Jump to content

படித்ததில் பிடித்தது(முகநூல் பதிவுகளில் இருந்து)


Recommended Posts

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

படித்ததில் உறைத்தது

******************************

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக் குறிவைத்தன -

உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும் உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப் பெண்களை கவிழ்த்தன.

1994, 1996, 1997, 1999, 2000ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகு சாதனப் பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது.

2000த்திற்க்குப் பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை.

காரணம் இனி இந்தியப் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை கைவிடமாட்டார்கள் என்று புரிந்து கொண்டதால் மற்ற நாட்டுப் பெண்களை கவர சென்றுவிட்டார்கள்.

ஆனால் தொண்ணூறுகளிலிருந்து நாம் இன்னும் ஏமாந்துக்கொண்டிருக்கிறோம். இதுவும் ஒரு உலக அரசியல் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்ளப் போகிறோம்???

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக....

Link to comment
Share on other sites

  • Replies 125
  • Created
  • Last Reply

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

ஒருவர் ஒருமுறை பைத்தியகார ஆஸ்பத்திரிக்கு சென்றார்

அங்கே ஒரு பைத்தியம் நேர்த்தியாக உடை அணிந்து

மடிப்பு கலையாத கிராப்புடன் கையில் ரோஜா ஒன்றை வைத்துக் கொண்டு ''அனிதா,அனிதா'' என்று சொல்லிக் கொண்டிருந்தானம்.

''இவர் யார்? என டாக்டரிடம் கேட்ட போது டாக்டர் சொன்னார் ''இவர் அனிதா என்ற பெண்ணை காதலித்தார்.அவளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனதால் இவர்க்கு இப்படி ஆகிவிட்டது''என்றார்.

மறு அறையில் கிழிந்த சட்டையும்,கலைந்த தலையுடன் ''அனிதா, அனிதா''என்று சுவரில் அடித்துக் கொண்டிருந்தார்.

இவர் யார் என டாக்டரிடம் கேட்டார். இவர் தான் ''அந்த

அனிதாவின் கணவர்'' என்றார்

tongue emoticon tongue emoticon

சிரிக்க மட்டும்

Link to comment
Share on other sites

பக்தி கதைகள்> நல்லவருடன் பழகுங்க!

பக்தி கதைகள்

நல்லவருடன் பழகுங்க!

கிராமத்தில் சிறிய பலசரக்குக் கடை இருந்தது. கடைக்காரர் மிகவும் நல்லவர். கிராமத்தையே தன் குடும்பமாக எண்ணி அன்பு காட்டுவார். கடனுக்கு பொருள் கேட்டாலும் கொடுத்து விடுவார். தேவையான பொருட்களை எல்லோரும் அவரிடமே வாங்கினர். பக்தி மிக்க அவர் பக்தி பாடல்களையும் அவ்வப்போது பாடுவார். அந்தப்பாடல்களைக் கேட்டால் கல்லும் கரைந்து விடும். மதிய நேரத்தில் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் புறப்படுவார். அந்த நேரம் யாராவது பொருள் கேட்டு வந்தால் காத்திருக்க நேரிடுமே என்பதால் கடையை அடைக்க மாட்டார். அறிமுகமே இல்லாத நபராக இருந்தால் கூட, கடையைச் சற்றுநேரம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு வீட்டிற்குப் போய் விடுவார். ஒருநாள் மதியம் திருடன் ஒருவன் கடை முன் வந்தான். அவனிடம் கடைக்காரர், ஒரு உதவி செய்ய வேண்டும். சிறிது நேரம் கடையைப் பார்த்துக் கொண்டால், வீட்டிற்குப் போய் சாப்பிட்டு வந்து விடுவேன், என்று கேட்டார். மகிழ்ச்சியுடன் சம்மதித்தான் திருடன்.

கடைக்காரரும் கிளம்பி விட்டார். அந்த நேரத்தில் வந்த சிலரிடம் காசை வாங்கிக் கொண்டு சரக்கைக் கொடுத்தான் திருடன். பணப்பெட்டியும் திறந்தே இருந்தது.அந்த நேரத்தில், திருடனை நன்றாக அறிந்த நண்பன் ஒருவன் அங்கே வந்தான். அடேய்! திருடுவதற்கு இதை விட சரியான சமயம் நமக்கு கிடைக்காது. பணம், சாமான்களை கட்டிக் கொண்டு ஓடி விடலாம், என்று யோசனை கூறினான்.திருடனுக்கோ திருடுவதா வேண்டாமா என்ற தயக்கம்... தனக்குள் ஏன் இந்த மாற்றம் என்றே அவனுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் சிந்தித்தவன், தன்னை நம்பிய கடைக்காரருக்குத் துரோகம் செய்ய மனமில்லை. என்று சொல்லி நண்பனிடம் மறுத்து விட்டான்.சிறிது நேரத்தில் கடைக்காரர் வந்து விட்டார். அவரிடம்,எல்லாப் பொருளும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள், என்றான். கடைக்காரரோ,ஏன் இப்படி கேட்கிறாய். உன் மீது கொண்ட நம்பிக்கையால் தான் கடையை ஒப்படைத்துச் சென்றேன். அதனால், பணத்தையோ, பொருளையோ சரி பார்க்கத் தேவையில்லை, என்றார்.கடைக்காரரின் நம்பிக்கை மிக்க பேச்சை கேட்டதும் திருடனின் வருத்தம் அதிகரித்தது. உங்களைப் போன்ற நல்லவர்களுடன் ஒருநாள் பழகியதற்கே மனம் இவ்வளவு துõய்மையாகி விட்டதே. வாழ்நாளெல்லாம் உங்களோடு உறவாடினால் பிறவிப்பயனே கிடைத்து விடுமே! என்றான்.கடைக்காரர், நீ சொல்வது புரியவில்லையே! என்றார்.ஐயா! என்னை மன்னியுங்கள். நான் ஒரு திருடன். என் நண்பனும், நானும் கடையில் திருடி விட்டு ஓட எண்ணினோம். ஆனால், நல்ல வேளையாக என் இயல்பான திருட்டுக் குணம் இன்று மறைந்து விட்டது. இனி ஒருநாளும் திருட மாட்டேன், என்று அழுதான். கடைக்காரரின் காலில் விழுந்து வணங்கினான். இப்படி திருடனைக் கூட திருத்தி பக்தராக மாற்றிய அந்தக் கடைக்காரர் வேறு யாருமல்ல. ஞானி துக்காராம் தான்!

dinamalar

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

முன்னொரு காலத்தில் கோணங்கி பட்டினம் என்ற ஊரில் மந்தை மேய்ப்பன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவற்றை அவனால் காவல்காக்க முடியவில்லை. தினமும் ஒவ்வொரு ஆட்டை ஓநாய்கள் கவர்ந்து சென்றன.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வேட்டை நாய் இரண்டை வாங்கி காவலுக்கு வைத்தான். அவற்றிற்கு தினமும் மாமிச உணவு கொடுக்க வேண்டுமே... இதற்காக தினமும் இரண்டு எலிகளை அடித்து உணவாக கொடுத்தான்.

அப்படி இருந்தும் தினமும் ஒரு ஆடு காணாமல் போனது. இதனால் மேய்ப்பனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வேட்டை நாய்கள் மீது கோபம் கோபமாக வந்தது..

ஒரு நாள் என்ன நடக்கிறது என்பதை மறைந்திருந்து கவனித்தான். அப்பொழுது ஓநாய் ஒன்று வந்து ஆட்டை கொன்று இழுத்து சென்றது. அது சாப்பிட்டுவிட்டு போடும் மீதி ஆட்டை இந்த வேட்டை நாய்கள் இன்பமாக தின்றன. இப்படி நடப்பதை கண்ட அவன் திடுக்கிட்டான். மிகவும் சோகமாக உட்கார்ந்தான்.

அப்பொழுது அந்த வழியாக முனிவர் ஒருவர் வந்தார். அவரிடம் தன் கஷ்டத்தை சொல்லி அழுதான் மந்தை மேய்ப்பவன்.

அதற்கு முனிவர், ""மகனே யாருக்கும் வயிறார உணவு கொடுத்தால் தான் வேலை செய்வர். நீயோ இரண்டு எலிகளை மாத்திரம் நாய்களுக்கு உணவாக கொடுக்கிறாய். இது அவைகளுக்கு பத்தாது.

""நீ அவ்வப்போது உன் வீட்டிற்காக ஆட்டை வெட்டுகிறாய் அல்லவா? அந்த மாமிசத்திலிருந்து சிறு துண்டுகளையாவது எடுத்து இந்த நாய்களுக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் அவைகள் உனக்காக நன்கு வேலை செய்யும்,'' என்றார்.

அதன்படியே செய்வதாக ஒப்பு கொண்டான் மேய்ப்பன். அப்படியே செய்து வந்தான். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அன்றிலிருந்து மந்தையில் ஆடுகள் குறையவில்லை.

மறுநாள் ஓநாய்கள் ஆட்டை திண்ண வந்தன. அதை கண்ட வேட்டை நாய்கள் அவைகளை விரட்டின. ""என்ன இத்தனை நாட்களாக நாங்கள் விட்டு சென்ற மாமிசத்தை தின்றீர்கள். இப்பொழுது உங்களுக்கு என்னவாயிற்று?'' என்றன.

""உங்களது எச்சில் மாமிசம் எங்களுக்கு வேண்டாம். எங்கள் தலைவர் வயிறு நிறைய எங்களுக்கு மாமிசம் கொடுக்கிறார்,'' என்றன.

அவற்றை மீறி ஓநாய்கள் மந்தைக்குள் நுழைந்தன. அவைகள் மீது பாய்ந்து கிழித்து கொன்றன வேட்டை நாய்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தான் மந்தை மேய்ப்பன்.

நீதி: நம்மிடம் வேலை செய்பவர்களுக்கு நாம் வயிறு நிறைய சாப்பாடு கொடுக்க வேண்டும். தகுதியான சம்பளம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு உண்மையாக உழைப்பர்.

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

தமிழ் சினிமாவின் விதிகள்

1.பத்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா பேஷன்ட் போலச்சிருக்க மாட்டாருன்னு டாக்டர் சொல்றது

2.நம்ம டிபார்ட்மென்ட்டுக்கே கேவலம்னு சொன்னதும் எல்லோரும் தலையைக் குனியுறது ..

3.ஹீரோவ எங்க அடிச்சாலும் வாய் ஓரத்துல ரத்தம் வரும் அத தொட்டு பாத்தவுடன் வீரம் வரும்..

4..ரேப் பண்ற வில்லன அடிச்சி போட்டுட்டு ஹீரோயினோட மழை பாட்டு பாடுறது ...

5.எவ்வளவு நேரம் இருந்தாலும் டைம்பாமை 00:01 செக்கண்ட்லையே டிப்யூஸ் பண்ணுரது

6.ஹீரோவோட தங்கச்சி எல்லாம் வில்லன் கிட்ட மாட்டி கஷ்டபடுறது.

7.துப்பாக்கி வச்சி சுட்டாலும் ஹீரோ மட்டும் குண்டு படாம தப்பிகிறது

8.காதலனை மறந்து விடுன்னு கதாநாயகியின் தந்தை மிரட்டியவுடன், பெட்ரூமிற்கு ஓடி போய் மெத்தையில் குப்புற விழுந்து அழுவது.

9. யாரவது படத்தோட முதல் சீன்ல சாகும் போது, சொல்ல வந்த ரகசியத்தை சொல்லாம செத்துடுவாங்க.. இதுவே கடைசி சீனா இருந்தா எல்லா ரகசியத்தையும் சொல்லிட்டு தான் சாவாங்க..சாகும் போது கண்ணை திறந்திட்டேதான் சாவாங்க, நம்ம ஹீரோ கண் இமைகளை தடவி மூடுவார்

10.கிளைமாக்ஸ் பைட்டுல நிராயுதபாணியா நிற்கிற ஹீரோவை வில்லன் குத்தவோ / சுடவோ வரும் போது அவரை யாரவது பின்னாடி இருந்து குத்திடுவாங்க.. வில்லன் மெதுவா சரிய பின்னாடி யாருன்னு பார்த்தா செகன்ட் ஹீரோயினோ, கடைசியா திருந்தின வில்லியோ இருப்பாங்க.

11.ரேப் ஸீனுக்கு புலி, மானைக் காட்டுறது. முதலிரவு ஸீனுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கப்பறம் லைட்டை ஆஃப் செஞ்சிடறது. மேக்ஸிமம் ரேப் ஸினுக்கு நம்ம ஹீரோயின் சேலைதான் கட்டியிருப்பாங்க.(ரேப் ஸீன் அஞ்சு நிமிசத்துக்குள்ள முடிஞ்சிருது . வில்லன் சிவராஜ் சித்த வைத்தியரை பார்க்குறது முக்கியம் wink emoticon )

12.பனி பொழியுற நாட்டுப் பாடல் காட்சிகள்ல, ஹீரோ மட்டும் கோட்டு, சூட்டு, கிளவுஸ் எல்லாம் போட்ருப்பாரு, ஆனா ஹீரோயின் அம்மணிக்கு மட்டும் டூபீஸ்....சே...என்ன மாதிரி சமுகத்தில் வாழ்கிறோம் நாம் ..?

13.படத்தோட உச்சக்கட்டமா வில்லன் எங்கேயாவது பாம் வச்சுடுவான். அதை டிஃப்யூஸ் பண்ண வர்ற ஹீரோ எந்த கலர் வயர வெட்டுறது அப்படின்னு டென்ஷனாகி செவப்பா நீலமான்னு மாத்தி மாத்தி யோசிப்பார். ஆனா அவர் கவலையே பட வேண்டாம். ஏன்னா அவர் எந்த வயர வெட்டினாலும் பாம் அமந்து போகும். (தக்காளி ..நீ புடுங்குற எல்லாமே தேவையில்லாத ஆணிதான்..)

14.நல்லதொரு ரேப் சீனை நாசமாக்க வரும் நம்ம ஹீரோ, வந்ததும் மொதோ வேலையா தன்னோட சட்டையையோ ஜெர்கினையோ கழட்டி பொண்ணு மேல போர்த்துவார்.(அடேய் உன்ன யார்ர இங்க வரச்சொன்னது ச்சே )

15.ஹீரோ ரெட்டைப்புள்ளையா இருந்தா அதுல ஒருத்தர் கண்டிப்பா ரொம்பக் கெட்டவனா இருப்பாரு. ஆனா கிளைமாக்ஸ்ல “நான் ஏன் அப்படி இருந்தேன் தெரியுமா”ன்னு ஒரு பாடாவதி டயலாக் பேசி நல்லவனா மாறிடுவார்..

grin emoticon grin emoticon

- களவாணி பய

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

நேற்று ஆபிஸ் முடிந்ததும் வீட்டுக்குப் போனேன்.

நல்ல பசி....

சாப்பிட உட்கார்ந்தால் ... உணவு தயாராகவில்லை.

எனக்கு வந்ததே கோபம்....

"பளார்" என என மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டேன்.

அவள் அழ ஆரம்பிக்க ...

பக்கத்து வீட்டுக்காரகளெல்லாம் என் வீட்டை எட்டிப் பார்க்கும் படி ஆயிற்று.

விளைவு ... பசியுடனேயே தூக்கம்....

இன்று காலை 6 மணி இருக்கும்...

என் மனைவியும், பக்கத்து வீட்டுக்காரியும் பேசும் சத்தம் என் தூக்கத்தைக் கலைத்தது.

"ஏண்டி...இப்படி மாட்டை அடிச்ச மாதிரி அடிக்கிறாரு ... இவர்கூடல்லாம் எப்படி குடும்பம் நடத்துற? ... போ... போய் போலிஸ் ஸ்டேடன்ல கம்ப்ளெய்ண்ட் குடுத்து நாலு சாத்து சாத்த சொல்லு ... அப்பதான் இந்த மாதிரி ஆளுங்கல்லாம் திருந்துவாங்க"

சிறிது நேர மவுனத்திற்கும் பின் என் மனைவி சொன்னாள்,

" நானும் அப்படித்தான் நெனச்சேன் ... ஆனா, நான் பூரிக்கட்டையால அடிச்சதுல அவரு உடம்பெல்லாம் வீங்கியிருக்கே ... அதை போலிஸ்காரங்க பார்த்தாங்கன்னா ... நானும்ல மாட்டிப்பேன்"

‪#‎ரொம்ப‬ பாசக்காரியா இருக்காளேய்யா!!

- Jayant Prabhakar.

Link to comment
Share on other sites


 

ரிலாக்ஸ் ப்ளீஸ்

·
.


சிறிய தூண்டில்
---------------------
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.

அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....


"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,

"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.

"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"

முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.

"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"

"ஒருவரிடம் மட்டும்…"

"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"

"$1012347.64"

"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"

"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"

"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"

மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,

"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

# புத்திசாலி எதையும் சாதிப்பான் like emoticon

 

............................................................................................................................................................................................................................................



ரிலாக்ஸ் ப்ளீஸ்

.


ஆங்கிலேயர் : உங்கள் நாட்டில் உள்ள பெண்கள் ஏன் ஆண்களிடம் கை குலுக்க மறுக்கிறார்கள்,கை குலுக்குவது அப்படியொன்றும் தவறு இல்லையே.....

இந்தியர் : உங்கள் நாட்டு மகாராணியிடம் உங்கள் நாட்டை சேர்ந்த பாமர மக்கள் கை குலுக்க முடியுமா ?

ஆங்கிலேயர் : அது முடியாதே......


இந்தியர் : ஏன் முடியாது ?

ஆங்கிலேயர் : அவர்கள் எங்கள் நாட்டு ராணி ஆயிற்றே....

இந்தியர் : உங்கள் நாட்டை பொறுத்தவரை ராஜாவின் மனைவி மட்டும் தான் ராணி, ஆனால் எங்கள் நாட்டை
பொறுத்தவரை அனைத்து பெண்களும் எங்களுக்கு
மகாராணிகள் தான்.

‪#‎பெண்களை_மதிப்போம்‬ smile emoticon

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

·

.

மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு....

"ஏங்க எங்கங்க இருக்கீங்க?"

"உனக்கு நேரம் காலமே தெரியாது ... பகல்ல நான் எங்கே இருப்பேன் ... ஆபிஸ்லதான் ... ரொம்ப வேலையாஇருக்கேன் ... இப்போ என்னால பேசுறதுக்கு நேரம் இல்லை ... ப்ரீ ஆனதும் நானே கூப்பிடுறேன்"

"அதுக்கில்லைங்க..."

"அதான் சொல்றேன்ல"

"குழந்தைங்க ..."

"என்ன குழந்தைங்களுக்கு என்ன?"

"ஒண்ணுமில்ல ... உங்களுக்கு இரண்டு டேபிள் பின்னால குழந்தைகளோட ஐஸ் கிரீம் சாப்டுகிட்டு இருக்கேன் . உங்க கூட இருக்கற பொண்ணு யாருன்னு குழந்தைங்க‌ கேக்கறாங்க ... நான் என்ன பதில் சொல்லட்டும்?"

இனிக்கு

‪#‎செத்தான்‬ டா சேகரு!!!!!!!!!!!!

................................................................................................................................................................................................................

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

GIRL : நீங்க சிகரெட் புடிப்பீங்கலா?

BOY : ஆமா.

GIRL : எவ்ளோ நாளா இந்த பழக்கம்?

BOY : கிட்ட தட்ட பத்து வருசமா.

GIRL : ஒரு நாளைக்கி எத்தன பாக்கெட் தம் அடிப்பீங்க?

BOY : மூனு பாக்கெட்

GIRL : அப்படினா ஒரு பாக்கெட் சிகரட் எவ்வளவு?

BOY : 40 ரூபாய்.

GIRL : அப்ப ஒரு நாளைக்கு 120 ரூவாய்(3 பாக்கெட்) செலவு பன்றீங்க.

BOY : ஆமா.

GIRL : அப்போ மாசத்துக்கு 3,600 ரூபாய்.

BOY : ஆமா.

GIRL : வருசத்துக்கு 43,200 ரூபாய்?

BOY : கரெக்ட்டா சொன்னீங்க.

GIRL : பத்து வருசத்துக்கு 4,32,000 ரூபாய்.

BOY : ஆமா.

GIRL : சிகரெட் அடிக்காம,நீங்க இந்த காச சேர்த்து வச்சிருந்தா ஒரு சான்ரோ கார் வாங்கிருக்கலாம்.

BOY : ஓ அப்படியா.!! சரி நீங்க தம் அடிப்பீங்கலா?

GIRL : ச்சீ ச்சீ எனக்கு அந்த பழக்கமே கிடையாது.

BOY : அப்போ உங்க சான்ரோ கார் எங்க நிக்கிது?

GIRL : !!!!! (speechless)

கொய்யால யாருகிட்ட tongue emoticon tongue emoticon

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

மாத்தி யோசி like emoticon like emoticon

அமெரிக்காவின் நாசா,விண்வெளியில் மனிதர்களை அனுப்ப ஆரம்பிக்கும் போது,அவர்களுக்கு ஒரு பிரச்சினை வந்தது.வானத்தில் புவி ஈர்ப்பு விசை இல்லாததால் அங்கு பேனாவால் எழுத முடியவில்லை

.ஆனால் பார்த்த விசயங்களை எழுதி ஆக வேண்டுமே!என்ன செய்வது?

அதற்கான வழியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை ஒரு பெரிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள்.

அவர்களும் பத்துஆண்டுகள் ஆராய்ச்சி செய்து,ஒரு கோடி டாலர் செலவழித்து புவி ஈர்ப்பு விசை இல்லாத இடத்திலும். நீருக்கு அடியிலும்,கடுமையான வெப்ப நிலையிலும் மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் எந்த நிலையிலும் எழுதக் கூடிய ஒரு பேனாவைக் கண்டுபிடித்தனர்.

ஒரு ஆர்வத்தினால் ரஷ்யர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்தார்கள் என்று விசாரித்த போதுதெரிய வந்தது;

''அவர்கள் பென்சிலைஉபயோகித்தார்கள்!''

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

பெண்களின் எண்ணம் எப்போதும் சுயநலமானது..

குடும்பச்செலவுக்கு ஐம்பதாயிரம் லோன் வேண்டுமென்றும் அதை மாதம் தோறும் மூவாயிரம் வீதம் பிடித்தம் செய்து கொள்ளும்படியும் கேட்டு கம்பெனி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தாள் ஒரு பெண்..

கம்பெனியுல லோன் கேட்குற அளவுக்கு அப்படி என்ன உனக்கு கஷ்டம்!’’ அவளுடன் வேலை பார்க்கும் தோழி கேட்டாள்.

கஷ்டம் எதுவுமில்ல, இப்பகூட பேங்குல மூணு லட்சத்துக்கு மேல சேவிங் இருக்கு, இந்த லோன் வாங்கி என் வீட்டுக்காரருக்குத் தெரியாம பேங்குல தான் போடப்போறேன்.!’’ யதார்த்தமாய் சொன்னாள் அந்த பெண்.

என்னடி சொல்ற? தோழி புரியாமல் கேட்டாள்.

"இந்த வருஷம் எனக்கு இன்கிரிமெண்ட் வந்தப்போ நான் வாங்கற சம்பளம் என் வீட்டுக்காரர் வாங்கற சம்பளத்த விட ஆயிரம் ரூபா அதிகம்,

அவர விட நான் அதிக சம்பளம் வாங்குறது தெரிஞ்சா அவருக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடும்..

என் சம்பளத்துலயிருந்து மூவாயிரம் பிடித்தம் போக மீதி சம்பளம் என் பேங்குல கிரிடிட் ஆச்சுன்னா அது அவர் வாங்கற சம்பளத்த விட குறைவு அதான் லோணுக்கு அப்ளை பண்றேன்"!.

தனது கணவனுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துடக்கூடாது என விரும்பும் அந்த பெண்ணின் நல்ல மனத்தை அதிசயமாகப் பார்த்தாள் அவள் தோழி.!!!

‪#‎பெண்களின்‬ எண்ணம் எப்போதும் சுயநலமானது தான், ஆனால் அந்த சுயநலத்திற்குள் ஒரு குடும்பமே நிம்மதியாய் இருக்கும்...

Link to comment
Share on other sites

இந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..

ஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்\' தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு - 1578 ஆண்டு

முதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் ,

முதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 .

புத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் - புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட \'தம்பிரான் வணக்கம்\' எனும் கிருத்துவ நூலாகும்

இந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் .

Link to comment
Share on other sites

கதம்பம்

.

கோபம்.......

'மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?'' - மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியை. எல்லா மாணவர்களும் ஒரே குரலில் 'ஆமாம்...' என்றனர். அவர்களை, ஒவ்வொருவராக அருகில் அழைத்த ஆசிரியை, ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார்.

ஒருவன் 'பத்து' என்றான்; அடுத்தவன் 'பதினைந்து' என்றான். இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொன்னார்கள்.இதையடுத்து அவர்களிடம் சிறிய பை ஒன்றைக் கொடுத்த ஆசிரியை, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக் காட்டி, ''நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்'' என்றார். மாணவர்களும் தங்களது பையில்,தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.

அவர்களிடம், ''இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும். தூங்கும் போதும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும்'' என்று உத்தரவிட்டார். புரிந்தும் புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.

ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர்.

ஒரு கட்டத்தில்... ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர்.

மெள்ளப் புன்னகைத்த ஆசிரியை, ''நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமா..? அந்த நாற்றத்தைப் போலவே, பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் உங்கள் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால்,தக்காளியையும் தூக்கி எறியுங்கள்'' என்றார்!மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.

அப்போதே தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாண வர்கள்,பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கண்ணீர் விட்டனர்.

Link to comment
Share on other sites

கதம்பம் with King Gold King

வாய்ப்பு=₪

ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன.

பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது.

‘நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?’ என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.

அந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள்.

புதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டு சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள்.

அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டுக்குள் வந்தார்கள்.

அவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்துச் சொன்னார். ‘இந்தப் பாறைங்க ரெண்டும் சரியான அளவில இருக்கறமாதிரி தெரியுது. நாளைக்கே ஆள் வெச்சுத் தூக்கிட்டுப் போயிடலாம்!’

சிற்பிகள் திரும்பிச் சென்றபிறகு முதல் பாறை பேசியது. ‘ஹையா ஜாலி ஜாலி! நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது!

நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம்!’

இரண்டாவது பாறை கோபமாகச் சீறியது. ‘அட மக்குப் பயலே! அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் போறாங்கன்னு நினைச்சே? உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா?’

‘அதுக்கு என்ன பண்றது? ஒண்ணைப் பெறணும்ன்னா இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்?’ என்றது முதல் பாறை.

‘நான் வலியைப் பொறுத்துக்குவேன்.

பிரச்னையில்லை!’

‘என்னால அது முடியாது!’ தீர்மானமாகச் சொன்னது இரண்டாவது பாறை.

‘நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாப் போய் உட்கார்ந்துக்குவேன். அவங்க எல்லோரும் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது.’

மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள்.

இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.

‘சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும்.’ அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.

இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக எல்லோராலும் வணங்கப்படுகிறது.

இரண்டாவது பாறை இன்னும் காட்டுக்குள்தான் கிடக்கிறது.

வாழ்வில் நமக்கு அமையும் சிலஅரிய வாய்ப்பினை , தவறாமல் பற்றி கொள்ளவேண்டும். . .!

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

“நீங்கள் செய்த அறிவிப்பால் பாவம் பெருகப்போகிறது. ஏன் இப்படி ஓர் அறிவிப்பை செய்தீர்கள்” என்று பரமசிவனிடம் பார்வதி கோபித்துக்கொண்டார்.

சிவனே என்றிருந்த சிவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று அறிவித்து விட்டீர்கள். இதனால் நாட்டில் பாவம் பெருகிவிடாதா? ” என்றார்.

நியாயம்தானே. கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்ற தைரியத்தில் இனி பயமே இல்லாமல் பாவம் செய்வார்களே..

பரமசிவன் சிரித்துக்கொண்டே, “உன் கேள்விக்கு பதிலை கங்கைக்கரையில் சொல்கிறேன்” என்று பார்வதியை அழைத்துக்கொண்டு கங்கைக்கரைக்கு வந்தார்.

இருவரும் மாறுவேடத்தில் இருந்தார்கள். இருவரும் பேசி வைத்தபடி சிவன் மயக்கம் வந்தவர் மாதிரி நடித்து மயங்கி விழுந்தார்.

பார்வதி உதவி கேட்டு கூச்சலிட்டார். எல்லோரும் கூடிவிட்டனர். யாராவது ஒருவர் கங்கையிலிருந்து தண்ணீர் கொண்டுவந்து தெளித்தால் மயக்கம் தெளியும். உதவி செய்யுங்கள் என்றார் பார்வதி. எல்லோரும் ஓடினர்.

“ஒரு நிமிஷம். உங்களில் யார் பாவம் செய்யாதவரோ அவர்கள் தண்ணீர் கொண்டு வந்து தெளித்தால்தான் மயக்கம் தெளியும்” என்றார் பார்வதி

எல்லோரும் சட்டென்று பிரேக் போட்டது போல நின்று விட்டார்கள். காரணம் எல்லோரும் பாவம் செய்திருக்கிறார்கள். பத்து நிமிடம் ஆயிற்று. இருபது நிமிடம் ஆயிற்று. ஒருவர் கூட அசையவில்லை.

திடீரென்று கூட்டத்திலிருந்த ஒருவன் ஓடிப்போய் கங்கையில் குதித்தான். முங்கிக் குளித்தான். தண்ணீர் அள்ளிக்கொண்டு வந்து சிவன் முகத்தில் தெளித்தான்.

சிவன் மயக்கம் தெளிந்ததுபோல எழுந்திருக்க, கூட்டம் கலைந்தது. சிவன் சொன்னார், “கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒருவன் மட்டுமே நம்பினான். கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று தெரிந்தவனுக்கு எல்லாம் பாவம் போகாது. கங்கையில் குளித்தால் பாவம் போகும் என்று நம்பியவனுக்கு மட்டும்தான் போகும்” என்றார்.

நம்பிக்கையாய் இருந்தால் முடியும் என்பதே முதல் வெற்றி.

என்றும் நம்பிக்கையுடன்..

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

இது உண்மை நிகழ்வு .

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதுப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்துட்டு இருந்தார். ஜப்பான் நாட்ல பெரும்பாலும் வீடுகள் மரத்தாலேயே கட்டப்பட்டிருக்கும் ரெண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.

வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதைப் பார்த்தார். அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்தப் பல்லியை சுற்றி பார்த்தார். அவர் அப்போதுதான் கவனிச்சாறு. வெளிப் பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறதுன்னு.

அவருக்கு ஆச்சரியமா இருந்தது. ''அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும். எப்படி இந்தப் பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது. இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும்'' னு மேற்கொண்டு வேலை செய்யாம அந்தப் பல்லியவே கண்காணிச்சுட்டு உட்கார்ந்து இருந்தாரு.

கொஞ்ச நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டாரு. அந்தப் பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக்கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார். அவருக்கு தூக்கி வாரிப்போட்டது. அதாவது 3 ஆண்டுகளா இந்தப் பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்திருக்கு.

ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாம 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா, உன்னை 10 மாதம் சுமந்த உன் தாய்க்கு அவர்கள் முடியாத காலகட்டத்தில் உணவளிக்க முடியாதா, உன் தாரம் ஊனமாயின் அவளுக்கு உன்னால் உணவளிக்க முடியாதா'' ன்னு சிந்தனை வர இதை உலகம் பூரா பரப்ப ஆரம்பிச்சிட்டாராம். . . !

( இது உண்மையாக நடந்தா என்று ஆராயாமல் நல்ல விஷயத்தை, கருத்தை , நாமும் முடிந்த அளவு பரப்புவோம், புரிபவர்கள் புரியட்டும், . . . )

Link to comment
Share on other sites






 

ரிலாக்ஸ் ப்ளீஸ்


.


ஒரு பள்ளி சிறுவன் உணவு இடைவேளை விடும்போது தன நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தான்.மற்ற சிறுவர்கள் பேசிக்கொண்டும் தமக்குள்ள சண்டை போட்டுக்கொண்டும் உணவை கீழே இறைத்து கொண்டும் சாபிட்டர்கள்.

அவர்கள் அதை பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இந்த சிறுவன் அமைதியாக ஒரு பருக்கை கூட கீழே சிந்தாமல் கவனமாக சாபிட்டான். ஒன்றிரண்டு சோற்று பருக்கை டிபன் தூக்கில் ஒட்டி கொண்டு இருந்தாலும் அதையும் எடுத்து சாப்பிட்டுவது அவன் பழக்கம்.

இதை பார்த்த அவன் நண்பர்கள் அவனை "பிச்சைகாரன்" என்று கேலி செய்தனர். அவன் அதற்காக கவலைப்படவில்லை. இதை கூர்ந்து கவனீத்த அவன் நண்பனொருவன் ஒருநாள் இதை பற்றி கேட்ட பொழுது அந்த சிறுவன் அதற்கு பின் வருமாறு விளக்கம் கொடுத்தான்.


"இதோ பார் நண்பா ..நான் ஒரு பருக்கை கூட வீணாகாமல் சாபிடுவது என் பெற்றோர்களுக்கு நான் காட்டும் மரியாதை. என் அன்னை அதிகாலையில் எழுந்து குளிர் பனி என்று பாராமல் எனக்கு பிடித் உணவை அன்புடன் செய்து கொடுத்து என்னை பள்ளிக்கு அனுப்பி வைக்கிறாள். என் தந்தை இரவு பகல் என்று பாராமல் வெளியே உழைது வீட்டை நடத்தி செல்ல பொருள் ஈட்டி கொண்டு வருகின்றார்.

அது மட்டும் அல்ல . நாம் கீழே சிந்தி வீணாக்கும் ஒவ்வோர் பருக்கையும் நம் தாய் தந்தையரோடு மழை வெயில் பாராது தன நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடுபடும் விவசாயிகளையும் அவமதிப்பதாகும். உலகில் எவ்வளவோ பேர்கள் உண்ண உணவில்லாது அவதிபடுகிறார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் நான் சிறிது கூட சிந்தாமல் வீணாகாமல் சாப்பிடுகிறேன் " என்று பதில் அளித்தான்.

நாம் எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான்.

(படித்ததில் பிடித்தது )



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ ரிலாக்ஸ் ப்ளீஸ்


.


தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....

1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு...

தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க சரி...


2.படிச்சவன் பாட்டை கெடுத்தான், எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....

இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ........... படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...
.
3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...

இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்n அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .... சூடு அல்ல சுவடு...

சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்....

அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.... வள்ளல் ஆனவரை கஞ்சனாக மாற்றி விட்டோம் ...

காலப்போக்கில்.... நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்...

 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



Maalaimalar தமிழ்

.


அழகிய காதல் கதை

இரண்டு காதலர்கள் பைக்கில் பயணித்தனர்... அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அவன் அவளிடம் சொன்னான், இந்தா என்னுடைய ஹெல்மெட்டை நீ அணிந்து கொள் என்று...!
அவளும் அதனை வாங்கி அணிந்து கொண்டாள்....!
ஆனால்
அடுத்த நாள் செய்தி பேப்பரில் ''2 பேர் பயணம் செய்த பைக் லாரியில்
மோதியதில் ஆண் பலி. பெண் ஹெல்மெட் அணிந்து கொண்டதால் சிறிய காயக்களுடன் உயிர் தப்பினார்''...
அவளோ அவனுடைய கல்லறைக்கு முன்பு நின்று கண்ணீர் விட்டு மூச்சுத் திணற திணற அழும் போது அவள் தெரிந்து கொள்ளாத ஒன்று....
''வேகக்கட்டுப்பாடை இழந்தது மட்டுமல்லாமல் பைக்கின் ப்ரேக் உடைந்து இருந்ததும்''...!
இதை அறிந்து தான் அவன் தன உயிரை பொருட்படுத்தாமல் தன் காதலிக்கு Helmet கொடுத்திருக்கிறான்.


காதல் உயிரை விட மேலானது!!!
சில சமயங்களில் உயிருடன் வாழ்கின்றது...
சில சமயம் இறந்தும் வாழ வைக்கின்றது...!
இது தான் உண்மையான காதல்...!!!

Link to comment
Share on other sites

கதம்பம்

.

காதலியைப்

பிரிந்து போர்க்களத்தில்

இருந்த ஒரு ராணுவ

வீரனுக்கு அவன்

காதலியிடமிருந்து ஒரு கடிதம்... ‘

நீ சென்ற

பிறகு எனக்கு ஒரு Boy fiend

கிடைத்தான். அவனைத்தான்

நான் மணக்கப் போகிறேன்.

அதனால், உன்னிடம் உள்ள என்

புகைப்படத்தை திருப்பி அனுப்பிவிடு’

என்று அதில்

எழுதியிருந்தது...

அவளுக்கு பதிலடி கொடுக்க

நினைத்த அவன், சக வீரர்களின்

காதலி, தோழிகள் என்று பல

பெண்களின்

புகைப்படங்களையும்

சேகரித்து,

அவற்றோடு அந்தக்

காதலியின்

புகைப்படத்தையும்

சேர்த்து அனுப்பினான்.

கூடவே, ஒரு கடிதம்…

‘உங்கள் கடிதம் கிடைத்தது.

எவ்வளவு யோசித்தும் உங்கள்

முகம் எனக்கு ஞாபகம்

வரவேயில்லை. அதனால்

நான் இதுவரை சந்தித்த

எல்லா பெண்களின்

புகைப்படத்தையும்

அனுப்பி உள்ளேன். உங்கள்

படத்தை எடுத்துக் கொண்டு,

மற்றதை திருப்பி அனுப்பி விடவும்!’’

நம்மைப் காரணமின்றி புறக்கணிப்பவர்களுக்கு சரியான

தண்டனை தானே ?

Link to comment
Share on other sites

dinakaran daily newspaper

·

.

ஒரு இளம் தம்பதி... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந் தார்கள்.

வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.

ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள

முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.

ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன.

ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை...

இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி

இருந்த பாறையில் ஏறினர்.

உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின. உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி

கரங்களைப் பற்றிக் கொண்டனர். வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...

அப்போது, மிகப் பெரிய சப்தம்... திரும்பிப் பார்த்தார்கள்.

இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.

ஒருவரும் தப்பவில்லை! இவர்கள் இருவரைத் தவிர...

பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்.

குயிலோசை இல்லை! மான்களும் மயில்களும் ஒடுங்கி

நின்றிருந்தன. வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி

ஓடின.

இளம் தம்பதி, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ? ஊகிக்க முடிகிறதா...?

சவாலான கேள்வி...! 100% உங்கள் யூகம் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

அவர்கள் அந்த பேருந்தில் இருந்து இறங்கி இருக்காமல்

பயணித்திருந்தால்...

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

சில நிமிடங்களுக்கு முன்னரே பேருந்து அந்த இடத்தைக் கடந்திருக்கும். பாறை விழும் பேராபத்தில் இருந்து

அனைவரும் தப்பி இருப்பார்கள்.

.

.

.

.

.

.

.

எதிர்மறையான சிந்தனை உங்களுக்குத் தோன்றி இருந்தால்... நீங்கள் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆல்வேஸ் திங்க் பாஸிடிவ்

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

அரண்மனையில் ஒரு போட்டி!

விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.

அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,

"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"

"இல்லை..."

"பின்னே... 10 கிராமங்களா?"

"ப்ச்! வேண்டாம்..."

"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."

"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!"

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

ஆண்கள் கவனத்திற்கு:

===============

(மனைவியுடன் பொது இடங்களுக்கு செல்லும்போது உஷார்.)

ஒரு கணவனும் மனைவியும் லிப்ட் ல 10 வது மாடியிலிருந்து கீழே வந்து் கொண்டிருக்கிறார்கள். 5வது மாடியில் அழகான இளம்பெண் ஒருத்தி லிப்ட் ல ஏறி அந்த கணவன் பக்கத்தில் நிற்க, அவன் அவளின் அழகில் மயங்கி ஜொள் விடுகிறான்.

சிறிது நேரத்துக்குப்பின் அவள் இவனது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு "இனி இப்படி செய்தால் செருப்பு பிஞ்சிரும்" னு சொல்லிட்டு அவனிடமிருந்து விலகி நிற்கிறாள்.

இவனுக்கோ தன் மனைவி முன்னிலையில் அடிவாங்கிய அவமானம். லிப்ட் ல இருந்து இறங்கி வெகுநேரமாகியும் மனைவியிடம் பேச வெட்கி வாயடைத்தான். வீட்டிற்கு நடக்கிறார்கள்.

மனைவி : ஏங்க அதையே நினைச்சிகிட்டு. விடுங்க. ஏதாவது பேசிட்டு வாங்க.

கணவன் : இல்லடி, நான் லிப்ட் ல...

மனைவி : அட, அத தான் விடுங்க னு சொன்னேன். நீங்க ஜொள் விடுறத பொறுக்காம நான்தான் அவ இடுப்பைக் கிள்ளுனேன்.

கணவன் : (மீண்டும் வாயடைத்தான்)

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரிலாக்ஸ் ப்ளீஸ்

·

.

நடைபாதை…ஓர் இளைஞன். கையில் பாட்டில்.

”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான்.

நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்…

சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான்.

“அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?”

”சிறையிலே இருந்தேன்!”

”ஏன்?”

”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!”

”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!”

”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.”

”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?”

“அது உங்கள் நம்பிக்கை! நம்பிக்கை தான் வாழ்க்கையின் உந்து சக்தி, மருந்து மாத்திரை அல்ல‌!”

படித்ததில் ரசித்தது.

படித்தவர் எல்லோரும் அறிவாளிகளுமல்ல

படிக்காதோர் எல்லோரும் முட்டாள்களுமல்ல!

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

"நான் எந்த

பரிசு வென்றாலும்

அதை அப்படியே "அகரம்"

Foundationக்கு கொடுத்துவிடுவேன்" என்றாள்

அனுஷ்யா (தமிழர்)

"நான் பரிசாக பெற்ற

ஒரு கிலோ தங்கத்தை அப்படியே ஈழத்தில்

உள்ள

அநாதை குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்"

என்றாள்

ஜெசிகா (ஈழத்தமிழர்)

"எனக்கு கிடைத்திருக்கும் இந்த வீட்டில்

(70 லட்சம்) என்

பெற்றோருடன்

சந்தோஷமாக

இருப்பேன்" என்கிறாள்

கர்நாடகாவை சேர்ந்த

ஸ்பூர்த்தி

‪#‎இது‬ தான் தமிழனுக்கும்

திராவிடனுக்கும்

உள்ள வித்யாசம்- எங்கள்

தமிழினத்தில் பிறந்த

குழந்தைகளும் கூட

பெருந்தன்மை மிக்கவர்கள்.

- சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.

உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..

“தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..”

________________________________________________

ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி.

அவராலே செய்யமுடியலேன்னா…..” நேரம் இல்லே..”

_________________________________________________

எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா…” முட்டாள்தனம்”

அவர் பண்ணினா..” அவரும் மனுஷந்தானே..கடவுளா..?”

__________________________________________________

நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்”

அவர் செஞ்சா..” முன்னுதாரணம்”

_________________________________________________

நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா..”பிடிவாதம்”

அவர் அப்படி நெனைச்சா…” கொள்கையில் உறுதி..”

__________________________________________________

நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா..” காக்கா பிடிக்கறீங்க.”

அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா..” ஒத்துழைப்பு..பணிவு”

_________________________________________________

நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா..” ஊர் சுத்தறீங்க”

அவர் இருந்தா.. ” பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார்..”

_________________________________________________

நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க”

அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்..”

__________________________________________________

என்ன உலகமடா இது..???? gasp emoticon gasp emoticon

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

dinakaran daily newspaper

.

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.

ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், 'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?' என்று கேட்டார்.

'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.

அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டார். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.

முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், 'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'… என்று கேட்டார்.

அதற்கு சிற்பி, 'வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்.

கடைக்காரர் வியந்தார்.

ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!' என்றார்.

நீதி: தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய், ஒவ் வொருவரும் நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.

உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா..

“தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..”

________________________________________________

ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி.

அவராலே செய்யமுடியலேன்னா…..” நேரம் இல்லே..”

_________________________________________________

எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா…” முட்டாள்தனம்”

அவர் பண்ணினா..” அவரும் மனுஷந்தானே..கடவுளா..?”

__________________________________________________

நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்”

அவர் செஞ்சா..” முன்னுதாரணம்”

_________________________________________________

நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா..”பிடிவாதம்”

அவர் அப்படி நெனைச்சா…” கொள்கையில் உறுதி..”

__________________________________________________

நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா..” காக்கா பிடிக்கறீங்க.”

அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா..” ஒத்துழைப்பு..பணிவு”

_________________________________________________

நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா..” ஊர் சுத்தறீங்க”

அவர் இருந்தா.. ” பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார்..”

_________________________________________________

நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க”

அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்..”

__________________________________________________

என்ன உலகமடா இது..???? gasp emoticon gasp emoticon

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

 

இதைத்தான் நான் மக்களிடம் சொல்வது

படி

எப்பொழுதும் மேல் இடத்தில் இரு...

 

நன்றி  தொடருங்கள்..

Link to comment
Share on other sites

ரிலாக்ஸ் ப்ளீஸ்

.

பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்..

குழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா

குழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத் தேவையில்லை.

குழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.

உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.

கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது…

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.