Jump to content

இண்டர்நெட் இல்லாமல் 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தும் புதிய சிம்! - இத்தாலிய மொபைல் நிறுவனம் சாதனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Whatsim-220115-200-tech.jpg

இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்-ஆப் ஒரு தகவல் தொடர்பு முறையாகவே மாறிவிட்டது. ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்ட பிறகு ஒவ்வொருவரும் 'வாட்ஸ்-ஆப்'பை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்த முடிவதில்லை. ஏனென்றால், டேட்டா கனெக்ஷன் வவுச்சர் லிமிட் தீர்ந்துவிட்ட பிறகு மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. உலகம் முழுவதும் படுபாப்புலராகிவிட்ட இந்த வாட்ஸ்-ஆப்பை இண்டர்நெட் இல்லாமலேயே பயன்படுத்தும் வகையில் புதிய சிம்மை தயாரித்து அசத்தியிருக்கிறது இத்தாலியை சேர்ந்த ஒரு மொபைல் நிறுவனம்.

   

இந்த சிம்மை பயன்படுத்தி வை-ஃபை, டேட்டா கனெக்ஷன், ரோமிங் இல்லாமல் மெசேஜை அனுப்பலாம். இந்த சிம்மிற்கு 'வாட்ஸிம்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த அபூர்வ சிம்மை 'ஜீரோமொபைல்' நிறுவனத்தின் இயக்குனர் மானுவேல் ஜனிலியா கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த சிம் எப்படி வேலை செய்கிறது?

'வாட்ஸிம்' உலகம் முழுவதிலுமுள்ள 150 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட மொபைல் ஆபரேட்டர்களுடன் இணைந்து சேவையை வழங்குகிறது. நீங்கள் ஒரு நாட்டிலிருந்து வேறு நாட்டிற்கு சென்றாலும் உடனடியாக சர்வீஸ் புரொவைடரை ஆட்டோமேட்டிக்காகவே மாற்றிக் கொள்கிறது 'வாட்ஸிம்'. ஒருவேளை அருகில் ஏதாவது ஒரு நெட்வொர்க்கில் 'சிக்னல்' நன்றாக இருந்தால் தானாகவே அந்த நெட்வொர்க்கில் 'கனெக்ட்' ஆகிவிடும். இந்த சிம் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அதைவிட, அவர்கள் தங்களுக்கு அன்பானவர்களுடன் எந்த தடையும் இல்லாமல் 'வாட்ஸ்-ஆப்'பில் எப்போதும் இணைந்திருக்க முடியும். இதற்கு எந்த ரோமிங் கட்டணங்களும் கிடையாது என்பது கூடுதல் 'பெனிபிட்'.

'வாட்ஸிம்' வாங்க எவ்வளவு செலவாகும்?

இந்த சிம்மின் விலை வெளிநாட்டு பண மதிப்பில் 10 பவுண்டுகள் செலவாகும். அதாவது, இந்திய பண மதிப்பில் ரூ.714. இது ஒரு மாதத்திற்கு மட்டுமல்ல, வருடம் முழுவதும் உலகெங்கிலும் உள்ள நண்பர்களுடன் 'சாட்' செய்து மகிழலாம். 'வாட்ஸிம்'முக்கு மாதாந்திர கட்டணங்களோ, பிக்ஸட் கட்டணங்களோ, எதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல இது ஒருபோதும் எக்ஸ்பைரி ஆகவே ஆகாது.

போட்டோ, வீடியோ, பாடல்களை இலவசமாக அனுப்ப முடியுமா?

மெசேஜை போல மல்டிமீடியா கண்டென்ட்டு (போட்டோ, வீடியோ, ஆடியோ) பைல்களை இலவசமாக இதில் அனுப்ப முடியாது. அதற்கு தனியாக நாம் ரீசார்ஜ் செய்துதான் ஆக வேண்டும். எனினும், சில கிரெடிட் பாயிண்டுகளை கலெக்ட் செய்து கொண்டால் அதற்கு ஏற்றவாறு இலவசமாக அனுப்ப முடியும். இது ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடும். குறிப்பாக, இந்தியாவில் 150 கிரெடிட்டுகளை கலெக்ட் செய்தால் போட்டோக்களையும், 600 கிரெடிட்டுகளை பெற்றால் வீடியோ மெசேஜ்களையும், 30 கிரெடிட்டுகளை பெற்றால் வாய்ஸ் மெசேஜ்களையும் இலவசமாக அனுப்பலாம். ஆனால், கான்டாக்ட் மற்றும் லொகேஷன் ஷேரிங் செய்வதற்கு எந்த கட்டணமும் இல்லை. அதற்கு கிரெடிட்டுகளும் தேவையில்லை.

http://seithy.com/breifNews.php?newsID=125091&category=CommonNews&language=tamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.