Jump to content

படித்ததில் பிடித்தது(முகநூல் பதிவுகளில் இருந்து)


Recommended Posts

படித்ததில் பிடித்தது(முகநூல் பதிவுகளில் இருந்து) ......................................................................................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு பெண் புருஷனோட சண்டை போட்டு கொண்டு தற்கொலை செய்ய மலை உச்சிக்கு போனாள். அங்கே இருந்து கீழே பார்த்ததும் அவளுக்கு பயம். அப்புறம் குழந்தைகள், அப்பா அம்மா, குடும்ப கவலை வேறு இருந்தாலும் புருசன் மீது செம கோபம். தற்கொலை செய்யமால் அப்படியே அமர்ந்து விட்டாள்.ஆனாலும் அவள் உதடுகள் எதையோ முனு முனத்தது. இரண்டு நாளாக அவள் அங்கேயே அமர்ந்திருந்திருந்தால். சிவன் பிரம்மா விஷ்னு மூவருக்கும் ஒரே குழப்பம். அவள் யாரை நினைத்து தவம் செய்கிறாள் என குழப்பத்தை தீர்த்து கொள்ள பூலோகம் வருகிறார்கள். அவள் உதடு அசைவதை வைத்து தன்னைதான் நினைத்து தவம் செய்கிறாள் என மூன்று கடவுளும் சண்டை போட்டு கொள்கிறார்கள். இவர்களின் தீராத சண்டையை கண்டு நாரதர் அவர்கள் முன் தோன்றி ஒரு யோசனை சொல்கிறார்.நான் போய் அவளை எட்டி உதைக்கிறேன் யார் பெயரை சொல்லி கீழே விழுகிறாளோ அவர்கள் சென்று அவளை காப்பாற்றி,அவள் கேட்கும் வரங்களை கொடுங்கள் என்றார். இந்த யோசனை மூவருக்கும் நல்லதாய் தோன்ற அதை ஆமோதிக்கிறார்கள்.நாரதரும் அவள் அருகே சென்று அவளை எட்டி உதைக்கிறார். அவள் மலையிலிருந்து கீழே விழும் போது சொன்னாள் "எந்த லூசு பயடா என்னை எட்டி உதைச்சது".. அட்டென்ட் டைம்ல ஆல் கடவுளும் எஸ்கேப். இதனால நாம சொல்லுறது என்னன்னா பொண்களோட மனசுல உள்ளத ஆன்டவனாலும் கூட தெரிஞ்சிக்க முடியாது . சிரிக்க மட்டும், யாரும் சண்டைக்கு வராதீங்கப்பா.. Just for fun..

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply

ரிலாக்ஸ் ப்ளீஸ் . (கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...) மனைவி : வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்! கணவன் : ஏன்? என்னாச்சு..? மனைவி : இன்னைக்கி ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்! கணவன் : சரி...! மனைவி : இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது...!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி! கணவன் : (கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சுவிட்டுட வேண்டியதுதானே! மனைவி : மன்னிக்கிறதா?அந்தப் பேச்சுக்கே இடமில்ல.எங்க அந்த உருட்டுக்கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...) (வாசலிலிருந்து வந்த மகன்...) மகன் : யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா! அப்பா : ஏண்டா..? மகன் : நான்தான் கோவத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா!! அப்பா : அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே., அய்யய்யோ ... இப்ப நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்..! செய்யாத குத்தத்துக்கு நாயா, பேயா அலைய வெக்கிறாங்களே..... இத கேட்க நாதியில்லையா.... Relaxplzz

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஒரு நாள் காது கேட்கும் திறன் மங்கிய அந்த நான்கு வயது குழந்தை பள்ளி முடித்து வீடு திரும்பி வந்த போது தன் பாக்கெட்டில் ஆசிரியை எழுதித் தந்த சீட்டை தன் அம்மாவிடம் கொடுத்தது. அந்தச் சீட்டில் “ உங்கள் மகன் மிகவும் முட்டாளாக இருக்கிறான். அவனை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்தால் நல்லது “ . அவனது அம்மா அந்தச் சீட்டைத் திருப்பி “ எனது மகன் முட்டாள் இல்லை. அவனுக்கு நானே கற்றுக் கொடுக்கிறேன் “ என்று எழுதி அம்மா கொடுத்தார். அந்தச் சிறுவன் அந்தச் சீட்டைக் கொடுத்த நாளுக்குப் பின் பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளியில் மொத்தம் மூன்று மாதங்கள் மட்டும் படித்த அந்தக் குழந்தை யார் தெரியுமா ? உலகின் தலை சிறந்த விஞ்ஞானி என்று சொல்லப்படும் தாமஸ் ஆல்வா எடிசன் தான் அவர். அப்போதிருந்து வீட்டில் தன் மகனுக்கு பாடங்களைக் கற்றுத் தந்த இவர் அம்மா நான்சி எலியட்தான் உண்மையான சாதனையாளர். எடிசன் சொல்லும்போது “ என் அம்மாதான் என்னை உருவாக்கியவர். என் மீது அதிக நம்பிக்கை கொண்டவர். வாழ்வதற்கு தைரியத்தை ஊட்டியவர். அவருக்கு நான் ஏமாற்றத்தை தரக் கூடாது என்று எண்ணினேன் “ என்று கூறினார். தாய்க்கு நிகரான ஓர் உறவு இல்லை இவ்வுலகில் !

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் மது ஏன் குடிக்க கூடாது......? இனியாவது குடிப்பீர்களா..? மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது. இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும். விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட் மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும் வாந்தி ஏற்படும். மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன் சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது. இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும். சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி, முதுகு வலி, தலைவலி போன்றவற்றை உருவாக்கும்.ஆல்கஹால் காரணமாக கணயம் அதிக இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென குறையும். இதனால் தலைவலி, வாந்தி ஏற்படும்.ஆல்கஹால் உட்கொள்வதால் ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் இதய கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல் வெப்பநிலையும் குறையும். குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம், வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, சுவாசக்கோளாறு, காது கேளாமை, முடிவெடுக்க முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த சோகை உள்ளிட்டவை ஏற்படும். மேலும் அதிக ரத்த அழுத்தம், ஸ்டோக், இருதய கோளாறு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு, குடும்ப வன்முறை, அல்சர், வாய், தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும் ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால் செய்யும் கெடுதல்கள் பட்டியல் நீளமானது. ஆனால் நன்மை எதுவுமே இல்லை.

Link to comment
Share on other sites

dinakaran daily newspaper . 'கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?'' என்று ஒருவன் நெஞ்சுருக வேண்டினான். அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று. ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான். அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான். அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது. அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டு,'' என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில் ஒரு குழந்தை பிறந்து அழும் சப்தம் கேட்டது. அதையும் அவன் கவனிக்கவில்லை. ''கடவுளே,நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்,''என்று கூவினான். அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான். கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விஷயங்களில் இருக்கிறார். எனவே அந்த அருட்கொடையை தவற விட்டு விடாதீர்கள். ஏனெனில் கடவுள் நீங்கள் எதிர் பார்க்கும் வடிவில் வருவார் என்று எதிர் பார்க்காதீர்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்புகள் காரணிகன் தொடருங்கள்.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . என்னோட பதினைந்தாவது வயசுல நான் அமெரிக்கால குடியேற போறதா சொன்னேன் எல்லோரும் சிரிச்சாங்க … ஆனா நான் அமெரிக்கால குடியேறினேன்.! என்னோட 18 வது வயதுல நான் உலக ஆணழகன் ஆகப்போறதா சொன்னேன். எல்லோரும் சிரிச்சாங்க … நான் பலமுறை அந்த டைட்டிலை வென்றேன்.! அதன்பிறகு நான் சினிமால பெரிய ஹீரோவா ஆகப்போறேனு சொன்னேன் எல்லாரும் சிரிச்சாங்க … நான் ஹாலிவுட்ல ஹீரோவா ஆனேன்.! சினிமால பெரிய வீழ்ச்சி வந்தபோது இவன் இனி அவ்வளவுதான் அப்டினு சொல்லி சிரிச்சாங்க … நான் மீண்டும் மீண்டு வந்தேன்.! என்னோட 50 வயசுல நான் கலிபோர்னியா கவர்னர் ஆகப்போறதா சொன்னேன் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிச்சாங்க … நான் கவர்னர் ஆனேன்.! இப்ப என்னைப் பார்த்து சிரிச்சவங்களை நான் திரும்பி பார்த்து சிரிக்கிறேன் … அவர்கள் எல்லாம் அதே இடத்துல தான் இருக்காங்க… தன்னம்பிக்கையாலும் என்னோட கடின உழைப்பாலையும், நான் நினைச்சதெல்லாம் சாதிக்க முடிந்தது.! எதையுமே சாதிக்கனும்னு நினைக்கிறவங்க சுத்தி இருக்கிறவங்க கேலியை பொருட்படுத்த கூடாது.! அது அவர்களின் வியாதி நம்மை பற்றியும் தன்னபிக்கையின் ஆற்றலை பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது.! - கேலிகளை கேலி செய்த நிஜ ஹீரோ அர்னால்டு. Relaxplzz

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . புத்திசாலித்தனம். ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது. அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது. கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார். அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில் 1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய். 2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய் என்று எழுதி இருந்தது. மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்... Relaxplzz

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . எம்.ஆர்.ராதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து.... ஜெயில்லே நானே சமைச்சுக்குவேன். குலாப்ஜாமூன், ஜாங்கிரி, இட்லி எல்லாம் செய்துக்குவேன். என் கூட வெள்ளைக்கார கைதி இருந்தார். இட்லியை மட்டும் அவருக்குக் கொடுப்பேன். நான் செய்து கொடுத்த இட்லியை புகழ்ந்து, அவருடைய சம்சாரத்துக்குக் கூட லெட்டர் போட்டார் அவர். என் இட்லிக்குக் கூலியா, திட்டுறதுக்கு சில வார்த்தைகளை மட்டும் அவர்கிட்டே கேட்டு கத்துக்கிட்டேன். அவங்க நாட்டை பத்தியெல்லாம் கேட்கும் போது, பொறுமையா பதில் சொல்வார். "வக்கீல்களே ஜட்ஜா வர்றது சரியா?'ன்னு அவர்கிட்டே கேட்டேன். "அதுதானே வழக்கம்?' என்றார் அவர். "உங்க நாட்டிலேயும் அப்படித்தானா?' என்றேன். "ஆமா!'ன்னார். "முப்பது வருஷமா பொய் சொல்றதையே பிழைப்பாக கொண்ட ஒரு வக்கீல், பதவி உயர்வுங்கிற பேரிலே ஜட்ஜ் ஆனதும், எல்லாரும் அவரை கடவுளுக்கு சமம்ன்னு சொல்றாங்களே... இது நியாயமா?'ன்னு கேட்டேன். அதுக்கு அவர் பதில் பேசவேயில்லை. ======ராதா கேட்பதில் நியாயம் இருக்கா? Relaxplzz

Link to comment
Share on other sites

Maalaimalar தமிழ் . நேர்மையான மனைவி.... ஒரு மனிதர், தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை, தம் குடும்பத்திற்கே கூட கருமித்தனமாக செலவு செய்து, சேமித்து வைத்திருந்தார். அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார். மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி செய்து விட்டார். அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, அந்த நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொறுங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள். அவளுடைய கடினமான வாழ்வையும் அவள் கணவருடைய கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவள் தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர் சொன்னது போல் செய்து விட்டாயா” என்று கேட்டாள். அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”அவர் சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும். அவர் சேமிப்புகள் மொத்தத்தையும் பணமாக்கி என் கணக்கில் பேங்கில் போட்டு விட்டு, முழுத்தொகைக்கும் காசோலை வைத்து விட்டேன். அவர் போன இடத்தில் மாற்ற முடிந்தால் அவர் செலவழித்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை” என்றாள்.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . "மனதைத் தொட்ட வரிகள்" Ø பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். உழைத்தால் பணம் நிறைய சம்பாதிக்கலாம். Ø உழைப்பு வறுமையை மட்டும் விரட்ட வில்லை; தீமையையும் விரட்டுகிறது. Ø ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. Ø தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான். Ø குத்து விளக்கு எவ்வளவு பிரகாசமாக எரிந்தாலும் அதன் அடியில் சற்று இருள் இருக்கத்தான் செய்யும். Ø சுயநலம் என்பது சிறு உலகம். அதில் ஒரே ஒரு மனிதன்தான் வாழ்கிறான். Ø வெற்றியின் ரகசியம் - எடுத்த காரியத்தில் நிலையாக இருத்தல். Ø பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. Ø மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது. Ø நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே! Ø அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக் காத்திருப்பதும் ஒன்றே! Ø செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை! Ø நாக்கு கொடிய மிருகம். அதை எப்போதும் கட்டியே வை! Ø பறக்க விரும்புபவனால் படர முடியாது. Ø மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை. Ø ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம். Relaxplzz

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமெ  நன்றாக இருக்கின்றது , தொடருங்கள் காரணிகன்...!  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது.தொடருங்கள்

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் குமாருக்கு அந்த நாயைக் கண்டாலே எரிச்சலாக இருந்தது. அது அவன் மனைவி வளர்க்கும் நாய். ஒரு நாள் அதைக் காரில் ஏற்றிக்கொண்டு போய், இரண்டு கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு பூங்காவில் விட்டுவிட்டு வந்தான் குமார் . ஆச்சர்யம்! அவனுக்கு முன்னால் வீட்டில் இருந்தது அந்த நாய்! கடுப்பான குமார், அடுத்த நாள் அந்த நாயைப் பத்து கி.மீட்டர் தள்ளியிருந்த ஒரு மைதானத்தில் விட்டுவிட்டு, வேறு வேறு சாலைகள் வழியாக வீடு திரும்பினான். மறுபடியும் ஆச்சர்யம்… வீட்டில் நாய்! மூன்றாம் நாள்… காரில் நாயுடன் ஒரு முடிவோடு புறப்பட்டவன், காரை எங்கெங்கோ செலுத்தினான். வழியில் குறுக்கிட்ட ஆற்றைக் கடந்தான். ஒரு பாலத்தின் மேல் ஏறி இறங்கினான். இடப் பக்கம் திரும்பினான். வலப் பக்கம் வளைந்தான். இப்படியாக ரொம்ப தூரம் போய் ஒரு தெருவில் அந்த நாயைப் பிடித்துத் தள்ளிவிட்டு, வேகமாக காரைக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான். வழியில் ஓரிடத்தில் காரை நிறுத்தி, மனைவிக்கு போன் செய்து, உன் நாய், வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டான். இருக்கிறதே! ஏன் கேட்கிறீர்கள்? என்றாள் அவள். அந்த சனியன்கிட்டே போனைக் கொடு! வீட்டுக்கு வழி தெரியலே எனக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுகள்.... அனைத்தும் அருமை, காரணிகன்.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் 15 hrs · . ஒரு விறகு வெட்டியொருவன் இருந்தான் …! ஒருநாள் காட்டில் விறகு வெட்டிக்கொண்டு இருக்கையில் அவனது கோடரி காணாமல் போய்விட்டது ……! கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் கோடரியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் …! கடவுள் திடீரெனெ தோன்றி நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால் **தங்க உலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்**** விறகு வெட்டி இல்லை சாமி -என்றான் **வெள்ளிஉலோக கோடரியை வரவழைத்து இதுவா உன் கோடரி என்று கேட்டார்**** விறகு வெட்டி இல்லை சாமி -என்றான் **அவனது தொலைந்த கோடரியை வரவழைத்து இதுவா உன் டகோரி என்று கேட்டார்** ஆமா சாமி ..என்றான் கடவுள் இவனது பண்பை அவதானித்து அவனிடம் நீ உண்மையை கூறியதால் மூன்று கோடரியையும் கொடுத்தார் … நடந்ததை தன் மனைவியிடம் கூற பேராசைபிடித்த மனைவி தன்னையும் கடவுளிடம் கூட்டிச்செல்ல மன்றாடினாள் அவனும் சம்மதித்து காட்டுக்கு அழைத்து சென்றபோது திடீர் என மனைவி காட்டு வழியில் காணாமல் போய்விட்டாள்…! கடவுளே என்று உரத்து கத்தினான் …என் குடும்பத்தை காப்பாற்று ..என் மனைவியை கண்டுபிடித்து தா என்று மன்றாடினான் …! கடவுள் வந்து நான் உனக்கு உதவுகிறேன் என்றார் ..! அவரது சக்தியால் **சமந்தாவை வரவழைத்து இதுவா உன் மனைவி என்று கேட்டார் …? அவன் ஆமாசாமி என்றார் கடவுள் திகத்துவிட்டார் …என்னப்பா ..?உன் நேர்மை எங்கே ..? பொய்சொல்லிட்டியே …? இல்ல சாமி நீங்கள் …..! **முதல் சமந்தாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன் … அடுத்து தமனாவை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் இல்லை சாமி என்பேன் என் உண்மை மனைவியை காட்டி இதுவா மனைவி என்று கேட்பீர்கள்** நான் ஆம் என்பேன் நீ உண்மை பேசியதால் மூன்றுபேரையும் வைத்திரு என்பீர்கள் நானோ விறகு வெட்டி எப்படி சாமி…

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுவனுக்கு அவசரமாக 50 டாலர் தேவைப்பட்டது அவனும் யார் யாரிடமோ கேட்டு பார்த்தும் கிடைக்கவில்லை.. கடைசியாக நொந்து போய் கடவுளுக்கு கடிதம் எழுதினான் கடவுளே எனக்கு அவசரமாக 50 டாலர்கள் தேவை அனுப்பி வைக்கவும்ன்னு எழுதி அதில் பெறுநர் முகவரியாக கடவுள் அமெரிக்கா ன்னு எழுதி இருந்தான்.. இந்த வேடிக்கையான கடிதம் ஒபாமாவின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது ஒபாமாவும் சிறுவனின் நம்பிக்கை வீணடிக்க விரும்பாமல் பணத்தை அனுப்ப முடிவு செய்தார் ஆனாலும் ஒரு சிறுவனுக்கு 50 டாலர்கள் மிக அதிகம் என நினைத்து தனது சொந்த பணத்திலிருந்து 30 டாலர் பணத்தை மட்டும் அந்த சிறுவனின் முகவரிக்கு அனுப்பினார் அதில் அனுப்புநர்.. முகவரியாக ஒபாமா வெள்ளை மாளிகை அமெரிக்கா ன்னு எழுதி அனுப்பினார் இரண்டு நாட்களில் அதே சிறுவனிடமிருந்து கடவுள் முகவரிக்கு பதில் கடிதம் வந்தது.. "எனது கஷ்டத்திக்கு பணம் குடுத்த கடவுளுக்கு மிக்க நன்றி ஆனால் இனிமேல் எனக்கு பணம் அனுப்பும் போது நேரடியாக எனது முகவரிக்கு அனுப்பவும் ஏன் என்றால் நீங்கள் ஒபாமா மூலமாக அனுப்பினால் அவர் பாதி பணத்தை ஆட்டையை போட்டுவிடுகிறார் அதனால் தான் சொல்கிறேன் என்று எழுதியிருந்தது "

........................................................................................................................................................................... ரிலாக்ஸ் ப்ளீஸ் . அப்பா: ஏன்டா என் மானத்த வாங்குற? உனக்கு வெக்கமே இல்லையாடா,பக்கத்து வீட்டு பொண்னு பிரியா ஒரு Status க்கு 1000Like வாங்குறா, மகன் : நான் என்னப்பா பன்றது? அதுக்குலாம்பிறவிலேயே பொண்ணா பொறந்துருக்கனும், அப்பா : போடா.., நீ லாம் ஆம்பளையே இல்ல, கலையரசன்ற பேரமாத்தி கலையரசி னு வச்சிக்கு போடா..,! மகன் : சரிப்பா,(அடுத்தநாள்) அப்பா அப்பா இங்கவாங்க, எனக்கு 5000 Like வந்துடுச்சிப்பா, அப்பா : எப்புடிடா? மகன் : நீங்க சொன்ன பேர நான் Facebook லயும்மாத்திட்டேன்பா.., அப்பா : சரி சரி நான் தெரியாம Friend request. அனுப்பிட்டேன், Accept பண்ணாத..,!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல இணைப்புகள் காரணிகன் தொடருங்கள்.

நேரத்துக்கும் பதிவுக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . தன்னம்பிக்கை கதை: ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான். பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான். பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான். பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான். பெரியவர் விளக்கினார். "நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்" என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார். பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . ஹார்ட் அட்டாக்'னா என்ன.? பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்...!! உனக்கு படபடப்பா இருக்கும்..!! அது உன்ன பார்த்து சிரிக்கும்..!! உனக்கு கை கால் லேசா நடுங்கும்...!! அது உன் பக்கத்துல வரும்...!! உனக்கு வியர்த்து கொட்டும்...!! அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் தரணி கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு.. அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்..!!............................................................................................................................................................................................................................................................................................................................................................

ரிலாக்ஸ் ப்ளீஸ் . இத்தாலில நடத்திய ஒரு சின்ன ஆராய்ச்சி... 7 - 9 வயசு பசங்க 4 பேர் கிட்ட ஒரு 10 வயசு பெண்ணை நிறுத்துறாங்க.... அந்த பொண்ணு கிட்ட உங்களுக்கு என்ன பிடிச்சிருக்குன்னு கேக்குறாங்க... வாண்டுங்க ஒண்ணொன்னும், தலை முடி, கண்ணுன்னு அடிச்சு விடுதுங்க... பொண்ணுக்கும் ஒரே சிரிப்பு... அந்த பொண்ணை தொட்டு பாருங்கன்னு சொல்றாங்க... ஒன்னு மூக்கை தொடுது.. ஒன்னு கையை தொடுது, ஒன்னு கன்னத்தை தொடுது ஒரே சிரிப்பு எல்லோருக்கும்... சட்டுன்னு கடுமையான குரல்ல... அந்த பொண்ணுக்கு கன்னத்துல பளார்ன்னு ஒரு அடி குடுக்க சொல்றாங்க... சட்டுன்னு ஒரு மயான அமைதி... ம்ம் அடிங்கன்னு குரல் சொல்லுது.. பசங்க முகம் பேயறஞ்ச மாதிரி இருக்கு... எல்லோரும் முகத்தை கடுமையாவும் சோகமாவும் வச்சுட்டு.. மாட்டேன்னு மறுக்குறாங்க... ஏன் அடிக்க மாட்டேன்னு கேட்டா... ஒவ்வொன்னும் ஒவ்வொரு காரணம் சொல்லுது... 'அவ பெண், அவ அழகா இருக்கா அதனால அடிக்க மாட்டேன்... எனக்கு அவளை பிடிச்சிருக்கு அதனால அடிக்க மாட்டேன், ஒரு பெண்ணை எந்த ஆண் மகனும் அடிக்க மாட்டான்'ன்னு சொல்றாங்க... முடிவா ஒரு லூசு சொல்லுது... பொண்ணுங்களை பூக்களை வச்சு கூட அடிக்க கூடாதுன்னு... (Girls should't be hit, not even with Flowers). In the Kid's World Women don't get hit' ன்னு சொல்லி வீடியோ முடியுது... அப்புறமா ஒரு ட்விஸ்ட் இருக்கு... கடைசியா அந்த பொண்ணுக்கு முத்தம் குடுங்கன்னு சொல்றாங்க... அதுக்கு பசங்க ரியாக்சன்..... ," கன்னத்துலயா இல்ல உதட்டுலயா?? 3 நிமிஷ வீடியோ அவ்வளவு அட்டகாசம்... > Link: http://abc7.com/…/video-young-boys-asked-to-slap-li…/462246/

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு !!! தெரிந்துகொள்வோம் :- உலகில் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாத நாடு ஒன்று உண்டா என்பதில் அனைவருக்கும் சந்தேகம் வருவது உண்மை, ஆனால் எந்த ஒரு நாட்டிடமும் கடன் பெறாது நாடு ஒன்று உண்டு. அதை தான் இப்போ பார்க்க போகிறோம். * 1951-ல் உலகின் மிக ஏழை நாடாக இருந்தது லிபியா. * நேட்டோ படைகளின் தாக்குதலுக்கு முன்பு வரை மிகவும் வசதியான சூழலில் வாழும் மக்களை கொண்ட ஒரே ஆப்ரிக்க நாடு லிபியா. * லிபியாவில் வீடு ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள உரிமையாக கருதப்பட்டது. * மின்சாரம் அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. * மருத்துவமும் கல்வியும் இலவசமாக வழங்கப் பட்டது. * மக்கள் தாங்கள் விரும்பும் கல்வியோ மருத்துவமோ லிபியாவில் கிடைக்காத பட்சத்தில் வெளிநாடு சென்று பெறுவதற்கு அரசே பொருளுதவி செய்தது. * வங்கிகளில் கடன் கோருபவர்களுக்கு வட்டியில்லா கடன்களாக மட்டுமே கொடுக்கப்பட்டது. * விவசாயம் செய்ய விரும்புபவர்களுக்கு இலவசமாக நிலமும் மற்றும் எல்லா உதவிகளும் இலவசமாக அரசே செய்தது. * உலகில் எவனுக்கும் கடன் படாத நாடு லிபியா !! ................................................................................................................................................................................................................................................................................................................

ரிலாக்ஸ் ப்ளீஸ் . "டாக்டரையா...!!" "சொல்லுங்கம்மா..!!" " நான் இன்னைக்கு என்ன கலர் சாரி உடுத்திருக்கேன்...?" "இதென்ன என்கிட்ட வந்து கேள்வி..? பச்ச கலர் சாரி உடுத்திருக்கீங்க...!!". " டாக்டர், நான் இன்னைக்கு என்ன கலர் பொட்டு வச்சிருக்கேன்..??" "பச்ச கலர் தான் வச்சிருக்கீங்க. அதுக்கு என்னம்மா...??" "டாக்டர், நான் இன்னைக்கு கைல என்ன கலர் குடை வச்சிருக்கேன்..??" "என்ன கொடுமைப்பா, பச்ச கலர்தாம்பா வச்சிருக்கீங்க...!!". "நான் பச்ச கலர் சாரி கட்டி, பச்ச கலர் பொட்டு வச்சு, பச்ச கலர் குடை வச்சுக்கிட்டு, பச்ச கலர் பெயிண்ட் அடிச்சிருக்கிற ஹாஸ்பிடலுக்கு வந்தா..... நீங்க செவப்பு கலர் மாத்திரை தர்றீங்களே...!!, கலருக்கு மேட்ச் ஆகலையே டாக்டர்..!!!" "ஸ்ஸ்ஷப்பா... இப்பவே கண்ணக்கட்டுதே...!!!"

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் · . தத்துவம் சொல்லி நாளாச்சி… தண்ணீர் மேல படகு போனா உல்லாசம். ஆனா, படகு மேல தண்ணீர் போனா கைலாசம். நெக்ஸ்டு Back வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும், Front வீல ஓவர்டேக் பண்ண முடியாது. அப்புறம் டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் வரும். 10 பீர் சாப்பிட்டா,,,,,,,,, தூக்க ஆள் வரும். ரைட்டு… பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன் ஆயிடும் ஆனா, பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம் ஆகுமா? அடுத்து என்னதான் MBBS படிச்சி டாக்டர் ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற வைரசுக்கு மாத்திரை குடுக்க முடயுமா? ,,, யோசிப்பா, யோசி, last ஆ ஒன்னு சொல்லிக்கறேன். பரிட்சைல பெயில் ஆனா திரும்ப படிச்சி பாஸ் பண்ணலாம். ஆனா, பாஸ் ஆயிட்டா. திரும்ப படிச்சி பெயில் ஆக முடியாது. ‘ நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா?

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் · . ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார். நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார். “மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார். பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார். அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப் பார்க்கவில்லை.”

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . வெளியூர்காரர் ஒரு வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினார். ஒரு வாண்டு கதவை திறந்து எட்டி பார்த்தான். " அப்பா இருக்காரா...?" "இல்ல... வெளியூர் போயிருக்கார்..." " அப்போ, வீட்டுல பெரியவங்க, தாத்தா, பாட்டி, இருக்காங்களா..?" "அவங்க சித்தப்பா வீட்டுக்கு போயிட்டாங்க..." "அண்ணனையாவது கூப்பிடு..." " அண்ணன் கிரிக்கெட் விளையாட போயிருக்கான்." "சரிப்பா.. அம்மாவையாவது கூப்பிடு..." " அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க..." வந்தவர் கடுப்பேறி.... நீ மட்டும் ஏன் இருக்கே...? நீயும் எங்கேயாவது போகவேண்டியதுதானே...?' + + "ஆமா.... நானும் என் ப்ரெண்ட் வீட்டுக்குத்தான் வந்திருக்கேன்...!!!"

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- dinakaran daily newspaper . குட்டிக்கதை:!!! ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர்மேல் சீடனுக்குக் கோபம். தன் நேரம் விரைவதாய் வருந்தினான். கூண்டில் அடைக்கப்பட்ட பத்து கோழிகளைத் திறந்து விட்ட குருநாதர் பத்தையும் பிடிக்கச் சொன்னார். பத்தும் பத்துத் திசைகளில் ஓடின. துரத்தித் துரத்திக் களைத்தான். கழுத்தில் சிகப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடிக்கச் சொன்னார் குருநாதர். சில நிமிடங்களிலேயே பிடித்தான். குருநாதர் சொன்னார் “ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று. பலவற்றையும் பிடிக்க நினைத்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்பாய்!!

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ் . இதுதான் இன்றைக்கு இனிப்பான செய்தி: உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்? இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம். இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள். குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம். 1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள். 2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது. 3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள். 4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது. 5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது. 6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது. 7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது. 8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது. குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது. ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.