Jump to content

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை


Recommended Posts

14o6ofl.jpg

 

 

 

பெங்களூரு:கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்ய அப்பீல் மனு மீதான விசாரணை, நேற்று முதல் விறுவிறுப்பாக துவங்கியது. 'மேல்முறையீட்டு மனுவில் வாதிட, டில்லி சென்று மூத்த வழக்கறிஞரை அழைத்து வர வேண்டும் என்பதால், விசாரணையை, இரண்டு நாள் தள்ளி வைக்க வேண்டும்' என, ஜெயலலிதா வழக்கறிஞர் குமார் கோரிக்கையை, கர்நாடகா உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமாரசுவாமி நிராகரித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நான்கு பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று விசாரணைக்கு வந்தன. நீதிபதி குமாரசுவாமி, காலை, 11:00 மணியளவில், தன் இருக்கையில் அமர்ந்தார்.அப்போது, நீதிமன்ற ஹாலுக்குள், சுப்பிரமணியன் சாமி வந்தார்.

 

சுப்பிரமணியன் சாமி: இந்த வழக்கு விசாரணையில், என்னை, எதிர்தரப்பு பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நீதிபதி: உங்களுக்கும், இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்?

சு.சாமி: சென்னை உயர் நீதிமன்றத்தில், 1996ல், இவ்வழக்கை, நான் தான் தாக்கல் செய்தேன்.

நீதிபதி: நீங்கள் புகார் கொடுத்தவுடன், இவ்வழக்கு, ஊழல் தடுப்பு துறைக்கு விசாரணைக்கு சென்று விட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, அரசு வழக்கறிஞர் ஆஜராகிறார்.

சு.சாமி: உச்ச நீதிமன்றத்தில், இவ்வழக்கில், என்னையும், எதிர் தரப்பில் பார்ட்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இந்த நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யலாம் என்றனர்.

நீதிபதி: சரி, நீங்கள் மனு தாக்கல் செய்யுங்கள்.

சு.சாமி: மனு தாக்கல் செய்கிறேன் (இவ்வாறு கூறி வெளியே சென்றார்).

தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் வழக்கறிஞர் குமரேசன்: இவ்வழக்கில், எதிர்தரப்பில், மூன்றாவது பார்ட்டியாக என்னை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நீதிபதி: அன்பழகனுக்கும், இவ்வழக்குக்கும் என்ன தொடர்பு?

குமரேசன்: கடந்த, 2004ல், இவ்வழக்கு விசாரணையை, சென்னையிலிருந்து, வேறு மாநிலத்துக்கு, மாற்ற வேண்டும் என்று அன்பழகன் தாக்கல் செய்த மனுவுக்கு பின், பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, எங்களை, எதிர்தரப்பில், மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு, எழுத்து பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய, அனுமதித்தார்.

 

நீதிபதி (அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம்): பலரும் தங்களை, வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்கின்றனரே. உங்கள் கருத்து என்ன?
அரசு வழக்கறிஞர்: அவர்கள் கேட்கின்றனர். என் கருத்தை, மனுவில் தெரிவிக்கிறேன். நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

நீதிபதி: அரசு மற்றும் ஜெயலலிதா தரப்பு கருத்துகளை, 7ம் தேதி தாக்கல் செய்யுங்கள்.

 

பின், வாதம் துவங்கியது.
ஜெயலலிதா வழக்கறிஞர் குமார்: 1991 முதல், 1996 வரை, தமிழக முதல்வராக இருந்தவர்

ஜெயலலிதா. அந்த காலக் கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக, சொத்து சேர்த்ததாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, கலர், 'டிவி' வாங்கியதில், ஊழல் நடந்தது என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயலலிதா, 1996, டிசம்பர், 21ல் கைது செய்யப்பட்டு, 1997, ஜனவரி, 3ம் தேதி வரை சிறையிலிருந்தார். இதேபோன்று, சசிகலா, சுதாகரன் கைது செய்யப்பட்டனர். சசிகலா, 28 நாட்களும், சுதாகரன், எட்டு நாட்களும், சிறையிலிருந்தனர். இளவரசி கைது செய்யப்படவில்லை.

 

ஜெயலலிதா, பதவிக்கு வருவதற்கு முன், இரண்டு கோடி ரூபாயாக இருந்த சொத்து, 66.65 கோடி ரூபாயாக ஆனது. இதில், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கூட்டு சதி செய்துள்ளனர். ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் உட்பட, 32 கம்பெனிகள், ஜெயலலிதாவுக்கு சொந்தமானது. இதை, சசிகலா, சுதாகரன், இளவரசி பினாமிகளாக இருந்து நடத்தி வருகின்றனர் என்று, சென்னை ஊழல் தடுப்பு போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்களுக்கும் தொடர்புள்ளதாகக் கூறி, ஆறு கம்பெனிகளை, 'சீல்' வைத்தனர். ஜெயலலிதா, தன் போயஸ் கார்டன் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டிலிருந்த தங்க, வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; வாட்ச்களையும் கைப்பற்றினர். இவை, விதான் சவுதாவில், பாதுகாப்பு அறையில் உள்ளன.

நீதிபதி: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, மற்றவர்கள் பற்றி எடுத்துக் கூறுங்கள்.

குமார்: சசிகலா, நடராஜன் என்பவரின் மனைவி. அவர், ஒரு அரசு அதிகாரி. சுதாகரன், நாராயணசாமி என்ற பேராசிரியரின் மருமகன். நாராயணசாமி மனைவி சாந்தி. இவர், சிவாஜி கணேசனின் மகள்.

நீதிபதி: (குறுக்கிட்டு) சிவாஜி கணேசன் மகளா?

குமார்: ஆம். இளவரசி விதவை. மகன் விவேக் மீது வங்கியில் டிபாசிட் உள்ளது. அவர், மைனர். இவ்வழக்கில், 'சீல்' வைக்கப் பட்டுள்ள கம்பெனிகளில், ஜெயலலிதாவுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறுவது சரியல்ல.

நீதிபதி: தயவு செய்து, உங்கள் பெயரை கூறுகிறீர்களா?

குமார்: என் பெயர் குமார். வழக்கு விசாரணையை, 8ம் தேதி தள்ளி வைக்க வேண்டும். இரண்டு நாள்

 

அவகாசம் வேண்டும்.

 

நீதிபதி: அவகாசம் அளிக்க முடியாது.

உச்ச நீதிமன்ற உத்தரவு தெரியுமல்லவா? தினமும், வழக்கை நடத்தி, மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும்.

குமார்: அதற்குள் முடித்து விடலாம். 8ம் தேதிக்கு பின், 'வாய்தா' கேட்க மாட்டோம்.

நீதிபதி: எதற்கு, இரண்டு நாள் அவகாசம்? வாயால், எல்லாம் சொல்லி விடலாம். ஆனால், செய்வது எளிதல்ல.

குமார்: இவ்வழக்கில் ஆஜராக, டில்லி சென்று, மூத்த வழக்கறிஞரை அழைத்து வர வேண்டும்.

நீதிபதி: நீங்களே மூத்த வழக்கறிஞர். வேறு வழக்கறிஞரைத் தேடிச் செல்வதற்கு, என்ன அவசியம்? நாளை (இன்று) உங்களால் வர இயலாவிட்டால், சக வழக்கறிஞர்களை வாதிடுமாறு கூறலாம்.இவ்வாறு, வழக்கு விசாரணை நடந்தது.

 

ஆஜரானவர்கள் யார் யார்?

*அரசு தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங், முருகேஷ் மரடி; ஜெயலலிதா தரப்பில், குமார்; சசிகலா தரப்பில் மணிசங்கர்; சுதாகரன் தரப்பில் செல்வகுமார்; இளவரசி தரப்பில் செந்தில்; அன்பழகன் தரப்பில் குமரேசன், நடேசன், பாலாஜி சிங் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

*வழக்கு விசாரணை துவங்கியவுடன், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதி முன்பு நின்றனர். அதற்கு, 'என் முன்னால் கும்பலாக நிற்கக் கூடாது. வாதாடும் வழக்கறிஞர் மட்டும் எழுந்து நின்று, தன் வாதத்தை துவக்க வேண்டும். வழக்கின் குற்றப்பத்திரிகை, வழக்கு விவரங்களை சுருக்கமாகச் சொல்லுங்கள்' என்று நீதிபதி கூறினார்.

*நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியன் சாமி, துப்பாக்கி ஏந்திய, ஆறு பாதுகாவலர்களுடன் வந்தார்.

 

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1154490

Link to comment
Share on other sites

  • Replies 311
  • Created
  • Last Reply

சுப்பிரமணியன் சாமிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

 

 

புதுடில்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர் நான்காண்டு சிறை தண்டனை பெற்றிருக்கிறார். இந்த தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீது, கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், தன்னையும் வாதிட அனுமதிக்க கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி விடுத்த கோரிக்கையை நேற்று நிராகரித்த சுப்ரீம் கோர்ட், கர்நாடகா உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு அவருக்கு உத்தரவிட்டது.

 

 

சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனுவில், 'வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக, ஜெயலலிதா மீது செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது நான் தான். அந்த வழக்கில் தான் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தான் அவர் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கில் வாதிட எனக்கு அனுமதி வழங்க வேண்டும்' என, கோரியிருந்தார். சுப்பிரமணியன் சாமி தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'முதலில் நீங்கள், கர்நாடகா உயர் நீதிமன்றத்தை அணுகி, எழுத்து மூலம் உத்தரவு பெறுங்கள். அதற்குப் பிறகு, நாங்கள் எங்கள் உத்தரவை வெளியிடுகிறோம்' என்றனர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1155189

Link to comment
Share on other sites

ஒரு படத்துக்கு ஜெ., வாங்கிய சம்பளம் எவ்வளவு? இரண்டாம் நாள் விசாரணையில் 'சுவாரஸ்யம்'

 

பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான, இரண்டாம் நாள் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று நடந்தது.

 

நீதிபதி குமாரசுவாமி: வழக்கு விசாரணையை தொடரலாம்.

 

ஜெயலலிதா வழக்கறிஞர் குமார்: 1991 - -96 வரை, ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருந்தார். அப்போது, மாதத்துக்கு ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினார்.
நீதிபதி (குறுக்கிட்டு): வீட்டு வாடகை படி, பயணப்படி, கார், டிரைவர், தொலைபேசி உட்பட, ஏதாவது வசதிகளை, முதல்வர் என்ற முறையில் பெற்றிருந்தாரா?

வழக்கறிஞர்: இல்லை. மாதத்துக்கு, ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே வாங்கினார். இந்த காலக் கட்டத்தில், எந்த சொத்தும், நகையும் வாங்கவில்லை. முதல்வராவதற்கு முன்பிருந்தே, கோடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சை தோட்டம், அவரின் தாயார் சந்தியா துவங்கிய நாட்டிய பள்ளி ஆகியவற்றின் மூலமும், வங்கியில், ஜெயலலிதா வைத்திருந்த வைப்பு நிதியின் மூலம் வந்த வட்டி பணத்தின் மூலம், போயஸ் கார்டன் விரிவாக்கத்தின் போது, சில கட்டடங்களை கட்டினார்.

இதற்கான டைல்ஸ், மார்பிள்ஸ், மர சாமான்கள், மின்சார பொருட்கள் வாங்கியதற்கு, மும்பையிலிருந்து, 'பில்' கொடுத்து உள்ளனர். ஆனால், ஊழல் தடுப்பு போலீசார், இதையெல்லாம் பார்க்காமல், தங்கள் இஷ்டப்படி, பல மடங்கு அதிகமாக, விலை நிர்ணயித்து, கோடிக்கணக்கில் செலவழித்து, வீடு கட்டியதாக கணக்கு காட்டிஉள்ளனர்.
போயஸ் கார்டனில், இரண்டு மேனேஜர், ஆறு பணியாளர்கள், ஆறு டிரைவர்கள் வேலை செய்வதாகவும், இருவர், வீட்டை சுத்தம் செய்வதாகவும், இவர்களுக்கு, மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்ததாகவும், ஊழல் தடுப்பு போலீசார், மிகைபடுத்தி காண்பித்து உள்ளனர்.

நீதிபதி: '4991' என்ற எண்ணில் துவங்கும், தொலைபேசி யாருடையது? அரசுடையதா? தனியாருடையதா?

வழக்கறிஞர்: தனியார் தொலைபேசி. 1995, செப்.,7ம் தேதி, ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கும், சிவாஜி கணேசன் பேத்தி சத்ய லட்சுமிக்கும் திருமணம் நடந்தது.
இதற்காக, பெண்ணின் தாய்மாமன், ஒரு கோடி ரூபாய் செலவழித்தார். இவை அனைத்தும், செக்காக கொடுக்கப்பட்டு உள்ளது. உணவு, வரவேற்பு பந்தல், மின் விளக்குகள், கட்-அவுட் செலவை, கட்சியினர் விருப்பத்துடன் செய்துள்ளனர். இந்த திருமணத்துக்கு, 6.40 கோடி ரூபாய் செலவழித்ததாக, மிகைப்படுத்தி காட்டப்பட்டு
உள்ளது.

நீதிபதி: திருமண அழைப்பிதழ் அனுப்ப எவ்வளவு செலவானது?

வழக்கறிஞர்: 2.24 லட்சம் ரூபாய் செலவானது. 1991 - -96 காலக் கட்டத்தில், கோடநாடு எஸ்டேட்டில், சில கட்டடங்கள் கட்டப்பட்டதாக கூறுவது தவறு. இக்கட்டடங்கள், 1991க்கு முன்னரே கட்டப்பட்டது.

நீதிபதி: ஜெயலலிதா, நடிகையாக இருந்த போது, ஒரு படத்துக்கு எவ்வளவு பணம் வாங்கினார்?

வழக்கறிஞர்: இரண்டு லட்சம் ரூபாய் வாங்கினார்.

நீதிபதி: எத்தனை படங்கள் நடித்துள்ளார்?

வழக்கறிஞர்: ஏறக்குறைய, 200 படங்கள் நடித்துள்ளார். இவ்வழக்கில், ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட, ஆறு நிறுவனங்களை விற்று, அபராதத்தை செலுத்தும் படி, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்கள், 1991க்கு முன்பிருந்தே செயல்பட்டவை. இதற்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நீதிபதி: நீங்கள், எத்தனை நாள் வாதிடப்போகிறீர்கள்?

வழக்கறிஞர்: ஜெயலலிதா தரப்பில், 15 நாட்கள் வாதிட போகிறோம்.

நீதிபதி: (அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை பார்த்து) நீங்கள் எத்தனை நாள் வாதிடுவீர்கள்?

பவானி சிங்: நான்கைந்து நாட்கள்.இவ்வாறு, நேற்று விசாரணை நடந்தது.

 

அன்பழகன் மனுவுக்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பு:"முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு, மேல்முறையீட்டுமனு விசாரணையில், மூன்றாவது பார்ட்டி தேவையில்லை. நாங்களே வாதிடுகிறோம்,” என்று, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் மனுவுக்கு, அரசு வழக்கறிஞர் பவானி சிங் எதிர்ப்பு தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில், தங்களை மூன்றாவது பார்ட்டியாக சேர்த்துக் கொண்டு, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன் வாதிட்டார்.

 

இதற்கு நீதிபதி குமாரசுவாமி, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், 'உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார். 'என் கருத்தை மனுவாக தெரிவிக்கிறேன்' என்று, நேற்று முன்தினம், பவானி சிங் கூறினார்.இதையடுத்து, 'அரசு மற்றும் ஜெயலலிதா கருத்துக்களை, 7ம் தேதி (இன்று) தாக்கல் செய்ய வேண்டும்' என்று, நீதிபதி குமாரசுவாமி உத்தரவிட்டிருந்தார்.இது தொடர்பாக, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம், நேற்று நிருபர்கள் கேட்டபோது, "இந்த வழக்கு விசாரணையில், மூன்றாவது பார்ட்டி என்பது தேவையில்லை; நாங்களே வாதிடுகிறோம்; ஆட்சேபனை மனு தாக்கல் செய்வதற்கு தயாராக உள்ளேன்,” என்றார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1155252

Link to comment
Share on other sites

இது கோர்ட்டா, அரசியல் களமா?: யார் அன்பழகன்: கொந்தளித்த குமாரசாமி

 

 

பெங்களூரு : ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் தொடர்ந்து குறுக்கீடு செய்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வக்கீலை எச்சரித்த நீதிபதி குமாரசாமி, கோர்ட்டை அரசியல் களமாக பயன்படுத்த வேண்டாம் எனவும் ஆவேசத்துடன் கூறினார்.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பில் அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக ஐகோர்ட்டால் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு பெஞ்ச் மூலம் தினந்தோறும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

 

கொந்தளித்த குமாரசாமி

 

இன்று நடந்த 3-வது நாள் விசாரணையில், இவ்வழக்கில், கர்நாடக வழக்கறிஞர் அரசுதரப்பு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

 

கண்டிப்பு : வழக்கின் 3வது நாளான இன்று, அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தொடர்ந்து குறுக்கிட்டு வந்தால், கோர்ட்டில் நேரில் ஆஜராக நேரிடும். குறுக்கீடு தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும். பவானி சிங்கை மாற்ற வேண்டுமானால் அது தொடர்பாக நீங்கள் கர்நாடக அரசிடம் முறையிடுங்கள். உங்கள் அரசியலை தமிழகத்துடன் வைத்துக்கொள்ளுங்கள் இது கோர்ட், யார் அன்பழகன், அவரை நேரில் வரச்சொல்லுங்கள். அரசு தரப்பு தரப்பு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? கோர்ட்டை அரசியல் களமாக பயன்படுத்தாதீர்கள் என ஆவேசத்துடன் கூறினார்.

 

'ஜகா' வாங்கிய அன்பழகன் தரப்பு : ஜெ., வழக்கில் பவானி சிங் ஆஜராவது சட்டப்படி சரியல்ல என வாதிட்ட அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணன், நீதிபதியின் கண்டிப்பை அடுத்து , அன்பழகனுக்கு 92 வயதாவதால் அவரால் நேரில் ஆஜராக முடியாது. பவானி சிங்கை மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசிடம் முறையிட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

 

 

பவானிசிங் ஒப்புதல் : பவானி சிங்கிடம் விசாரணை நடத்திய நீதிபதி குமாரசாமி, அரசு வழக்கறிஞராக ஆஜராக அரசாணை உள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பவானிசிங், ஜெ., வழக்கில் ஆஜராக அரசு எனக்கு உத்தரவிடவில்லை. தமிழக ஊழல் ஒழிப்புத்துறையின் உத்தரவின் பேரிலேயே நான் ஆஜரானேன் என தெரிவித்தார். பவானி சிங்கின் இந்த ஒப்புதலை அடுத்து, அன்பழகனின் புகாரை மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1155874

Link to comment
Share on other sites

ஜெ.,வக்கீலுக்கு நீதிபதி அறிவுரை
 

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல் முறையீடு செய்துள்ளனர். இந்த மேல்முறையீட்டின் விசாரணை நான்காம் நாளாக பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. இன்றைய விவாதத்தின்போது, 'ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது இந்த வழக்கை போட்டதே தவறு' என ஜெ., வக்கீல் குமார் வாதாடினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசுவாமி, 'அப்படி என்றால் அப்போதே நீங்கள் மேல்முறையீடு செய்திருக்கலாமே,' என்று கேட்டார். அதற்கு, மேல்முறையீடு செய்யவில்லை என குமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நீதிபதி, 'அப்போது நீங்கள் மேல்முறையீடு செய்துள்ளீர்கள், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஒரு மூத்த வக்கீல், கோர்ட்டிற்கு தவறான தகவலை கொடுக்கலாமா' என கடிந்து கொண்டார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1156725

Link to comment
Share on other sites

அரசு வக்கீலை தமிழக அரசு எப்படி நியமிக்க முடியும்? அன்பழகன் தொடர்ந்த வழக்கில் கர்நாடக அரசிற்கு நோட்டீஸ்

 

 

பெங்களூரு: 'பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கு மீதான, மேல் முறையீட்டு வழக்கில் வாதாட, அரசு வழக்கறிஞரை, தமிழக அரசு எப்படி நியமிக்க முடியும்,' என, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், வழக்கறிஞர், நாகேஷ் கேள்வி எழுப்பினார்.

 

'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கு மீதான மேல்முறையீட்டு வழக்கில், அரசு வழக்கறிஞராக, பவானி சிங் தொடரக் கூடாது' என, தி.மு.க., பொதுச் செயலர், அன்பழகன் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனு, நேற்று மதியம் 12:00 மணிக்கு, நீதிபதி அப்துல் நசீர் முன், விசாரணைக்கு வந்தது. அன்பழகன் தரப்பில், வழக்கறிஞர் நாகேஷ் வாதம்: அரசு வழக்கறிஞரை நியமனம் செய்வதற்கு, கர்நாடக அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. கர்நாடகாவில் நடக்கும் வழக்கிற்கு, சென்னை ஊழல் தடுப்பு போலீசாரோ, தமிழக அரசோ, அரசு வழக்கறிஞரை நியமிப்பதற்கு, சட்டத்தில் இடமில்லை.

 

தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு நடக்கிறது. அக்கட்சியை சேர்ந்தவர் மீது, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு மனு தொடர்பான வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. இதில், அரசு வழக்கறிஞரை, அ.தி.மு.க., அரசு நியமனம் செய்வது, எந்த விதத்தில் பொருத்தமாகும்; இது சட்டத்துக்கு விரோதமானது.

கடந்த 2004ல், உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா உள்ளிட்ட, 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கை, பெங்களூருவுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்பின், அரசு வழக்கறிஞரை நியமனம் செய்வது உட்பட, அனைத்துக்கும், கர்நாடக அரசே பொறுப்பு. இதை, உச்ச நீதிமன்றமும் தெளிவாக குறிப்பிட்டு உள்ளது.

'கர்நாடக அரசு, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனையின் படி, அரசு வழக்கறிஞரை நியமனம் செய்ய வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது, பவானி சிங், அரசு வழக்கறிஞராக தொடர்வது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில், தற்போது நடந்து வரும் வழக்கிற்கு, கர்நாடக அரசு, வேறு அரசு வழக்கறிஞரை நியமிப்பது தான் முறையானது.

 

 

தற்போதுள்ள பவானி சிங்கிடம் நேர்மையில்லை. குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்கு சாதகமாக நடந்து கொண்டவர். இதை, நீதிபதி குன்ஹா, பலமுறை சுட்டிக்காட்டி கண்டித்துள்ளார். இதற்காக, நீதிபதி குன்ஹா, அபராதமும் விதித்துள்ளார். எனவே, இவரை, அரசு வழக்கறிஞராக நீடிக்க அனுமதிக்க கூடாது. இவ்வாறு, நாகேஷ் வாதாடினார்.

நீதிபதி அப்துல் நசீர், இது தொடர்பாக கர்நாடக அரசு, அரசு வழக்கறிஞர் பவானி சிங், சென்னை ஊழல் தடுப்பு போலீசார் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டார். இவ்வழக்கு, வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1156844

Link to comment
Share on other sites

நான் என்ன வில்லனா? பவானி சிங் வேதனை:ஜெ., அப்பீல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

 

 

ஜன 10,2015 00:30

பெங்களூரூ:'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தமிழில் இருந்த சில ஆவணங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க, தமிழ் தெரிந்த, ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை எனக்கூறி,கர்நாடகா மொழி பெயர்ப்புத் துறையினர், திருப்பி அனுப்பி விட்டனர்' என்ற, ஜெ., வழக்கறிஞர் குமாரின் வாதத்தால் கோபமடைந்த, நீதிபதி குமாரசுவாமி, மொழிபெயர்ப்பு துறை இயக்குனர் மீது அதிருப்தி தெரிவித்தார். விசாரணைக்கு பின்னர் பவானி சிங் நிருபர்களிடம், தன்னை தமிழகத்தில் வில்லன் என கூறுகின்றனர் என்றார்.

 

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணை, ஐந்தாவது நாளாக நேற்று, கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் சிறப்புநீதிமன்றத்தில் நடந்தது.நீதிபதி குமாரசுவாமி (இருக்கையில் அமர்ந்தவுடன்) ஜெயலலிதா வழக்கறிஞர் குமாரை வாதிட அழைத்தார்.

ஜெ., வழக்கறிஞர் குமார்: ஜெயலலிதா மீது சுமத்தப்பட்ட புகாரை, அப்போதைய அரசு, தனி கவனத்துடன் விசாரித்தது. இவ்வழக்கை, விசாரணை அதிகாரி நல்லம்மா நாயுடு விசாரித்து, எப்.ஐ.ஆர்., போட்டார். இதற்காக, கூடுதல் எஸ்.பி.,யாக இருந்த அவருக்கு, எஸ்.பி., பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 2006ல், மீண்டும், தி.மு.க., ஆட்சி வந்தபோது, ஓய்வு பெற்றிருந்த அவருக்கு, இவ்வழக்கை விசாரிக்க, 'ஆபீஸர் ஆன் ஸ்பெஷல் டூட்டி' என்ற பதவி அளிக்கப்பட்டது.

 

அதன்பின், தன் கீழ் பணி செய்யும் அதிகாரிகளிடம், இவ்வழக்கை விசாரணை செய்யுமாறு, வாய் மொழி உத்தரவிட்டார். விசாரணைக்கு, 150 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்; 70 இடங்களில், பலர் ரெய்டு நடத்தினர்.

 

நீதிபதி: இதில் என்ன தவறு. ஒருவரே, எப்படி அனைத்து பகுதியிலும் ரெய்டு நடத்த முடியும்?

ஜெ., வழக்கறிஞர்: எஸ்.பி.,யே, எப்.ஐ.ஆர்., பதிவு செய்தது தவறு.

நீதிபதி: எஸ்.பி., எப்.ஐ.ஆர்., பதிவு செய்யக் கூடாது என்று, எந்தசட்டத்தில் கூறியுள்ளது?

ஜெ., வழக்கறிஞர்: விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் தான், எப்.ஐ.ஆர்., பதிவுசெய்வது வழக்கம்.

நீதிபதி: சில நேரங்களில், எஸ்.பி.,யும், எப்.ஐ.ஆர்., பதிவுசெய்யலாம்.

ஜெ., வழக்கறிஞர்: தன் கீழ் பணிபுரியும் அதிகாரி, சரியாக பணிபுரியவில்லையென்று கருதினால், அனைத்து வேலைகளையும் அவரே செய்ய வேண்டும். இது போன்ற, எத்தனையோ வழக்குகள், நாட்டில் நடந்து வருகின்றன. இந்த வழக்கில் மட்டும், அப்போதைய அரசு, தனி கவனம் செலுத்தி உள்ளது.

 

நீதிபதி: அப்போது, சட்டசபையில் உங்கள் கட்சி (அ.தி.மு.க.,) எம்.எல்.ஏ.,க்கள் இல்லையா?
இதற்கு, ஜெ., வழக்கறிஞர் சொல்வதற்குள், அன்பழகன் வழக்கறிஞர் சரவணா, எழுந்து, "எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர்,” என்றார்.

ஜெ., வழக்கறிஞர்: எம்.எல்.ஏ.,க்கள் நான்கு பேர் இருந்தனர். சட்டசபையில், எதிர்க்கட்சி என்று ஏற்க முடியாது என்று கூறிவிட்டனர். அரியானா முன்னாள் முதல்வர் பஜன்லால் மீதான ஊழல் வழக்கில், தொடரப்பட்ட, எப்.ஐ.ஆர்., முறையாக பதிவு செய்யவில்லையென்று, உச்ச நீதிமன்றத்தில், அவர் தரப்பில் வாதாடினார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவரை விடுதலை செய்தது. ஜெயலலிதா வழக்கில், அடிப்படையே தவறாக உள்ளது.

தமிழிலுள்ள சில ஆவணங்களை, ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்வதற்கு, தமிழ் தெரிந்த, மொழி பெயர்ப்பாளர்கள் யாருமில்லை என்று கூறி, அந்த ஆவணங்களை திருப்பி அனுப்பி விட்டனர்.

நீதிபதி (கோபத்துடன்): மொழி பெயர்ப்புத் துறை இயக்குனருக்கு, 'பிடிவாரன்ட்' அனுப்ப வேண்டுமா? அவர், இங்கு வந்து, சரியான விளக்கம் அளிக்க வேண்டும். அனைத்து மொழியிலுள்ள ஆவணங்களையும், ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டியது, அவர்களின் கடமை.

 

ஜெ., வழக்கறிஞர்: ஜெயலலிதா தரப்பில், வரும் 12ம் தேதி, மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் வாதிடுவார்.

நீதிபதி: அவர்,சென்னையை சேர்ந்தவரா?

ஜெ., வழக்கறிஞர்:டில்லியை சேர்ந்தவர். இன்று (நேற்று) பிற்பகல், விசாரணை தேவையில்லை; வரும் திங்கட்கிழமை விசாரணையை வைத்துக் கொள்ளலாம்.

நீதிபதி (வழக்கறிஞர் சரவணாவை பார்த்து): நீங்கள் என்னசொல்கிறீர்கள்?

சரவணா: 12ம் தேதி வைத்துக் கொள்ளலாம்.

நீதிபதி: அடுத்த விசாரணை, 12ம் தேதி நடக்கும்.இவ்வாறு, நேற்றைய விவாதம் நடந்தது.

 


நான் என்ன வில்லனா? பவானி சிங் வேதனை

 

:
விசாரணை முடிந்த பின், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை, நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்.

நிருபர்கள்: தமிழகத்தில், நீங்கள் தான் ஹீரோ.

பவானி சிங்: இல்லை; என்னை வில்லன் என்று கூறுகின்றனர். சில நேரங்களில், இவ்வழக்கை விட்டு விட்டு சென்று விடலாம் என்று தோன்றுகிறது. தமிழக ஊழல் தடுப்பு போலீசார், எனக்கு சம்பளம் கொடுக்கின்றனர். அவர்கள் தரப்பில், நான் வாதாடுகிறேன். கர்நாடக அரசு, அரசு வழக்கறிஞரை நியமிக்கவில்லையென்று, என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். கர்நாடக சட்டத் துறை அமைச்சரை கேளுங்கள்.

நிருபர்கள்: வழக்கில், அரசு தரப்பில் ஆஜராகக் கூடாது என்று தீர்ப்பு வந்தால், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வீர்களா?

பவானி சிங்: அப்படியொரு தீர்ப்பு வந்தால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேனா என்பது குறித்து, எதுவும் கூற விரும்பவில்லை.கர்நாடக உயர் நீதிமன்றத்தில், ஜாமின் மனு மீது, ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்கின்றனர். அப்போது, இரு மனுக்கள் விசாரணைக்கு வந்தது. தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென்று வந்த மனுவுக்கு மட்டும், ஆட்சேபனை தெரிவித்தேன். மேல்முறையீட்டு மனு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக, நானே வாதிட வேண்டுமென்ற பிடிவாதம் எதுவும் எனக்கில்லை.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1157607

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ. தரப்பு வக்கீல் மாற்றம்! மூத்த வழக்கறிஞர் நாகேஷ்வர ராவ் ஆஜர்

 

பெங்களூரு: கர்நாடக ஹைகோர்ட்டில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் ஆஜராகி வாதிட தொடங்கியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ. தரப்பு வக்கீல் மாற்றம்! மூத்த வழக்கறிஞர் நாகேஷ்வர ராவ் ஆஜர் கடந்த 5ம் தேதி தொடங்கிய விசாரணை தொடர்ந்து தினமும் நடை பெறுகிறது. இதுவரை ஜெயலலிதா தரப்பில், வக்கீல் குமார் மேல் முறையீட்டு மனு குறித்து வாதாடி வந்தார்.

 

 

இந்நிலையில் இன்று காலை, நீதிபதி குமாரசாமி முன்னிலையில், 6வது நாளாக வாதம் தொடங்கியது. ஆனால் ஜெயலலிதா தரப்பில் குமாருக்கு பதிலாக, நாகேஷ்வரராவ் ஆஜராகினார். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான நாகேஷ்வரராவ், இந்த வழக்கில் முதல்முறையாக ஆஜராக தொடங்கியுள்ளார். குமாரின் வாதத்தைவிட நாகேஷ்வரராவ் சிறப்பான வாதத்தை முன்னெடுத்து வைப்பார் என்ற நம்பிக்கையில் ஜெயலலிதா தரப்பு அவரை வரவழைத்துள்ளது. நாகேஷ்வரராவ் இன்று வாதிடுகையில் "ஜெயலலிதா தனது வருமானத்துக்கு இதுவரை சரியாக கணக்கு காட்டி வரி செலுத்தி வருகிறார்.

 

வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கீழ் கோர்ட்டில் வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பான ஆவணங்கள் முறையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும்" என்று வாதாடினார். இந்த வழக்கில், வழக்கம்போல, அரசு தரப்பில், பவானி சிங் ஆஜர் ஆனார். இவரை அரசு வக்கீல் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு வக்கீலை நியமிக்க வேண்டும் என்று அன்பழகன் சார்பில் கர்நாடக அரசுக்கும், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/nageswara-rao-appearing-jayalalithaa-218842.html

Link to comment
Share on other sites

க.அன்பழகன் என்ன வழக்கறிஞரா?- ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட் கேள்வி
 

 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது, அன்பழகன் என்ன வழக்கறிஞரா? என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு கேள்வி எழுப்பியது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உதவியாக திமுகவை மூன்றாம் தரப்பாக சேர்த்துக்கொள்ள கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை எதிர்த்து ஜெயலலிதா மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர்.

 

இது தொடர்பான விசாரணையின்போது, அன்பழகன் சட்டத்துக்கு முன் வாதிட முடியுமா என்று நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

“அவர் (அன்பழகன்) வழக்கறிஞரா? ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் சட்டரீதியாக வாதிட அவருக்கு பயிற்சி இருக்கிறதா? இது குறித்து அவர் ஆய்வு எதுவும் மேற்கொண்டுள்ளாரா? இது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மேலும், சிறப்பு அரசு வழக்கறிஞருக்கு உதவியாக கட்சி சார்பாக தலையிட அன்பழகனை அனுமதிப்பது சட்டத்திற்கு புறம்பானது.” என்றார் நீதிபதி.

 

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு 7-வது நாளாக விசாரணையைத் தொடர்ந்தது, ஜெயலலிதா வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ், சிறப்பு விசாரணை நீதிமன்றம் பல தீர்ப்புகளை கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது என்றும், பல்வேறு வருமான வரித்துறை உத்தரவுகளை விசாரணை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்றும், வருவாய் மற்றும் செலவினங்கள் பற்றி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ஒப்புக் கொண்டுள்ளது பற்றியும் முந்தைய தீர்ப்பு கண்டு கொள்ளவில்லை என்றும் வாதிட்டார்.

 

மேலும், 1991-96-ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதா சொத்துக்களை குவித்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என்றும், சொத்துக்களை சட்ட ரீதியாகவே அவர் வாங்கியுள்ளார் என்றும் வாதாடினார்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6785357.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஜெ. அப்பீல் வழக்கு: பவானிசிங்கை மாற்றும் திட்டமே இல்லை - கர்நாடக சட்ட அமைச்சர்

 

 

பெங்களூரு: சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜராகும் அரசு வழக்கறிஞரை மாற்றும் எண்ணம் இல்லை என்று கர்நாடக சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா தெரிவித்தார். ஜெ. அப்பீல் வழக்கு: பவானிசிங்கை மாற்றும் திட்டமே இல்லை - கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நடந்து வருகிறது.

 

 

இந்நிலையில் இவ்வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக கூடாது, அவரது பதவிக்காலம் கீழ் கோர்ட்டோடு முடிந்துவிட்ட நிலையில், அவரே பணியில் தொடருவது சரியில்லை என்று கூறி திமுக பொருளாளர் அன்பழகன், கர்நாடக தலைமை நீதிபதிக்கும், கர்நாடக அரசின் தலைமைச் செயலருக்கும் கடிதம் எழுதியிருந்தார். ஹைகோர்ட்டில் ரிட் மனுவும் தாக்கல் செய்தார். இந்நிலையில், பவானிசிங்கை அரசு வக்கீல் பதவியில் இருந்து மாற்றிவிட்டு வேறு ஒரு வக்கீலை நியமிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

 

ஆனால் இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறுகையில், "அரசு வக்கீலை மாற்றும் எண்ணம் கர்நாடக அரசுக்கு இல்லை. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம்தான் அதுபற்றி முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக அரசின் அதிகார வரம்புக்குள் இல்லை. அது முற்றிலும் உச்சநீதிமன்றம் சார்ந்த வழக்காகும்" என்றார் அவர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayaalithaa-case-no-proposal-replace-special-public-prosecutor-karnataka-minister-218899.html

Link to comment
Share on other sites

ஜெ. சொத்துகளை மதிப்பிட்டவர்கள் ரசீதுகளை கிழித்தது ஏன்? - கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் கேள்வி
 

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் சொத்துகளை மதிப்பீடு செய்தவர்கள் அதனை ஆதாரங்களுடன் நிரூபிக்கவில்லை. மாறாக அதன் ரசீதுகளை கிழித்துப் போட்டது ஏன் என்று அவரது வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத் துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னி லையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

 

ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ், கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், வழக்கறிஞருமான ஆர்.பசன்ட், மூத்த வழக்கறிஞர் பி.குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் ஆஜராகின‌ர். வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் மூன்றாவது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார். அப்போது அவர் வாதிட்டதாவது:

சொத்துக்குவிப்பு வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையின் போது, ஜெயலலிதாவின் சொத்துகளை மதிப்பிட 2 குழுக்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அமைத்தனர். இந்த அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கதவு எண் 31 மற்றும் 36 போயஸ் கார்டன் வீடு, அதிலிருந்த அலங் காரப் பொருட்கள், மின் சாதனங் கள், சலவை கற்களை மதிப்பீடு செய்தனர்.

 

இதேபோல ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தில் உள்ள ஜி.டி.மெட்லா கட்டிடத்தையும், அங் குள்ள பொருட்களையும் மதிப்பீடு செய்தனர். இந்த இரு சொத்துகளும் சுமார் ரூ.13 கோடி மதிப்புள்ளவை என்று கூறியுள்ளனர். ஆனால் இதற்காக எத்தகைய ஆதாரங் களையும் தாக்கல் செய்யவில்லை. அப்போதைய சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு, பொருட்களின் விலைப் பட்டியலை தோராயமாக தயாரித் துள்ளனர்.

 

இதற்கான ஆதாரத்தை மதிப் பீட்டுக் குழுவில் இடம்பெற்ற பொறியாளர்கள் செந்தில், திருத்துவராஜ், ஜெயபால் ஆகியோ ரிடம் குறுக்கு விசாரணை செய்த போது, “பொருட்களின் விலை தொடர்பாக பெறப்பட்ட ரசீதுகளை கிழித்துப் போட்டதாக தெரிவித் துள்ளனர். உண்மையான ஆதாரத் துடன் மதிப்பை நிரூபிக்க வேண்டிய ரசீதுகளை கிழித்து போட்டது ஏன்?

போயஸ் கார்டன் வீடு, ஹைதாரபாத் திராட்சை தோட்டம் தொட‌ர்பான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர் பாக ஜெயலலிதா வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளார். அதை வருமானவ‌ரி தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டு சான்று அளித் துள்ளது.

 

வருமானவரி தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தபோது, அவர்களுடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன் மூலம் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு தொடர்பாக வருமான வரி தீர்ப்பாயத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற‌ம் அதனை கவனத்தில் கொள்ளாதது ஏனோ தெரிய வில்லை. இவ்வாறு நாகேஸ்வர ராவ் வாதிட்டார்.

 

பொங்கல் விடுமுறை

இதையடுத்து ஜெயலலிதா தரப்பு மற்றொரு வழக்கறிஞர் பி.குமார், “பொங்கல் திருநாளை யொட்டி வியாழக்கிழமை நீதி மன்றத்துக்கு விடுமுறை அளிக் கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் அனைவரும் சென்னைக்கு செல்வதால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும்” என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6789732.ece

Link to comment
Share on other sites

ஜெ., வழக்கில் பவானி சிங்: அன்பழகன் மனு தள்ளுபடி

 

பெங்களூரு: 'தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அரசு தரப்பில், வழக்கறிஞர் பவானி சிங் ஆஜராகக் கூடாது' என, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு விசாரணையில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகக் கூடாது என, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி அப்துல் நஸீர் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அன்பழகன் மனுவுக்கு, பவானி சிங் வழக்கறிஞர் திவாகர் செபாஸ்டின், சென்னை ஊழல் தடுப்பு போலீஸ் வழக்கறிஞர் மஞ்சுநாத் ராவ் எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகா அரசு தரப்பில், பவானி சிங் மீது, சில குற்றச்சாட்டுகள் இருப்பதால், அதை பரிசீலித்த பின், முடிவெடுக்க முடியும் என, அரசு அட்வகேட் ஜெனரல் ரவிவர்மகுமார் கூறியிருந்தார்.

 

முடிவில், நீதிபதி அப்துல் நஸீர், அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்றுவதால், வழக்கில் தாமதம் ஏற்படலாம். எனவே, இவ்விஷயத்தில், வழக்கை நடத்தி வரும் சிறப்பு நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இது குறித்து, விசாரணை செய்ய, சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்ப, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கிறேன் என, கூறியிருந்தார். இந்நிலையில், நீதிபதி அப்துல் நசீர் பரிந்துரை குறித்து, ஆய்வு செய்த, கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வஹேலா, ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, மூன்று மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால், கூடுதலாக, இவ்வழக்கை விசாரிக்க, நீதிபதி குமாரசாமிக்கு, அவகாசம் இருக்காது. எனவே, இம்மனுவை மட்டும், நீதிபதி ஆனந்த பைர ரெட்டி விசாரிப்பார் என்று, அவரது நீதிமன்ற அறையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கிடையே அன்பழகன் மனு, நேற்று, பிற்பகல், 3:00 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

 

 

அன்பழகன் வழக்கறிஞர் நாகேஷ்: அரசு வழக்கறிஞர் பவானி சிங் நியமனம், சட்டத்துக்கு புறம்பானது. தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின், முன்னாள் முதல்வருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனுவில், அதே தமிழக தலைமைச் செயலர் உத்தரவின் பேரில், ஊழல் தடுப்பு போலீஸ் இயக்குனர், பவானி சிங்கை நியமித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் முதல்வருக்கு எதிராக, அவர், எப்படி வாதிடுவார். பவானி சிங் ஆஜரானால், நீதி கிடைக்காது. கடந்த, 2004ல், தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, இவ்வழக்கு அங்கு நடந்தால், நீதி கிடைக்காது என்று கூறி, உச்ச நீதிமன்றத்தில், அன்பழகன் மனு செய்ததால், வழக்கு விசாரணை, இங்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்துக்கு அர்த்தமே இல்லாமல், அதே அரசு, தற்போது, கர்நாடகத்தில் நடக்கும் வழக்குக்கு, அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நியமித்துள்ளது. உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை, எதற்காக, இங்கு மாற்றியதோ, அந்த எண்ணம் ஈடேறவில்லை. சொத்து குவிப்பு வழக்கு நடந்த, பெங்களூரு தனி நீதிமன்றத்தில், குற்றவாளிகள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக, எந்த பாயின்ட்களையும், பவானி சிங், எடுத்துரைக்கவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், வழக்கை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வாய்தா கேட்டபோதெல்லாம், பவானி சிங்கின் கருத்தை, நீதிபதி கேட்டபோது, அவர், ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. வழக்கை தாமதப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில், பவானி சிங்கும், பல முறை நீதிமன்றத்தில், ஆஜராகவில்லை. இதற்காக அபராதமும் செலுத்தியுள்ளார். எனவே, பவானி சிங்கை மாற்ற வேண்டும். கர்நாடக அரசு அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார்: இதில், பவானி சிங்கை வேண்டாம் என்று கூறவோ, அவரே தொடர்ந்து வாதாட வேண்டுமென்று கூறவோ, எங்களுக்கு அதிகாரமில்லை. இது குறித்து, இதுவரை, எங்கள் கவனத்துக்கு யாரும் கொண்டு வரவில்லை. நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்.

 

 

சென்னை ஊழல் தடுப்பு போலீஸ் வழக்கறிஞர் மஞ்சுநாத் ராவ்: சி.ஆர்.பி.சி., சட்டப்படி அரசு வழக்கறிஞரை நியமனம் செய்திருப்பது சரி. இதில், எந்த முறைகேடும் நடக்கவில்லை. உச்ச நீதிமன்றம், இந்த நியமனத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஒரு வழக்கில், மேல்முறையீடு செய்யப்பட்டால், அரசு வழக்கறிஞர் மாற்றப்படுவதில்லை. அவரே தொடர்ந்து, மேல்முறையீட்டு வழக்கிலும் ஆஜராவார். இது தான் நடைமுறை. இவ்வழக்கிலும், இதே முறை தான் பின்பற்றப்பட்டுள்ளது.

பவானி சிங் வழக்கறிஞர் திவாகர் செபாஸ்டின்: அரசு வழக்கறிஞர் பவானி சிங், நேர்மையாக செயல்பட்டுள்ளார். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது. அவரது நேர்மையை சந்தேகிப்பது தவறு. தனி நீதிமன்றத்தில், அவர் ஆஜராவதற்கு நியமனம் செய்யப்பட்டது போன்றே, இந்த நீதிமன்றத்திலும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது உள்நோக்கம் கொண்டது.

 

 

நீதிபதி ஆனந்த பைர ரெட்டி: மூத்த வழக்கறிஞர் நாகேஷ், தமிழகத்தில், அ.தி.மு.க., ஆட்சி நடந்து வருவதால், அவர்கள், கர்நாடகத்தில் நடக்கும் வழக்கிற்கு, அரசு வழக்கறிஞரை நியமிப்பது, சட்டப்படி சரியானதல்ல. கர்நாடகாவில் நடக்கும் வழக்குக்கு, அரசு வழக்கறிஞரை, கர்நாடக அரசு நியமிப்பது தான் மரபு என்று கூறியுள்ளார். இதே போன்று, சென்னை ஊழல் தடுப்பு போலீஸ் வழக்கறிஞர் திவாகர் செபாஸ்டின், தனி சிறப்பு நீதிமன்றத்தில் நியமனம் செய்த வழக்கறிஞர் பவானி சிங், 'இங்கும் தொடருவது தான் நடைமுறை. இதில் தவறேதுமில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். அரசு அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், 'இதில் தான் சொல்வதற்கு ஏதுமில்லை. நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். எனவே, அன்பழகனோ, கர்நாடக அரசோ விரும்பினால், உச்ச நீதிமன்றத்தில் மனு செய்து, அவர்கள் வழிகாட்டுதல்படி, செயல்படலாம். அதுவரை, இவ்வழக்கில், பவானி சிங்கே, அரசு வழக்கறிஞராக தொடருவார்.

 

இதன் பின், அன்பழகன் வழக்கறிஞர் நாகேஷ், நிருபர்களிடம் கூறுகையில், "இந்த விஷயம் குறித்து, அன்பழகனிடம் ஆலோசனை பெற்ற பின், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வது குறித்து முடிவு செய்யப்படும்,” என்றார். தீர்ப்பு குறித்து, பவானி சிங்கிடம் கேட்ட போது, ''அவர் நோ கமெண்ட்ஸ்,'' என்றார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1164777

Link to comment
Share on other sites

தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள்: ஜெ., அப்பீல் விசாரணையில் நீதிபதி புகழாரம்

 

 

பெங்களூரு: தமிழகத்தில், அண்ணாதுரையும், எம்.ஜி.ஆரும் பெரிய தலைவர்கள் என புகழாரம் செய்த நீதிபதியால், நேற்றைய விசாரணை, ருசிகரமாக முடிந்தது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக் குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு விசாரணை, 11வது நாளாக, நேற்று நடந்தது.

ஜெ., வக்கீல் நாகேஸ்வரவராவ் வாதிட்டதாவது: முந்தைய சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ஊழல் தடுப்பு போலீஸாருக்கு சம்மன் அனுப்பி, ஜெயலலிதா சொத்து ஆய்வு குறித்த, அறிக்கையை, விளக்கும்படி, நீதிமன்றமே கேட்டது. இதற்காக, டெபுடி எஸ்.பி., சம்பந்தம் ஆஜராகி, தான் ஆய்வு செய்த அறிக்கையை விளக்கினார்.

 

ஆனால், அவரது விளக்கத்தை ஏற்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், நீங்கள் எப்படி ஆஜராகலாம் என்று கூறி, அவரது விளக்கத்தை ஏற்க மறுத்தது. இதை, தங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஜெயலலிதா வீட்டில் ரெய்டு நடத்தி, வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்த போது, அவர் வீட்டில் இல்லை. பறிமுதலான, வெள்ளியின் எடை, 1,116 கிலோ என்றும், அதன் மதிப்பு, 48 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் என்று குறிப்பிட்டனர். உண்மையில், அங்கிருந்த, வெள்ளி பொருட்களின் எடை, 1,250 கிலோவாகும். இதன் மதிப்பு, 83 லட்சத்து, 7,000 ரூபாய்.இந்த வெள்ளி பொருட்கள், ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட, 1991ம் ஆண்டுக்கு முன்பே, அவர் சம்பாதித்தது. இதுபற்றி, போலீஸாருக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயம் இல்லை. முறையான அனுமதி பெறாமல் ரெய்டு நடத்தினர், என்றார்.

 

 

அப்போது, நீதிபதி குமாரசாமி, அரசு வக்கீல் பவானி சிங்கை பார்த்து, “ரெய்டு நடத்துவதற்கு, அனுமதி பெறவில்லையா. ஜெயலலிதா இல்லாத போது, யார் முன்னிலையில் ரெய்டு நடந்தது,” என்றார்.

வக்கீல் பவானிசிங்: ஜெயலலிதாவின் அனுமதி பெற்ற, அவரது செயலாளர் பாஸ்கரன் முன்னிலையில் ரெய்டு நடந்தது. கைப்பற்றப்பட்ட, வெள்ளி பொருட்கள் பட்டியல் குறித்து, அவரிடமே கையெழுத்து பெறப்பட்டது. அவர் இறந்து விட்டார். மரண சான்றிதழ், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பின்னர், நாகேஸ்வரராவ் வாதிட்டதாவது:ஜெயலலிதா வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட, வெள்ளிப் பொருட்களில், எம்.ஜி.ஆர்., வழங்கிய, வெள்ளி செங்கோலும், கிரீடமும் உள்ளது. தமிழக தலைவர்கள், பிறந்த நாள் கொண்டாடும்போது, அந்தந்த கட்சியினர், பரிசு வழங்குவதுண்டு. இதுபோன்று, ஜெயலலிதாவின், 1992ல், 44வது பிறந்த நாளன்று, ஒன்றரை கோடி ரூபாய், 'டிடி' வந்தது. இது பற்றி, 125 பேர் சாட்சியம் கூறியுள்ளனர். இவர்களிடம், வழக்கை விசாரித்த எஸ்.பி., நல்லம்ம நாயுடு, எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை.ஆந்திரா மாநிலம், பகிராபாத்தில், ஜெயலலிதாவுக்கு, 15 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம், ஜெயலலிதா தாயார் சந்தியா காலத்தில், 1964ல் வாங்கப்பட்டது.

 

 

இந்த நிலத்திலிருந்து, 1972 வரை, ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வருமானம் வந்தது. 1987 முதல், 1993 வரை, ஆண்டுக்கு, ஏழு முதல் எட்டு லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. இதற்கு வருமான வரியும் செலுத்தியுள்ளனர்.ஆனால், ஊழல் தடுப்பு போலீஸார், ஐந்து ஆண்டுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே, வருமானம் வந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதை, முந்தைய சிறப்பு நீதிமன்றம், ஆண்டுக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வருமானம் எனக்கூறி, ஐந்து ஆண்டுகளுக்கு, 10 லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டனர்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.விசாரணை இன்றும் தொடர்கிறது.

 

 

அண்ணாதுரை, எம்.ஜி.ஆருக்கு-நீதிபதி குமாரசாமி புகழாரம்:

நீதிபதி குமாரசாமி: தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரை, பெரிய தலைவர். தமிழகத்தை ஆண்ட காங்கிரஸிடமிருந்து ஆட்சியை பிடித்து, முதல்வரானார். தமிழகத்தில் திராவிட பாரம்பரிய கட்சி, மாநிலத்தில் பெரிய கட்சியாக விளங்கியது. இதன் பின்னர், எம்.ஜி.ஆர்., மக்கள் ஆதரவு பெற்று, பெரிய தலைவராக விளங்கினார். அவர், எவ்வளவு நாள் முதல்வராக இருந்தார்.

ஜெ., வக்கீல் செந்தில்: 10 ஆண்டுகள், முதல்வராக இருந்தார்.

நீதிபதி: அதன் பின்னர், ஜெயலலிதா முதல்வரானாரா?

ஜெ., வக்கீல் அசோகன்: இல்லை, தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

நீதிபதி: அது, எப்படி நடந்தது? எம்.ஜி.ஆர்., மறைந்த அனுதாப அலையில், அ.தி.மு.க., வெற்றி பெற்றிருக்கலாமே.

வக்கீல் அசோகன்: அந்த தேர்தலில், மறைந்த எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி, ஒரு அணியாகவும், ஜெயலலிதா மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். அ.தி.மு.க., இரண்டாக, உடைந்ததால், வெற்றி பெற முடியவில்லை.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1166476

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு தொண்டர்களிடமிருந்து பரிசுகள் வந்ததா? நீதிபதி கேள்வி

 

 

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு சொந்தமான வெள்ளி பொருட்களுக்கு அதிகப்படியான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, சொத்துக்குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின்போது ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தெரிவித்தார். சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று 11வது நாளாக நீதிபதி குமாரசாமி விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பில் முதலில் வழக்கறிஞர் குமார் ஆஜராகினார்.

 

பிறகு டெல்லியில் இருந்து மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் வரவழைக்கப்பட்டு, ஜெயலலிதா சார்பில் ஆஜராகிவருகிறார். நாகேஸ்வரராவ், இன்று 6வது நாளாக வாதம் செய்தார். ஜெயலலிதாவுக்கு தொண்டர்களிடமிருந்து பரிசுகள் வந்ததா? நீதிபதி கேள்வி என் மனுதாரர், வழக்கு நடைபெறும் காலகட்டத்துக்கு முன்பே 1250 கிலோ வெள்ளிப் பொருட்கள் வைத்திருந்தார். அதை வருமானத்திற்கு உட்பட்டே வாங்கியிருந்தார்.

 

இந்த வெள்ளி பொருட்களுக்காக வருமானவரித் துறையில் தாக்கல் செய்து வரியும் கட்டியுள்ளார். ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை இதன் மதிப்பை அதிகரித்துக் காண்பித்துள்ளது என்றார். இதனிடையே நீதிபதி குமாரசாமி, "எம்.ஜி.ஆருக்கு வழங்கியதுபோல் ஜெயலலிதாவிற்கு தொண்டர்கள் பரிசுப்பொருட்கள் வழங்கினார்களா?" என கேள்விகேட்டார். அதற்கு ஜெயலலிதா தரப்பு வக்கீல், கடந்த 1992ம் ஆண்டு ஜெயலலிதா ,பிறந்த நாளுக்கு பின்னர் எந்த பரிசு பொருளும் வரவில்லை என்றார்

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-disproportionate-assets-case-appeal-nageswara-rao-pre-219372.html

Link to comment
Share on other sites

சொத்து குவிப்பு ; ஜெ., வக்கீலுக்கு நீதிபதி சரமாரி கேள்வி

ஜன 22,2015 17:07

 

பெங்களூரூ: ஜெ, மீதான சொத்து குவிப்பு வழக்கின் அப்பீல் மனு விசாரணை கர்நாடா ஐகோர்ட்டில் இன்றும் விசாரணை நடக்கிறது. ஜெ., வக்கீல்நாகேஸ்வரராவ் ஆஜராகி வாதிட்டார், விவாதம் வருமாறு ; நீதிபதி குமாரசாமி :ஜெ.,சொத்து தொடர்பாக ரூ. 66 கோடி வருவாய் ஆதார பட்டியல் உள்ளதா ?ஜெ., தரப்பு வக்கீல்: ஆதார பட்டியல் இல்லை.நீதிபதி குமாரசாமி: ஆதார பட்டியல் இல்லையென்றால் எப்படி வாதிடுகின்றனர் ஜெ., தரப்பு வக்கீல்: நாளை தாக்கல் செய்கிறோம்.நீதிபதி குமாரசாமி: வழக்கை நாளை ஒத்தி வைக்கிறேன். இவ்வாறு வாதம் நடந்தது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1166927


ஜெ., வக்கீலுக்கு நீதிபதி அறிவுரை
 

பெங்களூரு: ஜெ., சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று நடந்த விவாதத்தின் போது, வழக்கின் முக்கிய அம்சங்களை மட்டும் தொகுத்து வாதங்களாக முன்வைக்கும்படி, ஜெ., தரப்பு வக்கீல் நாகேஸ்வர ராவை, நீதிபதி குமாரசாமி அறிவுறுத்தினார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1166935

Link to comment
Share on other sites

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் 'பொய்' வழக்கு: ஜெ., வக்கீல் இறுதி வாதம்

 

 

பெங்களூரு: "அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு பொய்யானது என்பதற்கான பல ஆதாரங்களை, சமர்ப்பித்தும் முந்தைய சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை,” என வக்கீல் நாகேஸ்வரராவ் வாதத்தை நிறைவு செய்தார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடகா உயர்நீதிமன்ற சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் அவரது வக்கீல் நாகேஸ்வர ராவ் நேற்று 8 வது நாளாக வாதிட்டார்.

 

அவர் கூறியதாவது: சுதாகரன் திருமணம் 1995 செப்., 7ல் சென்னை எம்.ஆர்.சி., மைதானத்தில் நடந்தது. திருமணம் நடந்த 2 ஆண்டு கழித்து மைதானத்தை பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செலவை கணக்கிட்டுள்ளது எப்படி சரியாகும். சிவாஜி கணேசன் பேத்தி சத்யலட்சுமியை, சுதாகரன் திருமணம் செய்துள்ளார். தமிழக வழக்கப்படி, திருமண செலவை பெண் வீட்டார் ஏற்று கொள்வர். பெண்ணின் தாய் மாமன் ராம்குமார் ஒரு கோடி 6 லட்சம் ரூபாய் செலவு செய்தார். தன் தம்பியும், நடிகருமான பிரபுவின் சினிமாவை வெளிநாடு உரிமைக்கு விற்ற பணத்தில் செலவு செய்தார். செலவுக்கான தொகை அனைத்துக்கும் 'செக்' கொடுக்கப்பட்டுள்ளது.

நீதிபதி: சிவாஜி இருக்கிறாரா?
ஜெ., வக்கீல்: இல்லை. அவர், காலமாகி விட்டார். ராம்குமார் செலவழித்த விபரங்கள் அனைத்தையும் வருமான வரித்துறையில் சமர்பித்து வரியும் செலுத்தியுள்ளார். அ.தி.மு.க., பிரமுகர் காஞ்சி பன்னீர்செல்வம் மற்றும் 11 பேர் தங்கள் சொந்த செலவில் திருமண பந்தல், வரவேற்பு வளையம், கட் அவுட், தோரணங்கள், மின் விளக்கு, பேனர், தூண்களை அமைத்தனர். திருமணத்துக்கு வந்த கட்சிக்காரர்களின் சாப்பாட்டு செலவை கட்சி பிரமுகர் ஓ.எஸ். மணியனும் அவருடன் மூன்று பேரும் தாங்களாகவே விரும்பி செய்தனர். திருமண வரவேற்புக்கு வந்த முக்கியமானவர்களுக்கு கொடுத்த வெள்ளி தட்டுகளை சுதாகரன் சகோதரர் பாஸ்கரன் வாங்கியிருந்தார். இதற்கான 'பில்'களை வருமான வரித்துறையினரிடம் கொடுத்துள்ளார். சுதாகரன் 'சூட்' உட்பட திருமண உடைகளுக்கு பெண் வீட்டார் தரப்பில் 1.41 லட்சம் ரூபாயை ராம்குமார் கொடுத்தார்.

 

'இந்த திருமணத்துக்கு ஜெயலலிதா கோடிக்கணக்கில் செலவு செய்தார் என்பதும் பல கோடி ரூபாய் செலவானது' என்றும் ஊழல் தடுப்பு போலீசார் சொல்வது மிகையான குற்றச்சாட்டு. ஆனால் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. போகிற போக்கில் புழுதி வாரி இறைக்க கூடாது. ஜெயலலிதா சொத்து தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். அவர் ஊழல் செய்தார் என்பதற்கான ஆதாரங்களை ஊழல் தடுப்பு போலீசார் ஏன் சமர்பிக்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசியல் எதிரிகளால் போடப்பட்ட 'பொய்' வழக்கு. இதற்கு ஊழல் தடுப்பு போலீசாரும் துணை போயுள்ளனர். 'பொய்' வழக்கு என்பதற்கு பல ஆதாரங்களை சமர்பித்தும், முந்தைய நீதிமன்றம் ஏற்க வில்லை. இவ்வாறு அவர் வாதிட்டார்.

 

 

ஜெ., தரப்பு வக்கீல் நாகேஸ்வரராவின் வாதம், நேற்றுடன் முடிவடைந்தது. ஜன., 27ல் இருந்து, சசிகலா வக்கீல் பசந்த் வாதிடுகிறார். அவரது வாதம் ஒரு வாரம் நடக்கும். பின், சுதாகரன், இளவரசி வக்கீல் அமித் தேசாய் வாதிடுவார். இவர்களின் வாதம் முடிந்த பின் உச்ச நீதிமன்ற மூத்த வக்கீல் பாலி நாரிமன் அல்லது மூத்த வக்கீல்கள், இரு நாள் வாதிட்டு நிறைவு செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்., 15 முதல் 20 வரை, மேல் முறையீடு செய்தவர்களின் தரப்பு வாதங்கள் முடிவடையும். பின், அரசு தரப்பில் வாதம் துவங்கும். இதுவும் 5 முதல் 7 நாட்களுக்குள் முடியலாம்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1167738

Link to comment
Share on other sites

தொந்தரவு செய்வதே உங்களுக்கு வாடிக்கை! அன்பழகன் வக்கீல் மீது பவானி சிங் கோபம்

 

 

பெங்களூரு: ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணையில், ''நான் தான் பேசுகிறேனே. நீங்கள் ஏன் அடிக்கடி குறுக்கிடுகிறீர்கள்,'' என தி.மு.க., பொது செயலாளர் அன்பழகனின் வக்கீல் சரவணனை அரசு வக்கீல் பவானிசிங் கண்டித்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு மேல் முறையீட்டு மனு விசாரணை நேற்று துவங்கியவுடன், ஜெயலலிதாவின் சொத்து பட்டியலை அவரது வக்கீல் நாகேஸ்வர ராவ், குமார் சமப்ர்பித்தனர்.

 

 

ஜெ., வக்கீல்கள்: ஜெயலலிதா உட்பட 4 பேர் மீது, சென்னை ஊழல் தடுப்பு போலீசார் 66.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதை விட 95 லட்சம் ரூபாய் சொத்து அதிகமாகவே உள்ளது. இதை முறையாகவே சம்பாதித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை சமர்பித்துள்ளோம்.


நீதிபதி குமாரசாமி: (அரசு வக்கீல் பவானி சிங்கை பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

அரசு வக்கீல்: இந்த பட்டியல் தவறானது. என் வாதத்தின் போது இதற்கான விளக்கத்தை சொல்கிறேன்.


நீதிபதி: தற்போது விளக்க முடியாதா?

(அப்போது ஊழல் தடுப்பு எஸ்.பி., சம்பந்தத்தை அழைத்து பவானிசிங் விளக்கம் கேட்டார்).


அன்பழகன் வக்கீல் சரவணன் எழுந்து, ''விசாரணை நடந்த போது இவர் பொறுப்பில் இல்லை. விசாரணை நடத்திய நல்லம்ம நாயுடுவை அழைத்து விசாரிக்க வேண்டும்.

அரசு வக்கீல்: நான் தான் பேசிக்கொண்டிருக்கிறேனே. நீங்கள் ஏன், அடிக்கடி தலையிடுகிறீர்கள்.


வக்கீல் சரவணன்: எனக்கு தெரிந்த விபரங்களை சொல்கிறேன்.

அரசு வக்கீல்: நல்லம்ம நாயுடு ஓய்வு பெற்று விட்டார். அவரை எப்படி அழைக்க முடியும். எனக்கு தொந்தரவு செய்வதே உங்களுக்கு வாடிக்கை.


வக்கீல் சரவணன்: இதை ஏன் தொந்தரவாக எண்ணுகிறீர்கள். நான் உண்மையான விபரங்களை தெரிவிக்கிறேன்.

நீதிபதி: நீங்கள் எப்போதும் அவரை குறையாக சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். அதைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.


வக்கீல் சரவணன்: அவர் மீது முந்தைய சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியே குறை கூறி அபராதம் விதித்துள்ளார்.

நீதிபதி: உங்கள் கட்சிக்காரர் அன்பழகன் எங்கே?

வக்கீல் சரவணன்: அவர் வரமாட்டார். வக்காலத்து பதிவு செய்துள்ளேன். அவருக்காக நான், வாதிடுகிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1167667

Link to comment
Share on other sites

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக ஆயிரம் மணி நேரம் செலவிட்டுள்ளேன்: உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் பேட்டி
 

 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தினந்தோறும் அனல் பறக்கிறது.

கடந்த 18 ஆண்டுகளாக இவ்வழக்கில் சிக்கி தவிக்கும் ஜெயலலிதாவை மீட்பதற்காக நாட்டின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலு மான நாகேஸ்வர ராவ் களமிறக்கப்பட்டுள்ளார்.

 

அடுக்கடுக்கான ஆதாரங்களை யும், இதுவரை சொல்லாத புதிய தரவுகளையும் நாகேஸ்வர ராவ் தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார். அவரை `தி இந்து' சார்பாக சந்தித்தோம். அவர் அளித்த சிறப்பு பேட்டி:

 

ஜெயலலிதாவின் வழக்கில் 8 நாட்கள் இறுதி வாதம் நிகழ்த்தி யுள்ளீர்கள். உங்களுடைய வாதம் திருப்திகரமாக இருந்ததா?

கடந்த 8 நாட்களில் 40 மணி நேரத்துக்கும் மேலாக 10 நிமிடம் கூட இடைவேளை எடுத்துக்கொள்ளாமல் வாதிட்டுள்ளேன். எனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட ஆவணங்களைக் கொண்டு திருப்திகரமாக வாதிட்டுள்ளேன். இதற்காக பல நாட்கள் இரவு பகலாக ஓயாமல் உழைத்திருக்கிறேன். இதில் எனது தனிப்பட்ட உழைப்பு மட்டுமல்லாமல், எனது உதவி வழக்கறிஞர்கள் 12 பேரின் கடும் உழைப்பும், ஏற்கெனவே இவ்வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களின் உழைப்பும் அடங்கி இருக்கிறது.

 

 

சொத்துக்குவிப்பு வழக்கில் உங்களுக்கு முன்பாக மூத்த வழக்கறிஞர்கள் ராம்ஜெத் மலானி, ஃபாலி நரிமன், பி.குமார் உள்ளிட்ட பலர் வாதிட்டுள்ளார்கள். அவர்களுடைய வாதத்தில் இருந்து உங்களுடைய வாதம் எந்த விதத்தில் வேறுபட்டதாக அமைந்திருக்கிறது?

 

ராம் ஜெத்மலானி, நரிமன் எல்லாம் பெரிய மனிதர்கள். அவர்களுடைய வாதம் குறித்து எதுவும் கூற முடியாது. என்னுடைய அறிவுக்கு எட்டிய முக்கிய குறிப்புகளைக் கொண்டும், வழக்கில் உள்ள ஆவணங்களைக் கொண்டும் மிக தெளிவாக வாதிட்டுள்ளேன்.

எங்களுக்கு சாதகமான பல உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டியதை நீதிபதி கவனமாக கேட்டுக் கொண்டார்.

 

உங்களுடைய 40 மணி நேர வாதத்தில், விசாரணை நீதிமன்றத்தில் குறிப்பிடப்படாத முக்கிய தகவல்கள் என்னென்ன?

 

விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற வாதம் குறித்து நான் எதுவும் கூறமுடியாது. ஜெயலலிதாவுக்கு சாதகமாக வந்த வருமான வரித் துறை தீர்ப்பாயத்தின் ஆணைகள், சொத்துகள் மதிப்பிட்டதில் உள்ள குளறுபடிகள், நமது எம்ஜிஆர் செய்தித்தாளின் வருமானம், ஹைதராபாத் திராட்சை தோட்ட வருமானம் உள்ளிட்டவை பற்றி ஆதாரங்களுடன் குறிப்பிட்டேன். குறிப்பாக இறுதி நாளில் (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்த ஜெயலலிதாவின் சொத்து பட்டியலில் பல முக்கிய தகவல்களை இணைத்துள்ளேன். என்னுடைய வாதம் இன்னும் முடிவடையவில்லை. அரசு தரப்பின் வாதம் முடிந்த பிறகு, இறுதியாக 2 மணி நேரம் வாதிட திட்டமிட்டுள்ளேன். அப்போது இன்னும் பல முக்கிய தகவல்களை தெரிவிப்பேன்.

 

உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை முடிக்க நிர்ணயித்த 3 மாத கால அவகாசத்துக்குள் வழக்கை முடிக்க முடியுமா?

 

அதுபற்றி எனக்கு தெரியாது. சிறப்பு அமர்வு நீதிமன்றத்தைதான் கேட்க வேண்டும்.

சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் 3-ம் தரப்பாக சேர்க்குமாறு திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர் கோரி வருகிறார்களே?

மேல்முறையீடு என்பது முந்தைய தீர்ப்புக்கும் மனுதாரருக்குமான பிரச்சினை. இதில் மற்றவர்களை மூன்றாம் தரப்பாக சேர்ப்பது பற்றி நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும்.

 

உங்களுடைய வாதம் ஜெயலலிதாவை இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யும் என உறுதியாக நம்புகிறீர்களா?

 

ஜெயலலிதா விடுதலையாக வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டுதலைப்போல ஆயிரம் மணி நேரத்துக்கும் மேலாக செலவிட்டுள்ளேன்.
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6818207.ece?widget-art=four-rel

Link to comment
Share on other sites

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெ. வழக்கு விசாரணை: அரசு - திமுக வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம்
 

 

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதி மன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமார சாமி முன்னிலையில் நேற்று விசா ரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்‌ எல்.நாகேஸ்வர ராவ் ஆஜரானார்.

அப்போது அவர் ஜெயலலிதா வின் சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்தார். அதில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கூறியுள்ள ரூ.66.65 கோடியைவிட அதிகமாக‌ ஜெய லலிதாவிடம் சொத்துகள் இருந்தது. அவருடைய சேமிப்பு கணக்கில் இருந்த ரூ.97 லட்சம் கணக்கில் சேர்க்கப்படவில்லை. சசிகலா, சுதா கரனுக்கு சொந்தமானதையும் ஜெய லலிதா கணக்கில் சேர்த் துள்ளனர் என தெரிவித்து இருந்தார்.

 

 

பவானி சிங் கடும் எதிர்ப்பு

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இந்த பட்டியலில் கூறியுள்ள விவரங்களை விசாரணை நீதி மன்றத்தில் தாக்கல் செய்தீர்களா? அதற்கான ஆதாரத்தை தாருங்கள்” என்றார். இதனால் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் செந்தில், அசோகன், பன்னீர்செல்வன் உள் ளிட்டோர் பல்வேறு பைகளில் நீண்ட நேரம் தேடினர். அதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை.

எனவே அரசு வழக்கறிஞர் பவானி சிங், “தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்துப்பட்டி யல் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஜெயலலிதாவை தவிர மற்ற மூவ ருக்கும் அதிக சொத்துக்கள் இல்லை. இவையெல்லாம் விசா ரணை நீதிமன்றத்தில் ஆதாரங் களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் நான் ஜெய லலிதாவின் சொத்து பட்டியலை தாக்கல் செய்கிறேன்” என்றார்.

 

 

இதையடுத்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் அதிகாரி சம்பந்த‌த்தை அழைத்து, “ஜெய லலிதாவின் முழுமையான சொத்துப் பட்டியல் எங்கே? இங்கே கூறி யுள்ள ரூ.97 லட்சம் பற்றி விசா ரணை நீதிமன்றத்தில் தெரிவித்துள் ளார்களா?” என நீதிபதி வின வினார். அதற்கு சம்பந்தமும், பவானி சிங்கும், ஜெயலலிதா வழக்கறிஞர்களும் பதில் அளிக்க முடியாமல் திணறினர்.

 

 

நீதிமன்றத்தில் கடும் மோதல்

இதனால் திமுக பொதுச்செய லாளர் அன்பழகன் சார்பில் ஆஜரான வழ‌க்கறிஞர் சரவணனிடம் நீதிபதி கேட்டார். அதற்கு அவர், “தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சொத்து பட்டியல் தவறானது. சொத்துகளின் விவரம் குறித்து ஓய்வு பெற்ற விசாரணை அதிகாரி நல்லம்ம நாயுடுவுக்குதான் முழுமையாக தெரியும்” என்றார்.

அப்போது கோபமடைந்த அரசு வழ‌க்கறிஞர் பவானி சிங், “நீங்கள் யார்? வழக்கில் ஏன் தேவை யில்லாமல் தலையிடுகிறீர்கள்?” என்றார். அதற்கு திமுக வழக்கறிஞர் சரவணன், “நீங்கள் கர்நாடக அரசின் ஆணையில்லாமல் ஆஜராகி வருகிறீர்கள். நீதிபதி என்னிடம் கேட்டதால் பதில் சொன் னேன். விசாரணை நீதிமன்றத்தில் அரசு தரப்பு எந்த தகவலும் தெரி விக்கவில்லை. திமுக சார்பில் அனைத்து முக்கிய விவரங்களை யும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்திருக்கிறோம்” என்றார்.

 

 

அரசு - திமுக வழக்கறிஞர்கள் கடும் வாக்குவாதம் செய்ததால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் தனது வாதத்தை முடித்துவிட்டார். இதற்கு பிறகு மீதமுள்ள தகவல்களை முன்வைத்து பி.குமார் ஓரிரு நாட்கள் வாதிடுவார். அதன்பிறகு சசிகலா தரப்பின் வாதம் தொடரும் என நீதிபதியிடம் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு (ஜன.27) ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் திமுகவை வழக்கில் 3-ம் தரப்பாக சேர்க்கக் கோரிய மனு மீது விசாரணை நடைபெறும் என நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தெரிவித்தார்.
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6818330.ece

 

Link to comment
Share on other sites

சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்: அரசு வழக்கறிஞர் பவானி சிங் ராஜினாமா - குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என கேள்வி
 

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் ஐஜி குணசீலனிடம் அவர் அளித்துள்ளார்.

இதனிடையே அரசு வழக்கறிஞர் பவானிசிங்கை சமாதானப்படுத்தும் முயற்சியில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இறங்கியுள்ளனர். ராஜினாமாவை வாபஸ் பெறுவது தொடர்பாக பவானி சிங்கிடம் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில் தனிஅறையில் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

 

 

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 2005-ம் ஆண்டு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது.அப்போது இவ்வழக்கிற்கு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் 2012-ம் ஆண்டு அவர் ராஜினாமா செய்தார்.

கடந்த 2013 பிப்ரவரி 28-ல் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் விசாரணையின்போது வழக்கை தாமதிக்க முயன்றதாக பவானி சிங்கிற்கு நீதிபதி டி'குன்ஹா ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தார்.

 

 

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் கோரியபோது பவானி சிங் ஆட்சேபம் தெரிவிக் காததால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, 'அரசு வழக்கறிஞர் தனது பொறுப்பை உணர்ந்திருக்கிறாரா?'என கேள்வி எழுப்பினார். இந்நிலையில் பவானி சிங்கே அரசு வழக்கறிஞராக தொடர தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

ஜெயலலிதா மீதான வழக்கில் அவர் அரசு வழக்கறிஞராக தொடர்ந்தால் நீதி கிடைப்பது கேள்விக்குறி ஆகிவிடும் எனக் கூறி தேமுதிக, டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 

 

திடீர் ராஜினாமா

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்ததும் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் பவானி சிங் மட்டும் வெளியே வராமல் நீண்ட நேரம் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக வழக்கறிஞர் சரவணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்நிலையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலனை அழைத்து தனது ராஜினாமா கடிதத்தை பவானிசிங் அளித் துள்ளார்.

அதில், ''தொடர் வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக நான் மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலமாக தேவையில்லாத‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது. எனவே அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து இன்றுமுதல் விடுபடுகிறேன்''என குறிப்பிட் டுள்ளார்.

 

 

இதுதொடர்பாக சென்னையில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் ஜெயலலிதா வழக்கின் பொறுப் பாளரான வழக்கறிஞர் செந்திலிடமும் ஐஜி குணசீலன் தகவல் தெரி வித்தார்.

''வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது'' என குறிப்பிட்டுள்ளார்

 

ஜெயலலிதாவின் வழக்கறிஞருடன் ரகசிய பேச்சு

ராஜினாமா தகவலால் அதிர்ச்சி அடைந்த செந்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் தனியாக பேசிக் கொண்டு இருந்தார்.

திமுக தரப்பு நெருக்கடிகளை பொறுக்க முடியவில்லை. சுப்பிரமணியன் சுவாமியும் டிராபிக் ராமசாமியும் என்னை நீக்க முயற்சிக்கிறார்கள். சமீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இவ்வளவு நெருக்கடியுடன் என்னால் அரசு வழக்கறிஞராக‌ தொடர‌ முடியாது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு ஒரு நாளைக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்றால் ரூ.25 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என பவானி சிங் கேள்வி எழுப்பியதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர் செந்தில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலன் உள்ளிட்டோர் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை தனிமையில் சந்தித்து அரை மணி நேரம் பேசியதாகத் தெரிகிறது.

 

அப்போது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியதாகவும் அவருக்கு போதிய ஊதிய உயர்வு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். இருப்பினும் பவானி சிங் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து பவானி சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளதால் சொத்துக்குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article6820739.ece

Link to comment
Share on other sites

நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையல்ல, வதந்தி.. பவானி சிங் மறுப்பு

 

 

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக உள்ள பவானி சிங், தான் ராஜினாமா செய்ததாக பரவிய தகவல் வதந்தி என விளக்கமளித்துள்ளார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு 2005-ம் ஆண்டு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. அப்போது இவ்வழக்கிற்கு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். வழக்கு இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் 2012-ம் ஆண்டு அவர் ராஜினாமா செய்தார். நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் உண்மையல்ல, வதந்தி.. பவானி சிங் மறுப்பு கடந்த 2013 பிப்ரவரி 28-ல் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அவர் செயல்படுவதாக திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

 

மேலும் விசாரணையின்போது வழக்கை தாமதிக்க முயன்றதாக பவானி சிங்கிற்கு நீதிபதி டி'குன்ஹா ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஜாமீன் கோரியபோது பவானி சிங் ஆட்சேபம் தெரிவிக் காததால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசேகரா, 'அரசு வழக்கறிஞர் தனது பொறுப்பை உணர்ந்திருக்கிறாரா?'என கேள்வி எழுப்பினார். ஆனபோதும், இந்த வழக்கில் பவானி சிங்கே அரசு வழக்கறிஞராக தொடர தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முடிந்ததும் அனைவரும் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். ஆனால் பவானி சிங் மட்டும் வெளியே வராமல் நீண்ட நேரம் தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். திமுக வழக்கறிஞர் சரவணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்பட்டது.

 

 

இந்த நிலையில், தன்னை நியமனம் செய்தது தமிழக லஞ்ச ஒழிப்புப் பிரிவு என்பதால் அப்பிரிவின் ஐஜி குணசீலனை தனது அறைக்கு வரவழைத்த பவானி சிங் அவரிடம் தான் ராஜினாமா செய்வதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் கொடுத்த கடிதத்தில், 'தொடர் வேலைப்பளு காரணமாக உடல்ரீதியாக நான் மிக‌வும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமீபகாலமாக தேவையில்லாத‌ மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் என்னால் தொடர்ந்து அரசு வழக்கறிஞராக நீடிக்க முடியாது. எனவே அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து இன்றுமுதல் விடுபடுகிறேன் 'என குறிப்பிட்டிருந்தார் பவானி சிங் என்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் செந்தில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை சந்தித்து சுமார் 15 நிமிடங்கள் தனியாக பேசினாராம்.

 

அப்போது, திமுக தரப்பு நெருக்கடிகளை பொறுக்க முடியவில்லை. சுப்பிரமணியன் சுவாமியும் டிராபிக் ராமசாமியும் என்னை நீக்க முயற்சிக்கிறார்கள். சமீபகாலமாக எனக்கு உடல்நிலையும் சரியில்லை. இவ்வளவு நெருக்கடியுடன் என்னால் அரசு வழக்கறிஞராக‌ தொடர‌ முடியாது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எனக்கு ஒரு நாளைக்கு ரூ.65 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்குகிறது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர்கள் என்றால் ரூ.25 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படுகிறது. இவ்வளவு குறைந்த ஊதியத்தில் எப்படி பணியாற்ற முடியும் என பவானி சிங் கேள்வி எழுப்பியதாக நீதிமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் செந்திலும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி குணசீலன் உள்ளிட்டோரும் பவானி சிங்குடன் தொடர்ந்து பேசியதாக கூறப்படுகிறது.

 

மேலும், அவருக்கு போதிய ஊதிய உயர்வு வழங்குவதாகவும் உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் தான் விலகியதாக வெளியான தகவல்களை பவானி சிங் மறுத்துள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘தான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் வெறும் வதந்தி' என விளக்கமளித்துள்ளார் பவானி சிங்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-denied-news-about-resignation-219612.html

Link to comment
Share on other sites

நீதிமன்ற நேரத்தை வீணடிக்காதீர்: ஜெயலலிதா தரப்புக்கு கர்நாடக ஐகோர்ட் நீதிபதி அறிவுரை

தெளிவற்ற வாதங்களை முன்வைத்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தினார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

 

அப்போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜராகி இறுதி வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் பி.குமார், "ஜெயலலிதா வழக்கு காலத்துக்கு முன்பும், அதன் பின்பும் முறையாக வருமானவரி செலுத்தி வருகிறார். அவர் தனது சொத்துகள் அனைத்துக்குமே முறையாக வரி செலுத்தியுள்ளார். அவரை வருமானவரி தீர்ப்பாயம் குற்றமற்றவர் என்றும், சட்ட விரோதமாக சொத்துகள் எதையும் வைத்திருக்கவில்லை என்றும் நற்சான்றிதழ் வழங்கியிருக்கிறது" என்றார்.

 

உடனடியாக குறுக்கிட்ட நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, "மேல்முறையீட்டு வழக்கு தொடங்கியதில் இருந்தே வருமானவரி, வருமானவரி என்று வாதிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இதைக் கேட்க, நான் என்ன ஆடிட்டரா?

 

இது சொத்துக் குவிப்பு வழக்கு, ஜெயலலிதாவின் சொத்துகள் எவ்வளவு? அவரது வருமானம் என்ன? அவரது சொத்துகள் எப்படி வாங்கப்பட்டது? அவரது வருமானத்துக்கான ஆதாரங்கள் என்னென்ன? இதைப் பற்றியெல்லாம் தெளிவாக விவாதம் நடத்துங்கள்.

இந்த வழக்கில் 65 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் உள்ளன. அதை எல்லாம் நீங்கள் படித்துக் கொண்டிருந்தால், நேரம்தான் செல்வாகும். நீதிமன்ற நேரத்தை வீணடிக்காமல், சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்களின் முக்கிய அம்சங்களை மட்டும் முன்வைத்து தெளிவாக வாதிடுங்கள்" என்றார் நீதிபதி.

 

இதையடுத்து, இறுதி வாதத்தைத் தொடர்ந்த வழக்கறிஞர் பி.குமார், "ஜெயலலிதா வழக்கில் 32 தனியார் நிறுவனங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஜெயலலிதா வெறும் பங்குதாரர் மட்டுமே; உரிமையாளர் கிடையாது. அந்தத் தனியார் நிறுவனங்கள், வழக்கில் இணைக்கப்பட்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வால் தொடரப்பட்டுள்ளது. சொத்துகள் மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது" என்று அவர் வாதிட்டார்.

ஜெயலலிதா தரப்பு இறுதி வாதம் இன்று நிறைவடைந்த நிலையில், சசிகலா தரப்பு வாதம் நாளை (புதன்கிழமை) தொடங்கவுள்ளது.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article6827193.ece
 

Link to comment
Share on other sites

ஜெ. வழக்கு: நிறுவனங்களின் சொத்துக்களை ஏன் முடக்கவில்லை? பவானிசிங்கிடம் நீதிபதி சரமாரி கேள்வி!!

 

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்து 4 மாதங்களாகியும் 6 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்காதது ஏன் என்று நீதிபதி குமாரசாமி, அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான பவானிசிங்கே மேல்முறையீட்டு மனு விசாரணையிலும் ஆஜரானது எப்படி என்றும் நீதிபதி குமாரசாமி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு 18வது நாளாக இன்று கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன் விசாரணைக்கு வந்தது.

 

ஜெ. வழக்கு: நிறுவனங்களின் சொத்துக்களை ஏன் முடக்கவில்லை? பவானிசிங்கிடம் நீதிபதி சரமாரி கேள்வி!! அப்போது 6 நிறுவனங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கும், தங்கள் நிறுவனங்களும் தொடர்பில்லை என வாதிட்டனர். நிறுவனங்களின் சொத்துகளை முடக்க உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இதனையடுத்து நீதிபதி குமாரசாமி, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் 6 நிறுவனங்களின் சொத்துகளை இதுவரை ஏன் முடக்கவில்லை என்று பவானிசிங்கிடம் கேள்வி எழுப்பினார். நால்வரின் தண்டனைக்குத்தான் தடையே தவிர நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க தடை விதிக்கப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார். ஜெ. வழக்கு: நிறுவனங்களின் சொத்துக்களை ஏன் முடக்கவில்லை? பவானிசிங்கிடம் நீதிபதி சரமாரி கேள்வி!! மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான தாங்களே, மேல்முறையீட்டு மனு விசாரணையிலும் ஆஜரானது எப்படி?, என்று பவானி சிங்கிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

 

சிவில் வழக்குகளில் ஆஜராக அரசாணை தேவையில்லை. அதேசமயம் கிரிமினல் வழக்குகளில் போதிய உத்தரவு இல்லாமல் ஆஜராக கூடாது என்றும் நீதிபதி குமாரசாமி கண்டிப்புடன் தெரிவித்தார். பவானிசிங் இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி குமாரசாமி, மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கத்தான் தான் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், நிறுவனங்களின் வழக்குகளை விசாரிக்க முடியாது என்று கூறி வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

 

17 வது நாள் விசாரணை

17-வது நாளான நேற்றைய தினம் விசாரணை தொடங்கியதும் குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் எழுந்து, ‘சொந்த ஊர் சென்றுவர வசதியாக சனிக்கிழமை விசாரணை நடத்தாமல் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு பதிலளித்த நீதிபதி குமாரசாமி, ‘இவ்வழக்கை உச்சநீதிமன்றம் தினமும் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எந்த நிலையிலும் விசாரணையை ஒத்திவைக்க முடியாது' என்று அதிரடியாக கூறினார்.

 

வங்கிக்கணக்கு

அதைத் தொடர்ந்து, 200 பக்கங்கள் கொண்ட சென்னை மயிலாப்பூர் கனரா வங்கிமேலாளர் வித்யாசாகரின் சாட்சியத்தை, உதவி வழக்கறிஞர் மணிசங்கர் வாசித்தார். அதில், ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய கம்பெனி வங்கி கணக்குகளில் செய்துகொள்ளப்பட்ட பணபரிமாற்றம் குறித்து விளக்கினார். இரு கம்பெனிகளின் வங்கி கணக்கில் மட்டுமே பணிபரிமாற்றம் நடந்துள்ளதே தவிர இரு நபர்களின் சொந்த வங்கி கணக்கில் இருந்து எந்த பணபரிமாற்றமும் நடக்கவில்லை என்று விவரித்தார். அப்போது சசிகலா தரப்பு மூத்த வக்கீல் பசந்த்குமார், சென்னை மயிலாப்பூர்கனரா வங்கியின் மேலாளர் வித்யாசாகர் அளித்த வாக்குமூலத்தின் சாட்சியங்களைநீதிபதி குமாரசாமி முன்னிலையில் மதிய உணவு இடைவேளை வரை படித்து காட்டினார்.

 

பணபரிமாற்றம்

பின்னர் மூத்த வக்கீல் பசந்த்குமார் வாதிடும்போது, ‘வங்கி அதிகாரிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பார்க்கும்போது ஜெயலலிதாவின் வங்கி கணக்கில் இருந்து சசிகலா உள்பட மற்ற 3 பேருக்கும் எந்தவொரு பண பரிமாற்றமும் தனிப்பட்ட முறையில் நடைபெறவில்லை என்பதும், முறையாக தான் நடைபெற்று உள்ளது என்பதும் நிரூபணம் ஆகி உள்ளது. சந்தா பணம் ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களாக ஜெயலலிதாவும், சசிகலாவும் உள்ளனர். அந்த நிறுவனத்தின் மூலம் தான் பண பரிமாற்றம் நடந்து உள்ளது. மேலும் நமது எம்.ஜி.ஆர். நாளிதழுக்கு சந்தாதாரர்கள் மூலம் தான் ரூ.14 கோடி கிடைத்தது. அந்த பணத்தை சம்பந்தப்பட்ட சந்தாதாரர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டும். எனவே அந்த தொகையை கணக்கில் எடுக்கக்கூடாது' என்றார்.

 

சட்ட விரோத பணம்

அப்போது அரசு தரப்பு வக்கீல் பவானிசிங் குறுக்கிட்டு, நமது எம்.ஜி.ஆர்.நாளிதழுக்கு கிடைத்த ரூ.14 கோடியும் சட்டத்திற்கு புறம்பாக கிடைத்ததாககூறினார். ‘அதற்கான ஆதாரங்கள் உள்ளதா?' என்று பவானிசிங்கிடம் நீதிபதி கேட்டார். உடனே பவானிசிங், ‘அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. மேலும் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஜெயராம் மற்றும் பதிவாளர் அளித்த வாக்குமூலத்தின் சாட்சியங்களை படித்துக்காட்டுகிறேன்' என்றார். அவசியமில்லைஉடனே ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் எழுந்து, ‘ஜெயராம் மற்றும் பதிவாளர் அளித்த வாக்குமூலத்தை படித்து காட்ட வேண்டிய அவசியமில்லை' என்று கூறினார். உடனே நீதிபதி, ‘சாட்சியங்கள் சட்டப்படி, அவர்களது தரப்புக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்றார். நமது எம்.ஜி.ஆர். பத்திரிக்கை, ஜெயாபப்ளிகேஷன்நிறுவனத்தின் கீழ் இயங்கி வருவதால், அந்த பத்திரிக்கை வங்கி கணக்கு மற்றும் ஜெ.பி வங்கி கணக்கில் இருந்து பணிபரிமாற்றம் நடந்துள்ளது என்று விளக்கினார்.

 

பிப்.2க்கு ஒத்திவைப்பு

காலை தொடங்கி மாலை வரை வங்கி மேலாளர் வித்யாசாகரின் சாட்சியம் மட்டுமேபடித்து காட்டப்பட்டது. விசாரணை முடியும் போது வழக்கில் ஏற்கனவே சாட்சியம்அளித்துள்ள பதிவாளர் லட்சுமிநாராயண் மற்றும் ஜெயலலிதாவின் உதவியாளர்ஜெயராமன் ஆகியோர் கொடுத்துள்ள சாட்சியத்தை அரசு வக்கீல் பவானிசிங் மற்றும் சசிகலா வக்கீல் பசந்த்குமார் ஆகியோர் வீட்டில் முழுமையாக படித்து கொண்டுவந்து பிப்ரவரி 2ஆம் தேதி சுருக்கமாக வாதம் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/recorded-statements-cash-deposits-into-sasikala-s-accounts-220037.html

Link to comment
Share on other sites

ஜெ. மேல்முறையீட்டு வழக்கு: அன்பழகன் மனு மீது பவானிசிங் பதிலளிக்க கர்நாடகா ஹைகோர்ட் உத்தரவு! 

 

 

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் இருந்து அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு பவானிசிங் பதிலளிக்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான‌ சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வழக்கறிஞராக ஆஜரான‌ பவானி சிங்கே, இதிலும் ஆஜராகி வருகிறார். ஜெ. மேல்முறையீட்டு வழக்கு: அன்பழகன் மனு மீது பவானிசிங் பதிலளிக்க கர்நாடகா ஹைகோர்ட் உத்தரவு! பவானிசிங்கை நீக்கக்கோரி தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த பைரரெட்டி கடந்த 19-ந் தேதி விசாரித்தார். அப்போது "அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் நியமனம் குறித்து மனுதாரர் அன்பழகனோ, கர்நாடக அரசோ உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர்கள் கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் ஆர்.கே.தேசாயிடம் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் புதிய மனு(ரிட்) ஒன்றை தாக்கல் செய்தனர்.

 

 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: "இவ்வழக்கின் நீதிபதி நியமனம், அரசு வழக்கறிஞர் நியமனம் உள்ளிட்ட விவகாரங்களில் தலையிட தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் தனது வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளது. ஆனால் சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வரும் பவானிசிங்கை தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை நியமித்துள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே உடனடியாக‌ தமிழக அரசால் நியமிக்கப்பட்ட பவானிசிங்கை அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

 

அவசர வழக்கு இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கே.எல்.மஞ்சுநாதாவிடம் தி.மு.க. தரப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த ரிட் மனு மீதான விசாரணை நீதிபதிகள் மஞ்சுநாதா, சுஜாதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பவானிசிங் திங்கட்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/high-court-order-bhavani-singh-s-reply-against-dmk-petition-220046.html

Link to comment
Share on other sites

ஜெ. வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரிய மனு மீதான விசாரணை.. வேறு அமர்வுக்கு திடீர் மாற்றம்!

 

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக ஆஜராகும் பவானிசிங்கை, நீக்கம் செய்ய க.அன்பழகன் தரப்பு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக தலைமை நீதிபதி வகேலா அமர்வு முன்னிலையில், அன்பழகன் ரிட் மனு மீதான விசாரணை நடந்து வந்தது. நேற்று விசாரணை நடத்திய வகேலா பெஞ்ச், அரசு வக்கீலாக பவானிசிங்கை நியமிக்கும் அதிகாரம் தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உள்ளதா, இல்லையா என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது. பவானிசிங் தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் கூட இதில் பதிலளிக்க அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.

 

 

இதையடுத்து இன்று மீண்டும் விசாரணை தொடர்ந்தது. அப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பிலும் பதில் தாக்கல் செய்யப்பட்டது. பவானிசிங் தரப்பிலும் வாதம் எடுத்து வைக்கப்பட்டது. ஜெ. வழக்கில் பவானிசிங்கை நீக்க கோரிய மனு மீதான விசாரணை.. வேறு அமர்வுக்கு திடீர் மாற்றம்! பவானிசிங் தரப்பில் ஆஜரான வக்கீல் "ஏற்கனவே, ஒருமுறை பவானிசிங்கை நீக்க கோரிய அன்பழகன் மனுவை வகேலாதான் விசாரித்தார். அப்போது பவானிசிங்கை நீக்க உத்தரவிட்டார். இப்போது ஜெயலலிதா வழக்கில் மேல் முறையீட்டு மனு நடந்து வருகிறது. அன்பழகன் தரப்பில் இப்போது அதே கோரிக்கையை வலியுறுத்தி ரிட் தாக்கல் செய்துள்ளனர். மீண்டும் வகேலா தலைமையிலான பெஞ்ச் இதை விசாரிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே இதேபோன்ற கோரிக்கையை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி வகேலா என்பதால், இப்போதும் அவரே விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும்" என்று கோரிக்கைவிடுத்தார்.

 

இதை வகேலா தலைமையிலான அமர்வு ஏற்றுக் கொண்டு, வேறு அமர்வுக்கு வழக்கை மாற்ற உத்தரவிட்டது. வேறு அமர்வில் இடம்பெறப் போகும் நீதிபதிகள், யார்-யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த அறிவிப்பு வெளியான பிறகு வழக்கு என்று மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் தெரியவரும். அனேகமாக இவ்வார இறுதிக்குள் மீண்டும் வேறு அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavanisingh-s-removal-karnataka-hc-ordered-220236.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.