Jump to content
 • Veeravanakkam
 • Veeravanakkam
 • Veeravanakkam

கோணேஸ்வரப்பெருமானின் கும்பாபிஷேக குடமுழுக்கு


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

article_1422526103-unnamed.jpg

 

கிழக்கு மாகாணத்தில் வரலாற்று பொக்கிஷமாக கருதப்படும் திருகோணமலை அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமானின் கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.  கடந்த காலத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் பின்னர், புதுப்பொலிவுடன் ஆலயத்தின் கும்பாபிஷேக குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இவ்வாலயம் திருஞானசம்பந்தரினால் பாடல்பெற்ற திருத்தலமாகும். எதிர்வரும் 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.  

 

 

http://www.tamilmirror.lk/138735#sthash.IqNDNfHg.dpuf

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நன்பரே...!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ஆதவன்!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
 
 
 
 
 
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
ஓடிப் போகீர்... 
பற்றுந் தாரீர்...
கோணமாமலை உள்ளீரே..
 
பொய்ம்மை யாலே போது போக்கிப்
புறத்தும் இல்லை.. 
அகத்தும் இல்லை..
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்!
மேலை நாள் ஒன் றிடவுங் கில்லீர்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்!
ஏதுந் தாரீர்.. 
ஏதும் ஓதீர்..
உம்மை யன்றே எம்பெரு மானே..
கோணமாமலை உள்ளீரே..
 
கூடிக் கூடித் தொண்டர் தங்கள்...
கொண்ட பாணி குறைப டாமே
ஆடிப் பாடி அழுது நெக்கங்கு
அன்பு டையவர்க் கின்பம் ஓரீர்...
 
Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

எல்லைக்காளி ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

 

article_1423047306-IMG_8211.JPG

 

 

திருக்கோணேஸ்வரர் பெருமானின் காவலுக்காக அமைக்கப்பட்ட பறையன்குளம், எல்லைக்காளி ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை(3) தைபூசத்திற்கான சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பன்குளம் நாமல்வத்தையில் இருந்த காட்டு வழியாக சுமார் 6 கிலோ மீற்றர் தூரம் சென்றால் இக்கோவிலை அடைய முடியும். ஒவ்வொரு பௌர்ணமியின் போதும் இங்கு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

கடந்த, 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல்கள் காரணமாக இப்பகுதியில் வாழ்ந்த சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறினர். இவர்கள், இன்னமும் மீள்குடியமர்த்தப்படாத நிலையில் இப்பிரதேசம் பாலடைந்து காணப்படுகின்றது. இக்கோயிலுக்கு செல்வதற்காக இந்து இளைஞர்; பேரவையின் ஏற்பாட்டில் நகரித்தில் இருந்து தொண்டர்கள் அழைத்துச் செல்லப்பட்டு காடுகளுக்கு ஊடாக வழி ஏற்படுத்தப்பட்டது.   திருகோணமலை, தம்பலகாமம் பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் தமது நேர்;த்தியை நிறைவு செய்வதற்காக நாமல்வத்தை என்னும் இடத்தில் இருந்து உழவு இயந்திரங்கள் மூலமாகவும், கால்நடையாகவும் பறையன்குளத்ததை சென்றடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

article_1423047326-IMG_8232.JPG

 

article_1423047336-IMG_8141.JPG

 

 

article_1423047346-IMG_8187.JPG

 

article_1423047410-IMG_8231.JPG

 

article_1423047423-IMG_8233.JPG

 

http://www.tamilmirror.lk/139154#sthash.EG4iBktK.dpuf

Link to post
Share on other sites

இணைப்பிற்கு நன்றிகள் ஆதவன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி  ஆதவன்...!

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரர் ஆலய மகாகும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு

 

 

ko-161.jpg

 

 

ko-17.jpg

 

 

ko-15.jpg

 

ko-4.jpg

 

 

ko-6.jpg

 

ko-8.jpg

 

 

http://www.thinakkathir.com/?p=61024


ko-9.jpg

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம்

 

article_1423636946-IMG_8746.JPG

 

 

வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று புதன்கிழமை (11) காலை நடைபெற்றது.  

 

22 வருடங்களின் பின்னர் நடைபெறும் கும்பாபிகேஷகத்தை காண்பதுக்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அடியவர்கள் வருகைதந்திருந்தனர். ஆலயத்துக்கு வரும் அடியவர்களின் வசதிக்கருதி  கடற்கரை முன்றலிலிருந்து ஆலயத்துக்கு சொந்தமான பஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி இந்து மன்றத்தினரால் அடியவர்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

article_1423637003-IMG_8832.JPG

 

http://www.tamilmirror.lk/139550#sthash.iFwGQv1V.dpuf

Link to post
Share on other sites
 • 3 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி ஆதவன்.

Link to post
Share on other sites
 • கருத்துக்கள உறவுகள்
இராவணனும் எமது கடவுளா???
ஏன் இராவணனின் படம் போஸ்டரில் போட்டிருக்கு ??
Link to post
Share on other sites
 • 4 weeks later...
 • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேஸ்வரர் மாதுமை அம்பாள் நகர்வலம்

 

 

 

article_1427621099-valipaadu01.jpg

 

வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் மாதுமை அம்பாள் சமேத நகர்வலம் நேற்று சனிக்கிழமை(28) நடைபெற்றது. கடந்த மாசி மாதம் இடம்பெற்ற மகா கும்பாபிஷேகம் காரணமாக, சிவராத்திரியை தொடந்து இடம்பெறும் நகர்வலம் இடம்பெற்றிருக்கவில்லை. அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்நகர்வலம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

article_1427621116-valipaadu02.jpg

 

article_1427621126-valipaadu03.jpg

 

 

article_1427621139-valipaadu04.jpg

 

www.tamilmirror.lk/142925#sthash.a5lg1lvM.dpuf

 

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க.  வாழ்க வளமுடன்🙏    நன்றி மருதங்கேணி, ஆமா நல்லதொரு இனிமையான குரல், அமைதியகா மனதை ஈர்க்கும் ஒரு சக்தி இவரின் குரலில்
  • கிருபனிட்டயும் துல்பனிட்டயும் ஒருக்காச் சொல்லச் சொல்லுங்கோ இலங்கை புலம் பெயரிகளுக்கு சரியான வழிகாட்டலாக யாரைக் கை காட்டுவீர்கள் எண்டு.  அதை ஒருக்கா சொல்லச் சொல்லுங்கோ பார்ப்போம். (துண்டைக் காணோம் துணியைக் காணோம் எண்டு ஓடிவிடுவினம்)  
  • அல் அக்­ஸா மீதா­ன இஸ்ரேலின் மிலே­ச்­சத்­த­ன­மா­ன தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­­டிக்­கி­றோம் பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு   http://www.vidivelli.lk/wp-content/uploads/2021/05/SLCSP.pngஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­­லில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் மற்றும் பொலிஸாரினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலுக்கு பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்­ளது. பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் பிமல் ரத்­நா­யக்­க, பொதுச் செய­லாளர் பெளசர் பாரூக் ஆகியோர் இணைந்து வெளி­யிட்­டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்­பி­­டப்­பட்டிருப்பதாவது: ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லில் ரமழானை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படையினரால் கடந்த வாரம் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை வன்­­மை­யாகக் கண்­டிக்­கி­­றோம். அது மாத்திரமன்றி கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷெய்க் ஜர்ராவிற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளையும் கண்டிக்கின்றோம். சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் பலஸ்தீனத்திலிருந்து வெளிவரும் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குகையில், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப்பிரயோம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பள்­ளி­வா­ச­லுக்குள் இறப்பர் குண்டுகளும் கைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் காரணமாக நோன்பு மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்களில் சுமார் 200 பேர்வரையில் காயமடைந்துள்ளனர். இந்த மிகமோசமான மனிதத்தன்மையற்ற அத்துமீறிய தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். பல தசாப்தகால சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களின் அண்மைக்கால பேசுபொருளாக மாறியிருக்கும் ஷெய்க் ஜர்ராவை அண்மித்த பகுதிகளிலும் இஸ்ரேலியப் படையினரின் இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவையாகும். எனவே இஸ்ரேலியப் படைகளின் இந்த மனிதத்தன்மையற்ற செயற்பாட்டைக் கண்டித்துவரும் உலக நாடுகளுடன் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா உள்­ளிட்ட புனித தலங்­களின் காவ­லர்­கள் என்ற அடிப்படையில் இது விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று ஜோர்தானைக் கோருகின்றோம். மேலும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பாளர்கள் சர்­வ­தேச சட்­டங்­களை மதித்து நடக்க வேண்­டும் என்றும் ஐக்­கிய நாடுகள் சபை பலஸ்­தீன மக்­கள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­­னை­களை முடி­­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான தனது பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முன்­வர வேண்­டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.   http://www.vidivelli.lk/article/10697
  • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.