுகளை உண்பவர்களுக்கு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பவர்களை விட விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

இந்த ஆய்வு அறிக்கை வியன்னால் இந்த வாரம் நடைபெறவுள்ள மனித இனப்பெருக்கம் குறித்த ஐரோப்பிய மாநாட்டில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பில், நாம் உண்ணும் உணவு முறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தவிர்க்க வேண்டிய 4 உணவுகள்:

பதப்படுத்தப்பட்ட இறைச்சி:

மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பதப்பட்டுத்தப்பட்ட இறைச்சி வகைகளால், விந்து அணு எண்ணிக்கை குறைவதாக ஹார்வேர்டு ஆய்வு தெரிவித்துள்ளது.

கார்பனேட்டட் பானங்கள்:

கார்பனேட்டட் பானங்கள் பானங்களை அதிக அளவு குடிப்பதினால், விந்து அணுக்களின் செயல் திறன் பாதிக்கப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள்:

பாலாடைக் கட்டி மற்றும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்களளை அதிக அளவு எடுத்துக்கொள்வதால் விந்து அணுக்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. பால் பொருட்கள் சில அத்தியாவசிய சத்துக்ளான கால்சியம், விட்டமின் டி உள்ளிடவை அடங்கியதாக இருந்தாலும், விந்து அணுக்களை பாதிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

சோயா உணவு வகைகள்:

பாஸ்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் சோயா பொருட்களை அதிக அளவு பயன்படுத்துபவர்களில் 99 சதவிகிதம் பேருக்கு விந்து அணுக்களின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. 

https://www.timesnowtamil.com/health-and-lifestyle/article/4-foods-that-can-harm-male-fertility-report/254167

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இணைப்பிற்கு.... நன்றி, நுணாவிலான். :)

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, தமிழ் சிறி said:

இணைப்பிற்கு.... நன்றி, நுணாவிலான். :)

100%  ஓகேயா சிறித்தம்பி?  😎

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, குமாரசாமி said:

100%  ஓகேயா சிறித்தம்பி?  😎

வாவ்.... அந்த மாதிரி இருக்கு, குமாரசாமி அண்ணை.  :grin:
18 வயசு,  "பீலிங்"  அப்படியே... திரும்ப வந்திட்டுது. 😛

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this