Jump to content

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!

Recommended Posts

வட மொழி இலக்கியங்கள் என்பதற்காக அல்ல. அந்த இலக்கியங்கள் சொல்கிற விடயங்களிற்காக.

அது பற்றி (கீதை, ரிக் வேதம்) பல தடவைகள் நான் எழுதியிருக்கிறேன். அதிலே நான் சொல்லி இருக்கின்ற காரணங்கள் என்னுடைய முடிவுக்கு போதுமானவை.

ஒருவனுடை எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று சொல்கின்ற சாத்திரங்கள் எந்த மொழியில் இருந்தாலும், அவைகள் பொய்புரட்டுக்களாகவே இருக்க முடியும்.

சாத்திரம், வேதம் போன்றவை ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைப்பதற்காக எழுதப்பட்டவை என்பதை நான் பல முறை வலியுறுத்தி எழுதி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply

காதலித்து மணமுடித்தவர்கள்

அதீதமான காதலில் மற்றவர்  

துன்புறுவதை தாங்கமுடியாமல்தான்

பிரிந்து போகிறார்களோ என்னவோ? :idea:

ம் வேற தம்பீ கோபிதா என்ன ளொள்ளா

அல்லது அனுபவமா ??

:? :? :? :? :?

Link to comment
Share on other sites

என் அம்மாவுக்கு "O" Negative இரத்தம்தான் எண்று வைத்திய அறிக்கை சொல்லுகிறது... நானும் தீர விசாரித்து விடேன் அம்மாவுக்கு எந்த செவ்வாயும் குற்றம் இல்லையாம்...! :wink: :lol::lol:

Link to comment
Share on other sites

வட மொழி இலக்கியங்கள் என்பதற்காக அல்ல. அந்த இலக்கியங்கள் சொல்கிற விடயங்களிற்காக.

அது பற்றி (கீதை, ரிக் வேதம்) பல தடவைகள் நான் எழுதியிருக்கிறேன். அதிலே நான் சொல்லி இருக்கின்ற காரணங்கள் என்னுடைய முடிவுக்கு போதுமானவை.

ஒருவனுடை எதிர்காலத்தை கணிக்க முடியும் என்று சொல்கின்ற சாத்திரங்கள் எந்த மொழியில் இருந்தாலும், அவைகள் பொய்புரட்டுக்களாகவே இருக்க முடியும்.

சாத்திரம், வேதம் போன்றவை ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் மற்றவர்களை ஏமாற்றிப் பிழைப்பதற்காக எழுதப்பட்டவை என்பதை நான் பல முறை வலியுறுத்தி எழுதி உள்ளேன்.

அப்பிடி எல்லாவற்றையும் தட்டிக்களிக்க முடியாது... ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் அத்தனை அர்த்தங்கள் இருக்கின்றது... கருங்கல்லுக்கு அவிபாகம் செலுத்தி, மந்திரங்கள் உச்சரித்து, ஆகமவிதிகளின்படி கட்டப்பட்ட கோயில்களுக்கு தனிமையில் போய்ப்பாருங்கள்.... உங்கள் மனது அமைதிபெறுவதை உங்களாலேயே தடுக்க முடியாது...!

என்னதான் ஆரியர் எண்று ஒதுக்கினாலும் எங்களின் கலாச்சாரத்துக்கும் முறைகளுக்கும் வடக்கர்களின் முறைகளுக்கும் வித்தியாசம் இருக்கின்றது... அதை அப்படியே எங்களின் முன்னோர்கள் பின் தொடரவில்லை... காரணகாரியங்களை அறிந்தே தொடர்ந்து இருக்கிறார்கள்.... இண்றுபோல வேறுவிடயங்களை விட எம்மவர்கள் வாழ்வை செம்மைப்படுத்தலுக்காகவே நேரத்தை செலவளித்தார்கள்... ஆனால் நாங்கள் எங்களின் இஸ்ரவாழ்வுக்காய் அவற்றை ஒதுக்க காரணம் கண்டுகொள்ளுகின்றோம்...! அவ்வளவுதான்..

காதல் என்பது வெறும் உடற்கவர்ச்சியாலும்( infatuation) கற்பனையாலும்(imagination) கட்டி எழுப்பப்படும் விடயம்... இவை இரண்டும் இல்லாமல் காதல் இல்லை.. எண்றைக்கு கவர்ச்சி திகட்டிப்போய், எதிர்பார்ப்பு பொய் என்பது தெரிகின்றதோ அண்று காதல் தீர்ந்து போய்விடும்... பின்னர் அதேகாதல் வேறு ஒருவருடன் வந்தால்கூட ஆச்சரியம் இல்லை...!

Link to comment
Share on other sites

சாத்திரிகள் பொய்யானவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு அவர்களே அடிக்கடி பொல்லுத் தருவார்கள்.

வழமையாக உலகக் கிண்ண கிறிக்கெற் போட்டி போன்றன நடைபெறுவதற்கு முன்னர் இந்தியாவிலுள்ள 'மிகப் பிரபலமான' சாத்திரிகள் எல்லாம் தங்கள் சோதிடப்புத்தியைப் பாவித்து இந்த அணிதான் வெற்றிபெறும் என்று ஆரூடம் கூறுவார்கள்.

என்னுடைய ஞாபகத்தின்படி சென்ற உலகக் கிண்ணத்தை இந்தியா வெற்றி பெறும் என்று தான் பெரும்பாலான சோதிடர்கள் சொன்னார்கள். ஆனால்.....

அதுமட்டுமாஇலங்கை குரு பெயர்நதுவிட்டார். சனி வந்துவிட்டார் என்று என்னவெல்லாமோ சொல்லி இலங்கை இனப்பிரச்சினை இந்த வருடத்திற்குள் சமாதானமாகத் தீர்ந்து விடும் என்று எத்தனை தடவை சொல்லி விட்டார்கள். பாவம் அவர்கள் சாத்திரத்தை மட்டுமே பார்த்துச் சொல்லி ஏமாந்து விடுகிறார்கள். அதைவிடஇலங்கை வரலாற்றையும் சிங்கள் ஆட்சியாளர்களின் வரலாற்றையும் படித்துச் சொன்னால் இதைவிடச் சரியான கணிப்பைச் சொல்லியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

மணிவாசகன் ஒருவருக்கும் பொல்லாக தெரியாத அறிவை நீங்கள் பெற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

சாத்திரத்தின் அடிப்படையில் பொருத்தம் பார்க்கும் பொழுது எங்கையாவது ஒரு இந்துவிற்கும் இஸ்லாமியருக்குமோ அல்லது இந்துவுக்கும் கிறீஸ்தவருக்குமோ பாக்கிறவையா? எப்பவும் ஒரு இந்துவுக்கும் இந்துவுக்கும் இடையில் தான் பார்க்கிறது.

பிரித்தானியாவில வலப்பக்கமாக வாகனங்கள் ஓடுது ஆனா கால்வாயை கடந்து போனால் வலப்பக்கம் ஓடுறதில நம்பிக்கை இல்லாமால் இடப்பக்கமாக ஓடுறாங்கள். இரண்டு பேரும் கிறீஸ்தவர்கள் ஆனா ஒரே பக்கமா வாகனங்கள் ஓடுற அளவிற்கு பொருந்த போன பிறப்பில குடுத்து வைக்கேல்லையோ எண்டும் தெரியாது. பிறகு என்னெண்டு இஸ்லாமியரை கொண்ட பாக்கிஸ்தான் இந்துக்களை கொண்ட இந்தியாவை துடுப்பாட்டத்தில் வெலும் என்று உறுதியாக சொல்ல முடியும் சாத்திரத்தில. இல்லாட்டி பாக்கிஸ்தானை அவுஸ்ரேலியா வெல்லுமா என்று சாத்திரம் பாக்கிறது? நீங்கள் சும்மா பொல்லு புல்லு என்று கற்பனை வழக்காதேங்கோ. பிழை என்று முற்றுமுழுதாக ஒதுக்கிவிட முடியாது இதுகள் எல்லாம் அந்த துறை சார்ந்தவர்களால் தான் விளக்கமளிக்க முடியும்

அப்படி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டுமாயின், முதலில் தீர்மானிப்பவர்கள் அத்துறையில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

மேற்கோள் :

"கருங்கல்லுக்கு அவிபாகம் செலுத்தி, மந்திரங்கள் உச்சரித்து,ஆகமவிதிகளின்படி கட்டப்பட்ட கோயில்களுக்கு தனிமையில் போய்ப்பாருங்கள்.... உங்கள் மனது அமைதிபெறுவதை உங்களாலேயே தடுக்க முடியாது...!"

சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஒரே சாதிக்காரர் கூடி நின்றா மனம் அமைதியாத்தானே இருக்கும். ஆகம விதியை மீறி மற்ற சாதிக்காரரும் உள்ளே வந்தாற்தான் அமைதி கெட்டுப் போகும். :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

மணிவாசகன் ஒருவருக்கும் பொல்லாக தெரியாத அறிவை நீங்கள் பெற்றுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

சாத்திரத்தின் அடிப்படையில் பொருத்தம் பார்க்கும் பொழுது எங்கையாவது ஒரு இந்துவிற்கும் இஸ்லாமியருக்குமோ அல்லது இந்துவுக்கும் கிறீஸ்தவருக்குமோ பாக்கிறவையா? எப்பவும் ஒரு இந்துவுக்கும் இந்துவுக்கும் இடையில் தான் பார்க்கிறது.

பிரித்தானியாவில வலப்பக்கமாக வாகனங்கள் ஓடுது ஆனா கால்வாயை கடந்து போனால் வலப்பக்கம் ஓடுறதில நம்பிக்கை இல்லாமால் இடப்பக்கமாக ஓடுறாங்கள். இரண்டு பேரும் கிறீஸ்தவர்கள் ஆனா ஒரே பக்கமா வாகனங்கள் ஓடுற அளவிற்கு பொருந்த போன பிறப்பில குடுத்து வைக்கேல்லையோ எண்டும் தெரியாது. பிறகு என்னெண்டு இஸ்லாமியரை கொண்ட பாக்கிஸ்தான் இந்துக்களை கொண்ட இந்தியாவை துடுப்பாட்டத்தில் வெலும் என்று உறுதியாக சொல்ல முடியும் சாத்திரத்தில. இல்லாட்டி பாக்கிஸ்தானை அவுஸ்ரேலியா வெல்லுமா என்று சாத்திரம் பாக்கிறது? நீங்கள் சும்மா பொல்லு புல்லு என்று கற்பனை வழக்காதேங்கோ. பிழை என்று முற்றுமுழுதாக ஒதுக்கிவிட முடியாது இதுகள் எல்லாம் அந்த துறை சார்ந்தவர்களால் தான் விளக்கமளிக்க முடியும்

அப்படி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டுமாயின், முதலில் தீர்மானிப்பவர்கள் அத்துறையில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டும்.

சரி குறுக்காலை போவான். இஸ்லாமியருக்கும் இநதுக்களுக்கும் இடையில் சோதிடத்தைத் தொடர்பு படுத்த முடியாது எண்ட விசயம் சோதிடப்புலிகளான இந்தப் பிரபல சாத்திரி மாருக்குத் தெரியாதோ?

Link to comment
Share on other sites

மேற்கோள் :

சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். ஒரே சாதிக்காரர் கூடி நின்றா மனம் அமைதியாத்தானே இருக்கும். ஆகம விதியை மீறி மற்ற சாதிக்காரரும் உள்ளே வந்தாற்தான் அமைதி கெட்டுப் போகும். :lol::lol::lol::lol:

உயர் சாதி அமைப்பு என்பது ஒரு அரசியல் வெளிப்பாடு... தலைமை ஏற்று இருக்கும் ஒரு சாராரின் வருமானம் அதிகரிப்பால் அவர்களின் கௌரவத்தை பேணுவதற்காக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைதான் இந்த சாதிய அமைப்புக்கள்...

எந்த வேதத்திலும் சாதியத்தை பற்றியும் மனித வேறுபாடுகள் பற்றியும் சொல்லப்பட்டது கிடையாது...! வேண்டுமானால் பிராமணர்களின் வாழ்வு நெறிபற்றி, அவர்களின் செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும் எண்றும் சொல்லப்பட்டு இருக்கலாம்( இராணுவ கட்டுப்பாடுகள் மாதிரி எண்று பாருங்களேன்) ... அப்படியும் பிராமணர்கள் அரசர்சளுக்கு(ஸூத்திரியர்கள்) கீழ்த்தான் பணியாற்றி வருமானம் ஈட்டினார்கள்... எந்த அரச அவைகளும் இவற்றை சீரமைக்க முன்வரவில்லை என்பதை மறந்து விடாதீர்கள்...!

Link to comment
Share on other sites

தாழ்த்தப்பட்ட மக்களை கோயில்களுக்குள் அனுமதிக்க மறுத்த, இதற்கு ஆகம விதிகளை ஆதாரம் காட்டி, இதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக் கொண்ட வரலாறுகள் பற்றி உங்கiளுக்கு தெரியவில்லை போல் இருக்கிறது.

நாளை வந்து எல்லாவற்றையும் சொல்கிறேன்.

அப்படி ஒரு செய்தி உண்மையிலேயே தெரிய வில்லை...!

ஆனால் மக்களின் அடிமைத்தனத்துக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் அரசர்களும் நிலச்சுவாந்துதாரர்களுமே காரணம் என்பது என் உறுதியான கருத்து... அது இந்து மத்திற்கு மட்டும் அல்ல எல்லா நாடுகளிலும் இருந்த முறைகளில் ஒன்று...

ஏற்றத்தாழ்வுகளை அழிக்க இங்கிலாந்துக்கு ஒரு "ரோபின் கூட்" மாதிரி யாராவது எங்களுக்கும் தோன்றி இருந்து இருக்கலாம்....! ஆனால் இங்கிலாந்தின் உயர் குடிகளுக்காகவும் மற்றயவர்களுக்காகவும் வேறு வேறான தேவாலயங்கள் இண்றும் இருக்கின்றன....! யார் வேண்டுமானாலும் உள்நுழையலாம் ஆனால் அங்கெல்லாம் அங்கத்துவம் வேண்டும் புசைகளை செய்வதுக்கோ பங்கெடுப்பதுக்கோ...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதங்களுக்குத் தான் சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் தகர்ப்பதாகச் சொல்லிக் கொள்வார்களே தவிர, மற்றும்படி சாத்தியமா என்று கேட்டால், நடைபெறாது.

இன்றைக்கு சபேசன் தனது பெயர், ஆரியப் பெயர் என்று ஒத்துக் கொண்டு விட்டு, அதை மாற்றம் செய்திருக்கின்றாரா என்று கேட்டால் அவரால் வெளிவர முடியாது. அவ்வறே சகோதர் நாரதர் தமிழரின் பண்பைப் பற்றிக் கதைக்கின்றார். ஆனால் அவர் சூட்டி வைத்திருக்கின்ற பெயர் "நாராயணா, நாராயணா" என்று வரிக்கு வரி சொல்லும் ஆரியக் கடவுளைப் போற்றிக் கொண்டிருப்பவரின் பெயரை.

எதையும் விவாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அது நடை முறைக்கு சாத்தியம் என்றால் தான், சரிவரும். அதற்கு ஒரு வகையில் முன்மாதிரியாக இருந்தால் அது மக்களிடம் என்னும் அதிகமாகவே எடுபடும்.

இராமகிஸ்ணரிடம் ஒரு பெண் வந்து, "தந்தையே! என் மகன், இனிப்பு பண்டங்களை அதிகமாகச் சாப்பிடுகின்றான். அதைத் தடுக்க அறிவுரை கூறுங்கள் என்றார். அவரும், சிறிது நேரம் யோசித்து விட்டு, ஒரு மாதம் கழிய வரச் சொன்னாராம். ஒரு மாதம் கழிய வந்த பின்பு, அச் சிறுவனுக்கு அறிவுரை கூறினாராம்.

இதைப் பார்த்த அச் சீடன் அவரிடம் கேட்டார். ஏன் உடனே சொல்வதை விட்டு, ஒரு மாதம் கழித்துச் சொன்னீர்கள் என்று. அப்போது அவர் சொன்னார். எனக்கும் இனிப்பு உண்ணும் பழக்கம் உண்டு. நான் இந்த ஒரு மாதத்தில் நிறுத்தி விட்டால் தான் எனக்கு, அதன் பிழைகளைத் தெரிந்து கொள்ளலாம் என்பதற்கே ஒரு மாதம் காலம் எடுத்துக் கொண்டேன் என்று.

ஆரியம் என்பது விடுதலை பெற முடியாத ஒன்றல்ல, ஆனால் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் சம்பிரதாயங்களை ஒரே கணத்தில் சொல்லி விட்டுப் போனால் நிச்சயம் அது சரிவரப் போவதில்லை.

ஆரியத்தை விட்டால், வேறு வழி என்ன என்று மக்களுக்கு தெளிவான பதில் வைத்தால் தான், அது சரி வரும். பெரியாரும் தனது முட்டாள்தனமாக ஆரியத்தை எதிர்கின்றேன் பேர்வழியாகக் காட்ட வெளிக்கிட்டு, கடைசி வரைக்கும் ஆரியத்தைப் பார்த்து குரைத்ததைத் தவிர, திராவிடத்துவம் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் காட்டியிருந்தால், அது நிச்சயம் வெற்றி அளித்திருக்கும்.

இங்கே, சம்பிரதாயத்தைத் தகர்க்கின்றோம், பகுத்தறிவை வளர்க்கின்றோம் என்ற போர்வழியாக காட்டுவது எல்லாம் மக்களிடம் இருந்து வேறு படுத்திக் காட்டுவதற்காக மட்டுமே என்பதாகவே உணர முடிகின்றது.

சாத்திரம் தொடர்பாக தெளிவான பதிலளிக்க கூடியவர் யாரும் இங்கு இல்லாததால், எதிரான கருத்துக்கள் மட்டுமே நிலைத்திருக்கின்றது அவ்வளவே! அதற்காக அது மூட நம்பிக்கை என்றோ, அல்லது எதிரான கருத்துக்கள் பகுத்தறிவு என்றே புூச்சுப் போடுவது சுத்த அறிவீனம்.

வெறுமனே கம்னியுசியம் என்றால் அமெரிக்காவை எதிர்ப்பது மட்டும் தான் என்ற கொள்கைக்குள் எவ்வாறு கம்னியுசிய வாதிகள் போனார்களோ, அவ்வாறே ஆரியம் எதிர்ப்பது தான் திராவிடத்துவம் என்றால் அதிலிருந்து நான் விலத்த விரும்புகின்றேன்.

ஆரியத்தை எதிர்ப்பதாக, மேலயத்தேயத்தை உள்ளே விடும் போக்கு சரியல்ல. தமிழ்மொழியைக் காக்கின்றோம் என்று இந்தியை எதிர்த்தவர்கள், இன்றைக்கு தமிழே அழிந்து விடும் அளவிற்கு ஆங்கிலத்தை வரவேற்பது போல ஒரு நிலையைத் தான் இது எட்டும்.

----------------------------------------------------------

Link to comment
Share on other sites

உங்களுடைய கருத்தோடு ஒத்துபோகிறேன் தூயவா....! நல்ல காத்திரமாக கருத்துக்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுமொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். இராணுவத்தோடு விபச்சாரம் செய்வது சாதாரண பண்பாட்டு மீறலாகத் தெரியும் சபேசனுக்கு, இங்கே பொருத்தம் பார்ப்பது என்பது சுத்த ஆபாச மோசடி என்று தலைப்பிடுவது எங்கோ இடிக்கின்றது.

Link to comment
Share on other sites

இன்று வரைக்கும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக முடியா து இருப்பதற்கு காரணம் ஆகம விதிகளே.

ஆகம விதிகளின் படி அனைத்து ஜாதியினரும் கோயிலுக்குள் நுளைய முடியாது. பார்ப்பனர் அல்லாதவர்கள் கருவறைக்குள் நுளைய முடியாது.

முன்பு தமிழக அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் கொண்டு வந்த பொழுது, பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றார்கள். ஆகமவிதிகளின் படி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக முடியாது என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்பொழுது மீண்டும் கலைஞர் அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இப்பொழுதும் ஆகமவிதியைக் காட்டி தடை வாங்கி விட்டார்கள்.

சிதம்பரத்தில் தில்லை நடராசர் கோயிலில் திருவாசகம் பாட முடியவில்லை. அதற்கும் ஆகம விதிகளைக காட்டி தடை வாங்கி வைத்திருக்கிறார்கள். சிதம்பரத்தில் திருவாசகம் பாட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்ததை யாரும் கேள்விப்படவில்லையா?

எல்லாவற்றையும் விடுங்கள். சைவத்தில் பெரும் நம்பிக்கை உள்ள நீங்கள் நந்தனாரால் ஏன் சிதம்பரத்திற்குள் போக முடியவில்லை என்று கேள்விப்படவில்லையா?

நந்தனாருக்கு சிவபெருமான் கொடுத்த தீர்ப்பு என்ன? சிதம்பரத்தில் உள்ள பார்ப்பனர்கள் தீயை வளர்த்து, அதற்குள் நந்தனார் இறங்கி புனித(?)வடிவெடுத்து சிதம்பரம் கோயிலுக்குள் நுளைந்தாராம்.

வைக்கம் போராட்டம் நடந்ததற்கு காரணமும் ஆகம விதிதான்.

ஆகமவிதி என்பது இப்படி இருக்க, ஆகமவிதிப்படி கட்டிய கோயிலுக்குள் எப்படி மன நிம்மதி வரும்? எங்கட சாதிக்காரர் மட்டும் வருகிற கோயில் என்றா?

Link to comment
Share on other sites

பெயர் பற்றி து}யவன் கேட்டிருந்தார். நியாயமான கேள்வி!

சபேசன்" என்பது ஒரு வட மொழிப் பெயர். சபா ஈசன் என்ற இரண்டு வடமொழிச் சொற்களை கொண்டிருக்கும் ஒரு பெயர்.

இதை எனது பெற்றோர் எனக்கு வைத்தார்கள். அவர்கள் ஆசையாக வைத்த பெயர் என்று பேசாது விட்டு விட்டேன்.

அவர்கள் பின்பற்றுகின்ற நம்பி;க்கை, வணங்குகின்ற உருவங்கள் என்று எதுவும் என்னிடம் இல்லை. பெயராவது இருந்து தொலையட்டும் என்று நினைக்கிறேன்.

ஆனால் இதை உறுதியாக சொல்ல முடியாது. திடீரென்று எனக்கு நான் து}ய தமிழில் பெயர் வைத்தாலும் வைப்பேன்.

ஆனால் ஒன்றை சொல்ல வேண்டும். எனது பெற்றோரிடம் இல்லாத விழிப்புணர்வு என்னிடம் இருக்கிறது. அவர்கள் அறியாமையில் எனக்கு வடமொழியில் பெயர் வைத்து விட்டார்கள்.

விழிப்புணர்வு பெற்ற நான் என்னுடைய மகளுக்கு து}ய தமிழில் பெயர் வைத்துள்ளேன்.

வடமொழிப் பெயர்களைக் கொண்ட என்னுடைய நண்பர்களிடமும் அவர்களுடைய பிள்ளைகளுக்கு து}ய தமிழில் பெயர் வையுங்கள் என்று வலியுறுத்துகிறேன்.

நீங்களும் உங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு து}ய தமிழில் பெயர் வையுங்கள்.

Link to comment
Share on other sites

து}யவன் சொன்னது:

"என்னுமொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். இராணுவத்தோடு விபச்சாரம் செய்வது சாதாரண பண்பாட்டு மீறலாகத் தெரியும் சபேசனுக்குஇ இங்கே பொருத்தம் பார்ப்பது என்பது சுத்த ஆபாச மோசடி என்று தலைப்பிடுவது எங்கோ இடிக்கின்றது."

அந்தப் பெண் பாலியல் தொழில் செய்ததாக யாரும் சொல்லவில்லை. "பாலியல் தொழில்" வேறு, "பாலியல் தொடர்பு" வேறு என்பது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.

நீங்கள் சொன்ன விடயத்திற்கு வருவோம்

பாலியல் தொடர்பு யாரும் காணத இடத்தில் நேரத்தில் நடந்தால் அது ஆபாசம் இல்லை. நடு ரோட்டில் நடந்தால் அது ஆபாசம்.

அதே போன்று வெளிப்படையாக அந்தப் பெண் தகாத உறவு வைப்பாள், இந்தப் பெண் புூப்படையும் முன்பெ உறவு கொள்வாள் என்று எழுதிவிட்டு அதை புனிதமான சாத்திரம் என்று சொன்னால் அது ஆபாசம்.

ஆகவே எங்குமே நான் சொன்னது இடிக்கவில்லை.

சாத்திரத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அந்தப் பெண் அப்பாவி அல்லவா?

அவளுடைய லக்கினத்தின்படி திரிம்சாம்சத்தின்படி அவள் நடந்து கொண்டாள். அவளை அவ்வாறான லக்கினமும் திரிம்சாம்சமும் வருவது மாதிரி பெற்றவர்கள்தான் குற்றவாளிகள். அந்தப் பெண் என்ன செய்வாள்? பாவம் !

:lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

வாதங்களுக்குத் தான் சாத்திரங்களையும் சம்பிரதாயங்களையும் தகர்ப்பதாகச் சொல்லிக் கொள்வார்களே தவிர, மற்றும்படி சாத்தியமா என்று கேட்டால், நடைபெறாது.

இன்றைக்கு சபேசன் தனது பெயர், ஆரியப் பெயர் என்று ஒத்துக் கொண்டு விட்டு, அதை மாற்றம் செய்திருக்கின்றாரா என்று கேட்டால் அவரால் வெளிவர முடியாது. அவ்வறே சகோதர் நாரதர் தமிழரின் பண்பைப் பற்றிக் கதைக்கின்றார். ஆனால் அவர் சூட்டி வைத்திருக்கின்ற பெயர் "நாராயணா, நாராயணா" என்று வரிக்கு வரி சொல்லும் ஆரியக் கடவுளைப் போற்றிக் கொண்டிருப்பவரின் பெயரை.

எதையும் விவாதிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அது நடை முறைக்கு சாத்தியம் என்றால் தான், சரிவரும். அதற்கு ஒரு வகையில் முன்மாதிரியாக இருந்தால் அது மக்களிடம் என்னும் அதிகமாகவே எடுபடும்.

இராமகிஸ்ணரிடம் ஒரு பெண் வந்து, "தந்தையே! என் மகன், இனிப்பு பண்டங்களை அதிகமாகச் சாப்பிடுகின்றான். அதைத் தடுக்க அறிவுரை கூறுங்கள் என்றார். அவரும், சிறிது நேரம் யோசித்து விட்டு, ஒரு மாதம் கழிய வரச் சொன்னாராம். ஒரு மாதம் கழிய வந்த பின்பு, அச் சிறுவனுக்கு அறிவுரை கூறினாராம்.

இதைப் பார்த்த அச் சீடன் அவரிடம் கேட்டார். ஏன் உடனே சொல்வதை விட்டு, ஒரு மாதம் கழித்துச் சொன்னீர்கள் என்று. அப்போது அவர் சொன்னார். எனக்கும் இனிப்பு உண்ணும் பழக்கம் உண்டு. நான் இந்த ஒரு மாதத்தில் நிறுத்தி விட்டால் தான் எனக்கு, அதன் பிழைகளைத் தெரிந்து கொள்ளலாம் என்பதற்கே ஒரு மாதம் காலம் எடுத்துக் கொண்டேன் என்று.

ஆரியம் என்பது விடுதலை பெற முடியாத ஒன்றல்ல, ஆனால் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் சம்பிரதாயங்களை ஒரே கணத்தில் சொல்லி விட்டுப் போனால் நிச்சயம் அது சரிவரப் போவதில்லை.

ஆரியத்தை விட்டால், வேறு வழி என்ன என்று மக்களுக்கு தெளிவான பதில் வைத்தால் தான், அது சரி வரும். பெரியாரும் தனது முட்டாள்தனமாக ஆரியத்தை எதிர்கின்றேன் பேர்வழியாகக் காட்ட வெளிக்கிட்டு, கடைசி வரைக்கும் ஆரியத்தைப் பார்த்து குரைத்ததைத் தவிர, திராவிடத்துவம் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாகக் காட்டியிருந்தால், அது நிச்சயம் வெற்றி அளித்திருக்கும்.

இங்கே, சம்பிரதாயத்தைத் தகர்க்கின்றோம், பகுத்தறிவை வளர்க்கின்றோம் என்ற போர்வழியாக காட்டுவது எல்லாம் மக்களிடம் இருந்து வேறு படுத்திக் காட்டுவதற்காக மட்டுமே என்பதாகவே உணர முடிகின்றது.

சாத்திரம் தொடர்பாக தெளிவான பதிலளிக்க கூடியவர் யாரும் இங்கு இல்லாததால், எதிரான கருத்துக்கள் மட்டுமே நிலைத்திருக்கின்றது அவ்வளவே! அதற்காக அது மூட நம்பிக்கை என்றோ, அல்லது எதிரான கருத்துக்கள் பகுத்தறிவு என்றே புூச்சுப் போடுவது சுத்த அறிவீனம்.

வெறுமனே கம்னியுசியம் என்றால் அமெரிக்காவை எதிர்ப்பது மட்டும் தான் என்ற கொள்கைக்குள் எவ்வாறு கம்னியுசிய வாதிகள் போனார்களோ, அவ்வாறே ஆரியம் எதிர்ப்பது தான் திராவிடத்துவம் என்றால் அதிலிருந்து நான் விலத்த விரும்புகின்றேன்.

ஆரியத்தை எதிர்ப்பதாக, மேலயத்தேயத்தை உள்ளே விடும் போக்கு சரியல்ல. தமிழ்மொழியைக் காக்கின்றோம் என்று இந்தியை எதிர்த்தவர்கள், இன்றைக்கு தமிழே அழிந்து விடும் அளவிற்கு ஆங்கிலத்தை வரவேற்பது போல ஒரு நிலையைத் தான் இது எட்டும்.

----------------------------------------------------------

தம்பி தூயவன் எனது பெயரை இழுத்திருப்பது இப்போது தான் கண்ணில் பட்டது.பெயரில் என்ன இருக்கிறது அதுவும் யாழ்க் களத்தில் இருக்கும் ஒரு முகமூடிக்கு, எதாவது நல்ல பெயரா இருந்தாச் சொல்லும் மாத்தி வைப்பம்.இந்தப்பெயர் ஓர் இரவில் சில மணித்துளிகளில் தோன்றியது அதுவே களத்தில் நிலைத்துவிட்டது.இதனை நான் கனக்க யோசித்து தேர்ந்தெடுக்கவில்லை.

மேலும் நான் சொல்வதை நான் முடிந்தவரை நடைமுறையிலும் கடைப்பிடித்தே வருகிறேன்.எனக்குச் சரி எனப் பட்டதைச் சொல்கிறேன் இறுதியில் உங்கள் சிந்தனையில் பாற்பட்டதைத் தான் நீங்கள் செய்யப் போகிறீர்கள்.எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை அதற்காக அந்த நம்பிக்கை உடையவர்களை நான் அவமதிப்பது கிடையாது. ஏனெனில் மனிதர்களை மதிக்கிறேன் கடவுள்களை அல்ல.ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் வெறி கிடையாது அது வரலற்று ரீதியாக நிகழ்ந்த ஒரு கொடுமை.அதனை அதன் சுரண்டல் தன்மையால் தான் எதிர்கிறோம் அதற்காக பிராமணர்களை அழிக்க வேண்டும் என்பதல்ல.சாதிகளை அழிக்க வேண்டு மென்பதுவும் ஆரியத்தின் எச்ச சொச்சமான சாதியதை அழிக்க வேண்டும் என்பதுவும் தமிழ்ச் சமூகம் முன் நோக்கி நகர வேண்டும் என்ற ஆவலில் தான்.ஏற்றத் தாழ்வுகள் அற்று அறிவுபூர்வமான சமூகமாக தமிழ்ச் சமூகம் அமைய வேண்டும் என்பதால் தான்.

நீங்கள் குறிப்பிடீர்கள் அப்படியானால் நாங்கள் மேற்குலகின் நடைமுறைகளைப் பின் பற்ற வேண்டுமா என்று? ஆரியர் என்போரும் வெளியில் இருந்து வந்தவர்கள் தான் அவர்களின் நடைமுறைகளை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் மேற்குலகின் நடைமுறைகளை ஏன் ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறீர்கள்.எப்போதுமே கலாச்சாரம் மதம் நம்பிக்கைகள் எல்லாம் உள்ளிருந்து உருவாவதில்லை ,அவை வெளியில் இருந்து வருகின்றன நாம் எமக்குத் தேவயானவற்றை அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு உள் வாங்குகிறோம்.எங்குமே தூய்மையான கலாச்சரமோ இனமோ இருப்பதில்லை.

ஆரியக் கொள்கைகளை அதன் பிற் போக்குத் தனத்தால் அது இந்தக் காலத்திற்கு ஏற்ற கோட்பாடுகள் இல்லை என்பதால் தான் களையச் சொல்கிறோம்.சாத்திரங்கள் எவ்வாறு மனிதர்களை ஆட்படுத்தி அவர்களின் சுய சிந்தனை ஆளுமையை சிதைகின்றன என்பதையே இங்கே வலியுறுதுகின்றோம்.அறிவியல் ரீதியான சிந்தனை சுயமான ஆளுமை எமக்குத் தேவை.அப்போது தான் உலகில் நாமும் உயர்வடைய முடியும்.பழையன கழிதலும் புதியன புகுதலும் வரலாற்றின் நியதி.எது எது எமக்கு இப்போது தேவையோ அவற்றை நாம் உள் வாங்க வேண்டும் எது தேவையில்லையோ அதனை கழைய வேண்டும்.

கருத்தாடலை தனி நபர் சார்ந்ததாக கொண்டு போகாமல் கருதுக்கள் சார்ந்ததாக விவாதிப்பதே பயன் உள்ள விடயம்.எனக்கு நடைமுறைச் சாதியமானவர்றையே நான் எப்போதும் எழுதி வந்திருகிறேன்.ஆகவே இதை விட வேறு தனிப்பட்ட விடயங்கள் பற்றிக் கருதுத் தெருவிப்பது பயன் அற்றது.

மேலும் புலத்தில் இன்று நிலவுவது போல் பொருளாதார வளர்ச்சி,கல்விச்செயற்பாடுகள

Link to comment
Share on other sites

தந்தை பெரியார் பற்றி வருகின்ற திரைப்படம் சில விடயங்களை எம்மவர்களுக்கு தெளிவு படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

சினிமாவில் சொன்னால்தானே சில பேர் கேட்கிறார்கள்.

Link to comment
Share on other sites

மேலும் ஆரியர் ஒரு மொழிக் குழுமத்தினர் அவர்களே பல பூர்வ குடிகளின் நம்பிக்கைகளை,கடவுள்களை எல்லாம் உள்வாங்கித் தான் வேதங்களை சாதியத்தை உருவாக்கினார்கள்.ஆகவே இங்கே எதுவுமே நிலையானதோ முடிந்த முடிவோ இல்லை. நீங்கள் கூறும் பாரம்பரியம் என்பது மாற்றம் அடைந்து கொண்டுவரும் ஒன்று. கால ஓட்டத்தில் எல்லாமுமே மாறி விடுகிறது.ஆகவே பாரம்பரியம் என்பது ஒரு குறிப்பட்ட காலகட்டத்தில் மட்டும் உறைந்து விடப்போவதில்லை.ஆரியம் என்பதுவே அந்தக் காலத்தில் மேலைதேயத்தில் இருந்து தான் வந்தது.அதை உங்களுடைய பாரம்பரியம் என்று இப்போது நீங்கள் கருதுகிறீர்கள்.ஆகவே இங்கே வருவதும் போவதும் இயல்பானது. நாங்கள் முன்னொரு காலத்தில் வந்ததை விட்டு விட்டு இப்போது வருவதை காலத்திற்கு ஏற்றதை , எமக்கு இப்போது பயன் படக்கூடியதை ஏற்றுக் கொள்ளங்கள் என்று கூறுவதில் என்ன பிழை இருக்கிறது? இந்த மாற்றத்தைக் கூறும் நாம் வெறும் கண்ணாடிகள் தான். வரலாறும் மாற்றமும் எமக்காக உறைந்து விடப்போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பெண் பாலியல் தொழில் செய்ததாக யாரும் சொல்லவில்லை. "பாலியல் தொழில்" வேறு, "பாலியல் தொடர்பு" வேறு என்பது ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.

நீங்கள் சொன்ன விடயத்திற்கு வருவோம்

பாலியல் தொடர்பு யாரும் காணத இடத்தில் நேரத்தில் நடந்தால் அது ஆபாசம் இல்லை. நடு ரோட்டில் நடந்தால் அது ஆபாசம்.

அதே போன்று வெளிப்படையாக அந்தப் பெண் தகாத உறவு வைப்பாள், இந்தப் பெண் புூப்படையும் முன்பெ உறவு கொள்வாள் என்று எழுதிவிட்டு அதை புனிதமான சாத்திரம் என்று சொன்னால் அது ஆபாசம்.

ஆகவே எங்குமே நான் சொன்னது இடிக்கவில்லை.

சாத்திரத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால், அந்தப் பெண் அப்பாவி அல்லவா?

அவளுடைய லக்கினத்தின்படி திரிம்சாம்சத்தின்படி அவள் நடந்து கொண்டாள். அவளை அவ்வாறான லக்கினமும் திரிம்சாம்சமும் வருவது மாதிரி பெற்றவர்கள்தான் குற்றவாளிகள். அந்தப் பெண் என்ன செய்வாள்? பாவம் !

:lol::lol::lol::lol::lol:

தமிழ் மொழியில் சில சித்துவிளையாட்டுக்கள் செய்ய முடியும்.

சபேசன் என்ற நண்பர் எழுதிய கருத்துப்படி .... என்று எழுதுவதற்கும்,

சபேசன் என்ற நபர் எழுதிய கருத்துப்படி..... என்று எழுதுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. 2வது கருத்தில் சபேசன் என்பவர் எல்லோருக்குமே, 3ம் மனிதனாகவே தோற்றமளிப்பார்.

அவ்வாறே, பண்பாட்டு மீறல் என்பதைப் பண்பாட்டு சீரழிவு என்றோ, அல்லது மோசடி என்று போடுவது அதில் குற்றத்தைச் சுட்டி நிற்கும். அவ்வாறே ஆபாசம் என்பதை ஆபாசமோசடியாக நீர் காட்டுவது கூட வார்த்தையில் உள்ளடங்கியதே!

நீர் சொன்ன சாத்திரம் உண்மையா, பிழையா என்று தெரியாமல், அச் சாத்திரத்தை வைத்து நான் எவ்வித முடிவுக்கும் வரமுடியாது.

Link to comment
Share on other sites

சாத்திரத்தை படிக்கின்ற பொழுது, அது ஆபாசமாகவும் இருக்கிறது. மோசடியாகவும் இருக்கிறது.

சாத்திரம் என்பது உண்மை அல்ல. அது முற்றுமுழுதான பித்தலாட்டம். மோசடி.

இந்த முடிவுக்கு வருவதற்கு எந்த ஒரு ஆய்வும் தேவையில்லை.

ஒரு மனிதனுடைய இயல்பை, எதிர்காலத்தை, பல இலட்சம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கின்ற ஒரு கோள் தீர்மானிக்கிறது என்று சொல்வதை மறுப்பதற்கு ஐந்து அறிவு போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் அண்ணா!

தமிழில் பெயர்களுக்காக பஞ்சம். இருந்தாலும் நான் சொல்ல வந்தது. அடிப்படையில் ஆரியத்தில் இருந்து வெளியேறுவது என்பது இலகுவான வேலையல்ல என்பதையே நான் சுட்டிக் காட்டத் துணிந்தேன். எனவே ஆரியம் ஒழிக என்ற கோசம் போடுவதை விட, தமிழ் எப்படி வாழ வைப்பது என்பது குறித்தே கவனமும், அக்கறையும் தேவை என்பதே தேவையாகும்.

வெறுமனே தமிழ் பற்று என்பது ஆரியத்தினை எதிர்ப்பதாகத் தானே அடையளாப்படுத்த முடிகின்றது. தமிழ்நாட்டில் தமிழ் பிள்ளைகள் தமிழ் படிக்க வசதிகள் ஏதும் செய்யாமல், அலலது வேலைக்கு கூட்டிச் செல்லப்பட்ட தமிழ்மக்கள், தமிழ் மொழியை மறந்து தவிக்கும் நிலை ஏதுமே கணக்கில் கொள்ளாமல், கோவிலில் தமிழில் அரிச்சனை என்ற விடயத்தை திராவிட இயக்கங்கள் தூக்கிப் பிடித்தன. ஏன் என்றால் அங்கே ஆரிய எதிர்ப்பு இருக்கின்றது.

என்னுமொரு விடயத்தையும் சுட்டிக் காட்டலாம். இன்றைக்கு, முஸ்லீம் அல்லாகு அக்பர் என்கின்றான், பௌத்தம் "புத்தம் சரணம் கச்சாமி என்கின்றான். அவனுக்கு தொழுகை மொழி பற்றிப் பிரச்சனையில்லை. தொழுகை மொழியால் மொழி சிதைவடையும் என்று அவன் அஞ்சுவதுமில்லை. ஆனால் கிறிஸ்தவ அடிப்படை வாதிகளின் சில கருத்துக்களைக் கேட்டு, எம் மக்களும் பகுத்தறிவு என்று பந்தா காட்டுகின்றனர். இன்றைக்கு கிறிஸ்தவத்தை எடுதத்hல் பைபிள் எழுதிய மூல மொழி வழக்கத்திலும் இல்லை. மூல பைபிளும் யாரிடமும் இல்லை எனவே அந்த அந்த நாட்டு மொழிகட்டு பைபிள் மாற வேண்டிய நிலையை எடுத்தது.

ஒரு மதப் பிரச்சாரத்துக்கு, கட்டாயம் அடிப்படை மதப் பழக்கவழக்கத்தைச் சிதைத்தால் தான், புதிய மதத்தை ஊடுருவச் செய்ய முடியும்.இதைச் சாக்காக வைத்து மதச் சிதைப்பை அவன் மேற்கொள்கின்றான் அதைப் புரிந்தோ, புரியாமலோ, அந்த அடிப்படை வாதிகளின் வலைக்குள் மாட்டுப்படுகின்றீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்பாடு கலாசாரம் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றது என்பதிலும் சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது என்பதுவே அதிக பொருத்தமாக இருக்கும்.

ஆரிய திராவிட பாகுபாட்டியலுக்கு அப்பால் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டுக் கோலங்களுக்கும் நவீன பண்பாட்டுக் கோலங்களுக்கும் இடையில் வேறுபாடுண்டு. பாரம்பரிய பண்பாடு என்பது தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த பூர்வீக நிலத்தோடமைந்த சுய பிறப்பாக்கமாக இருந்த காலம் போய் படையெடுப்புக்களுக்குள்ளும் காலணித்துவத்துக்குள்ளும் கடன்வாங்கிக் கொண்ட மேற்குலகக் கலப்பு சார்ந்த பண்பாடும் கலாசாரமுமே இன்று தமிழர்களின் பண்பாட்டுக் கோலங்களாக பிரதிபலிக்கச் செய்யப்படுகிறது. அதுவே முற்போக்கு என்றும் கொள்ளப்படுகிறது.

தமிழர்களின் பண்பாட்டு மாற்றமென்பது அவர்களுக்கு தனித்துவமானதாக இருக்கும் அதே வேளை உலகத் தேவைகளை தீர்மானிப்பனவாகவும் தீர்ப்பனவாகவும் தமிழர்களை இதர முன்னேறிய சமூகங்களுக்கு நிகராக இட்டு வருவனவாகவும் இருக்க வேண்டும். இதற்காக ஆரிய காலசாரத்தை விடுங்கள் ஆனால் ஐரோப்பிய கலாசாரத்தை கையகப்படுத்துங்கள் என்பது போன்ற வாதங்கள் தமிழர்களின் தனித்துவ அடையாளம் பாதுகாக உதவிடாது.

பிராமண எதிர்ப்பை அரசியலாக்கிப் பார்ப்பதுவே பெரியாரின் முக்கிய நோக்கமாக இருந்தது என்றால் அதில் மிகையில்லை. இன்று கூட தமிழ்நாட்டில் தலித்தியம் அரசியல் இலாபத்துக்காகப் பேசப்படுகின்றனவே தவிர அந்த மக்களின் மேம்பாடு என்பது இதர மக்களோடு ஒப்பிடும் போது தாழ்ந்தே உள்ளது. சமத்துவம் என்பதும் இன்னும் எட்டாத தூரத்திலேயே உள்ளது.

பெரியார் உச்சரிக்கப்படுவது இன்று அவர் மாறுபட்ட செயற்பாடுள்ள மனிதராக இருந்தார் என்பதற்காகவே அன்றி அவரின் கொள்கைகளை கடைப்பிடிப்பதற்காக இல்லை. பெரியாரை மூச்சுக்கு மூன்று தடவைகள் உச்சரிக்கும் கருணாநிதி போன்றவர்கள் கூட பெரியாரின் கொள்கைகளில் சிறிதளவையேனும் தமிழ்நாட்டில் சட்டமாக்கி அமுல்படுத்தியுள்ளனரா? ஏன் செய்யவில்லை? அல்லது செய்ய முடியவில்லை?

ஈழத்தைப் பொறுத்தவரை அது ஆயுதப்போராட்டக் களம் என்பதால் சில மாற்றங்கள் வலிந்து உருவாக்கப்பட்டன. அவை காலப்போக்கில் மக்களின் மனமாற்றங்களாக மலர்ந்தும் உள்ளன, மலராமலும் உள்ளன என்பதற்கு யாழ் குடாநாட்டு மக்களின் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் வருகையின் பின்னான வாழ்வியலும் சில இடங்களில் சில குழுமங்களிடையே நிலவிய அசாதாரண உறவியலும் அங்குள்ள கள யதார்த்தப் புறநிலைகளை சொல்கின்றன.

பிராமண எதிர்ப்பு, இந்து சமய எதிர்ப்பு என்பது ஆரியம் நோக்கிய பார்வையில் இங்கு எழுகிறது அல்லது முன்வைக்கப்படுகிறது. அது பெரியார் காலத்தில் பெரியாருக்கு அவசியமாக இருந்திருக்கலாம். தன்னை அரசியலில் முதன்மைப்படுத்த. ஆனால் இன்று இந்து சமயப் பின்னணிகள் தமிழர்களின் பாரம்பரிய இருப்புக்கான அடையாளங்களை வெளிப்படுத்துவனவாக உள்ள நிலையில் ஆரியத்தில் இருந்து இந்து சமயம் தெளிவாக வேறுபடுத்தப்பட்டுக் காட்டப்பட்டு வரும் வேளையில் இந்த ஆரிய இந்து மத இணைப்பு அவசியமா? அதன் நம்பகத்தன்மை எந்தளவுக்கு ஆதாரபூர்வமாகியுள்ளது?

தமிழர்களின் பாரம்பரிய வரலாற்றுக்கும் இந்து மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்து மதத்திற்கு ஆரிய சாயம் பூசுவதன் மூலம் தமிழர்களின் இருப்புக்கான அடையாளங்களை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையே தோன்றும். இந்து மதத்துக்குள் கலப்புக்கள் தோன்றி இருக்கலாம். ஆனால் தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்துசமயம் என்ற ஒன்று இருந்துள்ளதாகவே நவீன ஆய்வுகள் மூலமு, பலரும் சொல்ல விளைகின்றனர்.

நாளை தற்போதுள்ள வடிவில் உள்ள ஆரிய திராவிட பாகுபாடு பொய் என்று நிரூபிக்கப்படும் போது ஆரிய மதமாக இனங்காட்டப்படும் இந்து மதம் எப்படி தமிழர்களின் பாரம்பரியத்துடன் கலந்து கொண்டது என்று மிகப்பெரிய வினா எழும்? காரணம் தமிழர்களின் வழிபாடு என்பது இந்துமத அடிப்படைகளாக பின்னர் எழுப்பப்பட்டுள்ளன என்பதையும் கவனித்தல் வேண்டும்,

கடவுள் இல்லை என்று மறுதலிப்பவர்கள் தாங்களே பிரபஞ்சம் என்று எண்ணுபவர்கள் என்பது எமது நோக்கு. மனிதன் பிரபஞ்சம் பற்றி அறிந்தது அணுவிலும் சிறிது. இதற்குள் கடவுள் இல்லை...அல்லது... இருக்கிறார் என்பதெல்லாம் வெறும் விவாதங்களுக்கு உதவலாம். உண்மைகளை உரைக்கப் போதுமானவையல்ல.

கடவுளை நம்புகின்றவர்கள் நம்பட்டும் விடுபவர்கள் விடட்டும். ஆனால் அந்த நம்பிக்கை என்பது தனி மனிதர்களைப் பாதிக்காததாக அமைய வேண்டும் என்பதே சமூக அக்கறையுள்ளவர்களின் எதிர்பார்ப்பு.

பெரியார் தன்னை ஒரு பகுத்தறிவுவாதியாகக் காட்டிக் கொள்ள தெரிவு செய்த பிராமணிய அல்லது பார்ப்பர்ணிய எதிர்ப்பானது ஒரு சமூகத்தின் மீதான அவரின் வெறுப்பின் அடையாளமே அன்றி அது பகுத்தறிவின் வெளிப்பாடல்ல.

பெரியாரால் கடவுள் இல்லை என்று நிரூபிக்க முடியாத சூழலில் கடவுள் இருக்கிறார் என்பவர்களைப் பார்த்து கேலித்தனம் செய்வது என்பது பகுத்தறிவு நிலையல்ல. உண்மையில் அவரின் சிந்தனையில் தோன்றிய பிராமண எதிர்ப்பை சமூக அடிமைத்தனத்தோடு பார்த்துப் புனைந்து தனது சுயநலத்துக்காக்கிக் கொண்டார் என்பதே யதார்த்தம். இன்றேல் அவரின் சிந்தனைகள் கடவுளின் பெயரால் சமூக அடக்குமுறைகளுக்கு எதிரானதாக எழுந்திருப்பின் நிச்சயம் அவரால் ஒரு பிராமண பாரதியாரை சிந்திக்கத் தூண்டியது போல பலரை தூண்டச் செய்திருக்கலாம். பிராமண சமூக எதிர்ப்பை அதற்காக அவர் கையெடுத்திருக்க வேண்டியதில்லை. ஒரு கொள்கை மாற்றத்துக்காக சமூகத்தை அழிக்க நினைப்பது என்பது சிங்களவர்கள் தமிழர்களை அழிக்க நினைப்பது போன்றது.

அந்த வகையிலேயே பெரியாரின் சமூக எதிர்ப்பு அணுகுமுறையும் தன்னை மனிதப்பகுத்தறிவாளன் எனும் அதேவேளை மற்றவர்கள் சிந்தனையற்ற சடங்கள் என்பது போன்ற அணுகுமுறையுமே அவரது கொள்கைகள் சமூகத்தில் பலவீனப்பட்டு செயற்பாடற்று கிடப்பில் கிடக்க சந்தர்ப்பம் வழங்கிவிட்டது.

அதையே இங்கும் தொடர வேண்டுமா? பெரியாரின் பிராமணிய எதிர்ப்பு என்பது எம்மைப் பொறுத்தவரை பகுத்தறிவின் வெளிப்பாடாகத் தெரியவில்லை. பிராமணிய சமூக ஆதிக்கப் பண்புகளை அவர் எதிர்த்திருந்தால் அவற்றின் தீமைகளையும் சமூகப்பாதிப்புக்களையும் சொல்லி இருந்தால் அதுவே ஏனைய சமூகங்களுக்கும் பிராமணியர்களுக்கும் அவரவர் தவறுகளைச் சுட்டிக்காட்டி சிந்திக்க வைத்திருக்கும். பெரியார் தன்னை பகுத்தறிவு வாதியாகக் காட்ட முனைந்த அளவுக்கு மக்களின் பகுத்தறிவுத் திறனை அளவிடவும் உயர்த்தவும் தவறியதே அவர் செய்த மகா தவறு.

Link to comment
Share on other sites

நாரதர் அண்ணா!

தமிழில் பெயர்களுக்காக பஞ்சம். இருந்தாலும் நான் சொல்ல வந்தது. அடிப்படையில் ஆரியத்தில் இருந்து வெளியேறுவது என்பது இலகுவான வேலையல்ல என்பதையே நான் சுட்டிக் காட்டத் துணிந்தேன். எனவே ஆரியம் ஒழிக என்ற கோசம் போடுவதை விட, தமிழ் எப்படி வாழ வைப்பது என்பது குறித்தே கவனமும், அக்கறையும் தேவை என்பதே தேவையாகும்.

வெறுமனே தமிழ் பற்று என்பது ஆரியத்தினை எதிர்ப்பதாகத் தானே அடையளாப்படுத்த முடிகின்றது. தமிழ்நாட்டில் தமிழ் பிள்ளைகள் தமிழ் படிக்க வசதிகள் ஏதும் செய்யாமல், அலலது வேலைக்கு கூட்டிச் செல்லப்பட்ட தமிழ்மக்கள், தமிழ் மொழியை மறந்து தவிக்கும் நிலை ஏதுமே கணக்கில் கொள்ளாமல், கோவிலில் தமிழில் அரிச்சனை என்ற விடயத்தை திராவிட இயக்கங்கள் தூக்கிப் பிடித்தன. ஏன் என்றால் அங்கே ஆரிய எதிர்ப்பு இருக்கின்றது.

என்னுமொரு விடயத்தையும் சுட்டிக் காட்டலாம். இன்றைக்கு, முஸ்லீம் அல்லாகு அக்பர் என்கின்றான், பௌத்தம் "புத்தம் சரணம் கச்சாமி என்கின்றான். அவனுக்கு தொழுகை மொழி பற்றிப் பிரச்சனையில்லை. தொழுகை மொழியால் மொழி சிதைவடையும் என்று அவன் அஞ்சுவதுமில்லை. ஆனால் கிறிஸ்தவ அடிப்படை வாதிகளின் சில கருத்துக்களைக் கேட்டு, எம் மக்களும் பகுத்தறிவு என்று பந்தா காட்டுகின்றனர். இன்றைக்கு கிறிஸ்தவத்தை எடுதத்hல் பைபிள் எழுதிய மூல மொழி வழக்கத்திலும் இல்லை. மூல பைபிளும் யாரிடமும் இல்லை எனவே அந்த அந்த நாட்டு மொழிகட்டு பைபிள் மாற வேண்டிய நிலையை எடுத்தது.

ஒரு மதப் பிரச்சாரத்துக்கு, கட்டாயம் அடிப்படை மதப் பழக்கவழக்கத்தைச் சிதைத்தால் தான், புதிய மதத்தை ஊடுருவச் செய்ய முடியும்.இதைச் சாக்காக வைத்து மதச் சிதைப்பை அவன் மேற்கொள்கின்றான் அதைப் புரிந்தோ, புரியாமலோ, அந்த அடிப்படை வாதிகளின் வலைக்குள் மாட்டுப்படுகின்றீர்கள்.

பல விடயங்களைப் போட்டுக் குழப்பி உள்ளீர்கள்.

1)முதலில் பெரியாரின் திராவிட அரசியல் இயக்கம் உருவாவதற்கான காரணங்கள் என்ன என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.இதற்கு அந்தக் காலத்தில் நிலவிய சமய,சாதீய, அரசியல் பொருளாதார நிலமைகள் பற்றிய வரலாற்று அறிவு வேண்டும்.இதனை நான் ஒரு சில வரிகளில் உங்களுக்குத்தந்து விட முடியாது. நீங்கள் தாந்தேடிப் படித்து படிக்க வேண்டும்.

2)இரண்டாவது திராவிட அரசியல் இயக்கத்தால் குறிப்பாக இட ஒத்க்கீட்டினால் பயன் அடைந்த மக்கள் பல லட்சக் கணக்காணவர்கள்.இவர்களின் சமூக வளர்ச்சி என்பது திராவிட இயக்கமோ அரசியலோ இல்லை என்றால் இன்றும் மிகவும் கீழ்மையான மட்டத்திலே தான் இருக்கும்.இதனை நான் தமிழ் நாட்டில் நேரடியாகக் கண்டவன் என்ற முறைஇல் கூறலாம்.

3)பெரியாரின் ஆளுமை அவரின் கருதுக்கள் என்பவை வெறும் கடவுள் மறுப்பு இந்து மத மறுப்பு என்பதோடு மட்டும் நிக்கவில்லை.மேலோட்டமாக பெரியரைப் புரிந்தவர்கள் தான் இவ்வாறு எழுதுவது.இதற்கும் பெரியார் என்ன சொன்னார் அந்தக் காலகட்டம் எத்தகையது என்பவை பற்றிய புரிதல் அவசியம்.அந்த வாசிப்பு இன்றி எழுதப்படும் கருதுக்கள் எல்லாமே மேலோட்டமனவை தான்.இதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது.உங்களுக்குத் தேடுவதற்கான அவா இருப்பின் அதற்கான வழியை காட்டலாம் படிக்க வேண்டியது நீங்கள் தான்.

4) அன்றைய காலகட்டத்தில் மிகவும் கீழ் நிலையில் இருந்த மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்ய பெரியார் கையாண்ட யுக்கிதிகள் அந்த மக்களைச் சென்றடயக் கூடியவையானவையாக இருந்தன.அடிப்படை கல்வி அறிவு அற்ற மக்கள்,சாப்பிட்டிற்கே கையேந்தி நின்ற மக்களிடம் அறிவியல் பற்றியும் விஞ்ஞான விளக்கம் பற்றியும் பேசி இருக்கமுடியாது.அதற்கான காலம் இருக்கவில்லை.பெரியாரும் திராவிட அரசியலும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின் தான் தமிழ்னாட்டில் இந்த மக்களுக்கு கல்வி அறிவு வரக் கூடிய சாதியக் கூறுகள் ஏற்பட்டன.அதன் மூலம் தான் பல மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.

5)இந்த சமுதாய மாற்றங்கள் பற்றி அறியாமல் வெறும் வாயை மெல்வது உங்களுக்கு இங்கே எதோ பதில் எழுத வேண்டும் என்பதற்காக எழுத முடியுமே தவிர உண்மை அது வல்ல.

6)உண்மைகளைத் தேடினால் தான் அவற்றை அறியலாம்.அதற்காக நான் சிறு வயதில் படித்தவை எனக்கு அம்மா அப்பா கூறியவை தான் சரி நான் பிறந்த மதம் தான் இவ் உலகில் உயர்ந்தது என்று கருதுவீர்களே ஆனால் நீங்கள் உங்கள் சுய சிந்தனையால் எதனையும் தேடப் போவதில்லைஉங்கள் சிந்தனையும் வளரப் போவதில்லை.

7) மற்றைய சமயங்கள் பற்றி எழுதுனீர்கள்.எனது தனிப்பட்ட கருத்து சமயங்கள் எமக்குத் தேவை இல்லை என்பது தான்.சமயாங்கள் இல்லமாலே நாம் நல் ஒழுக்கத்தை மனிதப் பண்புகளை வளர்க்கலாம் என்பதே.பயத்தினாலும் பாவ புண்ணியதாலும் இவற்றை வளர்க்க முடியாது.இல்லாவிட்டால் கடவுளுக்கு லஞ்சம் குடுப்பதால் அல்லது விரதம், நோன்பு ஜெபம் என்ற வழிகளால் ஒருவர் தனது பாவங்களை இல்லாது ஒழிக்கலாம், மதம் இதற்கு வழி வகைகளைச் செய்கிறது.இன்று மதம் என்பது வெறியாக இருக்கிறது.மேற்குலகால் நீங்கள் பெற்றவற்றை கொஞ்சம் சிந்தனையில் நிறுத்திப் பாருங்கள். நீங்கள் கற்கும் கல்வி,அறிவியல், நீங்கள் செல்லும் மோட்டர் வண்டி நீங்கள் பாவிக்கும் தொலை பேசி நீங்கள் பயணிக்கும் விமானம் எல்லாம் மேற்குலகின் அறிவியலால் தான் சாத்தியம் ஆனது .இவைகளைப்பாவிக்கும் போது மட்டும் உங்களுக்கு மேற்குலகம் தெரியவில்லையா? ஏனெனில் இது உங்களுக்கு வசதியானதாகி விட்டது நீங்கள் வேத காலத்தில் வாழ விரும்பினால் என்ன என்ன செய்ய வேண்டும் என்று கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். நீங்கள் சாதிய அடிப்படையில் உங்கள் குலத் தொழிலைத் தான் செய்து இருக்க வேண்டும். நீங்கள் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்றிறிருக்க முடியாது நீங்கள் நாகரீக உடைகளை அணிய முடியாது.கணனியைப்பாவிக்க முடியது.இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.ஆகவே உந்தமேற்குலகம் என்னும் சொற்பதமே அர்த்தம் அற்றது .மனிதர்கள் உயர்வானவர்களாக பண்பாணவர்களாக என்ன அவசியம். நாம் எமது சமூகத்த்தின் பொருளாதார மேம் பாட்டை வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எமக்கு எது அவசியம் என்று பாருங்கள்.அது எங்கிருந்து வந்தாலும் நாம் அவற்றை ஏற்றுக்கொள்ள வெண்டும். எவை எமக்குத் தேவை அற்றவை என்று பாருங்கள் எவை எல்லோரும் சமன் எல்லோரும் வழமாக வாள வேண்டும் என்பதற்கு எதிராக இருகின்றன என்று பாருங்கள் அவற்றை நாம் களையத் தான் வேண்டும். நீங்கள் உங்கள் உடையை உணவை கல்வியைத் தொழிலை மாற்றிய வாறு இவற்றையும் மாற்றத் தான் வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.