Jump to content

பாரிய அழிவின் விளிம்பில் யாழ்ப்பாணம்


Recommended Posts

பாரிய அழிவின் விளிம்பில் யாழ்ப்பாணம்

Jaffna-Halbinsel.png

யாழ் குடாவினதும், வடக்கினதும் மக்கள் தமது நலன்களைப் பேணத் தாமாகத் தெருக்களிலும், எங்கும் இறங்கிக் போராடவேண்டிய காலம் வந்துவிட்டது போலிகளையும், ஏமாற்றுக் கும்பல்களையும் தூக்கி எறியவேண்டிய காலம் வந்துவிட்டது. உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து கொண்டு அரசியல் பேசுகின்ற, எழுதுகின்ற பெருந்தகைகளே!

இன்று வடக்கின் தமிழ் அரசியல்வாதிகளும், ஊடகங்களும், முகநூல், twiter போன்றவற்றில் ஜனாதிபதித் தேர்தல் பற்றியும், ஏனையவைகள் பற்றியும் எத்தனை ”ஆய்வு”களையும், அறிவுறுத்தல்களையும் நீங்கள் செய்கிறீர்கள்?

அபிவிருத்தி பற்றிப் பேசுகிறீர்கள், தமிழரின் உரிமைகள் பற்றிப் பேசுகிறீர்கள், நீங்கள் சிந்தித்து மக்களின் நலன்கள் கருதித் திட்டங்களை வகுத்துச் செயற்படுவதாகக் கூறுகின்றீர்கள். மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மக்களிடம் சென்று சேவையாற்றுவதாகப் பேசுகின்றீர்கள், எழுதுகின்றீர்கள்! வேறு ஏதோ ஏதொவெல்லாம் பேசுகிறீர்கள். பெரும் அறிவுறுத்தல்களைச் செய்வதாகக் காட்டியும் கொள்கிறீர்கள்.

ஆனால், நீங்கள் எல்லாம் யாழ்குடாவும், வடக்கும் எதிர்நோக்குகின்ற மிக முக்கிய பிரச்சினையான விடயங்களைப் பேசாது ஏமாற்றுப் பேச்சும், எழுத்து எழுதும் போலிக் கும்பல்களே!

பெருந்தகைகளே! நீங்கள் பேசுகின்றவைகள், எழுதுகின்றவைகள் எதற்காக? எவற்றைத் தமிழர்கள் அடைய? வடக்கில் தமிழர்கள் தொடர்ந்தும் வாழமுடியுமானால்தான் நாம் எமது அபிவிருத்தியையும், உரிமைகள் பற்றியும் பேசவும், எழுதவும் முடியும்.வடக்கில் தமிழர்கள் தொடர்ந்தும் வாழமுடியாதாயின், வடக்கின் அபிவிருத்தி, மக்களின் உரிமைகள் என்பவைகளைப் பற்றிப் பேசுவதெல்லாம் ஏமாற்றுப் பேச்சே! மக்களை ஏமாற்றி, குறுகிய கால கண்ணோட்டத்தில் நீங்கள் அரசியல், மற்றும் இலாபங்களைத் தேடும் ஏமாற்று நடிவடிக்கைகளே!

யாழ் குடா மக்களும், வடக்கு மக்களும் இன்று மூன்று மிக முக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அவையாவன:

1. யாழ்குடா நாட்டின் நில அடி நீரில் கழிவு எண்ணெய் *Waste oil) கலப்பது;

2. யாழ் குடா நாட்டின் நில அடி நீரானது உப்பு நீராக மாறிவருவது;

3. யாழ்குடாவினதும், வடக்கினதும் நில அடி நீரி்ல் உரம், மற்றும் பூச்சி கொல்லிகள், புல்- பூண்டு அழிப்பு மருந்துக்கள் ஏனையவைகளின் இரசாயனப் பொருட்கள் கலப்பது.

இவற்றுள் முதல் இரண்டுமே மிகப் பெரும் பிரச்சினைகள் ஆகும்.

oil-well1.jpg

1. யாழ்குடா நாட்டின் நில அடி நீரில் “கழிவு எண்ணெய்” கலப்பது

யாழ் குடா நாட்டில் ”கழிவு எண்ணெய்” நில அடி நீரில் கலப்பது, பின்வருவனவற்றால் நடைபெறுகிறது:

i) சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையக் கழிவு எண்ணெய்கள் நில அடியினுள் விடப்பட்டு வந்தமையும், இன்று விடப்படுவதும்;

norther-power.jpeg

ii) யாழ் குடாவினதும், வடக்கினதும் ஆயிரக்கணக்கான Service Stations. Garages என்பவைகளில் கழிவு எண்ணெய்கள் நிலத்தில் விடப்படுவது,

iii) வீடுகளில் தனியார்களின் வாகனங்களின் கழிவு எண்ணெய்கள் நிலத்தில் விடப்படுவது.

Vehicle-Service-Station-for-IMMIDITAE-sa

இன்று ஒருபுறத்தில் சுண்ணாகம், ஏழாலை, மல்லாகம் மேற்கு வரை கழிவு எண்ணெய் நில அடி நீரில் பெருமளவில் கலந்து விட்டது.

இதனால், 600இற்கு மேற்பட்ட கிணறுகளின் நீர் மனிதர்கள், மிருகங்கள், தாவரங்களின் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த மக்களும், அவர்களின் எதிர்காலச் சந்ததியினரும் இனி எங்கே இடம்பெயர்ந்து தமது வாழ்க்கையைப் புதிதாக ஆரம்பிக்கவுள்ளனர்?

இதற்கு அரசு எவைகளை இந்த மக்களுக்குச் செய்து கொடுக்கவுள்ளது?

அதுவரைக்கும் இந்த மக்களின் அன்றாட வாழ்க்கை நிலை என்ன?

இதைவிட எந்தெந்தப் பகுதிகளின் எத்தனை ஆயிரம் கிணறுகளில் சிறிய அளவுகளில் ”கழிவு எண்ணெய்கள்” கலக்க ஆரம்பித்துள்ளன என்பதும் எவருக்கும் தெரியாது.

இதனைப் பரிசோதிக்க அரச திணைக்களங்களும் தம்மால் முடியாது எனக் கூறியுள்ளன. பரிசோதனைகளைச் செய்யத் தேவையான இரசாயனப் பொருட்கள், ஏனையவைகள் தம்மிடம் இல்லை என அவை கூறுகின்றன

ஆனால், அவற்றை இன்றுவரை யாழ்குடாவின் அரசியல்வாதிகளோ, நிர்வாகிகளோ பெற்றுக் கொடுக்கவுமில்லை!!

ஆனால். மிகவும் ஆபத்தான விடயம் என்னவென்றால், நில அடி நீரில் ஏற்கனவே கலந்த கழிவு எண்ணெய்களையும், இனிக் கலக்கப் போகும் கழிவு எண்ணெய்களையும் நிரந்தரமாகக் குறுகிய காலத்தில் நீக்க எந்தவித முறையும் இங்கு இல்லாதிருப்பதாகும்!

இவைகள் தொடர்பாக பிரதேச சபைகளோ, மாகாண சபையோ, அல்லது அரசின் சம்பந்தப்பட்ட திணைக் களங்களோ, அரசியல்வாதிகளோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கழிவு எண்ணெய்கள் எப்படிச் சேமிக்கப்படவேண்டும், இதை எப்படி முகாமைப் படுத்துவது, அவைகள் எங்கு எவர்களிடம் தவறாது கையளிக்கப்பட்டு, அவை எப்படிச் சுத்திகரிக்கப்பட்டுப் பயன்படுத்துவது, அல்லது அழிப்பது என்பது எவருக்கும் தெரியாத விடயமாகவே இருக்கிறது. இவைகள் பற்றி அரச, மற்றும் நிர்வாகங்கள் எதனையும் அறியாத, தீர்வுகாண முற்படாத நிலைதான் காணப்படுகிறது.

அப்படியானால், இவைகள் ஏன் செயற்படுகின்றன? இவைகள் உண்மையில் எவர்களின் நலன்களைப் பேணச் செயற்படுகின்றன. இந்த அமைப்புக்கள், திணைக்களங்கள் இந்த முக்கிய பிரச்சினையினைக் கையாள முடியாதவையாயின், அவை ஏன் உருவாக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோருக்கு மக்களின் வரிகளுடாகச் சம்பளங்கள் வழங்கப்படுகின்றன?

2. யாழ் குடா நாட்டின் நில அடி நீரானது ஊப்பு நீராக மாறிவருவது;

யாழ்குடாவின் விவசாய, குடியிருப்பு நிலங்களில் கிணற்று நீர் இன்று உப்பாகி வந்துவிட்டது. வலிகாமம் வடக்கில் தெல்லிப்பழை, அளவெட்டி, மல்லாகம், சுண்ணாகம், கந்தரோடை எனப் பரந்து இன்று உடுவிலின் வட, மத்திய பகுதிகளிலும் கிணறுகளின் நீர் உப்பாகி விட்டது!

KKS-Cement-factory-region.jpgz_bus800.jpg

எமது ”வித்தகர்கள்” இதற்குப் பல விளக்கங்களைக் கூறும்பொழுதும், இப்பகுதிகளின் கிணறுகள் உப்பாகி வருவதற்கு முதல் முக்கிய காரணம் காங்கேசன்துறை சீமெந்துத் தொழில்சாலைப் பகுதியிலும், அதன் சுற்றத்திலும், 100 – 200 அடி ஆழத்திற்கு சுண்ணாம்புக் கல் தோண்டி எடுக்கப்பட்டதாகும். போரின்போது சீமெந்துத் தொழிற்சாலை மூடப்பட்டு, மக்கள் விரட்டியடிக்கப்பட்டபின்னர், இப்பகுதிகளில் இராணுவத்தினரும், தனியார் கொம்பனிகளும், ஏனையவைகளும் சுண்ணாம்புக் கல் கிண்டி எடுத்துத் துறைமுகமூலமாக வெளியே எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடாந்து நடைபெற்று வந்துள்ளன.

இதன் காரணமாக, தெல்லிப்பழை மற்றும் பகுதிகளின் கிணறுகள் உப்பு நீராக இன்று மாறியுள்ளன!

இதற்குச் சிறந்தவொரு உதாரணம், தெல்லிப்பழையின் ”துர்க்காபுரம்” என இன்று அழைக்கப்படும் குடிமனைப் பகுதியாகும்!இங்கு மீள் குடியேற்றம் நடைபெற்று கடந்த இரண்டு வருடங்களுள் ஏறக்குறைய 35 கிணறுகள்வரை உப்பு நீராகிய நிலையில், அவ்விடத்தினர் குழாய் கிணறுகள் தோண்டப்பட்ட தனியாரின் கிணறுகளுக்குச் சென்று குடிநீர் பெற்று வாழ்ந்து வந்தனர்.கடந்த ஒருசில நாட்களாக இப்பகுதிகளில் பெய்த மழையின் பின்னர், நேற்று முதல் இந்தக் கிணறுகளும் உப்பாகிய நிலையில், குடிநீருக்கு இப்பகுதி மக்கள் பிரச்சினையை எதிர்நோக்க ஆரம்பித்துவிட்டனர்!

இதைப் போலவே, உடுவில் வடக்குக் கிராம சேவையாளர் பகுதியின் பல கிணறுகள் மழையின் பின்னர் உப்பாகி விட்டன!இப்படி எத்தனை பகுதிகள் இந்தப் பிரச்சினைகளை எதிர்நொக்க ஆரம்பித்துள்ளன என்பதையே அரசியல்வாதிகளும், ஆளும் அமைப்புக்களும் அறியாத, தெரியாத நிலையில்தான் உள்ளன! இந்தநிலையில், காங்கேசன்துறை சீமெந்துச் தொழிற்சாலையை மீளவும் ஆரம்பித்து சில நூறு தமிழர்களுக்கும், பல நூறு சிங்கவர்களுக்கும் வேலை வாய்ப்பை அளிப்பதுடாக பொருளாதாரத்தை வளர்க்க முற்படும் அரசியல்வாதிகளையும், அவர்களது கட்சிகளையும் என்னவென்று கூறலாம்?

இவர்கள் அபிவிருத்தி என்ற மாயைத் தோற்றத்தின்கீழ் செய்வது வருபவை, உண்மையில், முழு யாழ்குடா மக்களையும் வெகு சீக்கிரத்தில் யாழ் குடாவைவிட்டு வெளியே கலைப்பதுதான்!

இந்தக் கோஷடி இப்படி ஏமாற்றும்போது, மற்றைய பெரும் ஏமாற்றுக் கோஷ்டியானது, தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுத் தரப்போவதாகக் கூறி, தாம் ஜனாதிபதித் தேர்தலில் என்ன நிலைப்பாட்டினை தம்ழ் மக்களின் நலன்களைப் பேண எடுக்கக் கடுமையாகச் சிந்திப்பதாகக் கூறுகிறது!

கைக்கூலித் தமிழ் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளையும், போலி ஆய்வுகளையும் வெளியிட்டு வருகின்றன! இந்தக் கோஷ்டியானது யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொள்ளாத கும்பலாகும்! இந்தநிலையில், யாழ் குடா மக்களுக்கு இன்று ஜனாதிபதி தேர்தல்தான் முக்கியமானதா, அல்லது ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவதுதான் முக்கியமானதா, அல்லது ”பொது அணி” என்ற கோஷ்டியின் வேட்பாளர் ஜனாதிபதியாக ஆக்குவதுதான் முக்கியமானதா? அல்லது பிறவொரு சாரார் விரும்பும் ”ஆட்சி மாற்றம்” தான் எமக்கு முக்கியமானதா?

இல்லவேயில்லை! இவை எதுவுமேயில்லை!!

யாழ்குடாவினதும், வடக்கினதும் மக்கள் தாம் தமது நிலத்தில் நிரந்தரமாக வாழக்கூடிய நிலையை உருவாக்குவதுதான்முக்கியமானது! அந்தச் சூழ்நிலையை உருவாக்கிப் பேணுவதுதான் முக்கியமானது! இந்தநிலையில், மக்களை ஏமாற்றும் கூட்டங்கள் ஜனநாயகம், அபிவிருத்தி எனப் போலிப் பேச்சுக்கள் பேசி,, ஜனாதிபதித் தேர்தல் பக்கம் மக்களின் கவனத்தை இழுத்துத் தமது இலாபங்களை அடைய முற்படும் காலத்தில், நாம் எமது இருப்பை உறுதிசெய்ய வைப்பதற்கான பேராட்டங்களை டிசெம்பர் மாதம் 8ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கவேண்டியுள்ளது!

தெருக்களிலும், அரச நிர்வாக மையங்கள் முன்பும், திணைக்களங்கள் முன்பாகவும் யாழ் குடா மக்களினதும், வடக்கு மக்களினதும் போராட்டங்கள் டிசெம்பர் எட்டாம் திகதியிலிருந்து தொடர நாம் செயற்படவேண்டும்!

நீங்கள் தொடர்ந்தும் எமது பகுதிகளில் வாழ விரும்பினால், இக்கருத்துக்களைப் பற்றியும், டிசெம்பர் 8 முதல் வெகுஜனப் போராட்டங்களை ஆரம்பித்து நடாத்தவேண்டிய செய்தியையும் சகலரும் அறியச் செய்யுங்கள்!! உங்களது பங்களிப்புக்கும், உதவிக்கும் ஆயத்தமாகுங்கள்!! இப்பிரச்சினைகள் எனது பகுதியில் இல்லைத்தானே என்ற சுத்த சுயநலநோக்கில் நீங்கள் செயற்பட்டால், நீங்கள் உண்மையில் வெறும் முட்டாள்கள் என்பதும், உங்களைப் போன்றவர்கள் பெருமெண்ணிக்கையில் இருந்தால், இலங்கைத் தமிழர்கள் ஓர் அழியும் சமூகம், அழியவேண்டிய சமூகம் என்பதும் அசைக்கமுடியாதபடி உறுதிப்படுத்தப்படும்!!

நன்றி அ.உதயகுமார்

-நிலவன்-

http://kathiravan.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D123/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் கருத்தில் எடுக்க வேண்டிய, முக்கியமான கட்டுரை.
நிலத்தடி நீரில் கலந்துள்ள, கழிவு எண்ணையை எப்படி நீக்குவது போன்ற....  கருத்துக்களை, வாசகர்களிடம் இருந்து எதிர் பார்க்கின்றோம்.
மேலும்... அதற்குரிய பணத்தை, அந்தக் கழிவு எண்ணையை கலக்க விட்ட... சுன்னாகம் மின் நிலையத்தில் இருந்து பெறப்படுவதற்குரிய... சட்ட நடவடிக்கைகளை சர்வேதேச நீதிமன்றின் மூலம் எடுக்க முடியுமா என்பதைப் பற்றியும்.... உங்கள் கருத்துக்கள் எதிர் பார்க்கப் படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் அவரசமாக கவனிக்கப்பட வேண்டிய விடயம்...

- கழிவு எண்ணைகளை  சேகாித்து recycle செய்ய முடியும்
- நிலத்தில் கழிவு எண்ணைகளை ஊற்றுவதை சட்ட ாீதியாக தடை செய்ய வேண்டும்.
- குறைந்தது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது சம்பந்தப்பட்ட பகுதிகளில் (எாிபொருள் நிலையங்கள் வாகன திாித்திடங்கள், மற்றும் கழிவு எண்ணைகள் வெளியேற்றப்படும் இடங்கள்) environmental test செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நிலம் மாசு பட்டிருந்தால் உாிமையாளாின் செலவில் அதை துப்பரவு செய்ய வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதிரியான அத்து மீறல்களை கட்டுப்படுத்த, பல்வேறு நிபுணர்களைக் கொண்ட மக்களிடம் விழிப்புணர்வு கொணர மாசுகட்டுபாட்டு வாரியமும், அதற்குரிய சட்டங்களும் இயற்றபட்டால்தான் இம்மாதியான அழிவுச் செயல்கள் அடங்கும்.

Link to comment
Share on other sites

முடிந்தளவில் இச் செய்தியை அனைத்து மட்டத்திலும் கொண்டு செல்லுங்கள் (பகிருங்கள்)

 
பாரிய அழிவின் விளிம்பில் யாழ்ப்பாணம் - posted in அரசியல் அலசல்: பாரிய அழிவின்...
YARL.COM

ஏன் இன்னும் மின் பிறப்பாக்கிகள் இயங்க வேண்டும். நீர் மின்சாரத்தை யாழிலும் வழங்கலாம் தானே? இந்த மின் பிறப்பாக்கிகள் ( water cooling system) நீரினால் அதிக கூடிய வெப்பத்தினை கட்டுப்படுத்தும் முறைமையைக் கொண்டிருந்தால் அந்த நீருடன் எண்ணை கசிய வாய்ப்பு உண்டு.ஆனால் இது ஒன்றும் சரி செய்ய முடியாத பிரச்சனையில்லை.இவ்வியந்திரங்கள் சுனாமியின் போது பிரித்தானிய அரசால் வழங்கப்பட்ட லிஸ்டர் மற்றும் ஊல்ஸ்லி வகையைச் சேர்ந்தவை என்றும் மேலதிகமாக பின்னர் லண்டனைச் சேர்ந்த தமிழர் ஒருவரால் சீனாவில் கொள்வனவு செய்யப்பட்டதுமாகிய இயந்திரங்கள் என்றும்  கேள்விப்பட்டிருக்கின்றேன்.எண்ணைக்கசிவை நிறுத்தமுடியாதவிடத்து உற்பத்தியாளர்களின் சேவையைப்பெற்றிருக்கமுடியும். கேள்விப்பட்டிருக்கின்றேன்.இவைகள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நேரங்களில் உபயோகிக்கலாம்.இலங்கையிலுள்ள ஐ நா மற்றும் தொண்டு அமைப்புகள் மூலம் உடனடி நிவாரணம் பெற முடியாதா?

 

Link to comment
Share on other sites

கழிவு எண்ணெய்யால் நஞ்சான நீர் நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

 
 

 

 

கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமக்கான நீதியைக் கோரி சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்திற்கு முன்பாக  ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

 

மேலும் நிலைமையை சீராக்க ஆபத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இன்று காலை 9.00 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் வட மாகாண சபையின் விவசாய மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பொ.ஜங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எஸ்.கஜதீபன், கே.சர்வேஸ்வரன், தமித்த்தேசிய முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

கழிவு ஒயில் கலப்பது சம்பந்தமாக அரசாங்கத்துடன் பேசுவது குறித்த மகஜரை நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனிடமும், வட மாகாண முதலமைச்சருக்கான மகஜரை விவசாய அமைச்சர் ஜங்கரநேசனிடமும், பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கான மகஜரை அவரது இணைப்பாளரிடமும் வழங்கினார்கள்.

  

சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து  கழிவொயில் பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் விடப்பட்டதால் உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளின் கீழ்வரும் பெருமளவான கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளது.

 

  

 தொடர்ந்தும்  யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் நிலத்தடி நீரூடன் கலந்து கழிவொயில் வேகமாக பரவி வருகிறது.

கழிவெண்ணெய் கலந்த இந்த நீரைப் பயன்படுத்துவோர் புற்றுநோய், மலட்டுத்தன்மை, பிறப்பில் குறைபாடு உட்பட உயிராபத்தை ஏற்படுத்தும் பல நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

 

இந்த நிலையில் நீதி கோரி பாதிக்கப்பட்ட மக்கள் இணைந்து மல்லாகம் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. நேற்று குறித்த வழக்கு மீதான விசாரணை இடம்பெற்றது.

  

இந்த நிலையில் தமக்கு விரைவில் நீதியைப் பெற்றுத்தரவேண்டும், பாதிப்புக்கு காரணமான நிறுவனங்கள் மீதுநடவடிக்கை எடுத்து அவற்றை வெளியேற்ற வேண்டும். பாதிப்புக்களை சீர் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115640/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.