Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

மத்தியஸ்தர்களும் ,வாக்காளர்களும் பணத்திற்காகவா  தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள் ???

Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply

இறுதிச்சுற்றில் ஜெசிக்கா பாடிய தாயகம் சம்பந்தமான இன உணர்வான பாடல்கள்தான் பலருக்கு பிரச்சனையாய் இருப்பதாக புரிந்து கொள்ளக்கூடியதாய் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா

 

***********

 

 

நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
என் அனுமானிப்பின் படி அவர் முதல் 3 பேருக்குள் வந்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. 
 
 
எது எப்படியோ இந்த வெற்றி மிகவும் சந்தோசம் தருகிறது. இவர் தொடர்ந்தும் படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தி மேன் மேலும் முன்னெர  வாழ்த்துக்கள்.
 
இவருக்கு கிடைத்த பரிசுதொகை குறைந்த பட்சம் $53,000 கனேடியன் டாலர்ஸ்.
இவ்வளவு பரிசுத் தொகையையும் சமனாக பங்கிட்டு  தமிழகத்திலும், ஈழத்திலும் இருக்கும் பாதிப்படைந்த, மற்றும் நலன் குறைந்த குழந்தைகளுக்கு நன்கொடை செய்துள்ளார்.
இந்த மனது எல்லாருக்கும் வருமா? ஏன் எனேக்கே வருமா தெரியவில்லை? 
 
இங்கு கனாடாவில் இவர்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் அல்ல, சாதாரண தமிழ் குடும்பம். நாங்கள் படும் அணைத்து கஷ்டங்களும், நஷ்டங்களும் இவர்களுக்கு உண்டு. எனவே இது மிக மிக போற்றத்தக்க செயல்.
நாம் அனைவரும் பெருமை கொள்ளகூடிய தருணம். இவரால் நன்மை அடையப்போகும் குழந்தைகளின் ஆசீர்வாதம் இவருக்கும் இவரின் குடும்பத்தாருக்கு என்றும் கிடைக்கும்.
 
சகட்டு மேனிக்கு இந்த திரியிலும் (ஜெசிக்கா சூப்பர் சிங்கர் தெரிவிலும்) அரசியல் எழுதியவர் இங்கே உண்டு.
உங்களால் யாருக்கு என்ன லாபம்? ஜெசிக்கவால் அவள் குடும்பத்தால் 40 பிள்ளைகள் கொஞ்ச காலத்துக்கு சந்தோசமாக இருப்பார்கள். அதுவே போதும்... மற்றும் படி நீங்கள் அண்ணாந்து பார்த்து அதிக அதிகமாக காரி துப்புங்கள் ...தாங்குவது என்னவோ உங்கள் முகங்கள்  தானே.
 
 
 
Jessica we are so proud of you and your family !!! 

 

எனது கருத்தும் இதுவே. 

நன்றி சசி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசிக்காவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

 

 

நமக்குள்ளும் திறமைகள் இருக்கின்றன என்பதை மீளவும் ஈழத்துச் சிறுமியாக நிலை நிறுத்தியிருக்கிறாள் ஜெசிக்கா. எதிர்பார்த்த முடிவுதான் இதில் முதன்மை நிலை அடைய வில்லை என்பது தோல்வி அல்ல ஜெசிக்கா மிகப்பெரும் வெற்றியீட்டியுள்ளாள். ஒரு நீண்ட கரடுமுரடான வாழ்வு நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நம்மவர்கள் மத்தியில் அத்தகைய ஒரு நிலைக்குள்ளிருந்தும் எழுந்து கலைத்துறை நோக்கி பயணித்து இன்று உலகறியும் நிலையில் ஈழத்துச்சிறுமி என்பது சாதாரணவிடயமல்ல இதற்குப்பின்னால் எத்தனையோ துயரங்கள் உதாசீனங்கள் எள்ளிநகையாடல்கள் என்று நிறையவிடயங்கள் அதற்கு அப்பால் புலம் பெயர்ந்து முதல் தலைமுறையாக பெற்றோர் அங்குமில்லாமல் இங்கும் முழுமையாக தங்களை உறுதியான வாழ்நிலைக்குள் ஒப்புக் கொடுக்கமுடியாமல் தவிக்கின்ற ஒரு சூழலில் ஜெசிக்காவை இவ்வாறு உருவாக்கிய பெற்றோரையும் இவ்விடத்தில் மறந்துவிடலாகாது.... ஜெசிக்கா உன்க்கான முகவரியை நீ உன் திறமையினூடாக பெற்றுக் கொண்டுள்ளாய். இந்த நிலையை அடைய உன் பெற்றோர் நிறையவே கடினப்பட்டிருப்பார்கள். இன்று நீபெற்றிருக்கும் திறமையும் முகவரியுமானது எதிர்காலத்தில் பெரும் நன்மைகளை உருவாக்கும் அத்திவாரமாக அமையட்டும். விடை கொடு எங்கள் நாடே என்ற பாடல் கண்ணீர் உகுப்பதற்கு மட்டுமல்ல காலமுள்ளவரை உன்னை இயக்கும் மந்திரமாகவும் அமையட்டும். வாழ்க வளமுடன் மகளே.

Link to comment
Share on other sites

ஜெசிக்கா இரண்டாவது இடத்தை அடைந்ததும் அவரது பரிசை எம் உறவுகளுக்கு அளிக்க முன் வந்ததும் ஒரு ஈழத்தமிழனாக என்னை மிகவும் பெருமைப்படுத்தியது. கலைத்துறையை பொறுத்தமட்டில் எமக்கு கிடைக்காத பல வசதி வாய்ப்புகள் தமிழக தமிழர்களுக்கு கிடைக்கின்றது. இந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பார்த்தாலே தெரியும் பாடுபவரின் அம்மா பாட்டி முதற்கொண்டு அனைவரும் சங்கீத அறிவு படைத்தவர்களாக இருப்பர். அந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியில் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து இரண்டாம் இடத்தை பிடிப்பது என்பது மிகப்பெரிய விடயம். அதை விட பெரிய விடயம் கிடைத்த பரிசை வேறு ஒருவருக்கு அளிப்பது. தாயகம் சம்பந்தமான பாடலை பாடியதற்கும் அவர் பாராட்டப்பட வேண்டியவர். 
 
இங்கு சிலர் இந்த சிறுமியை மட்டம் தட்டுவதும் இதுக்குள்ள விபூசிகாவ கொண்டுவந்து புகுத்துவதும் மிகவும் கேவலமான செயல்கள். எம்மில் ஒருவர் முன்னுக்கு வந்தா வயிறு எரிந்து சாவது எமது இனத்தின் சிலருக்கு வழக்கம். அதுவும் நேற்று வேறு நாட்டுக்கு போய் இறங்கி இது என்னுடைய நாடு நீ வராதை என்டு சக தமிழனை பார்த்து கூறுபவர்கள் தமிழர் நலன் பற்றி கதைப்பது தான் வேடிக்கை. 

 

 

வாழ்த்துக்கள் ஜெசிக்கா ஓரளவு திறமை வைத்துக் கொண்டு போட்டியில் வெற்றி பெற்றதற்கு...ஜெசிக்கா உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.நீங்கள் வெல்வதற்காக எவ்வளவு பணத்தை செலவழித்தார்களோ?

ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவுக்கு எனது அனுதாபங்கள் உங்களிடம் திறமை இருந்தும்,பண பலம் இல்லாததால் தோத்துப் போனீர்கள்...ஏதோ ஒரு விதத்தில் உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களே உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவை விட ஜெசிக்கா நன்றாக பாடினாரா?

 

உங்கட புத்தி எப்பவும் குறுக்கு வழியால தான் போகுமா? மனோ சித்திரா போன்றவர்களை பணத்திற்கு வாங்கும் அளவுக்கு வசதி படைத்தவர்கள் இல்லை இவர்கள். இறுதி சுற்றில் ஸ்ரீஷா ஹரிப்பிரியாவை விட ஜெசிக்கா நன்றாகவே பாடினார்.  

Link to comment
Share on other sites

..இப்படியான செயல்கள்தான் இனி நமது போராட்டவடிவம் என்றாகிவிட்டது.. புலம்பெயர் ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் நம்ம அமைப்புகளில் சிலவும் இதை கற்றுகொடுத்திருக்கிறார்கள் அல்லது இப்படியான செயல்கள்தான் உலகம் நம்மை திரும்பிபார்க்கும் என்று நம்மவர்களை நம்பும்படி ஆக்கி இருக்கிறார்கள்..

:D :d :D

eurovision போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றிருந்தால் அதனை கொண்டாடுவதில் ஒரு அர்த்தம் இருக்கு இதுக்கெல்லாம் போய் முடியல்ல

Link to comment
Share on other sites

..இப்படியான செயல்கள்தான் இனி நமது போராட்டவடிவம் என்றாகிவிட்டது.. புலம்பெயர் ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் நம்ம அமைப்புகளில் சிலவும் இதை கற்றுகொடுத்திருக்கிறார்கள் அல்லது இப்படியான செயல்கள்தான் உலகம் நம்மை திரும்பிபார்க்கும் என்று நம்மவர்களை நம்பும்படி ஆக்கி இருக்கிறார்கள்..

:D :D :D

eurovision போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றிருந்தால் அதனை கொண்டாடுவதில் ஒரு அர்த்தம் இருக்கு இதுக்கெல்லாம் போய் முடியல்ல

 

குளிர்ந்த நீரில் குளித்தால் வயித்தெரிச்சல் குறைய வாய்ப்பு உள்ளது.  :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா ஓரளவு திறமை வைத்துக் கொண்டு போட்டியில் வெற்றி பெற்றதற்கு...ஜெசிக்கா உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.நீங்கள் வெல்வதற்காக எவ்வளவு பணத்தை செலவழித்தார்களோ?

ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவுக்கு எனது அனுதாபங்கள் உங்களிடம் திறமை இருந்தும்,பண பலம் இல்லாததால் தோத்துப் போனீர்கள்...ஏதோ ஒரு விதத்தில் உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களே உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவை விட ஜெசிக்கா நன்றாக பாடினாரா?

 

வணக்கம் ரதி,
உங்கள் இசை ஞானம் எந்த அளவு என்று எனக்கு தெரியாது. உங்களை குறைத்து மதிப்பிடவும் நான் நினைக்க வில்லை. இசை துறையில் இருக்கும் அதீத பற்றுதலோடு, நிகழ்சிகள், பாடல் பதிவுகள், ஒரு சில நுணுக்கங்கள் அறிந்தவன் என்ற வகையில் நான் நினைப்பது ஜெசிக்கா நீங்கள் கூறிய இருவருடன் ..அதாவது ஸ்ரீ ஷா, ஹரிப் பிரியா இவர்களுடன் ஒப்பிட்டளவில் எள்ளளவும் குறைந்தவர் அல்ல.
 
ஸ்ரீ ஷாவின் குரல் மிகவும் நேர்த்தியான , பல பாடல் ரேகார்டிங்கில் பங்கு கொண்டவர் போல ஒரு கிளாரிட்டி இருக்கின்றது. தவிர அவர் பாடிய பாடல்கள் மிகவும் அருமை. அந்த வகையில் அவர் இறுதியில் தேர்வு செய்யப்படாதது கவலை தான். 
 
என் கணிப்பின் படி ஸ்பூர்தி இன்னும் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு, அனுபவித்து பாடக்கூடிய நிறைய ஜோனர்ஸ் இன்னும் இருகின்றது. அவர் எதை பாடினாலும் கர்நாடக சங்கீத பாணியில் (மழலை) தான் பாடுகின்றார். நேற்றைய அவரின் வெற்றி அவரை உடனடியாக ஒரு சினிமா பாடகியாக கொண்டு வருமா? ஹன்சிக்கா மொட்வானிக்கு, மற்றும் இன்றிய திகதியில் இருக்கும் நடிகைகளுக்கு ஒத்துவருமா என்பது கேள்விக்குறி தான்.
 
ஹரிப்ரியா  அவருக்கு  கிடைத்ததும்  வெற்றியே அன்றி தோல்வி கிடையாது.
 
உங்கள் சிலரது கருத்தில் ஜெசிக்கா எதோ மற்றையவர்களுக்கு கிடைக்க வேண்டியதை தட்டி பறித்தது போல பேசுகிறீர்கள் அது தவறு.
இதை நான் எழுதுவது அவர் ஈழத்தமிழர், நம்ம ஊரு பொண்ணு என்னும் என்னோதொடு அல்ல.
நேற்று அவர் 4,5,6 இற்குள் வந்திருந்தாலும் இன்றுவரை அவர் பாடல் பாடிய விதத்தில்.. என்னை பொறுத்தவரை அவர் என் மனதை கவர்ந்த புதிய தொரு பாடகி.
 
நாம் நடந்து வந்த பாதைகள் முழுதும் இரத்தமும், தசையும்,
இழவும், கூக்குரலும், ஒப்பாரியுமே மிஞ்சி இருந்தது ...
இப்போது ஆங்காங்கே அபூர்வமாக ஒரு  பூ மொட்டு விரித்து இருக்கிறது.
சிதைந்து போன யாழில் இருந்து ஒற்றை நாதம் கேட்கிறது ...
 
இங்கு  நாறிப்போன அரசியலோ,  சீதையை சிலுக்காக்கும் வன்மமோ  வேண்டாமே.
Link to comment
Share on other sites

இரத்தம் சிந்திய விடுதலை. .போராட்டம் இப்ப ஜூப்பர் சிங்கரில் வந்து நிக்குது....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா ஓரளவு திறமை வைத்துக் கொண்டு போட்டியில் வெற்றி பெற்றதற்கு...ஜெசிக்கா உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.நீங்கள் வெல்வதற்காக எவ்வளவு பணத்தை செலவழித்தார்களோ?

ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவுக்கு எனது அனுதாபங்கள் உங்களிடம் திறமை இருந்தும்,பண பலம் இல்லாததால் தோத்துப் போனீர்கள்...ஏதோ ஒரு விதத்தில் உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களே உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவை விட ஜெசிக்கா நன்றாக பாடினாரா?

 

 

நீங்களும் புலத்தில் இருக்கிறீர்கள்

ஆனால் உங்களைத்தவிர

மற்ற அனைவரிடமும் பணம் கொட்டிக்கிடக்கு என நினைக்கின்றீர்கள்...

எங்கோ உதைக்குதே...

சிந்திப்பீர்களாக...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மனிதருக்கு, சுண்டலுக்கு என்னவாயிற்று?

ஒரு சிறுமியின் இசை பயணத்தினை, போராட்டம், அரசியல் அது இது என்ற இழுத்துப் போட்டுக் குழப்பி அடிக்கிறார்.

நான் இவைகள் பார்பதே இல்லை. எனினும், இந்தத் திரியின் முதல் பதிவு எனது. அதில் இந்த சிறுமியின் கல்வி குறித்து கவலை, ஆதங்கம் தெரிவித்திருந்தேன்.

அப்போது கூட, படிப்பு பற்றி கதைக்கிறார் யாழ்ப்பாணப் புத்தி என்று இவர் சொல்லக்கூடும் என்று எதிர்பார்த்தேன். அவ்வளவுக்கு குதர்க்கம்.

ரதி அக்கா வேற...

உங்களுக்கு பிடித்தவர் வெல்லாவிடில், வென்றவர் மீது சேறு வாரி அடிப்பது, உங்கள் பண்பு இல்லையே. நியாயமில்லையே.

கிடைத்த பரிசை, ஏழைகளுக்கு கொடுத்த மனம் ஒன்றே, சொல்கிறதே, வெற்றிக்கு தகுதியானவர் தான் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ரதி,

உங்கள் இசை ஞானம் எந்த அளவு என்று எனக்கு தெரியாது. உங்களை குறைத்து மதிப்பிடவும் நான் நினைக்க வில்லை. இசை துறையில் இருக்கும் அதீத பற்றுதலோடு, நிகழ்சிகள், பாடல் பதிவுகள், ஒரு சில நுணுக்கங்கள் அறிந்தவன் என்ற வகையில் நான் நினைப்பதுஜெசிக்கா&நீங்கள் கூறிய இருவருடன் ..அதாவது ஸ்ரீ ஷா, ஹரிப் பிரியா இவர்களுடன் ஒப்பிட்டளவில் எள்ளளவும் குறைந்தவர் அல்ல.

ஸ்ரீ ஷாவின் குரல் மிகவும் நேர்த்தியான , பல பாடல் ரேகார்டிங்கில் பங்கு கொண்டவர் போல ஒரு கிளாரிட்டி இருக்கின்றது. தவிர அவர் பாடிய பாடல்கள் மிகவும் அருமை. அந்த வகையில் அவர் இறுதியில் தேர்வு செய்யப்படாதது கவலை தான்.

என் கணிப்பின் படி ஸ்பூர்தி இன்னும் தெரிந்து கொண்டு, புரிந்து கொண்டு, அனுபவித்து பாடக்கூடிய நிறைய ஜோனர்ஸ் இன்னும் இருகின்றது. அவர் எதை பாடினாலும் கர்நாடக சங்கீத பாணியில் (மழலை) தான் பாடுகின்றார். நேற்றைய அவரின் வெற்றி அவரை உடனடியாக ஒரு சினிமா பாடகியாக கொண்டு வருமா? ஹன்சிக்கா மொட்வானிக்கு, மற்றும் இன்றிய திகதியில் இருக்கும் நடிகைகளுக்கு ஒத்துவருமா என்பது கேள்விக்குறி தான்.

ஹரிப்ரியா அவருக்குகிடைத்ததும் வெற்றியே அன்றி தோல்வி கிடையாது.

உங்கள் சிலரது கருத்தில் ஜெசிக்கா எதோ மற்றையவர்களுக்கு கிடைக்க வேண்டியதை தட்டி பறித்தது போல பேசுகிறீர்கள் அது தவறு.

இதை நான் எழுதுவது அவர் ஈழத்தமிழர், நம்ம ஊரு பொண்ணு என்னும் என்னோதொடு அல்ல.

நேற்று அவர் 4,5,6 இற்குள் வந்திருந்தாலும் இன்றுவரை அவர் பாடல் பாடிய விதத்தில்.. என்னை பொறுத்தவரை அவர் என் மனதை கவர்ந்த புதிய தொரு பாடகி.

நாம் நடந்து வந்த பாதைகள் முழுதும் இரத்தமும், தசையும்,

இழவும், கூக்குரலும், ஒப்பாரியுமே மிஞ்சி இருந்தது ...

இப்போது ஆங்காங்கே அபூர்வமாக ஒரு பூ மொட்டு விரித்து இருக்கிறது.

சிதைந்து போன யாழில் இருந்து ஒற்றை நாதம் கேட்கிறது ...

இங்கு நாறிப்போன அரசியலோ,சீதையை சிலுக்காக்கும் வன்மமோ வேண்டாமே.

வணக்கம் சசி, நீங்கள் சொன்ன மாதிரி எனக்கு இசை அறிவு சரியான குறைவு தான்.அதை சொல்வதில் எந்தவித தயக்கமும் இல்லை.அத்தோடு சுப்பர் சிங்கர் என்னும் சூதாட்ட நிகழ்ச்சியை நான் பார்ப்பதில்லை...யாழில் கொஞ்சப் பேர் அடிபடுகின்றதை பார்த்து முக்கியமான சில வீடியோக்களை பார்த்தேன்.

பார்த்த வரையில் ஹரிப்பிரியாவுக்கும் ஸ்ரீஷாவிசாவுக்கும் அருமையான குரல் அத்தோடு நன்றாக பாடி இருந்தார்கள்...ஜெசிக்காவும் நன்றாகப் பாடுகின்றார் நான் இல்லை என சொல்லவில்லை.ஆனால் ஹரிப்பிரியா,ஸ்ரீஷா,

ஸ்பூர்த்தி மற்ற குட்டிப் பொண்ணு ஆகியோர் ஜெசிக்காவை விட அல்லது ஜெசிக்காவுக்கு சமமாக பாடுகின்றனர்.அப்படி இருக்கும் போது ஜெசிக்காவுக்கு எப்படி 2வது பரிசு கிடைத்தது?...என்னைப் பொறுத்த வரை ஸ்பூர்த்திக்கு கூட முதலாவது பரிசு கொடுத்திருக்க கூடாது . உங்களுக்கு ஸ்பூர்த்திக்கு குடுத்தது தப்பாய் படுது ஆனால் ஜெசிக்காவுக்கு கொடுத்தது சரி ஏனென்டால் ஜெசிக்கா ஈழத்துப் பொண்ணு இல்லையா?...இதே நிகழ்ச்சியில் முதல் 3 இடங்களுக்குள் ஜெசிக்கா வர விட்டால் நீங்களும் இதே யாழில் வந்து கொண்டு விஜய் ரீவியை திட்டிக் கொண்டு இருப்பீங்கள்.

உலகம் சிறியது சசி ஜெசிக்காவின் குடும்பத்தை நன்கு தெரிந்தவர்கள் உலகம் பூரா இருக்கிறார்கள். எனது நண்பி ஒருத்தி இருக்கிறாள் அவளுக்கு இயக்கம்,போராட்டம் என்டால் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது. ஒரு நாளும் பாதிக்கப்பட்டு இருக்கவில்லை. இங்கே வந்து தானும்,தன்ட குடும்பமும் என்று தான் இருக்கிறாள்.நிற்க அவளுக்கு,ஜெசிக்காவின் குடும்பம் வலு குளோஸ்...அவளுக்கு கொஞ்சம் கூட சளைத்தது இல்லை ஜெசிக்காவின் குடும்பம்.

கொஞ்சம் கூட வெட்கம்,மானம்,சூடு,சுரனை இல்லாமல் "ஜெசிக்கா" மீது கூட நம்பிக்கை வைக்காமல் வெறும் அனுதாப வோட்டுக்காக இன உணர்வுள்ள பாட்டை தேர்ந்தெடுத்து பாடினது கூட வியாபாரம் தான்...இதில் ஜெசிக்கா என்ட சின்னப் பிள்ளை மீது எந்த தப்பும் இல்லை.உங்கள போல ஆட்கள் எப்படித் தான் இதில வந்து அவர் ஈழத்துப் பெண் என் என்பதால் ஆதரிக்கவில்லை என்று கதை விட்டாலும் உண்மை அது தானே...புலத்தில் பிறந்த கண பேரின்ட பிள்ளைகளுக்கு தமிழ் என்டால் என்னவென்டே தெரியாத போது இந்த பெண் போட்டிக்கு போய் பங்கு பற்றி பரிசு வெண்டது பெரிய விடயமாய் இருக்கும்.

சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளிலோ அல்லது இன்னும் வேற நிகழ்ச்சிகளுக்களில் பங்கு பற்ற இன்னும் பலர் இனி வரும் காலங்களில் புலத்தில் இருந்து இந்தியா நோக்கி படை எடுப்பர். விஜய் ரீவியின் ஜடியா சூப்பர்...வாழ்க விஜய் ரீவி

நீங்கள் நடந்து வந்த பாதைக்கும்,எங்களது போராட்டத்திற்கும்,இரத்திற்கும்,சதைக்கும் தற்போது ஜெசிக்கா வெண்டதிற்கும் என்ன சம்மந்தம்?...எதற்கு ஓவராய் துள்றீங்கள்?...பிரேம்கோபால் வென்ட போதும் இப்படித் தான் துள்ளீனீங்களா?

முதற் பந்தியில் சொன்னீங்கள் ஜெசிக்கா ஈழச்சி என்ட படியால் அவவை ஆதரிக்கவில்லை என்று கடைசி பந்தி சொல்கிறீர்கள் போராட்டம்,இரத்தம்,சதை என்று உங்களுக்கே இது முரணாக இல்லையா?...ஒரு பொண்ணு சினிமா பாட்டுப் போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற்றதை போராட்டத்தில் வென்ட மாதிரி ஒப்பிடும் அளவுக்கு எங்களது போராட்டம் கேவலமாய் போய் விட்டது

...............................................................

நாதமுனி,ஜெசிக்கா குடும்பத்தினர் இதை அரசியலாக்கின படியால் தான் நாங்களும் அரசியல் கதைக்க வேண்டி வந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் கருத்துக்களத்தினைக் குப்பைக்கூடமாகவும், மனவக்கிரங்களையும், மனோவிகாரங்களையும் கொட்டும் இடமாகவும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தல் உள்ளது. சுண்டல் இணைக்கும் fb இணைப்புக்கள் இந்த விதிமுறைக்குள் அடங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதனுக்கு இன்னொரு அதுவும் தொடர்பே இல்லாத ஒரு மனிதன் மீது, ஒரு குழந்தையாக இருந்தாலும், இவ்வளவு காழ்புணர்வு, வயித்தெரிச்சல், பொறாமை  எல்லாம் இருக்குமெண்டு இந்த திரியை படித்த பின்னர் புரிந்து கொண்டேன். :(:mellow::o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,ஜெசிக்கா குடும்பத்தினர் இதை அரசியலாக்கின படியால் தான் நாங்களும் அரசியல் கதைக்க வேண்டி வந்தது

மன்னிக்க வேண்டும் அக்கா,

வெட்டு ஒன்று துண்டு இரண்டு என பேசும் நீங்களே, முதலில் வேறு ஒரு சிறுமி தான் வெல்லத் தகுதி என்று சொல்லிவிட்டு இப்போது தான் அரசியல் பேசுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞனால் என்ன செய்ய முடியுமோ அதை இந்த பிள்ளை செய்திருக்கிறது.

Link to comment
Share on other sites

திறமை அடிப்படையில் இதுதான் எனது ஒழுங்கு.( பாரபட்சம் ,அரசியல் ,அனுதாபம் ,வியாபாரம் பற்றி எனக்கு தெரியாது) 

 

சிறிசா 

ஹரிப்பிரியா 

பரத்  

ஜெசிக்கா 

ஸ்பூர்த்தி 

அனுசுயா .

 

ஆனால் நிகழ்வை நடாத்துபவர்கள் ஒரு தீர்ப்பை சொன்னால் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும் .

 

எத்தனை உலக தர விளையாட்டு போட்டிகளில் பிழையான தீர்ப்புகளுடன் ஆட்டம் தொடர்கின்றது . அதுவும் விளையாட்டின் ஒரு பகுதி என்றுதான் எடுத்து விளையாடுகின்றார்கள் .

 

கடந்த பெண்களுக்கான உலக கோப்பை அரை இறுதி ஆட்டம் நோர்வேயை சேர்ந்த நடுவர் தோற்றுகொண்டு நின்ற அமெரிக்க அணியை எப்படியும் வெல்லபண்ணவேண்டும் என்று நின்று வெல்லவும் செய்தார் .கனேடிய அணியின் தலைவர் ஆட்டம் முடிய அதை வெளிப்படையாக சொன்னார் அதனால் மூன்று ஆட்டங்களுக்கு அவர் தடை செய்யபட்டார் .இறுதி ஆட்டத்தில் அமெரிக்க அணி வென்று கோப்பையை கொண்டுசென்றது .

 

உலக கோப்பையில் ஜெர்மனியுடன் லம்பார்ட் அடித்த கோலை நடுவர் இல்லை என்றார் கமரா பந்து எல்லை கோட்டை தாண்டியதை துல்லியமாக காட்டியது .

 

இவைகள் எல்லாம் கடந்துதான் வாழப்பழகவேண்டும் .

 

Link to comment
Share on other sites

திறமை அடிப்படையில் இதுதான் எனது ஒழுங்கு.( பாரபட்சம் ,அரசியல் ,அனுதாபம் ,வியாபாரம் பற்றி எனக்கு தெரியாது) 

 

சிறிசா 

ஹரிப்பிரியா 

பரத்  

ஜெசிக்கா 

ஸ்பூர்த்தி 

அனுசுயா .

 

ஆனால் நிகழ்வை நடாத்துபவர்கள் ஒரு தீர்ப்பை சொன்னால் ஏற்றுகொள்ளத்தான் வேண்டும் .

 

எத்தனை உலக தர விளையாட்டு போட்டிகளில் பிழையான தீர்ப்புகளுடன் ஆட்டம் தொடர்கின்றது . அதுவும் விளையாட்டின் ஒரு பகுதி என்றுதான் எடுத்து விளையாடுகின்றார்கள் .

 

கடந்த பெண்களுக்கான உலக கோப்பை அரை இறுதி ஆட்டம் நோர்வேயை சேர்ந்த நடுவர் தோற்றுகொண்டு நின்ற அமெரிக்க அணியை எப்படியும் வெல்லபண்ணவேண்டும் என்று நின்று வெல்லவும் செய்தார் .கனேடிய அணியின் தலைவர் ஆட்டம் முடிய அதை வெளிப்படையாக சொன்னார் அதனால் மூன்று ஆட்டங்களுக்கு அவர் தடை செய்யபட்டார் .இறுதி ஆட்டத்தில் அமெரிக்க அணி வென்று கோப்பையை கொண்டுசென்றது .

 

உலக கோப்பையில் ஜெர்மனியுடன் லம்பார்ட் அடித்த கோலை நடுவர் இல்லை என்றார் கமரா பந்து எல்லை கோட்டை தாண்டியதை துல்லியமாக காட்டியது .

 

இவைகள் எல்லாம் கடந்துதான் வாழப்பழகவேண்டும் .

உங்க தீர்ப்பு உங்களுக்கு மட்டுமே .ஆனால் எமக்கென்று ஒரு தீர்ப்பும் உள்ளது .அதில் ஜெசிக்காவே முதலிடம் ..............இசை தெரிந்தவன் என்ற  ரீதியில் //////////////ஆணவத்தில் புசத்தல......உங்கள் தீர்ப்பின் இசை சம்பந்தமான கருத்துக்களை குறிப்பிடுங்க .நான் பதில் தருகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த தடவை சூப்பர் சிங்கர் ஜூனியர் வென்ற சிறுவன் இறுதி நிகழ்வில் வந்தே மாதரம் பாடினார். இம்முறை டைட்டிலை வென்ற சிறுமியும் இறுதி நிகழ்வில் வந்தே மாதரம் பாடினார். ஆனால், ஜெசிக்கா இறுதி நிகழ்வில் தாயகம் சம்மந்தமான பாடலை பாடியது மாத்திரம் பலருக்கு அரிப்பாக இருக்கின்றது. இந்த அரிப்புக்கு காரணம் கீழ்வருவனவற்றில் ஒன்றாக அல்லது பலவாக இருக்கலாம்.

 

தமது ஊரவர் இல்லை; இந்தச்சிறுமி பின்புலம் அளவெட்டியாக இருந்திருந்தால் சிலர் சாந்தி அடைந்திருக்கலாம்.

தமது நாட்டவர் இல்லை; இந்தச்சிறுமி கனடாவில் இல்லாமல் அவுஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ இருந்திருந்தால் சிலர் சாந்தி அடைந்திருக்கலாம்.

தமது மதம் இல்லை; இந்தச்சிறுமி கிறிஸ்தவராக இல்லாமல் இந்துவாக இருந்திருந்தால் சிலர் சாந்தி அடைந்திருக்கலாம்.

கடைசிக்காரணம்; விதண்டா வாதம். எதையாவது நோண்டாவிட்டால் பொழுதுபோவதற்கு என்ன செய்வது? தன் உடம்பை எவ்வளவு நேரத்திற்குத்தான் சொரிந்துகொண்டே இருப்பது? 

 

ஜெசிக்காவிற்கு பேஸ்புக்கில் 85,000 லைக்ஸ் இருக்கின்றது. இந்தச்சிறுமிக்கு பல இரசிகர்கள் உள்ளார்கள். சிலருக்கு ஜெசிக்காவின் Popularity வயித்து எரிச்சலை உருவாக்கிவிட்டது போலும். வயித்து எரிச்சல் வருவது சகஜம்தானே. 

 

https://www.facebook.com/pages/Super-Singer-Jessica/729827830394028

 

Link to comment
Share on other sites

உண்மையாக சுப்பர் சிங்கர் IV  நிகழ்வில் என்ன தான் நடந்திருக்கும் மக்களின் கருத்துக்களை டிவிட்டரில் பார்வையிட கீழுள்ள படத்தை அழுத்துங்கள்

 

http://www.supersinger.in/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா ஓரளவு திறமை வைத்துக் கொண்டு போட்டியில் வெற்றி பெற்றதற்கு...ஜெசிக்கா உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.நீங்கள் வெல்வதற்காக எவ்வளவு பணத்தை செலவழித்தார்களோ?

ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவுக்கு எனது அனுதாபங்கள் உங்களிடம் திறமை இருந்தும்,பண பலம் இல்லாததால் தோத்துப் போனீர்கள்...ஏதோ ஒரு விதத்தில் உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களே உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவை விட ஜெசிக்கா நன்றாக பாடினாரா?

அடுத்த தடவை சுப்பர் சிங்கரின் நடுவர்கள் அமைப்பில் மாற்றங்கள் சில கொண்டு வரப்போகிறார்களாம்! ரதி போன்ற நடுவு நிலைமை தவறாத மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ்க் குடும்பங்கள் அனைத்தினையும் பற்றிய பிரத்தியேக அறிவுள்ள ஆட்களை நடுவர்களாக அனுப்பி வைக்க வேண்டும்! அது ஒன்றே ஜெசிக்கா போன்று பணத்தினால் வெல்லும் ஆட்களை ஒதுக்கி வைக்க உதவும் :rolleyes: (கடைசி வரி sarcasm ! ஜெசிக்கா குடும்பம் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன்! :))

கடந்த தடவை சூப்பர் சிங்கர் ஜூனியர் வென்ற சிறுவன் இறுதி நிகழ்வில் வந்தே மாதரம் பாடினார். இம்முறை டைட்டிலை வென்ற சிறுமியும் இறுதி நிகழ்வில் வந்தே மாதரம் பாடினார். ஆனால், ஜெசிக்கா இறுதி நிகழ்வில் தாயகம் சம்மந்தமான பாடலை பாடியது மாத்திரம் பலருக்கு அரிப்பாக இருக்கின்றது. இந்த அரிப்புக்கு காரணம் கீழ்வருவனவற்றில் ஒன்றாக அல்லது பலவாக இருக்கலாம்.

 

தமது ஊரவர் இல்லை; இந்தச்சிறுமி பின்புலம் அளவெட்டியாக இருந்திருந்தால் சிலர் சாந்தி அடைந்திருக்கலாம்.

தமது நாட்டவர் இல்லை; இந்தச்சிறுமி கனடாவில் இல்லாமல் அவுஸ்திரேலியாவிலோ அல்லது இங்கிலாந்திலோ இருந்திருந்தால் சிலர் சாந்தி அடைந்திருக்கலாம்.

தமது மதம் இல்லை; இந்தச்சிறுமி கிறிஸ்தவராக இல்லாமல் இந்துவாக இருந்திருந்தால் சிலர் சாந்தி அடைந்திருக்கலாம்.

கடைசிக்காரணம்; விதண்டா வாதம். எதையாவது நோண்டாவிட்டால் பொழுதுபோவதற்கு என்ன செய்வது? தன் உடம்பை எவ்வளவு நேரத்திற்குத்தான் சொரிந்துகொண்டே இருப்பது? 

 

ஜெசிக்காவிற்கு பேஸ்புக்கில் 85,000 லைக்ஸ் இருக்கின்றது. இந்தச்சிறுமிக்கு பல இரசிகர்கள் உள்ளார்கள். சிலருக்கு ஜெசிக்காவின் Popularity வயித்து எரிச்சலை உருவாக்கிவிட்டது போலும். வயித்து எரிச்சல் வருவது சகஜம்தானே. 

 

https://www.facebook.com/pages/Super-Singer-Jessica/729827830394028

இதை விடத் தெளிவாக யாரும் இந்த naysayers பற்றி விளக்கம் கொடுத்து விட முடியாது! நன்றி!

Link to comment
Share on other sites

ஈழ உணர்வை விற்று வாக்குப் பிச்சை கேட்டாரா ஜெசிக்கா..? - ஒரு விரிவான அலசல் ( மூடர் கூட்டத்துக்காக மட்டும் ).

“ஐயோ இந்தப் பிள்ளை பாட்டுப் பாடினதும் போதும் இவங்களோட படுறபாடும் போதும்” என்று உங்களுக்குத் தலை தலையாக அடிக்கத் தோணும். ஒண்டுமே செய்யேலாது. வேற வழியில்ல..! ஜெசிக்கா ஈழ உணர்வை விற்று வாக்குகளைப் பெற்றுக்கொண்டார் என்ற தவறான கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் இந்தப் பதிவை உக்காந்திருந்து படித்தால் நன்றாக இருக்கும். 

முதலில் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் பயணத்தில் ஜெசிக்கா பாடிய முக்கிய பாடல்களின் லிஸ்டை கவனமாக பாருங்கள்.

01. கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
02. பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
03. புத்தம் புதுகாலை பொன்னிற வேளை
04. எக்ஸ் மச்சி வை மச்சி எஃப் எம் மிர்ச்சி
05. அட என்னாத்த சொல்வேனுங்கோ
06. என்ன என்ன வார்த்தைகளோ
07. தென்கிழக்கு சீமையிலே
08. என் புருஷன் தான் எனக்கு மட்டும்
09. மாயம் செய்தாயோ நெஞ்சை
10. விடை கொடு எங்கள் நாடே
11. கருணை மழையே மேரி மாதா
12. பாடு நிலாவே தேன் கவிதை
13. தில்லானா தில்லானா நீ
14. ரம் பம் பம் ஆரம்பம்
15. என் வானிலே ஒரே வெண்ணிலா
16. புல்வெளி புல்வெளி
17. குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
18. காதோடுதான் நான் பேசுவேன்
19. சகாயனே சகாயனே
20. ஆடவரெலாம் ஆடவரலாம்
21. ஒரு இனியமனது இசையை
22. சீர் கொண்டு வா வெண்மேகமே
23. பனிவிழும் இரவு நனைந்தது
24. அழகுநிலவே கதவு திறந்து 
25. அன்று வந்ததும் அதே நிலா
26. ஜூலை மாதம் வந்தால்
27. மலரென்ற முகம் இங்கு சிரிக்கட்டும்
28. நெஞ்சினிலே நெஞ்சினிலே
29. கடவுள் வாழும் கோயிலிலே
30. என் நெஞ்சு சின்ன இலை
31. வாராயோ வாராயோ காதல் கொள்ள
32. நினைவோ ஒரு பறவை
33. அம்மாடி அம்மாடி நெருங்கி 
34. காதல் ஓவியம் பாடும் காவியம்
35. மன்னிப்பாயா
36. முன்பே என் அன்பே வா
37. பூ பூக்கும் ஓசை அதை
38. காற்றினிலே வரும் கீதம்
39. அந்தி மயங்குதடி
40. வேதம் அணுவிலும் ஒரு நாதம்
41. பார்த்த ஞாபகம் இல்லையோ
42. அத்தான் என்னத்தான்
43. உன்னை ஒன்று கேட்பேன் உண்மை
44. தூது வருமா
45. காலகாலமாக வாழும்
46. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
47. முதல் முறை பார்த்த 
48. பாடவா உன் பாடலை ( வைல்ட் கார்ட் )
49. சில்லென ஒரு மழைத்துளி ( வைல்ட் கார்ட் )
50. ராசாவே உன்ன நம்பி 
51. நெஞ்சம் மறப்பதில்லை ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
52. மார்கழி திங்கள் அல்லவா ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
53. இது ஒரு நிலக்காலம் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
54. நல்லதோர் வீணை செய்தே ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
55. வெள்ளைப் பூக்கள் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )

சூப்பர் சிங்கர் பயணத்தில் பாட ஆரம்பித்த ஜெசிக்கா மெல்ல மெல்ல ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கினார். Top 25, Top 15, Top 10 என்று படிப்படியாக ஜெசிக்கா முன்னேறி வந்தார். அந்த நேரத்தில் யாருமே வாக்களிக்கவில்லை. மேலும் நல்ல நல்ல பாடல்கள் பாடி Top 6 கு முன்னேறினார். அப்போதும் யாருமே வாக்களிக்கவில்லை. ஈழ உணர்வு பிரச்சனையும் இல்லை. ஒரு மயிரும் இல்லை. 

பின்னர் இடையில் ஒரு சின்ன பிரேக். பிறகு Direct finalist ஆக 3 பேர் தெரிவு செய்யப்பட , 4 வதாக ஒருவரை தெரிவு செய்யவேண்டிய சூழல். அதற்காகத்தான் Wild Card Round வைத்தார்கள். இந்த Wild Card ல் மீண்டும் பாட வந்தார் ஜெசிக்கா..! - இப்போதுதான் வாக்களிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது மக்களின் வாக்குகள் யாருக்கு அதிகமாக கிடைக்கிறதோ அவரே 4 வது Finalist ஆக தெரிவு செய்யப்படுவார். 

இப்போதுதான் ஜெசிக்காவுக்கு வாக்குகள் தேவைப்படுகின்றன.

தனக்கான வாக்குகளை ஜெசிக்கா மக்களிடம் வேண்டினார். எப்படி வேண்டினார்? “ஐயா நான் ஈழத்தைச் சேர்ந்தவள். எனது உறவுகள் பல முள்ளிவாய்க்காலில் மாண்டு போயினர். தயவு செய்து எனக்கு ஓட்டு போடுங்கோ” என்றா வேண்டினார்? அல்லது,

“ஐயா நான் ஒரு ஈழத்தமிழ் பெண். எங்கள் நாட்டில் ஊரிப்பட்ட பிரச்சனைகள் இருக்கு. எனக்கு எல்லோரும் ஓட்டு போடுங்கோ” என்றா வேண்டினார்?

இல்லவே இல்லை..! - அந்த தங்கை பின்வருமாறு வாக்கு கேட்டாள்.

Hi Friends, I will be performing in Wild Card Finals and Public voting for the 4th finalist will start next Monday, January 19th. Here are the ways you can vote for me
1. Online – Visit www.supersinger.in website and follow the instructions. 
2. SMS – Type SSJ10 and send to 57827 – This option is not available outside India
3. Airtel customers can call 5432178 - This option is not available outside India
As people outside India can vote online only, please ask your family and friends in India to vote for me as well. Each and every vote counts, I need all your support to make to the final.

தமிழில், 

நான் கனடாவில் இருந்து இந்தியா சென்று இந்த போட்டியில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் கடுமையாக உழைத்து இவ்வளவு தூரம் வந்துள்ளேன். இனி அந்த இறுதிச் சுற்றுக்கு செல்வது உங்களது கையில்தான் உள்ளது. நான் அந்த மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவள் என்று நீங்கள் கருதினால், தயவு செய்து எனக்கு உங்களது வாக்குகளை மறக்காது வழங்கவும். அத்துடன் உங்களது உறவினர், நண்பர்களையும் எனக்கு வாக்களிக்கும்படி கூறவும். நீங்கள் பின்வரும் முறைகளில் வாக்களிக்க முடியும்.

***************

ஜெசிக்காவின் வேண்டுகோள் இப்படித்தான் இருந்தது. அதுவும் “நான் அந்த மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தகுதியானவள் என்று நீங்கள் கருதினால்” என்பதை பலமுறை அழுத்தமாக ஜெசிக்கா சொன்னார். இதற்கான வீடியோ பதிவிலும் இதைத்தான் சொன்னார். இந்த வாக்குகள் கேட்கும் காலப்பகுதியில் ஜெசிக்கா என்ன பாடல்கள் பாடியிருப்பார்? 

’விடை கொடு எங்கள் நாடே’ பாடி சிம்பதி கிரியேட் பண்னினாரா? அல்லது மேடையிலே அழுது ஒப்பாரி வைத்தாரா? அல்லது நான் ஈழத்தவள் என்று பேச்சுவாக்கிலே சொன்னாரா? எதுவுமே இல்லை. ஜெசிக்கா தன் திறமையை மட்டுமே நம்பினார். அவர் Wild Card Round ல் பின்வரும் பாடல்களைப் பாடினார். 

51. நெஞ்சம் மறப்பதில்லை ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
52. மார்கழி திங்கள் அல்லவா ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
53. இது ஒரு நிலக்காலம் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
54. நல்லதோர் வீணை செய்தே ( வைல்ட் கார்ட் ஃபைனல் )
55. வெள்ளைப் பூக்கள் ( வைல்ட் கார்ட் ஃபைனல் )

இந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருந்த காலத்தில் தான் அவருக்கு மலைபோல வாக்குகள் குவியலாயின. வாக்களித்த நாமோ அவர் என்ன பாடுகிறார் என்பது குறித்து அலட்டிக்கொள்ளவே இல்லை. எங்கள் சிறுமி ஒருத்தி பாடுகிறாள், அவளை முன்னேற்றிவிடுவோம் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டுமே வாக்களித்தோம். ஆனால் மறுபக்கத்தில் ஜெசிக்கா தன் திறமைகளையும் நிரூபிக்க தயங்கவில்லை. 

கடைசியில் Wild Card Round ல் மிக அதிக வாக்குகள் பெற்று Finalist ஆக தெரிவானார் ஜெசிக்கா. இப்போது மறுபடியும் வாக்களிக்கும் முறை. இம்முறை ஜெசிக்கா வாக்களிக்க கோரவேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை. அவரது ரசிகர்கள் எல்லோரும் முதலியே சமூக வலைத்தளங்களில் வாக்களிப்பது குறித்து பேசலாயினர். 

இறுதிப் போட்டிக்கு வாக்களிக்கும் முறையில் சில மாற்றங்கள் வந்தன. அதாவது 13.02.2015 அன்று 200 வாக்குகளும் 19.02.2015 அன்று 200 வாக்குகளும் போட்டி நடைபெறும் போது 100 வாக்குகளும் அளிக்கலாம் என்பதே அந்த மாற்றம். இறுதிப் போட்டி நடந்தது 20 ம் திகதி. ஆனால் ரசிகர்களோ 13 மற்றும் 19 ஆகிய திகதிகளில் தங்களுக்கு உண்டான 400 வாக்குகளையும் செலுத்திவிட்டார்கள். 

20 ம் திகதி இறுதிப் போட்டி நடக்கிறது. அன்று காலையிலேயே அந்த 100 வாக்குகளையும் செலுத்தக் கூடியதாக இருந்தது. நான் எல்லாம் பிரான்ஸ் நேரம் 15.00 மணிக்கு முன்னரேயே 100 வாக்குகளையும் போட்டு முடித்துவிட்டேன். பின்னர் இந்திய நேரம் இரவு 20.00 மணிக்கு பின்னர் ஜெசிக்கா மேடையில் பாடுகிறார் “தோல்வி நிலையென நினைத்தால்” என்ற பாடலை. 

இப்ப சொல்லுங்க, ஜெசிக்காவின் அந்தப் பாடலை பார்த்து உணர்ச்சிவசப்பட்டா நாம் வாக்களித்தோம்? உண்மையில் இறுதிப் போட்டியில் தோல்வி நிலையென மற்றும் விடைகொடு ஆகிய பாடல்களை ஒன்றாக கலந்து ஜெசிக்கா பாடுவார் என்று நாம் என்ன கனவா கண்டோம்? அல்லது மூக்குச் சாத்திரம் பார்த்தோமா? 

இதே இறுதிப் போட்டியில் ஜெசிக்கா “லாலாக்கு டோல் டப்பிம்மா” என்ற பாடலைப் பாடியிருந்தாலும் கூட நாம் வாக்களிக்கவே செய்திருப்போம். எங்கள் பிள்ளை என்பதற்காக நாம் வாக்களித்தோம். அவ்வளவுதான். இதில் எங்கு ஜெசிக்கா ஈழத்தை விற்றார்? வாக்குப் பிச்சை கேட்டார்? 

( இதற்கிடையில் வைல்ட்கார்ட் சுற்றில் அனுஷ்யா “பறை பறை” பாட்டைப் பாடி எல்லோரையும் கண்ணீர் சிந்த வைத்தார். மறுநாள் வலைத்தளங்கள் எங்கும் அனுஷாவின் பாடலே வைரலாக பரவியது. அனுஷியாவுக்கான ஆதரவும் பல்கிப்பெருகியது. எங்கள் நண்பர்களில் சிலரும் அனுஷ்யாவுக்கு வாக்களியுங்கள் என்று வேண்டினார்கள். நானும் அனுஷ்யாவுக்கு வாக்குப் போட்டேன். )

ஜெசிக்கா இன்னொரு அழகான வேலை செய்தார். ஃபேஸ்புக்கில் தனது Official Page ஐ ஆரம்பித்து அதை நாள் தோறும் ஒழுங்காக அப்டேட் செய்து வந்தார். 2014.06.09 அன்று அவரின் பேஜ் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் 150 - 200 வரையான லைக்குகள் பெற்றார். பின்னர் போகப் போக 3500 - 4500 வரையான லைக்குகள் ஒவ்வொரு போஸ்டுக்கும் பெற்றார். இதன் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி அதை நீட்டாக மெயிண்டெயின் பண்ணினார். சூப்பர் சிங்கரில் வேறு எந்த போட்டியாளரும் Facebook Page ஐ சரியாக கையாளவில்லை. 

ஜெசிக்கா “தோல்வி நிலையென” என்று பாட ஆரம்பித்த பின்னர்தான் ஓட்டுக்கள் போடப்பட்டிருக்குமாயின் அந்த நேரத்தில் ஒருவரால் வெறும் 100 ஓட்டுக்கள் மட்டுமே போட முடிந்திருக்கும். பாடலைக் கேட்ட பின்னர் இந்தியாவில் இருந்து எத்தனைபேர் SMS மூலம் வாக்குகள் போட்டிருப்பார்கள் என்பது கணிசமான ஒரு எண்ணிகையாக இராது. 

இப்ப சொல்லுங்கள் - ஜெசிக்கா ஈழ உணர்வை காட்டி / விற்று / பயன்படுத்தியா ஓட்டுக்கள் பெற்றார்? ஒரு கருத்தை முன்வைக்கும் முன்னர் யோசிக்க வேண்டாமா? எனக்குத் தெரிந்து ஈழ உணர்வு நாசமா போகுதே என்று கூச்சல் போட்ட பலர் சூப்பர் சிங்கர் பார்ப்பதே இல்லை grin உணர்ச்சிலை grin உணர்ச்சிலை

ஜெசிக்கா ஈழத்தமிழ் பின்புலம் கொண்டவர் என்பதால் உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்கள் அதிகளவில் ஓட்டுக்கள் போட்டார்கள். இதில் என்ன தவறு? இந்தியா World Cup ஜெயிச்சா இந்திய மக்கள் கை தட்டி ஆரவாரம் செய்வதில் என்ன தப்பு? அதுபோலத்தான்..!

ஜெசிக்கா மட்டுமில்லை, வரப்போகும் “சூப்பர் சிங்கர் 5 “ இல் இன்னொரு ஈழத்தமிழ் பாடகனோ பாடகியோ கலந்துகொண்டால், மறுபேச்சு ஏதும் இன்றி உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் வாக்களிக்கவே செய்வார்கள். இது நச்சுரல்..!!

இதற்கிடையில் விஜய் Tv தன் TRP ஐ அதிகரிக்கவே ஈழத்தை பயன்படுத்துகிறது என்ற மொக்கை காமெடியை யாருமே சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இல்லை அதிலும் உங்களுக்கு சந்தேங்கள் என்றால் இன்னொரு பதிவை மாய்ஞ்சு மாய்ஞ்சு டைப் பண்ணோணும்.

இனிமேலாவது ஜெசிக்கா ஈழத்தை விற்றுவிட்டார் என்று புசத்த வேண்டாம் - சகிக்கல..!

 

https://www.facebook.com/video.php?v=857555707621239&set=vb.729827830394028&type=2&theater

 

 

 

https://www.facebook.com/photo.php?fbid=611348712343634&set=a.105389572939553.10908.100004055318903&type=1&pnref=story

Link to comment
Share on other sites

முதலில் அங்கே பல தமிழக உறவுகள் காவல்த்துறை அடக்குமுறைகளையும் மீறி airtel நிறுவனத்துக்கு எதிராக புறக்கணிப்பு போராட்டம் செய்தார்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் புலம்பெயர் ஈழ தமிழர்கள் அந்த நிறுவனம் அனுசரணை வழங்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு விளப்பர தூதர் ஆகின்றார்கள்.....

தயவு செய்து இனி தமிழக உறவுகள் யாரும் ஈழத்தமிலர்களுக்காக போராட்டங்களில் இறங்க வேண்டாம்.... சுயநலம் கொண்ட ஒரு இனத்துக்காக நீங்கள் வீதிகளில் இறங்கி உங்கள் வாழ்க்கையை கெடுத்து கொள்ளாதீர்கள்.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.