Jump to content

'பாயசம்' கார்டன் இல்லை 'பாய்சன்' கார்டன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லகம் முழுக்க மக்களின் பொழுபோக்குக்காக பலவிதமான தோட்டங்களை அமைத்திருப்பார்கள். பொழுதினைப் போக்கவும், தகவல்களை அறிந்து கொள்ளவும் அங்கு வசதி செய்து இருப்பார்கள். 

அதில் ஒரு வித்தியாசமான தோட்டம்தான்  இங்கிலாந்தில் இருக்கும்   இந்த விஷத் தோட்டம்.  அதன் பெயர் மாராகா  'பாய்சன் கார்டன்'  (Poison Garden).!  இந்தத் விஷத் தோட்டத்தை ஆல்ன்விக் கார்டன் (Alnwick Garden) என்றும் அழைப்பார்கள். 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த பாய்சன் கார்டனுக்குள் சென்றால் எமலோகத்துக்குப் போய்விட்டு வந்த மாதிரி இருக்கும். இங்குள்ள ஒவ்வொரு செடியும் ஒரு விஷ பாம்பு போன்றது. எல்லாமே விஷ செடிகள்தான். ஒரே மாதிரியான கார்டன்களைப் பார்த்து பார்த்து போர் அடித்த மக்கள், இந்த டிஃபரெண்ட் கார்டனைப் பார்ப்பதற்கு ஆர்வம்காட்டி வருகிறார்கள்.

poisiongarder1.jpg

மனிதர்களை கொல்லும் ஆற்றல் கொண்ட இந்தச் செடிகளை உலகம் முழுவதிலும் இருந்து சேகரித்து கொண்டு வந்து இந்த 'பாய்சன் கார்டனை' உருவாக்கி உள்ளனர். கொடிய விஷம் கொண்ட செடிகள் இங்கு நூற்றுக்கும் மேல் உள்ளது. இதில் Foxgloves, belladonna, poppies, laburnam ஆகியவை அரிதானவை.

poisiongarder2.jpg

'பாய்சன் கார்டன்' வாயிலேயே எந்த ஒரு செடியையும் தொடக்கூடாது, முகர்ந்து பார்க்கக்கூடாது, வாயில் வைக்கக்கூடாது என்று அபாய குறியிட்டுடன் எச்சரிக்கை செய்யும் போர்டுகள் ஏகப்பட்டது வைத்து எச்சரிக்கை செய்கிறார்கள். அதேபோல் குழந்தைகளை தனியாக விடவேண்டாம் என்றும் வாசகங்கள் அங்காங்கே எழுதப்பட்டிருக்கும். இந்த எச்சரிக்கையை மீறினால் அதோ கதிதான். ஒவ்வொரு செடியின் பெயரையும் அதன் தன்மைப் பற்றியும் எழுதி வைத்திருந்தாலும், அதைப் பற்றி கைடுகள் மூலம் விளக்குகிறார்கள்.

poisiongarder3.jpg

விஷ செடிகளையும், மரங்களையும் கொண்டு மருந்துகள் தயாரிப்பது தெரியும். அது போல்தான் இந்த கார்டனில் உள்ள செடிகள் மருந்து தயாரிக்க உதவுகின்றன. விஷத்தன்மைக் கொண்ட செடிகளைப் பற்றி தெரிந்துகொள்ளவே இந்த பாய்சன் கார்டன் உருவாக்கி இருக்கிறோம் என்று நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

எச்சரிக்கைகளை மதித்து, பாய்சன் கார்டன் உள்ளே சென்று வரவேண்டும் என்பது ஒரு த்ரில்லிங்கான அனுபவம்தான்.  தினமும் காலை 10 முதல் மாலை 7 மணிவரை அனுமதிக்கப்படும்.

கட்டணம் பெரியவங்களுக்கு நம்மூர் காசில் 700 ரூபாயும், 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு 200 ரூபாயும் வசூலிக்கிறார்கள். 

-என்.மல்லிகார்ஜுனா 

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.