Sign in to follow this  
Nathamuni

'சின்ன வீட்டுக்கு' போகலாம், வாங்க. கவனிப்பு எக்ஸ்றாவா இருக்குமாம்!

Recommended Posts

'சின்ன வீட்டுக்கு' போக மறக்காதீங்க.. கவனிப்பு எக்ஸ்றாவா இருக்குமாம்!

 

காலை, மதியம், இரவு என மூன்று நேரமும், புத்துணர்ச்சி பெற வேண்டுமா, வயிறோடு மனசும் நெறையனுமா சின்ன வீட்டுக்கு வாங்க... இப்படி ஒரு விளம்பர பலகையை பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றும். வேற என்ன.. 'அந்த மாதிரி' விளம்பரம்தான் அப்படீன்னு தோனும். அதோட.. இதுக்கெல்லாம் விளம்பர பலகை வைத்து ஆள் பிடிக்க தொடங்கி விட்டார்களா என்ற கியூரியாசிட்டியும் எட்டிப் பார்க்கும்.


05-1420452264-chinna-veedu-s6600.jpg

 

ஆனால் உங்கள் ஆர்வத்தை அடக்கி வைக்கவும். இந்த விளம்பரம் சாட்சாத் ஒரு ஹோட்டலுடைய கைவண்ணம். ஹோட்டல் பெயர் 'சின்ன வீடு'. இப்படி ஒரு பெயரை தேர்ந்தெடுத்து ஹோட்டலுக்கு சூட்டும் அளவுக்கு யோசித்துள்ளார் என்றால் அனேகமாக ஹோட்டல் ஓனர், பாக்கியராஜ் ரசிகராகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

 

இந்த சின்னவீடு உங்களை அன்போடு வரவேற்பது திருப்பூரில். இந்த ஹோட்டலின் விளம்பர போர்டை சாலையோரத்தில் பார்க்கும் வாகன ஓட்டிகளின் கைகள் ஸ்டியரிங்கில் இருந்து நழுவுவது என்னவோ உண்மைதான். அப்புறம் என்ன...

 

திருப்பூர் பக்கம் போகும் ஒருதடவ சின்ன வீட்டுக்கு போய் வருவதுதானே. கவனிப்பு எக்ஸ்றாவா இருக்குமாமே. ஆனா.. ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, மனைவியிடமிருந்து போன் வந்தால், நான் சின்ன வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லிவிடாதீர்கள். அப்புறம், ஜென்மத்துக்கும் வீட்டு சாப்பாடு கிடைக்காது, ஹோட்டல் சாப்பாடுதான்..
 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
இது உண்மையில சின்ன வீடு சமாச்சாரம் தான்... ஹி, ஹீ   :wub:
 
என்னுடன் ஆந்திர பிரதேசத்தினை சேர்ந்த தெலுங்கு நண்பர் ஒருவர் வேலை செய்தார். நல்ல நகைசுவை மிக்க நண்பர்.
 
ஆந்திராவில், புத்தூர் என்னும் இடம் 'அந்த  மாதிரி' விடயத்துக்கு பெயர் போன இடமாம். புதுமையான ஐடியா எல்லாம் போட்டு காசு பார்ப்பார்கள்.
 
'அல்லுடு காரு' (மாப்பிளை தம்பி என்று தமிழில் சொல்லலாம்) என்பது பெரிய successful ஐடியா என்பார்.
 
அதாவது, அந்த கிராமத்துக்கு தொலை தூரத்திலிருந்து ஒருவர், அல்லுடு காரு ஆக ஒரு 10 நாள், 2 வாரம் அல்லது ஒரு மாதம் அவரது பாக்கட்டுக்கு தகுந்த மாதிரி 'புக்' பண்ணி வந்து சேருவார்.
 
அவர் வரும் வீட்டில், சினிமா பாணி, setup அம்மா, அப்பா, அவர்களது மகள் இருப்பார்கள். வீடு நல்ல வசதியாக இருக்கும்.
 
பிறகென்ன ரிலாக்ஸ் தான். 'அல்லுடு காரு' இன்னிக்கு, மட்டுனா, சிக்கினா என்று கேட்டுக் கொண்டே, மாமா சந்தைக்கு கிளம்புவார். மாமி சுடுதண்ணி தயார் பன்னுவார். அல்லுடு காருக்கு எண்னைக் குளியல் செய்ய மகள் ரெடி. அல்லுடு காரு வும், மகளும் ரூமை விட்டு வெளியே வருவது குறைவு.
 
அல்லுடு காரு, சாப்பாடு ரெடி என்று மாமி கூப்புடுவார். hot drink சாப்புடுங்க தம்பி என்று மாமனார் அன்பு பொலிவார், தண்ணியை வார்த்தபடி.... மாலை வேளை, நொறுக்கு தீனி, தின் பண்டம்: மாமியார், மகள் கைவண்ணத்தில்.... டிவி, பிடித்த படங்கள்....
 
அது, 2 வாரம் எனில் அவ்வளவு நாளும், கொடுத்த காசுக்கு value for money,  'அந்த மாதிரி ரிலாக்ஸ்' என்பார் நண்பர்.     :icon_mrgreen:   :wub:   :icon_mrgreen:
Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this