Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

  • Replies 204
  • Created
  • Last Reply

ஜெசிக்கா தமிழ் டிவியில் தமிழ் பாட்டு பாடி இரண்டாம் இடம் வந்ததால இது வரை உலகின் கண்களுக்கு தெரியாமல் இருந்த ஈழ தமிழினத்தை உலகமே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் வட கொரியா அதிபரில் இருந்து உலக தலைவர்கள் அனைவரும் இப்பிடி ஒரு திறமை மிக்க இனம் உலகில் இருக்கா என்று ஆச்சரியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெசிக்கா தமிழ் டிவியில் தமிழ் பாட்டு பாடி இரண்டாம் இடம் வந்ததால இது வரை உலகின் கண்களுக்கு தெரியாமல் இருந்த ஈழ தமிழினத்தை உலகமே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் வட கொரியா அதிபரில் இருந்து உலக தலைவர்கள் அனைவரும் இப்பிடி ஒரு திறமை மிக்க இனம் உலகில் இருக்கா என்று ஆச்சரியம்

ஆமா நீங்கள் என்ன செய்தீர்கள் ஈழதமிழினத்தை உலகம் திரும்பி பார்க்க. இவ பாடியதால ஈழதமிழினத்திற்கு ஏதாவது தீமை ஏற்பட்டதா?

Link to comment
Share on other sites

ஹா ஹா ஜெசிக்கா ஒரு கிலோ தங்கம் வென்றதால் ஈழத்தமிழர்களுக்கு சுயமரியாதையும் உரிமையும் கிடைச்சிரிச்சாம் .....

பாவம் போராளிகளுக்கு இது தெரியாமல் போய்டிச்சி......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் சிறுமி ஜெசிக்காவுக்கு,

 

நீ தங்கம் வென்றதையும் அதை எமது தேசத்தின் ஏதிலிகளுக்குத் தானமாகக் கொடுத்ததையும் அறிந்தேன், நன்றிகளும் வாழ்த்துக்களும். இதற்குமுன்பு நான் இத்திரியில் எழுதிய விமர்சனத்தில் உன்னில் பிழைபிடிக்கவேண்டுமென்பதற்காகவே அன்றேல் மட்டம்தட்ட வேண்டுமென்பதற்காகவே இல்லை. உனது இசைத்துறை வாழ்கை சுப்பச் சிங்கர் என்பதுடன் நின்றுவிடாது இமையம் தொடவேண்டுமென்பதற்காகவும் நல்ல ஒரு குருவைத்தேடிப்பிடிப்பதற்காகவுமாகும்.

 

புலம்பெயர்ந்து தேசங்கள் எங்கும் பயணப்படினும் புலத்தை மறக்காதிருக்கும் நல்ல குணம் உன் பெற்றோருக்கும் உறவுகளுக்கும் எப்போதுமே இருப்பதாக.

 

இவ்விடுகையில் ஏற்கனவே நான் தெரிவித்திருந்த கருத்துக்களில் உனது மனம் புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறென். இதில் நான் எள்ளளவும் வெட்கப்பட்டுக்கொள்ளவில்லை. தவிர உனது வெற்றிக்காக நான் இதுவரை ஒரு வாக்குக்க்கூட உனக்காகப் போடவில்லை தவிர ஏனையோருக்கும் போடவில்லை எனப் பகிரங்கப்படுத்துகிறேன்

 

இவண்

எழுஞாயிறு.

Link to comment
Share on other sites

ஏதோ இவர்கள் எல்லாம் விருப்பமே இல்லாமல் தான் வெளிநாடுகளில் போய் இருப்பதாகவும் ....போட்டி நிகழ்சிகளில் வந்து விடைகொடு எங்கள் நாடே என்று பாடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்களாம் அதைக்கேட்டு ஈழத்தமிழர்கள் கண்ணீர் வடிக்கின்றார்கலாம்.....இசைப்பிரியா போன்றவர்களுக்காக வீதியில் இறங்க சொன்னால் கதவைப்பூட்டிபோட்டு வீட்டுக்குள் இருக்கும் தமிழர்கள்தான் ஜெசிகாவை படம் போட்டு கொண்டாடுகின்றார்கள்......

Link to comment
Share on other sites

ஐக்கிய நாடுகள் சபை விசாரணை தள்ளிபோனத்தை அடுத்து செய்வதறியாது குழம்பி நிக்கும் தமிழ் சமுகத்தின் ஒரு பகுதி......இந்த விசாரணை வேண்டி பனிக்குள்ளும் மழைக்குள்ளும் எத்தனனை எத்தனை போராட்டங்கள் எவ்வளவு தமிழர்களின் தியாகங்கள்.....ஆனால் சிங்களத்தின் ராஜதந்திரத்தால் அவைகள் எல்லாம் பொய்யாகி போன நிலையில் யாழ்ப்பாணத்தில் இருக்கும் பல்கலை கழக மாணவர்கள் கூட உயிரை பொருட்படுத்தாது போராட்டங்களில் இறங்க தயாராகி வரும் நிலையில் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ஜெசிகாவுக்கு பின்னால் கொடிபிடித்துக்கொண்டு.......

இதற்குள் தமிழக தமிழர்கள் எங்களுக்கு உதவி செய்யிறதில்லை என்ற குற்றச்சாட்டு வேறு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் இதைதான் வயித்தெரிச்சல் என்பது. இவவால் ஏதாவது தீமை ஏற்பட்டால் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களில் எத்தனை விதமான குணம் கொண்டவர்கள் உள்ளனர் என்பதை இந்த திரியைப்பார்த்தால் புரிந்து கொள்ளலாம்..

 

தமிழேண்டா... :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

புலம் பெயர் தமிழ்

பெற்றோர் தங்க பிள்ளைகளிட்ட சொல்லி விடுறது போட்டிகள்ள விடைகொடு எங்கள் நாடே பாடு .... அனுதாபத்திளையாவது கூட ஒட்டு கிடைக்கும் என்று.... அதென்ன பங்குபற்றும் அத்தனை புலம்பெயர் போட்டியாளர்களும் அந்த பாட்டையே பாடுறாங்க..... தயவு செய்து திறமைகளை மட்டும் வைத்து போட்டிகளில் பங்குபெறுங்கள்..... வெறும் அனுதாபங்களை நம்பி களம் காணாதீர்கள்.....

Link to comment
Share on other sites

அனாதை குழந்தைகளுக்கும் அனாதை ஆச்சிரமங்களுக்கும் உதவி செய்ய பல நிறுவனங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கு என்று போராட போன பல இளைஞர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியோடு எதிர்நோக்கி இருக்கின்றார்கள் உண்மையில் தாயக பற்றுல்கவர்கள் என்றால் தங்களுக்கு கிடைத்த பரிசை போராளிகளின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தி இருக்கலாமே.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனாதை குழந்தைகளுக்கும் அனாதை ஆச்சிரமங்களுக்கும் உதவி செய்ய பல நிறுவனங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கு என்று போராட போன பல இளைஞர்கள் எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியோடு எதிர்நோக்கி இருக்கின்றார்கள் உண்மையில் தாயக பற்றுல்கவர்கள் என்றால் தங்களுக்கு கிடைத்த பரிசை போராளிகளின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தி இருக்கலாமே.....

 

 

சுண்டல் உங்களுக்கு என்னாச்சு.......??? :(  :(  :(

Link to comment
Share on other sites

சற்று முன் இன்று ஈழத்தமிழர்களை யாரென்று உலகுக்கு சுப்பர்சிங்கர் ஜூனியர் மூலம் ஜசிக்கா என்ற கனடியத்தமிழ் பெண் உணர்த்தியதாக முகநூலில் இரண்டு நிலைத்தகவல்களை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை..

நிலைத்தகவல் 1) - "எமது வலியை உலகுக்கு உணர்த்தியவள், ஜெசிக்காதான் எங்கள் வெற்றித்திருமகள்"

நிலைத்தகவல் 2)- இதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் பலம் என்னவென்று உலகத்துக்கு புரிஞ்சு இருக்குமாம்..

ஒருவேளை உலகம் உலகம் என்று விஜய் ரீவிய சொல்லுறாங்களோ..?

ஒருத்தன் ரெண்டுபேர் இல்ல முகப்புத்தகத்தில் அநேகமான நம்மாழுங்க இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்... இதுவெறும் உணர்ச்சிப்பெருக்கில் எழுதியதென்று சொல்லமுடியாது இப்படித்தான் நம்மாழுங்க அநேகம்பேர் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்..இப்படியான செயல்கள்தான் இனி நமது போராட்டவடிவம் என்றாகிவிட்டது.. புலம்பெயர் ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் நம்ம அமைப்புகளில் சிலவும் இதை கற்றுகொடுத்திருக்கிறார்கள் அல்லது இப்படியான செயல்கள்தான் உலகம் நம்மை திரும்பிபார்க்கும் என்று நம்மவர்களை நம்பும்படி ஆக்கி இருக்கிறார்கள்..

என்னத்தை சொல்ல..

Thanks to subesh

Fb

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் உங்களுக்கு என்னாச்சு.......??? :(  :(  :(

 

 

அதே ஆதங்கம் தான் எனக்கும்,
 
ஒரு சிறுமியுடன் அரசியலைக் குழப்ப வேண்டிய தேவை என்ன?
 
ஒரு வேளை, ஒரே ஊர், குடும்பப் பகையோ என யோசிக்க வைக்கிறார், நம்மை சிலவேளை தனது யோக்குகளால் சிரிக்க வைக்கும் சுண்டல்.  :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சற்று முன் இன்று ஈழத்தமிழர்களை யாரென்று உலகுக்கு சுப்பர்சிங்கர் ஜூனியர் மூலம் ஜசிக்கா என்ற கனடியத்தமிழ் பெண் உணர்த்தியதாக முகநூலில் இரண்டு நிலைத்தகவல்களை பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை..

நிலைத்தகவல் 1) - "எமது வலியை உலகுக்கு உணர்த்தியவள், ஜெசிக்காதான் எங்கள் வெற்றித்திருமகள்"

நிலைத்தகவல் 2)- இதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் பலம் என்னவென்று உலகத்துக்கு புரிஞ்சு இருக்குமாம்..

ஒருவேளை உலகம் உலகம் என்று விஜய் ரீவிய சொல்லுறாங்களோ..?

ஒருத்தன் ரெண்டுபேர் இல்ல முகப்புத்தகத்தில் அநேகமான நம்மாழுங்க இப்படித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்... இதுவெறும் உணர்ச்சிப்பெருக்கில் எழுதியதென்று சொல்லமுடியாது இப்படித்தான் நம்மாழுங்க அநேகம்பேர் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்..இப்படியான செயல்கள்தான் இனி நமது போராட்டவடிவம் என்றாகிவிட்டது.. புலம்பெயர் ஊடகங்களும் இந்திய அரசியல்வாதிகளும் நம்ம அமைப்புகளில் சிலவும் இதை கற்றுகொடுத்திருக்கிறார்கள் அல்லது இப்படியான செயல்கள்தான் உலகம் நம்மை திரும்பிபார்க்கும் என்று நம்மவர்களை நம்பும்படி ஆக்கி இருக்கிறார்கள்..

என்னத்தை சொல்ல..

Thanks to subesh

Fb

 

 

பேஸ்புக்கில் ஆட்கள் எழுதும் கருத்துக்களை பார்த்து பதின்நான்கு வயதுச்சிறுமி மீது காழ்ப்புணர்வுடன் கீழ்த்தரமாய் விமர்சிப்பது நிச்சயமாய் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைத்தரும். 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் . நல்ல விசயங்கள் சில செய்திருப்பதில் மகிழ்ச்சியே ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இசை மேல் உள்ள தீராத காதலால் நான் கேட்கும், பார்க்கும் நிகழ்சிகளில் இதுவும் ஒன்று.
வியாபார நோக்கு, பாரபட்சம் இந்த நகழ்ச்சிக்கு கூட விதி விளக்கு அல்ல. 
ஜெசிக்காவுக்குதான் அதிகபட்சமான வாக்குகள் விழுந்ததாகவும் பின்னர் அதில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூட ஒரு செய்தி அடி படுகின்றது. 
 
என் அனுமானிப்பின் படி அவர் முதல் 3 பேருக்குள் வந்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. 
ஜெசிக்கா தனக்கு தரப்பட்ட பாடலை அல்லது தேர்ந்தெடுத்த பாடலை வெறுமனே பாடி விட்டு போகும் தன்மை கொண்டவரல்ல. அதனை நன்கு புறிந்து, பாடலுக்குரிய (B)பாவங்கள் (எசன்ஸ்) அனைத்தையும் கிரகித்து வெளிப்படுத்தும் ஒரு பாடகி. தவிர இசையில் உண்மையான பற்றுதல் கொண்டவர் என நினைக்கிறன்.
ஒவ்வொரு கட்டத்திலும் அவர் தன் பாடல் பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட விதம் ஆச்சரியப் படக்கூடியது. இது நன்கு அவதானித்தால் புறியும்.
 
எது எப்படியோ இந்த வெற்றி மிகவும் சந்தோசம் தருகிறது. இவர் தொடர்ந்தும் படிப்பிலும், இசையிலும் கவனம் செலுத்தி மேன் மேலும் முன்னெர  வாழ்த்துக்கள்.
 
இவருக்கு கிடைத்த பரிசுதொகை குறைந்த பட்சம் $53,000 கனேடியன் டாலர்ஸ்.
இவ்வளவு பரிசுத் தொகையையும் சமனாக பங்கிட்டு  தமிழகத்திலும், ஈழத்திலும் இருக்கும் பாதிப்படைந்த, மற்றும் நலன் குறைந்த குழந்தைகளுக்கு நன்கொடை செய்துள்ளார்.
இந்த மனது எல்லாருக்கும் வருமா? ஏன் எனேக்கே வருமா தெரியவில்லை? 
 
இங்கு கனாடாவில் இவர்கள் ஒன்றும் கோடீஸ்வரர்கள் அல்ல, சாதாரண தமிழ் குடும்பம். நாங்கள் படும் அணைத்து கஷ்டங்களும், நஷ்டங்களும் இவர்களுக்கு உண்டு. எனவே இது மிக மிக போற்றத்தக்க செயல்.
நாம் அனைவரும் பெருமை கொள்ளகூடிய தருணம். இவரால் நன்மை அடையப்போகும் குழந்தைகளின் ஆசீர்வாதம் இவருக்கும் இவரின் குடும்பத்தாருக்கு என்றும் கிடைக்கும்.
 
சகட்டு மேனிக்கு இந்த திரியிலும் (ஜெசிக்கா சூப்பர் சிங்கர் தெரிவிலும்) அரசியல் எழுதியவர் இங்கே உண்டு.
உங்களால் யாருக்கு என்ன லாபம்? ஜெசிக்கவால் அவள் குடும்பத்தால் 40 பிள்ளைகள் கொஞ்ச காலத்துக்கு சந்தோசமாக இருப்பார்கள். அதுவே போதும்... மற்றும் படி நீங்கள் அண்ணாந்து பார்த்து அதிக அதிகமாக காரி துப்புங்கள் ...தாங்குவது என்னவோ உங்கள் முகங்கள்  தானே.
 
ஸ்ரீஷா முதல் மூன்றுக்குள் வராதது ஆச்சர்யமே...
 
Jessica we are so proud of you and your family !!! 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"சுண்டல்" பெயருக்கேற்ற  எழுத்து.. நீங்க நல்லா வர்வீங்க பாஸ்....
என்ன இப்போதைக்கு
உங்க சுண்டல்ல .. உப்பு  இல்ல
அதனால அது குப்பையில ... 
இது நான் சொல்ல இல்ல உங்க முன்னோர் சொன்னது அவ்ளோதான்...
Link to comment
Share on other sites

நல்லதொரு பதிவு சசி ,

 

விஜேய் டி வி நடாத்தும் உலகளாவிய இந்த பிரமாண்ட நிகழ்வில் பாரபட்சங்கள்  குளறுபடிகள் இருந்தாலும் அதையும் தாண்டி சாதிக்கவேண்டும் என்றுதான் பலர் பங்குபற்றுகின்றார்கள் .

நாங்கள் ஒதுக்கி விஜேய் டி வி ஒன்றும் ஆட்டம் காணப்போவதில்லை .

 

எம்மவர் அமைப்புகள் நடத்தும் சிறு சிறு நிகழ்வுகளில் கூட பாரபட்சமும் அரசியலும் இருக்கத்தான் செய்கின்றது அதையும் தாண்டித்தான் ஒரு பொதுநோக்கிற்காக என்ற ரீதியில் வேலை செய்யவேண்டிய தேவையும் இருக்கு .

Link to comment
Share on other sites

ஈழக்கலைஞன் என்ற வகையில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் . எம் உரிமையோடும்எம் சுய மரியாதையோடும் வாழ்வதற்காக நாம் ஏங்கி இந்த பூமிப்பந்திலே நாதியற்றவர்களாக எம் கலை கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை பேணி பாதுகாக்க அன்றாடம் போராடுகின்றோம் ..இந்த சிறுமியின் அபார திறமை .எம் ஈழக்கலை கலை வாழ்வுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கிறது .வாழ்த்துக்கள் .
 
 
என்ன* இங்க நடக்குது .இந்த சிறுமியின் திறமை மட்டுமே பார்க்கப்படவேண்டும் .ஆளாளுக்கு ஒவ்வொரு தலைப்பில எழுதி தொலைக்கிறாங்க .............. இப்படி .......... .....முடியல :icon_mrgreen: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜெசிக்கா ஓரளவு திறமை வைத்துக் கொண்டு போட்டியில் வெற்றி பெற்றதற்கு...ஜெசிக்கா உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும்.நீங்கள் வெல்வதற்காக எவ்வளவு பணத்தை செலவழித்தார்களோ?

ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவுக்கு எனது அனுதாபங்கள் உங்களிடம் திறமை இருந்தும்,பண பலம் இல்லாததால் தோத்துப் போனீர்கள்...ஏதோ ஒரு விதத்தில் உங்கள் இசைப் பயணம் தொடரட்டும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களே உங்கள் மனட்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் ஸ்ரீஷா,ஹரிப்பிரியாவை விட ஜெசிக்கா நன்றாக பாடினாரா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.