Jump to content

1945 பிப்ரவரி 6: மக்களின் பாடகர் பிறந்த நாள்!


Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

bob_marley_2302181f.jpg

 

ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்!
 
ஒரே அன்புதான்! ஒரே இதயம்தான்!
 
ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு.
 
குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே அன்பு!
 
குழந்தைகள் உரக்கச் சொல்கின்றன - ஒரே இதயம்!
 
குழந்தைகள் சொல்கின்றன: கடவுளுக்கு நன்றி கூறித் துதிப்போம்!
 
குழந்தைகள் சொல்கின்றன: ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு.
 
 
நான் கேட்க விரும்புவதெல்லாம் ஒரே ஒரு கேள்விதான் (ஒரே இதயம்தான்)
 
தனது சொந்த நம்பிக்கைகளைக் காத்துக்கொள்ள
 
உலகையே காயப்படுத்திய
 
நம்பிக்கையிழந்த பாவிக்கு இந்த உலகத்தில் இடம் இருக்கிறதா?
 
 
ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு
 
ஆதியில் இருந்ததுபோலவே (ஒரே அன்புதான்!)
 
இறுதியில் வருவதைப் போலவும்தான் (ஒரே இதயம்தான்!).
 
சரிதானே!
 
கடவுளுக்கு நன்றி சொல்லித் துதிப்போம்!
 
ஒன்றாய் இணைவோம் நாம், சுகமே இனி நமக்கு.
 
இன்னொரு விஷயம்!
 
 
ஒன்றாய் ஈடுபடுவோம் இந்தப் புனிதப் போரில் (ஒரே அன்புதான்!)
 
அவர் வரும்போது அழிவென்பது ஏது? (ஒரே பாடல்தான்!)
 
மீட்சியே அற்றுப்போனவர்கள்மீது இரக்கம் காட்டுங்கள்;
 
படைத்தவரிடமிருந்து ஒளிந்துகொள்ள முடியாது.
 
 
மனிதர்களே உங்களிடம் இறைஞ்சுகிறேன்! (ஒரே அன்புதான்!);
 
இறைவா, (ஒரே இதயம்தான்) ஊஊ…
 
பாப் மார்லியின் மிகவும் பிரபலமான ‘ஒன் லவ் ஒன் ஹார்ட்’ பாடலிலிருந்து…
 
பாப் மார்லி. ஏழ்மையான நாட்டில், எளிமையான பின்னணியில் வளர்ந்து, உலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்தவர். கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவை விட்டுத் தாண்டாத ரெக்கே வகை இசையை உலகின் வரைபடத்தில் இடம்பெறச் செய்த மகா கலைஞர்.
 
ஜமைக்காவின் செயின்ட் ஆன் நகர் அருகில் உள்ள நைன் மைல் எனும் கிராமத்தில் 1945 பிப்ரவரி 6-ல் பிறந்தார். அவரது தந்தை நார்வல் சிங்ளேர் மார்லி வெள்ளையினத்தைச் சேர்ந்தவர். தேயிலைத் தோட்டத்தில் மேலாளராகப் பணிபுரிந்த 60 வயது நார்வல் 18 வயதான செடெல்லாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பாப் மார்லி பிறந்த சில நாட்களிலேயே மனைவியையும் மகனையும் விட்டுப் பிரிந்தார் நார்வல். வறுமையில் வளர்ந்த பாப் மார்லிக்கு, இசையின் மீது காதல் பிறந்தது. அவரது வகுப்புத் தோழன் ஓ’ரெலி லிவிங்ஸ்டனுடன் இணைந்து இசை கற்றுக்கொள்வது, பாடல்களை எழுதிப் பாடுவது என்று இசைபட வளர்ந்தார்.
 
நண்பர்களுடன் இணைந்து ‘வெய்லர்ஸ்’ என்னும் இசைக் குழுவை உருவாக்கினார். 1961-ல் லெஸ்லீ காங் எனும் இசைத்தயாரிப்பாளர் இவரது இசையில் ‘ஜட்ஜ்நாட்’ என்னும் இசைத் தொகுப்பைக் கொண்டுவந்தார். 1963-ல் வெளியான ‘சிம்மர்ஸ் டவுன்’ பாடல் அமெரிக்காவிலும் பிரபலமானது. ‘சோல் ரெபல்ஸ்’, ‘கேட்ச் எ ஃபயர்’, ‘எக்ஸோடஸ்’, ‘சர்வைவல்’என்று புகழ்பெற்ற ஆல்பங்களை வெளியிட்டார். உலகமெங்கும் அவருக்கு ரசிகர்கள் உருவானார்கள்.
 
கிட்டாரைக் கையில் ஏந்தி, உன்மத்தம் பிடித்தவர்போல் தலையை உயர்த்தி, கண்களை மூடிக்கொண்டு அவர் பாடுவதைப் பார்க்கும்போது, அடுத்தவர் வேதனையை உள்வாங்கிக்கொண்டு அவர்களுக்காகப் பிரார்த்திப்பதுபோல் இருக்கும். ஜமைக்கா மக்களை மிகவும் நேசித்தார் மார்லி. தேர்தல் காரணமாக மோதிக்கொண்ட ‘மக்கள் தேசியக் கட்சி’ மற்றும் ‘ஜமைக்கன் தொழிலாளர் கட்சி’தலைவர்களை ஒரே மேடையில் அழைத்து இசை நிகழ்ச்சி நடத்தினார்.
 
இருவரையும் கைகோக்கச் சொல்லியபடி அவர் ஆடிப்பாடியது ஜமைக்கா அரசியலில் மறக்கவே முடியாத நிகழ்வு. ‘ஒன் லவ்’ எனும் அந்தப் பாடலை, மில்லினியத்தின் பாடலாகப் பின்னாட்களில் பிபிசி தேர்ந்தெடுத்தது. ஜிம்பாப்வே விடுதலை அடைந்தபோது, அந்நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தினார் மார்லி. அரசியல் பகையின் காரணமாக அவரைச் சுட்டுக்கொல்லவும் முயற்சி நடந்தது. புகழின் உச்சியில் இருந்த மார்லி, புற்றுநோய் தாக்கி தனது 36-வது வயதிலேயே மரணமடைந்தார். மக்களின் கலைஞராகவே வாழ்ந்து மறைந்த அந்த மேதைக்கு, 2001-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான கிராமி விருது வழங்கப்பட்டது. அவரது பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாகக் கொண்டாடுகிறது ஜமைக்கா!
 
- சரித்திரன்
 
Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களும் பறிமுதல் – சரத் வீரசேகர தடைசெய்யப்பட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அரசாங்கம் பறிமுதல் செய்யும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்த அமைப்புகளின் தலைவர்களிடமிருந்து தகவல் பெறப்படுவதாகவும் கூறினார். பறிமுதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அவர்களின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் தலைவர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த வாரம் அல்கொய்தா, ஐ.எஸ் உள்ளிட்ட 11 இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1210246
  • ஜனாதிபதியால் அச்சுறுத்தப்பட்ட முதல் நபர் விஜயதாச அல்ல – அனுர கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாச ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார். எனவே மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்திற்கு பதிலளிக்க பல்வேறு வழிகள் உள்ளன. ஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என கூறினார். நாடு குறித்து முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவே தான் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார். நீண்ட விடுமுறை காலத்தில் நாடாளுமன்றில் வரைபை சமர்ப்பித்து குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை கூட அரசாங்கம் பறித்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். https://athavannews.com/2021/1210183
  • விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சி: யாழில் அதிரடியாக நால்வர் கைது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள் உருவாக்கும் முயற்சியில் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) அதிகாலை, யாழ்ப்பாணம்- இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் இவ்வாறு  பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது. மேலும் அண்மையில், இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் தொலைபேசியில் தொடர்பினை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யாழில் நீண்ட காலத்திற்கு பின்னர் இத்தகையதொரு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1210236
  • அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் கிடையாது- வேலன் சுவாமிகள் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் ஒருபோதும் என்னிடம் கிடையாதென வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வேலன் சுவாமிகளை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட சிலரினால் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையிலேயே வேலன் சுவாமிகள், அரசியலுக்கு வரமாட்டேன் என அறிவிப்பு விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தில் அங்கம் வகிக்கும்  உறுப்பினர்கள் எவரும் அரசியலில் பிரவேசிக்கமாட்டார்கள். நாங்கள் அனைவரும், சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை ஒழுங்குப்படுத்தும் விடயத்திலேயே எங்களது பணியை தொடருவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1210219
  • நிழலி.... விடுப்பு அறிவதில், சரியான விண்ணன் போலை இருக்குது.   😂  🤣
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.