Jump to content

அறுபதிலும் வாழ்க்கையை ஆள.. வாழ..!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

kungumam_01.jpg

அறுபதிலும் வாழ்க்கையை ஆள.. வாழ..!

உங்களுக்கு சொந்தமான இடத்திலேயே வாழுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்கு சுதந்திரமும், தனியுரிமையும் இருக்கும்.

வங்கிகளின் நீண்டகால் வைப்பு நிதிகளையும், சொத்துக்களையும் உங்கள் பெயரிலேயே, உங்களுடனேயே வைத்து கொள்ளவும்.

உங்கள் குழந்தைகளின் வாக்குறுதிகளை நம்பி இருக்க வேண்டாம், ஏனெனில் உங்களுக்கு வயதேற அவர்களின் முன்னுரிமைகள் காலத்திற்கேற்றவாறு மாறும்.

காலத்தை வென்று வாழும் உங்களின் உண்மையான நண்பர்களை அடையாளம் கண்டு தொடருங்கள்.

எதையும் மற்றவர்களுடன் ஒப்பீடு செய்து வாழ வேண்டாம்.

உங்கள் குழந்தைகளின் வாழ்க்கையில் குறுக்கிடாதீர்கள், அவர்களின் வாழ்க்கையை வாழ விடுங்கள்.

உங்கள் வயதை ஒரு பாதுகாப்பான காரணமாகக் காட்டி, சிறப்பையோ, கவனிப்பையோ, உபசரிப்பையோ எதிர்பார்க்காதீர்கள்.

அடுததவர்கள் என்ன சொல்கிறார்களென பொறுமையாகக் கேளுங்கள், அதன் பின் சுதந்திரமாக முடிவெடுங்கள்.

கடவுளேயானாலும், வேண்டுங்கள், கெஞ்சாதீர்கள், தவறுகளுக்கு மன்னிப்பை கோருங்கள்.

உடல்நலத்தில் மிக முக்கியமான அதிகவனத்தை செலுத்துங்கள், உங்கள் வசதிக்கேற்ற மருத்துவ கவனிப்பிலும், ஆரோகியமான சத்தான உணவு வகைகளிலும் முக்கிய கவனம் கொள்ளுங்கள். உங்கள் வேலைகளை நீங்களே செய்யுங்கள்.

இறுதியாக ஓய்வு, வேலையிலிருந்தேயொழிய, வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுவிடாதீர்கள்..!

:) :) :)

- யாழில் வரும் பெருசுகளுக்கும், வந்த பெருசுகளுக்கும் கவனத்தில் கொள்ள, படித்ததை பகிர்கிறேன்.. :)

Have happy & peaceful retired life..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி வன்னியன்...!    பக்கத்து இலைக்கு பாயாசம் ஊத்துங்கோ என்டு சொல்லுறீங்கள்...!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசவன்னியன், தயை கூர்ந்து " பெருசுகளிற்கான " வரைவிலக்கணத்தைத்  :D தந்துதவ வேண்டுகிறேன் 

இதில் உடற்பருமனா அன்றில் வயதா ஆட்சி செலுத்துகிறது? :rolleyes:

நான் சிறிய தோற்றம் பெரிய வயது :wub:   ###

விசுக்கரா அன்றில் நானா " பெருசுகள் என்னும் பொன்னாடைக்கு தகுதியானவர்கள் :icon_idea:  

###

ஆகப்பெருசு எண்டு நினைக்கப்படாது வாஜ்பாயி , மன்மோகன் - அவை எல்லாம் மூப்புதான்

"பெருசுகள்" என்று இங்கே குறிக்கப்படுவது சட்ட ரீதியான ஓய்வு வயதை எட்டியவர்கள்..அதாவது வயது மூப்பு ! இவை நாட்டிற்கு நாடு வேறுபடலாம்..

கேரளா அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 55

தமிழர் நாட்டில் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 58

ஆந்திராவில் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 60

இந்தியா மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயது 60

பிற உலக நாடுகளில் பணியில் ஓய்வு வயதும் பொதுவாக 60 ஆக இருக்குமென எண்ணுகிறேன்..!

'பரதேசி'யின் வயதோ, 'விசு'வின் சட்ட ரீதியான வயதை நானறியேன்.. :) So, no comments !

# வாஜ்பாயி, மன்னுமோகன் யாரவர்கள்? :lol::icon_idea:

...பக்கத்து இலைக்கு பாயாசம் ஊத்துங்கோ என்டு சொல்லுறீங்கள்...!!  :D

பக்கத்து இலை நன்றாக இருந்தால் நம் இலையும் வளமாக இருக்குமென்ற நல்லெண்ணம் தான் சுவி..!

அதில் தவறொன்றும் இல்லையே..?

Link to comment
Share on other sites

###

ஆகப்பெருசு எண்டு நினைக்கப்படாது வாஜ்பாயி , மன்மோகன் - அவை எல்லாம் மூப்புதான்

கிட்டத்தட்ட மன்மோகனை விட ஒரு... மூண்டு நாலு வயசு குறைவா இருக்குமா ?

மன் மோகனுக்கு 83

வாஜ் பாயிக்கு 90.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றிகள் நண்பரே,

இந்தக் குளிருக்குள்ளேயும் நீங்கள் நினைகிற மாதிரி ஒருதரும் நேரத்துக்கு வீட்டை போக முடியாது :D

அனேகமாக தொண்ணூறு வீதமானவர்களும் 65 - 67 வயதெல்லை தான்.

மேலதிக்க விபரங்களுக்கு:

 http://en.wikipedia.org/wiki/Retirement_age 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான் பொருளாதார ரீதியாக என் இறுதி வாழ்க்கையை தயார்படுத்தாவிட்டாலும்......... மனரீதியாக தயார்படுத்தி நீண்ட நாட்களாகி விட்டது.  :)
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இன்னும் கனகாலம் இருக்கு,அதுவரை இருப்பேனோ தெரியாது.

Link to comment
Share on other sites

kungumam_01.jpg

அறுபதிலும் வாழ்க்கையை ஆள.. வாழ..!

அறுபதிலும் ஆள, வாழ என்று ஆணின் படத்தை மட்டுமே போட்டதால் இங்கு ஆண்கள் மட்டுமே வந்து கும்மாளம் அடிக்கிறார்கள். ஒரு பெண்ணின் படத்தையும் போட்டிருந்தால் இங்கு சுமேரியர், வல்வை சகாறா, சாந்தி, ரதி என்று பெண்களும் வந்து கும்மாளம் அடித்திருப்பார்களே... :(  :D  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறுபதிலும் ஆள, வாழ என்று ஆணின் படத்தை மட்டுமே போட்டதால் இங்கு ஆண்கள் மட்டுமே வந்து கும்மாளம் அடிக்கிறார்கள். ஒரு பெண்ணின் படத்தையும் போட்டிருந்தால் இங்கு சுமேரியர், வல்வை சகாறா, சாந்தி, ரதி என்று பெண்களும் வந்து கும்மாளம் அடித்திருப்பார்களே... :(  :D  :lol:  

அவர்களுக்கு

p38c.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயதான தம்பதிகள் ஆனாலும் உளரீதியாக சில பிரச்சனைகள் உண்டு.  பெண்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தப் பிள்ளைகளுடனும் அனுசரித்துக்  (வழிந்து) கொண்டு போவார்கள். தன்மானமுள்ள ஆண்களால் அது முடியாது. அதனால் ஓய்வு வயது வந்ததும் (பிரான்சில் 65.) ஆண்களுக்கு தாளாமையும் தள்ளாமையும் வந்து விடுகின்றது. :huh::unsure:

பிரச்சனையைச் சொன்னால் தீர்வும் சொல்ல வேண்டும் அதுதான் விதி:  வயோதிப இளைஞ்ர்கள் எப்போதும் தன்கையில் தேவையான் அளவு பணம் வைத்திருக்க வேண்டும். வீட்டில் அதிகநேரம் தங்காமல் வெளியில் வேலை இருப்பதுபோல்  சென்றுவர வேண்டும். எப்போதும் பிஸியாய் இருப்பதுபோல் மூஞ்சியை (பிரகாஷ்ராஜ் போல்) வைத்திருக்க வேண்டும். பிட்டு இருந்தால் ஏன் இடியப்பம் இல்லையா என்றும் , தோசை இருந்தால் இட்டலி அவைக்கலையா என்றும் அப்பப்ப பீலா விட வேண்டும்...! :lol::D

இங்கே தான் தவறு இருக்கிறது..தன்மானம் ஆண்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற கர்வம், ஈகோ. அதை விட்டொழித்தால் பிரச்சனையே இல்லை..! :o:lol:

இப்பொழுது பெண்களும் விவரமாய்கொண்டு வருகிறார்கள்.! "மனுசனுக்கு வேலையும் போச்சுது, வயசுப்போன காலத்திலே வெட்டி பந்தா பண்ணிக்கிட்டு இதென்ன மைனராட்டம் குத்துசுவர்லே போயி உரசிக்கிட்டு நிக்குது..!" என சொல்லத் தொடங்கிவிடுவர்.. :icon_idea:

Link to comment
Share on other sites

அவர்களுக்கு

p38c.jpg

யார் இவர் வன்னியரே? எங்கள் யாழ்கள உறவொன்று தனது இளமைக்காலத்தில் எடுத்த படம்போல் தெரிகிறது. ஆள, வாழ வழிகாட்டுகிறேன் என்று முக்தியடைய வைத்துவிடுவீர்கள் போல் இருக்கிறதே!!... :D  :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... ஆள, வாழ வழிகாட்டுகிறேன் என்று முக்தியடைய வைத்துவிடுவீர்கள் போல் இருக்கிறதே!!... :D  :lol:  

முக்தி, பக்தி, சித்தி என்றெல்லாம் அடிக்கடி நீங்கள் சொல்கிறீர்கள், சிறியோன் எனக்கு விளங்கவில்லை, தெளிவுபடுத்தினால் நன்று..! :o:huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.