Sign in to follow this  
தமிழ்சூரியன்

கு.வீராவின் கவிதை நூல் வெளியீடு.

Recommended Posts

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார்.

கவிஞர் கு.வீராவின் ‘கண்ணடிக்கும்காலம்’, ‘இரண்டாவது உயிர்’ எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

veera_kavithai_veliyedu_01.png

இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சண்முகலிங்கன் இதனைக் கூறினார்.

அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கு வீடு என்பதே இல்லை. துன்ப, துயரங்களை சந்திப்பவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். கு.வீராவினுடைய கவிதைகள் நம்பிக்கை தருவனவாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

veera_kavithai_veliyedu_03.png

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற்றுறை தலைவர் கே.ரீ.கணேசலிங்கன், வணிக, முகாமைத்தவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

veera_kavithai_veliyedu_02.png

கவிஞர் பாடலாசிரியர், நடிகர் என பல திறமைகளை கொண்ட கு.வீரா தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் நிலவரம் என்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலமும் பிரபல்யம் பெற்றிருந்தார். யுத்தத்தின் பின்னர் தடுப்பு முகாம் புனர்வாழ்வு என பல தடைகளையும் துன்பங்களையும் கடந்து வந்த கவிஞர் வீரா தற்போது தனது இரு கவிதை தொகுதி நூல்களை வெளியிட்டுள்ளார்.

veera_kavithai_veliyedu_04.png

veera_kavithai_randam_uyri_01.png

 

Share this post


Link to post
Share on other sites

10376099_10155171395670637_1135697618080

 

10922522_10155171395130637_6437608117264

 

10393658_10155171390325637_7791704384338

 

10917304_10155171390710637_1496733849822

 

10924796_10155171392175637_3977583942040

 

540431_10155171394280637_627779700670914

 

10923586_10155171394865637_1177226691212

 

நன்றி முகநூல்.

Share this post


Link to post
Share on other sites

இணைப்புக்கு நன்றி,

 

நமது ஊடகங்கள் பல வீரா அண்ணாவை மறந்திருக்கலாம்....! 


 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஆம். முகநூலில்   இவரைக் கண்டதே பெரு மகிழ்ச்சியாக  இருந்தது. இவர் தானா அந்த வீராண்ணா என்று ஒரு கணம்  தேட வேண்டியதாகிவிட்டது.

 

சிறந்த ஒரு குரல் வல்லமை உள்ள   அண்ணா.. வீராண்ணா.  அவர் கவிஞராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த வாழ்க்கையிலும் எல்லா வசந்தங்களை பெறவும் வாழ்த்துக்கள். :icon_idea:

 

ஏன் யாழ் கிட்டு   மாமாவையே இம்முறை மறந்துவிட்டது. அவரின் நினைவு நாள் 16ம் திகதி வந்து போனபோது.. மைத்திரி அரசியலில் மூழ்க்கிப் போய் கிடந்தார்கள். :rolleyes:

Share this post


Link to post
Share on other sites

வீரா அவர்கட்கு வண்க்கம், மீளெலன் என்பதில் எவ்வளவு துன்பங்கள் நிறைந்திருக்கும் என்பதை முள்ளிவாய்க்காலுக்குப் பின்னதான உங்களது வாழ்கை அனைவருக்கும் உணர்த்தும் என நம்புகிறேன். அப்துல் கலாமிடம் கேள்விகேட்ட கவிதைக்குச் சொந்தக்காரன் நீங்கள். அடிக்கடி நினைப்பதுண்டு உங்களுக்கு என்ன நடந்ததோ எங்குள்ளீர்கள் என. உங்களைப்பற்ரிய நற்செய்தி, சிலவேளை புதுவையரையும் எம்முடன் மீளவும் சேர்க்கும் எனும் நம்பிக்கையைத் தருகின்றது. உங்கள் இருபுத்தகங்களையும் நான் வாங்கிக் கொள்வதனால், விரைவில் உங்களின் கைப்பற்றி நிற்பேன்.

Share this post


Link to post
Share on other sites

உங்களைக் கண்டது மிக்க மகிழ்ச்சி வீரா அவர்களே! தொலைந்துபோனவை அல்லது இழந்துபோனவை பல. என்றாலும் அனைத்தையும் கடந்து மீளுவோம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. நலமோடு வாழ வேண்டுகிறேன். எங்கே இருக்கிறீர்களோ என்று எண்ணுவதுண்டு. உங்கள் கவிதைகள் கிடைக்குமாயின் மகிழ்ச்சி. 

 

இணைப்புக்கு நன்றி!

Share this post


Link to post
Share on other sites

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • சீனாவிடமிருந்து பிற நாடுகள் ஆர்டர் செய்யும் மருத்துவ உபகரணங்களை அதிகப் பணம் கொடுத்து அமெரிக்கா தட்டிப் பறிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் இந்தச் சூழலில் சர்வதேச பதற்றமும் பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக அளவில் வைரஸ் தொற்று அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும் அடுத்தடுத்த இடங்களில் ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் போதிய மருத்துவப் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்புப் பொருள்கள் இல்லாமலும் வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமலும் அரசுகள் திணறி வருகின்றன.   ஜெர்மனி AP அதிலும் குறிப்பாக முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவிலும் மருந்துகளுக்கும் பாதுகாப்புக் கவசங்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, தங்கள் பகை அனைத்தையும் மறந்து ரஷ்யா, சீனா போன்ற நாடுகளிடமும் இந்தியா, தென்கொரியா போன்ற நட்பு நாடுகளிடமும் உதவி கேட்டு வருகிறார் அதிபர் ட்ரம்ப். கொரோனாவிலிருந்து மீண்டுவிட்ட சீனா தற்போது அதிகளவில் முகமூடிகள், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள் போன்ற அனைத்து மருத்துவ உபகரணங்களையும் தயாரித்துப் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது   அப்படி சீனாவிடம் 2 லட்சம் மாஸ்க்குகள் ஆர்டர் செய்துள்ளது ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள். இதை அறிந்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொடுத்த பணத்தைவிட அதிகளவு பணம் கொடுத்து அந்த மாஸ்க்குகளைப் பறிமுதல் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ``சீனா தயாரித்த மாஸ்க்குகள் தாய்லாந்து வழியாக ஜெர்மனி வரவிருந்தன. இதை அறிந்த அமெரிக்கா, விமானம் தாய்லாந்தில் தரையிறங்கியதும் அனைத்து மாஸ்க்குகளையும் அதிக விலைகொடுத்து வாங்கியது. அதனால் தாய்லாந்திலிருந்து ஜெர்மனி செல்லவேண்டிய விமானம் அங்கிருந்து அமெரிக்காவுக்குப் பறந்தது. இதை நவீன திருட்டு, கடல் கொள்ளையாகவே நாங்கள் கருதுகிறோம். அமெரிக்காவின் நட்பு நாடான எங்களிடமே அவர்கள் இப்படி நடந்துகொள்கிறார்கள். உலகளாவிய நெருக்கடிக் காலத்தில்கூட இத்தகைய நடவடிக்கை மூலம் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது" என ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் ஆண்ட்ரியாஸ் கீசல் குற்றம் சுமத்தியுள்ளார் அதேபோல் பாரிஸ் பிராந்தியத் தலைவர் வலேரி பெக்ரெஸ் கூறியுள்ள குற்றச்சாட்டில், `நாங்கள் ஆர்டர் கொடுத்துள்ள முகமூடிகளுக்குப் பாதி விலை கொடுத்து வாங்குகிறோம். நாங்கள் வாங்கும் பொருள்கள் தரமாக இருக்க வேண்டும் அதனால் பொருளைக் கண்ணில் பார்த்துவிட்டு மீது பணத்தைக் கொடுக்கிறோம். ஆனால் அமெரிக்கா, நாங்கள் ஆர்டர் கொடுத்திருந்த மாஸ்க்குகளைப் பார்க்காமல் மொத்த விலை கொடுத்து ஒரே நேரத்தில் வாங்கிவிட்டது. உலகின் துயருக்குப் பின்னாலும் அமெரிக்கா லாபம் பார்க்க நினைக்கிறது’ எனக் கடுமையாகச் சாடியுள்ளார்.   ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டது அமெரிக்க அதிகாரிகளா, பிராந்திய நிறுவனங்களா அல்லது தனியார் நபர்களா என எந்தத் தகவலையும் யாரும் தெரிவிக்கவில்லை. மேலும், இதுபோன்ற செயல்களில் நிச்சயம் அமெரிக்கா ஈடுபடவில்லை. இதை எப்போதும் செய்யவும் செய்யாது. இந்த தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று பாரிஸில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.   https://www.vikatan.com/news/international/germany-accused-the-us-of-taking-face-masks-already-ordered?artfrm=v3  
    • கொரோனா  பரிசோதனை உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்க டக்ளஸ்  தீர்மானம் April 7, 2020 கொரோனா தொற்று நோயை பரிசோதிக்கும் பி.சி.ஆர் உபகரணங்களை சுகாதார துறையினருக்கு வழங்குவதற்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள நாரா எனப்படும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவகம், நக்டா எனப்படும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவற்றிடம்  உள்ள பி.சி.ஆர் உபகரணங்களை கொரோனா தொற்று நோயை பரிசோதிப்பதற்கு சுகாதார துறையினருக்கு உடனடியாக வழங்குமாறு குறித்த இரண்டு நிறுவனங்களின் தலைவர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார். அத்துடன் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் கீழ் உள்ள புத்தளம் கல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள நாரா நிறுவனத்தின அலுவலகம் மற்றும் விடுதிகளையும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களென சந்தேகிக்கப்படுபவர்களை தங்கவைப்பதற்கான தனிமைப்படுத்தும் மையம் அமைப்பதற்காக தற்காலிகமாக வழங்குமாறும் குறித்த நிறுவனத்தின் தலைவர் நவரட்ணராஜாவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் கொறோனா தொற்றினை உறுதிப்படுத்துவதற்கு தேவையான பி.சி.ஆர். உபகரணங்கள் தேவை அதிகரித்துள்ளமையினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்குறிப்பிடப்பட்ட தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #கொரோனா  #பரிசோதனை #சுகாதாரதுறை #டக்ளஸ் #தீர்மானம்   http://globaltamilnews.net/2020/140222/
    • இது நான் அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன், project camp இல் இருக்கும் போது, முட்டையை இப்படி  அவித்து வைத்திருப்பார்கள். 4000 பேருக்கு மேல் உள்ள camp இல் இப்படி செய்வது சுலபம் வீட்டில் இப்படி இன்னும் செய்யவில்லை, செய்து பார்க்கனும்