-
Tell a friend
-
Topics
-
8
By உடையார்
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
இன்னும் "அம்மாவின் ஆட்சியை அமைப்பேன்"னு மட்டும் தான் சொல்லல... ஆம்! சாவர்க்கர் இன்னும் சாகவில்லை -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் வழமைப் போன்று கம்பீரமாக நடைபெறும் என அறிவிப்பு கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார். இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (திங்கட்கிழமை) ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அங்கு மேலும் கருத்து வௌளியிட்ட பாதுகாப்பு அமைச்சர், “உலகம் முழுதும் கொரோனா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4ஆம் திகதி கொண்டாடப்படுவதைப் போன்று வழமைப் போன்று கம்பீரம் குறையாதவாறு அதேவேளை கடுமையான சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை சுதந்திர தின மரியாதை அணி வகுப்பில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புபடை மற்றும் தேசிய மாணவர் படையணி என்பவற்றின் சார்பில் 7 ஆயிரத்து 630 படைவீரர்கள் பங்குபற்றவுள்ளனர். கடந்த வருடத்தைப் போன்று சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறும். ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு விசேட பிரதிநிதிகள் நிகழ்வின் பிரதம பங்குபற்றாளர்களாக இருப்பார்கள். சுதந்திர தின அணிவகுப்புக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும். சுதந்திர தினத்திற்கு முன்னர் நடைபெறும் மத வழிபாடுகள் பெப்ரவரி 2ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். பெப்ரவரி 3ஆம் திகதி மருதானை விகாரையில் தான நிகழ்வு இடம்பெறும். ஏனைய சர்வமத வழிபாடுகள் சுதந்திர தினத்தன்று நடைபெறும். அதற்கமைய பௌத்த மத வழிபாடுகள் காலை 6.30க்கு நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விகாரையிலும் இந்து மத வழிபாடுகள் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலும் 6.35க்கு இஸ்லாம் மத வழிபாடுகள் கொழும்பு-4 நிமல்பாதை மஜ்மாயில் கமிராத் ஜூம்மா பள்ளிவாசலிலும் 7.15 க்கு கிருஸ்தவ வழிபாடுகள் பொரளை தேவாலயத்திலும் நடைபெறும். அதனையடுத்து முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறும். இதில் 3 ஆயிரத்து 171 இராணுவத்தினரும் 808 கடற்படையினரும் 997 விமானப்படையினரும் 664 பொலிஸாரும் 432 விசேட அதிரடிப்படையினரும் 558 சிவில் பாதுகாப்புபடையினரும் 336 தேசிய மாணவர் படையணரும் பங்குபற்றுவார்கள். இதனைத் தொடர்ந்து கலாசார அணிவகுப்பு இடம்பெறும். இதில் முப்படை, சிவில் பாதுகாப்புபடை, பொலிஸ், தேசிய இளைஞர் பாதுகாப்புபடை மற்றும் மாகாணசபை கலாசார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட 341 பேர் பங்குபற்றுவார்கள். இம்மாதம் 29, 30, 31ஆம் திகதிகளிலும் பெப்ரவரி 1, 2, 3 ஆம் திகதிகளிலும் சுதந்திர சதுக்கத்தில் ஒத்திகைகள் இடம்பெறும். அத்தோடு சுதந்திர தினத்தன்று இடம்பெறும் முக்கிய நிகழ்வாக டீ.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வைபவம் காலை 7.15 மணிக்கு முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் பங்குபற்றலுடன் நடைபெறும். பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சகல அரச திணைக்களங்களிலும் நிறுவனங்களிலும் தேசிய கொடி பறக்கவிடப்படுவதோடு, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மின்விளக்கு அலங்காரங்களையும் செய்ய முடியும். இவ்வாறு எந்தவிதமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் குறைந்தளவானோரின் பங்குபற்றலுடன் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமையவே முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார். http://athavannews.com/கொரோனா-பரவலுக்கு-மத்திய-6/ -
By தமிழ் சிறி · Posted
குருந்தூர் மலையிலுள்ள ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு புத்தர் சிலை வைக்கப்பட்டது!- மக்கள் விசனம் முல்லைத்தீவு- குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபட்டுவந்த கிராமிய ஆதி ஐயனார் ஆலய சூலம் உடைத்தெறியபட்டு, தற்போது புத்தர் சிலை வைக்கப்பட்டு பௌத்த வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தமிழர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக வலைத்தளங்களிலும் இந்த சம்பவம் வைரலாகியுள்ளது. இந்நிலையில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் குருந்தாசேவ பௌத்த விகாரையின் சிதைவுகள் இருப்பதாகவும் 1932 இல் பிரசுரிக்கபட்ட வர்த்தமானியில் இந்த ஆலயம் இருந்ததாக தெரிவித்து இராணுவத்தின் ஆதரவோடு தொல்லியல் திணைக்களம் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அகழ்வு ஆராய்ச்சிப்பணிகளை இலங்கை இராணுவத்தினர் புடைசூழ தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க மற்றும் தொல்லியல் அமைச்சின் செயலாளர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெகத் ரத்நாயக்க ஆகியோர் பௌத்த ஆகம முறைப்படி பிரித் ஓதி ஆரம்பித்து வைத்தனர். இதன்போது புத்தர்சிலை ஒன்று குருந்தூர்மலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அகழ்வாராய்ச்சி நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஜெயவர்த்தனபுர தொல்லியல் பீடம், இராணுவம், தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வுகளை செய்யவுள்ளதாக கூறப்படுகின்றது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக அங்குள்ள தமிழ் மக்கள் கூறியுள்ளதாவது, “இன்னும் சில மாதங்களிலோ வாரங்களிலோ இங்கிருந்து பௌத்த கல்வெட்டுகளும் சிதைவுகளும் மீட்கபட்டன என சொல்லப்படலாம். இங்கே பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்றும் சொல்லப்பட்டு ஒரு பௌத்த விகாரையும் அமைக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆகவே இவ்விடயத்தில் தமிழ் பிரதிநிதிகள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். http://athavannews.com/குருந்தூர்-மலையிலுள்ள-ஆத/ -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்தக் கட்சியிலும் இணையலாம் – அறிவிப்பு ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம். சுதாகர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் “ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயற்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் அறிவித்துள்ளார். இந்நிலையில் அரசியலில் ஆர்வம் கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து வேறு கட்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. http://athavannews.com/ரஜினி-மக்கள்-மன்றத்தினர்/
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.