Jump to content

அப்பாவின் பிள்ளை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரவு வேலைக்குப்போய் வந்து தன் தனிமை வாழ்க்கைக் கதையை தலையணையோடு பகிர்ந்துவிட்டு போர்வைக்குள் புகுந்த குமரன், பத்து மணி நேர வேலை அலுப்பின் அசதியை நித்திரையில் கரைத்துக்கொண்டு இருந்தான்.அந்த நேரம்பார்த்து சிவபூசையில் கரடி புகுந்தால்போல் அவன் தொலைபேசியின் அழைப்பு "நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா" என்ற பாடலுடன் ஒலித்தது.தூக்க அசதியில் கைபேசியை கையில் எடுத்து ஒருவாறாகாத் தடவி இணைப்பை காதுக்குள் வைத்தான் மறு முனையில் அவன் தாய் ஊரில் இருந்து "தம்பி என்ன நித்திரயா"?எனக் கேட்கவே "ஓம் அம்மா சொல்லன" என்று தன் தூக்க அலுப்பிலும் தன் பாசத்தை அன்போடு பகிர்ந்தான். தாயும் "அப்பன் அப்பாட துவசமடா இன்டைக்கு விரதமா இரையா" என்றவே அவனுக்கு சுருக்கென்று கோவம் வந்தது "இங்க என்ணண்டு என? வேலைக்கு போரதா இதப்பாக்குறதா" என அம்மாவைக்கடிந்தான். அவன் கோவத்திலும் ஒரு அறிவூட்டல் இருந்தது அவன் சிறு வயதாக இருக்கும் போதே குமரன் அப்பா, குமரன் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார் அவர் இறந்து இரண்டு மூன்று நாட்களாய் குமரன் வாயில் பச்சத்தண்ணி கூடப் படவில்லை ஆனாலும் ஒரு திவச வீடொன்றில் வைத்து குமரனுக்கு அப்பா ஒரு விடயத்த சொல்லி இருந்தார் ஆண்டுகள் கடந்தும் அம்மாவின் கதையை கேட்ட பிறகு அப்பாவின் வார்தைகள் நினைவுக்கு வந்தது "தம்பி பிறந்தவன் எல்லாம் ஒருநாளைக்கு சாவாங்கள்.செத்தாப்பிறகு அவங்கள் வச்சு நாங்க உளைக்க கூடாது. அவங்கள் வாழ்கையில நடத்தின நல்லத பாடமா எடுத்து நாங்க வாழப்பழகவேணும். அதவிட்டுட்டு அவங்கள் உயிரோட இருக்ககேக்க உவத்திரவம் குடுக்கிறது செத்தாபிறகு சாப்பிடாம விரதம் இருக்குறது. பத்தாததுக்கு ஐய்யரக் கூப்பிட்டு அவருக்கு அரிசி சாமான் குடுக்கிறது. இதுல எதுவுமே இல்லையப்பன் செத்தவனுக்கு ஒன்றும் போச்சேராது . ஐயர் மட்டும் பேக்காட்டி உளைச்சுட்டு போவான் செத்தவன்ட குடும்பம் கஸ்ரத்திலயே தான் இருக்கும். நீ இப்படி எனக்கு எல்லாம் செய்யாத. நீ பசி கிடக்குறது எனக்கு பிடிக்காது " என்ற அப்பாவின் அந்தநாள் வார்த்தை நினைவுக்கு வரவே அவன் அம்மா விடம் "சும்மா விரதமிருந்து வருத்தத்த தேடாம சாபிடுங்கோ என்ர அப்பாக்கு ஆரும் சாப்பிடாமா இருந்த பிடிக்காதெல்லா"எனத் தாயிடம் கூரவே தாய் " அப்படியே கொப்பர போல இரு"என பேசி விட்டு தொலை பேசியை துண்டித்தாள் தாயின் நினைவு படுத்தலை அவனால் மறக்க முடியவில்லை தூக்கத்தில் எழுந்து பையில் இருந்த அப்பாவின் புகைப்படத்தைப் பார்தபோது அவர் ஆமிக்காரன் அடிச்ச செல்குண்டடிபட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த காட்சி நினைவு வந்தது. அக்கணமே குமரன். அநியாயமாகா உயிர் விட்ட அப்பாவை நினைத்து கண்கலங்கிப் புகைப்படத்தை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு மீண்டும் அந்த வீரமான ஊர் எப்ப வரும் என்ற கேள்வியோடு தூக்கத்திற்காய் சரிந்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சிக்கு பாராட்டுக்கள்.  பந்தி பிரித்து எழு தினால்  இன்னும் அழகாய்  இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்க நன்றிகள் 

Link to comment
Share on other sites

தொடருங்கள் ..பந்தி பிரிந்து  எழுதுங்கள் தீபன் .. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயந்திர வாழ்க்கையில் அப்பா அம்மாவின் திவசங்கள் வருவதே தெரிவதில்லை.

ஆனாலும் ஒவ்வொரு நாளும் அவர்களுடைய நினைவுகள் மனதைத் தொட்டுச் செல்லும்.

தொடர்ந்தும் எழுதுங்கள் கீர்த்திதீபன்

Link to comment
Share on other sites

புதிய வரவு. கதையின் நகர்வு ஒரு சிறுகதைக்கான களத்தை கொண்டுள்ளது. பாராட்டுக்கள் கீர்த்திதீபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரவு வேலைக்குப்போய் வந்து தன் தனிமை வாழ்க்கைக் கதையை தலையணையோடு பகிர்ந்துவிட்டு போர்வைக்குள் புகுந்த குமரன், பத்து மணி நேர வேலை அலுப்பின் அசதியை நித்திரையில் கரைத்துக்கொண்டு இருந்தான்.

 

அந்த நேரம்பார்த்து சிவபூசையில் கரடி புகுந்தால்போல் அவன் தொலைபேசியின் அழைப்பு "நித்திரையா தமிழா நிமிர்ந்து பாரடா" என்ற பாடலுடன் ஒலித்தது.தூக்க அசதியில் கைபேசியை கையில் எடுத்து ஒருவாறாகாத் தடவி இணைப்பை காதுக்குள் வைத்தான் மறு முனையில் அவன் தாய் ஊரில் இருந்து "தம்பி என்ன நித்திரயா"?எனக் கேட்கவே "ஓம் அம்மா சொல்லன" என்று தன் தூக்க அலுப்பிலும் தன் பாசத்தை அன்போடு பகிர்ந்தான். தாயும் "அப்பன் அப்பாட துவசமடா இன்டைக்கு விரதமா இரையா" என்றவே அவனுக்கு சுருக்கென்று கோவம் வந்தது "இங்க என்ணண்டு என? வேலைக்கு போரதா இதப்பாக்குறதா" என அம்மாவைக்கடிந்தான். அவன் கோவத்திலும் ஒரு அறிவூட்டல் இருந்தது .

 

அவன் சிறு வயதாக இருக்கும் போதே குமரன் அப்பா, குமரன் மீது அளவற்ற பாசம் வைத்திருந்தார் அவர் இறந்து இரண்டு மூன்று நாட்களாய் குமரன் வாயில் பச்சத்தண்ணி கூடப் படவில்லை ஆனாலும் ஒரு திவச வீடொன்றில் வைத்து குமரனுக்கு அப்பா ஒரு விடயத்த சொல்லி இருந்தார் ஆண்டுகள் கடந்தும் அம்மாவின் கதையை கேட்ட பிறகு அப்பாவின் வார்தைகள் நினைவுக்கு வந்தது. 

 

"தம்பி பிறந்தவன் எல்லாம் ஒருநாளைக்கு சாவாங்கள்.செத்தாப்பிறகு அவங்கள் வச்சு நாங்க உளைக்க கூடாது. அவங்கள் வாழ்கையில நடத்தின நல்லத பாடமா எடுத்து நாங்க வாழப்பழகவேணும். அதவிட்டுட்டு அவங்கள் உயிரோட இருக்ககேக்க உவத்திரவம் குடுக்கிறது செத்தாபிறகு சாப்பிடாம விரதம் இருக்குறது. பத்தாததுக்கு ஐய்யரக் கூப்பிட்டு அவருக்கு அரிசி சாமான் குடுக்கிறது. இதுல எதுவுமே இல்லையப்பன் செத்தவனுக்கு ஒன்றும் போச்சேராது . ஐயர் மட்டும் பேக்காட்டி உளைச்சுட்டு போவான் செத்தவன்ட குடும்பம் கஸ்ரத்திலயே தான் இருக்கும். நீ இப்படி எனக்கு எல்லாம் செய்யாத. நீ பசி கிடக்குறது எனக்கு பிடிக்காது " என்ற அப்பாவின் அந்தநாள் வார்த்தை நினைவுக்கு வரவே அவன் அம்மா விடம் "சும்மா விரதமிருந்து வருத்தத்த தேடாம சாபிடுங்கோ என்ர அப்பாக்கு ஆரும் சாப்பிடாமா இருந்த பிடிக்காதெல்லா"எனத் தாயிடம் கூரவே தாய் " அப்படியே கொப்பர போல இரு"என பேசி விட்டு தொலை பேசியை துண்டித்தாள்.

 

தாயின் நினைவு படுத்தலை அவனால் மறக்க முடியவில்லை தூக்கத்தில் எழுந்து பையில் இருந்த அப்பாவின் புகைப்படத்தைப் பார்தபோது அவர் ஆமிக்காரன் அடிச்ச செல்குண்டடிபட்டு இரத்த வெள்ளத்தில் இருந்த காட்சி நினைவு வந்தது. அக்கணமே குமரன். அநியாயமாகா உயிர் விட்ட அப்பாவை நினைத்து கண்கலங்கிப் புகைப்படத்தை நெஞ்சில் சாய்த்துக்கொண்டு மீண்டும் அந்த வீரமான ஊர் எப்ப வரும் என்ற கேள்வியோடு தூக்கத்திற்காய் சரிந்தான்.

 

நல்லதொரு கரு.

அதைச்சொன்ன விதமும்

அதற்குள் எமது இனத்தின் அவலங்களை கொண்டு வந்ததும் பாராட்டுக்குரியன.

தொடருங்கள்..

உங்கள் போன்ற இளம் தலைமுறையினரின் எழுத்துக்கள் தேவையான காலப்பகுதி...

வாழ்க  வளமுடன்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.