Jump to content

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை


Recommended Posts

சட்ட விரோத பணம் ஜெயலலிதாவுடையது என்பதற்கு என்ன ஆதாரம்? சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி

 

 டெல்லி: ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கர்நாடக தரப்பு வாதிட்டிருந்த நிலையில் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி. சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பை எதிர்த்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுக்களை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இதில் கடைசியாக மே 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை கர்நாடக அரசுத் தரப்பில் பி.வி.ஆச்சார்யா வாதத்தை முன் வைத்தார். அப்போது சசிகலா தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலமாக ஜெயலலிதாவுக்கு வருவாய் கிடைத்ததாகவும் ஆச்சாரியா வாதம் செய்தார். இதையடுத்து மே 12ம் தேதி நடந்த விசாரணைக்குப் பின்னர் ஜூன் 1ம் தேதிக்கு (இன்று) விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இன்றை அனைத்துத் தரப்பும் தங்களது இறுதி வாதங்களையும் முடித்துக் கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

 

அதன்படி இன்று மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா இன்று 2 மணி நேரம் தனது வாதங்களை முன் வைத்தார். இதன்பிறகு வாதத்தில் சில சந்தேகங்களை நீதிபதிகள் எழுப்பினர். குறிப்பாக, "ஜெயலலிதாவுக்கு லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சசிகலா பினாமி நிறுவனங்களை நடத்தியதாக கூறியுள்ளீர்கள். ஆனால் அந்த பணம் ஜெயலலிதாவுக்கு உரியது என்பதற்கு ஆதாரம் என்ன?

ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், ஹைகோர்ட் தனது தீர்ப்பில் கணித தவறு காரணமாக அதை தவறவிட்டுவிட்டதாகவும் வாதிட்டீர்கள். வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறும் நீங்கள், அது சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணமா என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க முடியுமா? இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/what-is-the-proof-that-the-money-circulated-among-acaccused-belongs-jayalalitha-255007.html

Link to comment
Share on other sites

  • Replies 311
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சேர்த்தது சட்ட விரோத பணம் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
1463635433-6506.jpg
 

 
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
 
அந்த வழக்கின் இறுதி வாதம் இன்று தொடங்கியது. இந்த வழக்கில் நீதிபதிகளாக பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகிய நீதிபதிகள் விசாரித்து வருகிறார்கள்.
 
மே மாதம் 3ம் தேதி முதல் 5ஆம் தேதி, கர்நாடக அரசு தரப்பில் ஆன வாதத்தை பி.வி. ஆச்சார்ய முன் வைத்தார். அப்போது சசிகலா தொடங்கிய போலி நிறுவனங்கள் மூலம் ஜெயலலிதா சொத்துகள் சேர்த்தார் என்று வாதிட்டார். அதையடுத்து, அந்த வழக்கை ஜூன் 1ம் தேதி (இன்று) தள்ளி வைத்தார்.
 
இன்று நடக்கும் இறுதி வாதத்தில், அனைத்து தரப்பு வாதங்களையும் முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, கார்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா சுமார் இரண்டு மணி நேரங்கள் வாதங்களை முன் வைத்தார்.
அப்போது, நீதிபதிகள் சில சந்தேகங்களை எழுப்பினர். முக்கியமாக, சசிகலா பேரில் பினாமி நிறுவனங்களை ஜெயலலிதா நடத்தினார் என்றும், அதன் மூலம் சொத்துக்கள் சேர்த்தார் என்றும் கூறும் நீங்கள், அந்த பணங்கள் ஜெயலலிதாவுடையது என்று நீரூபிக்க முடியுமா?
 
ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பில் கணிதப் பிழை இருப்பதாகவும் நீங்கள் சொல்கிறீர்கள். ஜெயலலிதா சேர்த்துள்ள பணம் சட்ட விரோதமான வகைகளில் சேர்க்கப்பட்ட பணம் என்பதற்கு ஆதாரத்தை சமர்பிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

 

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/can-u-prove-jayalalitha-got-propery-in-illegal-ways-116060100034_1.html

Link to comment
Share on other sites

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

 

 
 
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்
முதல்வர் ஜெயலலிதா | கோப்புப் படம்

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பும், ஜெயலலிதா தரப்பும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கில் 6 தனியார் நிறுவனங்கள் இறுதி வாதத்தை முன்வைத்தன. அப்போது, கர்நாடக அரசு சார்ப்பில் வழக்கறிஞர் சித்தார்த் லுத்ராவும், தனியார் நிறுவனங்கள் சார்பில் ஹரின் ராவலும் வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்தவுடன் வழக்கினை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், கர்நாடக அரசு தரப்பும், ஜெயலலிதா தரப்பும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் எழுத்துபூர்வ வாதத்தை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/india/ஜெ-சொத்துக்-குவிப்பு-வழக்கின்-தீர்ப்பை-தேதி-குறிப்பிடாமல்-ஒத்திவைத்தது-உச்ச-நீதிமன்றம்/article8700885.ece

Link to comment
Share on other sites

அதிமுகவை அலற வைக்கும் ஆகஸ்ட்? சொத்துக் குவிப்பு வழக்கின் பைனல் எபிசோட்

supremecourt-jaya-achariyalong.jpg


முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்ததையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. ஆகஸ்ட் மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு பேரும் குற்றவாளி என்ற பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். மற்ற மூன்று பேருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி, நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு சரிவர நிரூபிக்கவில்லை. எனவே சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு சாதகமாக்கி அனைவரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. மேலும் நீதிபதி குமாரசாமி போட்ட கணக்கும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த நிலையில் ஜெயலலிதா உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசும், திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தரப்பும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் பினாகி கோஷ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. கடந்த ஜூன் 1ம் தேதி நடந்த விசாரணையின்போது, வருமானத்திற்கு மீறிய வகையில் சொத்து குவிப்பது குற்றமல்ல என்று நீதிபதிகள் பரபரப்பான கருத்தை தெரிவித்தனர். மேலும், சொத்துக்கள் வாங்க பயன்படுத்தப்பட்ட பணம் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் கேட்டனர்.
 

sasikala-elavarasi-jaya-sudhakaran1.jpg

இந்த நிலையில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி மனு செய்திருந்த நிறுவனங்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அனைத்துத் தரப்பும் தங்களது எழுத்துப்பூர்வ வாதத்தை வரும் 10ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

முன்னதாக இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இந்தோ தோஹா கெமிக்கல்ஸ் அன்ட் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம், சிக்னோரா என்டர்பிரைசஸ், ராமராஜ் அக்ரோ மில்ஸ் லிமிட்டெட், மிடோ அக்ரோ பார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜராகி வாதிடுகையில், இந்த நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது சரியான நடவடிக்கைதான் என்று வாதிட்டார். ஜெயலலிதா தரப்பில் ஹரின் ராவல் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்.

தற்போது ஜெயலலிதா வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும் கூட அநேகமாக ஆகஸ்ட் மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/64972-jaya-assets-case-judgement-postponed-august.art

Link to comment
Share on other sites

  • 3 months later...
 
 
 
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வாரத்தில் தீர்ப்பு
 
 
 
 
 
 
Tamil_News_large_1603173_318_219.jpg
 
Share this video : facebooktop.jpgtwittertop.jpg
 
 
ஜெ.,சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு
 

புதுடில்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கடந்த 1991 முதல் 96ம் ஆண்டு வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தி.மு.க., அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஜெ.,வுடன் அவரது தோழி சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு கோர்ட், நான்கு பேருக்கும் தண்டனை வழங்கியது. இதனால் முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார், இதன் பின்னர் நான்கு பேரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த பெங்களூரு ஐகோர்ட் நான்கு பேரையும் விடுதலை செய்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

 

இந்நிலையில், ஜெ., சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா, சொத்துக்குவிப்பு வழக்கில் எனக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தங்கள் தரப்பட்டதாக புத்தகம் ஒன்றில் கூறியிருந்தார். இதனையடுத்து, தமிழகத்தை சேர்ந்த பி.ரத்னம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், சொத்து குவிப்பு வழக்கில் ஆச்சார்யா ஆஜரான போது, அவருக்கு அழுத்தங்கள் இருந்ததாக கூறினார். எனவே அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி மனுத்தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதாக கூறி நான்கு வாரங்களுக்கு ரத்னம் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1603173

Link to comment
Share on other sites

  • 2 months later...

ஜெயலலிதா மறைவு.. சொத்துக்குவிப்பு வழக்கில் இனி என்ன நடக்கும்?

 

டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துள்ள நிலையில், அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கு நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

What happens to the disproportionate assets case against J Jayalalithaa

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, நடராஜன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த ஜெயலலிதா இறந்துள்ள நிலையில், இருவகையில் வழக்கு பயணிக்க கூடும். ஒருவேளை இந்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டால் அத்தோடு அந்த பிரச்சினை ஓயும். பெங்களூர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தால் அப்போது சட்டத்திற்கு வேலை வரும்.

 

ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுக்க முடியாது என்றபோதிலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாநில அரசிடம் ஒப்படைக்கப்படும். மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் சம்மந்தப்பட்ட பிற குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/what-happens-the-disproportionate-assets-case-against-j-jayalalithaa-269121.html

Link to comment
Share on other sites

சொத்துக் குவிப்பு வழக்கு இனி என்னவாகும்? சட்ட நிபுணர்கள் விளக்கம்

 

 
jaya_Sasikala


புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு செய்த சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு இனி என்னவாகும்? தீர்ப்பு வழங்கப்படுமா? மறு விசாரணை நடத்தப்படுமா? என்ற கேள்விகளுக்கு இரு வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன.

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதில், முக்கிய நபராக ஜெயலலிதா சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில், வழக்கு முடித்து வைக்கப்படுமா அல்லது சசிகலா நடராஜன், வி.என். சுதாகரன், இளவரசி ஆகியோர் தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்குமா என்று சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சட்டத்துறை நிபுணர்களும் இரு வேறு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் இது குறித்து ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு கைவிடப்படும். குற்றவியல் சட்டப் பிரிவு 394ன் படி, அனைத்து முறையீட்டு வழக்குகளும் - குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்டாலும் - குற்றம்சாட்டப்பட்டவரின் மரணத்தைத் தொடர்ந்து வழக்கு கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த வழக்கை கைவிடுவதா அல்லது மேற்கொண்டு மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான தீர்ப்பை வெளியிடுவதா என்பது குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே கூறுகையில், இந்த வழக்கில், மற்ற குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால், நீதிபதிகள், அது குறித்த தீர்ப்பை பதிவு செய்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டில், முக்கியக் குற்றவாளி மற்றும் அரசு ஊழியரின் மரணத்தைத் தொடர்ந்து வழக்கு கைவிடப்படாது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களின் குற்றங்கள் குறித்து விசாரிக்கலாம் என்றும் தெரிவிக்கிறார் சால்வே.

அதே சமயம், குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர் இறந்து விட்டால்... அரசுப் பதவியை துஷ்ப்பிரயோகம் செய்ததுதான் முக்கிய வழக்கு என்றால், பிறகு அந்த வழக்கின் விசாரணையில் என்ன இருக்கிறது? என்று மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான கேடிஎஸ் துள்சி கூறியுள்ளார்.

விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாகவிருந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இதனிடையே, வழக்கில் மற்ற நபர்கள் மீதான தீர்ப்பு வெளியாகுமா அல்லது வழக்கு கைவிடப்படுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றமே முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பாதிக்காது: சட்ட நிபுணர்களின் அலசல்

 

 
 
court_3063841f.jpg
 
 
 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் அவர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பாதிக்கப்படாது என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்த தாக வழக்கு தொடரப்பட்டது. இவ் வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து ஜெய லலிதா தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஜெய லலிதா உள்ளிட்ட நால்வரையும் விடுவித்தது.

இதை எதிர்த்து க‌ர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி கள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இவ்வழக்கில் வாதங்கள் நிறைவடைந்த நிலை யில் கடந்த ஜூன் மாதம் 4-ம் தேதி, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட‌து. இந் நிலையில் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானதால், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு பாதிக்கப் படுமா? என கேள்வி எழுந்தது.

இதுகுறித்து சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ‘தி இந்து'விடம் கூறியதாவது:

ஜெயலலிதா காலமானதால் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்து விடாது. இவ்வழக்கில் முதல் குற்றவாளி யாக குற்றம்சாட்டப்பட்ட ஜெய லலிதாவை தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய குற்றம்சாட்டப்பட்ட வர்கள் உயிரோடு உள்ளனர். எனவே அனைத்துவித விசாரணையும் முடிந்துள்ள நிலையில் உச்ச நீதி மன்றம் சட்டப்படி தீர்ப்பு வழங்கும்.

மொத்தத்தில் ஒரு வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றம் சாட்டப்பட்டு இருந்தால், அவர் இறந்த பிறகு வழக்கு முடித்து வைக்கப்படும். ஆனால் இவ்வழக்கில் ஜெயலலிதா மட்டுமே காலமானதால் சசிகலா உள்ளிட்ட மூவரும், தனியார் நிறு வனங்களின் நிர்வாகிகளும் உயிரோடு இருப்பதால் வழக்கு தொடர்ந்து நடைபெறும். எக்காரணம் கொண்டும் வழக்கு முடித்து வைக்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டுசதி இருக்கிறதே

இவ்வழக்கின் மூன்றாம் தரப் பான திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் வழக்கறிஞர் சரவணன் கூறும்போது, “ஜெய லலிதாவின் மறைவால் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக் கும் தீர்ப்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. வழக்கம் போல தீர்ப்பு அறிவிக்கப்பட்டால் ஜெய லலிதாவை தவிர சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் சட்டத் துக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

ஏனென்றால் நீதிமன்றத்தின் அனைத்து விசாரணைகளும் முடிந்துள்ள நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துள்ளார். மற்ற குற்றம்சாட்டப்பவர்கள் உயிரோடு இருப்பதால் வழக்கு முடித்து வைக் கப்பட மாட்டாது.

இவ்வழக்கில் பொது ஊழிய ரான ஜெயலலிதா, மூவருடன் கூட்டு சதியில் ஈடுபட்டு சொத்து குவித்தார் என குற்றம் சாட்டப்பட் டுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு சசிகலா உள்ளிட்ட மூவரும் பினாமி யாக செயல்பட்டுள்ளனர் என்பதை விசாரணை நீதிமன்றம் உறுதி செய் துள்ளது. இவ்வழக்கில் ஜெய லலிதா உள்ளிட்ட நால்வரும் சமமாக குற்றம் புரிந்ததால்தான் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப் பட்டது. பொது ஊழியரான ஜெய லலிதா தனது கடமையிலிருந்து தவறியதாலேயே அவருக்கு ரூ.100 கோடியும், மற்றவர்களுக்கு தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக் கப்பட்டது. எனவே சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் புரிந்த குற்றத்தை எவ்விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது.

ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறந்தாலும், வழக்கை முடித்து வைக்க முடியாது. இறந்த பின்பும் மற்ற வர்களுக்கு பாடம் புகட்டும் வகை யில் சட்டப்படி தண்டனை அறிவிக் கப்பட்ட வழக்குகளும் இருக்கிறது” என்றார்.

நீதிமன்றம் முடிவு செய்யட்டும்

இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களிடம் கேட்ட போது, “பொதுவாக ஒரு வ‌ழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் இற‌ந்துவிட்டால் குற்றவியல் நடை முறை சட்டப் பிரிவு 394-ன் படி வழக்கு கைவிடப்படும். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெய லலிதா இறந்து, மற்றவர்கள் உயிரோடு இருப்பதால் அந்த சட்டம் பொருந்துமா என்பது சந்தேகம் தான். ஏற்கெனவே கர்நாடக உயர் நீதிமன்றம் இவ்வழக்கில் நால்வரை யும் விடுவித்ததால் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பே தேவையில்லை.

அதேநேரம் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின் போது ஜெயலலிதா உயிரோடு இருந்து, வழக்கை முழுமையாக நடத்தியுள் ளார். அனைத்து விதமாக விசார ணையும் முடிந்து தீர்ப்பு மட்டுமே நிலுவையில் உள்ள நிலையில் வழக்கை வெறுமனே முடித்து வைக்க முடியாது. எதுவாக இருந்தா லும் அதை உச்ச நீதிமன்றம் தான் முடிவு செய்யும்” என்றனர்.

http://tamil.thehindu.com/india/தமிழக-முதல்வர்-ஜெயலலிதாவின்-மறைவால்-சொத்துக்குவிப்பு-மேல்முறையீட்டு-வழக்கின்-தீர்ப்பு-பாதிக்காது-சட்ட-நிபுணர்களின்-அலசல்/article9416597.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பில் உள்ளதா சசிகலா அரசியல் எதிர்காலம்! சட்ட நிபுணர்கள் சொல்வது என்ன?
 

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு சசிகலா நடராஜனின் அரசியல் எதிர்காலத்திற்கு முட்டுக் கட்டை போடுமோ என்ற பேச்சு சட்ட வல்லுநர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் சசிகலா.

இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அப்பட்டியலில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெயலலிதாவை ஊழல் செய்ய தூண்டியது சசிகலா என்பது குற்றச்சாட்டு.

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பு படி ஜெயலலிதா உள்பட நால்வருமே குற்றவாளிகளாகும். ஆனால் ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பு படி நால்வரும் நிரபராதிகளாகினர்.

 

சின்னம்மா

சின்னம்மா

வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. கர்நாடக தரப்பில் வாதிடும்போது கூட, சசிகலாவை அதிமுக வட்டாரத்தில் சின்னம்மா என்றுதான் அழைக்கிறார்கள். அவர் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம்மிக்க சக்தியாக உள்ளார் என்ற வாதம் முன் வைக்கப்பட்டிருந்தது.

 

தீர்ப்பு ஒத்தி வைப்பு

சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு பாதகமாக வந்தால் சசிகலா அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

ஊழல் தடுப்பு

ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழும் சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா முதல்வராக பதவி வகித்த காலத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு என்பதால், அரசு பதவியில் இருப்பவர்கள் ஊழல் செய்தால் பயன்படுத்தப்படும் இந்த சட்ட பிரிவு பயன்படுத்தப்பட்டது.

 

சசிகலாவுக்கு பொருந்துமா?

இதே சட்டப்பிரிவின்கீழ் சசிகலாவை தண்டிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அவர் அரசாங்க பதவியில் இல்லாதவர். இதுகுறித்து 'ஒன்இந்தியா' சட்ட வல்லுநர்கள் சிலரின் கருத்துக்களை கேட்டது. அவர்கள் கூறுகையில், ஐ.பி.சி சட்டப்பிரிவின்படி, சசிகலா சதி செயலில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா உள்ளிட்டோர் மீது பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இந்த சட்டப் பிரிவுகளின்கீழும்தான் தண்டனை வழங்கியது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

சந்தோஷ் ஹெக்டே

சந்தோஷ் ஹெக்டே

சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கூறுகையில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் அரசு பதவியில் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், ஜெயலலிதா அரசு பதவியில் இருந்தவர், அவருக்கு சசிகலா தூண்டுதலாக இருந்து ஊழல் செய்தார் என்ற அடிப்படையில் சசிகலா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தண்டனை விதிக்க முடியும்.

 

ஜெயலலிதா இறந்தாலும் விடாது வழக்கு

ஜெயலலிதா உயிரோடு இல்லாத இந்த சூழலில், ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் பலருக்கு எழுகிறது. ஆனால், ஜெயலலிதா இறந்தால் கூட அவர் மீதான குற்றச்சாட்டு உயிர்ப்போடுதான் உள்ளது. எனவே ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின்கீழ் பதியப்பட்ட வழக்கு மாறாது. ஒருவேளை பெங்களூர் நீதிமன்ற, நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால், ஜெயலலிதாவுக்கு தண்டனை தர முடியாதே தவிர மற்றவர்களுக்கு தண்டனை தர முடியும். வழக்கு இறுதி கட்டத்தில் இருக்கும்போது, சட்டப் பிரிவில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றார்.


Read more at: http://tamil.oneindia.com/news/india/will-the-disproportionate-assets-case-stand-the-way-sasikala-rise/slider-pf216966-270120.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை (பிப்.,14) தீர்ப்பு
 
Tamil_News_large_1710077_318_219.jpg
 

புது டில்லி: ஜெயலலிதா மற்றும் சசி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகிறது.
தமிழகத்தில் முதல்வராக ஜெ., இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குன்கா தலைமையிலான சிறப்பு கோர்ட் ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இதில் 4 பேரையும் ஐகோர்ட் விடுவித்தது. இதனை தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

 

முதல்வரை தீர்மானிக்கும் தீர்ப்பு :

 

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (செவ்வாய் கிழமை) காலை 10.30 மணிக்கு வெளியிட உள்ளது. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவும் சூழலில், இந்த தீர்ப்பு தான் தமிழகத்தின் முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710077

Link to comment
Share on other sites

ஜெ- சசி சொத்து குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு: 2 நீதிபதிகளும் தனித்தனி தீர்ப்புகள் தர வாய்ப்பு?!

 

ஜெயலலிதா, சசிகலாவிற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.

 சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் இந்த தீர்ப்பினை அளிக்க உள்ளது. இது தமிழ்நாட்டின் தலையெழுத்தையை மாற்றும் தீர்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

 

1991-1996 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி , ஜெயலலிதா சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சிறை தண்டனை விதித்தார் . இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்ற மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனிநீதிபதி குமாரசாமி அனைவரையும் விடுதலை செய்தார்.

 

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் விசாரித்து தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. இவ்வழக்கின் தீர்ப்பை விரைந்து வழங்க கடந்த வாரம் கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வலியுறுத்தி இருந்தார். அப்போது இன்னும் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி பினாக்கி கோஷ் தெரிவித்திருந்தார்.

 

இதனிடையே நாளை பிப்ரவரி 14ஆம் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பினாக்கி கோஷ், அமித்வா ராய் பெஞ்ச் இந்த தீர்ப்பினை அளிக்க உள்ளது. ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவருக்கு தண்டனை பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு இல்லை. அதே நேரத்தில் இத்தீர்ப்பு சசிகலாவுக்கு முக்கியமானது.

தீர்ப்பு வருவதற்குள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என சசிகலா துடித்துக் கொண்டிருக்கிறார். இதற்காக எம்.எல்.ஏ.க்களை சிறைபிடித்து ஹோட்டலில் அடைத்து வைத்துள்ளார். தமிழக ஆளுநரோ இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். சசிகலா தலை தப்புமா? அவர் முதல்வர் நாற்காலியில் அமருவாரா என்பது நாளை தெரியவரும்.

இந் நிலையில், இரு நீதிபதிகளும் தனித் தனியாக தீர்ப்பை அளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கினால், இந்த வழக்கு மீண்டும் 3 நீதிபதிகள் பெஞ்ச் வசம் ஒப்படைக்கப்படும். அந்த பெஞ்ச் விசாரித்து அளிக்கும் தீர்ப்பே இறுதியானதாகும்.

 
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-da-verdict-likely-be-delivered-on-tuesday-1-273996.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.