Jump to content

'எதிர்காலத்தில் இண்டர்நெட் காணாமல் போகும்!' - கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும் நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி இருக்கும்? முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக் ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திருக்கிறார்.

ஆனால் கவலை வேண்டாம், ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில் இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம் வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

google%20boss.jpg

நீக்கமற நிறைந்திருப்பது என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் டாவோசில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மாநாட்டில் , 'டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலம்' எனும் தலைப்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய கூகுள் செயல் தலைவர் எரிக் ஸ்கிமிட்டிடம் , எதிர்காலத்தில் இணையம் எப்படி இருக்கும்? என்று கேட்கப்பட்டது.

இணையம் மறைந்து போய்விடும் என்று சொல்வேன் என்று இதற்கு பதில் சொன்ன ஸ்கிமிட், மேலும் கூறுகையில், "எண்ணற்ற ஐபி முகவரிகள் உருவாகி இருக்கும். எண்ணற்ற சாதனங்கள், சென்சார்க்ள், நீங்கள் அணிந்திருக்கும் சாதனங்கள் என எல்லாமே அவற்றை நீங்கள் உணராத அளவுக்கு இருக்கும்.

இந்த சாதனங்கள் எல்லாம் உங்களுடனேயே எல்லா நேரங்களிலும் இருக்கும்.

கற்பனை செய்து பாருங்கள்... நீங்கள் ஒரு அறைக்குள் நுழைகிறீர்கள். அந்த அறை உங்களை உணர்ந்து கொள்கிறது. உங்கள் அனுமதியுடன் அறையில் உள்ள பொருட்களுடன் நீங்கள் தொடர்பு கொள்கிறீர்கள். இது போன்ற சூழல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். மிகவும் பிரத்யேகமான, தனிப்பட்ட தன்மை கொண்ட சுவாரஸ்யமான உலகம் உருவாகலாம்.

இது போன்ற தொழில்நுட்ப முன்னேற்றம் புதிய அலை வேலைவாய்ப்புகளை உருவாக்கும். தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை பறித்துவிடும் என்ற கவலையே வேண்டாம்"  என்றார்.

இதே விவாதத்தில் ஃபேஸ்புக் நிறுவன தலைமை அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்கும் கலந்து கொண்டு பேசினார். அவரும் தொழில்நுட்பம் புதிய வேலை வாய்ப்புக்ளை உருவாக்கும் அழிக்காது என்று கூறினார்.

இணையம் மக்களின் குரலாக இருப்பதாக கூறிய அவர்,  வரும் காலத்தில் இணையத்தால் ,மேலும் மாற்றங்கள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

யாஹூ நிறுவன தலைமை அதிகாரி மரிசா மெயர் பேசும்போது,  தனிப்பட்ட இணையம் மேம்பட்டதாக இருக்கும் என்றும், பயனாளிகள் தங்கள் தகவல்களை தாங்களே கட்டுப்படுத்தும் நிலை வரும் என்றும்   கூறினார்.

 

http://news.vikatan.com/article.php?module=news&aid=37736

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித மூளையின் உணர்வுகளை ரியல் டைமில்(Real Time) உணரும் சில்லுகள் தொகுபிற்கு IP முகவரியும் கொடுத்துவிட்டால், மனிதனும் மற்ற ஜட எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம் என்ற நிலை வரும் என்பதுபோல் இவரின் கூற்று தெரிகிறது. :lol::)

Link to comment
Share on other sites

இங்கு கனடாவில் முக்கியமாக ரொரனடோவில் கொஞ்சம் கொஞ்சமாக Internet காணாமல் போகின்றது. அநேகமான இடங்களில் Wifi வந்து விட்டது. முக்கியமான உணவு விடுதிகளில் இருந்து பிள்ளைகளின் நீச்சல் வகுப்பு, பல் சிகிச்சை நிலையங்கள் என்று எங்கும் Wifi பரவி கிடக்குது. ஒரு Tablet போதும் இப்ப..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
    • முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு  தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்தனர்.  மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார்.  Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள்.  இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்:  alua camp de mar  நன்றி. 
    • ரணிலுக்கு... அழகிகளில் நாட்டம் இல்லை என்று கேள்விப் பட்டோம். 🤣 நீங்கள் இப்பிடி சொல்கிறீர்கள். வேணுமென்றால்... @விசுகுவிடம் கேட்டுப் பாருங்கள். 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.