Jump to content

எண்ணை கலந்த யாழ்ப்பாணம் நீர் தொடர்பாக அடுத்து என்ன செய்யலாம்..? ஒரு பகிர்வு

Recommended Posts

Water contamination in Jaffna The scenario;

It is believed that ground water of part of Jaffna region is contaminated by oil spillage/contamination. Let’s set aside politics and think about the solution for this long term problem.

  • The ground water in Jaffna region is already contaminated with the excessive fertilizers and pesticides, the recent oil contamination makes the problem worse.
  • Plants are exposed to heavy metals through the uptake of water; animals eat these plants; ingestion of plant- and animal-based foods are the largest sources of heavy metals in human.

The effects;

The suspected heavy metals from the oil vary from lead to mercury as given on the table.

Cadmium Pneumonitis (lung inflammation),Lung cancer,Osteomalacia (softening of bones),Proteinuria (excess protein in urine; possible kidney damage) 

Mercury Diarrhea,Fever,Vomiting,Stomatitis (inflammation of gums and mouth),Nausea,Nephrotic syndrome (nonspecific kidney disorder),Neurasthenia (neurotic disorder),Parageusia (metallic taste),Pink Disease (pain and pink discoloration of hands and feet),Tremor

Lead Encephalopathy (brain dysfunction),Nausea,Vomiting,Anemia,Encephalopathy,Foot drop/wrist drop (palsy),Nephropathy (kidney disease)

Chromium Gastrointestinal hemorrhage (bleeding),Hemolysis (red blood cell destruction),Acute renal failure,Pulmonary fibrosis (lung scarring),Lung cancer

Arsenic Nausea,Vomiting,Diarrhea,Encephalopathy,Multi-organ effects,Arrhythmia,Painful neuropathy,Diabetes
Hypopigmentation/Hyperkeratosis

Afal A & Wiener SW 2014, Metal Toxicity, Medscape.org.

It is not only the drinking water that matters…!!!!!

You are not going to be safe by stop drinking this water from the wells. As I mention earlier the crops and livestock will be feeding and accumulating the heavy metals during the water intake. Eating or drinking the food sourced (livestock or crops) from such areas will affect the people adversely as they are on the top of the food chain. This problem is bigger than one can imagine. It may affect the inhabitant of the whole region for decades.

Steps/ preventive measures to achieve something useful

Measure the oil contamination and the heavy metal contamination periodically in the affected regions to establish the dynamism and dimension of the problem.

Map the ground water data in Jaffna region.

Call for the international help after properly document the problem (rather than blame each other).

Increase the ground water level by increasing the capacity of the lakes and other small reservoirs so that ground water can be diluted enough to be safe.

Avoid agricultural / livestock activities in the region for certain period of time if the contaminant ppm level is unusually high in the worst case scenario.

Uthayam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கு வாழும் மக்களுக்கு சகல தரப்பு மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது முதலாவது முக்கிய அம்சம். 

வெவ்வேறு ஊர்களில் உள்ள நீர் மாதிரி பரவலாக பெறப்பட்டு போதுமானளவு வசதிகள் உள்ள ஆய்வுகூடத்தில் அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்களினால் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை பெறப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் ஊர் இணுவில்.அங்கும் நீர் நிறம் மாறாவிட்டாலும் குடிக்க வேண்டாம் என அறிவித்துவிட்டனர். அமைதியான ஒரு இன அழிப்பு இது. இதுவரை பயன்படுத்தியவர்களுக்கு வரப்போகும் நோய்களும் அங்கவீனர்களும் இன்னும் எத்தனையோ பாதிப்புகள். அதைவிட நிலத்தடியே கலந்த நீரினால் அது சுத்திகரிக்கப் பட்டாலும் கூட வரும் பதினைந்து ஆண்டுகளுக்கு அந்த நிலங்களும் நீரும் பயன்படாததாக இருக்கப் போகின்றது. அதனால் நிட்சயம் அந்த மக்கள் எல்லாம் யாப்பானத்தை விட்டுப் புலம்பெயரவேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது. ஆனாலும் அதுபற்றி யாருக்கும் எந்த விளிப்புணர்வும் அற்ரவர்களாக அந்த மக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவன் இவளவு குண்டைபோட்டும் ...
சத்தம் கேளாது தூங்கிய கூட்டம்.
கிணத்து தண்ணியில எண்ணெய் வந்ததற்கு இப்ப ஏன் நீங்கள் பதறீங்கள் ?
Link to comment
Share on other sites

அடுத்து என்ன செய்யலாம் என்பதை ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டிய தருனம் இது. அரசியல்வாதிகளை இதற்காக நம்பி இருக்க முடியாது. இதுவும் எமக்கெதிரான போர் எனின் இதில் பாதிப்பில்லாமல்/குறைந்த பாதிப்புடன் தப்பிக் கொள்வதே புத்திசாலித்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டு நிலத்தடி நீரில் இப்போது நைதிரேட் ஆர்சனிக் முதலிய நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதாக ஆய்வுக்கட்டுரைகள் கூறுகின்றன. இவை பல ஆண்டுகளாக உள்ளூர் விவசாயிகளினால் விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட இரசாயனப் பொருட்களிலிருந்து நிலத்தை சென்றடைந்திருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதிபற்றிய விபரங்களுக்கு:

Ground water research studies in jaffna peninsula by Sri Lanka Ministry of Irrigation and water resources manangement:

https://dl.dropboxusercontent.com/u/15617892/proceeding_07_april_11.pdf

Ministry of Irrigation and water resources Management

http://www.irrigationmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=100&Itemid=61〈=en

research studies in Chunnakam by university academics:

http://www.springerplus.com/content/3/1/271

நிலத்தடி நீர் பற்றியும் அதை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி இணைய தேடலில் கிடைத்தவை:

Superfund site for United States Environmental Protection Agency:

http://www.epa.gov/superfund/health/conmedia/gwdocs/brochure.htm

IGRAC - International Groundwater Resources Assessment Centre

http://www.un-igrac.org

Link to comment
Share on other sites

Ground water research studies in jaffna peninsula by Sri Lanka Ministry of Irrigation and water resources manangement:

https://dl.dropboxusercontent.com/u/15617892/proceeding_07_april_11.pdf

Ministry of Irrigation and water resources Management

http://www.irrigationmin.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=100&Itemid=61〈=en

research studies in Chunnakam by university academics:

http://www.springerplus.com/content/3/1/271

இவை தற்போதைய எண்ணை பிரச்சனை சார்ந்தவையல்ல.

Link to comment
Share on other sites

"ஓசோர்ப்" ஐ  [ Osorb ] பாவித்து ஒரு வருடத்துக்குள் கழிவு எண்ணை மாத்திரம் அல்ல விவசாய இரசாயங்களையும் யாழ் நிலத்தடி நீரில் இருந்து அகற்றலாம்.

https://www.youtube.com/watch?v=6EDbVtRsYIg

Link to comment
Share on other sites

Municipal water systems and companies in several U.S. states and Canadian provinces are now using Osorb. ABSMaterials is creating formulas to address various contaminants, including hydrocarbons, pharmaceuticals, pesticides, herbicides, chlorinated solvents and endocrine disruptors.

Edmiston says, chemically speaking, Osorb is halfway between the glass in a window and the silicone caulk in a bathtub. The glass is hard and the caulk is flexible.

"So, when Osorb expands and is absorbing something, it is not going through a traditional chemical reaction. Osorb is actually going through a mechanical expansion, sort of like the sponge in your kitchen, a nano-mechanical sponge," says Edmiston.

Adding to Osorb's efficiency, says Edmiston, is that it can be re-used dozens of times. Absorbed compounds can be removed with heat, or rinsing.

While the first thing that may come to mind when thinking of removing oil from water is a disaster, such as the Deepwater Horizon oil spill in the Gulf of Mexico, Edmiston says there's an enormous need to clean up water that is part of the drilling process..

http://www.nsf.gov/news/special_reports/science_nation/osorb.jsp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பான் கிரோசிமாவாக மாறப் போகிறதா யாழ் மாவட்ட ஊர்கள்.

எண்ணைக்கழிவினால் ஏற்பட்டிருக்கும் பாதகவிளைவுகள் பற்றியும், இத்தகு விளைவுகளுக்கு வடமாகாண சபையே பொறுப்பு,அவர்களே பதில் கூற வேண்டுமென திரு.க.வ.ஜெயதாசன் என்பவர் மனக்குமுறலுடன் எழுதிய கடிதம் ஒன்றினை பண்ணாகம் இணையத்தளத்தில் வாசித்தேன்

எண்ணைக்கழிவினால் ஏற்படப் போகும் பாதக விளைவுகள் பற்றி எனது முகநூலிலும் சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்தேன்.

எண்ணைக் கழிவு கிணறுகளில் ஊறுகின்றதா அது உண்மைதான என அறியும் பொருட்டு இன்று மகாஜனக் கல்லூரிக்கு கிழக்குப்புற எல்லையோடு இருக்கும் எனது மனைவியின் தங்கையான எனது மைத்துனியுடன் ஸ்கைப் மூலமாக தொடர்பு கொண்டு கேட்டேன்.

மகாஜனக் கல்லூரியின் கிழக்குப்புற எல்லையோடு இருக்கும் காணி எனது மனைவியின் தந்தைவழிப் பேரனுடையது.மகாஜனக் கல்லூரிக்கும் இக்காணியில் குடியிருப்பவர்களுக்கும் பொதுக்கிணறில் இவர்களுக்கு பங்குண்டு. குடிப்பதற்கும் மற்றும் தேவைக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீரையே அவர்கள் பயன்படுத்துவார்கள்.அதே போல் மகாஜனக் கல்லூரியும் அந்தக் கிணற்றுத் தண்ணீரையே பாவிப்பார்கள்.

இனி நான் மைத்ததுனியைக் கேட்ட கேள்விகளும் அவர் சொன்ன பதில்களும்.

கேள்வி: சுண்ணாகத்தில் ஏற்பட்ட எண்ணைக்கழிவால் கிணறுகளில் எண்ணை ஊறுகிறதாமே உண்மையா உங்களுடைய கிணறிலும் எண்ணை ஊறியிருக்கிறதா?.

பதில: ஓமத்தான் எங்களுடைய கிணறும் ஒயிலாக இருக்கின்றது. இங்கை ஒரே பிரச்சனை. சுண்ணாகம் மல்லாகம் தெல்லிப்பளை மட்டுமல்ல, கோப்பாய் இருபாலை ஊர்களுக்கும் இப்ப பருத்தித்துறை வரை போயிட்டதாகவும் அறிகிறன்.

கேள்வி;: குடிக்கிறதுக்கு தண்ணீர் எங்கை எடுக்கிறியள்.

பதில்: உங்கடை வைரவர் கோவில் ( உங்கடை வைரவர் கோவில் என்பது மகாஜனக் கல்லூரியின் மேற்குப் புறத்தே உள்ள ஒழுங்கை
ங்கைக்கு மேற்கருகில் இருக்கும் ஞானவைரவர் கோவிலாகும்) கிணற்றில் இருந்து 20 லீற்றர் கானில் தண்ணி கொண்டு வந்து குடிக்கிறம்.

கேள்வி: அப்ப பள்ளிக்கூட பிள்ளையளுக்கு

பதில்: கோவிலடிக் கிணற்றிலிருந்து ராங்கில் தண்ணி கொண்டு வந்து அதை பள்ளிக்கூட தொட்டியில் பம்ப் பண்ணி அதை பிள்ளையள் குடிக்கினம்.

கேள்வி: அப்ப என்னெண்டு குளிக்கிறியள்.

பதில்: கிணற்றுத் தண்ணியிலைதான் குளிக்கிறம்.உடம்பெல்லாம் ஒரே எரிவு கண்ணெல்லாம் சிவந்து போச்சுது. முகம் வீங்கிப் போசு;சு சுரேன் குளிச்சதால் கண்ணெரிவோடு இருக்கிறான் (சுரேன் என்பது மைத்துனியின் இரண்டாவது மகன். மைத்துனியின் முகத்தைப் பாரத்தேன் அது வீங்கிப் போயிருந்தது) எல்லாக் கிணறுகளிலும் எண்ணைக் கசியத் தொடங்கி விட்டது. சுண்ணாகத்தில் இருக்கும் மூத்தவன் குடிக்கவும் முடியாமல் குளிக்கவும் முடியாமல் பிள்ளைகளுக்கு தண்ணியில்லாமல் கஸ்டப்படுகிறான்(மூத்தவன் என்பது மைத்துனியின் மூத்த மகன்)

கோவிலடிக் கிணற்றில் போய்க் குளியுங்கள்.இனி உந்தத் தண்ணியிலை குளிக்க வேண்டாம் என்றேன்.

கேள்வி: யூனியன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியது போல் மகாஜனக் கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை வட மாகாண சபை சுற்றுபு;புறச் சூழல் அமைச்சர் தடுக்க வந்தாராமே செய்திகள் மூலம் அறிந்தேன் உண்மையா?

பதில்: கேள்விப்பட்டனான்

கேள்வி: கிணற்றுத் தண்ணியை இறைச்சு சுத்தப்படுத்த ஏலாதா?

பதில்: இல்லையத்தான் அப்படிச் செய்தால் ஓயில் இன்னும் கனக்க வரத் தொடங்கிவிடும்.
மேலே உள்ளவை ஆதாரம். மேலதிக அதிர்ச்சிதரும் செய்தி. மின்பிறப்பாக்கியிலிருந்து இது வரை 400000 லீற்றர் கழிவெண்ணை வெளியேற்றப்பட்டிருக்கின்றது. 150 அடி ஆழத்திற்கு நிலத்தை துளையிட்டு அதற்குள் கழிவெண்ணை விடப்பட்டிருக்கின்றது.ஆதாரம்: உலகத்தமிழ் செய்தி இணையத்தளம்)

அதிர்ச்சிக்கு மேல் பெரும் அதிர்ச்சி என்னவென்றால் 150 அடி ஆழத்தில் விடப்பட்ட கழிவெண்ணை நிலக்கீழ் ஊற்றுடன் கலந்துவிட்டது. நிலக்கீழ் ஊற்று என்பது பல கிலோ மீற்றர்களுக்கு தொடர்ச்சியான வாய்காலாக இருப்பது. கிணறு வெட்டும் போது தண்ணீர் வருவதற்கு இவ்வூற்றுக்களே காரணம். இவ்வூற்றுக்கள் பல கிளைகளாக நிலத்தடியில் கற்பாறை அடுக்குகளில் அங்கும் இங்குமாக பரந்து இருப்பவை (பூகற்பவியல் படித்தவர்களுக்கு இது தெரியும்)

எண்ணைக் கழிவினால் யாழ் மாவட்டத்தில் பல ஊர்கள் எதிர்காலத்தில் பயிர்களை விளைவிக்க முடியாத நிலங்களாகப் போகின்றன.

சுண்ணாகம் என்ற ஊரை மையப்படுத்தி நாற்புற ஊர்கள் எண்ணைக்கசிவினால் கிரோசிமாவாகப் போகின்றதா. இணுவில் வயல்வெளி, தாவடி வயல்வெளி, மகாஜனக்கல்லூரிக்கு முன்பாக உள்ள அம்பனை வயல்வெளி எனப் பரந்த வயல்வெளி அளவெட்டி பரந்த வலய் வெளி, சுண்ணாகம் நிலாவரை பரந்த வயல்வெளி பயிர்களுக்கு நீர் இறைக்க முடியாத நிலை தோன்றப் போகின்றது.
நீரை இறைத்தால் தண்ணீரில் சிறிதளவு எண்ணைக் கழிவு கலந்திருந்தாலும் பயிர்கள் நாசமாகும் . நிலம் பழுதாகும். மண்ணின் வளம் சீரழியும்.நிலத்தின் கீழ் உள்ள நிலக்கீழ் படிவங்களும் மேற்பகுதி மண்ணும் மாசுபடும் அபாயம் தோன்றியுள்ளது.

நீரைக் குடித்தாலோ குளித்தாலோ உடல் நலியும் நோய் எற்படும்.

150 அடி ஆழத்தில் துளையிட்டு கழிவெண்ணையை விடுவதற்கு வட மாகாண சபை ஏன் அனுமதித்தது. எண்ணைக் கழிவை உலோகத்திலான இராட்சத கொள்கலனில் விட வேண்டுமென்று மின்பிறப்பாக்கி உரிமையாளர்களுக்குத் தெரியாதா?. அவர்களுக்கு இத்தொழில் சம்பந்தமான துறைசார் அடிப்படை அறிவே கிடையாதா?.வடமாகாண சபையின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சுக்குத் தெரியாதா?.

யாழ் மாவட்ட ஊர்கள் பாலைவனமாக மாறப் போகின்றதா?.

ஒரு வருடத்தில் நிலத்தையும் நீரையும் மாற்ற முடிந்தால் நல்லதுதான்.புலம்பெயர்ந்து உள்ள நாம் கட்டாயம் உதவ வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயம், யாழ் பல்கலையோடு தொடர்பில் இருக்கிறீர்களா? அங்கே புவி விஞ்ஞானத் துறை (geology) இல்லை. ஆனால் பேராதனையில் நல்ல புவி விஞ்ஞானத் துறை இருக்கிறது. இந்த விடயத்தில் யாழ் பல்கலை தான் தலைமை தாங்கி நீங்கள் குறிப்பிடும் யோசனைகளை மக்களுக்கோ அரசுக்கோ கொண்டு செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணீர்  பிரச்சினை என்பது உலகளாவிய ரீதியில்

எதிர்காலத்தில்  பெரும் சவாலுக்கு முகம் கொடுக்கக்கூடிய முக்கிய பிரச்சினையாக உள்ளது

இதனை தனி  நபர்களோ

ஏன் தனி ஒரு அரசோ தீர்த்துவிடமுடியாது

அதிலும் சந்தேகத்துக்கு உட்பட்டு

நம்பிக்கைகளை இழந்து நிற்கும் புலம் பெயர் அமைப்புக்களை நம்பி நாட்களைக்கடத்திக்கொண்டிருக்கமுடியாது.

ஆனால் உலக ரீதியில்

இந்த சவாலை சமாளிப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்குள்

எமது சிக்கல்களையும் இணைத்து விடுவதன் ஊடாக 

நிரந்தரத்தீர்வை நோக்கிநகரமுடியும்.

இதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் முயற்ச்சிக்கணும்

சாத்தியமானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் மேலே தந்த முன்றாவது இணைப்பில் Meththika Vithanage1*, Thushyanthi Mikunthan2, Selverajah Pathmarajah3, Sutharsiny Arasalingam4 and Herath Manthrithilake4 ஆகிய பல்கலைகழக மாணவர்கள் சுன்னாகத்திலும் அதன் சுற்றுப்புறத்திலும் விவசாய உர பாவனையால் நிலத்தில் சேர்ந்திருக்கும் நைத்ரெட்டின் இரசாயனத்தின் தாக்கத்தை சுமார் ஒரு ஆண்டுக்கு முன் ஆராய்ந்து கண்டறிந்திருக்கிறார்கள். இதுபோலவே இன்றைய கழிவு எண்ணை விடயத்திலும் இதுபோன்ற ஒரு ஆராய்ச்சிதான் முதற்படியாக அமையமுடியும் என்பது எனது கருத்து. இவர்கள் மீண்டும் அதுபோன்ற ஒரு ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியுமா என்பதையும் அதன் பாதிப்புகளில் இருந்து சுற்று சூழலை பாதுகாப்பது எப்படி என்று விசாரித்து இவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தால் நல்லது என்று நினைக்கிறேன். இந்த மாணவர்களை அறிந்தவர்கள் யாராவது யாழ் கழத்தில் இருந்தால் முன்வந்து இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். தொடர்புகளுக்கு meththikavithanage@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்க்கு உள்ளுரில் பொறுப்புடன் கவனிக்ககூடிய தொடர்புகள் உள்ளவர்கள் முன்வர வேண்டும். வெளிநாடுகளில் இருந்துகொண்டு இதை கவனித்து செய்வது சிரமம். இதை செய்து முடிக்க ஆகும் செலவுத் தொகையில் எனது பங்களிப்பாக இலங்கை ரூபா 1 இலட்சம் வழங்குவேன். எனது கடைசி இணைப்பில் காட்டியபடி சர்வதேச ரீதியிலும் எமது வேண்டுகோளை முன்வைக்க முடியும். இந்த விடயத்தில் வடமாகான அரசு எதுவித காத்திரமான நடவடிக்கைகளிலும் இறங்காமல் மௌனம் சாதிப்பது ஏனென்று புரியவில்லை. உத்தியோகபபூர்வமான வேண்டுகோளை அவர்கள் விடுக்கும் பட்சத்தில் எத்தனையோ நாடுகள் முந்தியடித்து வந்து உதவ காத்திருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டு அரசாங்கங்களின் அல்லது பொது நல நிறுவனங்களின் அனுசரணை இல்லாமல் இதை செய்து முடிப்பது எளிதல்ல. அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய முன்பாக பாதிக்கும் காரணியை அங்கிருந்து அகற்ற வேண்டும் அல்லது அதை உடன் நிறுத்தவேண்டும். அதற்க்கு சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியமும் ஏற்படலாம்.

Link to comment
Share on other sites

எனக்கு யாழ் பல்கலையுடன் சிறு தொடர்பே உள்ளது (படித்தது மொறடுவை பல்கலை).

தற்போதைய நிலவரப்படி
அந்த நிறுவனம்  நீதிமன்றால் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டுள்ளது. ஆனால் அவர்கள் உயர் நீதிமன்றுக்கு செல்வதாகத் தெரிகிறது.
 
இதுவரை நீரில்  Pb, Cr heavy metals (above the tolerance level) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு எண்ணெய்ப்படலம் வடக்கு நோக்கி வேகமாக நகர்வதாககவும் குறிப்பிடப்படுகிறது.  ஆய்வுகூட பரிசோதனைகள் மிக மெதுவாக பல முட்டுக்கட்டைகளுடன் (Norther power is a multi nationational company with huge finacial background) நகர்வதாகத் தெரிகிறது. 
இதுவரை எந்தவிதமான தொடர் ஆய்வுகளும் நடத்தப்படவில்லை (To understand the dynamics of the problem). இதை நடத்துவதன் மூலம் பிரச்சனையின் அளவையும் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதையும் எதிர்வு கூறமுடியும்.
 
மேலும் சில விபரங்கள்..
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதயம், யாழ் பல்கலையோடு தொடர்பில் இருக்கிறீர்களா? அங்கே புவி விஞ்ஞானத் துறை (geology) இல்லை. ஆனால் பேராதனையில் நல்ல புவி விஞ்ஞானத் துறை இருக்கிறது. இந்த விடயத்தில் யாழ் பல்கலை தான் தலைமை தாங்கி நீங்கள் குறிப்பிடும் யோசனைகளை மக்களுக்கோ அரசுக்கோ கொண்டு செல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?

யாழ் பல்கலைக்கழகத்தின் சமூக தொலைநோக்கற்ற கற்றல் முறைகள் தான் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைக்கு காரணம். ஒரு பிராந்திய கல்விக்கூடம் அந்தப் பிராந்திய.. சமூக.. பொருண்மிய.. சூழலியல் காரணிகள் குறித்து எதிர்வு கூறி மக்களை.. ஆட்சியாளர்களை எச்சரிக்கல்லைன்னா..  எச்சரிக்க வக்கில்லைன்னா... அது ஏன் அங்க இருக்குது..?! :icon_idea::rolleyes::(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாழ் பல்கலையுடன் சிறு தொடர்பே உள்ளது (படித்தது மொறடுவை பல்கலை).

தற்போதைய நிலவரப்படி
அந்த நிறுவனம்  நீதிமன்றால் தற்காலிகமாக இடை நிறுத்தப் பட்டுள்ளது. ஆனால் அவர்கள் உயர் நீதிமன்றுக்கு செல்வதாகத் தெரிகிறது.
 
இதுவரை நீரில்  Pb, Cr heavy metals (above the tolerance level) இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு எண்ணெய்ப்படலம் வடக்கு நோக்கி வேகமாக நகர்வதாககவும் குறிப்பிடப்படுகிறது.  ஆய்வுகூட பரிசோதனைகள் மிக மெதுவாக பல முட்டுக்கட்டைகளுடன் (Norther power is a multi nationational company with huge finacial background) நகர்வதாகத் தெரிகிறது. 
இதுவரை எந்தவிதமான தொடர் ஆய்வுகளும் நடத்தப்படவில்லை (To understand the dynamics of the problem). இதை நடத்துவதன் மூலம் பிரச்சனையின் அளவையும் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதையும் எதிர்வு கூறமுடியும்.
 
மேலும் சில விபரங்கள்..

நன்றி, என்னுடைய கருத்து இது:

1. இப்படியான மதிப்பீடு ஒரிரு மாதங்களிலேயே செய்யக் கூடிய ஒரு விடயம்.

2. ஆனால் யாழ் பல்கலையின் யாராவது ஆய்வாளர் ஒருவர் பேராதனையின் புவி விஞ்ஞானப் பிரிவைத் தொடர்பு கொண்டு உதவி கோர வேண்டும். டாக்டர் சந்திரஜித்தின் தொடர்பு விபரம் உங்கள் தனி மடலுக்கு அனுப்பியுள்ளேன். இவர் ஏற்கனவே இப்படியான சூழல் மாசடைதல் விடயங்களில் மாதிரிகள் சேகரித்த அனுபவம் உடைய ஒருவர். மேலும், நச்சுப் பொருட்களை அளவீடு செய்யும் ஜெர்மன் நிறுவனம் ஒன்றுடன் இவருக்குத் தொடர்புகள் இருக்கக் கூடும்.

3. இதற்குச் செலவு ஏதும் ஆனால் வணங்காமுடியின் நிதி உதவியைப் பரிசீலிக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான செயல் திட்டத்துடன் என்னை அணுகுவதற்க்கு மின்னஞ்சல்: vanangaaamudi@gmail.com

Link to comment
Share on other sites

அவுஸ்ரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நான் பங்கு பற்றிய இது தொடர்பான கலந்துரையாடல்.

Link to comment
Share on other sites

சுன்னாகத்தை அண்மித்த பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்தமை தொடர்பாக அவுஸ்திரேலிய நீர்வள நிபுணரின் கருத்து

d8c4ce9b8c4891ed53f73712a567ff1f
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்குடாநாட்டில் வாழும் எமது உறவுகளுக்கு இதுபற்றிய விழிப்புணர்வோ அன்றேல் இதனது பாரிய தாக்கம் பற்றிய புரிதலோ இதுவரை ஏற்படவில்லை எனவே தெரிகிறது.

தெற்கிலிருந்து கொண்டுவரும் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்புக்குள்ளாக்கூடிய இரசாயனங்களை குடாநாட்டின் வளமுள்ள மண்ணில் கொட்டும்போதே, சிங்களவன் சுதாகரிச்சிட்டான் இவர்கள் எதையுமே கண்டுகொள்ளமாட்டார்கள் என, அதன் விளைவே நிலத்தடிநீர் மாசு.

தவிர, இதுபற்ரி விரைவான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய மாகாணசபை கருஜெயசூரியாவிடம் வாகனங்களை வாங்குவதில் மும்மரமாக இருக்குது. விக்கினேஸ்வரன் அண்மையில் சிங்களத் தலைமையைச் சந்தித்தார் இதுபற்றி மூச்சுவிட்டதாகக்கூடத் தெரிவிக்கவில்லை.

ஐங்கரநேசன் அதுக்கும்மேல போய் கவனயீர்ப்பு நடத்துபவர்களை மிரட்டுகிறார் தவிர இதற்கான செயலணியில் இடம்பெற்றிருந்த ஒரு தகுதிவாய்ந்தவரை இடைநிறுத்தியுள்ளார்.

அவருக்கு நான் ஒரு குறுஞ்செய்தியை அவரது முகப்புத்தகத்தின்மூலம் அனுப்பியிருந்தேன் அது தேர்த்தல் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட முகப்புத்தம் போலுள்ளது அதற்குப்பின்பு வாக்களைத்த மக்களைப்போல் அதுகும் கவனிக்கப்படாது விடப்பட்டிருக்கு.

யாழ்குடாநாடெங்கும் ஆழ்துழைக்கிணறுகள் அமைத்து மழைநீரினை நிலத்தடியில் செலுத்துவதன்மூலம் குறுகிய காலத்தில் இல்லாது நான்கு ஐந்து வருடங்களில் நிலைமையக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம்

தீவகத்தின் சாட்டிப்பகுடியின் நிலத்தடி நீரோட்டம் மூலமும் கீரிமலையி காணப்படும் நீரூற்ரின்மூலமும் யாழ்குடாநாட்டின் நிலத்தடி நீரின் வழித்தடம் தெற்கிலிருந்து வடக்காகப் பயணிக்கின்றது எனக்கொள்ளலாம்.

இதன்படி குடாநாட்டின் மழைகாலங்களில் வீணாகவே கடலில் சேரும் மழைநீர குடாநாட்டின் மழைநீர் வழிந்தோடும் பகுதிகளை ஆராந்து அதற்கமைவாக இலகுவான பொறிமுறைகளுடன்கூடிய வடிகட்டல்களுடனான ஆழ்துளைக்கிணறுகளை அமைத்து நிலத்தடியில் சேர்த்திடல்வேண்டும்.

இவை ஒரு சில நூறு ஆழ்துழைக் கிணறுகள்மூலம் வெற்ரியளிக்கப்போவதில்லை பல்லாயியரம் கிணறுகள் மூலம் நிலத்தடிக்கு மழைநீரைக் கொண்டுசெல்லவேண்டும். இதன் மூலம் யாழ்குடாநாட்டின் நிலத்தடியில் குளிகை வடிவிலாகத் தேங்கியிருக்கும் நிலத்தடிநீர் அதிகரித்து அதகமான அமுக்கத்தால் வடக்குநோக்கிப் பயணபட்டு கடலுடன் சேர்வது அதிகரிக்கும் அதன்மூலம் நிலத்தடிநீரில் கலந்துள்ள கழிவு எண்ணை மற்றும் நைத்திரேட்டினது அடர்த்தியைப் படிப்படியாகக் குறைக்கலாம்.

இதற்கான இலகுவான பொறிமுறைகளைக் கண்டறிதல் அவசியம் தவிர ஒவ்வொரு வீடுகளிலும் வழிந்தோடும் மழைநீரையும் நிலத்துக்கு அடியில் கொண்டுசேர்ப்போமாகவிருந்தால் இந்த அனர்த்தமே யாழ் குடாநாட்டின் குடிநீர்த்தேவயை பூர்த்திசெய்த வரப்பிரசாதமாக அமையும்.

தமிழ்நாட்டின் சென்னை புறநகர்ப்பகுதியில் ஒரு பொது அமைப்பும் சென்னை மாநகராட்சியும் சேர்ந்து இப்படியானதொரு முயற்சியில் ஈடுபாட்டுள்ளது அம்முயற்சி முதற்படிநிலை வெற்றியையும் கொடுத்துள்ளது இதனை விரிவான முறையில் இன்னமும் செயற்படுத்த சென்னை மாநகராட்சி தீர்மனித்துள்ளது.

ஐங்கரநேசன் மதராஸ் கிறிஸ்ரியன் கல்லூரியில்தான் படித்தவர் அவருக்கு இந்த விடையங்களை ஓரளவுக்குக் கையாளக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அனால் என்ன உள்குத்தோ தெரியாது இந்த விடையத்தை இடக்குமுடக்காகவே கையாளுகிறார்.

(வீணாகக் கடலில் சேர்வது என்பதே ஒரு எடுகோளேதவிர காலாகாலத்துக்கு கடலில் ஒருபகுதி மழைநீர் போய்ச்சேரவே வேண்டும் அப்போதுதான் அப்பகுதியில் காணப்படும் கன்னாப்பத்தை மரங்களும் ஏனைய உயிர்வாழ்வனவும் தமக்குத் தேவையான மிதமான உப்புச்செறிவான நீரினைப்பெற்றுக்கொள்வதுடன் சில கடல்வாழ் உயிரினங்களது இன விருத்திக்கு வண்டல் கலந்தநீர் எப்போதுமேதேவை) 

Link to comment
Share on other sites

வணக்கம்!
 
இந்த இணையத்தைப் பற்றி எனது UKஇல் உள்ள எனது அண்ணா மூலம் அறிந்தேன். நான் யாழ்ப்பாணத்தில் வசிப்பதால் இவ்விடயம் சம்மந்தமாக எனக்குத் தெரிந்த சில விடயங்களைப் பகிர அனுமதி தருவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
நான் இலங்கையில், கொழும்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். எனது நிறுவனமும் குடி நீர், மற்றும் கழிவு  நீர் சமந்தமான பரிசோதனைகளையும் செய்து வருகிறது. இந்த வகையில், கடந்த 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில்  (மாசி மாதம் - month of February) எமது நிறுவன நிபுணர் குழு ஒன்று யாழ். குடாநாட்டின் பாதிபிற்குள்ளான பகுதிகளுக்குச் சென்று ஆய்விற்குரிய நீர் மூலங்களை சேகரித்துச் சென்றது. இதற்குரிய அழைப்பு மருத்துவ பீட பீடாதிபதியினால் மேற்கொள்ளப் பட்டதென்பது குறிப்பிட வேண்டிய ஒரு விடயம். அந்த நிபுணர் குழுவில் இருந்தோருக்கு யாழ்பாணம் புதிது என்பதால் நானும் எனது நிறுவன நிபுணர் குழுவுடன் சென்றிருந்தேன். முதல் நாள் தெல்லிப்பளை MOH அதிகாரி மருத்துவ பீடத்துக்கு வந்து எம்முடனும், பீடதிபதியுடனும் கலந்தாலோசித்த பின், நேரடியாக தெல்லிப்பளை சுகாதார பரிசோதகர் பணிமனைக்குச் சென்றோம். அங்கு எமக்காக காத்திருந்த PHI அதிகாரிகளுடன் தெள்ளிப்பளை மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களுக்கு சென்று, MOH அலுவலகத்தில் இது சம்மந்தமாக முறைப்பாடு செய்தவர்களின் வீடுகளிலும், மற்றும் கோவில், பாடசாலைகள், பொது கிணறுகள் - முக்கியமாக பிரதேச சபையால் பொதுமக்களுக்கு நீர் வழங்கலுக்கு உபயோகப்படுத்தும் கிணறுகள் - போன்றவற்றிலும் நீர் மாதிரிகளைச் சேகரித்தோம்.
நீரின் மேற்பரப்பில் எண்ணெய்ப்படையினை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரும்பாலான பாதிக்கப்பட்ட வீடுகளில், ஒரு 05 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் முதல் பிறந்து சில மாதங்களேயான குழந்தைகள் இருப்பதை அவதானிக்கும் போது, மனம் பதைபதைபிட்குள்ளானது.
அக்குடும்பங்களில் உள்ள பெரியோர், தமது நீர் மாசுபடுவதால் தம்கேற்படும் பாதிப்பைப் பற்றி கவலை கொள்ளவில்லை. தம் எதிகாலசந்ததியினரை எண்ணி வருந்துவதைக் காணக் கூடியதாக இருந்தது. ஒரு மூதாட்டி, கையில் தன் பேரப்பிள்ளையை வைத்திருந்தார். அவர் எம்மைக்  கண்டவுடன், கூறிய வார்த்தைகள், "தம்பி! (தங்கள் கிணறைக் காட்டி) உந்த கிணத்துக்க எண்ண இருக்குமெண்டு PHI பெடியள் அறிவிச்சதில இருந்து நான் 3km இக்கு அங்கால இருக்கிற (கோவிலின் பெயரைக் குறிப்பிட்டு) கோவிலிலை தான் போய் தண்ணி மொண்டு கொண்டு வாறனான். (கையிலிருக்கும் குழந்தையைக் காட்டி) இதுண்ட அம்மாவும், அப்பனும் தோட்டவேலைக்கு போட்டுதுகள். தண்ணி எண்டு இந்த பிள்ளை அழுதால் எண்ட கையாள விஷத்தை குடுக்கிற மாதிரி இருக்கு."
அவருடைய கிணற்றின் மேற்பரப்பில் எண்ணெய்ப் படிமத்தை தெளிவாக அவதானிக்க முடிந்தது. இது தெள்ளிப்பளையை அண்டிய பிரதேசமாகும்.
 
J /Union கல்லூரி உட்பட, சில பாடசாலைகளிலும் மாதிரிகளைச் சேகரித்தோம்.
 
வசாவிளான் பகுதியில் ஒரு சிலரின் தோள்களில் அரிப்பு ஏற்பட்டதாகவும் அதன் மூலம் ஏற்பட்ட காயங்களை காண முடிந்தது. அவை நெருப்பு சுட்ட காயங்களுக்கு ஒப்பானவையாக காணப்பட்டது. மற்றும் கண்களில்  எரிச்சல் ஏற்பட்டு சிலரின் கண்கள் வீக்கமுற்று காணப் பட்டன. இவை சாதாரண கண் நோயாகக் கூட இருக்கலாம் என அவர்களால் கருதப் பட்டுள்ளது.
 
மாதகல், இளவாலைக் கடற்கரைகளில் அமைந்துள்ள சில கடற்படை முகாம்களுக்குள் இருக்கும் கிணறுகளும் இவ்வாறு பதிக்கப் பட்டுள்ளன. நம்மால் அவற்றைப் பார்வையிட மட்டுமே முடிந்தது. ஏனெனில், முன்னரே அறிவிக்கப் பட்டதிட்கமைய, MOH அலுவலகத்தில் பதிவுசெய்த இடங்களில் மட்டுமே 100 மாதிரிகளை சேகரிக்க தயார் நிலையில் சென்றிருந்தோம். இருபினும், மேலும் 20 கலன்களை வைத்திருந்த போதும் அவை வாகனத்தில் இடப் பற்றாகுறை காரணமாக, நாம் தங்கி இருந்த விடுதியில் விட்டு வந்திருந்தோம்.
 
சுதுமலை பகுதியில்கூட இவ் எண்ணைக் கழிவு இருப்பது எமது பரிசோதனை அறிக்கை மூலம், அறியக் கிடைத்துள்ளது. எமது அலுவலக விதிகளுக்கு அமைய, எந்த சோதனை அறிக்கைகளையோ அல்லது சோதனை முடிவுகளையோ சமூக / பொது வலைத்தளங்களில் முழு விபரங்களையும் வெளியிட முடியாதுள்ளது என்பதை மனவருத்தத்துடன் அறியத்தருகிறேன்.
 
மிக விரைவாக பரிசோதனை அறிக்கையை சமர்பிக்கும்படி எம்மை அழைத்து சென்ற PHI உத்தியோகத்தர்களின் ஒரே வேண்டுகோளாக இருந்தது.
 
PHI உத்தியோகத்தர்கள் மிகவும் துடிதுடிப்புடன் செயலாற்றுவதைக் காணக் கூடியதாக இருந்தது. இது எங்கடை மண். இத பழுதாக விடமாட்டம். என்று எங்களுடன் சம்பாஷிக்கும் போது இடைக்கிடை கூறியவண்ணம் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
 
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் இருந்து, தம்புள்ள பொது மரக்கறிச் சந்தைக்கு மரக்கறி ஏற்றுவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போதைய நிலவரத்திற்கமைய, யாழ் குடாநாட்டில் இருந்து செல்லும் மரக்கறிகள் திருப்பி அனுப்பப்படுவதாக அறியமுடிகிறது.

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி தமிழறிவு (உங்கள்  உறுப்பினர் பெயர் நல்லா இருக்கு). நீங்கள் எழுதியுள்ளவற்றை வாசிக்க வயிறே பற்றி எரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிகவும் நன்றிகள், தமிழறிவு...!!!

எந்தப் புண்ணியவானாவது எண்ணைப் பரவலின் மூலத்தைக் கண்டுபிடித்து அதை அழிக்க வேண்டும். ஆயிரம் பாடசாலைகளைக் கொண்ட அழகிய சிறிய தேசம். அரசியல் வெறித்தனங்களுக்குள் அகப்பட்டு சின்னாபின்னமாகக் கூடாது....!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிகவும் நன்றிகள், தமிழறிவு...!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.