Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

கீபோட் போராளி (முகடு)


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பரணி கபேயை குடித்து முடிக்கும்போது நேரம் எட்டரை காட்டியது வேகமா இன்று வேலை முடிகவேனும் என்னும் மனக்கணக்கில் தொடங்கினான் தண்ணியில் சலாட்டை தூக்கி போட்டு விட்டு ,தக்காளி பழத்தை எடுத்து எட்டா வெட்ட தொடங்க ,சவா(நலமா) என்று கேட்டபடி செப் உள்ளே வந்தான் . உய்(ஓம் ) என்று சொல்லின்கொண்டு சலாட்டை வெட்ட தொடங்கினான் பரணி இன்று பின்னேரம் வேளைக்கு போகவேணும் ,அதனால் இப்பவே கூட எல்லாம் செய்து வைத்தால் வேளைக்கு இறங்கலாம் என்னும் எண்ணோட்டத்தில் வேகமா வேலை செய்ய தொடங்கினான் ..

 

நாலு ,மணிபோல குகன் வருவான் ஆளை ஏரியாவில் சந்தித்து விட்டு போனா இரவு வளைச்சு அடிக்கலாம் ஆளுக்கு இண்டைக்கு எப்படியும் ஆளை தப்ப விடக்கூடாது அவருக்கு சொறிக்கதை ,வேலை முடியும் நேரம் குகன் தொலைபேசியில் மச்சி நான் வந்திட்டன் ஏரியாக்கு நீ எப்ப வருவா ,இந்த உடுப்பு மாத்திரன் இப்ப வருவான் நில்லு போயிடாத ;என்று சொல்லிக்கொண்டு சப்பாத்தை கட்டிக்கொண்டு ஜக்கெட்டை எடுத்து கொளுவினான் ...

வணக்கம் மச்சி எப்படி சுகம் வேளைக்கு வந்திட்ட போல ,ஓம் மச்சான் பருவாயில்லை இந்த அண்ணையும் வாறன் என்று சொன்னார் அதுதான் கொஞ்சம் நேரத்தோட வந்திட்டன் ,ஓ யாரு இவர் புதுசா கிடக்கு ஒருநாளும் காணவில்லை ஆளை ,ம்ம் நீ கண்டிருக்க மாட்ட இப்பத்தான் ஊரில இருத்து வந்தவர் முதல் இயக்கத்தில இருத்து கடைசி சண்டையில காயப்பட்டு ,பிறகு பிடிபட்டு உள்ளுக்கு இருந்து வெளியால வந்து இப்ப ஒரு கிழமை முதல் தான் இங்க வந்து சேர்த்தவர் ,ஓகே ஆள் எங்க ஆளத்தான் அப்ப ...

 

சும்மா இருடா அவர் இயக்கத்தில பெரிய பொறுப்பில் இருத்த ஆள் பழைய சண்டைக்காரன் , எங்கட கதைகளை ஆளோட கதைக்காத பிறகு கதை பொத்தி அடிக்கும் ,சரி சரி எங்களுக்கு தேவையான விஷயம் இருத்தல் எடு அங்க போட்டு ,முழங்க நல்ல வரவேற்ப்பு இருக்கும் தெரியும் தானே உனக்கு ,ம்ம் அது பிறகு பார்ப்பம் இப்ப என்னமாதிரி ஆளை இரவு கூப்பிட்டு அடிப்பமே ...

 

அதுக்குத்தான் வந்தது ஒரு ஒன்பது மணிக்கு தொடங்கு நான் கரிகாலன் தம்பியால வாறன் ;நீ ஈழ வேங்கையாள வா சரியா இண்டைக்கு ஒரு கை பார்ப்பம் ,அவன் ,மற்ற பார்ட்டி தான் நான் இளைவன் அண்ணையிட்ட கேட்டனான் ,அவர் சொன்னார் அவன் ஒட்டுக்குழு ஆள் என்றுதான் உன்னை கேட்டதா சொன்னார் மச்சி ..

முன்னாள் போராளி இவங்கள் என்ன கதைக்கிறாங்கள் என்று தெரியாமல் நெக்டோ சோடாவை குடித்தபடி என்னடாப்பா இங்கயும் சண்டையா ,எதாவது இயக்க நிர்வாக பிரச்சினையா ஏன் இதுக்கு எல்லாம் நீங்கள் போறீங்கள் அப்பு கவனம் ,சும்மா வெளிநாட்டில் வந்து எங்கட சனத்துக்கு ஏதாவது செய்ய முயற்ச்சி பண்ணுங்க ;எனக்கு சகோதரம் வெளிநாடு நான் வந்திட்டன் அப்படி இல்லாமல் எத்தினை போராளிகள் அங்க இன்னும் கஷ்டப்படினம் ,இல்லை அண்ணே இது வேற பிரச்சினை அப்படி ஒன்றும் இல்லை ...

 

சரி மச்சி வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு நான் சாப்பிட்டு வர சரியா இருக்கும் என்று சொல்லிக்கொண்டு பரணி ரயில் தரிப்பிடம் நோக்கி நடந்தான் ,மனம் எல்லாம் அவனை இன்றையோட ஒடப்பண்ணனும் துரோகி ஆக்கினா சரி ,பிறகு அவருக்கு ஒரு ஆதரவும் இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு போக ,தம்பி குகன் ஒரு படம் எடுத்துக்கொண்டு போவம் ,நாளைக்கு வீசா அலுவல் பார்க்க வேணும் ,சரி அண்ணே பக்கத்தில தான் போயிட்டு போவம் என்று இருவரும் நடக்க தொடங்கினர் ..

 

அண்ணே நீங்க இயக்கத்தில எத்தினை சண்டை போனநிங்கள் ,எங்க எங்க போனநிங்கள் என்று பேச்சை கொடுத்துக்கொண்டு நடந்தான் குகன் , அதை விடு தம்பி சும்மா எல்லாத்துக்கும் போய் இருக்கிறன் ,இங்க எப்படி வீசா போட்டா கிடைக்குமே எனக்கு காயங்களை பார்த்து புலி என்று சொல்லி நிராகரிக்க மாட்டினமே தம்பி ,இல்லை அண்ணே இங்க இரவு கோழி களவுக்கு போய் முதுகில கம்பி கிழிச்சவன் எல்லாம் தான் புலி என்று சொல்லித்தான் வீசா எடுத்து வைத்து இருக்கிறாங்க ..

பரணி வேகமா சாப்பிட்டு மடிக்கணணியை தூக்கி மடியில வைத்தபடி குகனுக்கு போனை போட்டான் மச்சி எங்க வந்திட்டியா வீட்டுக்கு என்று ,ஓ இப்பத்தான் மேல ஏறிக்கொண்டு இருக்கிறன் படியால என்று மூச்சு வாங்கியபடி கதைத்தான் குகன் ,அண்ணே பார்த்து வாங்கோ காலும் ஏலாது பிடிச்சு நடவுங்க என்று பின்னாடி வரும் பழைய போராளி அண்ணைக்கு சொல்லிக்கொண்டு வீட்டு திறப்பை எடுத்து கதவில் செருகினான் குகன் ..

 

ஒரு டீ குடிப்பம் போடவா அண்ணே என்று கேட்டுக்கொண்டு இருக்க இல்லை அப்பு அதிக சீனி சேர்க்க கூடாது காயத்துக்கு பிரச்சினை இன்னும் இங்க மெடிகல் காட்டும் இல்லை ,நீங்க குடியுங்க எனக்கு வேணாம் என்று சொல்லிக்கொண்டு சோபாவில் சாய்த்தார் ,முன்னாள் போராளி தம்பி நீர் எங்கையோ ஒன்பது மணிக்கு போறான் எண்டு சொன்னீர் போகவில்லை போல ,இல்லை வீட்டில் இருந்துதான் அது கதைப்பது அண்ணே போறது எல்லாம் இல்லை ,ஆ எதோ சண்டை என்று எல்லாம் சொன்னியள் அதுதான் நான் பயந்து போனன என்று சிரித்தார் அவர் ...

 

பரணி மீண்டும் போன் பண்ணி எங்கட ஆள் நிக்கு வா வா குடுப்பம் ,நான் கரிகாலன் தம்பியை இறகிட்டன் ;ஏன்டா கோமான்சுக்கு லைக்கு பாயுது அவரை துரோகி என்று சொல்லி குடுத்துக்கொண்டு இருக்கிறன் நீ ,வா ஈழ வேங்கை ஐடியால அவர் ஒட்டுக்குழு ஆள் என்று எல்லோரும் நம்பிட்டினம் என்று மூச்சு விடாமல் வேகமா கதைதான் பரணி ..

 

இவ்வளவு நேரமும் வரும்போது அவரின் கதைகேட்டுக்கொண்டு வந்த குகனின் மனதில் எவ்வளவு தியாகம் எப்படியான உயிர் கொடுப்புகள் ,அவர் உடலில் உள்ள காயம்; இதை எல்லாம் நாம் பேஸ்புக்கில் ஒரு போலி பெயரில் நானே செய்வது போல நானே அங்கு சண்டையில் நின்றது போல எழுதி நாலு லைக்கும் ,என்னையும் போராளியா புலியா பார்க்கணும் என்னும் எண்ணத்தில் எழுதி என் பெயர் புகழுக்கு அலைத்து இருக்கிறேன் என்று மனதில் உள்ளே எண்ணி வெட்க்கபட்டான் குகன் ...

 

புலிக்கொடியை பிடித்து ,மடித்து போர்த்து எல்லாம் படம் எடுத்து போட்டால் என்னையும் புலியா நினைப்பினம் என்னும் எண்ணமே இருந்தது, ஆனால் ஒரு நாள் புலியா வாழ்த்து இருந்தால் இந்த வெந்து சினிமாத்தனமான செயலுக்கு வெக்கப்பட்டு இருப்பேன் ,இவ்வளவு கள அனுபவும் உள்ள இந்த அண்ணன் சாதரணமா சொல்லுறார் ,அவரளிடம் ஒப்பிடுகையில் நாம் எம் மண்ணுக்கு இன்னும் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை என்பதுதான் உண்மை ..

 

மீண்டும் போன் அடித்தது டீ ஊற்றியபடி நிண்ட குகன் சொன்னான் எடுங்க அண்ணே எடுத்து இஸ்பிக்கரில் விடுங்க என்று ,அவரும் இணைப்பை எடுத்து இஸ்பிக்கரை அமத்தி விட ,மச்சான் ஓடுவா மகிந்தன் அண்ணையும் வந்து நிக்கிறார் இரண்டு பெரும் சேர்த்து கொடுக்கிறம் ஆளுக்கு பதில் சொல்ல எல்லாமல் பார்ட்டி திணறுது ,நீயும் சயிட் சப்போர்ட் தந்தால் ஆள் எங்க போக்ஸ்க்குள் மாட்டிட்டும் இண்டைக்கு செத்தான் என்று சந்தோஷம் மிகுந்த களிப்பில் சொன்னான் பரணி ..

 

அதை சோபாவில் சாய்ந்து இருந்தபடி புன்சிரிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்த முன்னாள் போராளியின் மனதில் தீச்சுவாலை சண்டை ஒருநொடி வந்து போனது ,குகன் எதை பேசுவது என்று தெரியாமல் மவுனமா நின்றுகொண்டு இருந்தான் ,மீண்டும் பரணி மச்சி சே செமையா ஆளுக்கு போட்டுகொண்டு இருக்க ப்ரீ வீப்பி கட்டா போயிட்டு சே என்று வெறுப்பா கத்தினான் ,அட பாவிகளா ஈழத்தை இலவச இணைப்பில் எப்படி எல்லாம் பிடிக்கறாங்க என்று மனதில் சிரித்தான் முன்னாள் போராளி ..அதுக்குள் பரணியின் போனை துண்டித்தான் குகன் ..

 

பரணியில் போன் மீண்டும் அடித்துக்கொண்டே இருந்தது பேஸ்புக் வேணாம் பேக் ஐடியும் வேணாம் ,இன்றில் இருத்தாவது இங்கு வந்திருக்கும் அண்ணைக்கு வீசா எடுத்து கொடுக்கும் வரை ,என் சிந்தனை ஓட்டம் எல்லாம் அதுபற்றியே இருக்கணும் என்று நினைத்துக்கொண்டு அண்ணே உங்களுக்கு உடல் நலம் நல்லா இல்லாட்டி நாளைக்கு வைத்தியரை பார்க்க போகலாம் ,இல்லை அப்பு எனக்கு ஒன்றும் இல்லாமல் எப்படி பார்க்கிறது கொஞ்சம் வலி இருக்கு முதுகு பக்கம் ,பிறகு பார்ப்பம் வீசா போட்டுட்டு ..இல்லை என்னுடைய காட்டில் காட்டலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை ...

 

கரிகாலன் தம்பியின் அழைப்பு பேஸ்புக்கில் ஓவர் ஓவர் என்று ஒலித்துக்கொண்டு இருக்க ,குகனின் தொலைபேசி அடித்துக்கொண்டு இருக்க எதையும் கவனிக்காது சமைக்க தொடங்கினான் குகன் ,போலி முகவரியில் ஈழம் பிடிப்பதை விட ஈழத்துக்காக வாழ்த்தவர்கள்,தியாகம் செய்தவர்கள் ,உயிர் கொடுத்தவர்களுக்கு நாலு உதவி செய்தாலே போதும் என்னும் எண்ணத்தில் அவன் முழுமையா தன்னை மாற்றி இருந்தான்.. தம்பி குகன் போன் அடிக்குது பரணியாம் ,அவன் கிடக்கிறான் லூசுப்பயல் விடுங்க அண்ணே என்று திடமா சொன்னான் குகன் .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை கதை அல்ல.. எழுதியவரின் சொந்தக் கடுப்பு. :lol::icon_idea::rolleyes:


உலகம் பூரா.. பேஸ்புக்.. ருவிட்டர்..  பெரி்ய மாற்றங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கு.. நாங்க.. இப்படியே நக்கல்     அடிச்சுக்கிட்டே இருப்பம். அதைவிட்டா நமக்கு என்ன வரும். :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இதை கதை அல்ல.. எழுதியவரின் சொந்தக் கடுப்பு. :lol::icon_idea::rolleyes:

உலகம் பூரா.. பேஸ்புக்.. ருவிட்டர்..  பெரி்ய மாற்றங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கு.. நாங்க.. இப்படியே நக்கல்     அடிச்சுக்கிட்டே இருப்பம். அதைவிட்டா நமக்கு என்ன வரும். :)

மிக்க  சந்தோசம்  நான்  இந்த  கதையில்   வெற்றி  கண்டுள்ளேன்  நெடுக்கர் அண்ணாவே ...யாருக்கு  உறைக்கணும் என்று  நினைத்தனோ  அங்கு உறைத்து  இருக்கு  என்பதால்  :D  :icon_idea:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இத்தனை எழுத்துப் பிழைகளுடனும் முகடு சஞ்சிகையில் உள்ளதா
அல்லது நீங்கள் விட்ட பிழைகளா அஞ்சரன்?
உங்கள் கீ போர்ட் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இத்தனை எழுத்துப் பிழைகளுடனும் முகடு சஞ்சிகையில் உள்ளதா

அல்லது நீங்கள் விட்ட பிழைகளா அஞ்சரன்?

உங்கள் கீ போர்ட் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள் :D

அங்கு  சரி  பார்க்கபட்டு  போடப்பட்டது  வாத்தியார் ஐயா  இது  நான்  எழுதி  அனுப்பியதை  பதிந்தேன்  :(

 

மீள்  வாசிப்பு  செய்தாலும்  பிழைகளை   தவிர்க்க  முடியவில்லை  என்பது  வருத்தம் தான்  :(  :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ சிலருக்கு  உரைப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவிற்காக  ஒரு இலக்கிய  இதழ் பாவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

யாரோ சிலருக்கு  உரைப்பதற்காக எழுதப்பட்ட இந்த பதிவிற்காக  ஒரு இலக்கிய  இதழ் பாவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது :(

சிறு  கதை  என்பது  ஒரு  கருத்தை  தாங்கி  நிப்பது  விஸ்வா  எதுவம்  இல்லாமல்  இருந்தால்  அது  சிறுகதை  இல்லை சமூக  விழிப்பு  எழுத்தில் சிறு தாக்கத்தை  ஏற்படுத்த  வேணும் ..நிஜம்  எப்பவும்  சுடும் அதுக்கு  நானும்  விதி  விலக்கு அல்ல .. :unsure:

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதில் மிகுந்த சலனத்தை ஏற்படுத்திய பின்பே நான் கருத்தை பதிவிட்டேன், நீங்கள் எடுத்து கொண்ட கருப்பொருளை கதைக்கான கட்டமைப்புடன் நிறைதலுடன் தந்திருக்கிறீர்களா என மீளாய்வு செய்யுங்கள் அண்ணா :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் உறைக்கத்தான் செய்யும், என்ன செய்யிறது! :o

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அவரவர் தங்களுக்கு  முடிந்ததை தெரிந்ததை தானே செய்யலாம் .

 

நல்ல கதை, இப்ப இதுதான் இணையங்கள் அனைத்திலும் நடக்கின்றது .

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

மனதில் மிகுந்த சலனத்தை ஏற்படுத்திய பின்பே நான் கருத்தை பதிவிட்டேன், நீங்கள் எடுத்து கொண்ட கருப்பொருளை கதைக்கான கட்டமைப்புடன் நிறைதலுடன் தந்திருக்கிறீர்களா என மீளாய்வு செய்யுங்கள் அண்ணா :)

நீங்கள் யாழ்  இணையத்துடன  கதையை  இணைத்து  பார்க்காது  பொது வெளியில்  பாருங்கள் உண்மை  புரியும் விஷ்வா . ^_^

உண்மைகள் உறைக்கத்தான் செய்யும், என்ன செய்யிறது! :o

அளவானவர்கள்  போடலாம்  என்று  நினைத்தேன்  அவர்களே  முண்டி  அடித்து  போட்டுகொண்டுள்ளர்கள்  என்பதால்  சந்தோசம்  கதையில்  :icon_idea:

அவரவர் தங்களுக்கு  முடிந்ததை தெரிந்ததை தானே செய்யலாம் .

 

நல்ல கதை, இப்ப இதுதான் இணையங்கள் அனைத்திலும் நடக்கின்றது .

உண்மை யாரவாது  போராளிகள்  சொல்லும்  கதையை  கேட்டுட்டு வந்து தானே  செய்வது  போல  அடிச்சு விடுறது இப்ப புது  யுத்தியா  இருக்கு ..

 

பிறந்தது  யாழில் வளர்த்தது  கொழும்பில் எனக்கு தெரிய ஒரு பையன் வயது இப்ப இருபத்திரண்டு  எனக்கே சொல்லுறான்  தீசுவாலை சண்டையில் கிளாலி  பக்கம் நிண்டனான்  தான்  என்று  அப்ப அவனுக்கு  வயது  பத்து என்னத்த  சொல்ல  அண்ணே ..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தம்பியின்ரை சொந்தக்கதையோ...... :)

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

அஞ்சரன் இங்கும் இப்படியான கதைகள் ஏராளம். எப்படித்தான் கூசாமல் கதையளக்கிறார்கள். கூடப்பழகுபவர்களே அருகில் இருப்பவர்களின் பூர்வீகம் தெரியாமல் கதையளப்பதை அதிகம் கண்டிருக்கிறேன் பல சமங்களில் இழுத்து மூஞ்சையில் காறி உமிழ்ந்து அவர்களின் அளப்பரையை வெளிச்சம்போட்டுக்காட்டலாமா என்று தோன்றும். வழமையான இறுக்கமும் அமைதி காத்தலும் கட்டிப்போட்டுவிடும்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

தம்பியின்ரை சொந்தக்கதையோ...... :)

நடைமுறை  அவதானிப்பு  அண்ணே   :D

அஞ்சரன் இங்கும் இப்படியான கதைகள் ஏராளம். எப்படித்தான் கூசாமல் கதையளக்கிறார்கள். கூடப்பழகுபவர்களே அருகில் இருப்பவர்களின் பூர்வீகம் தெரியாமல் கதையளப்பதை அதிகம் கண்டிருக்கிறேன் பல சமங்களில் இழுத்து மூஞ்சையில் காறி உமிழ்ந்து அவர்களின் அளப்பரையை வெளிச்சம்போட்டுக்காட்டலாமா என்று தோன்றும். வழமையான இறுக்கமும் அமைதி காத்தலும் கட்டிப்போட்டுவிடும்.

உண்மை  அக்கா  எதுக்காக  இவ்வாறு  நடந்து கொள்கிறார்கள்  என்றுதான்  புரிய வில்லை ஒரு  அற்ப  சந்தோஷம் தலைவர் படம் போட்டு ...காலை மாலை இயக்க பாட்டு  போட்டு ..ஒவ்வெரு  நாளும்  மாவீரர் வணக்கம்  போட்டால் புலியா அல்லது போராளியா  வாழலாம்  என்னும்  நிலையில்  இன்று வந்து  நிக்கு  இணைய  போராட்ட  புரட்சி .. :(

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை  அவதானிப்பு  அண்ணே   

உண்மை  அக்கா  எதுக்காக  இவ்வாறு  நடந்து கொள்கிறார்கள்  என்றுதான்  புரிய வில்லை ஒரு  அற்ப  சந்தோஷம் தலைவர் படம் போட்டு ...காலை மாலை இயக்க பாட்டு  போட்டு ..ஒவ்வெரு  நாளும்  மாவீரர் வணக்கம்  போட்டால் புலியா அல்லது போராளியா  வாழலாம்  என்னும்  நிலையில்  இன்று வந்து  நிக்கு  இணைய  போராட்ட  புரட்சி .. :(

 

 

உங்களுக்கும்

உங்கள் வளர்ச்சிக்கும் எதிரி நீங்களே தான்...

 

முகட்டின் முதல் பதிப்பில் தலைவர் படத்தை போட்டதை  இவ்வாறு இழிவு படுத்தியிருக்கவேண்டாம்... :(  :(  :(

 

 

Page_1_img045.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கும்

உங்கள் வளர்ச்சிக்கும் எதிரி நீங்களே தான்...

 

முகட்டின் முதல் பதிப்பில் தலைவர் படத்தை போட்டதை  இவ்வாறு இழிவு படுத்தியிருக்கவேண்டாம்... :(  :(  :(

 

 

Page_1_img045.jpg

நாம்  இங்கு  விவாதிப்பது  இணைய  போலி  முகவரி  போராளிகளை  நீங்கள்   சம்மந்தம்  இல்லாமல்  சஞ்சிகையை  கொண்டுவந்து  நுழைப்பது  எதுக்கு  என்று  புரியவில்லை ...ஊடகம்  வேறு  இணையங்களில் நான்தான்  புலி நான் தான்  எல்லாமே  என்று  தம்பட்டம்  அடிப்பது வேறு  அதை முதலில்  புரிந்து  கொள்ளுங்கள் அண்ணே ..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நாம் இங்கு விவாதிப்பது இணைய போலி முகவரி போராளிகளை நீங்கள் சம்மந்தம் இல்லாமல் சஞ்சிகையை கொண்டுவந்து நுழைப்பது எதுக்கு என்று புரியவில்லை ...ஊடகம் வேறு இணையங்களில் நான்தான் புலி நான் தான் எல்லாமே என்று தம்பட்டம் அடிப்பது வேறு அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் அண்ணே ..

ஏன் இணைய போலி முகவரி போராளிகளை மட்டும் விவாதிக்க வேண்டும் சஞ்சிகை போலி முகவரி போராளிகளையும் விவாதியுங்கள்.

இணையத்தில படம் போட்டால் தப்பு புத்தகத்தில போட்டால் தப்பில்லையோ

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

உங்கள் நடைமுறையைவைத்து நான் ஒன்று உங்களிடம் கேட்கவிரும்புகிறேன்.இங்கு பதிவிடப்பட்ட படைப்பின்மீதான கருத்து விவாத்திற்கும் தாங்கள் பிரசுரம் செற்திருக்கும் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? 

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

ஏன் இணைய போலி முகவரி போராளிகளை மட்டும் விவாதிக்க வேண்டும் சஞ்சிகை போலி முகவரி போராளிகளையும் விவாதியுங்கள்.

இணையத்தில படம் போட்டால் தப்பு புத்தகத்தில போட்டால் தப்பில்லையோ

மீரா  சஞ்சிகை  போலி  என்று  சொல்வதை  பார்க்க  சிரிப்பு  வருது  அதுக்கு  ஒரு  பச்சை  வேற  ஐயகோ ..எங்கும்  நாங்கள்  எங்கள்  சுய  முகவரியில்  இயங்கும்  ஆக்கள்  ...ஊரை  சுற்றி  உலையில்  போடும்  ஆக்கள்தான்  போலிகளில்  தேசியம்  ஈழம்  பிடிக்கும்  ஆக்கள் .

 

செந்த முகத்தில் தலைவர்  படம் போடுங்க என்றுதான்  சொல்கிறோம் ஆக்கும்  :icon_idea:

வணக்கம்

உங்கள் நடைமுறையைவைத்து நான் ஒன்று உங்களிடம் கேட்கவிரும்புகிறேன்.இங்கு பதிவிடப்பட்ட படைப்பின்மீதான கருத்து விவாத்திற்கும் தாங்கள் பிரசுரம் செற்திருக்கும் படத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? 

கீர்த்திதீபன்  இப்படி  பலது  நடக்கும் ஈழம்  பிடிக்கிறவ  காட்டும்  கூத்து  ஆட்டுக்க  மாட்டை  விட்டு  தங்களை  புனிதர்  ஆக்குவீனம் . :D

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நடைமுறை  அவதானிப்பு  அண்ணே   :D

உண்மை  அக்கா  எதுக்காக  இவ்வாறு  நடந்து கொள்கிறார்கள்  என்றுதான்  புரிய வில்லை

 

ஒரு  அற்ப  சந்தோஷம்

 

1- தலைவர் படம் போட்டு ...

2- காலை மாலை இயக்க பாட்டு  போட்டு ..

3- ஒவ்வெரு  நாளும்  மாவீரர் வணக்கம்  போட்டால் புலியா அல்லது போராளியா  வாழலாம்  என்னும்  நிலையில்  இன்று வந்து  நிக்கு  இணைய  போராட்ட  புரட்சி .. :(

 

 

1- தலைவரது படங்களை சுமக்க தகுதியானோர் எவர்?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

 

2-  இயக்க பாடல்களை கேட்க  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான் இயக்க பாடலை கேட்கணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

உங்களைப்போன்றவர்கள் மட்டுமே கேட்கலாம் என்ற வகையில் தான் பாடல்கள் உருவாக்கப்பட்டனவா??

அதற்கு சாட்சி உண்டா??

 

3-  மாவீரருக்கு அஞ்சலி செலுத்த  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான்  மாவீரருக்கு அஞ்சலி செலுத்தணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

 

 

*********

நியானி: யாழ் கள நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

 

 

1- தலைவரது படங்களை சுமக்க தகுதியானோர் எவர்?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

 

2-  இயக்க பாடல்களை கேட்க  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான் இயக்க பாடலை கேட்கணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

உங்களைப்போன்றவர்கள் மட்டுமே கேட்கலாம் என்ற வகையில் தான் பாடல்கள் உருவாக்கப்பட்டனவா??

அதற்கு சாட்சி உண்டா??

 

3-  மாவீரருக்கு அஞ்சலி செலுத்த  தகுதியானோர் எவர்?

இவ்வாறான மக்கள் தான்  மாவீரருக்கு அஞ்சலி செலுத்தணும் என புலிகள் எங்காவது கூறியுள்ளனரா?

அதை எந்த வகையில் தரம் பிரிக்கின்றீர்கள்?

அதை தரம் பிரிக்கும் அதிகாரத்தை தங்களுக்கு தந்தது யார்??

 

 

*********

நியானி: யாழ் கள நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

நீங்கள  எந்த  வைகையில்  இவரு  தேசியத்துக்கு  எதிரானவர்  ..அல்லது  துரோகிகள்  என்று  தரம்  பிரிப்பது  போலவே  நாங்களும் எவர் வெற்று  கூச்சல் ..எவர்  உண்மையான  விசுவாசி  என்று ஒரு வரையறை  வந்துள்ளோம் ..அதன்  படி  நாம் அவர்களை  அணுகுவோம் தரம் பிரிப்போம் .

 

இந்த  கேள்வி கேட்கும் அதிகாரங்கள்  எல்லாம் எவர்  உங்களுக்கு  தருகிறார்களோ  அவர்களே எமக்கு  தருகிறார்கள் ..

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

நீங்கள எந்த வைகையில் இவரு தேசியத்துக்கு எதிரானவர் ..அல்லது துரோகிகள் என்று தரம் பிரிப்பது போலவே நாங்களும் எவர் வெற்று கூச்சல் ..எவர் உண்மையான விசுவாசி என்று ஒரு வரையறை வந்துள்ளோம் ..அதன் படி நாம் அவர்களை அணுகுவோம் தரம் பிரிப்போம் .

இந்த கேள்வி கேட்கும் அதிகாரங்கள் எல்லாம் எவர் உங்களுக்கு தருகிறார்களோ அவர்களே எமக்கு தருகிறார்கள் ..

அஞ்சரன் ஒருவர் தான் இரண்டு வகையாக உங்களையும் விசுகரையும் கையாளுகிறாரா? இது சுத்த முட்டாள்தனம். உண்மையான விசுவாசிக்கு என்ன வரையறை?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1- நீங்கள  எந்த  வைகையில்  இவரு  தேசியத்துக்கு  எதிரானவர்  ..அல்லது  துரோகிகள்  என்று  தரம்  பிரிப்பது  போலவே  நாங்களும் எவர் வெற்று  கூச்சல் ..எவர்  உண்மையான  விசுவாசி  என்று ஒரு வரையறை  வந்துள்ளோம் ..அதன்  படி  நாம் அவர்களை  அணுகுவோம் தரம் பிரிப்போம் .

 

2- இந்த  கேள்வி கேட்கும் அதிகாரங்கள்  எல்லாம் எவர்  உங்களுக்கு  தருகிறார்களோ  அவர்களே எமக்கு  தருகிறார்கள் ..

 

 

1- ஒரு  ஆக்கத்தை கருத்துக்களத்தில் போட்டால் பலரும் பலவாறு விளங்கிக்கொள்வார்கள்

கேள்விகள் வரும்.  அவர்களுக்கு பதில் சொல்லும் பக்குவம் வேண்டும்.

 

2- நான் எங்காவது எதிரானவர் துரோகி என எழுதினால்

அந்த இடத்தில் கேட்கணும்.

பதில் தரப்படும்.

 

மற்றும்படி

முகநூலிலும் புத்தகத்திலும் நீங்களே உங்கள் கதையின் கதாநாயகன் என்பது வெளிப்படை...

ஒருவரை  நோக்கி  கைநீட்டும்போது

நாலு விரல்கள் நம்மை கேட்கின்றன.

பேசும் சொற்களைவிட  எழுதும் எழுத்துக்கள் வலுவானவை

சாட்சியாக நிலைப்பவை.

எனவே எழுதும் போது ஒன்றுக்கு பலமுறை யோசியுங்கள்

உங்களுக்கு நீங்களே முரண்படாதீர்கள்...

நன்றி.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன் உண்மைகளைக் கதைகளாக எழுதிக் கடுப்பேற்றுகின்றார்!

முதல் வெடி துவக்கு வெடியா, சீனவெடியா என்று தெரியமுதலே தமிழீழத்தை அடையவேண்டும் என்று தூரநோக்கோடு மேற்கு நாடுகளுக்கு வந்து இன்றும் சளைக்காது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்களை கீபோட் போராளிகள் என்று நக்கல் செய்வது எந்த வகையில் நியாயம்?

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

1- ஒரு  ஆக்கத்தை கருத்துக்களத்தில் போட்டால் பலரும் பலவாறு விளங்கிக்கொள்வார்கள்

கேள்விகள் வரும்.  அவர்களுக்கு பதில் சொல்லும் பக்குவம் வேண்டும்.

 

2- நான் எங்காவது எதிரானவர் துரோகி என எழுதினால்

அந்த இடத்தில் கேட்கணும்.

பதில் தரப்படும்.

 

மற்றும்படி

முகநூலிலும் புத்தகத்திலும் நீங்களே உங்கள் கதையின் கதாநாயகன் என்பது வெளிப்படை...

ஒருவரை  நோக்கி  கைநீட்டும்போது

நாலு விரல்கள் நம்மை கேட்கின்றன.

பேசும் சொற்களைவிட  எழுதும் எழுத்துக்கள் வலுவானவை

சாட்சியாக நிலைப்பவை.

எனவே எழுதும் போது ஒன்றுக்கு பலமுறை யோசியுங்கள்

உங்களுக்கு நீங்களே முரண்படாதீர்கள்...

நன்றி.

கதை  முகநூலில்  உள்ள  நண்பர்கள்  தங்களை  கடிப்பதா  சொல்கிறார்கள் ...இங்கு  போட்டால்  நீங்கள்  எங்களை  நோக்கி  என்று  நினைக்கிறிர்கள்  ஆக  இங்கு  பலர்  இதை  ஒரு  கதையா  பார்த்து  கடந்து  போனார்கள்  ,நீங்கள்  மட்டும்  அந்த  கதையின்  ஒரு  பாத்திரமா   மாறி  பார்த்தது  என்று  நினைக்கிறேன் ,மற்றும்படி இது  ஒரு  கதை  :)

அஞ்சரன் உண்மைகளைக் கதைகளாக எழுதிக் கடுப்பேற்றுகின்றார்!

முதல் வெடி துவக்கு வெடியா, சீனவெடியா என்று தெரியமுதலே தமிழீழத்தை அடையவேண்டும் என்று தூரநோக்கோடு மேற்கு நாடுகளுக்கு வந்து இன்றும் சளைக்காது தேசிய விடுதலைப் போரைத் தொடர்ந்துகொண்டிருப்பவர்களை கீபோட் போராளிகள் என்று நக்கல் செய்வது எந்த வகையில் நியாயம்?

இப்ப  எதுக்கு  சூப்பர்  பெற்றோல் ஊத்துறிங்க  கிருபன்  அண்ணே  :D

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • கண்டிப்பாக சைபர் குற்றங்கள் தொடர்பாகவும் குழந்தைகள் மீதான பாலியல் அச்சுறுத்தல் தொடர்பாகவும் தண்டனை வழங்கப்பட வேண்டியவர். இவரது டுவிட்டர் கணக்கு அழிக்கப்படும் முன் இவரால் மற்றவர்களுக்கு போட்ட ருவீட்டுகளிலும் மிக மோசமான வக்கிரமும் படு ஆபாசமும் நிறைந்து இருந்தன. குழந்தைகள் மீதான வக்கிரப் பார்வை கொண்டு தவறு செய்து விட்டு மன்னிப்பு கேட்டால் மட்டும் சரியாகி விடாது - அதுவும் மாட்டுப்பட்ட பின்.
  • இலங்கையில் எத்தனை மருத்துவபீடங்கள் உள்ளன? ஒரு கல்வியாண்டில் ஆக 270 மருத்துவத்துறை அனுமதிகள் மட்டும்தானா? இது போதுமா? இங்கு தமிழ் மாணவர்கள் ஒரு ஐம்பது தேறுமா? 
  • பொம்பியோவின் வருகையும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பும் - யதீந்திரா அமெரிக்க ராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கை வரவுள்ளார். அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. புதுடில்லியில் இடம்பெறும் இருதரப்பு அமைச்சர்கள் சந்திப்பிற்காக (U.S.-India 2+2 Ministerial Dialogue) வரும் மைக் பொம்பியோ, தொடர்ந்து கொழும்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இந்தியாவில் இடம்பெறும் இருதரப்பு சந்திப்பிற்கென அமெரிக்க பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பரும் வருகைதரவுள்ளார் ஆனால் அவர் இலங்கைக்கு வருவது தொடர்பில் இதுவரையில் எதுவிதமான தகவல்களும் இல்லை. ஆனால் அண்மையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் எஸ்பர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் தெலைபேசியில் உரையாடியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொம்பியோவின் கொழும்பு விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது மற்றும் சுதந்திரமான இந்தோ- பசுபிக் பிராந்தியம் (Free and open Indo-Pacific region) தொடர்பிலும் பொம்பியோ கவனம் செலுத்துவார் என்று, ராஜாங்கச் செயலகம் தெரிவித்திருக்கின்றது. 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமான உறவு வலுவடைந்தது. இவ்வாறானதொரு பின்னனியில் அப்போதைய ராஜாங்கச் செயலர் ஹெரி, 2015 மேமாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அமெரிக்க வெளிவிவகார விடயங்களை கையாளுவதில் ராஜாங்கச் செயல் பதவி என்பது, அமெரிக்க ஜனாதிபதிக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு உயர் பொறுப்பாகும். இலங்கையின் அரசியல் வரலாற்றில் அமெரிக்க ராஜாங்கச் செயலர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது மிகவும் அரிதாகவே நடந்திருக்கின்றது. 1972இல், அப்போதைய அமெரிக்க ராஜாங்கச் செயலர் வில்லியம் றொகர்ஸ் (William Pierce Rogers) இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது நிக்சன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார். சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து இந்தியாவற்கு விஜயம் செய்திருந்த அப்போதைய ராஜாங்கச் செயலர் கோலின் பவல் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். ஆனால் அதனை அரசியல் ரீதியில் முக்கியமான விஜயம் என்று கூறமுடியாது. இந்த அடிப்படையில் நோக்கினால், 1972இற்கு பின்னர் இடம்பெற்ற முக்கியமானதொரு அமெரிக்க உயர் விஜயமாக, ஜோன் ஹெரியின் விஜயம் அமைந்திருந்தது. அதன் பின்னர் தற்போது பொம்பியோவின் விஜயம் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவில் அடுத்த மாதம் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையிலேயே பொம்பியோவின் விஜயம் இடம்பெறவுள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சுமூகமான உறவுகள் இருந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது கொழும்பிற்கு அமெரிக்கா பல்வேறு வழிகளிலும் உதவியிருந்தது. 1997இல் அமெரிக்கா விடுதலைப் புலிகள் இயக்கத்தை சர்வதேச பயங்கரவாத இயக்கமாக பட்டியல்படுத்தி, தடைசெய்தது. இதில் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பங்கு முதன்மையானது. அமெரிக்க தடையை தொடர்ந்தே ஏனைய மேற்குலக நாடுகளும் விடுலைப் புலிகள் அமைப்பை தடை செய்தன. விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான அமெரிக்க தடையென்பதே கொழும்மை பொறுத்தவரையில் ஒரு மிகப் பெரிய உதவிதான். உண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவிற்கு எதிராக செயற்பட்டதில்லை. தமிழ் இயக்கங்களில் அமெரிக்காவிற்கு எதிராக ஒருவர் செயற்பட்டார் என்றால், ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தை மட்டும்தான் குறிப்பிடலாம். 1984ம் ஆண்டு, ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம், அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏயிற்கு (CIA) வேலைசெய்பவர்கள் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையில், ஸ்டான்லி அலன் மற்றும் மேரி எலிசபெத் (Stanley Allen and Mary Elizabeth) என்னும் அமெரிக்க தம்பதியை யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தி, கப்பம் கேட்டிருந்தனர். பேராசிரியர் சூரியநாரயணன் அண்மையில் வெளியிட்ட ஹக்சர் இந்தியாஸ் சிறிலங்கா பொலிசி என்னும் நூலில் இந்த விபரங்களை பதிவுசெய்திருக்கின்றார். இந்த ஒரேயொரு சம்பவம்தான், தமிழ் இயக்கம் ஒன்று அமெரிக்காவிற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையாகும். http://www.samakalam.com/wp-content/uploads/2020/10/Mike-Pompeo-resize.jpg இறுதி யுத்தத்தின் போது அமெரிக்கா புலிகளின் தலைமையை காப்பாற்றுவதற்கு உதவ விரும்பியதாகவும் ஆனால் இந்தியாவை மீறி அதனைச் செய்யமுடியவில்லை என்றும் ஒரு கதை சொல்லப்படுவதுண்டு, ஆனால் அந்தக் கதையில் எந்தளவு உண்மையிருக்கின்றது என்பது இன்றுவரையில் தெரியவில்லை. விடுதலைப் புலிகளின் தலைமையை காப்பாற்றுவதால் அமெரிக்காவிற்கு என்ன இலாபம்? உண்மையிலேயே அமெரிக்கா அவ்வாறு எண்ணியிருந்தால் இந்தியாவை மீறியும் அதனை செய்திருக்க முடியும். இப்போது இதெல்லாம் ஒரு விடயமுமல்ல. அமெரிக்காவில் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியினர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து கொழும்புடனான உறவுகள் நெருக்கடிக்குள்ளானது. ஓபாமா நிர்வாகம் மனித உரிமைகள் சார்ந்து ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பயணிக்கும் முக்கிய கொள்கை மாற்றம் ஒன்றை மேற்கொண்டது. அப்போது ராஜாங்கச் செயலராக இருந்த ஹிலாரி கிளின்ரன் இதில் முக்கிய பங்கு வகித்திருந்தார். 2011இல் ஹிலாரி கிளின்ரன் எழுதிய கட்டுரை ஒன்றில், அமெரிக்காவின் தலைமைத்துவத்திற்காக ஆசியா ஏங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இந்தப் பின்னயில்தான், இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மீது, அமெரிக்காவின் பார்வை திரும்பியது. இதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஒன்று மனித உரிமைகள் மீதான அமெரிக்காவின் உலகளாவிய கரிசனை. இரண்டு ஆசியா தொடர்பான அமெரிக்க கொள்கை. ஆனால் மகிந்த ராஜபக்ச நிர்வாகம் அமெரிக்க அழுத்தங்களுடன் மோதும் கொள்கை நிலைப்பாட்டையே மேற்கொண்டது. ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் தலையீடுகளை முற்றிலுமாக நிராகரித்தது. அதாவது, மகிந்த ராஜபக்ச தலைமையிலான கொழும்பு ஆசியாவில் அமரிக்காவின் தலைமைத்துவத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை தமிழர்கள் வரவேற்றனர் – ஆதரித்தனர். இப்போதும். இவ்வாறானதொரு சூழலில்தான் 2015இல் ஆட்சி மாற்றமொன்று ஏற்பட்டது. ஆனாலும் ஆட்சி மாற்றம் இலங்கைத் தீவில் அமெரிக்க நலன்களை பாதுகாத்ததாக கூறமுடியாது. எம்.சி.சி (Millennium Challenge Corporation (MCC) உடன்பாடு இப்போதும் தென்னிலங்கை அரசியலில் விவாதப் பொருளாகவே இருக்கின்றது. சேபா (status of forces agreement (SOFA) உடன்பாட்டை அமெரிக்காவினால் முன்தள்ள முடியவில்லை. ஆட்சி மாற்றத்தினால் இவற்றை செய்திருக்க முடியும் ஆனால் அது ஏன் நடைபெறவில்லை? ஆனால் ஆட்சி மாற்றம் தலைகீழான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றது. மேற்குலகின் நண்பர் என்று கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீன அரசாங்கத்திற்கு வழங்கியது. இந்த பின்புலத்தில் நோக்கினால் 2015இல் இந்திய – அமெரிக்க தரப்பு ஆதரவளித்த ஆட்சி மாற்றம் ஒரு ராஜதந்திர தவறாக என்னும் கேள்வியே தற்போது எஞ்சிக்கிடக்கின்றது. சீனாவை இதயத்தில் வைத்திருப்பவர்கள் என்று கருதப்படும் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சியை – அதிலும் தனிச்சிங்கள பெரும்பாண்மையில் கைப்பற்றியிருக்கும் சூழலில்தான், மைக் பொம்பியோவின் விஜயம் இடம்பெறவுள்ளது. அண்மைக்காலமாக சீனாவிற்கும் அமெரிக்காவிற்குமான முறுகல் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இந்து சமூத்திர பிராந்தியத்தில் சீனா எழுச்சியடைவது நீண்டகால நோக்கில் அமெரிக்காவின் உலக தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கிவிடும் என்னும் பார்வை அமெரிக்க ராஜதந்திர சமூகத்தின் மத்தியில் உண்டு. இந்த பின்புலத்தில்தான் அமெரிக்கா, சுதந்திர திறந்த – இத்தோ பசுபிக் பிராந்திய கொள்கையை முன்னிறுத்துகின்றது. இந்தோ பசுபிப் கொள்கை என்பதே சீனாவை ஒரு வரையறைக்குள் முடக்கும் தந்திரோயம்தான். இந்தோ – பசுபிக் கொள்கையில் இந்தியாவே பிரதான பங்காளி. இந்தோ பசுபிக் கொள்கையை சிலர் ஹொலிவுட்டிலிருந்து பொலிவுட்டுக் என்றும் கூறுவதுண்டு. அமெரிக்காவில் நிர்வாகங்கள் மாறினாலும் வெளிவிவகாரக் கொள்கையில் பெரியளவில் அடிப்படையான மாற்றங்கள் நிகழ்வதில்லை. ஒபாமா நிர்வாகம் ஆசிய மையக் கொள்கையை முன்தள்ளியது. ஆசியாவில் அமெரிக்காவின் உலகளாவிய தலைமைத்துவத்தை மீளவும் உறுதிசெய்வதுதான் ஆசிய மையக் கொள்கையின் இலக்கு. இந்த கொள்கையின் அடுத்த கட்ட நகர்வுதான் இந்தோ – பசுபிக் கொள்கை. ஒரு வேளை ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி தோல்விடைந்தாலும் கூட, வரப்போகும் ஜோ பைடன் நிர்வாகத்தின் சீனா தொடர்பான அணுகுமுறையிலும் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை. ஆனால் பைடன் வெற்றிபெற்றால் அமெரிக்கா இந்தோ – பசுபிக் கொள்கையை முன்னெடுக்கும் அதே வேளை, ஆசிய நாடுகளின் மனித உரிமைகள் விடயத்திலும் கூடுதல் கரிசனையை காண்பிக்கும். மீண்டும் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து பணியாற்றும் கொள்கை நிலைப்பாட்டை எடுக்கும். டொனால் றம்பின் அணுகுமுறைகளால் ஜக்கிய நாடுகள் சபையை சீனா கையகப்படுத்திவிடும் ஆபத்துள்ளதாகவும் சில அமெரிக்க கொள்கைசார் ஆய்வாளாகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த பின்புலத்தில் இலங்கையின் இறுதி யுத்த விவகாரம் மீண்டும் அமெரிக்க நிகழ்ச்சிநிரலில் இடம்பிடிக்கும். http://www.samakalam.com/wp-content/uploads/2020/10/usa-sri-lanka-1.jpg மைக் பொம்பியோவின் விஜயத்தின் போது அவர் சுதந்திர இந்தோ – பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பில் தனது கரிசனையை நிச்சயம் வெளிப்படுத்துவார். பொம்பியோ போடப்போகும் அடித்தளத்தில்தான் அடுத்து வரவுள்ள அமெரிக்க நிர்வாகம் – பயணிக்கும். அது எந்தக் கட்சியாக இருந்தாலும். இலங்கையில் சீனா வலுவாக காலூன்றியுள்ள நிலையில், ஒப்பீட்டடிப்படையில் அமெரிக்காவின் இந்தோ – பசுபிக் கொள்கைக்கான தளம், இலங்கையில் பலவீனமாகவே இருக்கின்றது. அமெரிக்க எதிர்பார்ப்புக்கள் இலங்கையில் தொடர்ந்தும் நிறைவேறாமல் இருப்பதானது பிறிதொரு வகையில் அமெரிக்கா முன்தள்ளும் சுதந்திர – திறந்த இந்தோ – பசுபிக் கொள்கையில் ஏற்படும் ஒரு ஆசியப் பின்னடைவாகும். சீனா அதிகம் இலங்கைக்குள் காலூன்றியிருக்கும் நிலையில் சேபா உடன்பாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. சோபா உடன்பாடு அடிப்படையில் இராணுவ ரீதியான ஒன்று. இதன் மூலம் அமெரிக்க படைகள் இலக்கைக்குள் வந்து செல்ல முடியும். ஒரு காலத்தில் அமெரிக்க படைகள் இலங்கைக்குள் வருவதை இந்தியா விரும்பவில்லை. அது அன்றைய பனிப்போர் கால பிரச்சினை. இன்று இந்தியாவின் நலன்களை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சீனா அதிகம் காலூன்றிவிட்ட நிலையில், அதனை சமநிலைப்படுத்துவதற்கான உபாயங்களில் இந்தியா ஒரு போதுமே பாராமுகமாக இருக்க முடியாது. இந்த பின்புலத்தில் சோபா அல்லது வேறு ஏதோவொரு வகையில் அமெரிக்காவின் பிரசன்னம் இலங்கையில் இருப்பது இந்தோ – பசுபிக் கொள்கைக்கு கட்டாயமானது. இ;ல்லாவிட்டால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை பிரயோகித்து இந்திய படைகள் இலங்கையில் நிலைகொள்ளும் உபாயம் தொடர்பில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். இலங்கையில் அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கள் தள்ளாடுவதுதானது திறந்த இந்தோ – பசுபிக் கொள்கைக்கான ஒரு ஆசியப் பின்னடைவாகவும் அமைந்துவிடலாம். ஏனெனில் ஒரு சிறிய நாட்டில் சீனாவை தோற்கடிக்க அமெரிக்காவினால் முடியாவிட்டால், ஆசியாவில் எவ்வாறு அமெரிக்காவினால் அதன் தலைமைத்துவத்தை உறுதிசெய்ய முடியுமென்னும் கேள்வி எழலாம். இந்த அடிப்படையில் சோபா மற்றும் எம்.சி.சி உடன்பாடு தொடர்ந்தும் இழுபடுவது தொடர்பில் மைக் பொம்பியோ இறுக்கமாக எதிர்வினையாற்றுவாரா? பொம்பியோவின் விஜயத்தின் போது ஒரு வேளை அவர் ஈழத் தமிழ் தலைவர்களை சந்தித்தால் அதுவும் கொழும்பிற்கான ஒரு செய்தியாகவே அமையலாம்.   http://www.samakalam.com/செய்திகள்/பொம்பியோவின்-வருகையும்/
  • மீண்டும் வரும் ‘கொரோனா’ -அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸ் பரவுகையின் தாக்கம், இலங்கையில் அசுர தாண்வம் ஆட ஆரம்பித்து இருக்கிறது. பல இடங்களில், தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. அடுத்த நிமிடமே, நாம் வாழும் சூழல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சத்துடனேயே, ஒவ்வொரு வினாடிகளையும் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. நம்மை நாம், பாதுகாத்துக் கொள்வதில் காட்டிய அலட்சியமும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுத்து, வென்றுவிடுவோம் என்கிற மமதையில், இலங்கை அரசாங்கம் விட்ட தவறுகளுமே, இன்றைய சூழ்நிலையில், வீரியம் கொண்டிருக்கும் வைரஸ் பரவலைத் தடுக்க முடியுமா என்கிற கேள்வியை, எழுப்பி இருக்கிறது.   2020ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில், ஒட்டுமொத்த நாடுமே, முழுமையான முடக்கத்துக்குள் உட்படுத்தப்பட்டதை ,அத்தனை இலகுவில் மறந்திருக்க முடியாது. ஆனாலும், ‘வருமுன் காக்க வேண்டும்’ என்பதற்காக, பல பொருளாதார இழப்புகளையும் தாங்கிக்கொண்டு, அந்த முழுமையான முடக்கத்தை, அரசாங்கமும் மக்களும் சரியாக நடைமுறைப்படுத்தி இருந்தார்கள்.  ஆனால், இம்முறை, அதே பொறுப்புணர்வை யாரிடத்திலும் பார்க்க முடியவில்லை. இதனால், கொரோனா வைரஸின் தாக்கத்துடன் இணைந்த பொருளாதார இழப்புகளுக்கு, முகம்கொடுக்க வேண்டிய மிக இக்கட்டான சூழ்நிலைகள், எம்மைச் சூழ்ந்து கொண்டுள்ளன என்பதே உண்மை. திறந்த பொருளாதாரச் சூழ்நிலையில், எல்லா நாடுகளினதும் சரி, எல்லா வியாபாரங்களினது தொடர்புகளும் சரி, ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கின்றன. இதன் விளைவாக, பொருளாதாரத் தாக்கங்கள், ஒருவரை மாத்திரம் பாதிப்பதாக இருக்காது. ஒருவரோடு தொடர்புபட்டு இருக்கும், ஒவ்வொருவரையும் பாதிப்பதாகவே இருக்கப்போகிறது. உதாரணமாக, கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக, பல நாடுகளும் முடங்கிப் போயுள்ளன. அந்த நாடுகளிலுள்ள பல்வேறு நிறுவனங்களும், தங்களது தொழில்முறை செயற்பாடுகளை நிறுத்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளன. எனவே, தன்னிடம் இருக்கக்கூடிய தொழிலாளர் வளங்களைக் காப்பாற்றக் கூடியவகையில், தன்னிடம் இருப்பிலுள்ள நிதியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியதாக இருக்கும்.  எனவே, தற்சமயத்தில் செயற்பாட்டில் இருக்கக்கூடிய செயற்றிட்டங்கள், புதிய திட்டங்கள் ஆகியவற்றை நிறுத்த முற்படும். இது, வெளிநாட்டில் இருக்கக்கூடிய குறித்த நிறுவனத்தில், தங்கி இருக்கக்கூடிய இலங்கை நிறுவனத்தையும் விரைவாகப் பாதிக்கச் செய்யும். குறித்த, வெளிநாட்டு நிறுவனத்தின் திட்டங்களில் வேலை செய்யும் இலங்கையின் நடுத்தர வர்க்கத்தினர், வேலையற்ற நிலையில், ஏனைய செயற்றிட்டங்களுக்கு மாற்றப்பட முடியாமல், தங்களது வேலைகளை இழக்க நேரிடலாம்.  இந்த வேலையிழப்பு, வேலையிழந்த அந்த நபரை மட்டும் பாதிக்கப்போவதில்லை. அந்த நபரையும் அவரது குடும்பத்தையும், இலங்கையின் உள்நாட்டுப் பொருளாதாரத்தையும் பாதிப்பதாக அமையும். காரணம், குறித்த குடும்பங்களில் வருமான மூலம் தடைப்படும்போது, அந்தக் குடும்பங்களால் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து, ஏனைய செலவீனங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அது, இலங்கையில் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் இன்னுமொருவரை, மறைமுகமாகப் பாதிக்கச் செய்யும். இது, நாட்டின் பணப்பாய்ச்சலைக் குறைப்பதன் விளைவாக, இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகளும் மிகப்பாரதூரமான அளவில் பாதிக்கப்படும். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f022660ad4.jpg தற்போதைய நிலையில், அதிக நாள்களாக முடக்க நிலையிலிருக்கும் கம்பஹா மாவட்டத்தில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களும் உருவாகி இருக்கிறார்கள். அரசாங்கம் ஆட்சியிலிருப்பதற்கு,  பெரும்பான்மை வாக்குகளை வாரி வழங்கிய மாவட்டமாக கம்பஹா இருப்பதால், மிகவிரைவாகவே அவர்களுக்கான நிதி திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த விளைந்திருக்கிறது.  இதுவே, ஒட்டுமொத்த இலங்கையும் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலை உருவாகின்றபோது, ஏனைய இடங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதார நிலைக்கும், இதுபோல விரைவாக, இந்த அரசாங்கத்தால் செயற்பட முடியுமா? கோட்டாபய, ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றதுமே, பொருள்கள், சேவைகளுக்கான வரிகளைக் குறைத்ததுடன், அரசாங்கத்துக்கு வருமான மூலமாக இருக்கக்கூடிய, பல்வேறு வருமான வரிகளையும் குறைத்திருந்தார். இதன் நோக்கம், மக்களின் கைகளில் மாதாந்தம் கிடைக்கின்ற பணத்தின் அளவை அதிகரிப்பதன் மூலமாக, கொள்வனவுச் சக்தியை அதிகரிக்க எதிர்பார்த்ததுடன், இதன் மூலமாக, இழந்த வருமான வரியின் ஒருபகுதியை ஈடுசெய்துகொள்ளவும் எதிர்பார்த்தார். ஆனால், தற்போதைய நிலை, இதற்கு எதிர்மாறாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கம், வறிய, நடுத்தர மக்களின் நாளாந்தச் செலவினங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டியதாக இருக்கின்றது. ஒவ்வொரு சுய தொழிற்றுறையாளனுமே, பாதிப்பை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதிலும், மிகப்பெரும் வருமான மூலமாக இருக்கக்கூடிய சேவைத்துறை, சுற்றுலாத்துறை இரண்டுமே, மிகப்பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன.   இதன்காரணமாகத்தான், இந்தப் பொருளாதாரம், ‘பிரமிட்’ கட்டுமானம்போல, ஒருவரில் மற்றொருவர் தங்கியிருப்பதாக முன்னரே கூறியிருந்தேன். அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த, ஏனைய அனைத்துத் துறைகளிலும் உள்ள அனைவருக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிதி ரீதியான இழப்புகளும் பொருளாதாரப் பிரச்சினைகளும் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.  எனவே, இந்த நிதி நெருக்கடியைத் தவிர்த்துக்கொள்ளவும் இந்தப் பொருளாதார பிரச்சினைகளைத்  தவிர்த்துக்கொள்ளவும் என்ன மாதிரியான விடயங்களைச் செய்யவேண்டும் என்பதே, மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது. அப்பட்டமாக உண்மையைச் சொல்லவதாக இருந்தால், இந்த நிதியியல் சரிவிலிருந்தோ, பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்தோ ஒழிந்துகொள்ள முடியாது. நிச்சயமாக, பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும்.  ஆனால், புத்திசாதுர்யமாகச் செயற்படுகின்ற சந்தர்ப்பத்தில்,  இந்தப் பாதிப்புகளைக் குறைக்கக் கூடியதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தப்பித்துக்கொள்ள, சமூக இடைவௌி என்ற செயற்பாட்டை இறுக்கமாகப் பின்பற்றுகின்றோமோ? நிதியியல் ரீதியாக, எதிர்காலத்தில் நெருக்கமாக தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. அதாவது, கொடுக்கல் வாங்கல்களைச் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாததாகிறது. இதன்மூலமாக, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ள வணிகங்களில், நிதிச் சுழற்சி ஆரம்பிக்கப்படும்.  இது, தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், வேலைகளை இழந்தோருக்கு மீளவும் வேலைகள் கிடைக்கச் செய்கின்ற செயற்பாட்டுடன் ஆரம்பித்து, மீளவும் ஒரு சுழற்சி அடிப்படையில், இந்தச் செயற்பாடுகள் ஒரு ஸ்திரமான நிலைக்குச் செல்ல உதவியாக இருக்கும். இந்தப் பொருளாதார மீட்பு முறையை, வெறும் ஒற்றைப் பந்திக்குள் சுருக்கமாக அடக்கிவிட்டாலும், இந்தச் செயற்பாடுகள் இடம்பெற்று, பொருளாதா ஸ்திரநிலை ஏற்படுவதற்கு, வருடங்கள் பல ஆகலாம். இந்தக் காலத்தைக் குறைப்பதென்பது, தனிமனிதனால் முடியாத ஒன்றாகும். கூட்டு முயற்சியாக, அனைவருமே இணையும்போதுதான், இந்த நிலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம். முதலாளித்துவ பொருளாதாரத்தில், நீங்கள் யாருமே பாதுகாப்பாகவில்லை என்பதை, இந்தக் கொரோனா வைரஸ் பரவல், இலங்கையில் நுழைந்த 2020இன் முற்பகுதியிலேயே உணர்ந்திருப்போம். இம்முறை, இந்தப் பொருளாதார நிலைவரத்துடன், நமது அலட்சிய போக்குக்கு மத்தியில், நமக்குள் ஊடுருவியிருக்கும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராகவும் போராட்டம் நடத்த வேண்டியதாக இருக்கும். மிக இக்கட்டான சூழலை, எதிர்வரும் சில வாரங்களுக்கு, முகம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. நமது பாதுகாப்பில் எவ்வளவு கவனமாக இருக்கிறோமோ, அதுபோல , நம் பொருளாதாரம் தொடர்பிலும் சிரத்தையோடு சிந்திப்போம்.இல்லையெனில், நாளைய வாழ்க்கையை வாழ, ஏதுமற்ற நிலையைக் கொண்டவர்களாக, நாம் மாறியிருக்கக்கூடும்.    http://www.tamilmirror.lk/வணிகம்/மீண்டும்-வரும்-கொரோனா/47-257495
  • அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலமும் கட்சித்தாவல்களும் -என்.கே. அஷோக்பரன் அரசமைப்புக்கான 20ஆம் திருத்தச் சட்டமூலம், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, 156 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் 65 பேர் எதிர்த்துள்ளனர். இதில், பிரதானமாக இரண்டு விடயங்கள், பொது வாதப்பிரதிவாதத்தின் பொருளாக மாறியிருக்கின்றன.  முதலாவது, 20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகள்.   இரண்டாவது, கட்சித்தாவல்கள்.    20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் பாரதூர விளைவுகளைப் பற்றி, பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் விமர்சனக் கலந்துரையாடல்களும் பாரம்பரிய ஊடகங்களிலும் சமூக ஊடக வௌியிலும் குவிந்து கிடக்கின்றன.    20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் சுருக்கம் யாதெனில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்துக்கு, 17ஆம், 19ஆம் திருத்தங்களினூடாகக் கொண்டுவரப்பட்ட மட்டுப்பாடுகளைப் பலவீனப்படுத்தியும் இல்லாதொழித்தும், ஜனாதிபதியிடம் மீண்டும் நிறைவேற்றதிகாரத்தைக் குவிப்பதாக அமைகிறது.    இங்கு, ‘மீண்டும்’ என்ற சொல் கவனிக்கப்பட வேண்டியது. ஜே.ஆர். கொண்டுவந்த இந்த அரசமைப்பில், ஜே.ஆர். தனக்குத்தானே வகுத்தளித்துக்கொண்ட நிறைவேற்றதிகாரங்களை, பெருமளவுக்கு ஒத்த நிறைவேற்று அதிகாரங்களை கோட்டாபய, தனக்குத்தானே தற்போது, வகுத்தளித்துக் கொண்டிருக்கிறார்.    20ஆம் திருத்தச் சட்டமூலத்தின் அறிமுகத்தை, அதிர்ச்சியோடு எதிர்கொள்ள வேண்டியதில்லை. 2019ஆம் ஆண்டு நவம்பரில், கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியாகத் தெரிவானபோதே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, இத்தகைய அரசமைப்புத் திருத்தம் வரும் என்பது, வௌ்ளிடைமலையாகவே இருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில், ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுன, தனித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறுமா என்பது, நிச்சயமற்று இருந்த நிலையில் கூட, அரசமைப்புத் திருத்தத்தை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நாடாளுமன்றப் பலத்தைப் பெற்றுக்கொள்ளும் என்ற நிச்சயத்தன்மை உருவாகக் காரணம், இலங்கை அரசியலில் சர்வசாதாரணமாகிப் போயுள்ள கட்சித்தாவல் கலாசாரமாகும்.    கட்சித்தாவுகின்றவர்களை, ஆங்கிலத்தில் turncoat அல்லது renegade என விளிப்பார்கள். Renegade என்றால், தான் சார்ந்திருந்த அமைப்புக்கோ நாட்டுக்கோ கொள்கைக்கோ  நம்பிக்கைக்கோ துரோகமிழைத்து, அதிலிருந்து நீங்கி, மாற்றுத்தரப்பை ஏற்பவரைக் குறிக்கும் சொல்லாகும்.  Turncoat என்ற சொல்லுக்கு இன்னும் சுவாரசியமானதொரு வரலாறு இருக்கிறது. 12ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், பிரித்தானியாவில் இரண்டு சீமான்கள், வில்லியம் மார்ஷலுக்கு அளித்துவந்த விசுவாசத்தைக் கைவிட்டு, ஜோன் மன்னருக்குத் தமது விசுவாசத்தை வழங்கினார்கள். இதன்மூலம், வில்லியம் மார்ஷலின் இலச்சினையை (coat of arms) மாற்றி, ஜோன் மன்னரின் இலச்சினையை ஏற்றதால், ‘Turncoat’ என்ற சொல் உருவானதாக ஒரு கதையுண்டு.  இதுபோன்ற, 1,000 கட்சித்தாவல்களையும் அரசியல் துரோகங்களையும் உலகம் எங்கிலுமுள்ள வரலாறுகளில், இலக்கியங்களில் நிறைந்தளவில் காணலாம். ‘தக்கன பிழைக்கும்’ என்பது, இயற்கையின் நியதி; எனில், உயிர்கள் இயல்பாகவே பிழைத்துக்கொள்வதற்காகத் தம் இயல்புகளை மாற்றிக்கொள்வதும் நியதியேயாகும். இந்த நெகிழ்ச்சித் தன்மை இயல்பானதாகும்.  ஆனால், இந்த இடத்தில்தான் விழுமியங்களும் ஒழுக்கங்களும் நியதிகளும் சட்டங்களும், மனித வாழ்வை நெறிப்படுத்த உருவாகின. அவை, நெகிழ்ச்சித் தன்மையைத் திடப்படுத்த, சில சட்டகங்களை ஸ்தாபித்தன. ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்’, ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்’ போன்ற, உயர் ஒழுக்கக் கோட்பாடுகள், இத்தகைய சட்டகங்களை ஸ்தாபித்தன.  இதில் மதங்களின் பங்கு முக்கியமானது. ‘சத்தியமேவ ஜயதே நான்றதம், சத்யேன பந்தா விதாதோ தேவயானா’ என்று, முண்டக உபநிஷதம் உரைப்பதும் ‘பொய்யான பேச்சைத் தவிர்க்க’ என்பது, பௌத்தத்தின் எட்டுக் கட்டளைகளில் ஒன்றாக இருப்பதும் ‘பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே’ என்று யூத, கிறிஸ்தவ மதங்கள் சொல்வதும் ‘பொய்யான சொல்லையும் நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள்’ என்று குர்ஆன் சொல்வதும் ஆகிய எல்லாம், இந்த ஒழுக்கக்கட்டுப்பாட்டின் பாற்பட்டவையே.    இந்த ஒழுக்கக் கட்டுக்கோப்பின் வழியாகத்தான், அடையாளபூர்வ சத்தியப்பிரமாணங்கள், வாக்குறுதிகள் முக்கியத்துவம் பெறத்தொடங்கின. ஒருவன், ஓர் ஆட்சியாளனுக்கு விசுவாசமாக இருப்பேன் என்ற சத்தியப்பிரமாணத்தை வழங்கிவிட்டு, அதற்கு முரணாகத் துரோகமிழைத்தால், அது ராஜதுரோகமாகவும் மரணதண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்பட்டது. இது, அரசியல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; சில மதங்களில், அந்த மதத்தைவிட்டு மாறுபவர்களுக்கு, மரணதண்டனையே தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.  இன்றைய நவீன காலத்தில், விசுவாசப்பிறழ்வுக்கு, அரசியல் துரோகத்துக்கு மரண தண்டனை வழங்கப்படாவிட்டாலும், சிறைத்தண்டனைகள், இன்னும் பல நாடுகளின் தண்டனைச் சட்டக்கோவையில் இருக்கிறது. பண்பாட்டு, விழுமிய ரீதியாக விசுவாசப்பிறழ்வும் நம்பிக்கைத் துரோகமிழைத்தலும் கீழ்த்தரமான செயற்பாடுகளாகவே கருதப்படுகின்றன.    நவீன ஜனநாயகத்தின் கட்சி அரசியலைப் பொறுத்தவரையில், கட்சி விசுவாசம், அதன் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, கட்சி மைய அரசியல், கட்சிசார் தேர்தல்கள் நடைமுறையில் உள்ள நாடுகளில், இதன் முக்கியத்துவம் அதிகமாகும்.  ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ நாடாளுமன்றப் பாரம்பரியத்தைப் பின்பற்றும் நாடுகளில், நாடாளுமன்றத்தில் ‘கொறோடா’ (Whip) என்ற பதவியுண்டு. ஆளுங்கட்சிக்கு ஒரு கொறோடா பதவி; எதிர்க்கட்சிக்கு ஒரு கொறோடா பதவி உண்டு. இவர்களின் பணி, கட்சிக் கட்டுப்பாட்டை, தம்கட்சி சார்ந்த உறுப்பினர்கள் மீது தக்கவைத்துக் கொள்வதாகும்.  Whip என்ற சொல் whipping என்ற சொல்லிலிருந்து பிறந்ததாகும். Whipping என்பது, சவுக்கால் அடித்து, கட்டுக்கோப்பில் வைத்திருத்தல் என்ற பொருளையுடையது. கொறோடாவின் பணியும், அடையாள ரீதியில் அத்தகையதே என்பதால், Whip என்ற பெயர் வழக்கமானது. கொறோடாவின் உத்தரவை மீறி நடத்தலானது; நாடாளுமன்றக் குழுவிலிருந்தான நீக்கத்துக்கும் தொடர்ந்து கட்சியில் இருந்தான நீக்கத்துக்கும் வழிவகுக்கும்.    பிரித்தானிய ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ முறையின் வெற்றிகரமான இயக்கத்துக்கு, மரபுகள் மீதான மதிப்பு அடிப்படையானது. ஆனால், அத்தகைய மாண்புகள் சகல இடங்களிலும் சகல சந்தர்ப்பங்களிலும் எதிர்பார்க்கப்பட முடியாதவை.  இலங்கையின் அரசமைப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்கும் ஏற்பாட்டைக் கொண்டிருக்கிறது. அரசமைப்பின் 99(13) சரத்தானது, நாடாளுமன்ற உறுப்பினர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு மாதகாலத்தில் அவரது நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகும் என்று வழங்குகிறது.ஆனால், அந்த ஒரு மாதகாலப் பகுதிக்குள், குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் கட்சி உறுப்பினர் நீக்கத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்துக்கு மனுச்செய்ய முடியும் என்றும், அவரது நீக்கம் செல்லுபடியானது என்று உயர்நீதிமன்ற அமர்வு தீர்மானிக்கும் போது, அது அவ்வாறு தீர்மானிக்கும் தினத்திலிருந்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழப்பார் என்றும் வழங்குகிறது.    ஒரு கட்சிக்கு, அதன் உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும், கட்சியிலிருந்து தகுந்த காரணங்களுக்காக நீக்கும் உரிமையுண்டு. ஆனால், அத்தகைய செயற்பாடானது, எதேச்சதிகாரமான முறையில், முன்முடிவுகளின் படியான மனநிலையுடன், இயற்கை நீதிக்கு விரோதமாகச் செய்யப்பட முடியாது.அவ்வாறு செய்யப்படும் போது, அது செல்லுபடியற்ற நீக்கமாக அமையும்.  ஆகவே, இயற்கை நீதியின்படி, தவறிழைத்த உறுப்பினரிடம் விளக்கம் கோருவதும், முறையான ஒழுக்காற்று விசாரணை நடத்துவதும், அதன் முடிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதுமே பொருத்தமான வழிமுறையாகும்.  இதை முறையாகச் செய்யும் போது, கட்சிகள், கட்சியின் கட்டுக்கோப்புக்குக் குந்தகம் விளைவிக்கும், கொறோடாவின் கட்டளைக்கு உட்பட்டு நடவாத நாடாளுமன்ற உறுப்பினர்களை, கட்சியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க முடியும்.    இதைச் செய்வதில், இலங்கையின் சமகால அரசியலில் இன்னொரு சிக்கல் இருக்கிறது. அதுதான், தற்காலிகமாக உருவாகும் பெயரளவிலான ‘கூட்டணிகள்’. எந்தவித முறையான கட்டமைப்புமின்றி உருவாகும் ‘கூட்டணிகள்’, ஏதோ ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்றன. அப்படிப் போட்டியிடுபவர்கள், அந்தக் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம், அந்தக் கட்சிகளுக்கு இருப்பதில்லை; அதன் விளைவாக, அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க முடியாது. பஷீர் சேகுதாவூத் எதிர் பேரியல் அஷ்ரப் வழக்கில், இந்தவிடயம் உயர் நீதிமன்றினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.  ஆகவே, பெயரளவிலான கூட்டணிகளை, முறையாகப் பதிவு செய்யாமல், ஏதோ ஒரு கட்சியின் பதாகையின் கீழ் இயக்கும் போது, கட்சிக்கட்டுக்கோப்பை மீறினாலும், கட்சிதாவினாலும் கூட, எதுவும் செய்ய முடியாத நிலையே, யதார்த்தத்தில் காணப்படுகிறது.    இந்த நிலையின் மாற்றம், முதலில் முறையான கட்சி அமைப்பின் ஸ்தாபிப்பிலிருந்து தொடங்கவேண்டும். அல்லாவிடில், கட்சித்தாவல் என்பது, சர்வசாதாரணமான ஒன்றாகவே தொடரும்.         http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசமைப்புக்கான-20ஆம்-திருத்தச்-சட்டமூலமும்-கட்சித்தாவல்களும்/91-257494
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.