Jump to content

பிரான்சில் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்


Recommended Posts

பரிசில் Charlie Hebdo என்ற பத்திரிகை அலுவலகத்தில் இன்று காலை வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது 2 ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 10 க்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சரியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை.

 

இந்தப் பத்திரிகை முகமது நபியின் கார்டூன் படங்களை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.francesoir.fr/societe-faits-divers/charlie-hebdo-au-moins-10-morts-suite-une-attaque-la-kalachnikov-contre-le

Link to comment
Share on other sites

தப்பியவர்கள் கட்டடத்தின் கூரையில் இருந்து தகவல் வழங்குகின்றனர்

B6vdKSgIUAE7jeT.jpg

 

2154040_pic_970x641.jpg

 

 

போலீஸ் வாகனமும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளது.

B6viYn6IYAAul73.jpg

 

B6vjNwUIgAAw-OB.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பாரீஸில் பத்திரிக்கை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு: 11 பேர் பலி- பாக்தாதி கார்டூன் காரணமா?
 
Posted by: Siva Updated: Wednesday, January 7, 2015, 17:40 [iST]
பாரீஸ்: பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வார இதழ் அலுவலகத்திற்குள் புகுந்த 2 பேர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸைச் சேர்ந்த வார இதழ் சார்லி ஹெப்டோ. அதன் பாரீஸ் அலுவலகத்திற்குள் இன்று இரண்டு ஆண்கள் நுழைந்து திடீர் என கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து ஓடிவிட்டதாக அவர்களை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஏதாவது செய்தியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது சார்லி ஹெப்டோவுக்கு வழக்கமாகிவிட்டது. அண்மையில் அந்த வார இதழ் உலகின் பணக்கார தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி பற்றி கார்டூன் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் தான் இன்று சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது.
 
Link to comment
Share on other sites

பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தபோதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பரிசில் கூடியுள்ளனர். பலர் தமது பேனாக்களை உயர்த்தியவாறு சென்றனர்.

B6wqAzuIcAAq8ol.jpg

B6wzD7EIYAEJonF.jpg

 

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 3 கார்டூன் வரைபவர்களும் பத்திரிகையின் முக்கிய அதிகாரியும் அடங்குவர்.

 

பரிசின் ஏனைய பத்திரிகையாளர்கள்  I am Charlie என்ற வாசகத்தை ஏந்தி, Charlie போன்ற பலர் இன்னும் உள்ளோம் என்ற கருத்தைத் தெரிவித்தனர்.

B6wlt2aCUAEoE7b.jpg


b92d6048f42607088dd9ce1c3a8b81fd0b0ed6e1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முகமட்டை பற்றி சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் வெளியிட்ட பிரதம பத்திரிகையாளரும் இறந்ததாக பிபிசியில் சொன்னார்கள். அவருக்கு ஏலவே மரண எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொலிஸ் பந்தோபஸ்தில் இருந்தவராம். அவரையும் இலக்கு வைத்துவிட்டார்கள்.

 

இதில் அச்சப்பட வேண்டிய விடயம்.. தாக்குதல் நடத்திய விதமும்.. தாக்குதலாளிகள் தப்பிச் சென்றதும். இது முழு ஐரோப்பாவுக்குமே ஆபத்தான நிலையாகும். :(:icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18h30 - Point presse du procureur de Paris, François Molins

Les auteurs de l'attaque contre Charlie Hebdo, qui a fait 12 morts et 11 blessés mercredi selon un nouveau bilan, criaient "Allah akbar" et "affirmaient vouloir venger le prophète". Le magistat a évoqué un groupe d'"au moins deux individus", ajoutant qu'un témoin avait fait état de trois assaillants. 

 

Le point à 18 heures -  Un commando lourdement armé a fait irruption ce matin dans les locaux de l'hebdomadaire satirique Charlie Hebdo, tuant 12 personnes, dont 4 dessinateurs emblématiques du journal. Une attaque d'une grande violence, faisant de cet attentat le plus meurtrier perpétré sur le sol français depuis plus de 50 ans. 

Les trois terroristes ont pris la fuite à bord d'un premier véhicule, qu'ils ont ensuite abandonné. Leur trace a été perdue par les forces de l'ordre aux alentours de la porte de Pantin. Depuis, la chasse à l'homme se poursuit. Toutes les forces de polices sont moblisées. Les enquêteurs ont lancé un appel à témoin. Un numéro vert a été mis à disposition pour receuillir tout témoignage, le 08-05-02-17-17.

Depuis près de neuf ans, l'hebdomadaire est menacé par la mouvance islamiste radicale. En novembre 2011, le siège de Charlie Hebdo avait été détruit dans un incendie criminel. L'hébdomadaire  publiait alors en Une une caricature du prophète Mahomet. Depuis le journal était visé par des menaces constantes et faisait l'objet d'une protection policière.

Le chef de l'Etat a tout de suite évoqué un attentat terroriste. Il a précisé que plusieurs  projets d'attaque avaient été déjoués ces dernières semaines et s'est engagé à punir les agresseurs. Il s'adressera aux Français depuis l'Elysée à 20 heures. 

Le plan Vigipirate a été relevé en Ile-de-France au niveau "alerte attentats", le degré le plus élevé.

17h45 - La France cible d'attentats meurtriers

L'attentat, qui a fait au moins douze morts mercredi contre les locaux de Charlie Hebdo à Paris, est le plus meurtrier en France depuis la guerre d'Algérie. Voici un rappel des attaques terroristes les plus meurtrières perpétrées depuis 1978 sur le territoire.

 
 
Close
 

17h40 - Le ministère de l'Intérieur annonce que près de 500 CRS et gendarmes mobiles sont déployés en renfort à Paris

17h35 - La page Facebook créée ce matin en soutien à la rédaction de Charlie Hebdo compté déjà plus de 110.000 adhérents. Elle fait notamment le point sur le rassemblement qui se déroule en ce moment même à Paris, place de la République. Plusieurs milliers de personnes, journalistes, politiques et anonymes, sont déjà sur place.

17h30 - Le député-maire UMP de Nice Christian Estrosi demande à l'Etat "de placer toutes les grandes villes de France en plan Vigipirate alerte attentat", après l'attentat meurtrier au siège du journal Charlie Hebdo.

17h15 - Le fondateur du festival clermontois Rendez-vous du carnet de Voyage, Michel Renaud, figure parmi les douze victimes de l'attentat sanglant perpétré mercredi dans les locaux du journal satirique Charlie Hebdo.

Michel Renaud fut en outre le directeur de la communication de l'ancien ministre et maire socialiste Roger Quilliot, puis le directeur de cabinet de son successeur Serge Godard, premier magistrat de la ville pendant 17 ans. 

17h10 - Les drapeaux en berne sur l'Elysée, l'Assemblée nationale et le Sénat.  François Hollande, qui a décidé de maintenir la cérémonie de voeux aux autorités religieuses prévue à 18h au palais présidentiel, a en revanche décidé de reporter ses voeux aux corps constitués initialement prévus demain matin. 

16h30 - Vigipirate au niveau "alerte attentat"

Le plan Vigipirate a été rénové l'an dernier pour mieux anticiper et répondre à la complexité croissante de la menace terroriste. Quels sont les principaux changements ?

16h10 - Voici un texte publié par Charb, directeur de la rédaction de Charlie Hebdo, tué ce matin. Il l'avait publié en octobre 2012. Il s'intitule "Rire, bordel de Dieu" : 

"Peins un Mahomet glorieux, tu meurs.

Dessine un Mahomet rigolo, tu meurs.

Gribouille un Mahomet ignoble, tu meurs.

Réalise un film de merde sur Mahomet, tu meurs.

Tu résistes à la terreur religieuse, tu meurs.

Tu lèches le cul aux intégristes, tu meurs.

Pends un obscurantiste pour un abruti, tu meurs.

Essaie de débattre avec un obscurantiste, tu meurs.

Il n’y a rien à négocier avec les fascistes. 

La liberté de nous marrer sans aucune retenue, la loi nous la donnait déjà, la violence systématique des extrémistes nous la donne aussi.

Merci, bande de cons."

Charb

16h00 - Manuel Valls : "la France a été touchée dans son coeur. Chaque Français aujourd'hui est touché, horrifié",a déclaré le Premier ministre après une visite au commissariat du XIe arrondissement où travaillait l'un des policiers tués. Et d'ajouter : "la seule chose que nous pouvons leur dire (aux Français, ndlr), c'est que nous ferons tout, et c'est ça l'essentiel de la tâche des forces de l'ordre sous l'autorité de la justice, pour appréhender ces individus. C'est la seule tâche, c'est le seul objectif dans les heures qui viennent".

15h50 -  Bernard Maris, économiste et chroniqueur sur France Inter, tué dans l'attentat. Bernard Maris a écrit pour différents journaux : Marianne, Le Nouvel Observateur, Le Figaro Magazine, Le Monde et Charlie Hebdo, dans lequel il prend la plupart du temps le pseudonyme d'"Oncle Bernard"

 

15h20 - Parmi les victimes les dessinateurs Charb, Cabu, Georges Wolinski et Tignous. Portrait, en image, de ceux qui croquaient l’actualité depuis plusieurs années..

 

15h20 - A l'issue de la réunion de crise qui s'est tenue à l'Elysée, Bernard Cazeneuve s'est exprimé. Le ministre de l'Intérieur  a confirmé le bilan : 12 morts, 8 blessés dont 4 en situation d'urgence absolue. Il a également avancé le nombre de "trois criminels" qui sont toujours activement recherchés.

15h15 - Appel à témoins lancé par les enquêteurs

Un numéro vert (08.05.02.17.17) a "été mis à disposition" et "activé" afin de recueillir tout témoignage sur cet attentat

14h45 - Nicolas Sarkozy : "un impératif d'unité nationale"

Nicolas Sarkozy vient de tenir un point presse au siège de L'UMP : "c'est une atatque directe à la liberté d'epxression. Mes premières pensées vont aux victimes de cet attentat barbare. Les couplabes doivent être pousuivis et chatiés avec la plus extrême sévérité. Notre démocratie est attaquée, nous devons la défendre sans faiblesse. 

Le gouvernement doit prendre des mesures fortes. Notre formation politique soutiendra sans réserve toutes les initiatives du gouvernement qui iront dans ce sens. C'est un impératif d'unité nationale. "

14h40 - Le monde sous le choc

Les réactions affluent du monde entier : 

- Angela Merkel : "cet acte abominable n'est pas seulement un attentat contre la vie de citoyens français et leur sécurité. Il s'agit aussi d'un attentat contre la liberté de parole et la liberté de la presse, des éléments fondamentaux de notre culture de liberté démocratique." 

- David Cameron : "les meurtres de Paris sont écoeurants. Nous sommes aux côtés du peuple français dans le combat contre la terreur et la défense de la liberté de la presse."

- Josh Earnest (porte-parole de la Maison Blanche) : "il s'agit d'un acte de violence terrible que nous condamnons avec la plus grande fermeté. Nos pensées vont à nos alliés français. Si les auteurs sont encore en liberté, nous les pourchasserons et nous coopérerons avec les Français dans ce but."

14h25 - Les dessinateurs Charb, Wolinski, Cabu et Tignous sont morts dans l'attentat.

14h15 - Pour la présidente du Front national Marine Le Pen, l'attaque perpétré dans les locaux de Charlie Hebdo est "un attentat terroriste commis par des fondamentalistes islamistes". "Aujourd'hui, si vous voulez, c'est le moment de la compassion à l'égard des victimes, des policiers, des journalistes, de leurs familles, des blessés, face à ce qu'il faut nommer: un attentat terroriste commis par des fondamentalistes islamistes" a-t-elle déclaré.

14h10 - Un hastag de soutien #JeSuisCharlie se propage sur Twitter. Par ailleurs, le Parti socialiste appelle à une "marche des Républicains" "dès que cela sera possible".

 

14h05 - EN VIDEO - Un hebdomadaire déjà visé

Comment expliquer un tel massacre ? Charlie Hebdo est un hebdomadaire satirique qui avait déja été visé à plusieurs reprises, notammment pour la diffusion de caricatures de Mahomet.

 

14h00 - Le point sur l'attentat 

L'attentat perpétré à Paris dans les locaux de l'hebdomadaire satirique Charlie Hebdo par deux hommes cagoulés et lourdement armés a fait au moins 12 morts, ce matin, bilan le plus meurtrier d'un attentat depuis au moins 40 ans en France. Les dessinateurs Cabu, Charb et Tignous auraient été tués.

François Hollande préside actuellement une réunion de crise à l'Elysée. Le plan vigipirate a d'ores et déjà été élevé à son niveau le plus haut. 

  •  

13h57 - La protection des écoles renforcées

Les sorties scolaires dans les académies de Paris, Créteil et Versailles et les activités en dehors des établissements sont suspendues jusqu'à nouvel ordre.

13h52 - Voici le dernier dessin de Charb, tué dans l'attentat terroriste contre Charlie Hebdo. Il avait été publié dans le dernier numéro du journal satirique.

1e8dc780-966c-11e4-b62d-077f250d723a_chaDernier dessin de Charb

13h50 - Le Conseil du culte musulman condamne un "acte barbare" contre "la démocratie". L'instance représentative de la première communauté musulmane d'Europe, forte de 3,5 à 5 millions de membres, a réagi dans un communiqué au nom des "musulmans de France". De son côté, l'Union des organisations islamiques de France (UOIF), proche des Frères musulmans, a condamné "de la manière la plus ferme cette attaque criminelle et ces horribles meurtres".

13h45 - Selon des témoins, les agresseurs ont crié "nous avons vengé le prophète!". 

13h35 - Nicolas Sarkozy, président de l'UMP, s'exprimera à 14h30 en direct depuis le siège de l'UMP.

13h27 - Selon Le point les dessinateurs Cabu et Charb seraient morts dans l'attentat terroriste contre Charlie Hebdo. 

 

13h26 - François Hollande "interviendra à 20 heures depuis l'Elysée" (présidence).

 
13h25 -  Les organes de presse, les grands magasins, les lieux de culte et les transports sont placés en "protection renforcée". 

"Toutes les forces disponibles sont mobilisées et des renforts civils et militaires seront déployés dans le cadre du plan Vigipirate", que Manuel Valls vient de relever au niveau le plus élevé d'"alerte attentat", indique Matignon dans un communiqué. "Tous les moyens sont mis en oeuvre pour identifier, traquer et interpeller les auteurs" de l'attaque.

13h20 - Le bilan encore provisoire fait état de 12 morts, dont deux policiers. On déplore également une vingtaine de blessés dont quatre sont grièvement atteints.

13h05 - La classe politique sous le choc

 - François Fillon, ancien Premier ministre (UMP): "Horreur à Paris solidarité avec Charlie Hebdo". 

- Aurélie Filipetti, députée de Moselle (PS): "Face à l'horreur soyons plus que jamais solidaires, unis et fiers des valeurs de liberté et de tolérance de notre République"    

- Jean-Marc Ayrault, ancien Premier ministre (PS): "Horreur absolue: solidarité totale avec Charlie Hebdo, les policiers, leurs proches; la démocratie doit continuer à se défendre avec force!"

13h - Christophe Deloire (Reporters sans frontières) annonce le chiffre de 12 morts. Un bilan non confirmé pour le moment.

"C'est une attaque contre nos principes de liberté (...) Une violence démesurée, démente que l'on a jamais vu dans la presse française". 

12h50 - François Hollande sur place

Le président Hollande vient  de s'exprimer devant le siège de Charlie Hebdo. Visiblement très ému, il a confirmé le bilan de 11 morts et de quatre personnes dans un "état d'urgence absloue". 

Les auteurs seront "pourchassés aussi longtemps que nécessaire. La France est aujourd'hui devant un choc. Un attentat terroriste , ça ne fait pas de doute. Il faut faire bloc, montrer que nous sommes un pays uni. 

Nous sommes dans un moment extrêment difficile. Nous sommes menacés parce que nous sommes un pays de liberté" a notamment déclaré le chef de l'Etat.

12h450 - Le plan vigipirate est relevé à son plus haut niveau "alerte attentat" dans toute l'Ile-de-France (Matignon). Le niveau écarlate de Vigipirate est mis en place en cas de  menace certaine. Il vise à prévenir des attentats majeurs.

12h40 - Le #CharlieHebdo est en tête sur Twitter. Des milliers de personnes tiennent à exprimer leur indignation.

12h35 - François Hollande vient d'arriver sur les lieux de la fusillade qui a fait 11  morts. Une réunion de crise est prévue à 14 heures à l'Elysée. Outre Manuel Valls et Bernard Cazeneuve (Intérieur), Jean-Yves Le Drian (Défense), Christiane Taubira (Justice), Laurent Fabius (Affaires étrangères) et Fleur Pellerin (Culture et Communication), participeront à cette réunion.

RAPPEL DES FAITS 

Deux hommes, cagoulés et armés d'une kalachnikov et d'un lance-roquette, ont ouvert le feu au siège du journal Charlie Hebdo, dans le 11ème arrondissement de Paris, ce matin. Selon le dernier bilan, l'attaque a fait 12 morts, dont deux policiers

En quittant les lieux, les deux agresseurs ont blessé par balle un policier. Ils ont ensuite pris la fuite en voiture, braqué un automobiliste porte de Pantin et percuté un piéton. François Hollande a dénoncé un "acte d'une exceptionnelle barbarie". Le plan Vigipirate a été relevé à "alerte attentats", le niveau le plus élevé, dans toute l'Ile-de-France

 

Charb -Stéphane Charbonnier, alias Charb, tué à l'âge de 47 ans, était à la direction de la rédaction depuis mai 2009, après le départ de Philippe Val.
 

 

B6vzTAoCEAEusIa.jpg

Link to comment
Share on other sites

கனடா- பிரான்ஸ் நாட்டு நையாண்டி பத்திரிகை காரியாலயமான Charlie Hebdo-வில் புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதல் குறித்து கனடாவின் அரசியல் தலைவர்கள், குடிமக்கள் அனைவரும் கூட்டொருமைப்பாட்டுடன் தங்கள் ஆதரவையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

இந்த காரியாலயம் முகமூடி அணிந்த 3-மனிதர்களால் பிற்பகல் அளவில் தாக்கப்பட்டது. குறைந்தது 12-பேர்கள் வரையில் கொல்லப்பட்டதுடன் 10-பேர்கள் வரையில் காயமடைந்துள்ளனர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய பிரதம மந்திரி Stephen Harper இத்தாக்குதலை கண்டித்திருப்பதுடன் இது ஒரு காட்டுமிராண்டித்தனம் எனவும் தெரிவித்துள்ளார். பிரான்சில் இடம் பெற்ற இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் தான் திடுக்குற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்களது குடும்பத்தினருக்காக பிரார்த்திப்பதாகவும் அறிவித்துள்ளார்.

என்டிபி தலைவர் ரொம் மல்கெயர்  அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்திருப்பதாக கூறினார்.

லிபரல் தலைவர் ஜஸ்ரின் ட்றூடோ பிரான்ஸ் நாட்டவர்களிற்கு தனது அனுதாபத்தையும் ஆதரவையும் வழங்க முன்வந்துள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் இந்த தாக்குதலை கண்டித்திருப்பதோடு கனடிய குடிமக்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின் ஒற்றுமையான வெளிப்பாட்டையும் பாராட்டியுள்ளது.

புதன்கிழமை காலை இடம்பெற்ற இக்கொடிய சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் 10-பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதோடு 10-பேர்கள் வரை காயமடைந்துள்ளனர்.

முகமூடி அணிந்த மனிதர்கள் தானியங்கி ஆயுதங்களால் மத்திய பரிசில் அமைந்துள்ள பத்திரிகை காரியாலயத்தை தாக்கியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் பத்திரிகை வரலாற்றில் இது ஒரு இருட்டான நாள் என கூறப்படுகின்றது.

கடந்த 20-வருடங்களில் முதல் தடவையாக இடம்பெற்ற கொடிய தாக்குதல் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

paris-600x339.jpg paris2-600x400.jpg paris3-600x400.jpg paris4-600x400.jpg paris5-600x400.jpg paris7-600x400.jpg paris8-600x400.jpg

 

- See more at: http://www.canadamirror.com/canada/36450.html#sthash.mCVE0oNr.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முகமட்டை பற்றி சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் வெளியிட்ட பிரதம பத்திரிகையாளரும் இறந்ததாக பிபிசியில் சொன்னார்கள். அவருக்கு ஏலவே மரண எச்சரிக்கை விடுக்கப்பட்டு பொலிஸ் பந்தோபஸ்தில் இருந்தவராம். அவரையும் இலக்கு வைத்துவிட்டார்கள்.

 

இதில் அச்சப்பட வேண்டிய விடயம்.. தாக்குதல் நடத்திய விதமும்.. தாக்குதலாளிகள் தப்பிச் சென்றதும். இது முழு ஐரோப்பாவுக்குமே ஆபத்தான நிலையாகும். :(:icon_idea:

 

 

ஐரோப்பியர்களும் அராபியர்களும் வினையை விதைத்து வளர்த்துவிட்டார்கள்

ஆபத்தான காலத்தை இனிவரும் காலங்களில் சந்திக்கலாம்...

சிரியாவிலும் 

அதன் அயல்களிலும் நடக்கும் பயங்கரங்களுக்கு

ஐரோப்பாவிலிருந்து செல்லும் இளைஞர்களின் தொகை அதிகரித்து வருகிறது

பயிற்சியும் தலைகழுவலும் முடிந்து

ஐரோப்பாவுக்குள் பிரவேசிக்கும்

ஐரோப்பிய இளைஞர்களை எவ்வாறு தடுப்பது....???

இதிலேயே ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு இனி  தங்கியுள்ளது........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பத்திரிகையாளார்களது தேவையில்லாத வேலையால் எத்தனை உயிர்கள் அநியாயமாய் போய் விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பத்திரிகையாளார்களது தேவையில்லாத வேலையால் எத்தனை உயிர்கள் அநியாயமாய் போய் விட்டது.

 

நீங்கள் தேவையற்றவேலை என்கிறீர்கள்

அவர்கள் அது தமது பத்திரிகைச்சுதந்திரம் என்கிறார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தேவையற்றவேலை என்கிறீர்கள்

அவர்கள் அது தமது பத்திரிகைச்சுதந்திரம் என்கிறார்கள்...

கருத்துச் சுதந்திரம்,எழுத்து சுதந்திரம்,பத்திரிகை சுதந்திரம் எல்லாம் இருக்க வேண்டும்.ஆனால் இங்கு அளவுக்கு மீறிப் போனதால் கொலையில் முடிந்திருக்குது.பத்திரிகையாளார்கள் சமூகத்தில் பொறுப்பாக செயற்பட வேண்டும்.ஒரு செய்தியை எழுதுவதற்கும்,கேலி சித்திரமாக வரைந்து நக்கலடிப்பதற்கும் வித்தியாசம் இருக்குது...தொடர்ந்து அவர்களது கடவுளை,தலைவனை பேனாவால் நக்கலடிசால் அவன் துப்பாக்கியால் தன்ட வேலையைக் காட்டிட்டான்...இந்த கொலைகாரர்கள் செய்தது சரி என சொல்லவில்லை.ஆனால் அவர்களை தேவையில்லாமல் கொலை செய்யத் தூண்டியது இந்த பத்திரிகையாளார்கள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சுதந்திரம்,எழுத்து சுதந்திரம்,பத்திரிகை சுதந்திரம் எல்லாம் இருக்க வேண்டும்.ஆனால் இங்கு அளவுக்கு மீறிப் போனதால் கொலையில் முடிந்திருக்குது.பத்திரிகையாளார்கள் சமூகத்தில் பொறுப்பாக செயற்பட வேண்டும்.ஒரு செய்தியை எழுதுவதற்கும்,கேலி சித்திரமாக வரைந்து நக்கலடிப்பதற்கும் வித்தியாசம் இருக்குது...தொடர்ந்து அவர்களது கடவுளை,தலைவனை பேனாவால் நக்கலடிசால் அவன் துப்பாக்கியால் தன்ட வேலையைக் காட்டிட்டான்...இந்த கொலைகாரர்கள் செய்தது சரி என சொல்லவில்லை.ஆனால் அவர்களை தேவையில்லாமல் கொலை செய்யத் தூண்டியது இந்த பத்திரிகையாளார்கள் தானே

 

உண்மை ரதி

உங்கள் கருத்துத்தான் எனதும்.....

பல இன மக்கள் வாழும் நாடான  பிரான்சில்  இது போன்ற பணத்துக்காகவும் பிரபல்யத்துக்காகவும் செய்யப்படும்   நக்கல்களும்  நோகடித்தல்களும் முதலில் தடைசெய்யப்படணும் என்பதே எனது நிலையுமாகும்.

நன்றி  ரதி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட இப்படுகொலைகளை எதுவித புனிதக் காரணங்களையும் கொண்டு நியாயப்படுத்திவிடமுடியாது. முகம்மது நபிகளை மாத்திரமல்ல சகல மதத்தலைவர்களையும், அதிகாரங்களின் உச்சியில் இருப்பவர்களையும் கேலிச்சித்திரங்கள் வரைந்து ஜனநாயகம் நிலவும் நாடுகளில் கருத்துச் சுதந்திரத்தை நிலைநாட்டியவர்களில் பலர் கொல்லப்பட்டிருப்பது கண்டிக்கப்படவேண்டியது.

மதிப்பையும் புகழையும் தக்கவைத்துக் கொள்ள அதிகாரத்தில் உள்ளவர்கள் எதுவித சீண்டல்களையும் அனுமதிப்பதில்லை. வடகொரியத் தலைவரும் சொனி நிறுவனம் தயாரித்த கேலியான படம் வெளிவருவதைத் தடுக்கமுனைந்ததையும் கவனிக்கவேண்டும்.

பணபலம் இல்லாத சாதாரணர்களின் உள்ளக்கிடக்கையை வெளிக்கொணர இப்படியான அங்கதம் நிரம்பிய படைப்புச் சுதந்திரம் மேற்கு நாடுகளில் தாராளமாக உள்ளது. ஆனால் இப்படுகொலைகள் பலரைச் சுயதணிக்கை செய்யப் பண்ணவும் கூடும்.

மேலும் அங்கதத்திற்கும் தமிழர்களுக்கும் ஒவ்வாமை இருப்பதால் நக்கல், நையாண்டிகளை ஏற்றுக்கொள்வதில்லை. நோகடிக்கின்றார்கள் என்று தமது கெளரவத்தைப் பாதுகாக்க கருத்துச் சுதந்திரத்தைத் எப்பாடுபட்டும் தடுப்பார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் MGR, சிவாஜியைப் பற்றி அங்கதமான ஆக்கங்களைப் படைத்து தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தார். அந்த ஆக்கங்களை அவர் வலைப்பதிவில் இருந்து நீக்கிய பின்னரும் தலைமறைவாகக் கொஞ்சக் காலம் இருக்கவேண்டியிருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச்சுதந்திரம் எனும் போர்வையில் சகல விடயங்களிலும் ஊடகங்களின் தலையீடு கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.

Link to comment
Share on other sites

பிரான்சில் 40 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறானதொரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாம். 

 

பிரான்ஸ் ஒரு ஜனநாயக நாடு. யாரையும் ஓர் எல்லைக்குள் நின்று விமர்சிக்கலாம். பிரெஞ்சு ஜனாதிபதி முதற்கொண்டு அனைத்து அரசியல்வாதிகளையும் கேலிச்சித்திரம் போட்டு அவமானப்படுத்தியது இப் பத்திரிகை. இன்று கேலிச்சித்திரம் வரந்தவர்கள் கொல்லப்பட்டபோது அதே ஜனாதிபதிதான் இக் கொலைகளுக்கெதிராகக் குரல் கொடுக்கிறார்.

 

முஸ்லிம்களின் பிரச்சனை என்னவென்றால் கேலிச்சித்திரம் வரைந்ததும் அதனைத் தகுந்த முறையில் எதிர்க்காமல் அவர்களுக்கு மரண தண்டனையை அறிவித்தது போன்ற தீவிர நடவடிக்கைகள். 

 

கடந்த சில நாட்களில் பிரான்சில் 2 தாக்குதல்கள் அல்லாஹு அக்பர் என்ற கோசத்துடன் நடத்தி முடிக்கப்பட்டன. இந்த இரண்டிற்கும் பொறுமை காத்தார்கள். மூன்றாவது தடவை கைவைக்கக் கூடாத இடத்தில் கைவைத்துள்ளனர். இதற்குச் சரியான பதில் தராவிட்டால் பிரான்சுக்கு மட்டுமல்ல மொத்த ஐரோப்பாவுக்குமே அவமானம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அண்மைக்காலமாக துப்பாக்கியே தூக்கத்தெரியாதவர்களுக்கு ஐரோப்பா ஆயுதங்களை பகிரங்கமாக இலவசமாக கொடுத்து உதவியது. அதன் பலாபலன்கள் தான் இவைகள்.
 
பல வருடங்களுக்கு முன் டென்மார்க்கிலும் இதே பிரச்சனை துப்பாக்கி சூடுகள் இல்லாமல் வந்தது. சுதாகரிக்கவேண்டியவர்கள் சுதாகரித்திருக்கலாம்.
Link to comment
Share on other sites

10898040_1021118357903704_16683740878413
10806353_1021118861236987_78516292059171
Siva Sinnapodi 2 புதிய படங்களைச் சேர்த்தார்.

பாரிசில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் தாக்கம் நம்மவர்களுக்கு தெரியவில்லை. இன்று லாசப்பல் பகுதியில் 'இதென்ன பெரிய விடயம் எங்கள் நாட்டில் தினசரி இப்படி எவ்வளவு படுகொலைகள் நடந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம்' என்கின்ற அடிப்படையில் தான் பலரும் இந்த விடயத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

பிரான்சில் இன்று கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் அனைவருமே இனவாதத்துக்கும் அனைத்துவகை அடிப்படைவாதத்துக்கும் எதிரான காப்பரணாக இருந்து வெளிநாட்டவர்கள் உட்பட அனைத்து மக்களின் உண்மையான இருப்புக்காக குரல் கொடுத்தவர்கள் போராடியவர்கள்.

பிரான்சில் இன்று அகதி தஞ்சம் பெற்று ஏனைய மக்களுக்கு சமமான உரிமைகளை அனுபவிப்பவர்களுக்கு இன்று உயிர் நீத்த இவர்களைப் போன்றவர்களின் எழுத்துகளாலும் போராட்டங்களாலும் கிடைத்த அறுவடையைத் தான் அனுபவித்துக்கொண்டிறோம் என்ற உண்மை தெரிவதில்லை.

வன்னி இறுதியுத்தம் நடைபெற்ற போது அது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல.மாநிடத்துக்கு எதிhரான அடக்குமுறை யுத்தம் என்று உரத்து கூறியவர்கள் அவர்கள்.

அவர்கள் நீட்டிய நேசக் கரத்தை பற்றிக்கொள்ளும் குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத பிழைப்புவாத கூட்டம் ஒன்று நாங்கள் வேறு உயர் மட்டத்தில் அணுகுகிறோம் யுத்தத்தை நிறுத்துகிறோம் என்று பம்மாத்துவிட்டது நமது கடந்தகால வரலாறு.

சார்லி ஹெப்டோ ஊடகவியலாளர்களின் படுகொலை ஒடுக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு உள்ளான மாநிடத்தை நேசக்கும் அனைவரையும் உலுக்கியிருக்கிறது.

வன்னியில் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த போது மனதை உலுக்கியதைப் போன்ற ஒரு உணர்வு-துயரம் என்னை வாட்டுகிறது.

அந்த ஊடக தோழர்களுக்கு சமூகவிடுதலைப் போராளிகளுக்கு எனது வீரவணக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சுதந்திரம்,எழுத்து சுதந்திரம்,பத்திரிகை சுதந்திரம் எல்லாம் இருக்க வேண்டும்.ஆனால் இங்கு அளவுக்கு மீறிப் போனதால் கொலையில் முடிந்திருக்குது.பத்திரிகையாளார்கள் சமூகத்தில் பொறுப்பாக செயற்பட வேண்டும்.ஒரு செய்தியை எழுதுவதற்கும்,கேலி சித்திரமாக வரைந்து நக்கலடிப்பதற்கும் வித்தியாசம் இருக்குது...தொடர்ந்து அவர்களது கடவுளை,தலைவனை பேனாவால் நக்கலடிசால் அவன் துப்பாக்கியால் தன்ட வேலையைக் காட்டிட்டான்...இந்த கொலைகாரர்கள் செய்தது சரி என சொல்லவில்லை.ஆனால் அவர்களை தேவையில்லாமல் கொலை செய்யத் தூண்டியது இந்த பத்திரிகையாளார்கள் தானே

 

என்னே ஒரு விளக்கம் !!!!

 

இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் ஒரு காரணத்தோடுதான் மற்றையவர்களைக் கொல்கிறார்கள் என்கிறீர்கள்?

 

இது நடந்திருப்பது இஸ்லாமிய மிருகங்கள் வாழும் ஆதிவாசிகளின் மத்திய கிழக்கு நாடொன்றில் அல்ல, மாறாக மனித நாகரீகம் செழுமையுடன் வாழ்ந்துவரும் பாரீஸ் நகரில். ஒருவன் தனது கருத்தினைச் சொல்லுவதற்கு முழுச் சுதந்திரமும் உள்ள ஒரு முற்றான பக்குவமடைந்த ஒரு நாட்டில்.

 

அடுத்தது, ஏதோ இந்த பத்திரிக்கையாளர்கள் காட்டுவாசி அடிப்படைவாத மிருகங்களின் பேய்த்தனமான சமய வழக்கங்களை விமர்சித்து கார்ட்டூன் வரைந்ததற்காகத்தான் கொல்லப்பட்டார்கள் என்று நியாயம் வழங்கும் நீங்கள், இந்த இஸ்லாமிய மிருகங்கள் தம்ம்குள்ளேயே சுன்னி, சியா என்று பிளவடைந்து ஒருவரை ஒருவர் நர வேட்டையாடுவதையோ அல்லது, முஸ்லீம் மதத்தைப் பின்பற்றவில்லை என்பதற்காக இன்று மத்திய கிழக்கில் வாழும் ஏனைய மதக் கலாச்சார மக்களை பூண்டோடு அழிக்கக் கங்கணம் கட்டி அவர்களின் வாழ்விடங்களை அடாத்தாக ஆக்கிரமித்துக்கொண்டும், அம்மக்களை நாய்களைப் போல வேட்டையாடி தலைகளைக் கொய்து கம்புகளில் குத்திவைத்து அழகுபார்ப்பதும் எப்படி உங்களால் நியாயப் படுத்தப்படப்போகிறதென்பதையும் கூறினால் கேட்க ஆசையாக இருக்கிறது.

 

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்கிற பேய்களின் மதம் இன்றைய உலகின் புற்றுநோய். அது அழிக்கப்படவேண்டியது மனித குலத்தின் இருப்பிற்கு இன்றி அமையாதது. இன்று கொல்லப்பட்ட அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்கும் எனது அஞ்சலிகளும் வீரவணக்கங்களும். பேய்களுக்கெதிராக அவர்களின் எழுச்சியை இன்றைய தாக்குதல் நிறுத்திவிடப்போவதில்லை. இது பிரென்சு மக்களை இன்னுமின்னும் இந்தப் பேய்களுக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டும்.

இஸ்லாம் என்கிற பேய்களின் மதத்தின் அழிவிற்கான ஆரம்பத்தை அதன் வேட்டை நாய்கள் ஆரம்பித்து வைத்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் நான் இக் கொலைகளை நியாயப்படுத்தவில்லை.என்னைப் பொறுத்த வரையில் இக் கொலைகளை செய்தவனை விட‌ தூண்டியவன் தான் முதல் குற்றவாளி...எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக அடுத்தவனும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது...என்னால் "அல்லா"வைக் கடவுளாக கும்பிட முடியா விட்டால் அவரை விமர்சிக்கலாம்/எதற்காக அவரை கடவுளாக கும்பிட கூடாது என்று காரணத்தை வைக்கலாம்.அதை விடுத்து நக்கல்,நையாண்டி கண்டிக்கதக்கது.அதை சொல்வதற்கு அவன் எடுத்த ஆயுதம் துவக்கு...பதிலுக்கு பேனா எடுத்தாலும் வேலையில்லை என்று அவனுக்குத் தெரியும்.யேசுவை அவர்கள் நக்கல்டித்து எழுதினால் இவர்களும் சேர்ந்து நக்கலடிச்சுப் போட்டு இருப்பினம்.ஏனென்றால் இவர்களுக்கு எல்லாம் வியாபாராம்.இப்படியான வியாபாரிகளால் தான் கொலைகாரார்களும்,கொள்ளைகாரர்களும்,தீவிரவாதிகளும் உருவாகின்றனர்.

இணையவன் ஒரு நாட்டின் ஜனாபதி தனது நாட்டு பிரஜைகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால் கண்டிக்கத் தான் வேண்டும்[கொல்லப்பட்டவர்கள் எப்படியான கொடியவர்களாக இருந்தாலும்] இல்லா விட்டால் அவர் "ஜனாதிபதி" என்ற பதவிக்கே தகுதியற்றவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் முஸ்லீம்கள் தங்களுக்குள் அடிபட்டு செத்தால் எனக்கென்ன கவலை?...இங்கு இந்த சம்பவத்தால் அநியாயமாக உயிரிழந்ததும்,பாதிக்கப்பட்டதும் யார்? அதற்கு யார் காரணம் என்று தான் கதைக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கேலிச்சித்திரத்துக்கு எல்லாம் துவக்கை தூக்கிறது ரெம்ப ஓவர். முஸ்லீம் நாடுகளில் பிற மதங்கள் மீது தடைகளே உள்ளன. கீழ்த்தரமான விமர்சனங்களை வேறு முஸ்லீம்கள் வைக்கிறார்கள். அதுக்கு எல்லாம் துப்பாக்கியை தூக்கினால்.. பல முஸ்லீம் நாடுகள் இந்த உலகில் இருக்கவே தகுதி இருக்காது.

 

இது மிகவும் கண்டிக்கத்தக்க காட்டுமிராண்டிச் செயல். அதுவும் வீதியில் குண்டடிபட்டு வீழ்ந்து கிடக்கும் பொலிஸ்காரர் மீது மீண்டும் ஓடி வந்து தலையில் சுட்டு சாகடிக்கச் செய்யும் செயல்.. ஒரு படுபாதகப் படுகொலையை ஆகும். இதுதானா இஸ்லாம் போதிக்கிறது. அப்படி என்றால் அந்த இஸ்லாம் இந்த உலகிற்கு அவசியம் இல்லை..!! :icon_idea::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன் முஸ்லீம்கள் தங்களுக்குள் அடிபட்டு செத்தால் எனக்கென்ன கவலை?...இங்கு இந்த சம்பவத்தால் அநியாயமாக உயிரிழந்ததும்,பாதிக்கப்பட்டதும் யார்? அதற்கு யார் காரணம் என்று தான் கதைக்கிறோம்.

 

இன்று நடந்த கொலைகளுக்கான ஒரே காரணம் இஸ்லாமிய அடிபடைவாத மிருகங்களே! ஒரு கருத்தினை கருத்தினால் சந்திக்க முடியாத, மற்றைய மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாத, இஸ்லாமியத்தைப் பின்பற்றவில்லையென்றால் அனைவரையும் கொல் என்று சொல்கின்ற பேய்மதத்தினைப் பின்பற்றுகின்ற மிருகங்களே காரணம்.

 

அதுமட்டுமில்லை, இப்படி ஒவ்வொருமுறையும் இஸ்லாமிய  அடிப்படைவாத மிருகங்கள் அட்டூழியம் செய்யும்போதெல்லாம், "அவங்கட சமயத்தைப் பற்றி எழுதினால் சும்மா இருப்பாங்களா??, இவைக்குக் குடுக்கத்தான் வேணும், சும்மா தங்கட  பாட்டில இருக்காமல் கார்ட்டூன் வரையிறம் , செய்தி போடுறம் எண்டு வெளிக்கிட்டால் சுடுவாங்கள்தானே ?" என்று சப்புக் கட்டுக் கட்டுகிற நம்மைப் போன்றவர்களும் காரணம்.

 

உங்களுக்காக ஒரு சிந்தனை, யாரோ ஒரு புண்ணியவான் பல வருடங்களுக்கு முன்னர் கூறியது, "இந்த உலகில் தீமை வளருகிறது என்றால் அதற்கான காரணம், நல்ல மனிதர்கள் தம்மால் இயன்றபோதும் செய்யவேண்டியவற்றைச் செய்யாமல் இருப்பதே !".

கேலிச்சித்திரத்துக்கு எல்லாம் துவக்கை தூக்கிறது ரெம்ப ஓவர். முஸ்லீம் நாடுகளில் பிற மதங்கள் மீது தடைகளே உள்ளன. கீழ்த்தரமான விமர்சனங்களை வேறு முஸ்லீம்கள் வைக்கிறார்கள். அதுக்கு எல்லாம் துப்பாக்கியை தூக்கினால்.. பல முஸ்லீம் நாடுகள் இந்த உலகில் இருக்கவே தகுதி இருக்காது.

 

இது மிகவும் கண்டிக்கத்தக்க காட்டுமிராண்டிச் செயல். அதுவும் வீதியில் குண்டடிபட்டு வீழ்ந்து கிடக்கும் பொலிஸ்காரர் மீது மீண்டும் ஓடி வந்து தலையில் சுட்டு சாகடிக்கச் செய்யும் செயல்.. ஒரு படுபாதகப் படுகொலையை ஆகும். இதுதானா இஸ்லாம் போதிக்கிறது. அப்படி என்றால் அந்த இஸ்லாம் இந்த உலகிற்கு அவசியம் இல்லை..!! :icon_idea::(

 

சரியான கருத்து. இஸ்லாம் இந்த உலகத்திற்கு அவசியமில்லை !

Link to comment
Share on other sites

Talk Radio என்ற Oliver stone இன் படம் 1988 ஆண்டு வந்தது .கிட்டத்தட்ட இதே கதைதான்.சர்ச்சைக்குரிய விடயங்களை வானொலியில் கதைப்பதுதான் அவர் வேலை .கடைசியில் ஒருவன் அவரை ஆட்டோகிராப் வாங்குவதுமாதிரி கேட்டுவிட்டு துவக்கை எடுத்து சுட்டுவிடுகின்றான் .

 

இந்த காட்டுமிராண்டித்தனங்களை எந்த ரூபத்திலும் அனுமதிக்ககூடாது .மனித இனத்திற்கே எதிரானவர்கள் இவர்கள் .

இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.