Jump to content

குந்திதேவி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குந்திதேவி

விஜயபத்மா

download-2.jpg

மனம் நிலை கொள்ளாமல் தவித்தது குந்திக்கு! பருவத்தின் மொத்த செழுமையையும் சுமந்திருக்கும் குந்தியின் உடலை வெம்மை சூழ்ந்தது போல் உணர்ந்தாள் !பதினெட்டு வயதில், உள்ள இளம்பெண்ணுக்கு இயல்பாகவே காமத்தின் மேல் மோகம் மனதிற்குள் ரகசிய உணர்வாக தளும்பிக்கொண்டிருக்கும் ..சரி தவறு எதுவும் சரியாக புரிபடாத அப்பருவத்தில் அவளுக்கு ஒரு ஆணின் அருகாமை என்பது உலகின் மிகப்பெரிய சுகம். . தன் அந்தரங்க பணிப்பெண்ணை அழைத்து ,” ஏய் நான் செய்வது சரியா தவறா என்று புரியவில்லை .. ஆனால் என் உடல் என்னை மீறி தகிக்க துவங்கி விட்டது என்ன செய்ய ?” என்று கேட்கும்போதே குந்தியின் குரல் சன்னமாகி, யாசிக்கும் பாவனையில் அப்பாவியாக பணிப்பெண்ணை நோக்கினாள்.

பணிப்பெண் வாசனை தைலத்தினை குந்தியின் உடலில் தேய்த்து பிடித்து விட்டபடி , “தேவி , சரி தவறு என்று எதுவும் இல்லை … ஒரு பெண்ணுக்கு தான் விரும்பும் ஆணுடன் உறவு கொள்ள முழு சுதந்திரமும் உண்டு .. இதற்கு யாரும் தடை சொல்ல இயலாது …உங்ககளுக்கு துர்வாச முனிவர் அருளிய ,” மந்திரம் ” உலகில் எவருக்கும் கிடைக்காத ஒரு வரம் . பிடிக்காத ஒரு ஆணுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள நிர்ப்பந்தம் ஏற்படும் பெண்கள் பாவப்பட்டவர்கள் ..நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி .. உங்கள் செய்கையில் எதுவும் தவறு இருப்பதாக தெரிவில்லை தேவி ” என்று கூற குந்திக்கு முகம் பிரகாசமானது ..

யமுனை நதிக்கரையிலுள்ள, மிக செழுமையான “மதுரா ” நகரின் யாதவக்குல குழு ஆட்சி முறையின் தலைவன் சூரசெணனின் மகள் பிரதை,”குந்தி போஜன் எனும் மன்னனால் தத்தெடுக்கப்பட்டு “குந்தி ” என்ற பெயரிட்டு மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள் .குந்தி போஜனின் இன்னொரு மகன் கிருஷ்ணரின் தந்தை வாசுதேவன் . பருவ வயதின் மொத்த செழுமையும் உடையவளாக குந்தி காணப்பட்டாள். சமீபகாலமாக அவளது தந்தையும் ,தமையனும் குந்திக்கு சுயம்வரம் நடத்தி திருமணம் செய்ய வேண்டும் என்று பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தனர் . இதை குந்தியின் அந்தபுர பணிப்பெண்கள் கேட்டு வந்து சொன்னார்கள் . இச்செய்தி குந்திக்கு மகிழ்ச்சியானாலும் ,தான் விரும்பும்படியான ஆண் சுயம்வரத்திற்கு வருவானா ? மனம் விரும்பாத ஒருத்தனை கணவனாக்கி கொண்டு அவனுடன் தன்னை இணைத்து கொள்வது என்பது எப்படி சாத்தியம் என்று அவளுக்கு குழப்பமாகவே இருந்து வந்தது .

இக்காலகட்டத்தில் அரண்மனைக்கு விஜயம் செய்த “துர்வாச முனிவரை மிகவும் அன்பாக வரவேற்று அவர் தங்கியிருந்த நாட்களில் பணிப்பெண்களை அனுமதிக்காமல் அவருக்கு அத்தனை சேவைகளையும் குந்தி தானே செய்தாள் . இதில் மிகவும் மகிழ்ந்த துர்வாசர் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று குந்தியை கேட்க , குந்தி தன் திருமணம் குறித்த தன் குழப்பத்தை தெரிவித்தாள் . உடனே துர்வாசர் அவளை அருகில் அழைத்து அவள் காதில் ஒரு மந்திரத்தை ரகசியமாக சொல்லி இதை நீ விரும்பும் ஆணை மனதில் நினைத்து இம்மந்திரத்தை சொன்னால் அவன் உடனே உன்னருகில் வந்து , உன்னுடன் நீ திருப்தி அடையும் வரையிலும் உறவு கொண்டு , அந்த மகிழ்ச்சியின் அடையாளமாக ஒரு குழந்தையையும் கொடுப்பான் என்று கூறினார் .

துர்வாசர் சென்ற பிறகு குந்திக்கு தினமும் இரவில் மந்திரத்தை சொல்லி அது நடைபெறுகிறதா என்று பார்க்கும் ஆவல் துளிர்த்து கொண்டே இருந்தது .. ஆனாலும் இயல்பாகவே பெண்களுக்கு ஏற்படும் தயக்கம் காரணமாக அவள் அதை உச்சரிக்கவேயில்லை .இன்று ஏனோ மனமும் உடலும் ஒரு இன்பத்தை தேடி ஏங்குவது அவளால் தவிர்க்க முடியாத உணர்வாக இருந்தது. மாலையில் அந்தப்புர சாளரத்தின் அருகேயுள்ள சாய்வு நாற்காலியில் படுத்தபடி எதையோ குந்தி யோசித்து கொண்டிருந்தாள் .அவள் மனம் முழுக்க காதலுணர்வு நிரம்பியிருக்க தனக்குள்ளே சிரித்து கொண்டிருந்தாள் .

படுத்திருந்தவள் முகத்தில் மாலையில் மறையும் சூரியனின் பொன்னிறக்கதிர்கள் , அரண்மனையின் சாளரத்தின் வழியே தங்கபுள்ளிகளாக மிதந்து வந்து விழுந்தது .. அக்கதிர்களை தன் கைகளால் பிடிக்க அவள் முயற்சிக்க அது சிக்காமல் நழுவியது . அதைக்கண்டு சிரித்த பணிப்பெண்கள் ,” தேவி ,, என்ன மந்திரத்தை சொல்லி கட்டிலில் கட்டிப்போடப்போகிரீர்களா சூரியனை ? என்று கிண்டல் செய்தனர். குந்திக்கு நாணத்தில் முகம் சிவந்தது …இரவு படுக்கைக்கு போகும் முன் மறுபடி தாங்க இயலாத காமஉணர்வு தகிக்க குந்தி பணிப்பெண்ணிடம் தான் மந்திரத்தை பிரயோகித்து இன்றிரவு சூரியனை அழைக்க இருக்கிறேன். இதை நான் செய்யலமா என்று கேட்டாள் .அவளது கேள்வியில் செய்யவேண்டும் என்ற ஆவலே அதிகம் இருந்தது. பணிப்பெண் அதில் தவறு இல்லை என்று சொன்னாலும் கூட குந்திக்கு மந்திரத்தை உச்சரிக்கும் துணிவு வரவில்லை. குழப்ப மனநிலையிலேயே படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்த குந்தி தன்னையறியாமல் தூங்கி போனாள் .

ஆனால் அவள் நினைவுகள் கனவாக வருவதை அவளால் தவிர்க்க இயலவில்லை .. அவள் கனவில் மிக அழகான ஒரு ஆண் வந்து நீயாக கூப்பிடுவாய் என்று காத்திருக்கிறேன் குந்தி என்று சொல்ல, அவனது தேஜசும், பொன்னிற உடைகளும் கண்டு வெட்கத்துடன் நீங்கள் யார் என்று கேட்க அவன் நான் “சூரியன் நீ மந்திரத்தை சொன்னால் வருவேன் என்று கூறி மறைகிறான் .. குந்தி மறுபடி அவனைப்பார்க்கும் ஆவலுடன் தூக்க கலக்கத்தில் அவளறியாமல் அவள் மந்திரத்தை சூரியனை நினைத்து உச்சரித்தாள்

தூங்கி கொண்டிருந்த குந்தியின் முகத்தில் இளஞ்சூட்டில் ஒரு மயிலறகு மென்மையாக படர்ந்தது போல் இருந்தது . தூக்க கலக்கத்தில் இனிமையான அந்த இறகின் உணர்வு அவளுக்கு பிடித்திருந்தது . அந்த உணர்வுக்கு ஏதுவாக தன் முகத்தை திருப்பி வைத்து கொண்டாள் . மெல்ல அந்த இறகு உணர்வு மாறி விரல்கள் முகத்தில் கோலமிடுவது போல் கூச்ச உணர்வு வந்தது .. திடுக்கிட்டு விழித்து பார்க்க அந்த இரவை மீறிய பிரகாசத்துடன் ஒரு அழகிய ஆண்மகன் அவளருகில் அமர்ந்து கொண்டிருந்தான். திடுக்கென்ற பய உணர்வில் வாயடைத்து போய் அவனையே விழித்து பார்த்தாள் .

“என்னை கூப்பிட்டு விட்டு நீ உறங்கி கொண்டிருந்தால் எப்படி குந்தி ?” குனிந்து அவள் காதருகில் அவன் கிசுகிசுத்தான் . ஆணின் அருகாமையே அறிந்திருந்த அந்த இளம்பெண் குந்திக்கு அவனின் செயல் பிடித்தும் இருந்தது . மறுக்கவும் தோன்றியது ..ஆனால் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் இன்னமும் பிரமையுடன் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவளின் திகைப்பும் , அச்சமும் அவன் முகத்தில் புன்முறுவலை வரவழைத்தது ..

” என்ன திகைக்கிறாய் குந்தி , நான் தான் சூரியன் .. நீ அன்புடன் அழைத்ததால் வந்தேன் ..இது கனவல்ல ..” என்று சொல்லி மீண்டும் சிரித்தான் .

படுத்திருந்த குந்தி சட்டென்று எழுந்து படுக்கையில் கையூன்றி அமர்ந்து ,” இல்லை நான் மந்திரம் வேலை செய்கிறதா என்று சோதித்து பார்க்கவே நினைத்தேன் ” என்று திணறி திணறி சொன்ன குந்தியையே கூர்ந்து பார்த்தான் சூரியன் . குந்தியின் கண்களும் அவளையறியாமல் அவன் கண்களுக்குள் முகிழ்ந்தது .. அந்த இரவும் , அவன் மேலிருந்து புறப்பட்ட ஆணின் வாசமும் , வேகமாக எழுந்து உட்கார்ந்ததில் அவன் நெஞ்சில் மோதி திரும்பிய மார்பின் உரசலும் அவள் தேகத்தின் தேவையை அதிகரித்தன .

” குந்தி எதுவானாலும் உன் விருப்பம்தான் .இந்த இரவு உன்னுள் தகிக்கும் காமத்தீயை குளிர்விக்கும் இனிமையான இரவாக அமையவேண்டுமானால் நான் அதை நீ விரும்பும் வரை நிறைவேற்றுகிறேன்.. இல்லையென்றால் விடை பெறுகிறேன் .என்ன சொல்கிறாய் ? ம் ” என்றபடி அவள் காதருகில் தன் உள்ளங்கையினை வைத்து கழுத்தருகில் உள்ள பூனை மயிர்களை நீவி விட்டான் . தங்க நிறத்தில் மின்னும் அவனது விரிந்த மார்பும் அவள் காதருகில் அவன் கரம் அசையும்போது அவன் புஜங்களில் விரிந்து புடைத்து அழுந்திய பச்சை நரம்புகளும் அவளுக்கு ஏதோ ஓர் புதிய செய்தியை சொல்லியது . அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் அறைந்து அவள் சுவாசத்தில் கலந்தது .

அவள் அவனிடம் எதையோ பேச நினைக்க அவள் குரல் மேலெழும்பாமல் அவள் உடல் தானாக சரிந்து அவன் மடியில் விழுந்தது . எனக்கு இன்று நீ வேண்டும் என்று சொல்வது போல் அவளின் இரு கரங்களும் அவன் இடையை சுற்றி இறுகி கட்டிக்கொண்டது . அவள் கள்ளுண்ட மங்கையாக அரைமயக்கத்திற்கு உள்ளே ..உள்ளே இறங்கி செல்ல ஆரம்பித்தாள் ..ஆர்ப்பரிக்கும் குந்தி என்ற சமுத்திரத்தின் நடுவில் சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கினான் .. கடலின் ஆர்ப்பரிப்பும் , சூரியனின் சங்கமதிற்குள்ளான நடுக்கடலில் அடங்கிப்போயின. அலைகளில்லா நிசப்தம் சூரியன் மறைந்து அங்கு இருள் சூழ்ந்தது . அவள் உடலுக்குள் ஏதேதோ இன்ப உணர்வுகள் யாழ் இசைத்தன . முதன்முறையான ஆணினின் தேக சூடு அவள் இரத்த நாளங்களில் கொப்புளித்தன .. படுக்கையை விட்டு எழ மனமில்லாமல் மறு இரவு மட்டும் உறங்கி கொண்டே இருந்தாள் . அவள் மேனி தன் எடையை இழந்து இறகு போல் விண்ணில் மிதக்க துவங்கியது. அடுத்த சில நாட்களில் மறுபடியும் மந்திரத்தை உச்சரிக்கலாமா என்று தோன்றியது.

அன்று இரவு நடந்தவைகளை அசை போட்டபடியே மறுபடி சூரியனை அழைக்க விரும்பி வெட்கத்துடன் தனக்குள்ளே சிரித்து கொண்டு ,

மந்திரத்தை உச்சரிக்க வாயை அவள் திறக்க அடிவயிற்றிலிருந்து ஒரு அமிலம் சுரந்து. எம்பி அவள் வாய் வழியே எகிறி குதித்தது . தனக்கு என்னவானது என்று அவள் உணரும் முன்பே மறுபடி மறுபடி அவளுக்கு குமட்டல் அதிகரித்தது . அவளின் குமட்டல் சப்தம் கேட்டு அவளது அந்தரங்க பணிப்பெண் ஓடிவந்து மயங்கி விழுந்து கொண்டிருக்கும் குந்தியை தாங்கி , அவள் நாடியைப் பிடித்து பார்த்தாள் . திருமணமாகாத குந்தி கர்ப்பமானாள் என்று நாடி சொன்னது .

அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் குந்தியை தூக்கி கொண்டு வந்து படுக்கையில் படுக்க வைத்தாள். மயக்கத்திலிருந்து விழித்த குந்தியிடம் விவரத்தை சொன்னதும் ஒரு நிமிடம் அவளால் எதையும் பேச இயலாமல் வாயடைத்து போனாள் , துர்வாசர் மந்திரத்தை உச்சரித்தால் விரும்பும் ஆண் உனக்கு இன்பத்தை அளித்து தன் காதலின் அடையாளமாக குழந்தையை கொடுப்பான் என்று சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது .. உடலின் தேவைக்கு ஏற்ப மனதை அலைபாய விட்டதன் விளைவு கர்ப்பம் ! இதை சுமந்துதான் தீர வேண்டும் ..வேறு வழி கிடையாது .. முதலில் தவறு செய்யும்போது நடுக்கம் ஏற்படும் துணிந்து விட்டால் மூளை வேலை செய்ய துவங்கி விடும் . பணிப்பெண்ணை அருகில் இழுத்து அவள் காதருகில் ரகசியமாக தமையனுக்கு செய்தி சொல்லியனுப்பினாள் .

மறுநாள் அந்தப்புரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது ..தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்று சுயம்வரத்திற்கு முன்பு 300 நாட்கள் குந்தி விசேச பூஜை செய்கிறாள் என்று அரண்மைனயில் செய்தி பரவியது . முதல் நாள் கோலாகலமாக ஆரம்பிக்க பட்ட பூஜையில் தாய் ,தந்தை தமையனிடம் ஆசி வாங்கி கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி ,தனிமையில் நம்பிக்கைக்கு உகந்த ஒரு சில பணிப்பெண்களுடன் யமுனை நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து பூஜையை தொடர்ந்தாள் குந்தி . தன் வயிற்றில் வளரும் குழந்தையை வேண்டுமளவுக்கு கருவில் வளரும்போதே கொஞ்சி , குழந்தைக்கு நற்கதைகள் சொல்லி பிரசவ நேரத்தை எதிர்பார்த்து ஆஸ்ரமத்தில் காத்திருந்தாள் குந்தி .. ஒரு நல்ல நாளில் தாய்க்கு அதிக சிரமம் கொடுக்காமல் சுகப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தையை பிறந்தவுடன் குந்தியின் ஆணைப்படி குந்தி மயக்கத்திலிருந்து கண் திறக்குமுன் , பிரம்பு கூடையில் மார்புக்கவசமும், நகைகளும் அணிவித்து பட்டாடைகளை வைத்து நிரப்பி மூடி யமுனை ஆற்றில் மிதக்க விட்டனர் தோழிகள் .

விரதம் முடிந்தது என்று அரண்மனைக்கு செய்தி சொல்லியனுப்ப பட்டது .. பூஜை முடித்து வரும் தங்கை குந்தியை யானை ,குதிரை படைகளுடன் வந்து ஆர்ப்பாட்டமாய் அழைத்து சென்றான் வாசுதேவன் . மிகப்பிரமாண்டமாய் அமைக்கப்பட்ட சுயம்வர மேடைக்கு ஊர்வலமாய் குந்தி அழைத்து செல்லப்பட்டாள் . அங்கு வரிசையாய் அமர்ந்திருந்த பல நாட்டு மன்னர்களுள் வெளிறிய நிறத்தில் மற்றவர்களில் இருந்து வேறுபட்டு தெரிந்த பாண்டுவை பார்த்து மாலை அணிவித்து தன் கணவனாக தேர்ந்தெடுத்தாள் குந்தி . பாண்டுவுக்கு மாலையிட அவன் அருகில் சென்ற குந்திக்கு , அவனுடைய வெளிறிய நிறம் பார்க்க ஒரு கணம் அறையிருட்டில் மயக்கத்தில் பார்த்த இருளை விரட்டும் பிரகாசமாய் வெண்ணிறத்தில் தகதகத்த சூரியன் மனக்கண்ணில் வந்து மறைந்தான் .

http://malaigal.com/?p=5446

Link to comment
Share on other sites

நீங்கள் இப்படி சூரியன் மானுடருடன் உறவு கொள்ளும் மூட நம்பிக்கையான கதைகளை இங்கு பதிவதால்.. பலர் பொங்கி எழுந்து இதுகளை சமயத்தினுள் நுழைக்க வரப் போவதால்... நான் இந்தப் பதிவுக்கு எனது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கேவலங்கெட்டவளா பாண்டவரின் தாயான குந்தி? அதுசரி பாண்டவர்களும் ஒவ்வொரு தகப்பன்மாருக்குப் பிறந்தவர்கள் தானே! பாவம் பாண்டு மனைவியைக் கூட்டிக்கொடுக்க வேண்டிய நிலை அவனுக்கு!

எனவே மகாபாரதத்தைத் தடைசெய்யவேண்டும்!

Link to comment
Share on other sites

மகாபாரதம் தமிழ் இலக்கியம் அல்ல.. அதனால் அங்கு ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவம் தேவை அற்றதாகிறது. தமிழர்கள் சிலர் அதை தமது இலக்கியம் என்று கொண்டாடுவதை என்னென்பது?!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னது வடமொழி மகாபாரதத்தை அல்ல கம்ப நாடனால் தேவபாடையாம் ஆரியபாடையில் இருந்து நீசபாடையாம் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட மகாபாரதத்தை!

Link to comment
Share on other sites

பாவம் கம்பன்.. பிழைப்புக்காக இணக்க அரசியல் செய்திருக்கிறான்!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் போன்றவர்கள் இந்த எழுத்தாளாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யேல்லையா :lol::lol:

Link to comment
Share on other sites

இவ்வளவு கேவலங்கெட்டவளா பாண்டவரின் தாயான குந்தி? அதுசரி பாண்டவர்களும் ஒவ்வொரு தகப்பன்மாருக்குப் பிறந்தவர்கள் தானே! பாவம் பாண்டு மனைவியைக் கூட்டிக்கொடுக்க வேண்டிய நிலை அவனுக்கு!

எனவே மகாபாரதத்தைத் தடைசெய்யவேண்டும்!

 

குந்தி உண்மையா பொய்யா? ஒரு இதிகாசம் என்றளவில் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை...ஆனால்

குந்திக்கு பதிலாக "வாலியின் அம்மா" என்று போட்டு அவரின் அனுமதி பெற்றோ...பெறாமலோ யாராவது எழுதினால்...நிச்சயமாக சுண்டல் மாதிரி ஆட்கள் தொடக்கம்...வாலியின் அம்மாவின் பால் அன்பு கொண்டவர்கள் /அவரின் சகோதரர்கள் ஆனோர் நிச்சயம் புத்தகத்தை தடை செய்ய போராடுவார்கள்...

என்பது தான் என் எண்ணம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதம் என்பது ஒரு வாழ்க்கைபாடம்.அதிலிருந்து ஏராளமான நல்ல விடயைங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
ஒற்றுமை என்பது பாரதத்தில்  மிக முக்கியமாக இருக்கின்றது.
அது மட்டும் இன்றைய தமிழர்களிடம் இல்லை.இதேபோலத்தான் அன்றும் பாண்டவர்களும் கௌரவர்களும் இருந்தார்கள்.

 

சிலவேளைகளில் மகாபாரதத்தை இன்னொருமுறை வாசித்தால்
தமிழர்களுக்கிடையில் எப்படி ஒற்றுமையை வளர்ப்பது என விளங்கிக் கொள்ளலாம்

பாரதத்தில் நடந்ததாகக் கூறப்படும் பல நிகழ்வுகள் பலருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றது. இனியும் நடக்கலாம்.
குந்தி ஒரு நல்ல தாயின் அடையாளமாகவே பாரதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளாள்

Link to comment
Share on other sites

மகாபாரதம் என்பது ஒரு வாழ்க்கைபாடம்.அதிலிருந்து ஏராளமான நல்ல விடயைங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

ஒற்றுமை என்பது பாரதத்தில்  மிக முக்கியமாக இருக்கின்றது.

அது மட்டும் இன்றைய தமிழர்களிடம் இல்லை.இதேபோலத்தான் அன்றும் பாண்டவர்களும் கௌரவர்களும் இருந்தார்கள்.

 

சிலவேளைகளில் மகாபாரதத்தை இன்னொருமுறை வாசித்தால்

தமிழர்களுக்கிடையில் எப்படி ஒற்றுமையை வளர்ப்பது என விளங்கிக் கொள்ளலாம்

பாரதத்தில் நடந்ததாகக் கூறப்படும் பல நிகழ்வுகள் பலருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கின்றது. இனியும் நடக்கலாம்.

குந்தி ஒரு நல்ல தாயின் அடையாளமாகவே பாரதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளாள்

 

அண்ணே நாங்க இப்போ கதைக்கிறது...குந்தி எப்படி எல்லாருக்கும் "அல்வா" கொடுத்தா என்று... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினெட்டு வயதில் திருமணமாக முன்னர் தனது மோகத்தைத் தணிக்க சூரியபகவானையும், பாண்டுவைத் திருமணம் முடித்த பின்னர் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள மீண்டும் எமன் (தர்மன்), வாயு (வீமன்), இந்திரன் (அருச்சுனன்), அஸ்வினி தேவர்கள் (நகுலன், சகாதேவன்) என்று குந்தி தான் விரும்பியவர்களை வரவழைத்து அவர்களுடன் கூடி குழைந்தைகளைப் பெறும் சுதந்திரம் இருந்தது.

ஆண் சமுதாயம் இப்போது எல்லாவற்றையும் மாற்றிவிட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே நாங்க இப்போ கதைக்கிறது...குந்தி எப்படி எல்லாருக்கும் "அல்வா" கொடுத்தா என்று... :)

 

நான் எப்போதும் அல்வா கொடுப்பதைப் பற்றி  அலட்டிக்கொள்வதில்லை.

வாசிப்பதில் நல்லதை எடுத்துவிட்டு மிகுதியைக்  குப்பையில் போட்டுவிடுவேன்.

குந்தி எத்தனை வயதில் குந்தினாள் என்பதும் எனக்கு முக்கியமில்லை.  :D

 

Link to comment
Share on other sites

மகாபாரதம் பற்றி தேடி வாசித்ததில் இவ் நீண்ட விமர்சனம் அல்லது அலசல் பிடித்து இருந்தது.

 

அருண்மொழிவர்மன் எழுதியது.

 

மூலம்:http://arunmozhivarman.com/

 

 

-------------------

 

 

அத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்

 

 

அரசர்களும் ராஜ்யங்களும் நிறைந்த அரச கதைகள் கேட்பதென்பது எல்லாருக்கும் சிறு வயதில் பிடித்தமானதொன்றே. எனக்கும் என் பத்தாவது வயதில் ஏற்பட்டிருந்த இந்த மோகத்துக்கு அம்புலிமாமாவும் அதில் வெளியாகி வந்த அரச கதைகளும் பெருந்துணை செய்தன. அதே katha.jpg?w=74நேரம் எமக்கும் பாடமாக இருந்த வரலாறும் அதனை சுவாரஸ்யமாக கற்றுத்தந்த ஆசிரியர்கள் சண்முகராஜாவும், கோபியும் வரலாற்றுப் புதினங்களை வாசிப்பதில் பெரும் ஆவலை தூண்டியிருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக அப்போது ஏதோ வெறி பிடித்ததுபோல பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், வேங்கையின் மைந்தன், பாண்டிமாதேவி, பார்த்திபன் கனவு என்று வாசித்து தள்ளியிருக்கின்றேன். எல்லா விதமான பொழுது போக்குகளும் தடுக்கப்பட்டிருந்த அந்த காலத்தில் சாரத்தை, அல்லது போர்வையை தோளில் கட்டியபடி, மரக் கொப்புகளை வெட்டி செய்த வில்லும், அம்பும், வாளுமாக கையிலேந்தியபடி வீட்டுப் பின் வளவுகளில் நானும் சகோதரர்களும் அலைந்திருக்கின்றோம். வரலாற்று நாயகர்களையும், அவர் வீரப் பிரதாபங்களையும் பேசிப் பேசியே இறுமாந்திருந்த அந்த நாட்களின் பசுமை இப்போதும் அடிமனதில் இருக்கின்றது.

 

 

ஆனால் இப்போது நினைத்துப் பார்க்கின்றபோது வரலாற்றுப் புதினம் என்பதே தாம் நிலை நிறுத்த விரும்பிய ஒருவனின் புகழை கூறுவதற்காக புனையப்பட்டதொன்றே என்று புலனாகின்றது. வரலாறு என்பது கூட அதுதானே? எந்த நாட்டின் வரலாறு உண்மையை மட்டும் பேசுகின்றது? அப்படி பேசுவது சாத்தியமான ஒன்றுதானா? அமெரிக்க புகழ் பாடும் ஊடகங்களில் “சே” எப்படி சித்திகரிக்கப்பட்டுள்ளார்? இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்ட வி.பி.சிங் இறந்தபோது இந்தியா டுடேயில் அவர் பற்றி வெளியான செய்தி எல்லாருக்கும் நினைவில் இருக்கும் என்று நினக்கின்றேன். இதே வகையில்தான் ஒரு காலத்தில் என் கனவு நாயகர்களாகவே இருந்த ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலமும் இருந்திருக்கின்றது என்று பின்னாளில் தெளிவாக புரிந்து கொண்டேன். காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய திருஞான சம்பந்தர்தான் சமணர்களை தூக்கிலேற்ற தூண்டினார் என்பதை ”சம்பந்தர் செய்த் அற்புதங்கள்” என்று பட்டியலிட்டு எழுதி புள்ளிகளும் பெற்றிருக்கிறோம் என்று நினைக்கும்போதே வெறூப்பாக இருக்கின்றது. ஏனைய மதங்களின் வரலாற்றுப் பக்க்கங்களை திருப்பியபோதும் இது போன்ற அதிர்ச்சிகளே காத்திருக்கின்றன. இதுவரை எழுதப்பட்ட வரலாறுகள் எல்லாம் மன்னர்களின் வரலாறுகளே தவிர மக்களின் வரலாறுகள் இன்னும் எழுதப்படவே இல்லை. மன்னர்களின் வரலாறுகள் கூட வென்றவர்களின் பார்வையில்தான் கதை சொல்கின்றனவே தவிர தோற்றுப்போனவனின் வரலாறும், சிறுபான்மையினரின் வரலாறும் கூட எழுதப்படவில்லை. இந்த வகையில்தான் நான் அண்மையில் வாசித்த தேவகாந்தன் எழுதிய “கதாகாலம்” என்கிற மகாபாரதத்தின் மறு வாசிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.

-2-

மகாபாரதக் கதையை தெரியாதவர்கள் எவரும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அதை முழுதாக தெரிந்தவர்கள் எவரும் இல்லை என்பதும். வேத காலத்தின் இறுதியில் நடந்ததாக சொல்லப்படும் இந்தக் கதை இன்று வரை கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டு வருகையில் “தர்மத்தின் வாழ்வதை சூது கவ்வும்; தர்மம் வெல்லும்” என்ற அறத்தை காக்கும் நோக்கில் அதன் நாயக்ர்களாக சொல்லப்படும் பாண்டவர்களும், கிருஷ்ணனும் அதிகம் புனிதப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் தேவகாந்தனின் மீள்வாசிப்பில் கtheva.jpg?w=93தை சொல்லிகள் கதையை வாழ்வியல் யதார்த்ததுடன் அணுக்கமாக, அதன் கதை மாந்தர்களை எல்லா மனிதர்களைப் போலவே நல்ல, தீய குணங்கள் நிரம்பியவர்களாக சொல்லிச் செல்லுகின்றார். அதைவிட முக்கியமாக, பாரதக் கதை நடப்பதில் முக்கிய பங்கெடுத்த, ஆனால் மற்றைய பிரதிகளில் பெரிதும் பேசப் படாத கதை மாந்தர்களான சத்தியவதி (மச்ச கந்தி), அம்பை (சிகண்டி), காந்தாரி, குந்தி, திரௌபதி, சகாதேவன், சுபத்திரை போன்றவர்களின் உணர்வுகள் பெரிதும் பேசப்படுகின்றன. பாரதக் கதையை கண்ணன் நடத்தினான் என்று கண்ணனை தெய்வமாக்கி இதிகாசங்கள் சொல்ல, பாரதக் கதையை அத்தினாபுரத்துப் பெண்களே நடாத்தினார்கள் என்றும் கண்ணன் தந்திரம் மிகுந்த, அர்ச்சுணனின் நண்பன் மாத்திரமே என்று சொல்லி கதையை கொண்டு செல்கின்றார் தேவகாந்தன்.

-3-

கதையில் பிடித்த சில பக்கங்கள்

 

 

காந்தாரி

தன் கணவனுக்கு கண் தெரியாது என்று தன் கட்புலனை இறக்கும்வரை துறந்தவள் காந்தாரி என்று சொல்லி காந்தாரியை “தாம் எதிர்பார்ர்கும்” பெண்மையின் இலக்கணம் என்று சொல்வதை கேட்கும்போதெல்லாம், கணவனுக்காக பார்வை துறந்தாள்; சரி. ஆனால் தானும் பார்வையை மறுத்ததால் தம் பிள்ளைகளை சரியாக வளர்க்காமல் விட்ட பழி அவளுக்குரியதுதானே? என்று யோசித்திருக்கின்றேன். ஆனால் காந்தாரி தான் கண் தெரியாத திருடராஷ்டிரனைத்தான் கல்யாணம் செய்யப்போகிரேன் என்று தெரியாமல் பீஷ்மக் கனவுகளுடன் இருந்தவள் என்றும், அதற்கான எதிர்ப்பாகவே தன் கண்களை மறைத்து துணிகட்டி மணவறை வந்தாள் என்றும் சொல்லும்போது அதிகாரத்துக்கு எதிரான சற்றுப் பலவீனமான எதிர்க்குரலாகவே காந்தாரி தெரிகின்றாள். “இதுபற்றிக் கேட்டபோது “திருடராஷ்டிரன் சாம்பிப் போனான். அவள் தன்னையோர் அபாக்கியவதியாய்ச் சபையில் அடையாளப்படுத்தியதாய் அவன் எண்ணிப் புழுங்கினான். ஆனால் சபையோ அவளின் பதி பக்தியாய் அதைக்கண்டு மெய் மறந்திருந்தது.-பக்.21)”

 

 

குந்தி

பாரதக் கதையை பொறுத்தவரை அதீதமான அமானுஷ்யத் தன்மை வாய்ந்த கதாபாத்திரமாகவே குந்தியின் பாத்திரத்தை பார்க்கமுடிகின்றது. ஆனால் கதாகாலத்தில் வரும் குந்தியோ தொடர்ச்சியாக கட்டுடைக்கப்படுகின்றாள். (ஒரு வாசகனாக பாரதத்தை வாசித்தபோது குந்தி பற்றி என்னுள் உருவாகியிருந்த விம்பம் கதாகாலத்தில் வரும் கட்டுடைக்கப்பட்ட குந்தி பாத்திரமே). முதலில் குந்தி புத்திரர்களை எடுத்துக்கொள்வோம். குந்தி துர்வாச முனிவருக்கு செய்த பணிவிimages.jpg?w=132டையால் மகிழ்ந்த அவர் கொடுத்த வரம் மூலமே அவளுக்குப் பிள்ளைகள் பிறந்தன என்பதே இதுவரை சொல்லப்பட்டது. ஆனால் கதாகாலத்தில் துர்வாசருக்கு பணிவிடை செய்த நாட்களில் ஏற்பட்ட இயற்கையான உடல் உறவின்மூலமே குந்தி கர்ப்பமாகி கர்ணனை ஈன்றாள் என்றும், அவள் கருவுற்று இருந்ததால்தான் யாககாலம் முடிந்து துர்வாசர் வெளியேறிய பின்னரும் கூட அவள் அங்கேயே தங்கி இருந்து கர்ணனை ஈன்று ஆற்றோடு போகவிட்டாள் என்றும் சொல்லப்படுகின்றது. (தகாப் புணர்ச்சியின் விளைவுகளை தாய் தன் குழந்தையில் சுமத்திவிட்டு தப்பிக்கொண்ட தருணம் அது – பக்.24) இதே வகையில்தான் உறவுகொள்வதற்கான உடற்தகுதி அற்ற பாண்டுவின் மறைமுகமான ஆதரவுடன் வனவுலா சென்று பிறருடன் கூடி பிற மூன்று பிள்ளைகளையும் ஈன்றாள் (அந்நாட்களில் வழக்கத்தில் இருந்த நியோகம் எனும் முறை இது).

 

 

குந்தி பற்றிய இன்னுமொரு விபரிப்பு மாத்ரி, பாண்டுவுடன் உடன் கட்டை ஏறியபோது சொல்லப்பட்டுள்ளது. மாத்ரியுடன் உடல் நிலை இடம் தராதபோதும் பாண்டு கூடலில் ஈடுபட்ட்தே அவன் இறப்புக்கு காரணம் என்று சொல்லி குந்தி எழுப்பிய இழிமொழிகள் கேட்க முடியாதே மாத்ரி சிறு குழந்தையாக இருந்த சகாதேவனின் கண் முன்னரே தீயில் வீழ்ந்து இறந்தாள் என்றும் அன்று உணர்ந்த சோகமும் தனிமையுமே சகாதேவனை ஞானத்தேடலில் ஆழ்த்திற்று என்றும் சொல்கிறார். சற்று யோசித்தால், வம்ச விருத்திக்கான உடல்நிலையான தகுதி இல்லாதவன் பாண்டு. இது தெரிந்தும் அத்தினாபுர பெரியோர்கள் குந்தி மேல் பழி போட்டு மறுதாரமாய் மாத்ரியை மணம் செய்துவைக்கின்றனர். இன்று நடப்பதும் இதுதானே? அசுவத்தாமா மட்டுமல்ல, குந்தியும் இன்று வாழ்ந்துகொண்டே இருக்கிறாள்.

 

 

கணவனை இழந்து நாடு திரும்பிய குந்தி அங்கு தன் பிள்ளைகள் இரண்டாம் பட்சமாய் நடத்தப்படுவது கண்டும், தன் பிள்ளைகள் பாண்டுவின் புத்திரர்கள் என்ற பொருள்பட ”பாண்டவர்” என்று மட்டும் அழைக்கப்பட காந்தாரியின் புத்திரர்கள் “கௌரவர்கள்” என்று, மரியாதைக்குரியவர்கள் என்று பொருள்பட அழைக்கப்படுவது கண்டு மனம் வேகுகின்றாள். இதற்கு காரணம் பாண்டவர்கள் பாண்டுவுக்குப் பிறக்காமல், தானும் மாத்ரியும் செய்த “வனவுலா”வின் விளைவால் பிறந்தவர்கள் என்பதை சத்தியவதியும், பீஷ்மனும் அறிந்திருப்பார்களோ என்றும், முழுமையான அரச குலப் பெண் இல்லை என்பதால்தான் இப்படி ஓரங்கட்டப்படுகின்றோமோ என்றும் பலவாறாக சந்தேகித்து, முடிவாக இனி தன் பணி பாண்டவர்கள் ஐவரையும் அத்தினாபுர மன்னர்களாக ஆக்குவதொன்றே என்று தீர்க்கமாகின்றாள். தம் வாழ்வின் இன்பங்கள் எல்லாம் தம் மணவாழ்வினால் பறிக்கப்பட்ட இரண்டு பெண்களான காந்தாரியும், குந்தியும் தம் பிள்ளைகள் அத்தினாபுர அரசுக்கட்டேற வேண்டும் என்று காய் நகர்த்தினார்கள். ஒரு நல்ல எச்சம் பாரதக் கதை. மோசமான எச்சம் ஏறத்தாழ குருவம்சம் முழுதுமே அழிந்தது ஒன்று. நல்லது நடக்க வேண்டும் என்று எத்தனை தீயதும் செய்யலாம் என்ற மோசமான நீதி சொல்லப்பட்டது.

 

 

திரௌபதி

பாரதக் கதையை வாசிக்கும்போது திரௌபதிக்கு இழைக்கபட்ட அநியாயத்தை எத்தனை பேர் யோசித்துப் பார்த்திருக்கின்றோம். சுயம்வரத்தின்போது தகப்பன் அவளை தான் வைத்த வீர விளையாட்டிற்கான பரிசுப் பொருளாக்கினான். சூதட்டத்தின்போது தர்மன் அவளை தன் உடமைப் பொருளாக்கினான். திரௌபதி என்ற பெண்ணை பெண்ணாக யார் பார்த்தார்கள்?. ஐவீரும் ஒருவீராய் …. என்று அன்னை சொன்னதின் வழியொழுகினார்கள் என்று உரை எழுதுவதை விடுத்து, அன்னை சொன்னால் கூட ஏற்க முடியாத அறம் இதென்றல்லவா பாண்டவ புத்திரர்கள் மறுத்திருக்கவேண்டும். பாடசாலையில் பரிசாக பெற்றுவரும் விளையாட்டுக் காரை “எல்லாரும் சேர்ந்து விளையாடவேண்டும்” என்று அம்மா சொல்வதுபோல அல்லவா குந்தியும் சொல்கின்றாள். ஒவ்வோராண்டும் ஒவ்வொருவருக்கு அவள் உடமை என்று முறை வைத்துக் கொண்டார்களாம். இதனால், ஒருவனின் கருவை தாங்கிய நிலையில் இன்னொருவனின் உடமையாக போகின்றாள் திரௌபதி. எவ்வளவு கொடுமை இது. திரௌபதி சிரித்ததற்கான பழிவாங்கலே சூதாட்டம் என்றால், ஒரு கேலிச் சிரிப்பும் ஒரு துகிலுரிவும் நேர் சமமா?. சூதாட்ட அவையிலே அதிகம் அவமானப் பட்டவள் திரௌபதி. தீர்க்கமுடியாத அவமானம் அது. அதனால்தான் அவள் பாண்டவர்களுக்குள் இருக்கும் பழிவாங்கும் நெருப்பு வனவாசம், அஞ்ஞாத வாசம் என்று அணைந்துவிடக்கூடாது என்று அவர்கள் கூடவே சென்று, சூதாட்ட சபையிலே செய்த சபதங்களை தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தாள் என்று கதாகாலத்தில் கதை சொல்லி சொல்வது யதார்த்தமானதாகவே இருக்கின்றது. விராட நாட்டில் போரில் அர்ச்சுணன் வெளிப்படுகிறான். அஞ்ஞாதவாச காலம் முடியமுன்னரே அர்ச்சுணன் வெளிப்பட்டான் என்ற சலசலப்பு எழுகின்றது. தர்க்கரீதியாக அந்தக் குற்றச்சாற்று சரியானதே என்று சகாதேவனும் உணர்கின்றான். இதை அறிந்த திரௌபதி சகாதேவனிடம் சென்று பேசிவிட்டு பின் கிருஷ்ணனிடமும் பேசுகின்றாள். அப்போதெல்லாம் அவளுக்கு எந்த சமரசமும் ஏற்பட்டுவிடாமல் நிச்சயம் போர் நடைபெறவேண்டும் என்ற முனைப்பே இருக்கும். இதை தேவகாந்தன் “கூந்தல் அவளைச் சிறைப் பிடித்துள்ளதாய்க் கண்டுகொண்டிருந்தான் கிருஷ்ணன்” என்பார். அதாவது பழிவாங்கும் உணர்ச்சி அவளுக்குள் இருக்கவில்லை. பழிவாங்கும் உணர்ச்சிக்குள் அவள் மூழ்கிப் போய் இருந்தாள் என்கிறார். இறுதியில் சத்தியவதியிடமிருந்து காந்தாரிக்கும், குந்திக்கும், பின் திரௌபதிக்கும் தாரைவார்க்கப்பட்ட அத்தினாபுரத்து சோகங்கள் எல்லாம் திரௌபதியிடமிருந்து உப பாண்டவர்களின் மனைவியருக்கும், அபிமன்யு மனைவி உத்தரைக்கும் தாரைவார்க்கப்படுகின்றன.

……………………………………மீதி அடுத்த பதிவில்

 

http://arunmozhivarman.com/2009/06/29/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன் மைண்ட் வொய்ஸ்:   அப்பாடா .......... பெரியப்பாவுடன்  10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........!  😂 கிருபன் & பையன்.......!  🤣
    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.