• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Archived

This topic is now archived and is closed to further replies.

விசுகு

நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் - வரலாறு

Recommended Posts

தற்சயலாக லா சப்பலில் கிடைத்த புத்தகத்தில்

இந்த வரலாற்றைப்பார்த்தேன்....

அந்த வரலாற்றின் முக்கியத்துவம் கருதி

உங்களுக்கு தருகின்றேன்....

 

 

img224_Page_1.jpgimg224_Page_2.jpgimg224_Page_3.jpgimg224_Page_4.jpgimg224_Page_5.jpgimg224_Page_6.jpgimg224_Page_7.jpgimg224_Page_8.jpgimg224_Page_9.jpg

நன்றி - அகரதீபம்...

Share this post


Link to post
Share on other sites

அது நான் கடவுளை நம்பி கும்பிடும் காலம்

 

கனவில் அடிக்கடி அழகான ஒரு நாகப் பாம்பு ஒன்று வந்து போகும். உடம்பில் ஏறும், விளையாடும், முறைத்துப் பார்க்கும், மிகவும் பழக்கப்பட்ட ஒரு உறவைப் போல தோன்றும்

கனவு முடிந்த பின்பும் அதன் தாய்மை நிறைந்த நெருக்கம் மனசுக்குள் கனக்க நேரம் நிற்கும்.

 

இக் கனவு அடிக்கடி வர எனக்கு நயினை நாக பூசனி அம்மன் கோயிலுக்கு போக வேண்டும் என்ற ஆசை அதிகரிக்க தொடங்கியது. சிறு வயதில் ஒரு முறை சென்று இருக்கின்றேன். அதன் காட்சிகள் அரை குறையாக மனசுக்குள் வந்து போகும்.

 

வளர்ந்த பின் 2002 இல் தான் நயினாதீவுக்கு போகும் முதல் சந்தர்ப்பம் கிடைத்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு கோவிலுக்கு போய் அங்கு தீர்த்தம் குடிக்கும் வரைக்கும் சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து இருக்கின்றேன். அன்றில் இருந்து 2005 வரைக்கும் 3 தடவை போயிருக்கின்றேன்.

 

கோவில்களில் ஒரு போதும் அருச்சனையோ அல்லது விசேட பூசையோ செய்வதில்லை. பூசை நேரத்தில் கோவிலுக்கு போகும் பழக்கமும் எனக்கு இருந்ததில்லை. ஆனால் நயினை அம்மனின் பூசையை மட்டும் பார்க்க ஆசையாக இருக்கும். அங்கு வாங்கிய கோவிலின் படத்துடனான அம்மன் படம் ஒன்று மட்டும் தான் நான் வீட்டில் வைத்து வணங்கும் கடவுள் படமாகவும் கன காலம் இருந்தது.

 

கோவிலின் அமைவிடம், கடல் காற்று, கடற் கரையில் சங்கு விற்கும் ஆச்சி, பக்கத்து கடையில் இருக்கும் சுவையான வாய்ப்பன் பணியாரம் என்று எல்லாமே மனசுக்குள் மிக நெருக்கமாக இருந்தது.   அதுவும் அங்கு தரும் அன்னதானத்தின் சுவையை விட சுவையான சோறு கறி வேறு எங்கும் சாப்பிடவில்லை. சோறும் சாம்பாரும் தான் தருவார்கள்...ஆனால் தேவாமிர்தம்!

 

 2005 இன் மனசுக்குள் ஏற்பட்ட சடுதியான மாற்றங்கள், 2009 முள்ளிவாய்க்கால் என்று பல நிகழ்வுகள் கடவுள் மறுப்பினை நன்கு விதைத்து விட்டது. இப்ப நினைக்கும் போது அன்று இப்படியெல்லாம் இருந்து இருக்கின்றேனோ என்று நினைக்க சிரிப்பு வருகின்றது.

Share this post


Link to post
Share on other sites

130_zpssjayou3u.jpg

 

DSCI0114_zpszy5i8u3s.jpg

 

2012 இல் நான் எடுத்த படம்

Share this post


Link to post
Share on other sites

நான் எடுத்த சில படங்கள் (2002 ஆம் ஆண்டு)

 

2q820ph.jpg

 

1410769.jpg

 

fdshtv.jpg

Share this post


Link to post
Share on other sites

நிழலியையும்  பேச வைத்த அம்மனுக்கு நன்றி... :icon_idea:

Share this post


Link to post
Share on other sites

அணையா அடுப்பும், அனுதினமும் அன்னதானமும் கொண்ட அன்னபூரணி....!

Share this post


Link to post
Share on other sites

அது ஒரு சாதாரண தர பரீட்சைக்கான காலம்! 

 

அநேகமான ஆசிரியர்கள், பரீட்சை மேற்பார்வையாளர்களாக, வேறு வேறு இடங்களுக்கு நியமிக்கப்படுவதுண்டு!

 

எனது பெற்றோரும் அவ்வாறு ' நயினாதீவுக்கு' சென்றிருந்தனர்!

 

அங்கு சென்ற சிறிது காலத்தில் தான், தண்ணீரால் இவ்வளவு  ' உப்பாக' முடியும் என்று அறிந்து கொள்ள முடிந்தது! :o

 

செவ்விளனியிலும் 'மூத்திரக்குழவிக்குக்' கூடு கட்டத் தெரியும் என்று புரிந்து கொள்ள முடிந்தது!

 

பூவரசம் பூக்களாலும் எமது தெய்வங்களுக்கு ' அர்ச்சனை' செய்ய முடியும் என்றும் தெரியவந்தது! நாக விகாரைக்குள் இருந்த பிள்ளையாரையும், முருகனையும் தான் சொல்கிறேன்!

 

நாகபூஷணி அம்மனைப் பற்றி... கடலில் தானாக அமிழ்ந்த தேரின் 'முடி' இன்னும் சிலரது கண்களுக்குத் தெரிவது பற்றி..  இளங்கோவடிகளின் 'சிலப்பதிகாரத்தில்' வரும் மணிபல்லவம் பற்றி... மாதவியின் மகளான 'மணிமேகலையின்' துறவறம் பற்றி... நிறைய அறிந்து கொள்ள முடிந்தது!

 

அங்கு வாழ்ந்த 'புத்த கோவிலின் பிக்கு' எனது தந்தையிடம் பாரதியாரின் பாடலில் வரும் வரும் வரிகளுக்கு விளக்கம் கேட்டது இன்னும் நினைவிலிருக்கின்றது !

 

பாலைப் பொழிந்து தரும் பாப்பா,

 

அந்தப் பசு மிக நல்லதடி பாப்பா!

 

 

எனும் பாடலில் வரும் ' நல்லதடி' என்ற சொல்லுக்குத் தான் அந்தப் பிக்கு விளக்கம் கேட்டார்!

 

நல்லது என்றால்.... ஹொந்தாய்!

 

தடி என்றால்... Stick!

 

அப்படியானால் 'நல்லதடி'    என்றால் ஹொந்தாய்  ஸ்டிக்????? :o

 

அந்த வயல்களில் நான் பிடித்து விளையாடிய ' வாற் பேத்தைகளுக்கு' அளவே கிடையாது!

 

இன்னும் கூட 'அமுத சுரபி' யின் மதிய உணவின் சுவையை நினைக்க... நாவின் நீர் சுரக்கின்றது!  

 

அதை அனுபவிக்க முடியாத ஏக்கத்தினால்... கண்ணிலும் நீர் சுரக்கின்றது!

 

 

நல்லதொரு நினைவு மீட்டலைத் தந்த 'பதிவுக்கு' நன்றிகள்... விசுகர்! :lol:  

Share this post


Link to post
Share on other sites

 நயினை அம்மனின் வரலாற்று இணைப்பிற்கு நன்றி விசுகர்.

 

 

Share this post


Link to post
Share on other sites