Jump to content

இவரைத் தெரிகிறதா? போட்டி நிகழ்வு


Recommended Posts

 • Replies 185
 • Created
 • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Manivasahan

இது கள உறவுகளுக்கான ஒரு போட்டி   இங்கே நான் பதிவிடும் ஆளை அல்லது இடத்தை அல்லது பொருளைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.   கண்டுபிடிப்பதற்கு டஏதுவாக ஆரம்பத்தில் ஒரு சிறு உதவியை (படத்தின் தன்மைக்கேற்

குமாரசாமி

செ. சுந்தரலிங்கம்   யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்த செல்லப்பா, மீனாட்சி ஆகியோருக்குப் பிறந்தவர் சுந்தரலிங்கம். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி, கொழும்பு புனிய யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்ற

கிருபன்

திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்ட லலிதா, ராகினி, பத்மினி மூவரில் ஒருவராகிய ராகினி (சத்தியமாக முன்ன பின்ன பார்த்தது கிடையாது!) அர்ஜுன் அண்ணா, எங்கள் புலனாய்வுக்கு இதெல்லாம் ஜுஜுபி. முடிந்த

2013-11-07-11-34-30-q-with-jian-ghomeshi

 

சி.பி.சி வானொலி அறிவிப்பாளர் Jian Ghomeshi. பல பெண்களை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியாக பல பெண்கள் முறையிட்டதை அடுத்து பொலிசில் சரணடைந்தவர். இப்போ வீட்டுக்காவலில் உள்ளார்  என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

93137802167147286982.jpg

பொழுது போகவில்லை எனவே இணைத்தேன் .ஐந்து வேறு விதமான பிரமுகங்கள் .கண்டுபிடியுங்கள் .

மன்னிக்கவும் மணி .

 

 

 

 

தெரியாத முகங்களை அறிமுகப்படுத்துவதற்கான பதிவே இது, தாராளமாக உங்கள் படங்களை இணையுங்கள் அர்யுன் அண்ணா...

அர்யுன் அண்ணா இணைத்த படங்களில் தாடிக் காறர் ஜேம்ஸ் கமறுன்.. தலைமுடியுடன் இருப்பவர் இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் பெக்கம்..

Link to comment
Share on other sites

புது வருடத்திற்கு கஷ்டமான சில படங்கள் .முடிந்தால் கண்டு பிடியுங்கள் .

 

bjorn-borg-grass-ta_684890n.jpg


giuliano-gemma.jpg

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

p10feature.jpg

 

சறோஜினி யோகேஸ்வரன்

 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

Ragini-closeup-2.jpg

திருவாங்கூர் சகோதரிகள் என்று அழைக்கப்பட்ட லலிதா, ராகினி, பத்மினி மூவரில் ஒருவராகிய ராகினி (சத்தியமாக முன்ன பின்ன பார்த்தது கிடையாது!) :)

அர்ஜுன் அண்ணா, எங்கள் புலனாய்வுக்கு இதெல்லாம் ஜுஜுபி. முடிந்தால் படத்தை டவுண்டோல்ட் செய்து EXIF metadata ஐ எடுத்துவிட்டுப் போடுங்கள். இல்லாவிட்டால் ஒரு சில செக்கன்கள் போதும்!!!

 

 • Like 3
Link to comment
Share on other sites

படத்தில் பெயர் வருகிறதே அர்ஜுன் அண்ணா :lol:

நன்றி நவீனன் .நான் கவனிக்கவில்லை  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

துலிப் மென்டிஸ் இளமை காலத்தில் .

 

சரியான பதில் அர்ஜுன் அண்ணா :)  பச்சை பிறகு போட்டு விடுகிறேன் :D

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

Dr. Rajasundaram

 

இவரை யாரென்று தெரியுமா?

 

தெரிந்தவர்கள் விபரங்களை பதிவிடுங்கள்... 

 

 

Link to comment
Share on other sites

காந்தியத்தில் இருந்தவர் .வெலிக்கடை சிறையில் கொலையானவர் .பல விடயங்கள் தெரியும் ஏனெனில் இவருடன் இருந்த பலர் எம்முடன் இருந்தார்கள் .பின்னர் வந்து பதிகின்றேன் .

 • Like 1
Link to comment
Share on other sites

நல்ல வெய்யில் சுட்டெரிக்கின்ற மாதம் ஆனால் மாதமும் திகதியும் சரியாக ஞாபகம் இல்லை, 79 ம் ஆண்டு அல்லது 80 ம் ஆண்டாக இருக்க வேண்டும், சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாசாலையில் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் யாழ்ப்பாணத்தின் முதலாவது கிளை ஆரம்பிக்கப்படுவதற்கான கூட்டத்திற்கு சந்ததியாரின் வழிகாட்டலில் சில குறிப்பிட்ட சமூக அக்கறையுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

அதற்கு முன்னர் வலிகாமம் மேற்குப் பகுதியிலுள்ள பிரதான கல்லூரிகளுக்கும் சீநோருக்கும் நானும் சந்ததியாரும் மோட்டார் சைக்கிளில் சென்று அகதிகளுக்கான உதவியாக மாதாந்த சம்பளத்தில் ஒரு குறிப்பிட்டளவு இயலுமான தொகையினை சம்பளத்திலிருந்து கழித்து எடுத்து தந்து இந்த அகதிகளுக்காக தேவைகளை நிறைவேற்றும் பணிக்குப் பங்களிப்புச் செய்யும்படி கோரி வந்தோம். இந்தப் பயணத்தின் போது மோட்டார் சைக்கிளுக்கு பெற்றோல் இன்றி நடுவழியில் நின்றுவிட, பஸ்சில் சுழிபுரம் வந்து சந்ததியார் வீட்டில் நல்ல கைத்குத்தரிசிக் கஞ்சி சந்ததியாரின் தங்கையால் பரிமாறப்பட்டபோது பசியாறிக் கொண்டு விடைபெற்றது ஞாபகத்தில் நிலைத்து விட்டது. ஒரு திண்ணையும் அதனோடு சேர்ந்த உள்ளறையும் வெளியில் ஓலைக் குசினியும் கொண்ட மண்வீடு. வீரத்தாய் என அமிர்தலிங்கத்தால் பெயர் சூட்டப்பட்ட சந்ததியாரின் தாயும், தங்கையும் அங்கு குடியிருந்தனர். சந்ததியார் அமிர்தலிங்கத்தின் அரசியலுக்கு நேரெதிரான இடதுசாரிய அரசியலுக்கு மாற்றம் பெற்று கூட்டணியின் கூட்டங்களில் நேரேயே வந்து அவர்களை அம்பலப்படுத்தி வந்தபோது அந்த தாய் வீரத்தாயிலிருந்து துரோகத்தாயாக மாறியிருக்கக் கூடும்.

இவ்வாறொரு சூழலில் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது.

அதற்கு வருகை தந்திருந்தவர்களில், எனது கல்லூரியான வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற அன்றைய விக்டோரியா கல்லூரி அதிபர் அருணாசலம் அவர்களும் ஒருவர்.

அன்று கூட்டத்துக்கு எப்பவும் நடக்குமாற் போலவே நேரத்துக்கு ஆட்கள் வந்து சேராததால் பிந்தியே ஆரம்பமாகியது.

அதிக கூட்டமில்லை ஆனால் சுமாராக ஒரு பத்துப் பதினைந்து பேர் மட்டில் வந்ததாக ஞாபகம்.

இத்தனைக்கும் எனது முதல் காதல் முளைவிட்டிருந்த வயது அது. தரப்பட்ட வேலையை தவறவிட்டு விட்டு தாமதமாகவே கூட்ட அறிவிப்பை நான் செய்திருந்தேன். சந்ததியாரிமிடமிருந்து தப்ப முடியவில்லை. மிகக் கண்டிப்பாகவும் ஆனால் மிகச் சரியாகவும் வாங்கிக் கட்டிக்கொண்டேன். கண்டிப்பான மனிதன் என்ற பெயர் இவருக்கு உண்டு.

ஆனால் கூட்டம் முடிந்தபின்னர் சந்ததியார் மலர்ந்த முகத்துடன் அந்தக் கடுப்பான கண்டிப்பான மனிதனா இவர் என்று வியக்கும் வண்ணம் தன்னுடைய கண்ணாடிக்குள்ளால் கண்களைச் சிமிட்டினார்.

இந்தக் கூட்டத்திற்கு சந்ததியார் இருவரை அழைத்து வந்தார். அவர்களில் ஒருவர் டேவிட் ஐயா மற்றவர் அரபாத் என்ற பெயரால் அழைக்கப்பட்ட காந்தீயப் பண்ணையில் தொண்டராக இருந்தவர்.

அன்றைய கூட்டத்தின் பேச்சாளரான திரு. டேவிட் ஐயா பேச்சுக்கு அடுத்ததாக அரபாத்தின் பேச்சில் காந்தீயப் பண்ணைகளில் நடந்த பொலிஸ் கெடுபிடிகள் பற்றியும் தனது சிறை மற்றும் சித்திரவதை அனுபவங்களையும் சொல்லியபோது அது சமூகந்தந்தவர்களிடத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றது.

அகதிகளுக்கான புனர்வாழ்வுக் கழக யாழ்ப்பாண நிர்வாகம் அங்கு தெரிவு செய்யப்பட்டது. அதன் தலைவராக அதிபர் அருணாசலம் தெரிவு செய்யப்பட்டார்.

இக் கூட்டத்திற்குப் பின்னர் விக்டோரியாக் கல்லூரி, வட்டு இந்துக்கல்லூரி, காரைநகர் இந்துக்கல்லூரி போன்ற கல்லூரிகளின் ஆசிரியர்களின் சம்பளப் பணத்தில் மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகை அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்துக்கு பங்களிப்பாக ஓதுக்கித் தர சம்மதித்தனர்.

டேவிட் ஐயா அவர்கள் வேட்டியுடனும் கால்களில் சிலிப்பர்களுடனும் மிக எளிமையான வகையில் அங்கு வந்திருந்தார்.

இதற்குப் பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு சந்ததியார் யாழ்ப்பாணம் வந்திருந்த போது சடுதியாக வந்து கிடைத்த செய்தியொன்றின் பிரகாரம் தான் உடனடியாக வவுனியாவுக்குச் செல்லவேண்டும் என்று புறப்பட்டு சென்றார். அகதி மக்களுக்கு எதிராக வன்னி மக்களின் கலவரங்கள் சில இடங்களில் தூண்டப்பட்டு சேதங்கள் விளைவிக்கப்பட்டதாக அச்செய்தி இருந்ததாக எனது ஞாபகம். இது வரைக்கும் இந்தக் காந்தீய அமைப்புக்கும் சந்ததியாருக்கும் புளட்டுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது எவருக்கும் தெரியாது. காந்தீயம் என்பது அகதிகளுக்கு உதவுகின்ற ஒரு தொண்டு நிறுவனம் என்பது மட்டுமே பரகசியமான விடயம்.

அன்று சென்றவரை நான் மீண்டும் நேரில் சந்திக்கவேயில்லை. காலம் பல கொடுவினைகளை இதற்குள் ஆற்றியிருந்தது. அவற்றில் ஒன்று தான் வெலிக்கடைப் படுகொலை. ஏனைய சிறைக்கைதிகளோடு டொக்டர் இராஜசுந்தரம் அவர்கள் கொல்லப்பட்டதும் இனக்கலவரங்களும் என்று காலம் பிறழ்ந்து போக எமது இளமைப் பருவம் அதற்குள் அமிழ்ந்து போனது. நீண்ட காலத்துக்குப் பின்னர் சந்ததியார் புளட்டின் மத்தியகுழு உறுப்பினர் அரசியல் செயலர் என அறிகிறேன்.

இதே காந்தீயத்தின் பாலமோட்டை அகதிகள் குடியிருப்புக்கான தற்காலிக குடில்கள் அமைக்கும் சிரமதானவேலை, பொதுக் கிணற்றுக்கு சென்று வருவதற்காக, கற்களைக் கொட்டிப் பரவி மேடான பாதை ஒன்று அமைக்கும் சிரமதானம், வவுனியா செட்டிகுளம் கந்தசாமி நகரில் காட்டுப்புதர்களையும் மரங்களையும் அகற்றி கிராமத்துக்கான ஒரு சீரிய பாதை ஒன்றினை அமைக்கும் சிரமதானம் என்பனவற்றில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரி உயர்தர வகுப்பு மாணவர்களான நாங்கள் கலந்து கொண்டோம்.

செட்டிகுளம் கந்தசாமி நகர் பொதுப்பாதைக்கான காடு வெட்டுகின்ற வேலையின் போது டொக்டர் இராஜசுந்தரம் அவர்கள் கோடரியுடன் மரங்களை வெட்டுவதற்கு எங்களுடன் இணைந்து கொண்டார். எங்களுக்கு நுளம்புக்கடியால் ஏற்படக்கூடிய மலேரியோ நோய்க்கான தடுப்பு மாத்திரைகளை வவுனியாவிலுள்ள தன்னுடைய சாந்தி கிளினிக்கில் தந்து எங்களை அனுப்பி வைத்த பின்னர் அவர் ஒதுங்கிவிடாமல் கந்தசாமி நகரில் தானும் தனது பங்குக்கு கோடரியுடன் வந்து நின்றது சிரமதானப்பணிக்காய் வந்தவர்கள் மத்தியில் ஊக்கத்தை உருவாக்கியது.

கோடாரி பிடித்து காடுவெட்டி பழக்கமின்றிய எமது யாழ்ப்பாணத்து உடல் அலுப்புடன், பசித்துக் களைத்து வந்தால், மதிய வேளையில், அகதி மக்களின் அன்புடன் கூடிய அன்றைய உணவு ஆரவாரமாக இருக்கும். பெரும்பாலும் ஓரு கறி இறைச்சியாகவும் பலவகை பச்சிலைக் கறிகளுடன் ஊரே கூடிச் சமைத்த அந்த உணவு உலகெங்கும் தேடியும் இன்னும் எனக்கு கிடைக்கவேயில்லை. அமிர்தமாகவே இன்றும் நினைவில் இருக்கின்றது.

மாலைநேரங்களில் சிரமதானப் பணிகள் முடிந்து வந்தால் சந்ததியார் விறகுகள் சுள்ளிகள் அடுக்கி நாங்கள் தங்கியிருந்த குடிலுக்குள் கூதல் வராமல் கணகணப்பாக்குவதற்கும் ஆளையே தூக்கிச் செல்லுமாற்போல் படையெடுத்து வரும் ஙொய் ஙொய் நுளம்புகளை விரட்டுவதற்கு புகை எழுப்புதற்கும் நெருப்பு மூட்டி வைத்திருப்பார். அந்தக் கணகணப்பில் சுற்றி அமர்ந்திருக்கின்றபோது சந்ததியார் சில வார்த்தைகளை மெல்லத் தொகுத்து உதிர்ப்பார். அவற்றுள் «தமிழீழ» எல்லைக்கிராமங்களைப் பற்றியும் இருக்கும். கூட்டணியின் அரசியல் ஏமாற்றைப் பற்றியும் இருக்கும். ஆனால் ஆயுதப் போராட்டத்தினை நோக்கிய கருத்துக்கள் அன்று இருக்கவில்லை. அவதானமாக இருந்திருக்கக் கூடும்.

இப்படி ஒருநாள் கூடியிருந்துவிட்டு எல்லோரும் கிழங்கடுக்கின மாதிரி சாக்குத் தறுப்பாளுக்கு மேல் விரிக்கப்பட்ட பாய்களில் கைகளை மடக்கி தலையணையாக்கி நித்திரையாகி விட்ட சற்று நேரத்தில் காட்டு மரங்களையெல்லாம் ஊடறுத்துக் கொண்டு பெரும் கூச்சல்கள் எழுந்தன. பரபரப்புடன் நாங்கள் எழுந்து என்னவோ ஏதோ என்று விசாரிக்கத் தொடங்கிய வேளை தகரங்களில் தட்டும் ஒலி நாலா பக்கமும் இருந்து வந்தது. தீப்பந்தங்கள் அங்கொன்றும் இங்கொன்றாக உயர்ந்து ஒளிரத் தொடங்கியது. கூச்சலுடனும் சிலர் விரைவாக ஒரு திசை நோக்கி செல்வது தெரிந்தது. சந்ததியார் எங்களில் இருவரை அழைத்துக் கொண்டு என்ன ஏதென விசாரிப்பதற்கு அந்த இருட்டிலும் விரைந்து சென்றுவிட்டார். மிஞ்சி நின்ற நாங்கள் இருப்புக் கொள்ள முடியாமல் சற்றுத் தாமதமாக பின் தொடர்ந்தோம். சனக் கூட்டம் போன வழியில் தீப்பந்தங்களைப் பின் தொடர்ந்து சென்றால் அது குடியிருப்புக்கு ஒரு வகையில் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தவரின் குடிசை வீட்டுக்கு கொண்டு போய்ச் சேர்த்தது. அங்கு நிறையப் பேர் ஏற்கனவே குழுமியிருந்தனர். எல்லா விபரங்களையும் சுற்றி நின்றவர்கள் சொல்வதற்கு முன்னதாகவே நடந்தது என்னவென்று அங்கு கண்ட காட்சியே எல்லாவற்றையும் சொல்லியது. இந்த இரட்டைக் குடிசை. நெல்லு மூட்டைககள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தினையும் படுக்கின்ற திண்ணையையும் கொண்டிருந்த தலைவாயில் குடிசைக்குப் பக்கத்தில் இருந்த குசினிக் கொட்டிலும் அதையடுத்து நின்ற வாழைத்தோட்டமும் நார்நாராய் கிழித்து வீசப்பட்டிருந்தது. கொட்டிலின் கூரை முகட்டினை சிறு தட்டுத் தட்டி மோதியதில் அது காட்போட் பெட்டியை நசுக்கின மாதிரி விழுந்து கிடக்க தட்டிகள் கிடுகுகள் எல்லாம் சிதிலமாய் கிடந்தது. வேரோடு பிடுங்கி வீசப்பட்ட வாழைமரங்கள் தலைவிரி கோலமாய் தரையில் துவம்சமாய் கிடந்தன. அந்த தலைவாசல் திண்ணையில் நித்திரையில் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்து போய் சத்தம் எழுப்பாமலே இருந்து விட்டார்கள். தாங்கள் தப்பியது அருந்தப்பு என்று அவர்கள் கூறினார்கள். தலைவாசல் குடிசையில் அடுக்கியிருந்த நெல்மூட்டைகளோ என்னவோ அல்லது மனித வாடையோ என்னவோ தும்பிக்கை கொண்ட இந்த காட்டு ஜீவனை அக்குடிசையை தீண்டாமல் விலக்கி வைத்திருந்தது.

அன்றிரவு குடிசைகளுக்குள் விளக்குகளும் வெளியில் விறகுக்கட்டைகளால் மூட்டப்பட்ட தீச்சுவாலைகளும் தகரங்களைத் தட்டி எழுப்பப்படும் ஒலியும் அக் காட்டுக்கிராமத்தின் காவலை பலப்படுத்தியிருந்தன.

அன்றிலிலிருந்து அங்கு தங்கிநின்ற நாட்களின் இரவுகள் முறை வைத்துக் காவல் இருக்கும் இரவுகளாக கடந்து போனது.

இந்த இரவுகளை கடந்தவர்களில் மூவர் இன்று உயிருடன் இல்லை. அவர்களில் ஒருவர் சந்ததியார். கண்கள் தோண்டப்பட்டு குரூரமாக கொலை செய்யப்பட்டு சாக்குப்பையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரைக் கொன்றவர்களில் சிலரும் இன்று இல்லை. அவரைக் கொலை செய்யத் தூண்டியவர்களும் அதற்கு களம் அமைத்துக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

-நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து 

 

Link to comment
Share on other sites

டாக்டர் ராஜசுந்தரம் பற்றி மேலும் தகவல்களுக்கு Gandhiyam என்ற முக புத்தகபக்கதிற்கு போனால் நிறைய அறியலாம் .எமது ஆரம்ப காலப்போராட்டம் பற்றியும் நிறையே தகவல்கள் இருக்கு .

 

இங்கு அவற்றை மேலும் இணக்க விரும்பவில்லை .


969153_180934065403099_789101493_n.jpg?o


ஒரு ரஷ்ய ,சீனா ,வியட்னாம் புரட்சியாக தோழர்கள் கனவு கண்ட காலங்கள் அவை . :(

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

டாக்டர் றாஜசுந்தரம் வெளிநாட்டில் சுகபோகமாக வாழ வழியிருந்தும் மக்களுக்காகவே சிந்தித்து காந்தீயம் இயக்கத்தின் வாயிலாக வன்னி மக்களுக்கு பெரும் சேவைகளைச் செய்து வெலிக்கடையில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்.

 

மக்களை நேசிப்பவர்கள் எப்போதும் மக்களுடனேயே இருக்க விரும்புவர். மக்களுக்கு சேவையாற்றுவர். வெளிநாடுகளில் பத்திரமாக இருந்து கொண்டு மக்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள்.

 

அந்த வகையில் பலருக்கும் உதாரணமாக இருந்த ஒரு தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயமில்லை. அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள்..

Link to comment
Share on other sites

டாக்டர் றாஜசுந்தரம் வெளிநாட்டில் சுகபோகமாக வாழ வழியிருந்தும் மக்களுக்காகவே சிந்தித்து காந்தீயம் இயக்கத்தின் வாயிலாக வன்னி மக்களுக்கு பெரும் சேவைகளைச் செய்து வெலிக்கடையில் அநியாயமாகக் கொல்லப்பட்டவர்.

 

மக்களை நேசிப்பவர்கள் எப்போதும் மக்களுடனேயே இருக்க விரும்புவர். மக்களுக்கு சேவையாற்றுவர். வெளிநாடுகளில் பத்திரமாக இருந்து கொண்டு மக்களுக்கு ஆலோசனை வழங்குபவர்களாக மட்டும் இருக்க மாட்டார்கள்.

 

அந்த வகையில் பலருக்கும் உதாரணமாக இருந்த ஒரு தமிழ் உணர்வாளர் என்பதில் ஐயமில்லை. அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் இங்கிலாந்தில் வசிக்கிறார்கள்..

அவரது மனைவி பெயர் தான் சாந்தி .அவரின் பெயரில் தான் அவர்களது மருத்துவமனை இருந்தது .டேவிட் ஐயாவும் நீங்கள் சொல்லும் பட்டியலில் இருக்கின்றார் .

Link to comment
Share on other sites


 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  கு.சா அண்ணா,புத்தன் 
  • பிறந்தநாள் வாழ்த்துகள் குமாரசாமி அண்ணை, புத்தன் அண்ணை. வாழ்க வளத்துடன்.
  • கிருபன்.  குமாரசாமி ஐயா.  மற்றும் புத்தன் ஆகியோருக்கு நலம்கூடி  நல்வளம் செழிக்க..  
  • இலங்கையும் வல்லரசுகளும் By DIGITAL DESK 5 13 AUG, 2022 | 12:13 PM லோகன் பரமசாமி தமிழ்தேச  மக்கள் மத்தியில் இலங்கையில் ஏற்பட்டு வருகின்ற  அரசியல் பொருளாதார நெருக்கடி மாற்றங்களை சிங்கள தேசத்தோடு இணைந்து கூட்டாக ஒரு குடையின் கீழ் அணிவகுத்து நின்று பார்ப்பது பொருத்தமற்றது என்ற நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது.   தமிழ் மக்கள் தம்மை இறைமையுள்ள ஒருதேச மக்களாக  நிலைநிறுத்தி வைத்துக்கொள்ளவே அதிகளவில் பிரயத்தனம் செய்கின்றனர்.  இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாக பரிணமித்துள்ளது. ஆட்சித்தலைவர்களை மக்கள் நாட்டை விட்டு தப்பியோடும் அளவிற்கு வேட்கை கொண்டதாக உள்ளது. புதிதாக பதவியேற்றுள்ள ஆட்சியாளரையும் பதவி விலகுமாறு கோரும் வலியுறுத்தல்களும் தீவிரமடைந்து வருகின்றன.  எனினும், பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகளைக் காண்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. நாட்டின் பணவீக்கம் தீவிரமடைந்து கொண்டிருக்கின்றது. அதனால் பொருட்களின் விலைவாசி அதிகரித்துச் செல்கின்றது. அத்துடன், அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லாத நிலைமையில் தீவு தேசம் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.  இந்த நிலையிலும், உலக வல்வரசுகள் இலங்கை ஆட்சி நிர்வாகத்தில்  தமது செல்வாக்கை வலுப்படுத்தி கொள்வதில் இருந்து  சற்றும் விலகவில்லை என்பது முக்கியமான விடயமாகும். இது தீவு தேசத்தில் மேலும் பதற்றமான நிலைமையை அதிகரிப்பிற்கான காரணியாகவே அமையும் என்பது பலரதும் கரிசனையாகவுள்ளது.  இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு முதல் இருந்தே இந்தியா அரச நிர்வாகக் கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் கடன் உதவிகளை வழங்கியிருந்தது.  ஏறத்தாழ 1.5பில்லியன் அமெரிக்க டொலர்களை இது வரையில் புதுடில்லி தனது உதவித்தொகையாக வழங்கியுள்ளது. இந்த உதவிக்தொகை உணவு, எரிபொருள், மருந்துவகைகள், மற்றும் பயிர்செய்கைக்கான உர வகைகளை இறுக்கமதி செய்யும் நோக்கத்திற்காக கொடுக்கப்பட்டது.  இதற்கும் மேலாக இந்தியா, கடன் அடிப்படையிலும் நாணய பரிமாற்று அடிப்படையிலும் 3.8பில்லியன் டொலர்கள் பெறுமதியான உதவிதொகையைக் காட்டியிருக்கிறது. இதன்மூலம் கொழும்பு நிர்வாகத்துக்கு எப்பொழுதும் எத்தகைய நிலையிலும் புதுடில்லி தனது முதன்மை நிலையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.   புதுடில்லியின் இந்தச் செயற்பாடுகளுக்கு ஈடுசெய்யும் வகையில பீஜிங் தனது உதவித்தொகையாக சுமார் 500மில்லியன் யுவான்களை (75மில்லியன் டொலர்கள்) வழங்கியுள்ளது. பீஜிங், உதவியாக கொடுத்துள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தில் இலங்கைக்கு கடன் பெற்று தரும் விவகாரத்தில் ஆக்கபூர்வமான வகையில் நடந்து கொள்வதாக உறுதிமொழி அளித்துள்ளது .  ஆக, இந்தியாவும் சீனாவும் இலங்கையில் உள்ள ஆட்சி நிர்வாகத்துடன்- அது எந்த ஆட்சியாளராக இருந்தாலும் தமது செல்வாக்கை வலுப்படுத்தி கொள்வதில் முக்கிய கவனம் செலுத்துகின்றன.  ஆனால், இலங்கையில் சீனாவின் அதிகரித்த முதலீடுகளும் தனது சொந்த வியாபார வசதிக்கேற்ப பாரிய உட்கட்டமைப்புகள் மீதான அதிகரித்த ஈடுபாடும் இலங்கையை சீனாவின் கைகளில் இருந்து நழுவமுடியாத நிலைக்கு தற்போதுதள்ளிவிட்டுள்ளது.   உதாரணமாக சீன உதவியுடன் கட்டப்பட்ட வீதி கட்டமைப்புக்களும் துறைமுகக் கட்டமைப்புக்களும், விமான நிலையங்களும்  மின்நிலைய கட்டமைப்புக்களும் சீன ஆதிக்கத்தை இலங்கைத்தீவில் உறுதி செய்துள்ளது.  இந்த நிலையிலேயே அரசியல், நிர்வாக சமநிலை, பொருளாதார காரணங்களால் தளம்பலைக் கண்டுள்ளது. சீனாவின் செல்வாக்கு நிலையை குலைப்பது மட்டுமல்லாது. இலங்கைத் தீவிலிருந்து சீனாவை வெளியேற்றித் தனது நிலையை தக்க வைத்து கொள்வதற்கு சீன போட்டியாளர்களான அமெரிக்க இந்திய யப்பானிய பெருவல்லரசுகள்  நகர்வுகளில் ஈடுபடும் நிலைக்கு வந்துள்ளன. சீனா தனது பார்வையில் ‘கடன் பொறி இராஜதந்திரம்’ என்ற சொல்லை மேலை நாடுகள் பயன்படுத்தி தனது வியாபார அபிவிருத்தி திட்டங்களை தீய நோக்கம் கொண்டவையாக சித்தரிக்க முனைகிண்றன என்று கூறி வருகிறது.  அதேவேளை இலங்கையில் போராட்டங்களில் ஈடுபடும் போராட்டகாரர்களை கைது செய்வது ஜனநாயக விரோதச்செயலாகும் என்று அமெரிக்க தூதரகம் நேரடியாகவே அழுத்தம் பிரையோகித்துள்ளது. சர்வதேசங்களில் மனித உரிமை ஜனநாயகம், சர்வதேச நிறுவனங்கள் ஊடான கடன் உதவித்திட்டம், ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்தும் வகையில் அமெரிக்கா செயற்படுவது வழக்கம். தனக்கு சாதகமான அரசியல் நிலையை உருவாக்கும் வரை மேலைதேய உதவிகள் போராட்டக்காரர்களுக்கு இருக்கும். தேவை முடிந்ததும் பலரும் அரச இயந்திரத்திடம் பலிக்கடாக்களாக ஆக்கப்படுவர்  இந்தியா உள்ளகப் பொறிமுறைகளை உபயோகப்படுத்தும் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் நிதி உதவிகளும் உறுதி மொழிகளும் உற்சாக வார்த்தைகளும் வழங்கப்பட்டு வருவதை பல்வேறு அரசியல் தலைவர்களின் பேச்சுகளும் உறுதி செய்கின்றன. ஆக வல்லரசுகள் தமது இலக்கை அடைவதற்கு ஏற்ற வகையில் தமது செல்வாக்கின் அடிப்படையில் உள்@ர் கூறுகளை நகர்த்துவதில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை உள்@ரில் உள்ள கூறுகளும் தமது இருப்பையும் நலன்களையும் உறுதி செய்வதில் கவனம் கொண்டுள்ளன. முதலில் அரசாங்கம் தனது இருப்பை உறுதி செய்யும் வகையில் போராட்டகாரர்களை கட்டுக்குள் கொண்டு வரும் திட்டத்தில் பாதுகாப்புப்படைகளை உபயோகிப்பதில் மும்முரமாக செய்பட்டு வருகிறது.   அடுத்ததாக புதிதாக பதவியில் அமர்ந்துள்ள ஆட்சியாளர்களை ஆசீர்வதிக்கும், ஆலோசனை வழங்கும் பௌத்த பீடங்கள் போராட்டக்காரர்கள் மத்தியிலும் தமது பிரசன்னத்தைக்காட்ட தயங்கவில்லை.  ஒருவேளை போராட்டம் காரணமாக ஏதாவது மாற்றம் ஏற்பட்டு விட்டாலும் அங்கே தாமும் நின்றோம் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது.  ஆக, எந்த பகுதியிலும் பேரினவாதத்தின் செல்வாக்கை வைத்திருக்க வேண்டும் என்பதில்  பௌத்த பீடங்கள் கவனமாக செயற்பட்டு வருகிறன. மேலும் போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் மேலத்தேய முத்திரை குத்தப்பட்ட சர்வதேச அமைப்புகளினால் இனங்காணப்பட்டு உள்ளனர். இவர்கள் இன்னமும் ஜனநாயகத்தின் போர்வையில் போராடி வருகின்றனர்.  போராட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி வன்முறையை தூண்டும் பணிகளில் ஈடுபடக் கூடியவர்கள் பலர் தலைமறைவாக சென்ற விட்டனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இலங்கை அரச பாதுகாப்பு படைகள் இது வரைகாலமும்  பொறுப்புக்கூறலில் இருந்த பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த யுத்த காலத்தில் உதிரிகளை இல்லாது அழிப்பதில் நன்கு தேர்ச்சி பெற்றனர் என்பதை மறந்து விடலாகாது.  இலங்கை அரசியல் தலைவர்கள் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பதில் தயக்கம் காட்டி வருவதையும் கூட காணகூடியதாக உள்ளது. வங்குரோத்து நிலையில் அரசியல் செய்வது என்பது இலாபமற்ற பொதுச்சேவை அரசியலே செய்ய வேண்டிய கட்டத்தில் பல சிங்கள அரசியல்வாதிகள் உள்ளனர். இந்த வகையில் பொறுப்புகள் அதிகமாகும் நிலை காணப்படுவதால் பலரும் தயக்கம் காட்டும் தன்மை உள்ளது. இவை அனைத்துக்கும் மத்தியில் எரியும் வீட்டில் பிடிங்கினால் அமைச்சர் பதவி, எட்டாப்பழம் புளிக்கும் என்ற நிலையில் பதவி  கிடைக்காவிட்டால் தமிழ் தேசியவாதி என்ற வகையில் ஒருசில தமிழ் அரசியல்வாதிகளும் நடமாடி வருகின்றனர்.  ஆனால் இங்கே பொருளாதார முடக்கத்தால் அடிபட்டு போயிருப்பது அன்றாடம் உழைத்து வாழும் அப்பாவி சிங்கள மக்களே ஆகும்.  இருந்த பொழுதிலும் தமிழினத்தை இன அழிப்பிற்குள் உள்ளாக்கியது தொடர்பான பொறுப்பு ஒட்டுமொத்த சிங்கள தேசத்திற்கும் ஒருசமுதாய பொறுப்பாக உள்ளது என்பதை மறந்து விடலாகாது.  இலங்கையும் வல்லரசுகளும் | Virakesari.lk
  • சீன மூலோபாயத்தின் இரகசிய நகர்வா யுவான் வோங் - 5 By VISHNU 10 AUG, 2022 | 09:12 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் - 5  கண்காணிப்பு கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் குறித்து குவாட் அமைப்பு நாடுகளும் பாதுகாப்பு சார் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் முதலாவது வெளிக்கள இராணுவ தலத்திற்கான இலக்கை மையப்படுத்தியதாகவா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனா நகர்த்துகின்றது என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தியுள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபூட்டியில் சீனா ஏற்கனவே  இராணுவத்தளம் ஒன்ஐ உருவாக்கியுள்ள நிலையில் இந்தோ - பசிபிக் பகுதியிலும் உருவாக்கி விட வேண்டும் என்ற இலக்கில் சீனா பல ஆண்டுகளாக செயற்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் இலங்கை, கம்போடியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் துறைமுகங்களை பயன்படுத்தி இராணுவ தளம் ஒன்றை உருவாக்கலாம் என்ற சந்தேகம் பல தரப்புகளாலும் வெளியிடப்பட்டு வந்தன. அந்த வகையில் கம்போடியாவில் ஒரு கடற்படை தளத்தை இரகசியமாக உருவாக்கி வருவதாக கூறப்பட்டது. ஆனால் அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்துவதில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. ஆனால் மியன்மாரின் ஷட்வே துறைமுகம் மற்றும் கம்போடியாவின் நான்கு முக்கிய துறைமுகங்களில் ஒன்றும் சீனாவின் இலக்காக காணப்பட்டுள்ளது.   இவ்வாறான சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் ' யுவான் வோங் - 5' எனும் சீன இராணுவத்தின் கண்காணிப்பு கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.  குறிப்பாக இந்தியா இந்த கப்பலை ஓர் உளவுக் கப்பலாக சுட்டடிக்காட்டி இலங்கையுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் இந்தக் கப்பலிலிருந்து 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பகுதியினை கண்காணிக்க முடியுமென இந்திய இராஜதந்திர தடங்கள் அனைத்தும் கொழும்பை நோக்கி அழுத்தங்களை பிரயோகித்தன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் யுவான் வோங் - 5 சீன கண்காணிப்பு கப்பல் நங்கூரமிட்டால் இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள பல முக்கியமான கேந்திர நிலையங்களை கண்காணிப்பது மாத்திரமன்றி தேவையான உளவு தகவல்களையும் சேகரித்து விடும். இவ்வாறானதொரு அச்சுறுத்தல் மிக்க நிலைமை இலங்கையால் இந்தியாவிற்கு ஏற்பட அனுமதிக்க முடியாது என்பதுடன் அதனை தடுக்க எந்த எல்லைக்கும் செல்ல வேண்டும் என்பதே டெல்லியின் இறுதி தீர்மானமாக அமைந்தது. கடும் இந்திய அழுத்தங்களுக்கு மத்தியில் யுவான் வோங் - 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான விஜயத்தை ஒத்திவைக்குமாறு சீன தூதரகத்திடம் இலங்கை எழுத்து மூலமாக கோரியது. கோரிக்கை கடிதத்திற்கு எவ்விதமான நேரடி பதிலையும் வழங்காத சீனா, கப்பல் விடயம் குறித்து உயர் மட்ட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மறுப்புறம் பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தங்களை பிரயோகிப்பது அர்த்தமற்றது என சீனா வெளிப்படையாகவே அறிவித்து விட்டது. அதே போன்று இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக ஏனைய நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வளர்க்க இலங்கைக்கு உரிமையுள்ளதென கப்பலின் வருகையை எதிர்க்கும் அனைத்து தரப்புகளுக்கும் சீனா பதிலளிப்பதாக கூறியது. இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் இவ்வகையான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு விட கூடாது என்பதில் எந்தளவிற்கு இந்தியா உள்ளதோ அதே போன்று சீனாவின் மேலாதிக்க போக்கு இருக்க கூடாது என்பதில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளும் உள்ளன. எனவே தான் யுவான் வோங் - 5 கப்பலின் வருகை  குறித்து 'குவாட்' அமைப்பு நாடுகளும் கவனத்தில் கொண்டன.   இந்தோ - பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா,  ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து 2007-ம் ஆண்டில்  உருவாக்கப்பட்ட அமைப்பு தான் இந்த 'குவாட்'. இந்த அமைப்பின் அடுத்த நிலையாக அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, புருணே, இந்தோனேசியா, தென்கொரியா, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய 13 நாடுகள் இணைந்து இந்தோ-பசிபிக் பொருளாதார வளர்ச்சி கூட்டமைப்பையம் உருவாக்கியுள்ளன. இதுவும் சீனாவின் ஆதிக்கத்தை  பிராந்தியத்தில் கட்டுப்படுத்தும் வகையிலேயே தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான  கரிசனையில் குவாட் அமைப்பு ஊடாகவும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அதாவது யுவான் வோங் - 5 கப்பலின் ஹம்பாந்தோட்டை துறைமுக விஜயத்தை தடுப்பதற்கு சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான கூட்டணி ஒன்றிணைந்தது. இதற்கு பிரதான காரணம் இந்தியாவின் பாதுகாப்பு சூழலுக்குள் இலங்கையின் கடல் எல்லைப் பகுதிகள் இருக்கின்றமையால் மாத்திரம் அல்ல. ஹம்பந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்ட போது பல நாடுகள் இலங்கையை எச்சரித்தன.  அதாவது சீனாவின் மற்றுமொரு வெளிக்கள இராணுவ தளமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம்  மாறலாம் என்பதே எச்சரிக்கையாகும்.  அதே போன்று தனது இராணுவ நலன்களுக்காக இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் இலங்கை, கம்போடியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் துறைமுகங்களை பயன்படுத்தலாம் என்ற முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.    எனவே அவ்வாறானதொரு நோக்கத்திற்காக தான் சீனா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி நகர்த்துகின்றதா என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பிற்கு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் காணப்பட்டதாகவே இராஜதந்திர மட்ட தகவல்கள் கூறின.  எனவே உலகளாவிய சக்தியாக மாறும் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே  வெளிக்கள இராணுவ தளங்கள் அமைவதாக சுட்டிக்காட்டப்படுகின்றன. சீன மூலோபாயத்தின் இரகசிய நகர்வா யுவான் வோங் - 5 | Virakesari.lk
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.