• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
arjun

அகோர டெல்கி

Recommended Posts

எனது கனவிலும் நினைத்து பார்த்திராத ஒரு நகரத்திற்கு  காலம் என்னை இழுத்துக்கொண்டுபோய் விட்டிருந்தது .நள்ளிரவு டெல்கி விமான நிலையத்தில் நண்பருடன் இறங்கி சக பயணிகளுடன் பச்சை நிற லைட் எரியும் வெளியே செல்லும் பாதையில் நிற்கும் போது ஒரு சீக்கிய அதிகாரி வந்து எமது சூட்கேசுகளை பரிசோதிக்க வேண்டும் என்று உள்ளே அழைத்துசெல்லுகின்றார் .என்னுடன் கையில் கொண்டுவந்த கைப்பையில் தான் எனது உடுப்புகள் அனைத்தும் இருந்தது .
 
சூட்கேஸ்  பாண்டேஜ்,பிளாஸ்டர்கள்,கையுறைகள் ,மருந்துவகைகள் என்று நிரம்பியிருக்கு .நீ ஒரு வைத்தியரா? என்று கேட்டார் அந்த அதிகாரி .
இல்லை, இது தமிழ் நாட்டு அகதி முகாம்களில் இருக்கும் எமது மக்களுக்கு கொண்டு செல்லுகின்றேன் என்றேன் .இந்த பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவர முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும் ,எனவே இரு சூட்கேசுகளையும் இப்போ இங்கே விட்டுவிட்டு போகலாம் .சூட்கேசுகளை பின்னர் முறையான பத்திரங்களுடன் வந்து பெற்றுகொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார் .
 
வெளியே வரும்போது அதிகாலை இரண்டு மணியிருக்கும் .டெல்கியின் வெக்கை காற்று அனலாக வீசுது .மக்கள் ஆரவாரம் அதிகமில்லை .எங்கும் எதிலும் ஹிந்தி மயம் .எம்மை பார்த்து கை ஆட்டிய படியே இருவர் வருகின்றார்கள் (இப்போ ஒருவர் கனடாவில் மற்றவர் சென்னையில் ).சிறிய அறிமுகத்துடன் டாக்சி 166 south avenue இல் நிற்கின்றது .
 
இரண்டாவது மாடி தான் எமது அலுவலகம் .மூன்று அறைகள் ,விசாலமான ஹால் ,குளிப்பறை ,தொலைபேசி வசதிகளுடன் ஆனது .இரண்டு அறைகளும் வாடகைக்கு விடப்பட்டிருந்து . தி முக ராஜ்யசபை உறுப்பினர் எல்.கணேசனின் குவாட்டர்ஸ் அது .பயண களைப்பு தூங்க போய்விட்டோம்.
 
காலை கண்ணை விழித்தால் ,மிக மிக சுத்தமான ,பச்சை பசேலென்ற பசுமையான மரங்களும் புற்களும்  சூழ்ந்த சுற்றாடல் .இந்த இடம்  இந்தியாவிலா இருக்கு என்று வியப்பாக இருந்தது.புதுடெல்கி முற்று முழுதாக வெளிநாட்டவர்களும் அரசியல்வாதிகளும் இருக்கும் ஒரு நகரம் அதனால் அந்த அளவு துப்பராவாக வைத்திருப்பதாக நண்பன் சொன்னார் .ஒரு நண்பரை காணவில்லை மற்றவர் காலை சாப்பிடபோகலாம் என்றார் .
 
கீழே  இறங்கினால் ஒரு சிறிய மைதானம் அதைதாண்ட மிக அகண்ட வீதி சவுத் அவனியு .ஜனாதிபதி மாளிகையை சுற்றவரவீதி அதில்  இருந்து  இரு வீதிகள் பிரிகின்றது .வடக்கு தெற்கு செல்லும் இந்த வீதிகளில் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,இராஜதந்திரிகள் ,அரசஊழியர்கள் ,புலனாய்வாளர்கள் தங்கும் குவார்டேர்ஸ். சற்று தள்ளி பாராளுமன்றம் ,இந்தியா கேட் ,பிரஸ்கிளப் எல்லாம் அமைந்திருக்கின்றது.
 
காலை சாப்பாடு அங்கிருந்த கன்டீனில் இட்டலி சாப்பிட்டோம் .தென்னிந்தியர்களை போல ஆறு எழு இட்டலியை சம்பல் சாம்பாருடன் சாப்பிடாமல் ஒன்று இரண்டு பெரிய இட்டலியை சாம்பருக்குள் போட்டு கரண்டியால் இட்டலியை வெட்டி சாம்பாருடன் சேர்த்து அள்ளி சாப்பிட்டார்கள் .வடையும் அதே பாணியில் தான் .சப்பாத்தி கோழி கறி எதுவித ருசியும் இல்லை வெறும் பச்சைத்தண்ணி .
 
வேறு ஒரு இடத்தில் இருந்த மற்றவர் மாலை தனது வேஸ்பா ஸ்கூட்டரில் வந்தார் .அவர்தான் நிரந்தரமாக டெல்கியில் இருப்பவர் .அடுத்த நாள் சென்னைக்கு  நாங்கள் பயணமாகிவிட்டோம். திரும்ப மூன்று வாரங்களில் நான் மட்டும் டெல்கி திரும்பினேன் .
 
டெல்கி வெப்பம் தொடரும்.  
  • Like 14

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

சுப்பராய் எழுதியிருக்கிறீங்க. மறக்காமல் மாலைதீவுக்குப் போன ஸ்ரோறியையும் எழுதுங்க அண்ணே

Share this post


Link to post
Share on other sites

சுப்பராய் எழுதியிருக்கிறீங்க. மறக்காமல் மாலைதீவுக்குப் போன ஸ்ரோறியையும் எழுதுங்க அண்ணே

 

ஏன் அவசரப்படுகின்றீர்கள்? அண்ணா எல்லோருக்கும் தருவார்.....எழுதித்தருவார். :D  :D  :D

Share this post


Link to post
Share on other sites

சுப்பராய் எழுதியிருக்கிறீங்க. மறக்காமல் மாலைதீவுக்குப் போன ஸ்ரோறியையும் எழுதுங்க அண்ணே

நிச்சயம் எழுதுவன் ,நடந்தது முக்கால்வாசி தெரியும் இருந்தாலும் சும்மா பிழையான தகவல்கள் எழுத கூடாது .மாலைதீவிற்கு போனவர் இங்கு இருக்கின்றார் .(வவுனியாவில் இருந்தவரை வெளியில் எடுக்க உதவியும் செய்தேன் ) ஆனால் அவர் வாய் திறக்கிறார் இல்லை .

அதே போல பல கொலைகளின் போது இருந்தவர்களும் இங்கு இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் வாயால் அணுவும் அசையுதில்லை .(சந்ததியார் கொலை ,சுழிபுர புலிகள்கொலை ,டேவிட்  ஐயா கடத்தல் ,உமா கொலை )

அவர்கள் இடத்தில நான் இருந்தாலும் வாயை திறக்கமாட்டன் என்றுதான் நம்புகின்றேன் . 

ஆனால் இந்த பதிவில் அரசியல் வராது . :o

Share this post


Link to post
Share on other sites

நிச்சயம் எழுதுவன் ,நடந்தது முக்கால்வாசி தெரியும் இருந்தாலும் சும்மா பிழையான தகவல்கள் எழுத கூடாது .மாலைதீவிற்கு போனவர் இங்கு இருக்கின்றார் .(வவுனியாவில் இருந்தவரை வெளியில் எடுக்க உதவியும் செய்தேன் ) ஆனால் அவர் வாய் திறக்கிறார் இல்லை .

அதே போல பல கொலைகளின் போது இருந்தவர்களும் இங்கு இருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் வாயால் அணுவும் அசையுதில்லை .(சந்ததியார் கொலை ,சுழிபுர புலிகள்கொலை ,டேவிட்  ஐயா கடத்தல் ,உமா கொலை )

அவர்கள் இடத்தில நான் இருந்தாலும் வாயை திறக்கமாட்டன் என்றுதான் நம்புகின்றேன்

ஆனால் இந்த பதிவில் அரசியல் வராது . :o

 

அதெப்படி  புலிகளில் இருந்தவர்கள் வாய் திறக்கணும்???

திறந்தவர்களுக்கு ஆராதனை.....???

Share this post


Link to post
Share on other sites

தொடருங்கள் அர்ஜீன் அண்ணா. வாசிக்க நான் இருக்கேன்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எதையும் எழுதுங்கோ உங்களது எழுத்துக்களில் உங்களை அறியாமலேயே பல உண்மைகளை வெளிவரும். ஆனால் பெண்களைப்பற்றி விமர்சனம் செய்யும்போது அவதானமான வார்தைகளைப் பிரயோகிக்கவும். ஜனநாயகம் எனும் பெயரில் பொதுவெளியில் யார்மீதும் சாணியடிக்கும்வேலையில் ஈடுபடாதீர்கள். நாம் கிடுகு வேலிகளால் அரணமைத்து போதாக்குறைக்கு கிணத்தடிக்கும் வேறாக வேலியடைச்சு எம்மைக் கட்டுபாட்டுடன்  பேணிக்காத்த சந்ததிகளைக் கொண்ட சமூகம். அவ்வேலிகளுக்கு நெருப்புமூட்ட எத்தணிக்காதீர்கள். மேலைத்தேச வாழ்கையும் அவ்வாழ்க்கைக்குள் நீங்கள் நுழைத்த புதியனவவும் உங்கள் வார்த்தைப்பிரயோகங்களை வன்மையாக்கின்றன.

 

 

Edited by Elugnajiru

Share this post


Link to post
Share on other sites

எதையும் எழுதுங்கோ உங்களது எழுத்துக்களில் உங்களை அறியாமலேயே பல உண்மைகளை வெளிவரும். ஆனால் பெண்களைப்பற்றி விமர்சனம் செய்யும்போது அவதானமான வார்தைகளைப் பிரயோகிக்கவும். ஜனநாயகம் எனும் பெயரில் பொதுவெளியில் யார்மீதும் சாணியடிக்கும்வேலையில் ஈடுபடாதீர்கள். நாம் கிடுகு வேலிகளால் அரணமைத்து போதாக்குறைக்கு கிணத்தடிக்கும் வேறாக வேலியடைச்சு எம்மைக் கட்டுபாட்டுடன்  பேணிக்காத்த சந்ததிகளைக் கொண்ட சமூகம். அவ்வேலிகளுக்கு நெருப்புமூட்ட எத்தணிக்காதீர்கள். மேலைத்தேச வாழ்கையும் அவ்வாழ்க்கைக்குள் நீங்கள் நுழைத்த புதியனவவும் உங்கள் வார்த்தைப்பிரயோகங்களை வன்மையாக்கின்றன.

அண்ணைக்கு TALIBAN ,RSS, ISIS இந்த மூன்று அமைப்புகளிலும்  சேர முழுதகுதியும் இருக்கு  .அவனவன் வெளிச்சத்தை தேடி போவான் சிலர் என்னடா என்றால் இருட்டிற்குள் இருந்து பழகிவிட்டோம் அப்படியே விடுங்க என்கின்றார்கள் . :(

Share this post


Link to post
Share on other sites

தொடரை எழுதுங்க.. கருத்துக் குழப்பல்களும் நல்லதுதான்.. அப்போதுதான் எழுத வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கும்!!  :o  :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

அர்ஜூனும் சாத்திரியும் எழுதுவது மிக நல்லது..பலரின் கனவுக்கோட்டைகள் தருகிறது.....

ஒரு இயக்கத்தில் உயிரை துச்சமாக நினைத்து இருந்த்திலும் பார்க்க ...பின் அது விடும்(விட்ட) பிழைகளை சுட்டிக்காட்டுவதற்கு தான் மிக அதிக நெஞ்சுரம் வேண்டும்...bravo..தொடருங்கள்..

 

சும்மா பாபா கூட்டம் மாதிரி brainwashed பண்ணப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் இது தான் வித்தியாசம்...இருவரும் தொடர்ந்து எழுதுவதே நல்லது

Share this post


Link to post
Share on other sites
ஒரு சனிக்கிழமை காலை மீண்டும் டெல்கியில் வந்து இறங்கினால் அன்று மதியமே இலங்கை தமிழர்களுக்காக டெல்கி தமிழ்சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊர்வலம் இந்தியா கேட்டிற்கு முன்னால்  நடைபெறுகின்றது என்று என்னையும் போய் கலந்துக்க சொன்னார் டெல்கி நண்பர் சொன்னார்.
 
சம்பத் என்ற ஒரு தமிழ்நாட்டு உறவுடன் ஊர்வலத்திற்கு சென்றால் "இலங்கை தமிழருக்கு நீதி வேண்டும் " என்று முன்னால் பெரியதொரு பானரை பிடித்தபடி ஆண்களும் பெண்களுமாக இருநூறு பேர்வரையில் கோசம் எழுப்பியபடி செல்கின்றார்கள் .ஒரு பெண்தான் "இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பு ,தமிழர்களுக்கு உரிமையை கொடு ,தமிழர்களை கொல்லாதே " இப்படி பல கோஷங்களை எழுப்ப மற்றவர்கள் திருப்பி அதை சொல்லிக்கொண்டு போனார்கள். முன் வரிசையில் அரசியல்வாதிகள் போல தோற்றத்துடன் பத்துபதினைந்து பேர்களும் பின்னால் சென்றவர்கள் மிகவும் ஏழ்மையான கிராமத்தவர்கள் போல இருந்தார்கள் .எனக்கு ஒரு தெரிந்த முகமும் இல்லை .ஊர்வலம் முடிய டாக்டர் இரா .ஜனார்த்தனம் ,அதிமுக எம்.பி வலம்புரிஜான் ,வரதராஜமுதலியார்,பகுகுணா போன்றவர்கள் உரையாற்றினார்கள் .
 
வரதராஜமுதலியாருடன் நின்ற ஒரு இளைஞனை எங்கே பார்த்த நினைவு வர அருகேசென்றால்  ஒரு சின்ன நாயகியாக கொழும்பில் இருந்து எமது ஊருக்குள் வலம் வந்த ஜெயந்தியின் தம்பி .ஜெயந்தியுடன் சேர்ந்து இவரும் பரதநாட்டியம் ஆடுவதால் அவரை அப்படியே நினைவில் இருந்தது .
 
கமராவுமா கையுமாக நின்றவரை நெருங்கி என்னை தெரியுமா என்று கேட்டேன் .ஆம் என்று தலையாட்டிவிட்டு தான் பம்பாயில் இருந்து வரதராஜா முதலியாருடன் வந்ததாகசொன்னார்.அவர் ஈழதமிழர்களுக்கு பல வழிகளிலும் உதவுதாக சொன்னார் .தான் எந்த இயக்கத்திலும் இல்லை என்று சற்று அழுத்தி சொன்னார் .இந்த வரதராஜா முதலியாரின் கதைதான்  "நாயகன்" படமாக வந்ததென்று பின்னர் அறிந்தேன் .தான் என்ன செய்கின்றார் என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை என்னையும் கேட்கவில்லை போட்டுவருகின்றேன் என்று போய்விட்டார் .ஊரில் நாலு வீடு தள்ளி இருந்தவர் பல வருடங்களின் பின் டெல்கியில் சந்தித்தும் இரு நிமிட விசாரிப்புடன் முடிந்துவிட்டது .பல வருடங்களின் பின்னர் பிரசாந்த் ,தியாகராஜனை வைத்து "அடைக்கலம் " படம் எடுத்தது இவர்தான் . 
 
ஊர்வலம் முடிய ஆட்டோவில் வீடு திரும்பும் போது என்ன என்ன ஊர்வலம் ,ஏன் நடந்தது ,வந்த அந்த மக்கள் யார் என்று எல்லாம் ஆயிரம் கேள்விகள் எழுந்தது . ஆனால் பின்னர் அப்படி ஒரு அனுபவம் எனக்கு ஏற்படவேயில்லை .ஒழுங்காக நித்திரை இல்லாதது,பயணக்களைப்பு , உச்சி வெயில் ,ஊர்வலம் எல்லாம் சேர்த்து முதன் நாளே மண்டையை ஒரு கலக்கு கலக்கிவிட்டிருந்தது .
 
டெல்கி நண்பர் உமாவின் பெரும் விசுவாசி .எண்பதாம் ஆண்டில் இருந்து அமைப்பில் இருக்கின்றார் .டெல்கியில் பலருடன் தொடர்பில் இருந்தார் .பாலஸ்தீனதிற்கு போராளிகளை அனுப்புவது  இவர் வேலை தான் .பெரிதாக எங்கும் வெளியில் போககூடாது ,கண்டவர்களுடன் கதை வைக்க கூடாது ,ஐந்து சதத்திற்கும் காசு கணக்கு எழுதவேண்டும் என்று எல்லாம் கொண்டிசன் சொன்னார் .இது ஒரு விடுதலை அமைப்பு அதுவும் டெல்கியில் இருக்கின்றோம் வேண்டாத பிரச்சனைகள் ஏதும் வந்துவிடக்கூடாது என்றார் .அவர் எங்களுடன் தங்குவதில்லை சற்று தள்ளி அதிமுக எம்பி ஆலடி அருணாவின் தனி வீட்டில் ஒரு அறையில் இருந்தார் .ஆலடி அருணா தனது குவாட்டேர்சை ஒரு மலையாள குடும்பத்திற்கு வாடைகைக்கு கொடுத்திருந்தார் .அவர்களுக்கு மூன்று அழகான பாடசாலை செல்லும் பைங்கிளிகள் இருந்தார்கள் .அநேகமாக மாலையில் பாட்மின்டன்  விளையாடிக்கொண்டிருப்பார்கள் அதனால் தானோ என்னவோ எனது நண்பர் நான் அங்கு வருவதை பெரிதாக விரும்புவதில்லை .
 
நான் இருந்த குவாட்டேர்சில் இருந்த தமிழ் நாட்டு உறவுகள் , சம்பத் -சட்டம் படித்துக்கொண்டிருந்தார் ,முன்னாள் திமுக எம்பியின் மகன் .மிக நல்லவர் பழகவும் இனியவர் . எனது பேச்சுத்துணை இவர்தான் . சித்தார்த்,கபிலன் -சகோதரர்கள் வேலை செய்துகொண்டு இருந்தார்கள் .இவர்கள் உலகமே வேறு .பெரிதாக நான் கதைவைப்பதில்லை .ஜான் சுந்தர் -டெல்கி தமிழ் வானொலியில் (ஆகாசவாணி) செய்தி வாசிப்பவர் .சிறந்த அறிவாளி ,உலக விடயம் எல்லாம் நுனிவிரலில் வைத்திருப்பார் .அனேக இரவு இவருடன் கழியும் .
 
 எனது வேலை -பத்திரிகையாளர்கள் ,அரசியல்வாதிகள் ,வெளிநாட்டு இராஜதந்திரிகள் இவர்களை  தொலைபேசியில் அழைத்து நியமனம் வைத்து  பின்னர் போய் சந்தித்து எமது பிரச்சனையை எடுத்து சொல்வது .இவர்கள் தொலைபேசி எண்கள் விலாசங்கள் அடங்கிய கையேடு இருந்ததால் வேலை சுலபமாக இருந்தது . பலருடன்  தொலைபேசி அழைப்புடன் தொடர்பு நின்றுவிடும் .சிலர் நியமனத்தை தந்து விட்டு அங்கு போனால் எமது பிரசுரங்களை வாங்கிகொண்டு இரண்டு வார்த்தையுடன் அனுப்பிவிடுவார்கள் .சிலர் மிக ஆர்வமாக அனைத்து விடயங்களை கேட்பது மாத்திரம் அல்லாமல் முடிந்தால் இடைக்கிடை வந்து சந்திக்கவும் சொன்னார்கள் .தலைவர் டெல்கி வந்தால் தங்களுக்கு அறிமுகம் செய்துவைக்கும் படியும் கேட்டார்கள் .அமேரிக்கா ,கனடா ,பிரிட்டன் ,பிரான்ஸ்,சிம்பாவே போன்ற நாடுகள் இப்படி ஆர்வம் காட்டினார்கள் .பத்திரிகையாளர்கள் பொதுவாக சந்திப்புகளில் ஆர்வம் காட்டுவார்கள் .
-தமிழ் ஆங்கில தினசரி வார மாத பத்திரிகைகள்,புத்தகங்கங்கள் வாங்கி எமது பிரச்சனை பற்றி ஏதும் இருந்தால் அவற்றை  சேர்த்து வைப்பது .இந்த காலகட்டத்தில் தினமும் எமது நாட்டுபிரச்சனை ஏதாவது செய்தி பத்திரிகைகளில் வந்துகொண்டே இருக்கும் .இதை விட சென்னையில் இருந்து பிரசுரங்கள் ரெயினில் பெரிய  பொட்டலாமாக அனுப்பிவிடுவார்கள் .குறிப்பாக ஆங்கிலத்தில் Spark என்று மிகத்தரமான  சஞ்சிகை ஒன்று சேர்லி கந்தப்பாவை ஆசிரியராக கொண்டு வெளிவந்துகொண்டிருந்தது .
 
பஸ்சில் தான் எனது அனேக பயணங்கள் இருந்தது அங்கு  ஒரு  பெரிய வேடிக்கை என்னவென்றால் பஸ் தரிப்பில் பஸ் நிற்காது .சிலோவாக்கி விட்டு போய்கொண்டே இருப்பார்கள் .பயணிகள் ஏறுபவர்கள் என்றாலும் இறங்குபவர்கள் என்றாலும் ஜம்பிங்தான் .சில வாரங்களில்  சயிக்கில் ஒன்று வாங்கிவிட்டேன் .டெல்கி ரயில்வே ஸ்டேசனுக்கு ஒரு மணித்தியாலம் சயிக்கிளில் ஓடிப்போய் பார்சலை எடுத்துக்கொண்டு வந்ததை  நினைக்க இப்ப வியப்பாக இருக்கு .சயிக்கிளுக்கும் எனக்கும் அப்படி ஒரு பொருத்தம்  லண்டனிலும் Neasden to Knightbridge எந்த குளிரிலும் சயிக்கிளில் தான் வேலைக்கு போய்வந்தேன் .
 
சாப்பாடு காலையில்  அனேகம்   கேரள பெட்டிகடை உப்புமாதான் .ஒரு சொட்டு சீனியையும் அதன் மேல் தூவி தருவார்கள் .கரண்டியால் நின்றபடியே சாப்பிட்டு விட்டு டீ ஒன்று அடிக்க சரி .மதியம் மூன்று சொய்ஸ் . ஒன்று  அரசியல்வாதிகளின் கன்ரீன் .நல்ல சுத்தமாக இருக்கும் ஆனால் வட இந்திய சாப்பாடுதான் .சப்பாத்தியும் கோழி குழம்பு பருப்பு .முழுக்க கதர்வேட்டி கோஷ்டிகள் .வடையை கரண்டியால் தின்பவர்கள் சப்பாத்தியை கையால் அந்த மாதிரி சத்தத்துடன் பிரித்து மேய்வார்கள் .இரண்டாவது வேறொரு கேரள கடை .  Rice Pilau அல்லது முட்டை குழம்பும் பரோட்டாவும் .இவை இரண்டும்தான்  நான் அதிகம் சாப்பிட்டது .மூன்றாவது ஒரு தமிழரின் சாப்பாட்டுக்கடை .கொழும்பு கோட்டையில் இருந்த கடை போலிருக்கும் .அனேக தமிழர்கள் அங்குதான் வருவார்கள் .விலைசாப்பாடு.நிர்ணயிக்கபட்ட விலைக்கு எவ்வளவும் சாப்பிடலாம் .காசை மிச்சம் பிடிப்பதற்காக காலையில் சாப்பிடாமல் மதியம் இங்கு வந்து மூன்று நாலு பிளேட் என்று வெட்டுவார்கள் .
 
மாலையில் காலை உணவு அருந்தும் கேரளகடையில் வாய்பான் மாதிரி இனிப்பான ஆனால் தட்டையான ஒரு பணியாரம் பிளேன் ரீ. இரவு தினமும் இட்டலிதான் .வீட்டிற்கு   கொண்டுவந்து தருவார்கள் .அனேக தமிழ் எம்பி மார்களுக்கு எல்லாம் இவர்கள் தான் சப்ளை .இவர் இடைக்கிடை எம்பி மார்கள் வீட்டில் நடக்கும் கிசு கிசு செய்திகளுடன் வருவார் .
 
அங்கு நடந்த சில சம்பவங்களுடன் மீண்டும் ..... :)

Share this post


Link to post
Share on other sites

ஏற்கனவே இங்கு நீங்கள் பதிந்தவைகளை மீண்டும் மீண்டும் அரைப்பது போலுள்ளது..

முன்பு நீங்கள் எழுதியவற்றை ஒருமுறை வாசித்துவிட்டு எழுதினால் நல்லது.

Share this post


Link to post
Share on other sites

அல்ஹெய்தா, ஐஎஸ் ஐஎஸ், ஆர் எஸ் எஸ், என்பன மத அடிப்படைவாதக் கூட்டமெனிலும் அவர்கள் தங்கள்சார்ந்த மார்க்கத்தையோ அன்றேல் அவைகளைக் கடைப்பிடிக்கும் மக்களையோ ஜனநாயகம் எனும்பெயரில் தூசணை செய்வதில்லை. தவிர அவர்கள் தாம்மை ஜனநாயகவாதிகள் எனக் கூறிக்கொள்வதில்லை.

 

இங்கு புலி ஜனநாயகம் தமிழர் ஜனநாயகம் உட்கட்சி ஜனநாயகம் இயக்க ஜனநாயகம் என்று பீத்திக்கொள்வோரே பொதுவெளியில் மக்களின்மீது காறு உமிழ்கின்றார்கள்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this