யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு
Sign in to follow this  
Justin

நல்லதோர் வீணை செய்வோம்!

Recommended Posts

நல்லதோர் வீணை செய்வோம்!

கடந்த சில மாதங்களாக யாழின் பதிவுகளில் என் கவனத்தை ஈர்த்தவை உடல், மன ஆரோக்கியம் பற்றிய பல் வேறு மூலங்களில் இருந்தும் பகிரப் படும் பதிவுகளாகும். இவை அனைத்தும் நல்ல நோக்கத்தோடு பகிரப் பட்ட பதிவுகள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மூலங்களின் நம்பகத் தன்மை அல்லது முழுதான மூட நம்பிக்கைகளின் அடிப்படை போன்ற காரணங்களால் இந்த ஆரோக்கியப் பதிவுகள் சில தவறான தகவல்களையும் வாசிப்போரிடையே புகுத்தி விடுவதைக் கண்டேன். இப்பதிவுகளுக்கு தனித் தனியாகப் பதில் இடுவதை விட நாமே வாசகர்கள் அறிய ஆவல் கொள்ளும் ஆரோக்கிய அறிவியல் தகவல்களைத் தொகுத்து வழங்கினால் என்ன என்ற அவா எனக்கு எழுவதால் இந்தத் தொடரை ஆரம்பிக்கிறேன். இந்தத் தொடரில் பகிரப் படும் தகவல்கள் டாக்டரின் ஆலோசனைகள் அல்ல (நான் வைத்தியரும் அல்ல!). ஆனால் விஞ்ஞான ஆய்வுகள் மூலம் நிரூபணமான தகவல்கள் மட்டுமே பகிரப் படும். ஓரிரு நாட்களில் தொடர்வேன்.

 • Like 13

Share this post


Link to post
Share on other sites

ஆம். மிக நல்ல விடயம்.. முதலில் சிட்டுக்குருவி லேகியத்தில் இருந்து ஆரம்பிக்கலாமே.. 307.gif

:lol:

Share this post


Link to post
Share on other sites

நன்றி

தேவையான பணி

தொடருங்கள்........

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜஸ்டின்.வரவேற்கிறேன்.முதலாவதாக நோகாமல்,டயட் பண்ணாமல்,உடற் பயிற்சி செய்யாமல் எப்படி உடம்பை குறைக்கலாம் என எழுதுங்கோ

Share this post


Link to post
Share on other sites

நல்லதோர் வீணை செய்வோம்!- 1
 
இதயம் ஒரு கோயில்!

இதயம் உண்மையிலேயே ஒரு கோயில் தான்!. நாலு அறைகள், அதில் ஒன்றின் சுவரில் நரம்பு முடிச்சுகளால் ஆக்கப் பட்டிருக்கும் மூலஸ்தானம் அல்லது பலி பீடம் சைனோ ஆட்ரியல் நோட் எனப்படும் இதய இயக்கி (pace maker). மக்கள் வெள்ளம் போல இரத்த வெள்ளம்! இரத்தம் வலது இதய அறையொன்றில் இருந்து நுரையீரல் போய் அங்கே சுத்தமான ஒக்சிசன் நிரம்பிய காற்றை உள்வாங்கிக் கொண்டு  இடது அறைக்கு மாறி, அங்கே இருந்து உடலின் உறுப்புகளுக்கெல்லாம் ஒக்சிசனையும் சக்திப் பொருட்களையும் எடுத்துச் செல்கிறது. தாயின் வயிற்றில் சிசுவில் மூன்றாவது வாரத்தில் துடிக்க ஆரம்பித்து இறுதி வரை (சில சமயம் நீங்கள் கோமாவில் இருந்தாலும்!) துடிக்கும் இதயத்தின் முக்கியத்துவத்தை பந்தி பந்தியாக எழுத வேண்டியதில்லை! ஆனால் இதயத்தைப் பராமரிக்கும் பழக்க வழக்கங்கள் பற்றி நாம் நிறையப் பேச வேண்டியும் பின்பற்ற வேண்டியும் இருக்கிறது!

பிரதானமான இதயக் கோளாறு எது?

உலகளாவிய ரீதியில், ஆண் பெண் வேறு பாடின்றி, அதிகம் பேரின் மரணத்திற்குக் காரணமாக இருப்பது மாரடைப்பு (heart attack) என அழைக்கப் படும் "இதய இரத்த அடைப்பு நோய்" (ischemic heart disease) ஆகும். போசணைக் குறைபாடுகளால் ஏற்படும் இறப்பிற்கு உலகில் இருபதாவது இடம்! தவறான அல்லது அதிகப் படியான போசணையை ஒரு காரணமாகக் கொண்ட மாரடைப்புக்கு மரணத்தை ஏற்படுத்துவதில் முதலாவது இடம். இதனால் தடுக்கப் படக்கூடிய ஒரு மரண காரணி மாரடைப்பு என்பது தெளிவாகிறது!

இது நாற்பது தாண்டின ஆட்களின் நோயா?

மாரடைப்பு என்பது இதயத்திற்குச் செல்லும் இரத்தக் கலன்களில் ஏற்படும் அடைப்பினால் வருவது. இந்த அடைப்புக்கு பிரதான காரணம் இதயத்தின் குருதிக் கலன்களில் படியும் கொழுப்பும் அந்தக் கொழுப்பை விழுங்க வரும் உடலின் நோய் காப்புக் கலங்களும் இணைந்துருவாகும் திட்டுக்கள் (atheroma) தான். முக்கியமான தகவல், இந்தத் திட்டுகள் பல வருடங்களாக எமக்குத் தெரியாமலே உருவாகி எமது இரத்தக் கலன்களில் வளர்ந்து வருபவை. உலகளாவிய ரீதியில் 85 வீதமான மாரடைப்பு 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் தான் வருகிறது. ஆனால், மாரடைப்பிற்கான அடித்தளம் நாற்பதுக்கு முந்தைய வாழ்க்கை முறையிலேயே இடப் பட்டு விடுகிறது. மாரடைப்பு ஏற்படும் வயதைப் பொறுத்தவரை வெவ்வேறு இனக்குழுக்களிடையே (race) வித்தியாசங்கள் இருக்கக் கூடும் என்று சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அமெரிக்காவில் முதல் மாரடைப்பு ஏற்படும் ஆண்களின் சராசரி வயது (இவர்களில் அனேகர் வெள்ளையர்கள் அல்லது கறுப்பினத்தவர் என்பதைக் கவனிக்கவும்!) 65. ஆனால் இந்தியர்களில் மாரடைப்பு ஏற்படும் சராசரி ஆணின் வயது 52. இந்தியர்களின் பரம்பரை அமைப்பை ஒத்தவர்களாக இருக்கும் எம்மிடையேயும் இப்படியான 'இள வயது" மாரடைப்பு அதிகம் இருக்கலாம்.

நம் கையில் என்ன இருக்கு?

மாரடைப்பு பெரும்பாலான மனிதர்களில் தடுக்கப் படக்கூடிய ஒரு நோய்! நம் கையில் என்ன இருக்கு என்பதை விட நம் கால்களிலும் நம் சாப்பாட்டுத் தட்டிலும் என்ன இருக்கு என்று பார்த்தல் மாரடைப்புத் தடுப்பின் ஆரம்பம் எனலாம்!. ஏற்கனெவே சொன்னது போல நமது இரத்தக் கலன்களில் கொழுப்புப் படிகிறது, கொழுப்பைத் தின்ன உடலின் பாதுகாப்புக்குப் பொறுப்பான கலங்கள் வருகின்றன. இந்தக் குறு யுத்தத்தின் விளைவாக மாரடைப்பை ஏற்படுத்தக் கூடிய திட்டுகள் உருவாகின்றன. எனவே கொழுப்பு கவனிக்கப் பட வேண்டிய ஒன்று!

தொடரும்..

 • Like 3

Share this post


Link to post
Share on other sites

"The dose makes the poison" ("நச்சுத் தன்மை நஞ்சில் இல்லை, நஞ்சின் அளவில் இருக்கிறது!")- கிரேக்க ஞானி பராசெல்சஸ்.

கொழுப்பு அவசியம் தானா?

கொழுப்பு என்பது எங்கள் உணவின் முக்கியமான மூன்று போசணைப் பொருட்களில் ஒன்று (குளுக்கோசும், புரதமும் மற்றைய இரண்டு போசணைப் பொருட்கள்). சக்தியைத் தருவதில் குளூக்கோசை விட கொழுப்பு திறன் மிக்கது. மேலும் எங்கள் உடலின் ஹோர்மோன்கள் பல கொழுப்பில் இருந்து பிறப்பவை! தோலின் கீழ் இருக்கும் கொழுப்பு வெப்பத்தை உற்பத்தி செய்யா விட்டால், கனடாக் குளிருக்கு தாக்குப் பிடிக்க இயலாது. ஆனால் கொழுப்பின் அளவும், கொழுப்பின் சில குறிப்பிட்ட வகைகளும் உடலில் அதிகமானால் இதய நோய் , பக்க வாதம், உடற் பருமன் போன்ற வேண்டாத விளைவுகள் ஏற்படுகின்றன.

கொலஸ்ட்ரோல் எனும் கொழுப்பு!

அரை நூற்றாண்டுக்கு முன்னரே, இதய நோய் தாக்கியவர்களின் இரத்தத்தில் கொலஸ்ட்ரோல் எனும் கொழுப்பின் அளவு அதிகரித்திருந்தமை கண்டு பிடிக்கப் பட்டது. இதனால் கொலஸ்ட்ரோல் அளவைக் குறைப்பது இதய நோயைத் தடுக்கும் ஒரு வழியாக அன்று தொடக்கம் பின்பற்றப் பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஐம்பது ஆண்டுகளில் கொலஸ்ட்ரோலைக் குறைக்கும் வழிகள் பற்றிய அறிவு தான் மாறிக் கொண்டே இருக்கிறது. உணவின் மூலம் எடுக்கபடும் கொலஸ்ட்ரோல் மட்டுமன்றி எமது உடலினுள்ளும் கொலஸ்ட்ரோல் உருவாக்கப் படுவதால் வெறுமனே கொலஸ்ட்ரோல் நிரம்பிய முட்டை, இறால் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதால் மாத்திரம் கொலஸ்ட்ரொலைக் கட்டுப் படுத்த முடியாது.

நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு (அல்லது வாய்க் கொழுப்பு!) :D

உடலினுள் கொலஸ்ட்ரோல் உற்பத்தி செய்யப் பட ஏதுவான பல வகையான கொழுப்பு வகைகளை நாம் உணவில் கட்டுப் படுத்தும் போது தான் கொலஸ்ட்ரோலைக் கட்டுப் படுத்த முடியும். இந்த இடத்தில் தான் நாம் நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு என பிரிக்கப் படும் LDL, HDL என்பவை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

தொடரும்...

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

தற்பொழுது  வைத்தியர்களைக்காணச்சென்றால்

5 நிமிடமும்  பார்க்கிறார்களில்லை...

 

உங்கள் பதிவும் அதையே சொல்கிறது :lol:  :D  :D

தொடருங்கள் 

Share this post


Link to post
Share on other sites

நல்ல... பதிவு, ஜஸ்ரின்.
நீங்கள் வைத்தியத் துறையில், சம்பந்தப் பட்டவர் என்பதால்...இதனை வரவேற்கின்றேன்.
இடையில்... நாங்கள், கேள்வி கேட்கலாமா? மா. டாக்டர். :D  :lol:

Share this post


Link to post
Share on other sites

தற்பொழுது  வைத்தியர்களைக்காணச்சென்றால்

5 நிமிடமும்  பார்க்கிறார்களில்லை...

 

உங்கள் பதிவும் அதையே சொல்கிறது :lol:  :D  :D

தொடருங்கள்

:Dவிசுகர் கவனத்திலெடுக்கிறேன். ஆனால் கீழ் வரும் காரணங்களுக்காக சிறிய பகுதிகளாக வருகிறது:

1. நீளமாக இருந்தால் வாசிக்கிறார்கள் இல்லை (நான் அப்படித் தான்! :D)

2. பிறகு ஏற்றுவோம் என்று எழுதி வைத்து பின்னர் அப்படியே விட்ட என் பதிவுகள் சில (எங்கே சேமித்தேன் என்றே மறந்து விட்டேன்!)

3. வகுப்பறையில் நான் படிப்பித்த காலங்களில் இப்படிப் பகுதி பகுதியாகக் கொடுக்கும் தகவல்கள் பெறுனர்கள் கேள்வி கேட்க உதவின, அந்த மொடல் இங்கேயும் வேலை செய்கிறதா ஒரு பரீட்சார்த்தம் தான்!

பலருக்குப் பிடிக்கவில்லையானால் மாற்றி விடுவோம்!

 • Like 2

Share this post


Link to post
Share on other sites

மான்புமிகு டாக்டர்

Share this post


Link to post
Share on other sites

நல்ல... பதிவு, ஜஸ்ரின்.

நீங்கள் வைத்தியத் துறையில், சம்பந்தப் பட்டவர் என்பதால்...இதனை வரவேற்கின்றேன்.

இடையில்... நாங்கள், கேள்வி கேட்கலாமா? மா. டாக்டர். :D  :lol:

 

கேட்காலாமாவா? கேட்க வேணும் மா! :D

Share this post


Link to post
Share on other sites

கேட்காலாமாவா? கேட்க வேணும் மா! :D

 

நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு (அல்லது வாய்க் கொழுப்பு!) :D

 

டாக்டர்,  நீங்களே..... பதிலையும் சொல்லி, கேள்வியும் கேட்பது,

நன்றாக... உள்ளது. :)

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜஸ்டின்.இப்படி எழுதுவது தான் வாசிக்க இலகுவாக இருக்குது என்பது எனது கருத்து.

Share this post


Link to post
Share on other sites

கருத்துப் பகிர்ந்த எல்லோருக்கும் நன்றிகள். சிறிய, ஆனால் முக்கியமான தகவல்களின் பொதிகளாக இந்தத் தொடரை முன்னகர்த்தும் திட்டம். வேலைப் பழு இருந்தாலும் மதிய உணவு இடைவேளையில் நகர்த்துகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே!

 

மேற்கு நாட்டில் வாழும் தென்னாசியர்களில் இதயநோய் ஆபத்து அதிகமா?

அனுபவ ரீதியான தகவல்களின் (empirical evidence) அடிப்படையில் மேற்கு நாடுகளில் வாழும் தென்னாசியர்களிடையே இதய நோய், பக்க வாதம், நீரிழிவு என்பன அதிகம் என்பது என் அபிப்பிராயம். வித்தியாசமான உணவு முறையும், காலநிலையும், உடற்பயிற்சிக்கென பிரத்தியேகமாக நேரம் ஒதுக்காமையும் இந்த அதிக நோய் வாய்ப்பிற்கான சில காரணங்கள். எங்கள் பிறப்புரிமையியலும் (genetics) காரணமாக இருக்கலாம். இந்தத் தகவலை அண்மையில் கனேடிய மருத்துவ இதழொன்றின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. விஞ்ஞான சஞ்சிகைகளில் பிரசுரிக்கப் பட்ட, மொத்தமாக 5 மில்லியன் பேர்களை உள்ளடக்கிய ஐம்பது தரமான ஆய்வுக் கட்டுரைகளை மீளாய்வு செய்து வெளியிடப் பட்ட முடிவு இது:  இதய நோய் பக்க வாதம் என்பவை வெள்ளையின கனேடியர்களை விட தென்னாசியக் கனேடியர்களை இரு மடங்கு அதிகமாகத் தாக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு.  நாம் இதய ஆரோக்கியம் பற்றி இரண்டு மடங்குகள் கவனம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

 

கெட்ட கொழுப்பும் நல்ல கொழுப்பும்

உடலினுள் கொழுப்பை காவிச் செல்லும் இரு வடிவங்களே இந்த LDL, HDL எனப்படும் கொழுப்பு வகைகளாகும். இதில் LDL கொழுப்பைக் காவிச் செல்லும் போது உடலின் இரத்தக் கலன்கள் உட்பட பல உறுப்புகளில் கொழுப்பை விட்டு விட்டுச் செல்வதால் உடல் கொழுப்பு அதிகமாகி இதய நோய்களுக்கு ஏதுவாகிறது. ஆனால் HDL எனப்படும் நல்ல கொழுப்பு உடலின் ஏனைய உறுப்புகளில் இருந்து கொழுப்பை அகற்றி ஈரல் நோக்கி எடுத்துச் செல்வதால் உடற்கொழுப்பைச் சுத்திகரிக்கும் வேலையைச் செய்கிறது. உங்கள் இரத்தப் பரிசோதனை அறிக்கையில் கொலஸ்ட்ரோல் அளவுடன் இந்த LDL, HDL என்பவற்றின் அளவுகளும் இடம்பெற்றிருக்கும். மருத்துவர் இவற்றைப் பார்த்தே உங்கள் உடற் கொழுப்பு நிலை பற்றிப் பரிந்துரைப்பார்.

உணவினால் மாற்ற முடியுமா?

உடலில் கொலஸ்ட்ரோலைக் குறைப்பதுடன் LDL ஐக் குறைத்து HDL ஐக் கூட்ட உணவு உட்பட சில வழிமுறைகள் உண்டு. ஆய்வுகளின் படி ஒலிவ் எண்ணை போன்றவை LDL ஐக் குறைத்து HDL ஐக் கூட்டும் பணியைச் செய்கின்றன. தேங்காய் எண்ணை, நெய், பால் பொருட்கள், மாட்டிறைச்சி போன்ற உணவுகள் மொத்தக் கொல்ஸ்ட்ரோலைக் கூட்டுவதுடன், LDL ஐயும் அதிகரித்து HDL ஐக் குறைத்து விடுவதால் இதய குருதிக் கலன் நோய்களுக்குக் காரணமாகின்றன. இந்த வேறுபாட்டிற்குக் காரணம் கொழுப்பமிலங்கள் (fatty acids) எனப்படும் கொழுப்பை ஆக்கும் மூலக்கூறுகள் வெவ்வேறு எண்ணை/உணவு வகைகளில் வித்த்தியாசமாக அமைந்திருத்தல் ஆகும். இவை என்ன வகையான கொழுப்பமிலங்கள், நீங்கள் ஒரு உணவுப் பொருளை வாங்கும் போது லேபலைப் பார்த்து எப்படிக் கண்டு பிடிப்பது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.

 

தொடரும்...

 • Like 3

Share this post


Link to post
Share on other sites
வணக்கம் டாக்குத்தர்!
இந்த தொடரை வாசித்து பயனடைபவர்களில் நானும் ஒருத்தன்.
நன்றிகளை தெரிவிப்பதுடன் தொடர வேண்டுகின்றேன்.

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் ஜஸ்ரின். படித்துப் பயன்பெறுவோம்!

Share this post


Link to post
Share on other sites

கட்டியாகிப் போகும் கெட்ட எண்ணை!

"மார்கழிக் குளிரில் கட்டியாகும் எண்ணெய் கெட்ட எண்ணெய்" என்று எங்கள் அம்மா சொல்வார். வெளியே திண்மமாக மாறிப் போவது போலவே, உடலினுள்ளும் அது திண்மமாகி விடுவதால் அது கூடாத எண்ணை என்பது அவரது விளக்கமாக இருந்தது!. உண்மையில் விசயம் அதை விடச்சிக்கலானது என்பது இப்போது புரிகிறது. எங்கள் ஊரில் இரண்டு எண்ணை அல்லது எண்ணை சார் பொருட்கள் மார்களிக் குளிரில் திண்மமாகி உறையும் இயல்பு கொண்டவை: ஒன்று தேங்காய் எண்ணை, மற்றது நெய்!. உண்மையில் இந்த இரண்டும் இதய நோய் ஏற்படுத்தும் விடயத்தில் கெட்ட எண்ணைகள் என்பது  விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்பு. இவை ஆரோக்கியமற்ற எண்ணை வகைகள் என்று வெறுமனே சொல்லிச் செல்வதை விட, இவற்றின் என்ன இயல்பினால் ஆரோக்கியமற்றவையாக இவை அமைகின்றன என்று உங்களுக்கு விளக்கினால், நீண்ட கால நோக்கில் உங்களுக்குப் பயன் இருக்கும். இந்த விளக்கத்திற்கு சிறிது இரசயானவியலைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது! ஆர்வமற்றோர், நேராகக் கீழே இருக்கும் அட்டவணையில் ஆரோக்கியமான ஆரோக்கியமற்ற எண்ணை வகைகளைக் காண்பதால் பயன் பெறலாம்! ஆர்வமுள்ளோர் அடுத்த பத்திக்கு வாருங்கள்!
 
காபன் சங்கிலிகள்!

எண்ணைகள் கொழுப்பமிலங்களின் கலவைகள். இந்தக் கொழுப்பமிலங்கள் அடிப்படையில் சங்கிலித் தொடராகப் பிணைக்கப் பட்ட காபன் மூலக்கூறுகளால் ஆனவை. இந்தக் காபன் மூலக்கூறுகளிடையே உறுதியான ஒற்றைப் பிணைப்புகளும் ஐதரசன் மூலக்கூறுகளும் நிரம்பியிருந்தால் அவை "நிரம்பிய கொழுப்பமிலங்கள் (saturated fatty acid)" என்கிறோம். குறைவான ஐதரசன் மூலக்கூறுகளும் பலங்குறைந்த இரட்டைப் பிணைப்புகளும் காணப்பட்டால் அவற்றை “நிரம்பாத கொழுப்பமிலங்கள் (unsaturated fatty acid)” என்கிறோம். நிரம்பாத கொழுப்பமிலங்களில் இரண்டு வகைகள் உண்டு. ஒரே ஒரு இரட்டைப் பிணைப்புக் காணப்பட்டால் அதனை "ஒற்றை- நிரம்பாத கொழுப்பமிலம் (mono-unsaturated fatty acid-MUFA)” என்றும், பல இரட்டைப் பிணைப்புகள் காணப்பட்டால் "பல்- நிரம்பாத கொழுப்பமிலம் (poly-unsaturated fatty acid-PUFA)”  என்றும் வகை பிரித்து அழைக்கிறோம்!.

நிரம்பிய கொழுப்பமிலங்கள் உறுதியான அமைப்புடையதால் உயர்ந்த உருகு வெப்ப நிலை கொண்டவை (அதனால் திண்மமாகி விடக் கூடியவை!). தேங்காய் எண்ணையும் நெய்யும் மார்கழிக் குளிரில் உறைந்து விடுவதன் காரணம் இது தான். ஆனால், உடலினுள் உறைந்து விடுவதால் இவை இதய நோயை ஏற்படுத்துவதில்லை!. மாறாக, நிரம்பிய கொழுப்பமிலங்களை அதிகமாக நாம் உள்ளெடுத்தால், எங்கள் உடலில் LDL என்ற கெட்ட கொழுப்பின் அளவும் , அதன் விளைவாக கொல்ஸ்ட்ரோலின் அளவும் அதிகரிக்கின்றன. இதனால் இதய குருதிக் கலன் நோய்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டாகின்றன. அதே வேளை, நிரம்பாத கொழுப்பமிலங்களை அதிகம் உட் கொண்டால், நல்ல கொழுப்பான HDL இன் அளவு அதிகரிக்க கொலஸ்ட்ரோலின் அளவு குறைகின்றது.
 
ஒரு எண்ணை- பல முகங்கள்!

இயற்கையான ஒரு எண்ணையில் நிரம்பிய கொழுப்பமிலங்களும் நிரம்பாத கொழுப்பமிலங்களும் கலந்தே இருக்கின்றன.  கீழே நான் மீளமைத்திருக்கும் அட்டவணையில் எமக்குப் பரிச்சயமான சில எண்ணை அல்லது உணவு வகைகளில், மேற் சொன்ன மூன்று வகையான கொழுப்பமிலங்களின் விகிதாசார அளவுகள் தரப் பட்டிருக்கின்றது. தேங்காய் எண்ணையில் மிக உயர் அளவிலான நிரம்பிய கொழுப்பமிலங்கள் (சிவப்பில் குறிக்கப் பட்டிருக்கின்றது!) இருப்பதும், நெய்யிலும் அதிகமான நிரம்பிய கொழுப்பமிலங்கள் இருப்பதும் அவற்றின் இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் திறனைச் சுட்டி நிற்கின்றன.
 
நிரம்பாத கொழுப்பமிலங்களின் இரண்டு வகைகளிலும், PUFA எனப்படும் பல்நிரம்பாத வகை சில தீமைகளைக் கொண்டு வரக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உதாரணமாக,  PUFA அதிகம் கொண்ட எண்ணைகளில் வதக்கல் போன்ற அதி வெப்பநிலை கொண்ட சமையல்களைச் செய்யும் போது, அவை புற்று நோய் அல்லது அழற்சி (inflammation) போன்றவற்றை உண்டாக்கும் காரணிகளை உணவில் அதிகரிக்கின்றன. இதனால், PUFA அதிகமாக உள்ள எண்ணைகள் கொலஸ்ட்ரோலைக் குறைத்தாலும், குருதிக் கலன்களில் அழற்சி போன்றவற்றை ஏற்படுத்துவதால்  இதய நோய் ஆபத்தை வேறு வழிகளில் அதிகரிக்கின்றன.   எனவே, நல்லெண்ணை, சோள எண்ணை, சூரியகாந்தி எண்ணை போன்றவற்றைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது முழு உடலுக்கும் நலம் தரும். MUFA எனப்படும் ஒற்றை- நிரம்பிய கொழுப்பமிலங்கள் இந்த ஆபத்துக் குறைந்ததென்பதால் இதயத்திற்கும், உடலின் ஏனைய உறுப்புகளுக்கும் நன்மை பயக்கக் கூடியது,. கீழுள்ள அட்டவணையின் படி, அதிக MUFA கொண்ட இதய-ஆரோக்கியம் சார்ந்த எண்ணை ஒலிவ் எண்ணையாகும். 

 

அட்டவணைக்கான இணைப்பு இதோ:

http://tinypic.com/view.php?pic=9jehw9&s=8#.VMFPm3vly7Q

 

அட்டவணை மூலம்: University of Colorado (Colorado Springs)

 

வீட்டுப் பாடம் (அதாம்பா "ஹோம் வேர்க்"! :D )
சமையலில் சேர்க்கும் எண்ணைகள் மட்டுமன்றி வேறு பல உணவுகளும் இந்த நிரம்பிய, நிரம்பாத கொழுப்பமிலங்களில் அளவுகளின் அடிப்படையில் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தனவா இல்லையா எனத் தீர்மானிக்க முடியும்!. உங்கள் தேடிப் பார்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் சில உணவுகளைக் கீழே தருகிறேன். அடுத்த முறை நீங்கள் கடையில் இவற்றை வாங்கும் போது அல்லது வேறு வழிகளில் இந்த உணவுகளில் இருக்கும் நிரம்பிய கொழுப்பு, MUFA, PUFA என்பவற்றின் அளவுகளைக் கண்டு பிடித்து இங்கே பதிவிடுங்கள். முதலில் பதிவிடும் மாணவமணிகளுக்கு பச்சை கிடைக்கும்! :D

உணவுப் பொருட்கள்:
பிசா (pizza)
பாற்கட்டி (chesse)
அப்பிள் பை (apple pie)
பைக்கற்றில் அடைத்த எள்ளுப் பாகு
முழு ஆடைப் பால் (full-cream milk)
"ஆடை நீக்கிய" :icon_mrgreen:  பால் (skim milk)

தொடரும்...

Edited by Justin
 • Like 4

Share this post


Link to post
Share on other sites

சாதாரணமாக  வாசிக்கும் போது  தாவி  விடுவேன்

 

இதில் நீங்களே வேண்டுமானால் தாவுங்கள் என்ற   போதும்   முழுவதையும் வாசித்தேன்

நிலமை அப்படி.... :D

 

தொடருங்கள்...

 

(கன நாளாக காணவில்லை. இன்றைக்கு எத்தனை வரி??  எனப்பார்ப்போம் என்று தான் ஓடிவந்தேன். தப்பிவிட்டீர்கள் :lol: )

Edited by விசுகு
 • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஜஸ்டினின் பதிவுகளை கிரமமாக வாசிக்கிறேன். தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

சாதாரணமாக  வாசிக்கும் போது  தாவி  விடுவேன்

 

இதில் நீங்களே வேண்டுமானால் தாவுங்கள் என்ற   போதும்   முழுவதையும் வாசித்தேன்

நிலமை அப்படி.... :D

 

தொடருங்கள்...

 

(கன நாளாக காணவில்லை. இன்றைக்கு எத்தனை வரி??  எனப்பார்ப்போம் என்று தான் ஓடிவந்தேன். தப்பிவிட்டீர்கள் :lol: )

 

வாசித்தமைக்கு நன்றி விசுகர்! கஷ்டப் பட்டு ஒரு அட்டவணை நானே தயாரித்தேன். ஏற்ற இயலாமல் போய் விட்டது! அதைப் பார்த்தால் தான் வீட்டுப் பாடம் செய்ய முடியும். வீட்டுக்குப் போய் ஏற்ற முயற்சிக்கிறேன்!

 

ஜஸ்டினின் பதிவுகளை கிரமமாக வாசிக்கிறேன். தொடருங்கள்.

 

நன்றிகள்!

 

Share this post


Link to post
Share on other sites

பதிவுகளை கிரமமாக வாசிக்கிறேன். தொடருங்கள்.

 

வீணை நல்ல ராகங்களை தொடர்ந்து  மீட்டட்டும் :)

Share this post


Link to post
Share on other sites

நீண்ட இடைவெளி சில சமயங்களில் அவசியமானது :D . இந்த நீண்ட இடைவெளியில் உங்கள் உணவுப் பொருட்களில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்பு, ஆரோக்கியமற்ற கொழுப்பு என்பவற்றின் அளவுகளை நீங்கள் ஆவலோடு தேடிப் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

 

உணவு லேபலில் பார்க்க வேண்டியவை எவை?

 

பொதுவாக ஒரு மனிதனின் ஒரு நாள் சக்தித் தேவை 1500 முதல் 2000 கலோரிகள் ஆகும். இந்தக் கலோரிகளில், பெரும் பகுதி மாச்சத்துகளில் இருந்தும் , இன்னொரு பகுதி கொழுப்பில் இருந்தும் கிடைக்க வேண்டும். உங்கள் ஒரு நாள் சக்தித் தேவையில் மூன்றிலொரு பங்கிற்கும் குறைவான அளவே (30%) கொழுப்பில் இருந்து கிடைக்க வேண்டும் என்பது பல்வேறு போசணை ஆலோசனையாளர்களின் பரிந்துரை. ஆனால், பல்வேறு உணவுப் பொருட்களை ஒரு நாளில் நாம் உட்கொள்ளும் போது, இப்படிக் கணக்கு வைத்து உட் கொள்வது இயலாத காரியம். எப்படி இதைக் கடைப் பிடிப்பது?

 

இரண்டு வழிகள்!

 

வழி ஒன்று: இயலுமான அளவு கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்து அல்லது குறைத்து விடுவது ஒரு சாத்தியமான வழி. எண்ணை வழிந்தோடும் பாபு கடை ரோல்ஸ், சீசில் மிதக்கும் பிசா, கருகப் பொரித்த இறைச்சி என்பன வெளிப்படையாகவே கொழுப்பு நிரம்பிய சில உதாரணங்கள்!. வெளிப்படையாகவே கொழுப்பு நிரம்பிய உணவுகளை நீங்கள் தவிர்த்தாலும், நீங்கள் உட் கொள்ளும் தானியங்கள், விதைகள், பழங்கள் என்பன உங்களுக்கு அடிப்படையில் தேவையான கொழுப்பை உங்களுக்கு வழங்கியவாறு இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

வழி இரண்டு: நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எவ்வளவு கொழுப்பு இருக்கிறது என்று அறிந்து அதற்கேற்ப அதன் பாவனையைக் கட்டுப் படுத்துங்கள். இதற்குத் தான் உணவு லேபல்கள் பற்றிய விழிப்புணர்வை நான் கடந்த பதிவில் அறிமுகம் செய்தேன். பொதி செய்த ஒரு உணவின் பொதியில் உள்ள போசணை அளவுகளை ஒரு நிமிடம் வாசியுங்கள். அதில் முக்கியமாக "கொழுப்பில் இருந்து கிடைக்கும் சக்தி" அளவு வீதம் (Daily Value % or DV%) குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த DV, 25% என்று ஒரு உணவில் இருந்தால் உங்கள் ஒரு நாளின் சக்தித் தேவையில் இந்த உணவு 25% ஐத் தந்து விடப் போகிறது என்று பொருள். ஆரோக்கியமான நடைமுறை: அந்த உணவைத் தவிர்க்கலாம் அல்லது அதை உண்ணும் நாளில் இன்னுமொரு கொழுப்பு செறிந்த உணவை உண்ணுவதைத் தவிர்க்கலாம்.  

 

மொத்தமான கொழுப்பை மட்டுமே குறைத்தால் போதுமா?

 

இது ஏற்கனவே சொல்லப் பட்டது என்றாலும் மீள வலியுறுத்தும் அளவுக்கு முக்கியமான ஒரு விடயம்: நிரம்பிய கொழுப்பமிலங்கள் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஒற்றை நிரம்பாத கொழுப்பமிலங்கள் (MUFA) கொண்ட உணவுகளை உங்கள் கொழுப்புத் தேவைக்கேற்ப உட் கொள்ள வேண்டும்.

 

நிரம்பிய கொழுப்பமிலங்கள் கொண்ட, தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை:

சீஸ் கொண்ட உணவுகள் (பீசா, சில பஸ்ரா வகைகள்),
பால் (ஆடை நீக்கிய பால் தவிர!),
தேங்காய் பால், தேங்காய் எண்ணை கொண்ட உணவுகள்
மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி
பட்டர், மார்ஜரின்  கொண்ட குக்கி வகைகள்

 

ஆரோக்கியமான ஒற்றை (MUFA) அல்லது பல் நிரம்பாத (PUFA) கொழுப்பமிலங்கள் கொண்ட உணவுகள்:

ஒலிவ் எண்ணையில் உருவான உணவுகள்
அல்மண்ட், வால்னற் போன்ற விதைகள்
மீன்

 

மாச்சத்தும் கொழுப்பும்

 

நீங்கள் கொழுப்பைக் குறைத்து அளவுக்கதிகமான மாப்பொருட்களை உட் கொண்டாலும் தேவைக்கு அதிகமான மாப்பொருள் கொழுப்பாக உடலில் சேமிக்கப் படும். இதனால் கொழுப்பு அதிகரிக்கும். மாப்பொருட்கள் பற்றிய விரிவான பதிவை நீரிழிவு நோயுடன் தர இருப்பதால் இப்போதைக்கு அதிக மாச்சத்தும் கொழுப்பை அதிகரிக்கும் என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

கொழுப்பை உணவு மூலம் கட்டுப் படுத்துவது பற்றிய பதிவுகள் இத்துடன் நிறைவு பெறுகிறது. இதை நடை முறைப்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. இது கொழுப்பை உணவு மாற்றங்களால் கட்டுப் படுத்தும் முறைகள் மட்டுமே என்பதைக் கவனிக்கவும்! சிலருக்கு இதை விட மேலதிகமாக கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் பாவிக்க வேண்டிய தேவை இருக்கலாம்.

 

அடுத்த பதிவில் கொழுப்பை மட்டுமன்றி நீரிழிவு, உடற்பருமன் என்பவற்றையும் குறைக்கும் சர்வ ரோக நிவாரணியான உடற்பயிற்சி ஆரம்பமாகிறது!

 

இணைந்திருங்கள் நண்பர்களே! :D

 • Like 6

Share this post


Link to post
Share on other sites

நன்றி

இணைந்திருக்கின்றோம்

இந்த தேடிப்படியுங்கள் என்ற  ஏவல் எல்லாம் வேண்டாம்

 

வழி காட்டி ஒழுங்காக கொண்டு பொய்ச்சேர்க்கவேண்டியது உங்கள் வேலை

சொல்லிப்போட்டன்...

கையை  விடமாட்டாம் அது தான் எமது வேலை.. :lol:

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு


 • Topics

 • Posts

  • சடுதியாக ஒரு பிரதேசத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக ஏற்படும் மேற்காவுகை (Convection)காரணமாக பெய்யும் மேற் காவுகை மழையில் ஒரு வகையே இந்த Hagel என்று அழைக்கப்படும் ஆலங்கட்டி மழை. பொதுவாக  வெப்ப நாட்களில் அன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இவ்வாறான மேற்காவுகை மழை பெய்வது வழமை.  
  • ( இங்கேதான் உள்ளுறைந்த ஆணாதிக்க சிந்தனை தலை தூக்குகிறது..!  தான் எப்படியும் இருக்கலாம் ஆனால் பெண்கள் எல்லாவிதத்திலும் சுத்த பத்துமாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கும் ஆண்களின் அப்பட்டமான சுயநல நினைப்பை என்னவென்று சொல்வது..?    கண்டணங்களை தெரிவித்துக்கொள்கிறேன்..! )   Empfehlung an Parimalam:    "அம்மாடி பரிமளம், உந்தாள் உமக்கு சரிப்பட்டு வராது கண்டியளோ..?  கொப்பர் பார்க்கும் பெடியனையே கட்டிக்கொள்ளம்மா..! " 
  • ஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா   2019ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ஊடக சுதந்திர சுட்டி வெளியிடப்பட்டுள்ள நிலையில், சிறிலங்கா ஐந்து இடங்கள் முன்னேறியுள்ளது. பாரிசை தலைமையிடமாக கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள 180 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான ஊடக சுதந்திர சுட்டியில், சிறிலங்கா 126 ஆவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 131 ஆவது இடத்தில் இருந்த சிறிலங்கா இந்த ஆண்டு ஐந்து இடங்கள் முன்னேறியிருக்கிறது. ஊட்க சுதந்திர சுட்டியில் இம்முறை நோர்வே முதலிடத்திலும், அதையடுத்து பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளும் உள்ளன. கடைசி 180 ஆவது இடத்தில் துர்க்மெனிஸ்தான் உள்ளது. அதனுடன் கடைசி இடங்களில்  வடகொரியா, எரித்ரியா, சீனா, வியட்னாம் ஆகிய நாடுகள் உள்ளன.   http://www.puthinappalakai.net/2019/04/19/news/37409
  • அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அமெரிக்க கடற்படையின் நாசகாரி போர்க் கப்பல் ஒன்றும்,  போக்குவரத்து கப்பல் ஒன்றும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளன. USS Spruance  என்ற நாசகாரி கப்பலும், USNS Millinocket  என்ற போக்குவரத்துக் கப்பலும் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து, CARAT-2019 எனப்படும், “கப்பல் தயார்நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு” என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சிறிலங்கா வந்துள்ளன. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் அமெரிக்க கப்பல்களை சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும், அமெரிக்க தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர்களில் ஒருவரான லெப்.கொமாண்டர் பிறயன் பட்ஜ் ஆகியோர் வரவேற்றனர். சிறிலங்கா கடற்படையின் சயுரால மற்றும் சமுத்ர ஆகிய போர்க்கப்பல்களுடன் இணைந்து அமெரிக்க போர்க்கப்பல்கள், கரையோர மற்றும் ஆழ்கடல் பயிற்சிகள் என, இரண்டு கட்டங்களாக CARAT-2019 கூட்டுப் பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இந்தக் கூட்டுப் பயிற்சியின் அடிப்படை நோக்கம், கடல்சார் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதாகும். சிறிய படகுகளை கையாளுதல்,  சுழியோடும் பயிற்சிகள், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, சமூக நலன்புரி செயற்பாடுகள், விளையாட்டு, போன்றவற்றின் மூலம், இருதரப்பு ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. 103 மீற்றர் நீளம் கொண்ட USNS Millinocket என்ற, மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கக் கூடிய அதிவேக போக்குவரத்துக் கப்பல், 2362 தொன் எடையுள்ளது. Arleigh Burke வகையைச் சேர்ந்த நாசகாரி போர்க்கப்பலான, USS Spruance  ஆகப் பிந்திய தொழில்நுட்பங்களைக் கொண்ட அதி நவீன போர்க்கப்பலாகும். 160 மீற்றர் நீளமும் 9580 தொன் எடையும் கொண்ட இந்த நாசகாரியில் 260 அதிகாரிகள் மற்றும் படையினர் உள்ளனர். http://www.puthinappalakai.net/2019/04/19/news/37415
  • கோத்தாவுக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள றோய் சமாதானத்துடன் பொன்சேகா, விக்கி அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளுடன் சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டத்துக்கு தொடர்பு இருப்பதாக, சிறிலங்கா பொதுஜன பெரமுன குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை சுமத்தினார். ”கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவின் வழக்குத் தாக்கல் செய்துள்ள றோய் மனோஜ்குமார் சமாதானம், சிறிலங்கா அரசாங்க உயர்மட்டங்களுடன் பேசியிருக்கிறார். கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்துவதில் முன்னிலை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, றோய் சமாதானத்துடன் இணைந்து ஒளிப்படமும் எடுத்துள்ளார். சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுகளை கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் றொய் சமாதானத்துடன் ஒளிப்படம் எடுத்திருக்கிறார். சிறிலங்கா அமைச்சர் மங்கள சமரவீரவும், கோத்தாபய ராஜபக்ச மீதான இந்த வழக்கிற்குப் பின்னால் இருக்கிறார்.  அவர் தொடர்ச்சியாக கோத்தாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். உள்ளூர் நீதிமன்றங்களில் கோத்தாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத அரசாங்கம், வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனங்களைப் பயன்படுத்தி, வழக்குகளை தாக்கல் செய்துள்ளது. பொதுஜன பெரமுன இன்னமும் அதிபர் வேட்பாளரை தீர்மானிக்கவில்லை. அவர்களுக்கு சவாலை ஏற்படுத்தக் கூடியவர்களில் ஒருவராக கோத்தாவை பொதுஜன பெரமுன அடையாளம் கண்டுள்ளது. எனவே தான், கோத்தாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், அவரது அமெரிக்க குடியுரிமை நீக்க செயற்பாடுகள் மே மாதத்துக்குள் நிறைவடையும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.net/2019/04/19/news/37411