Sign in to follow this  
அஞ்சரன்

அண்ணன் தங்கை.

Recommended Posts

தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...

நடை பழகும் நாட்களில்
கைபிடித்து கொள்ள
அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...
அடம் பிடித்தோ
அழுது புரண்டோ
பொட்டோ, பூவோ
முதல் முதலில் தங்கைக்கே
வாங்குகிறான் அண்ணன்...
'' அ" வில் தொடங்கி
சைக்கிள் பழக்கி
மகிழுந்து வரை அண்ணன்களே
ஆசிரியர் தங்கைகளுக்கு...
அண்ணனாக மட்டுமன்றி
நண்பனாகவும்
சில நேரங்களில் தந்தையாகவும்
மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...
தங்கைகளின் எந்தவித
கோரிக்கையும்
அண்ணன்களிடமே வருகிறது
தங்கைகளுக்கான முதல்
சிபாரிசை அண்ணன்களே
முன்னெடுக்கிறார்கள்...
அக்காக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை
அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...
அண்ணன்களுக்காக
அப்பாக்களிடம்
கோபம் கொள்வதில்
தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...
தங்கைகளில்லா வீடு
அமைதியாகவே இருக்கிறது
தீராத மௌனம் சுமந்து...
திருமணமாகிச் செல்கையில்
அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ
அழாமல் நடிக்க அண்ணன்கள்
கற்றுக் கொள்கிறார்கள்
..
 @navu dinesh
 
10712810_891964060821481_225311493107588

 

 • Like 5

Share this post


Link to post
Share on other sites

அனுபவக் கவிதை போல உள்ளது, அஞ்சரன்!

 

அண்ணன்கள் வெறும் ஏணிகள் மட்டும் தான்!

 

 

 

'மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்....,

 

அண்ணன் வாழ வைப்பான் என்றே கனவு கண்டாள்!

 

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்...,

 

அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்!

 

 

சில வருடங்களின் பின்னர்.....!

 

 

கனவுகள் வளர்த்தவன்,

தனை இழந்தான் !

 

இளமையைத் தொலைத்துத் தன்,

தலை நரைத்தான்!

 

காலம் தனைத் தொலைத்தான்! :o

Edited by புங்கையூரன்

Share this post


Link to post
Share on other sites

இது உங்கள் அனுபவமோ புங்கை

Share this post


Link to post
Share on other sites

அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ
அழாமல் நடிக்க அண்ணன்கள்
கற்றுக் கொள்கிறார்கள்
..

 

முத்தாய்ப்பான அழகிய வரிகள்.  கவிதை நன்று.

Share this post


Link to post
Share on other sites

அக்கா தங்கைகள் இல்லதா வீடு எப்போழுதும் கனத்த அமைதியுடன் காணப்படும். இதை நான் அனுபவ ரீதியாக உண்ணர்ந்து இருகிறன். ஏன் எனில் எனது உடன்பிறப்புகள் எலோரும் ஆண்கள்தான். ஆனாலும் எனது சித்தப்பாவின் மகள் எங்கள் வீட்டில் வளந்த படியால் கொஞ்சம் ஆறுதல். அவளும் இப்ப திருமணமாகி சென்ற படியால் மீண்டும் வீட்டில கனத்த அமைதி.
 
அக்கா தங்கைகளுடன் பிறந்த ஆண்கள் மிகவும் பாக்கியசாலிகள்.  :(  :(  :(

Share this post


Link to post
Share on other sites

 வீட்டுத் தோட்டத்தில் விளையாடும்   பாச மலர்கள் ....! :)

Share this post


Link to post
Share on other sites

 

தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...

நடை பழகும் நாட்களில்

கைபிடித்து கொள்ள

அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...

அடம் பிடித்தோ

அழுது புரண்டோ

பொட்டோ, பூவோ

முதல் முதலில் தங்கைக்கே

வாங்குகிறான் அண்ணன்...

'' அ" வில் தொடங்கி

சைக்கிள் பழக்கி

மகிழுந்து வரை அண்ணன்களே

ஆசிரியர் தங்கைகளுக்கு...

அண்ணனாக மட்டுமன்றி

நண்பனாகவும்

சில நேரங்களில் தந்தையாகவும்

மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...

தங்கைகளின் எந்தவித

கோரிக்கையும்

அண்ணன்களிடமே வருகிறது

தங்கைகளுக்கான முதல்

சிபாரிசை அண்ணன்களே

முன்னெடுக்கிறார்கள்...

அக்காக்களிடம் மறைத்த

அண்ணன்களின் காதலை

அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...

அண்ணன்களுக்காக

அப்பாக்களிடம்

கோபம் கொள்வதில்

தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...

தங்கைகளில்லா வீடு

அமைதியாகவே இருக்கிறது

தீராத மௌனம் சுமந்து...

திருமணமாகிச் செல்கையில்

அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ

அழாமல் நடிக்க அண்ணன்கள்

கற்றுக் கொள்கிறார்கள்

..
 @navu dinesh
 
10712810_891964060821481_225311493107588

 

 

.மனம் வலிக்க வலிக்க படித்த கவிதை ஆண்டவா .........................

என் சக உறவுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லவே இல்லை...

Share this post


Link to post
Share on other sites

 

அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ

அழாமல் நடிக்க அண்ணன்கள்

கற்றுக் கொள்கிறார்கள்..

 

கவிதையின்... கடைசி வரிகள்,  கண்களை குளமாக்கி விட்டது.

Share this post


Link to post
Share on other sites

30572.gif

 

அரும்பாகி மொட்டாகிப் பூவாகி மலரும் மலரொன்றை ஆசையோடு, பாசத்தோடு கண்டு கண்கள் குளிரக் களிக்கும் பாக்கியம் அன்னை தந்தைக்கு அடுத்ததாக அண்ணனுக்கே கிடைக்கிறது.  :rolleyes:  :rolleyes:
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • எழுபதுகளின் ஆரம்பத்தில் கல்லூரியில் படிக்கும்போது இப்பாடல் மிகவும் பிரபலம்..! இப்பொழுது புது வடிவில்..    
  • (ஆர்.விதுஷா) கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக     பாதுகாப்பு படையினரின் உரிமைகளைபாதுகாப்பதற்கான தேசிய  அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகம் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன் பதினொராவது நாளாகவும்  தொடர்ந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று காலை      கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ அந்த  பகுதிக்கு  விஜயம்  செய்திருந்தார்.  சம்பளப் பிரச்சினைக்கான தீர்வினை கூடிய விரைவில்  பெற்றுத்தருமாறுவலியுறுத்தி கடந்த 11 ஆம் திகதியிலிருந்து இந்த முன்னாள்  படை வீரர்கள்  சத்தியாக்கிரகப்போராட்த்தை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்த போராட்டத்திற்கு  இராணுவ வீரர்களின் உரிமைகளை  பாதுகாப்பதற்கான  தேசிய  இயக்கம், சிவில் சங்கங்கள்  உள்ளடங்கலாக 11  இற்கும்  அதிகமான அமைப்புக்கள் ஆதரவினை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/65232
  • நான் இந்த விடயத்தில் கனேடிய சட்டம் என்ன முடிவுக்கு வருகிறது என்று அக்கறைப்படவில்லை! கொடூரமான கொலைகாரர்களே ஆயுள்தண்டனை பெற்றாலும் சராசரியாக 22 ஆண்டுகளுக்கு மேல் கனடாவில் சிறையில் இருப்பதில்லை என்று இந்த கனேடியச் செய்தி சொல்கிறது: https://nationalpost.com/news/canada/here-is-just-a-partial-list-of-the-brutal-murderers-that-canada-has-set-free இதன் படி கொடூரக் கொலைஞர்கள் பலரை கனடாவில் சாதாரணமாக வெளியே உலவ விட்டிருக்கிறார்கள். என் அக்கறையெல்லாம் இப்படியான ஒரு கொடூரக் கொலையின் பின்னர் கூட, கொலைஞருக்கு கொஞ்சமேனும் நியாயமாகப் படக்கூடிய காரணம் இருந்திருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் வந்து வாதாடும் ஆட்கள் இருப்பது பற்றித் தான்! இது இந்தச் செய்தியையும் சம்பவத்தையும் தாண்டி வியாபித்திருக்கும் ஒரு பிற்போக்கான மனவியாதி! மேலே சகாரா சொன்னதை விட நாம் எதுவும் மேலதிகமாகச் சொல்லி விடமுடியாது இது பற்றி! 
  • யாழ் இந்துவின் பழைய மாணவன் என்ற முறையில் கவலையாக இருந்தாலும் இது மிகவும் உண்மை. நான் சமீபத்தில் அங்கு போயிருந்த போது, இந்த நபரின் ஊழல் பற்றி சாதாரணமாகவே எல்லோருக்கும் தெரிந்திருந்தது, அத்துடன் பாடசாலையின் பெயரும் இந்த நபரால் மிகவும் கெட்டிருந்தது
  • எனக்குத் தெரிந்த மட்டில் இந்த வழக்குக்கும் கடஞ்சா சொல்லும் வழக்குக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கிறது. கடஞ்சா சொல்வதை battered women syndrome என்பார்கள். தொடர் வன்முறையை எதிர்கொள்ளும் ஒருவர் திருப்பி அடிக்க, அது கைமோசமாகி கொலையில் முடிவது. ஒரு மாதம் முன்பு கூட ஒரு கணவனை கொன்ற வயதான மனைவியை விடுதலை செய்தார்கள். ஆனால் இது வெறி ஏற்றியபடி, பஸ்சுக்கு காத்திருந்து  செய்யப்பட்ட கொலை. ஆகவே இதை இப்படி முடிப்பது கடினம். மனநிலை பாதிப்பு என கூறி diminished responsibly எனச் சொல்லி murder ஐ manslaughter ஆக குறைக்கலாம். ஆனால் இப்படிச் செய்தால் மனநிலை மாறும் வரை (வாழ்நாள் பூராவும் கூட) ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிவரும். அதுக்கு மேர்டர் சார்ஜை ஒத்துகொண்டு 10 வருடத்தில் வெளியே வருவது பரவாயில்லை.