Jump to content

அமெரிக்கா-கியூபா உறவு: இப்படியும் ஓர் ராஜதந்திரம்


Recommended Posts

america_cuba_2269026f.jpg
 
செயற்கை முறை கருத்தரிப்பு அமெரிக்கா-கியூபா உறவில் எவ்வாறு ஒரு புதிய சகாப்தத்தை உண்டாக்கியது?
 
அமெரிக்கா - சீனா உறவில் சிக்கல் இருந்த காலகட்டத்தில், பாண்டா ராஜதந்திரம் மற்றும் பிங்பாங் ராஜதந்திரம் ஆகிய சொற்கள் மிகவும் பிரபலமாயின. தற்போது அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையேயான புது உறவுக்கான வியப் பூட்டும் ஒரு புதிய சொல்: விந்து ராஜதந்திரம்.
 
ராஜதந்திர உத்தியில் சென்ற மாதம் ஒரு முக்கியமான சாதனை நிகழ்ந்துள்ளது. கலிஃபோர்னியச் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் கியூபா உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ் 2,245 மைலுக்கு அப்பால் உள்ள தன் மனைவியைக் கருத்தரிக்க அனுமதிக்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை உறுதிசெய்திருக்கிறது.
 
‘வாஸ்ப்’ எனப்படும் கியூபாவின் உளவு அமைப்பின் தலைவரான ஜிரார்தோ ஹெர்னான்டஸ், கடந்த வாரம் ஹொஸே மார்த்தி விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் ஹெர்னான்டஸின் மனைவி பெரீஸும் அவரை வாழ்த்தினார்கள். தொலைக்காட்சிகளில் அப்போது ஒளிபரப்பான அந்த நிகழ்வில், ஹெர்னான்டஸின் மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
 
எப்படி நிகழ்ந்தது?
 
இது எப்படி? கியூபர்கள் வியந்தார்கள். ஹெர்னான்டஸ் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருக்கிறார். அவர் 2001-ல் ‘பிரதர்ஸ் டு த ரெஸ்கியூ’ என்ற அமைப்பைச் சேர்ந்த இரு பயணியர் விமானங்களை கியூபாவின் விமானத்திலிருந்து சுட்டு, கொலைக் குற்றத்தில் ஈடுபட்டமைக்காகக் குற்றம்சாட்டப்பட்டவர். அப்போது நான்கு கியூபா-அமெரிக்கர்கள் கொல்லப்பட்டார்கள். ஹெர்னான்டஸ் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார்.
 
ஹெர்னான்டஸ் இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்த தோடு மட்டுமின்றி, அவர் மனைவியும் கியூபா உளவுத் துறைக்காகப் பணியாற்றியதன் காரணமாகச் சிறையில் இருந்த தன் கணவரைச் சந்திக்க அமெரிக்காவால் அனுமதிக்கப்படாமல் தடைவிதிக்கப்பட்டதாக கியூபா அரசு கூறியது.
 
இப்போதுதான் சிக்கல். எங்கு பார்த்தாலும் புரளி. அந்தக் குழந்தைக்குத் தந்தை யார்? ஹெர்னான்டஸ் சிறையில் இருந்த காலகட்டத்தில் அவர்கள் இருவரும் ரகசியமாகச் சந்திக்க கியூபா அரசு உதவியிருக்குமா? உண்மை என்னவோ வேறு விதமாக இருந்தது. ஹெர்னான்டஸ், தன் மனைவியின் கருத்தரிப்புக்குக் காரணம், ‘‘உயர்நிலைப் பேச்சுவார்த்தைகள்தான்’’ என்றார்.
 
ரிமோட் கன்ட்ரோல்
 
“இந்தப் பேச்சுவார்த்தைகளின் காரணமாகக் கிடைத்த பலன்களில் ஒன்று இதுதான்” என்று ஹெர்னான்டஸ் கர்ப்பமாக உள்ள தன் மனைவியின் வயிற்றைச் சுட்டிக் காட்டினார். தடவிக்கொண்டே “ரிமோட் கன்ட்ரோல் மூலமாகச் செய்ததுபோல்தான் எல்லம் நடந்தது. இருப்பினும் அனைத்தும் சுபமாகவே முடிந்தது” என்றார்.
 
காஸ்ட்ரோ மற்றும் கியூபாவின் உயர்நிலை அரசியல் மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்ட நிகழ்வில், அந்தத் தம்பதியினரும் விடுதலை செய்யப்பட்ட மற்ற உளவாளிகளும் இருந்தார்கள். அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியில் பேசும்போது ஹெர்னான்டஸ், “எல்லோரும் என்னிடம் இதுபற்றியே கேட்கிறார்கள். அவர்களுடைய பேச்சுகளையும் அனுமானங்களையும் கேட்கும்போது வேடிக்கையாக இருந்தது. உண்மையை நாங்கள் காப்பாற்ற வேண்டி அமைதியாக இருந்தோம். அனைத்தையும் முழுமையாக எங்களால் கூற முடியாது. நல்லது நடக்கக் காரணமாக இருந்தவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது.”
 
இது தொடர்பான வெளியுறவுப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தபோது ஹெர்னான்டஸின் விந்தணு சேகரிக்கப்பட்டு, கியூபாவுக்கு அனுப்பப்பட்டு, ஹெர்னான்டஸின் மனைவி பெரீஸ் செயற்கை முறையில் கருத்தரிக்க வைக்கப்பட்டார் என்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவர்கள் சிஎன்என் நிறுவனத்திடம் கூறினார்கள்.
 
பதிலுக்குப் பதில்
 
கியூபாவில் சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஆலன் கிராஸுக்கு, நல்ல சூழலை உருவாக்கித்தருவதற்கு ஈடாக அமெரிக்கா இந்த வேண்டு கோளை ஏற்றதாக அமெரிக்க நீதித் துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதி செய்தார். இரு நாட்டுச் சிறைக் கைதிகள் பரிமாற்றத்தின்போது, கடந்த மாதம் கிராஸ் விடுதலை செய்யப்பட்டார்.
 
“தன் கணவர் மூலமாகக் குழந்தை பெற விரும்பிய பெரீஸின் வேண்டுகோளை அமெரிக்கா ஏற்று, அதற்காக உதவியதை நாங்கள் உறுதி கூறுகிறோம். அவரது வேண்டு கோள் செனட்டர் லெய்ஹீயிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்தான் க்யூப சிறையில் கிராஸ் இருந்தபோது, அவரது சூழலை மேம்படுத்த வேண்டியிருந்தார்” என்று செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ரோடென்புஷ் கூறினார்.
 
க்யூபாவுடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ள லெய்ஹீயுடன் உதவிய டிம் ரைசர், ‘‘ஹெர்னான்டஸ் குழந்தை பெற்றுக்கொள்ள உதவியது, கியூபா நிர்வாகத்தினர் கிராஸை சிறையில் நல்ல முறையில் நடத்தத் துணைபுரிந்ததோடு மட்டுமின்றி, இந்த ஒரு சாதனையை நிகழ்த்த ஒரு முக்கியமான சலுகையாகவும் இருந்தது’’ என்றார்.
 
“இவர் சிறையில் இறந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இவரது மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள இது ஒன்றே சந்தர்ப்பம்” என்றும் ரைசர் சிஎன்என் நிறுவனத்திடம் கூறினார். தங்களின் பெண் குழந்தை இன்னும் இரு வாரங்களில் பிறக்கவிருப்பதாகவும் அவளுக்கு ஹீமா என்று பெயரிட உள்ளதாகவும் ஹெர்னான்டஸ் கூறினார்.
 
தி கார்டியன், தமிழில்: பா. ஜம்புலிங்கம்
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • உவரெனே சுமண தேரர், விகாரையில் இருந்து கொண்டே, இரகசியமாக, ஒரு கம்பனி நடாத்தி, அதன் டைரைக்டர் என்ற வகையில், 5.8 கோடிக்கு, ஆறு செக் கொடுத்து, 84,000kg கிலோ தேங்காய் எண்ணெய் வாங்கி வெளியால வித்து காசு எடுத்திட்டார். செக் எல்லாம் காசு இல்லாமல் திரும்பியதால், ஓடி வந்த எண்ணைய் வியாபாரிக்கு, இண்டைக்கு, நாளைக்கு எண்டு டபாய்க்க, அவர்கள் போலீசுக்குப் போனதால் கம்பி எண்ணுகிறார். பகிடி என்ன என்றால், அவ்வளவு எண்ணெயும் விகாரையை ஜெகசோதியா வைக்க வாங்கினது எண்டு சொல்லி, எங்கப்ப்பா அந்த எண்ணெய் எண்ட, அதெல்லாம் எரிச்சு முடிஞ்சுது. எண்ணைய் வித்தவருக்கு புத்தரின்ட கடாட்சம் நிச்சயம் எண்டு வேற சுத்தியிருக்கிறார், கள்ளப்பிக்கர்.
  • கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கும் மேற்பட்ட மாடுகள், ஆடுகள் பலி ! பெரும் சோகத்தில் மக்கள் By T. SARANYA 09 DEC, 2022 | 02:34 PM தற்போது நிலவி வருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள  கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பல கிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன.  இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு, ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றனர். கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும்,நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும்,  பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05 மாடுகளும், பூநகரியில் 05  மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.  அத்தோடு திருவையாறு  கிராமத்தில்  கடும் காற்று காரணமாக மரம்  முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.   கடும் குளிருடன் கூடிய  மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும்,  இன்று (09) மதியம்வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவித்துள்ள கால்நடை திணைக்களம்  இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/142633
  • நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம் பட மூலாதாரம்,DEARMOON ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகிவரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய கோடீஸ்வரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் யுசாகு மெசாவா, கடந்த ஆண்டு படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார். அமெரிக்க டிஜே ஸ்டீவ் அயோகி, கொரிய நட்சத்திரமான டாப் என்றழைக்கப்படும் சோய் சூங்-ஹ்யூன் ஆகியோர் அதிலுள்ள முதன்மையான தேர்வுகளாக அறியப்படுகின்றனர். அடுத்த ஆண்டில் திட்டமிடப்பட்ட நிலவுக்குச் செல்லும் விமானம், 1972ஆம் ஆண்டுக்குப் பிறகு மனிதர்களின் முதல் சந்திர பயணமாக இருக்கலாம்.   பஞ்சாங்கம் கிரகணத்தை துல்லியமாகக் கணிப்பதாகச் சொல்வது உண்மையா?2 டிசம்பர் 2022 விண்வெளி ரகசியங்களை அறியப்போகும் பிரம்மாண்டத் தொலைநோக்கி5 டிசம்பர் 2022 ஆர்ட்டெமிஸ்: நாசாவின் தொலைதூர சாதனையை முறியடித்த ஓரியன் விண்கலன்30 நவம்பர் 2022 முன்மொழியப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், ஒரு விண்கலம் சந்திரனை வட்டமிடுவதோடு, அதன் மேற்பரப்பிலிருந்து 200 கிமீ தொலைவு வரை நெருங்கிச் செல்லும். அந்தப் பயணம் தொடங்கியதிலிருந்து 8 நாட்களுக்குப் பிறகு அவர்கள் திரும்புவர். இருப்பினும், இந்தக் குழு பயணிக்க வேண்டிய ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டுக்கு அமெரிக்க கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இந்த விண்வெளி விமானம் பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு சுற்று பயணிப்பதற்குக் கூட இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. மே 2021இல் சோதனை ஏவுதலை முடித்த பிறகு, கடந்த 18 மாதங்களாக டெக்சாஸில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், யுசாகு மெசாவா தனது டியர் மூன் என்ற அழைக்கப்படும் குழுவில் இருப்பவர்களை அறிவிக்கும் காணொளியில் இந்தத் தாமதம் குறித்துக் குறிப்பிடவில்லை. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 அந்தக் காணொளியின் தொடக்கக் காட்சி, ஜப்பானிய தோட்டம் ஒன்றில் மெசாவா நிலவை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அதன்பிறகு குழுவின் முதல் உறுப்பினரான டிஜே ஆக்கியை அவருடைய நிகழ்ச்சி ஒன்றில் இருப்பதைப் போல் காட்டப்படுகிறது. “இந்த வாய்ப்பை என்னால் நழுவவிட முடியாது. இதற்காக என் மனம் ஏங்குகிறது,” என்று பில்போர்ட்-சார்ட்டிங் கலைஞர் அந்தக் காணொளியில் கூறுகிறார். அடுத்ததாக அறிவிக்கப்பட்ட பயணி, தினசரி விண்வெளி வீரர் என்றறியப்படும் யூட்யூபர் டிம் டாட். விண்வெளி பயணம், வானியற்பியல் தொடர்பான கல்வி வீடியோக்களுக்காக 14 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்ட அவரது சொந்த வீடியோவில், அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை நம்ப முடியவில்லை எனக் கூறுகிறார். ஸ்பேஸ் எக்ஸ் 2017ஆம் ஆண்டில் நிலவுக்கு ஒருவரை அனுப்புவதாக அறிவித்தது தான் “நான் உண்மையில் யூட்யூப்பில் காணொளிகளை உருவாக்கி வெளியிட வைத்தது,” என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,SPACEX அறிவிக்கப்பட்ட டியர்மூன் குழுவின் மற்ற உறுப்பினர்கள் தென் கொரியாவை சேர்ந்த கொரிய ராப் பாடகரும் பாய்பேண்ட் பிக் பேங் குழுவின் முன்னாள் முன்னணி பாடகர் டாப் என்றறியப்படும் சோய் சூங்-ஹ்யூன் செக் குடியரசை சேர்ந்த நடனக் கலைஞரும் நடன அமைப்பாளருமான யெமி ஏ.டி. அயர்லாந்தை சேர்ந்த ஒளிப்படக் கலைஞர் ரியானன் ஆடம். பிரிட்டனை சேர்ந்த காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் கரீம் இலியா. அமெரிக்காவை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரெண்டன் ஹால் இந்தியாவைச் சேர்ந்த நடிகர் தேவ் ஜோஷி Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 “பூமியை விட்டு வெளியேறுவது, நிலவுக்குப் பயணிப்பது போன்றவற்றில் இருக்கும் பொறுப்புகளை ஒவ்வொருவரும் அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த அனுபவத்திலிருந்து அவர்கள் நிறைய பெறுவார்கள். அவர்கள் அதை பூமிக்கும் மனித குலத்திற்கும் பங்களிக்கப் பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்,” என்று மெசாவா கூறினார். ஆன்லைன் ஃபேஷன் சில்லறை விற்பனையாளரான ஜோசோவில் தனது செல்வத்தை ஈட்டிய மெசாவா, வணிகரீதியிலான விண்வெளிப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஆண்டு ரஷ்ய ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 12 நாட்கள் பயணம் சென்றார். 2018ஆம் ஆண்டில், ஸ்பேஸ் எக்ஸ் மூலம் நிலவைச் சுற்றிப் பறக்கும் முதல் தனியார் பயணியாக அவர் பெயரிடப்பட்டார். மேலும், விண்வெளி விமானத்திலுள்ள மற்ற எட்டு பயணிகளின் செலவை தானே ஸ்பான்சர் செய்வதாகக் கூறினார். மெசாவா தனது விண்வெளி பயண டிக்கெட்டுக்கு செலுத்த ஒப்புக்கொண்ட விலை வெளியிடப்படவில்லை. ஆனால், ஈலோன் மஸ்க்கின் கூற்றுப்படி அது “நிறைய பணம்.” 2020ஆம் ஆண்டில், தனது நிலவுப் பயணத்தில் தன்னுடன் சேர்ந்துகொள்ள புதிய காதலிக்கான தேடலையும் தொடங்கினார். பிறகு “கலவையான உணர்வுகள்” காரணமாக அந்த முயற்சியை நிறுத்தினார். https://www.bbc.com/tamil/articles/c84gx420l23o
  • ஆமாம்....ஆனால் உங்களுக்கு மகிழ்ச்சி செய்தி தான் ...எனக்கும் தான்  ..சும்மா இருந்த உக்ரேனை ஏன் தாக்க வேண்டும்    ?
  • இந்து சமுத்திர கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு சட்ட மூலம் தயாரிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் By T. SARANYA 09 DEC, 2022 | 03:05 PM (எம்.மனோசித்ரா) இந்து சமுத்திரத்தில் கடலுக்கடியிலான இணைய கேபிள் பாதுகாப்பு திட்டத்திற்காக ஆசியாவில் முதலாவது சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்றது.  இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , எம்மிடம் பாரிய கடற்படையும் , விமானப்படையும் இல்லாமலிருக்கலாம். எனினும் எம்மிடம் தற்போதும் சிறியளவிலான கடற்படை கப்பல்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் சில நவீனமானவையாகும். இந்து சமுத்திர பிராந்தியத்திற்குள் எமக்குள் பலம் உள்ளது என்பதைக் காண்பிப்பதற்கு இவை போதுமானவையாகும். இதனை நாம் உறுதிப்படுத்த வேண்டும். நாம் எந்தவொரு தரப்பினரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. குறிப்பாக எவருடைய இராணுவ முன்னணிகளிலும் நாம் தொடர்புபட வேண்டிய அவசியமில்லை. எவ்வாறிருப்பினும் நாம் ஏனைய தரப்பினருடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும். அவர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்து சமுத்திரத்தின் கடற்படை சுதந்திரத்திற்காக நாம் செயற்பட வேண்டும். இதன் போது ஏனைய நாடுகளை விட அதிகமான செயற்பாடுகளை நாம் நிறைவேற்ற வேண்டியுள்ளது. இலங்கை விசேடமான நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது. ஆசியாவில் முதன் முறையாக கடலுக்கடியிலான இணைய கேபள் பாதுகாப்பு திட்டத்திற்காக சட்ட மூலமொன்றை தயாரிப்பதே அந்நடவடிக்கையாகும். 2022 ஆம் ஆண்டைப் பற்றி மாத்திரம் சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது. 2050 ஆம் ஆண்டாகும் போது எவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். எனவே தற்போது நாம் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதை மீட்டுப்பார்க்க வேண்டும். நாம் பலவீனமான அரசாக முடியாது என்பதை இலங்கை நினைவில் கொள்ள வேண்டும். அதேபோன்று பலவீனமான படைகளாகவும், பலமான பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் இருக்க முடியாது. அதன் காரணமாகவே 2050 ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு தற்போது பல்வேறு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எம்மிடம் பொருளாதார பலம் இல்லாவிட்டால் , அரசியல் பலத்தைப் போன்றே பாதுகாப்பு படை பலத்தையும் ஸ்திரப்படுத்த முடியாது என்றார். https://www.virakesari.lk/article/142648
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.