Sign in to follow this  
நிழலி

20,000 பதிவுகள் கடந்த விசுகு விற்கு வாழ்த்துக்கள்

Recommended Posts

 

126coqa.jpg

 

எங்கள் களத்தின் முக்கிய உறவான விசுகு அவர்கள் 20,000 பதிவுகளை அண்மையில் கடந்து இருக்கின்றார். யாழின் பல பகுதிகளுக்குள்ளும் சென்று கறுப்பு , நீலங்களில் எழுதி குவித்து வரும் எங்கள் விசுகு மேலும் மேலும் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.

 

 

பதிவுக்கும்  நேரத்திற்கும் நன்றி  நிழலி

 

எனது கருத்துக்களையும்

பொறுமையுடன் அனுமதித்த நிர்வாகத்தினருக்கும்

பொறுமையுடன் வாசித்த உறவுகளுக்கும் முதலில் நன்றிகள்...

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.. :D

Share this post


Link to post
Share on other sites

பச்சைக்கலரை விட்டுட்டீங்க நிழலி, வாழ்த்துக்கள் விசுகர்.

 

 

நன்றி தம்பி  நந்தன்..

 

கலர் பற்றி...

வேறுபடுத்திக்காட்டவேண்டும் என்பதற்காக ஆரம்பித்தேன்...

ஒரு சொல்லில் அதன் போக்கை அறிவிக்க இது உதவும் என நம்பினேன்

ஆரம்பத்தில் சிலருக்கு எரிச்சலாக இருந்தது

இசை கூட பிரின்ரரில் கலர் மை முடிந்துவிடடதா என நக்கலடித்திருந்தார்

(அவரால் களஉறவுகள் சம்பந்தமாக எழுதப்பட்ட  நகைச்சவை பகுதியில்)

ஆனால் தற்பொழுது பலரும் பாவிக்கிறார்கள்...

 

மற்றும்படி

சொந்த வாழ்வில் துக்க நிகழ்வுகளுக்கு (மாவீரர்நாள் உட்பட)

செல்லும் போது கறுத்த சேட் தான் அணிவேன்

 

அதே நேரம் சந்தோசமான விடயங்களுக்க போகும் போது கறுப்பு அணிவதில்லை

அந்தவகையிலேயே கறுப்பும் பச்சையும்

அத்துடன் கிளுகிளுப்பான விடயங்களுக்கு நீலமும்

காட்டமான விடயங்களுக்கு சிவப்பு.

 

நன்றி  நந்தன் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.........

Share this post


Link to post
Share on other sites

இன்னும் பல்லாயிரம் பதிவுகளைக் குவிக்க வாழ்த்துக்கள் விசுகு ஐயா. :)

எதிலும் பூடகமாக ஏதாவது சொல்லியிருக்கா என்று துருவும் பழக்கம் இருப்பதால் நீங்கள் வெளிப்படையாக எழுதும் சில கருத்துக்களில் ஏதாவது இரகசியச் செய்திகள் உள்ளனவா என்று தேடுவேன். இதுவரை கண்டுபிடிக்கவில்லை! :icon_mrgreen:

 

 

நன்றி  கிருபன்....

 

உண்மை

பொய்

இரண்டும் தானுண்டு

அவை பற்றியே  என்னால் பேசமுடியும்

இரண்டுக்கும் நடுவில்....??

 

கதையை  எழுதி

உண்மையும் கற்பனையும் கலந்தது என்று 

அது தான் இது

இது தான் அது என வாழைப்பழ விளையாட்டு விளையாட இது என்ன சினிமாவா...??

 

பொறுப்புடன்

நானாவது நடந்து கொள்கின்றேன் என்று தான் நினைக்கின்றேன்

அது தொடரும்....

 

நன்றி கிருபன் ஐயா

நேரத்துக்கும்  கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

Share this post


Link to post
Share on other sites

என் உடன் பிறவா அண்ணன் விசுகு அண்ணாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் .உண்மையின் உருவமாகவே இந்த களத்தில் நான் பார்க்கிறேன் [தாயக விடயம்] தொடர்க அண்ணா உங்கள் பணி,துணைக்கு எப்போதும் நான் வருவேன் .......

 

நன்றி  தம்பி  தமிழ்சூரியன்

 

முடிந்தவரை உண்மையாக இருப்போம்

அதுவே இன்றைய தேவை..

 

நன்றி  தம்பி  தமிழ்சூரியன்

நேரத்துக்கும்  கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்புக்கும்..

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் அண்ணை தொடர்ந்தும் இணைந்திருப்போம் 

Share this post


Link to post
Share on other sites
வாழ்த்துக்கள் விசுகு அண்ணா!
 
யாழ்கள உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் உங்களையும் கந்தப்பு அவர்களையும்(2009)தான் சந்திக்க முயற்சி செய்தேன் இரண்டும் முடியாது போய்விட்டது.
(தற்செயலாக ஜஸ்டின், ஈழபிரியன் அவர்களை சந்தித்திருக்க வாய்ப்பிருக்கிறது).
எனது ப்ளேன் 9 மணிக்கே பாரிஸ் வந்தது. பாரிஸில் இருந்து ஜெனிவா சென்ற ரயிலும் 9 மணிக்கு புறபட்டதால். நான் இன்னொரு விமானம் மூலம் ஜெனிவா சென்றுவிட்டேன் நேரம் ஒன்றுக்கும் போதுமாக இருக்கவில்லை. 
என்றோ ஒருநாள் எப்படியும் சந்திப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.
 
கூடாதார் கூட்டம் கூடாதே என்று சொல்வார்கள்.......
அதலால் நல்ல மனிதர்களை மட்டுமே தேடுவது. உங்கள் கருத்துக்கள்தான் அப்படியொரு நம்பிக்கையை தந்தது. 
தொடர்வோம்! 

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா,

 

1- தேசியத்தின் பால்நீங்கள் கொண்ட உறுதியால் எனக்கு உங்கள் மீது பற்று அதிகம்.

 

2- பல விவாதங்களில் தேசியத்தை விட்டுக் கொடுக்காமல் நீங்கள் கருத்தாடல் செய்திருந்தீர்கள், அதற்காக நீங்கள் அதிகளவு நேரத்தினைச் செலவு செய்திருப்பீர்கள் எல்லாவற்றிற்கும் நன்றிகள்.

 

3-தாயக மக்களிற்கான உதவிகளிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவீர்கள். அதற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 

 

நன்றி  தம்பி

சந்தர்ப்பம் எப்பொழுதும் கிடைக்காது

இன்றிருந்தார்: நாளை...?

அதனால் கொஞ்சம் எழுதலாம் என நினைக்கின்றேன்...

 

1-  தேசியத்தின்பால் எனது ஈடுபாடு என்பது சிங்களம் அடித்து ஊட்டியது.

அத்துடன் எனது இளமைக்காலத்திலேயே  அழிவுகளையும் அதர்மத்தையும் கண்ணால் பார்த்ததும்

அகிம்சைப்போராட்டம்  தோன்றி தோல்வியடைந்து ஆயுதப்போராட்டம்   என என்கண்முன்னே வளர்ச்சி அடைந்ததும் காரணமாக இருக்கலாம்.  இவை அனைத்துக்கும் நானே சாட்சியாக இருக்கும் போது

நடந்தவை அனைத்திலும் முடிந்தவரை உதவியாக பங்காளியாக இருந்திருக்கின்றேன்.

என்னுடைய வாழ்வில் பெரும்பகுதி அவர்களுடன் தான் கழிந்துள்ளது..

எனது நட்பு வட்டம் மற்றும் உறவு வட்டம் எல்லாமே தாயக விரும்பிகளுடன் மட்டுமே இருந்திருக்கிறது. இருக்கிறது. 

 

2- தேசியத்தில் நாம் எதைவிட்டுக்கொடுக்கமுடியும்?? எதை நாம் விட்டுக்கொடுக்கவில்லை?? சிங்களத்தின் விடாப்பிடிக்குள் நாமே தொடர்ந்து குனியணும் என்பதும் நம்மீதே பிழைகள் என்பதும் யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டது. தோல்வியை  வைத்துக்கொண்டு வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலிகள் வீரர்கள் என்பது எவ்வளவு அறிவீனம்?? ஒருவன் தர்மஅடி அடிக்கும் போது அதை வலியோடு தடுப்பவனின் கைகால் அசைவுகளை படம்பிடித்துவிற்பது எவவளவு சுயநலமானது??? அந்த தடுக்கும் உறவுகளோடு நானும் இருந்தேன். கை கோர்த்தேன். அந்த நேரம் அது தேவைப்பட்டது. சரியாகவே இருந்தது. அது தப்பு என்றால் தற்பொழுது சரியான பாதைகளைக்காட்டணும். அவர்களுடன் கைகோர்க்க காத்திருக்கின்றேன். ஆனால் வெறும் வாயால் வடை சுடுதலே  தொடர்கிறது. அத்துடன் தம்மை ஈகம் செய்தோரை அவர்களுக்கு உறுதுணையாக இருந்தோரை என்ன பழி போட்டாவது துரத்தணும் என்பதே நடக்கிறது. தர்மம் வெல்லும் என்பது எனது நம்பிக்கை. உயிருள்ளவரை அது   தொடரும்......

 

3- புலம்பெயர்ந்ததிலிருந்து தாயகத்துக்கான நிதிப்பங்களிப்பு என்பதை செய்து வருகின்றேன். அது எனது வாழ்வில் ஒரு பகுதியாக பழக்கப்பட்டுவிட்டது.  எனக்குத்தேவைகள் அதிகரித்து வாழ்க்கை சுமையான போதும் அதில் நான் கைவைத்ததில்லை. காரணம் தாயகநிலமை அவ்வளவு மோசமடைந்தே வந்திருக்கிறது. வருகிறது. என்ன முன்னர் தேசிய மட்டத்தில் நின்று செய்தேன். தற்பொழுது ஊர் மட்டத்துக்கு பின் வாங்கியுள்ளேன். இது ஒரு வருத்தமான நிலமை.  எனக்கு சில சங்கடங்களைத்தந்தபோதும் ஏதாவது செய்தாகணும். அதற்கான வழிகள் மாறியபோதும். அது தொடரும்............

 

நன்றி தம்பி

அன்புக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...

உங்கள் போன்ற தம்பிகளைத்தந்த யாழுக்கு நன்றிகள்.....

Share this post


Link to post
Share on other sites

இன்னும் பல்லாயிரம் பதிவுகளைக் குவிக்க வாழ்த்துக்கள் விசுகு.  :) 

 

நன்றி  சகோதரா..

தமிழ் அரசு

என் வாழ்வில் அதைக்காணவேண்டும்.......

வாழ்த்துக்கள் விசுகன்னை.

 

நன்றி  சகோதரா..

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

தொடர்ந்து எழுதுங்கள்

பதியுங்கள்...

நன்:றி  தங்களது நேரத்துக்கும்..

வாழ்த்துகள்!

 

 

நன்றி  அண்ணை

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

ஆளைக்காணக்கிடைக்குதில்லை

 

தொடர்ந்து எழுதுங்கள்

பதியுங்கள்...

நன்றி  தங்களது நேரத்துக்கும்..

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

 

 

நன்றி  சகோதரா..

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

அடிக்கடி பிரான்சுக்கு வந்து போவது போல் தெரிகிறது

சந்திக்காவிட்டால்

ஒரு நாள் வேகபாதையில் மறிப்பேன்... :lol:

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

 

நன்றி  சகோதரி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

வாழ்க வளமுடன்..

மேலும் பல பதிவுகளை தொடர வாழ்த்துக்கள்!!!!

 

 

நன்றி  சகோதரா..

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

உங்கள் கருத்துக்களின் எழுத்துக்களின் வாசகன் யான்..

தொடர்ந்து எழுதுங்கள்..

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

Share this post


Link to post
Share on other sites

என் உடன் பிறவா அண்ணன் விசுகு அண்ணாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள் .உண்மையின் உருவமாகவே இந்த களத்தில் நான் பார்க்கிறேன் [தாயக விடயம்] தொடர்க அண்ணா உங்கள் பணி......

 

 

நன்றி  தம்பி

உங்கள்  போன்ற இளைய தலைமுறைத்தம்பிகளை பெற்றதற்காக யாழுக்கு நன்றி  கூறுகின்றேன்..

தங்கள் வரவும்

ஒரு சில திரிகளோடு எழுத்தும் குறைவடைந்து வருவதை அவதானிக்கமுடிகிறது..

அதிகம் எதிர்பார்க்கின்றேன் ராசாக்கள் உங்களிடம்...

 

 

நன்றி  தம்பி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

வாழ்க வளமுடன்..

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

 

நன்றி  சகோதரா

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

நேரமிருக்கும் போது தொடர்பு கொள்ளுங்கள்

தேநீர் குடிக்கலாம்.. :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா...!!!

 

நன்றி  ராசா..

 

இந்த யாழ் கள தொடர்பு என்பது ஒரு குடும்ப உறவுகளாக பழகும் அளவுக்கு எம்மை உள்வாங்கியுள்ளது

எனது அண்ணரின் இழப்புக்கு உங்கள் போன்ற யாழ் உறவுகளின் தொலைபேசி  அழைப்பு அதிகமாக இருந்தது

உண்மையில் நான் செய்த பாக்கியம் உங்கள் போன்ற தம்பிகளை அடைந்தது

எமக்கென்று ஒரு குறியுண்டு

தொடர்ந்து பயணிப்போம்

நிச்சயம் ஒருநாள் வெல்வோம்

 

நன்றி  தம்பி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

வாழ்க வளமுடன்..

வாழ்த்துக்கள் விசுகு!

 

நன்றி  சகோதரா

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

 விசுகருக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் பல்லாயிரம் கருத்துக்களை எழுதிக்குவிக்க வேண்டுகின்றேன்.

 

 

நன்றியண்ணா..

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

உடல் நலத்தை கவனியுங்கள் அண்ணா....

இன்னும் பல்லாயிரம் பதிவுகளைக் குவிக்க வாழ்த்துக்கள் விசுகு

 

நன்றி  சகோதரா

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

Edited by விசுகு

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகர் .தொடரட்டும் உங்கள் பணி.

எனக்கு யாழில் அதிக ஈடுபாடு வந்ததற்கு நீங்களும் ஒரு முக்கியகாரணம்.தூங்கி கிடந்த சிங்கத்தை தட்டி எழுப்பியதற்கு நன்றிகள் .  :D

 

நன்றி  அண்ணா...

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

 

எதிலும் சரி

எதிராளியின் பலமே  எம்மை வலுவாக்கும்

எனக்கு அந்த நிலைதான் பிடிக்கும்..

அந்தவகையில் சரியோ பிழையோ

இந்த இருபதினாயிரம் கருத்துக்களில் பல ஆயிரம் உங்களுடன் எழுதியது தான்..

 

ஒவ்வொரு நாளும் இத்தனை மாவீரர்கள் எமக்காக தமது உயிரைக்கொடுத்தனரே என அஞ்சலி செலுத்திவிட்டுத்தான் எழுதத்தொடங்குவேன். வலிக்குமண்ணா...

 

ஒருமுறையாவது விடுதலைப்புலிகளையும் அவர்களது தியாகங்களையும் கனம் பண்ணுங்கள்

 

மற்றும்படி 

எந்த மனத்தாங்கலுமில்லை  அண்ணா...

எனது நோக்கம் ஏதாவது என்னால் முடிந்ததை செய்வது

அதற்கு பகை வளர்த்தல் கேடாகும்...........

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்  விசுகு அண்ணா

 

நன்றி  தம்பி

பலமுறை  சந்திக்க முயன்றும் முடியாமல் போன தம்பி

தொடர்ந்து ஆவலாக உள்ளேன்

பார்க்கலாம்

 

உங்கள் போன்ற உணர்வுள்ள தம்பிகள் எங்கள் சொத்துக்கள்

 

நன்றி  தம்பி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும்...

வாழ்க வளமுடன்

Share this post


Link to post
Share on other sites

 

av-2820.jpg?_r=020000.gif

 

20,000 பதிவுகள், அத்தனையும்... பெறுமதியானவை.

வாழ்த்துக்கள்... விசுகு. :) 

 

 

 

நன்றி  நண்பரே..

 

யாழ்கள கருத்தாளர்களில் நண்பர் என்பது  உங்களைத்தான்...

அநேகமாக எல்லாவிடயங்களிலும் ஒற்றுமையாக எழுதுவோம்

இது யாழையும் தாண்டி விமர்சிக்கப்படுவதுண்டு.

 

பலவழிகளிலும் யாழை கலகலப்பாக வைத்திருக்க இருவரும் முயல்வோம்

வாங்கிக்கட்டிய தளும்புகள் சாட்சி.......... :D

 

எவருமே சந்திக்காத சிறியரை ஒருநாள் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுண்டு.. :icon_idea:

 

நன்றி  சிறி

வாழ்த்துக்கும்  நேரத்துக்கும் அன்புக்கும்...

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள் விசுகு!

 

சென்றவாரம் பாரிசில் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் , கிடைக்கவில்லை...!! :)

Share this post


Link to post
Share on other sites

நல்வாழ்த்துக்கள் விசுகண்ணா. யாழுடன் தொடர்ந்து பயணியுங்கள்.


felicitation.jpg

Share this post


Link to post
Share on other sites

இருபதாயிரம் பதிவுகளை பதிந்த வி.அண்ணாவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!!! மேலும் பல்லாயிரம் கருத்துக்கள் எழுத முன்கூட்டிய வாழ்த்துக்கள் .....!

 

1280px-Logo_20000.svg.png

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this