Jump to content

ஆண்கள்.. ஆண்களே..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

v133appuseetha2.jpg

  :D ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..! :lol:

ஒரு நடுத்தர வயதான ஆண்கள் குழாம் ஒன்று கடும் விரதமிருந்து ஆன்மீக யாத்திரை சென்றது...

அவர்களை வழி நடத்தும் குருவானவர்,ஆன்மீகக் குழுவினரை நோக்கி, "பக்தர்களே, நாளை கோவிலுக்கு போகும் வழியே சில நேரம் அழகான பெண்களும் கடந்து போகலாம், ஆனால் நீங்கள் மனக் கட்டுப்பாட்டுடன் இறையை துதி செய்தவாறே நடக்க வேண்டும்.. எவ்விதத்திலும் மனக் காட்டுப்பாட்டை இழக்கலாகாது.. அப்படி வழியே பெண்களைக் கண்டாலும் "ஹரி ஓம்.." என சொல்லிவிட்டு மேலே நடக்க வேண்டும்" என கண்டிப்புடன் அறிவுறுத்தினார்..

பக்தர்களும் மிக சிரத்தையுடன், "அப்படியே செய்கிறோம் குருவே..!" என பணிவடன் ஒருமித்துக் கூறினர்..

மறுநாளும் வந்தது..

பக்தர்கள் குளித்து முடித்து, குரு முன்னே சென்று வழி நடத்த, பின்னாடி பக்தர்கள் நெக்குருக மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே கட்டுப்பாட்டுடன் பயபக்தியுடன் கோவிலை நோக்கிச் சென்றனர்..

அப்பொழுது திடீரென ஒரு பக்தர் உரக்கக் கூவினார்... "ஹரி ஒம்.. ஹரி ஓம்..!"

உடனே அனைத்து பக்தர்களும், "ஆ.. எங்கே..? எங்கே..??" எனக் கூவினர்..!!

நீதி:

ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..!

Men will always be Men !

- படித்ததில் ரசித்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் நியதி  இது... :D

Link to comment
Share on other sites

உண்மை.. உண்மை.. :D

Link to comment
Share on other sites

பெண்கள் எப்போதும் பெண்களில்லையா..!! ராசவன்னியருக்கு காசி யாத்திரை செல்ல ஆசை வந்துவிட்டதா....?? :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பொழுது திடீரென ஒரு பக்தர் உரக்கக் கூவினார்... "ஹரி ஒம்.. ஹரி ஓம்..!"

உடனே அனைத்து பக்தர்களும், "ஆ.. எங்கே..? எங்கே..??" எனக் கூவினர்..!!

நீதி:

ஆண்கள் எப்பொழுதும் ஆண்களே..!

Men will always be Men !

இவர்கள் எல்லோரும் இப்படிச் சொல்ல... குரு,

ஆன்மீக யாத்திரைக்கு, இனி மேல்... ஆண்களை கூட்டிக் கொண்டு போகாமல்,  பெண்களையே.... கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று குரு, அந்த இடத்திலேயே...... முடிவெடுத்திருப்பார். :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்போதும் பெண்களில்லையா..!! ராசவன்னியருக்கு காசி யாத்திரை செல்ல ஆசை வந்துவிட்டதா....?? :lol:  :lol:

காசி யாத்திரையா..? :o விட்டால் என்னை சாமியாரக்கிவிடுவீர்கள் போல தெரியுதே..! :lol:

இவர்கள் எல்லோரும் இப்படிச் சொல்ல... குரு,

ஆன்மீக யாத்திரைக்கு, இனி மேல்... ஆண்களை கூட்டிக் கொண்டு போகாமல்,  பெண்களையே.... கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று குரு, அந்த இடத்திலேயே...... முடிவெடுத்திருப்பார். :D  :lol:

அப்படி முடிவெடுக்கும் பட்சத்தில், குருவும் நித்தியானந்தாவாக மாறிவிடுவார், ஏனெனில் அவரும் ஆண்தானே..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் அழகிப் போட்டி காணொளியில் பார்த்திங்கல்ல... பெண்கள்.. பெண்களே தான். :lol::icon_idea:

Miss-Amazonas.jpg

Link to comment
Share on other sites

பிரேசில் அழகிப் போட்டி காணொளியில் பார்த்திங்கல்ல... பெண்கள்.. பெண்களே தான். :lol::icon_idea:

Miss-Amazonas.jpg

இப்படி  எல்லாவற்றையும்  தேடி  தேடி  பார்ப்பது  பின்னர்  புலம்புவது பெண்கள்  சிலந்திகள்  என்று   :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் எப்போதும் கண்கள்..!!  (ராசவன்னியன்)

என் பார்வையில், நிச்சயமாக. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி  எல்லாவற்றையும்  தேடி  தேடி  பார்ப்பது  பின்னர்  புலம்புவது பெண்கள்  சிலந்திகள்  என்று   :icon_idea:

அண்ணே.. வீட்டை விட்டு வெளிய வாங்க. இதெல்லாம் தேடிப் படிக்க வேண்டியதில்ல. எல்லா செய்தி ஊடகங்களிலும் வந்த செய்தி தாண்ணே..! அப்புறம்.. பெண்கள் சிலந்தி மட்டுமல்ல.. உண்ணிகளும் கூட. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

wild_love_1661355.jpg

கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தில் அவ்வப்போது பிணக்குகள் வருவது சகஜம்.. அப்படியில்லையெனில், வாழ்வில் சுவையேது...? :lol::)

ஒரு நாள் கணவனும் மனைவியும், அன்றைய சச்சரவிற்கு பின் ஒருவரையொருவர் கோபித்துக்கொண்டு சமரசம் ஆகாமல் பேசாமல் இருந்தனர்.. :o

ஏற்கனவே போட்ட திட்டப்படி இருவரும் சேர்ந்து சொந்த கிராமத்திற்கு காரில் சென்றனர். கார் கரடுமுரடான மண் சாலையில் செல்கையில், சாலையின் குறுக்கே சில கழுதைகளும், செம்மறி ஆடுகளும், பன்றிகளும் கடந்தன..

காரை சடாரென நிறுத்திய கணவன், மனைவியை வெறுப்பேத்த, "ம்.. பாரு உன்னுடைய உறவினர்கள் கடந்து போகிறார்கள்" என்றான் அலட்சியமாக...

உடனே மனைவி பதிலளித்தாள்.. "ஆமாம், எனது மாமனார், மாமியார், கொழுந்தன், கொழுந்தியாள் வகையறாக்கள் தான்" :lol:

மறு நாள் வந்தது..

கணவன் காலையில் செய்தி தாளில் வந்துள்ள ஒரு குறிப்பை மேற்கோள் காட்டி, " ம்ம்..இங்கே பார்த்தாயா..? எவ்வளவு உண்மையான அனுபவக் குறிப்பை போட்டுள்ளார்கள்..! வாசிக்கிறேன், கேள்.. ஒரு நாளில் மனைவி 30,000 வார்த்தைகளும், அதே சமயம் கணவன் 15,000 வார்த்தைகள் மட்டுமே பேசுகின்றனராம்..!"

மனைவி அமைதியாக, "உங்கள் மரமண்டையில் விசயத்தை ஏற்ற மறுபடியும், மறுபடியும் நாங்கள் சொல்ல வேண்டியதிருக்கே..!" என்றாள்

கணவன் உடனே மனைவியை நோக்கித் திரும்பி "என்ன..? " என்றான்.. :lol:

அடுத்த நாளும் வந்தது..

கணவன் மனைவியை மட்டம் தட்ட,  " ம்..கடவுள் ஏன் பெண்களை அழகாகவும், அதே சமயம் முட்டாளாகவும் ஒருசேர படைத்தான் என தெரியவில்லை..!" என்றான்..

மனைவி புன்முறுவலுடன், "அதை நான் விளக்குகிறேன்..கடவுள் எங்களை அழகாக படைத்தான், ஆண்களை கவர வேண்டுமென்பதற்காக..! அதே சமயம், எங்களை முட்டாளாகவும் படைத்தான், உங்களை மாதிரி ஆளை திருமணம் செய்வதற்காக.!! " :icon_idea:

கணவன் முகத்தில் ஈயாடவில்லை.. ! கப் சுப்.. :):lol::rolleyes:

-இன்று படித்தது..யாழுக்காக பகிர்கிறேன்..!

Link to comment
Share on other sites

பெண்கள் எப்போதும் புண்கள்..!!  (நெடுக்கர்)
 
பெண்கள் எப்போதும் கண்கள்..!!  (ராசவன்னியன்)

என் பார்வையில், நிச்சயமாக. :)

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம். :wub:  
அந்த வரம் கிடைக்காதவர்களே இங்கு புலம்புகிறார்கள். :o 
கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்தவரம் என்று யாராவது பாடியுள்ளார்களா...?? பாடமாட்டார்கள். :(
காசுக்காகவே அனேக ஆண்கள் கலியாணம் செய்கிறார்கள்.  :icon_mrgreen:
காதலித்தாலும் காதலி வீட்டில் காசு வாங்காமல் கல்யாணம் செய்வோரை விரல்விட்டு எண்ணலாம். <_<  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆண்களுக்கு வாறவ மனைவி இறைவன் கொடுத்தவரம்.... :D
 
பெண்களுக்கு வாறவர் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்.... :icon_mrgreen:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்க்கை.

ஒரேமாதிரி இருந்தால் சுவாரசியம் இருக்காது  அவ்வப்போது பிணக்குகள் வரவேண்டும். 

Link to comment
Share on other sites

கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தில் அவ்வப்போது பிணக்குகள் வருவது சகஜம்.. அப்படியில்லையெனில், வாழ்வில் சுவையேது...? :lol:

ஒரு நாள் கணவனும் மனைவியும், அன்றைய சச்சரவிற்கு பின் ஒருவரையொருவர் கோபித்துக்கொண்டு சமரசம் ஆகாமல் பேசாமல் இருந்தனர்.. :o

ஏற்கனவே போட்ட திட்டப்படி இருவரும் சேர்ந்து சொந்த கிராமத்திற்கு காரில் சென்றனர். கார் கரடுமுரடான மண் சாலையில் செல்கையில், சாலையின் குறுக்கே சில கழுதைகளும், செம்மறி ஆடுகளும், பன்றிகளும் கடந்தன..

காரை சடாரென நிறுத்திய கணவன், மனைவியை வெறுப்பேத்த, "ம்.. பாரு உன்னுடைய உறவினர்கள் கடந்து போகிறார்கள்" என்றான் அலட்சியமாக...

உடனே மனைவி பதிலளித்தாள்.. "ஆமாம், எனது மாமனார், மாமியார், கொழுந்தன், கொழுந்தியாள் வகையறாக்கள் தான்" :lol:

மறு நாள் வந்தது..

கணவன் காலையில் செய்தி தாளில் வந்துள்ள ஒரு குறிப்பை மேற்கோள் காட்டி, " ம்ம்..இங்கே பார்த்தாயா..? எவ்வளவு உண்மையான அனுபவக் குறிப்பை போட்டுள்ளார்கள்..! வாசிக்கிறேன், கேள்.. ஒரு நாளில் மனைவி 30,000 வார்த்தைகளும், அதே சமயம் கணவன் 15,000 வார்த்தைகள் மட்டுமே பேசுகின்றனராம்..!"

மனைவி அமைதியாக, "உங்கள் மரமண்டையில் விசயத்தை ஏற்ற மறுபடியும், மறுபடியும் நாங்கள் சொல்ல வேண்டியதிருக்கே..!" என்றாள்

கணவன் உடனே மனைவியை நோக்கித் திரும்பி "என்ன..? " என்றான்.. :lol:

அடுத்த நாளும் வந்தது..

கணவன் மனைவியை மட்டம் தட்ட,  " ம்..கடவுள் ஏன் பெண்களை அழகாகவும், அதே சமயம் முட்டாளாகவும் ஒருசேர படைத்தான் என தெரியவில்லை..!" என்றான்..

மனைவி புன்முறுவலுடன், "அதை நான் விளக்குகிறேன்..கடவுள் எங்களை அழகாக படைத்தான், ஆண்களை கவர வேண்டுமென்பதற்காக..! அதே சமயம், எங்களை முட்டாளாகவும் படைத்தான், உங்களை மாதிரி ஆளை திருமணம் செய்வதற்காக.!! " :icon_idea:

கணவன் முகத்தில் ஈயாடவில்லை.. ! கப் சுப்.. :):lol:

-இன்று படித்தது..யாழுக்காக பகிர்கிறேன்..!

ராசவன்னியரே இது உங்கள் சொந்த அனுபவமா ....? கோபம் வேண்டாம். நான் இப்படிக் கேட்காவிட்டால் யாழில் சுவை ஏது..? :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியரே இது உங்கள் சொந்த அனுபவமா ....? கோபம் வேண்டாம். நான் இப்படிக் கேட்காவிட்டால் யாழில் சுவை ஏது..? :lol:  

அனுபவசாலிகள் மெளனிக்க, கற்றறிந்ததை சொல்ல ஏன் கோபப்பட வேண்டும் ஐயா? :lol::D:)

29urh53.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ராசவன்னியரே! இது கொடுமையிலும் கொடுமை!. நாங்கள் நெடுக்காலைபோவனைப் பின்பற்றியிருக்க வேண்டும்..... :(

ம்.. உங்களுக்கு "பிறவிப்பயனே" தேவையில்லை என்கிறீர்கள் ! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கொரு சங்கம் வைத்திருக்கிறார்கள்

ஆணுக்கு மட்டும்.........??

என்ன நடக்குது இங்க??

கேட்க நாதியில்லை என்ற துணிவுதானே...? :lol:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.