Jump to content

நான் இரசித்த நகைச்சுவை


Recommended Posts

 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையில் குழந்தையுடன்...

ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் பஸ் ஏறினாள். டிக்கெட் தர பக்கத்தில் வந்த கண்டக்டர் பயங்கர கோபமானார். "என்னம்மா குழந்தை வைச்சிருக்கே, பார்க்கவே சகிக்கலை, அசிங்கமா பிள்ளையை வைச்சிருக்கிறதுக்கு நீ பேசாம பிள்ளை பெறாம இருந்திருக்கலாமே" என்று சத்தம் போட்டு பேசவே, அடுத்த ஸ்டாப்பில் அந்த பெண்மணி இறங்கிக் கொண்டாள்.

அழுது கொண்டே இறங்கிய அவளிடம், எதிரே வந்த ஒரு நபர் என்ன பிரச்சினை என்று கேட்டார். உடனே அவள், "என் குழந்தையைப் பத்தி அந்த கண்டக்டர் கண்டபடி திட்றான்" என்றாள்.

"கண்டக்டர் எல்லாம் அரசு ஊழியர். அவர் மரியாதையா பேச வேண்டியது ரொம்ப அவசியம். நீ அவரை கண்டிக்காம விட்டது தப்பு. அதனால நீ இப்பவே போய் அந்த கண்டக்டரை திட்டிட்டு வா. அதுவரைக்கும் உன் குரங்கை நான் வைச்சிருக்கேன்" என்றார்.

:lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த இன்னொன்று?

அந்தத் தாயக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்று அட்டைக் கரி. இன்னொன்று வெள்ளை வெளேர்.

தாய் கலக்கத்துடன் டாக்டரைக் கேட்டாள் "ஏன் இப்படி?"

டாக்டர் பதில் : "வெள்ளைக் குழந்தை உங்களுடையது. மற்றது அதனுடைய கார்பன் காப்பி !"

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோட்டில் இரண்டு பேர்இ ஒரு பெரிய கம்பை நிறுத்தி அதன் உயரத்தை அளக்க பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தனர்.

அதை ஜார்ஜ் என்பவர் பார்த்துஇ அவர் களுக்கு உதவி செய்வதற்காக அந்த கம்பை தரையில் போட்டு அளந்து பார்த்து "22 அடி" என்று கூறினார்.

இதைக்கேட்ட அந்த இருவரும்இ "முட்டாளே! நாங்கள் இந்த கம்பத்தின் நீளத்தை அளக்க விரும்பவில்லை. உயரத்தைத்தான் அளக்க விரும்புகிறோம்" என்றனர்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்குது நன்றி

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க சிந்திக்க...

நாயை இழுத்துக் கொண்டு மகன் வீட்டிற்குள் நுழைந்தான்.

தந்தை அவனைப் பார்த்துஇ "இந்தக் கழுதையோடு எங்கே சுத்திகிட்டு வரே"? என்று கேட்டார்.

"அப்பா! நல்லாப் பாருங்க. இது கழுதை அல்ல நாய்" என்றான் அவன்.

"நான் உன்னோடு எதுவும் பேசவில்லை. இந்த நாயிடம் தான் பேசினேன்" என்றார் அவர். :lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடை சொந்தக்காரரின் கெட்டித்தனமா..?

புதிதாக வியாபாரத்தை ஆரம்பித்த ஒருவர் வாடிக்கையாளர்களின் வருகையை எதிர்பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

ஒருவரும் வந்த பாடாக இருக்கவில்லை அந்த சமயம் பார்த்து ஒருவர் கையில் பெட்டியுடன் கடைக்குள் நுழைவதைக் கண்டவுடன் கடை சொந்தக்காரர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாட… வாடிக்கையாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வது போல் பாவனை செய்து கதைக்கத் தொடங்கினார்.

கடைக்குள் நுழைந்தவர் "சார் உங்கள் தொலைபேசி வேலை செய்ய வில்லை என்று உங்கள் மனைவி தெரிவித்து இருந்தா. அதைத் திருத்துவற்காக… தொலைபேசிக் கொம்பனியில் இருந்து வந்திருக்கிறன்." என்றார்.

:lol::lol::lol::lol:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிரிக்க சிந்திக்க...

நாயை இழுத்துக் கொண்டு மகன் வீட்டிற்குள் நுழைந்தான்.

தந்தை அவனைப் பார்த்துஇ "இந்தக் கழுதையோடு எங்கே சுத்திகிட்டு வரே"? என்று கேட்டார்.

"அப்பா! நல்லாப் பாருங்க. இது கழுதை அல்ல நாய்" என்றான் அவன்.

"நான் உன்னோடு எதுவும் பேசவில்லை. இந்த நாயிடம் தான் பேசினேன்" என்றார் அவர். :lol::lol::lol:

இனம் இனத்தோட பேசுது எனக்கென்ன வேலை என்றான் மகன் :?: :lol::lol::lol::(:(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி கிஷான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்டர்வியூவர் : நீங்க மூன்றாவது மாடில இருக்கிறதா கற்பனை பண்ணிக்கோங்க. அப்ப திடீர்னு தீப்பிடிச்சுருது! எப்படி தப்பிப்பீங்க?

சர்தார் : ரொம்ப ஈஸி! டக்குனு கற்பனை பண்றதை நிறுத்திடுவேன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கயோ சுட்ட ஜோக்..

லவ் மேரேஜுக்கும், அரேஞ்ட் மேரேஜுக்கும் என்ன வித்தியாசம்?

நாமா போய் கிணத்துல விழுந்தா அது லவ் மேரேஜ்.

பத்து பேர் சேர்ந்து நம்மளை கிணத்துக்குள்ள தள்ளிவிட்டா அது அரேஞ்ட் மேரேஜ்!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெப்பொலியன் : 'முடியாது'ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை.

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை. அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியே நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கணும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

விண்டோஸுக்க்கும், லைனுக்ஸுக்கும் கல்யாணம்

அந்த அப்ளிக்கேஷன் ஸாஃப்ட்வேரெல்லாம் ஊர்கோலம்

இன்டெர்நெட்டில் நடக்குதய்யா திருமணம்

அந்த டிவைஸ் டிரைவர் எல்லாத்துக்கும் கும்மாளம்

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்

...

மாப்பிள்ளை 'C' ஸ்ட்ராங்கான ஆளுங்கோ

அந்த மணப்பொண்ணு 'C++'தானுங்கோ

இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ

இந்த திருமணத்த நடத்தி வைக்கும்பெரிய மனுசன் யாருங்கோ

தலைவரு பில் கேட்ஸுதானுங்கோ!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு மேலும் மேலும் இருட்டானது.

நிலவு மேலும் மேலும் மேலெழுந்தது.

நான் காரை நிறுத்தினேன்.

அவள் என்னை கள்ளத்தனமாக பார்த்து கொண்டே,

"என்னாச்சு?" என்றாள்.

நான் அவளருகே சென்றேன்.

அவள் முகம் சிவந்தது.

மேலும் நெருங்கினேன்.

அவளிடம் சொல்லி விட வேண்டியதுதான்.

ஆனால் நம்புவாளா!

தயக்கமாயிருந்தது.

கடைசியில் அந்த மூன்று வார்த்தைகளை சொல்லியே விட்டேன்.

"பெட்ரோல் இல்லை. எறங்குடி"

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓடுற எலி வாலை புடிச்சா

நீ 'கிங்'கு

ஆனா...

தூங்குற புலி வாலை மிதிச்சா

உனக்கு சங்கு.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகவத் கீதை வசனத்தை இப்படி மாற்றியிருக்கிறார்கள்.. சிரிக்க மட்டும்..

எதை நீ படித்தாய்

அது மறந்து போவதற்கு

எதை நீ புரிந்து கொண்டாய்

பரிட்சையில் கேள்விகள் புரிவதற்கு

என்று நீ ஒழுங்காக காலேஜ் வந்தாய்

Attendandance lack ஆகாமல் இருப்பதற்கு

எந்த ஃபிகரை நீ காதலித்தாயோ

அவளிடமே நீ செருப்படி வாங்குவாய்

எந்த ஃபிகரை நீ மகா மட்டமாக திட்டுவாயோ

அவளிடமிருந்தே காதல் கடிதம் பெறுவாய்

எந்த ஃபிகர் இன்று உன்னுடையதாயிருக்கிறதோ

அது நாளை மற்றொருவனுடையதாகிவிடும்

மற்றொரு நாள் அது வேறொருவனுடையதாகிவிடும்

இதுவே கல்லூரி நியதியும்,

ஃபிகர்களின் குணாம்சமுமாகும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முறை ஒரு சர்தார்ஜிக்கு ஒரு SMS வந்தது.

"Sender is Cool

Reader is Fool"

படித்த சர்தார்ஜிக்கு உடனே கோபம் வந்து விட்டது.

உடனே Reply அனுப்பினார்.

"Reader is Cool

Sender is Fool"

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் : உங்ககிட்ட நல்ல செண்டிமென்டலான love cards இருக்குமா?

விற்பவன் : இது எப்படியிருக்குனு பாருங்க.

அதில் "TO THE ONLY BOY I EVER LOVED" அப்படின்னு எழுதியிருந்தது.

பெண் : சூப்பர். எனக்கு இதே மாதிரி அஞ்சு கார்ட் வேணும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

காந்திஜி,ஏசுபிரான்,கிருஷ்ணர்

ராமர்…. எல்லோருக்கும் உள்ள ஒற்றுமை என்ன.

சர்தார்ஜி: எல்லோரும் அரசு விடுமுறை நாளில் பிறந்தார்கள்

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவன் இரண்டு நீச்சல் குளங்களை தன் வீட்டில் கட்டினான். அதில் ஒரு குளத்தில் தண்ணீர் நிரப்பாமலே விட்டான். ஏன் அப்படியென்று கேட்டதற்கு,

"அட! அது நீச்சல் தெரியாதவங்களுக்காகப்பா" என்றான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் பழைய பகிடி இருந்தாலும் இணைக்கிறேன்... பார்க்காதவர்கள் இரசிக்கலாம்..

கண்மணி

அன்போட

ஃபிரெண்டு

நான்! நான் அனுப்பும் மெஸெஜ்.

பொன்மணி

உன் செல்லில் சிக்னல் கிடைக்குதா

என் செல்லில் கிடைக்குது

உன்னையென்னி பார்க்கையில்

மெஸெஜ் கொட்டுது,

அதை அனுப்ப நினைக்கையில்

பாலன்ஸ் முட்டுது.

நெட்வொர்க் புரிந்து கொள்ள

இது மொக்க மெஸெஜ் அல்ல

அதையும் தாண்டி மட்டமானது.

அது என்னமோ தெரியல,

என்ன மாயமோ தெரியல

என் செல்லுல பாலன்ஸ் இல்லன்னா

மெஸெஜ் போக மாட்டேங்குது.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபு : ஐயாயிரம் ரூபாய் பணம் இருந்தா கடனா குடுங்க?

பாபு : பணம் சுத்தமா இல்லீங்க.

கோபு : அழுக்காயிருந்தாலும் பரவாயில்லை. குடுங்க.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனைவி : நீங்கள் என்னை எவ்வளவு விரும்புகிறீர்கள்?

கணவன் : ஷாஜகான் அளவுக்கு.

மனைவி : அப்ப எனக்காக எப்ப தாஜ்மகால் கட்டப்போறீங்க?

கணவன் : ஏற்கெனவே நிலம் வாங்கிட்டேன். நீ செத்ததும் கட்ட ஆரம்பிக்க வேண்டியதுதான்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பில் நீ சிங்கம்

அறிவில் நீ நரி

அழகில் நீ அன்னம்

பொறுமையில் நீ நத்தை

வேகத்தில் நீ புலி

பண்பில் நீ மான்

மொத்தத்தில் நீ ஒரு...

Discovery Channel!!!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடி ஜோக்..

நீங்க எத்தனையோ ஸ்டேஜ்ல பேசியிருக்கலாம்.

ஆனால்...

கோமா ஸ்டேஜ்ல பேசியிருக்கீங்களா?

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • பகிர்வுக்கு நன்றி கிருபன்.......! 
  • முரளிதரனையும் சாணக்கியனையும் தராசில் வைத்தால் ஒரே நிறுவைதான் என்று கூற வருகிறீர்களா.. ? 😀
  • தமிழ் என்ற அடையாளத்தை நிலைநாட்ட மரணித்த சகல தமிழ் போராளிகளுக்கும் அஞ்சலிகள் ...
  • ஈழத்தில் பரவும் இந்திய ஆதிக்கம் by vithaiMay 3, 2021068 அவருக்கு கிட்டத்தட்ட 70 வயது இருக்கும். நான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில் இன்னொரு பிரிவில் வேலை செய்பவர். அவ்வப்பொழுது காணும்போதெல்லாம் நலம் விசாரிப்புகளுடனும், காலநிலை குறித்து முறைப்பாடுகளுடனும் அண்மைக்காலமாக கொரனா குறித்த ஏதாவது ஒரு சில வார்த்தைகளுடனும் கடந்துபோவார். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரைக் கண்டபோது அவர் உற்சாகமான மனநிலையுடனும் மலர்ந்த முகத்துடனும் இருக்கின்றார் என்பதை கொரனா காலத்துக்காக அணிந்திருக்கின்ற முகவுறையூடாகவும் கண்டுகொண்டேன். தம்பி, எங்களுக்கு ஒரு விடிவு வந்திட்டுதுபோல இருக்கு என்றார்; என்ன கொரனாவுக்கு மருந்து கண்டுபிடிச்சாச்சோ என்றேன். பேப்பர் பார்க்கேலேயோ, மோடி மகிந்தவுக்கு கடுமையாச் சொல்லிட்டாராம், தமிழாட்களுக்கு ஒரு சரியான தீர்வை உடனடியாக் கொடுக்கச் சொல்லி. மோடி மற்ற ஆட்கள் மாதிரி இல்லைத் தம்பி, இவை சரியா மாட்டுப்பட்டுப் போய் நிற்கினம் என்றார். உண்மையில் ஏமாற்றமாகவும் சலிப்பாகவும் இருந்தது. அவர் அரசியலை மிக மிக எளிமையான சூத்திரங்களால் புரிந்துகொள்பவர், மோடி இந்து, இலங்கைத் தமிழரென்றால் சைவம், சைவமும் இந்துவும் ஒன்று, அப்ப நாங்களும் மோடியும் ஒன்று, எங்களுக்கு ஒன்றென்றால் மோடி பொங்கி எழுந்துவிடுவார், இந்தியா சும்மா பார்த்துக்கொண்டிராது என்கிற வகையில் அவரது அரசியல் புரிதல் அமைவன. கொரனாக் காலத்தின் பின்னர் நண்பர் ஒருவர் இணைத்துவிட்ட வட்சப் குழுமத்தின் ஊடாக ஈழத்திலிருந்து வெளிவருகின்ற தமிழ், ஆங்கில பத்திரிகைகள் பலவற்றின் எண்ணிம பிரதிகளைப் பார்க்கின்ற வாய்ப்புக்கிட்டியிருக்கின்றது. அவற்றில் “தமிழாட்களுக்குக்குச் சரியான தீர்வைக் கொடுக்கச் சொல்லி மோடி கடுமையாகச் சொன்ன” விடயம் தொடர்பாக பார்த்த சில செய்திகள்: செப்ரம்பர் 26, 2020 அன்று மகிந்த ராஜபக்சேவிற்கும் மோடிக்கும் காணொலி மூலம் நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் இரண்டு நாடுகளும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் இது குறித்துக் குறிப்பிடப்பட்டேயிருக்கின்றது. பின்னர் சிங்களத்தில், இலங்கை அரசு சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்விடயம் தவிர்க்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அமைச்சரவைப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல அதை மறுத்தும் இருந்தார். செப்ரம்பர் 29 மாலைமுரசில், “இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கவேண்டும், 13வது சட்டத்திருத்தத்தை செம்மையாக அமுலாக்கவேண்டும் என்று மகிந்த ராஜபக்சேவிடம் மோடி வற்புறுத்தினார். எனவே இலங்கை அரசால் இதை மீறமுடியாது” என்று சுமந்திரன் உறுதியாகத் தெரிவித்ததாக செய்திவெளியிடப்பட்டுள்ளது. அதற்குப் பின்னர் செப்ரம்பர் 29 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகிந்த, மோடி தம்மிடம் ”கோரிக்கை வைத்திருந்தார்” (அதாவது வலியுறுத்தவில்லை) என்று தெரிவித்திருந்தார் என்பதாக செப்ரம்பர் 30 வெளியான ஈழநாடு தெரிவித்திருக்கின்றது. ஒரே பிராந்தியத்தியத்தில் இருக்கின்ற இரண்டு நாடுகளின் முக்கிய தலைவர்களின் சந்திப்பிற்கு அந்நாட்டுப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுப்பதில் எந்தத் தவறுமில்லை, ஆனால் வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் செய்திகளைத் தருவதில் இருக்கின்ற பூரிப்பினையும் பார்க்கின்றபோது இவர்கள் எல்லாம் எப்படி இவ்வளவுக்கு அப்பாவித்தனமாக எல்லாவற்றையுமே நேர்மறையான மனநிலையுடன் பார்ப்பவர்களாக இருக்கின்றார்கள் என்று வியக்கவே தோன்றியது. தனது நலன்களுக்காகவும் பிராந்தியத்தில் அதிகாரம் செலுத்துவதற்காகவும் இந்தியா ஈழத்தமிழர்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்தியதே ஈழத்தமிழர்களின் வரலாறு மீளமீள சலிக்காமல் சொல்லும் பாடம். ஈழத்தில் நடந்த அழிவுகளில் யாருக்குப் பங்கிருக்கின்றதோ இல்லையோ, கணிசமான பங்கு இந்தியாவிற்கு இருக்கின்றது. முன்னர் நான் குறிப்பிட்ட, சாதாரண மனிதரான எனது சக ஊழியராக இருக்கட்டும், சட்ட நுணுக்கங்களைக் கற்றறிந்தவர்களும் அரசியல்வாதிகளாகவும் இருக்கட்டும், இந்தியா தான் எமக்கான காவலன், இந்தியா தான் எமக்குக் கைகொடுக்கும் என்று கண்மூடித்தனமாக நம்புவதற்கு என்ன காரணம்? உண்மையிலே இவர்கள் இப்படி நம்புகின்றார்களா அல்லது வெகுளித்தனமாக நம்புகின்ற ஒரு தரப்பினரும், அந்த ஒரு தரப்பினரின் அறியாமையை வைத்து தமது அரசியல் லாபங்களுக்காக அவர்களைத் தொடர்ந்து ஏமாற்றுகின்ற நோக்குடன் இன்னொரு தரப்பினர் அளந்துவிடுகின்ற கதைகளுமாக இந்தப் போக்கு வளர்கின்றதா என்பது குறித்தே நாம் கவனமாக ஆராயவேண்டும். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை, அவர்கள் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் இந்தியாவுடன் மிக நீண்டகாலமாக தொடர்புகளைக் கொண்டவர்கள். குறிப்பாக ஈழத்திற்கு அண்மித்ததாக இருக்கின்ற தமிழ்நாட்டுடனான தொடர்பினை தாய் சேய் உறவாகக் கொள்கின்றதான போக்கு நீண்டகாலமாகத் தொடர்ந்துவந்திருக்கின்றது. ஆயினும், காலனிய காலத்துக்குப் பின்னரான ”நவீன இந்தியா”வுக்கும் ஒட்டுமொத்த இலங்கைக்கும் இடையிலான உறவென்பது தனது சுயநலன்களுக்காகவும் அதிகார வேட்கைக்காகவும் இலங்கையைச் சுரண்டுவதாகவும் பெரியண்ணன் மனோபாவம் நிறைந்ததாகவுமே இருக்கின்றது. இலங்கையின் மீதான இந்தியாவின் ஆதிக்கமானது அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று தளங்களில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆயினும், ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களது அடிமனதில் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இந்தியாவே எமக்கு துணை என்கிற கற்பிதம் அல்லது இந்திய அடிமை மனோபாவமும் அரசியல் பிரக்ஞையின்மையும் சேர்த்து அவர்களை இந்த ஆதிக்கங்களால் தமக்கு நிகழுகின்ற பாதிப்புகளை உணராதவர்களாகவே வைத்திருக்கின்றது. ஈழத்தமிழர்களின் இனவிடுதலைக்கான போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களிலேயே இந்தியாவின் நடவடிக்கைகளையும் அதன் தவறான வழிநடத்துகையில் ஈழ விடுதலை இயக்கங்கள் செல்வதைக் குறித்தும் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டியவர்கள் இருந்திருக்கின்றார்கள். ஈழ விடுதலை இயக்கங்கள் ராணுவ ரீதியிலான போராட்டங்களை நோக்கி நகரத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில், பங்களாதேஷ் 1971 இல் சுதந்திரமடைந்ததுவும், அதில் இந்தியா பங்களாதேஷிற்கு ஆதரவாகச் செயற்பட்டது என்பதுவும் விடுதலை இயக்கங்களுக்கு நம்பிக்கையூட்டிய அம்சங்களாக அமைந்தன. அதுவும் அந்தப் போர் வெறும் 13 நாட்களில் முடிந்தது என்பதுவும் அவர்களுக்கு உற்சாகமூட்டியதாக இருக்கக்கூடும். அதேபோல, ஈழத்தமிழர் விடுதலைக்கும் இந்தியா உதவும், தனிநாடு பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை விடுதலை இயக்கங்களுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆயினும், பங்களாதேஷ் விடுதலை என்பதை இந்தியா எவ்விதம் அணுகியது என்பதிலிருந்தே ஈழத்தவர்கள் பாடம்பெற்றிருக்கவேண்டும். புளொட் இயக்கத்தினர் ஆரம்பகாலத்திலேயே வங்கம் தந்த பாடம் என்கிற சிறிய, ஆனால் மிக முக்கியமான ஒரு பிரசுரத்தினை வெளியிட்டனர். வங்கம் தந்த பாடத்திலிருந்து நாம் கற்றிருந்தாலே நிறைய அழிவுகளைத் தவிர்த்திருக்கலாம்; நம் அரசியல் தலைமைகள் அதனைக் கற்று, உள்வாங்கி அரசியல் பிரக்ஞையுடனான உரையாடலை மக்களுடன் மேற்கொண்டிருந்தால் அரசியல் பிரக்ஞை கொண்டதோர் சமூகத்தை, அரசியல் பிரக்ஞையுடன் முடிவெடுக்கக் கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவது நோக்கி நகர்ந்திருக்கலாம். எண்பதுகளில் இருந்த அரசியல் தலைமை எப்படி நோக்கம், வழிமுறை, அரசியல் தெளிவு என்பன இல்லாமல் அன்றையை இளைஞர்களை வழிநடத்தினார்களோ இன்றும் அதுவே தொடர்கின்றது. துரதிஸ்ரவசமாக அன்று இளைஞர்களாக இருந்து இன்று அரசியல் தலைமைகளாகவும், ஆய்வாளர்களாகவும் இருப்பவர்களும் இன்றைய இளைஞர்களை அரசியல் மயப்படுத்தாமல், வெறும் கற்பனாவாத நம்பிக்கைகளையும் உணர்ச்சி அரசியல்களையுமே விதைத்தே வளர்த்துவருகின்றார்கள் என்பதை ஒரு அபாய சமிக்ஞையாகவே பார்க்கமுடிகின்றது. மோடி முதல்முறையாக இந்தியப் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டபோது புலம்பெயர்நாடுகளிலும் ஈழத்திலும் இருக்கின்ற ஈழத்தவர்களில் பலர் அதனை ஆதரித்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோரின் வாதம் இந்துத்துவக் கட்சியான பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் – ஈழத்தமிழர்கள் சைவர்கள், எனவே இந்துக்கள், எனவே பாரதிய ஜனதாவின் ஆதரவு கிடைக்கும் என்கிற புரிதலின் அடிப்படையில் அமைந்திருந்தது. அவர்கள் எவருக்கும் பாரதிய ஜனதா என்பது மதவாதக் கட்சி என்பதோ பாசிசக் கட்சி என்பதோ பிரச்சனையே இல்லை. கடந்த சில ஆண்டுகளாக சிவசேனை போன்ற மதவாத அமைப்புகள் வெளிப்படையாக ஈழத்தில் மாவட்டங்கள் தோறும் இயங்கத்தொடங்கியிருப்பதும் அவற்றை பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு எதிரான அசைவியக்கம் என்று நியாயப்படுத்துவதும் ஆபத்தானவை. ஈழத்தைப் பொறுத்தவரை பௌத்த சிங்கள பேரினவாதத்தின் மதவாத நடவடிக்கைகளுக்கும் இஸ்லாமிய மதவாத நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு பொறிமுறையாகவே சைவ / இந்து மதவாத நடவடிக்கைகளை அவற்றை ஆதரிப்பவர்கள் பார்க்கின்றார்கள். உண்மையில் எந்த மதவாதமாக இருந்தாலும் அது ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டது, சமூகநீதிக்கு எதிரானது. ஒரு மதவாதம் ஒருபோதும் இன்னொரு மதவாதத்துக்கு எதிர்ப்பொறிமுறையாகாது, மாறாக இன்னொரு மதவாதத்தை வளர்த்துக்கொள்வதன் மூலம் தன்னை வளர்த்துக்கொள்வதையும் நிலைநிறுத்திக்கொள்வதையும் அதேபோல தன்னை வளர்த்துக்கொள்வதன் மூலம் இன்னொரு மதவாதத்தை வளர்த்துக்கொள்வதையும் நிலைநிறுத்திக்கொள்வதையும் அடிப்படை உத்தியாகக் கொண்டியங்குவது. ஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு என்று ஓகஸ்ட் 2020 தாய்வீட்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், பண்பாட்டுப் படையெடுப்பின் மூலம் எப்படியாக ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் ஈழத்தவர்கள் பண்பாட்டு அடிமைகளாக்கப்படுகின்றார்கள் என்று விபரித்திருந்தேன். அந்தப் பண்பாட்டுப் படையெடுப்புகளின் நீட்சியாகவே இப்போது இந்தியாவில் இருந்து இறக்குமதியாகிக் கொண்டிருக்கும் மதவாதப் போக்குகள் இருக்கின்றன. அண்மைக்காலமாக பெருமளவான இளைஞர்களின் செயல்களிலும் இப்படியான வெளிப்பாடுகள் இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல், பெரியாரையும், அம்பேத்காரையும் ஈழத்தில் பேச முடியுமென்றால் ஏன் இந்துத்துவத்தைப் பேசமுடியாது என்பதாகவே அவர்களது கேள்வி அமைகின்றது. ஒடுக்குமுறைகள் இல்லாத சமத்துவமான உலகொன்றைக் கனவுகண்டவர்கள் பற்றி நீங்கள் பேசினால் நாங்கள் ஒடுக்குமுறையைப் பேசுகின்ற மானுடவிரோதக் கருத்தியல்களைப் பேசுவோம் என்று அவர்கள் சொல்வதாகவே அதனைப் புரிந்துகொள்ளமுடியும். எம்மீது நிகழ்த்தப்படும் பண்பாட்டுப் படையெடுப்புக் குறித்தும் வளர்ந்துவரும் மதவாதச் சக்திகளின் செல்வாக்குக் குறித்தும் நாம் பிரக்ஞைபூர்வமாக உரையாடுவதன் மூலமும் செயற்படுவதன் மூலமுமே சமூகவிடுதலை நோக்கிய உறுதியான அடிகளை எடுத்துவைக்கலாம். இல்லாவிட்டால் மறுபடியும் மறுபடியும் முதலில இருந்துதான் ஆரம்பிக்கவேண்டிவரும்! -அருண்மொழிவர்மன்   https://vithaikulumam.com/2021/05/03/20210503/    
  • வீடியோவில் 11:17 இலிருந்து பாருங்கள்.. சாணக்கியனின் பூர்வீகம் கருணா அம்மானுக்கு நன்றாகவே தெரியும்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.