seyon yazhvaendhan

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்

Recommended Posts

இயல்பான எழுத்துக்களுடன் கவிதைகள் அழகு. ஏனோ கவிதையை எல்லோரும் இரசிப்பதில்லை. நான் நினைக்கிறேன் பலருக்கு அதை விளங்கிக் கொள்ள முடிவதில்லை. அதனாலேயே வருவதுமில்லை வாசிப்பதுமில்லை. :D

Share this post


Link to post
Share on other sites

ஆறுதலான வார்த்தைகள்.   படைப்பாளிகள் படைப்பதில் பிசியாக இருப்பார்கள்.  கவிதைகளைப் படிப்பவர்கள் குறைவு.  கவிதை படிப்பவர்களை விட கவிதை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகம் - குறிப்பாக இணையத்தில்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 14

தெய்வங்களின் கைகளில் 

 

தெய்வங்களின் கைகளில்

நாம் என்னென்ன கொடுத்திருக்கிறோம்?

பாத்திரம் தேய்க்கும் பிரஸ்

எச்சில் இலை எடுக்கும் வாளி

மேசை துடைக்கும் துணி

சட்டங்களில் அடுக்க தீக்குச்சிகள்

பட்டாசில் திணிக்க கந்தகத் திரிகள்

கொண்டாடும் இடத்தில் தெய்வமும்

திண்டாடித் தெருவில் குழந்தையும்.

 

சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)  saavuseithikkaran.blogspot.com

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 15

என் சடலம்

 

நிச்சயமாகத் தெரியும்

அது

என் சடலம் தான்

கண்ணாடியில்

தினமும்

பார்ப்பதுதானே

அடையாளம்

தெரியாமல்

போய்விடுமா என்ன?

இப்போதெல்லாம்

அடிக்கடி

தென்படுகிறது

என் சடலம்

இல்லை, அது எப்போதும்

இருக்கிறது

நான்தான்

இதுவரை

கண்டுகொள்ளவில்லையோ

என் சடலத்தை?

நம் சடலத்தை

நாம் கண்டு

அழாமல்

நாயா அழும்?

வாழும் போது

என் சடலம்

எனக்கே தெரியாமல் போனால்

செத்த பின்பு

என் சடலம்

தன் சடலமென்று

தெரியாமல் போகாதா

இன்னொருவனுக்கு?

 

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)  saavuseithikkaran.blogspot.com

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 16

தமிழ் வாழ்க

 

சங்கம் வைத்து

தமிழ் வளர்த்தோம்

தமிழை வைத்து

கட்சி வளர்த்தோம்

கட்சியை வைத்து

ஆட்சியைப் பிடித்தோம்

ஆட்சியை வைத்து

தமிழை அழித்தோம்

இன்னோரிடத்தில்

தமிழரையும் அழித்தோம்

 

-சேயோன் யாழ்வேந்தன் (seyonyazhvaendhan@gmail.com)  saavuseithikkaran.blogspot.com

Edited by seyon yazhvaendhan

Share this post


Link to post
Share on other sites

தமிழானது...... தன் அழிவையும் அழகுசொட்ட எழுதுவதற்குச் சொற்களைத் தரும் ஆழ்ந்த வல்லமை கொண்டது என்பதை யாழ் வேந்தன் கவியும் வெளிப்படுத்தி நிற்கிறது.

Share this post


Link to post
Share on other sites

வித்தியாசமான சிந்தனைகளுடன் தவழ்கிறன கவிதைகள்

Share this post


Link to post
Share on other sites

அருமை கவிகள் ஏன்னோ இந்த திரியை கவனிக்க தவறியிருக்கிறேன் தொடருங்கள் ..

Share this post


Link to post
Share on other sites

வாசகன் கவிதையைத் தேடுவது போலவே, கவிதை வாசகனைத் தேடிச் சென்றடைகிறது. என் தாயாம் தமிழ் எனது சில கவிதைகளில் பயணித்து நல்ல வாசகர்களை நாள்தோறும் புதிதாய்ச் சென்றடைவதில் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து தமிழோடு உறவாடுவோம். நன்றி சுமேரியர், அஞ்சரன், Paanch மற்றும் உள தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும்.

 

 

எல்லோரிடமும் இருக்கிறது கவிதை

என்ன கழுதை

எழுதாமல் கிடக்கிறது

அவ்வளவுதான்

 

எழுதுவதற்கு நேரமில்லாமல், ஊக்குவிக்க ஆளில்லாமல் எழுதாமல் இருக்கிறார்கள் நிறையப் பேர்.

 

"இறந்தவர்கள்

பூமியை விட்டு

வெளியேற்றப்படுவதில்லை

அவர்கள்

பூமிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்"

 

இவை என் மகன் ஆழிமுகிலன் (7ஆம் வகுப்பு) எழுதிய வரிகள். இத்தகைய படைப்பாளிகளை பள்ளிக்கு அனுப்பி, பாடச்சுமை தூக்க வைத்து, படைப்புத்திறனை மழுங்கடிக்கிற கட்டாயம் நம் மீது திணிக்கப்பட்டிருக்கிறது.  (என்ன, கவிதை நன்று தானே?)

 

உறவுகள் நிறைய எழுதுங்கள்.  நண்பர்கள் விமர்சனம் செய்யட்டும். படைப்புத் திறனை வளர்த்தெடுப்போம்.

 

 

 

Edited by seyon yazhvaendhan

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 17

 

மலர்ச்செடி தரும் நிழல்

இடையில் சிறுத்த

கரிய

அழகிய

அதன் நிழலுக்காகத்தான்

அந்தச் செடியை

நான் வாங்கினேன்

நிழலில் கூட அது

கறுப்பு மலர்களை

பிறப்பித்திருந்தது

நிழலுக்காகத்தான்

அந்த மலர்ச்செடியை

நான் வாங்குவதாக

உன்னிடம் சொன்னபோதே

மர்மப் புன்னகை

பூத்தாய்

செடியை நான்

மடியில் வைத்து

பேருந்தில் அமர்ந்தபோதுதான்

பார்த்தேன்

நிழலின்றிச் செடி

அம்மணமாய் இருந்ததை.

உடனே நான்

உன்னிடம் ஓடி வந்தேன்

செடியை நீ

நிழலின்றி

கொடுத்ததைச் சொன்னேன்

வெட்கமின்றி நீ

வாய்விட்டுச் சிரித்தாய் -

இங்கேயும் இல்லை பார்

அச்செடி நிழலென்று.

பெண் வியாபாரத்தில்

ஆண் சொல்

அம்பலம் ஏறுமா?

சோர்வுடன் நான்

வீடு திரும்பி

வாசலில் செடியை வைத்தேன்

என் சோகம்

பொறுக்காமல்

மறைத்து வைத்திருந்த

நிழலை

விரித்துச் சிரித்தது

சிறு குழந்தைபோல்

செடி.

Share this post


Link to post
Share on other sites

எல்லோரிடமும் இருக்கிறது கவிதை

என்ன கழுதை

எழுதாமல் கிடக்கிறது

அவ்வளவுதான்

 

என் எண்ணத்திலும் கற்பனையிலும் தோன்றும் 
என் கதைகளையும் கவிதைகளையும்....
அப்படியே பதிந்துவிட இயந்திரம் ஒன்று இருந்தால்!
உலகமே என்னை வியந்து பாராட்டும்!!  :)
 
என் எண்ணமும் கற்பனையும் தந்தவற்றை
நான் எழுதிப் பதிய முயலும்போது!... அவை
நீர்மேல் எழுத்துப்போல் மறைந்து விடுகின்றனவே!!  :(
 

 

Share this post


Link to post
Share on other sites

மனமே எந்திரம், மற்றொரு எந்திரமா?  

காகிதம் தேடிக் கிறுக்குவதற்குள் 

கவிதை மறந்துவிடுவது

நம் போல் கவிஞருக்கு இயல்பு.

 

"காட்டு விலங்கிடமிருந்து

பாதுகாப்பாக

ஆடு பட்டியில்

அடைக்கப்பட்டிருக்கிறது

மனிதனின் உணவுக்காக"

 

இவை உங்கள் அழகிய வரிகள் தாமே?  எழுதுங்கள் தோழர்.  கவிதை வானம் வசப்படும்.

 

 

 

Share this post


Link to post
Share on other sites

உள்ளத்தில் நினைவுண்டு எழுதுவதற்கு நேரமில்லை. என்றாலும் எறும்புக்குள்ள மனப்பாண்மை எமக்கு வேண்டாமா?  

எதிர்ப்பட்ட

எறும்பொன்றை

நிறுத்தி

என்கவிதை

கேள் என்றேன்

நிற்க நேரமில்லை

வேண்டுமென்றால்

என் கூட வந்து

சொல் என்றது.

 

 தோளைத் தூக்கி நேரமில்லை என்று கூறித் தலையைத் திருப்பும் உலகில் நீங்கள் கண்ட  எறும்புகள் நல்ல எறும்புகள்.,     என் கூட வந்து சொல் என்றதுகளே

மண்டியிட்டுக் குனிந்து

கவிதையை கிசுகிசுத்தபடி

எறும்பின் பின்னால்

அறைக்குள் நான் ஊர்வது

வேடிக்கையாய் இருக்கிறது

மற்றவர்க்கு.

கவிதையைக்

கேட்க வைக்க

கவிஞன் படும்பாடு

யாருக்குத் தெரிகிறது?

                                 எறும்பையே கவிதை கேட்க வைத்த      உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

முயற்சி திருவினை  ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும். -   என்றார் வள்ளுவர்.

முயற்சி திருவினையாக்கும்-   பழமொழி   

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 11

 

கவிதை கேளுங்கள்

எதிர்ப்பட்ட

எறும்பொன்றை

நிறுத்தி

என்கவிதை

கேள் என்றேன்

நிற்க நேரமில்லை

வேண்டுமென்றால்

என் கூட வந்து

சொல் என்றது.

மண்டியிட்டுக் குனிந்து

கவிதையை கிசுகிசுத்தபடி

எறும்பின் பின்னால்

அறைக்குள் நான் ஊர்வது

வேடிக்கையாய் இருக்கிறது

மற்றவர்க்கு.

கவிதையைக்

கேட்க வைக்க

கவிஞன் படும்பாடு

யாருக்குத் தெரிகிறது?

 

சிந்திக்க வைத்த எறும்புகள். பாராட்டுகள். தொடருங்கள்.

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 18

கயிறு

 

 

தொப்புள் கொடி அறுத்து

முதல் முடிச்சு

போட்டது முதல்

நாளைப் பின்னிப் பின்னி

வாழ்வைத் திரிக்கிறாய்

கால் கட்டைவிரலைக் கட்டி

கடைசி முடிச்சு

போடும் வரை

Edited by seyon yazhvaendhan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 11

கவிதை கேளுங்கள்

 

எதிர்ப்பட்ட

எறும்பொன்றை

நிறுத்தி

என்கவிதை

கேள் என்றேன்

நிற்க நேரமில்லை

வேண்டுமென்றால்

என் கூட வந்து

சொல் என்றது.

மண்டியிட்டுக் குனிந்து

கவிதையை கிசுகிசுத்தபடி

எறும்பின் பின்னால்

அறைக்குள் நான் ஊர்வது

வேடிக்கையாய் இருக்கிறது

மற்றவர்க்கு.

கவிதையைக்

கேட்க வைக்க

கவிஞன் படும்பாடு

யாருக்குத் தெரிகிறது? :lol:

 

மிகவும் ரசித்தேன் , எளிய தமிழில் கவிதை விதைக்கிறீர் யாவருக்கும் புரியும் வகையில், நல்ல கவிஞனுக்குரிய நேர்த்தி :)

 

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 19

எதைக் கூற?

 

வாழ்க்கை முழுதும் விரவி நிற்கும்

வலியைக் கூறிப் போகும்

வாழ்வினின்றும் தப்பிப் போகும்

வழியைக் கூறிப் போகும்

கேட்க விரும்பா செய்திகளையும்

வலியக் கூறிப் போகும்

வரிக்கு வரி

கவி மேதாவித்தனத்தை

வாய்கிழியக் கூறிப் போகும்

கவிதை.

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 20

குளம் நிறையக் கல்

நீர் வற்றியதும்

தம் பிம்பங்களை

திரும்பப் பெற்றுக்கொள்கின்றன

கரையோரப் பனைமரங்கள்

யாரும் திரும்பக் கோராமல்

குளம் நிறைக்கின்றன

பிம்பங்களை உடைத்த கற்கள்

  • Like 3

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 21

ஒரே ஒரு வித்தை

 

ஒரு புறாவை

ஒரு முயலை

ஒரு பெண்ணை

மறைய வைத்த

அந்த மாயவித்தைக் கலைஞனிடம்

ஒரே ஒரு வித்தையை

கற்றுத்தரக் கேட்டேன்

ஒரு நிராகரிப்பை

ஒரு ஏமாற்றத்தை

ஒரு துரோகத்தை

ஒரு புன்னகையால்

மறைக்கும் வித்தை

அல்லது

வாழ்நாள் முழுதும்

தொடரும் சோகத்தை

ஓரிரவுத் தூக்கத்தில்

மறக்கும் வித்தை

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

வாழ்த்துக்கள்>

 

குளம் நிறையக் கல்

நீர் வற்றியதும்

தம் பிம்பங்களை

திரும்பப் பெற்றுக்கொள்கின்றன

கரையோரப் பனைமரங்கள்

யாரும் திரும்பக் கோராமல்

குளம் நிறைக்கின்றன

பிம்பங்களை உடைத்த கற்கள்

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 20

குளம் நிறையக் கல்

நீர் வற்றியதும்

தம் பிம்பங்களை

திரும்பப் பெற்றுக்கொள்கின்றன

கரையோரப் பனைமரங்கள்

யாரும் திரும்பக் கோராமல்

குளம் நிறைக்கின்றன

பிம்பங்களை உடைத்த கற்கள்

 

அருமையிலும் அருமை.... ! ஆயிரம் பச்சைகள்!

Share this post


Link to post
Share on other sites

நன்றி நிழலி, Poet மற்றும் எம் கவிதைத் தமிழ் உறவுகளுக்கு.

Share this post


Link to post
Share on other sites

அசாதாரணக் கவிதைகள் அற்புதமான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன... சேயோன்...!!

Share this post


Link to post
Share on other sites

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் - 20

குளம் நிறையக் கல்

நீர் வற்றியதும்

தம் பிம்பங்களை

திரும்பப் பெற்றுக்கொள்கின்றன

கரையோரப் பனைமரங்கள்

யாரும் திரும்பக் கோராமல்

குளம் நிறைக்கின்றன

பிம்பங்களை உடைத்த கற்கள்

எனக்கும் விளங்கிவிட்டது.. :o

அதாவது குளத்து நீரில் பனைமரங்களின் நிழல் தெரியும்.. அதற்கு கல்லெறிந்து மகிழ்வார்கள்.. நீர் வற்றியதும் நிழல் மறைந்துவிடும்.. ஆனால் எறியப்பட்ட கற்கள் அப்படியே இருக்கும்.. :huh:

நல்ல கவிதை சேயோன்..

Share this post


Link to post
Share on other sites

கருத்துகளையும் வாழ்த்துகளையும் பதிவு செய்த suvy, இசைக்கலைஞன், வாத்தியார் மற்றும் உள உறவுகள் அனைவருக்கும் நன்றி.

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now