Jump to content

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 91

ஏழையின் சிரிப்பு

 

சரக்கடிக்கும்போது

மட்டும்

கொஞ்சம் சிரிக்கிறான்

மாரி

சுற்றி நின்று

சிரிக்கிறது

சுற்றம்

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காண்கிறது

அரசு

Link to comment
Share on other sites

  • Replies 228
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 92

அன்பானவர்களுக்கு

இலக்கியமும் கவிதையும்

இன்னும் பலவும்

காலம் கடந்து நாம்

பேசிக்கொண்டிருந்ததில்

கணவன் சந்தேகிப்பான் என்பதையோ

மனைவி சபித்துக்கொண்டே

சமைத்துக்கொண்டிருப்பாள் என்பதையோ

மறந்தேபோனோம்

வீடு திரும்ப மனமில்லாதது போல்

ரயில் வாராத

நடைமேடையில்

அமர்ந்திருந்தோம்

இன்னும் பேசவேண்டியது

மிச்சமுள்ளது போல்.

சட்டென எழுந்து நின்றோம்

விடைபெறும் வேளையில்

மனதில் வினா எழுந்தது

மறுபடி எப்போது

சந்திப்போம் என்று.

எதுவும் பேசாமல்

எதிரெதிர் திசை பிரிந்தோம்.

என்ன செய்ய,

அன்பில்லாதவர்களுக்கு

எளிதாக இருக்கும் விஷயங்கள்

அன்பு கொண்டவர்களுக்கு

மிகக் கடினமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 93

கொடியிது கொடியது

 

பச்சைக் கொடியேற்றி

பரதேசிக் கோலங்கொண்டு

சிவப்புக் கொடியேற்றி

சேதாரம் மிகவும் பட்டு

வெள்ளைக் கொடியேற்றி

விற்றுக்கொண்டிருக்கிறான்

மனைகளாக்கி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 94

கொஞ்சமாவது

 

பின்னிரவில் மழை பெய்ததை

இன்னும் குழந்தையாய் இருப்பதை

வீட்டுக்கு விலக்கப்பட்டுவிட்டதை

உழைத்திருப்பதை

முயக்கம் முடிவுக்கு வருவதை

முதலில் தெரிவிப்பது இது தான்

எங்கில்லையென்றாலும்

நெஞ்சில்

கொஞ்சமாவது

இருக்கவேண்டுமாம்

இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 95

சாவு செய்திக்காரன்

 

சாவு செய்தி

சொல்ல வந்தவன்

செத்துப் போனான்

ரெண்டு மைல் தொலைவில்

பஸ் விட்டிறங்கியிருப்பான்

மூச்சிரைக்க நடந்துவந்ததை

வேடிக்கை பார்த்தேன்

நம் வீட்டுக்குத்தான்

ஏதோ இழவு செய்தி

சொல்ல வருகிறானென்று

அம்மா உறுதியாகச் சொன்னாள்

அழுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த

அவளை நோக்கி

நடந்து வந்த அவன்

கால்கள் பின்ன

காம்பவுன்ட் சுவரில்

சாய்ந்து உட்கார்ந்தான்

நெஞ்சைப் பிடித்தபடி

சாவு செய்தி சொல்லாமலே

செத்துப்போனான்

கண்முன்னே

செத்து விழுந்தவனைவிட

அவன் நாவில் செத்துப்போனது

யாருடைய சாவு செய்தி என்பதுதான்

அம்மாவின் கவலையாக இருந்தது

பத்து மைல் தொலைவிலிருந்த

காவல் நிலையம் மூலமாக

சாவு செய்திக்காரனின்

ஊரைக் கண்டுபிடித்து

சாவு செய்தியைச் சொல்வதற்கு

இரண்டு நாள் ஆகிவிட்டது

ஒரு சாவு செய்திக்காரனின்

கவிதையில் இடம் பிடிக்க

அவனுக்கு

முப்பது வருஷமாகியிருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 96

மழையென்பது யாதென - 5

 

நேற்றைய மழையில்

வெளுத்து

சுத்தமாகியிருந்தது

அழுக்கு வண்ணாத்தி

நீர் தெளித்திருந்த

வாழையிலை

பசிபெருக்கியது

ஒட்டாமல் உருண்டிருந்த

நீர்த்திவலைகளைத்

தாங்கிய பப்பாளி

நானும் ஆளான தாமரையென்றது

தெளித்திருந்த

மழை

வாசலில்

மஞ்சள் சரக்கொன்றை

கோலமிட்டிருந்ததால்

மறுபடியும் தூங்கப் போய்விட்டாள்

சீண்டாதே என்று உத்தரவிட்டு.

ஒரு கவிதையாவது

பதியலாமென்று

கணிணியைத் திறந்தால்

மழையென்பது யாதெனக் கேட்டு

மெயில் அனுப்பியிருந்தான்

ஒருவழிப் பயணத்தில்

செவ்வாய்க்குப் போன

சினேகிதனின் மகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 97

சட்டெனப் பரவும் வெறுமை

 

யாருடனாவது

பேசிக்கொண்டிருக்கையில்

நடந்து சென்று கொண்டிருக்கையில்

வாகனம் ஓட்டிச்செல்கையில்

சட்டென்று

ஒரு வெறுமை கவ்வுகிறதா?

சுற்றிலும் பலர் இருந்தும்

யாரும் இல்லாததுபோல்

ஏதேதோ சப்தம் இருந்தும்

எதுவுமே இல்லாத

மௌனம் நிலவுவது போல்

உணர்வு மேலோங்குகிறதா?

ஆரம்பத்திலேயே நீங்கள்

கண்டுபிடித்துவிட்டதால்

அச்சப்படத் தேவையில்லை.

இந்த வெறுமை

விரவிப்

பரவி

உங்கள் உலகத்தையே

முற்றிலும்

ஆக்கிரமித்து

அதனால் நீங்கள்

முற்றிலும் தனிமைப்பட்டு

அந்த ஏகாந்தத்தை

நீங்கள் அனுபவிப்பது

மற்றவர்களுக்கு

பைத்தியக்காரத்தனமாகத் தெரிவது

உங்களுக்குப்

பிரச்சனையில்லையென்றால்

நீங்கள்

இப்போது செய்துகொண்டிருப்பதை

அப்படியே தொடருங்கள்.

அப்படி இல்லையென்றால் ...

நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்

புத்தகத்தை

மூடிவைத்துவிடுங்கள்

எழுதிக்கொண்டிருக்கும்

கவிதையை

இத்துடன் முடித்துக்கொள்ளுங்கள்.

மலைகள்

மரங்கள்

பறவைகளுடன்

தனிமையில்

இருக்கும்

பொழுதுகளைத்

தவிர்த்துவிடுங்கள்

தொடர்ந்து சில நாட்கள்

எல்லாத் தொலைக்காட்சி

நிகழ்ச்சிகளையும்

ரசித்துப் பாருங்கள்

குறிப்பாக

சமீபத்திய

தமிழ் சினி மாக்களைப் பாருங்கள்

மனைவியோடு ஒரு முறை

மாமியார் வீட்டுக்குப்

போய் வாருங்கள்

இந்தக் கூட்டு சிகிச்சையை

தொடருங்கள்

கொஞ்சநாளில்

அந்த வெறுமை

பரவுவது

நின்று

மெல்ல மறைய

ஆரம்பித்திருக்கும்

உங்கள் வாழ்க்கை

பழைய வண்ணங்களுக்குத்

திரும்பியிருக்கும்

உங்கள் பழைய

வாழ்க்கையை

தொடருங்கள்,

மறுபடி வெறுமை

தென்படும் வரை.

ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்

கொஞ்சம் பிசகினாலும்

நீங்கள் காலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதை எழுதுவது ??

Link to comment
Share on other sites

பாஸ் நாங்க எப்பவோ காலி, 

 

இனி எப்படி மீளுவது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேயோன் நிறைய கவிதைகள் பதிவிட்டுள்ளீர்கள் ஒற்றைத் தலைப்பிலேயே பல கோணத்தில் உங்கள் கவிதைகள் மிளிர்கின்றன. நீங்கள் எழுதாத விடயமே இல்லைப்போல் இருக்கிறது. இலகுவாக எல்லோராலும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உங்கள் படைப்பு. அத்தோடு 7ஆம் வகுப்பில் கற்கும் உங்கள் மகன் எழுதிய fவிதையையையும் பதிவிட்டுள்ளீர்கள். ஒரு படைப்பாளித்தந்தையின் மனக்குமுறலை நன்றாக உணர முடிகிறது. ஒரு படைப்பாளியின் திறன் முடக்கி அவனைக் கற்பனை வெளிகளிலிருந்து அகற்றி சமூகவாழ்வின் கட்டாயதேவைகள் என்ற வட்டத்திற்குள் நிறுத்தி வைப்பது ஒரு படைப்பாளித்தந்தைக்கு மனமகிழ்வைத்தராதுதான் இருப்பினும் அந்தப்படைப்பாளித் தந்தையும் சமூகம் என்ற வட்டத்திற்குள் நின்றுதானே ஆகவேண்டும்.

 

உங்களுக்கும் இளையகவிஞனான உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள் பல. உங்கள் பதிவுகள் தொடரட்டும். நன்றி :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் நின்று நிதானமாக ஒவ்வொரு கவிதைகளாகப்படித்தேன்..

காண்பது கேட்பது உணர்வது என்று அத்தனையும் கவிதையாக்குகிறீர்கள்.. மிக அழகாக அசத்தவைக்கின்றன ஒவ்வொரு கவிதையும்.. மிக ரசித்து படித்தேன்.. தொடர்ந்து எழுதுங்கள் சேயோன்.. ரசித்து ரசித்து வாசிக்க நானும் இங்கு இணைந்திருப்பேன்..

Link to comment
Share on other sites

என் கவனத்திற்கு வரும்போது உங்கள் கவிதைகளை முழுவதும் படித்துவருகிறேன். ஊக்கிவிப்புத்தான் ஒருவரை உற்சாகப்படுத்தும் என்பது தெரிந்திருந்தும் அதனைச் செய்யமுடியாமைக்கு இந்த வெறுமைதான் காரணமோ? என்னசெய்வது வெறுமையிலிருந்து மீளமுடியாது போர்வை எருமைமாட்டுத் தோல்போன்று கனதியாகிவிடுகின்றது. நாடற்ற இனமாக தமிழினம் இருக்கும் வேளையில், அதனை மீட்கவலுவற்ற நிலையில் நானும் அங்குவந்து பிறந்திருப்பது காரணமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கவனத்திற்கு வரும்போது உங்கள் கவிதைகளை முழுவதும் படித்துவருகிறேன். ஊக்கிவிப்புத்தான் ஒருவரை உற்சாகப்படுத்தும் என்பது தெரிந்திருந்தும் அதனைச் செய்யமுடியாமைக்கு இந்த வெறுமைதான் காரணமோ? என்னசெய்வது வெறுமையிலிருந்து மீளமுடியாது போர்வை எருமைமாட்டுத் தோல்போன்று கனதியாகிவிடுகின்றது. நாடற்ற இனமாக தமிழினம் இருக்கும் வேளையில், அதனை மீட்கவலுவற்ற நிலையில் நானும் அங்குவந்து பிறந்திருப்பது காரணமாக இருக்கலாம்.

  

தாய்த்தமிழ் உறவுகள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்ச்சி /நம்பிக்கை ஒன்று போதும் தொடர்ந்து எழுதுவதற்கு.   உங்களது கருத்து உண்மையிலேயே மனதின் அடியாழத்துக்குள் சென்று ஒரு விலைமதிப்பற்ற கல் போலக் கிடக்கிறது.   தமிழ் படைப்பாளிகளிடம் இருக்கும் ஈகோ உலகறிந்தது. நானும் அதில் விலக்கல்ல.

 

(ஆனாலும் இதுபோன்று எப்போதாவது ஒரு முறை வந்து உங்களைப் போல் யாராவது கருத்திடும்போது தான், எனது படைப்பு சரியான பாதையில் செல்கிறதா என நான் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்).

மாறாத அன்புடன்

சேயோன் யாழ்வேந்தன்படித்தேன்.. தொடர்ந்து எழுதுங்கள் சேயோன்.. ரசித்து ரசித்து வாசிக்க நானும் இங்கு இணைந்திருப்பேன்..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் நின்று நிதானமாக ஒவ்வொரு கவிதைகளாகப்படித்தேன்..

காண்பது கேட்பது உணர்வது என்று அத்தனையும் கவிதையாக்குகிறீர்கள்.. மிக அழகாக அசத்தவைக்கின்றன ஒவ்வொரு கவிதையும்.. மிக ரசித்து படித்தேன்.. தொடர்ந்து எழுதுங்கள் சேயோன்.. ரசித்து ரசித்து வாசிக்க நானும் இங்கு இணைந்திருப்பேன்..

 

 

தம்பியின் அன்புக்கும், ரசனைக்கும் வந்தனம்.  இதுபோன்ற ஊக்குவிப்புகளை எதிர்பார்க்கும் குழந்தையாகவே என்றும் இருக்கிறது கவி மனசு.

தாய்த்தமிழால் இணைந்திருப்போம்.

அன்புடன்

சேயோன் யாழ்வேந்தன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சேயோன் நிறைய கவிதைகள் பதிவிட்டுள்ளீர்கள் ஒற்றைத் தலைப்பிலேயே பல கோணத்தில் உங்கள் கவிதைகள் மிளிர்கின்றன. நீங்கள் எழுதாத விடயமே இல்லைப்போல் இருக்கிறது. இலகுவாக எல்லோராலும் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உங்கள் படைப்பு. அத்தோடு 7ஆம் வகுப்பில் கற்கும் உங்கள் மகன் எழுதிய fவிதையையையும் பதிவிட்டுள்ளீர்கள். ஒரு படைப்பாளித்தந்தையின் மனக்குமுறலை நன்றாக உணர முடிகிறது. ஒரு படைப்பாளியின் திறன் முடக்கி அவனைக் கற்பனை வெளிகளிலிருந்து அகற்றி சமூகவாழ்வின் கட்டாயதேவைகள் என்ற வட்டத்திற்குள் நிறுத்தி வைப்பது ஒரு படைப்பாளித்தந்தைக்கு மனமகிழ்வைத்தராதுதான் இருப்பினும் அந்தப்படைப்பாளித் தந்தையும் சமூகம் என்ற வட்டத்திற்குள் நின்றுதானே ஆகவேண்டும்.

 

உங்களுக்கும் இளையகவிஞனான உங்கள் மகனுக்கும் வாழ்த்துக்கள் பல. உங்கள் பதிவுகள் தொடரட்டும். நன்றி :rolleyes:

 

 

அன்பு சகோதரி,  என்ன ஆயிற்று இந்த ஜூன் 13க்கு என்று தெரியவில்லை. என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் ஒரு சேர என்னைத் தாலாட்டி, சீராட்டி, பாராட்டி, என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறீர்கள்.  நன்றி.

 

கவிதை வாளால் காற்றைத் துண்டுபோடும் இந்தச் செயலை நானொன்றும் விருப்பத்துடன் செய்யவில்லை. கையறு நிலை, வேறென்ன செய்ய,  ஆனாலும் என் படைப்பின் பலம் எதுவென்றால், அவை உண்மையானவை. என் மூத்த மகன் ஆழிவேந்தன் தமிழ்வழியில் தமிழக அரசு உதவி பெறும் பள்ளியில், 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, இப்போது தாவரவியல் படிக்கிறான். இளையவன் ஆழிமுகிலன் தமிழ்வழிப் பள்ளியில் இப்போது 8 ஆம் வகுப்பு படிக்கிறான்.  சும்மா தமிழ் என்று முழங்கும் போலி படைப்பாளியோ அரசியல்வாதியோ நான் இல்லை என்பதற்காக இந்த எடுத்துக்காட்டு (தற்பெருமை கூட).  1983ல் ஆறாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளி புறக்கணித்து ஊர்வலம் போய், எனக்குள் பற்றிக்கொண்ட ஈழ ஆதரவுத் தீ இன்றும் தீவிரம் குறையாமல் எரிந்துகொண்டுதான் இருக்கிறது.

 

தமிழுக்கும் தமிழனுக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையில் நகர்ந்துகொண்டிருக்கிறது வாழ்க்கை.

 

நன்றியுடன்

 

சேயோன் யாழ்வேந்தன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாஸ் நாங்க எப்பவோ காலி, 

 

இனி எப்படி மீளுவது ?

 

கவிதைத் தோழா, கவிதை வாளால் காற்றைத் துண்டுபோடும் இந்தச் செயலை நாமென்ன  விருப்பத்துடனா செய்துகொண்டிருக்கிறோம்.  கையறு நிலை, வேறென்ன செய்ய, 

 

என் படைப்புகளைவிட கவித்துவம் மிகுந்திருக்கும் உங்களைப்போன்ற மூத்த கவிஞர்களின் படைப்புகளில் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

நமது படைப்பின் பலம் எதுவென்றால், அவை உண்மையானவை. 

 

கவிதை மனதின் மீள்பயணம். கவிஞன் மீள்வதில்லை ஒருபோதும். என் கருத்து சரியா தோழா?

எதை எழுதுவது ??

 

 

"என்னத்தைச் சொல்றது" என்பதிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடும் இளைய கவியல்லவா நீர்?

நன்றி வரவுக்கு.

 

 

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98

பாத்திரமறிந்து

 

பிச்சையிடுகிறது

தெய்வம்

தங்கத்தட்டில்

வைரக்கற்களையும்

அலுமினியத் தட்டில்

சில்லரைக் காசுகளையும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99

எனக்குப் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள்

இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும்

எனக்கும் பேய் பிடித்திருக்கிறது

அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி,

பேய்களுக்குக் கோயில் இல்லை

வேளா வேளைக்குப் பூஜை இல்லை

அபிஷேகம் அலங்காரம்

காணிக்கை உண்டியல் அறவே இல்லை

தேர் இல்லை திருவிழா இல்லை

சப்பார பவனி கூட இல்லை

கடவுளைப் போல் பேய்கள்

சாதி மதம் பார்ப்பதில்லை.

ஓட்டத்தான் வேண்டுமெனில்

கடவுள்களை ஓட்டிவிட்டு

பேய்களை ஓட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 100

 

கவி ருது வான போது

 

இலக்கியத்துக்கான மிக உயரிய விருது

எனக்கு வழங்கப்பட்ட இரவில்

பெய்த மழை

நிற்கவே இல்லை

முழு உலகமும் அழிந்து

அப்போதுதான் உருவாகின

இன்றைய பெருங்கடல்கள்

நோவாவின் தெப்பக்கட்டையில்

ஏறித் தப்பிய என்னிடம்

இப்போது சான்றுகள் இல்லை

கனவா நனவா என்றென்னை

எல்லோரும் கிள்ளிப் பார்த்த

தழும்புகள் மட்டும் இன்னும் உள்ளன

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 101

அவன்

அமைதி வழியில் போராடி
பட்டினிப் போராட்டம் நடத்தி
உங்கள் கண் முன்னே

அவன் அடிபட்டு இறந்திருக்க வேண்டும்
சிலை வைத்து நீங்கள்
அரசியல் செய்திருப்பீர்கள்

உங்களிடம்
ஓட்டுப் பிச்சையெடுத்து
உங்கள் முதுகிலேயே
சவாரி செய்திருக்கவேண்டும்
அவன் காலை நக்கி
புரட்சித் தலைவன் என்றிருப்பீர்கள்

அடிமை விலங்கொடிக்க
ஆயுதமேந்திப்
போராடியதால்
அவன் ஒண்டிப்புலியாகிவிட்டான்
உங்கள் காமாலைக் கண்களுக்கு

Link to comment
Share on other sites

 

மழையென்பது யாதென - 5

நேற்றைய மழையில்

வெளுத்து

சுத்தமாகியிருந்தது

அழுக்கு வண்ணாத்தி

நீர் தெளித்திருந்த

வாழையிலை

பசிபெருக்கியது

 

அழுக்கு  வண்ணாத்தி  என்ற பதம் தரும் பொருள் அபத்தமானது... திருத்தி விடுங்கள் சேயோன் அண்ணா :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

அழுக்கு  வண்ணாத்தி  என்ற பதம் தரும் பொருள் அபத்தமானது... திருத்தி விடுங்கள் சேயோன் அண்ணா :)

தம்பி விஷ்வா,

தெற்காசியாவிலும் இந்தியாவிலும் பரவலாகக் காணப்படும் நாகணவாய்ப்புள் இலக்கியங்களில் ‘பூவை’  என்றும் ‘ சிறுபூவாய் ‘ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நகர மக்கள் பேச்சுவழக்கில் மைனா என்பார்கள்.  கிராமங்களில் இந்தப்பறவை பரவலாக “அழுக்கு வண்ணாத்தி” என்றே சொல்லப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் பெரும்பாலான மக்களுக்கு இந்தப் பறவைக்கு “அழுக்கு வண்ணாத்தி” என்ற பெயரைத் தவிர வேறு பெயர் இருப்பது தெரியாது.


வலைப்பக்கத்தில் தேடிய போது கிடைத்த சில பதிவுகளை இத்துடன் இணைத்துள்ளேன்.

 

http://maniyinpakkam.blogspot.in/2010/02/blog-post_02.html


https://moonampalli.wordpress.com/2011/04/18/ நான்-அறிந்த-பறவைகள்/

 சிறுவயதில் எங்கள் வீட்டின் கருவேப்பில்லை மரத்தில் கூடு கட்டியிருந்த அழுக்கு வண்ணாத்தி பறவை, வீட்டின் மொட்டை மாடியிலும், கிராமத்தில் தானியம் உலரவைக்கையில் வந்து போகும் சிட்டு குருவிகள், மேய்ச்சல் காட்டில் கண்ட செம்பூத்து, சூர்ய காந்தி விதையை திண்ண வந்து பாட்டியால் விரட்டபடும் பச்சைக் கிளிகள், வீட்டிலேயே வளர்ந்த கோழி கூட்டம், அதன் குஞ்சுகளை வேட்டையாடிட வட்டமிடும் பருந்துகள், இடம் பெயர்ந்து செல்கையில் தற்காலிக ஓய்வெடுத்து செல்லும் ஒரு வகை நாரைகள், இப்படி நம்மோடு பழகபட்டிருந்த சில பறவைகளும் இன்று விலகிச் சென்று விட்டதாகவே தோன்றுகிறது.

 

THURSDAY, NOVEMBER 5, 2009

நொள்ளை மடையான்!


பொதுவா, நொள்ளைக் கண்ணன், நொள்ளை வாயன்னு எல்லாம் ஏசுறதைப் பார்த்து இருப்போம் நாம! அதென்ன அந்த நொள்ளைக் கண்ணன்?


கிராமப்புறத்துல பாருங்க, பறவைகளுக்கு பல விதமான பேர் வெச்சி சொல்வாங்க, அழுக்கு வண்ணாத்தி, துடுப்பு மூக்கன், அரிவாள் மூக்கன், உள்ளான், துடுப்புநாரை, கோசிவாயன் இப்படி எல்லாம்... அந்த வரிசையில ஒன்னுதாங்க இந்த நொள்ளை மடையான் அப்படீங்கற பறவையும்!

 

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் நீங்கள் குறிப்பிட்ட  பெயரை நான் கேள்விப்பட்டதில்லை, தேடி பார்த்ததில் அது மைனாவின் இன்னொமொரு பெயர் என்று தெரிந்து கொண்டேன்.  எனவே தான் அப்படி சொல்லியிருந்தேன், தகவலுக்கு நன்றி அண்ணா..  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பியின் புரிதலில் மகிழ்ச்சி. வருத்தம் ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 102

  • சாகசம்

    -    சேயோன் யாழ்வேந்தன்

     

    பழுத்த இலை காத்திருக்கிறது

    காற்றின் சிறு வருகைக்கு

    ஒரு பறவையின் அமர்வுக்கு

    அல்லது காம்பின் தளர்வுக்கு

    தன்னை விடுவித்துக் கொள்ள.

     

    பென்டுலம் போல் அசைந்துகொண்டோ

    உருளையைப் போல் சுழன்றுகொண்டோ

    தரையிறங்கும் இறுதி சாகசப் பயணத்தை

    யாரேனும் பார்த்து வியக்கக்கூடுமென

    அது காத்திருக்கிறது

     

    தன்னிடத்தை விட்டு

    இவ்வளவு தூரம் வந்ததை

    சிலர் வியந்து பேசவும் கூடும்

    ஓர் எறும்பைச் சுமந்து

    அது இறங்கும் அதிசயத்தை

    இரு கூரிய கண்கள்

    வியந்து பாடவும் கூடும்.

     

    பழுத்த இலை காத்திருக்கிறது

    தன் இறுதி சாகசப் பயணத்துக்கு.

     

    seyonyazhvaendhan@gmail.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 103

வழி தவறிய பறவை

 

மனசுக்குள் புகுந்துவிட்ட

வழி தவறிய பறவை ஒன்று

வெளியேற மறுத்து முரண்டுபிடிக்கிறது

அதன் சிறகடிப்பு

மனப்புழுக்கத்தைக் குறைத்தாலும்

படபடப்பது சில சமயம்

பதற்றத்தைத் தருகிறது

கவிதைகளைக் கேட்டபின்பே

உறங்கச் செல்லும் அது

இரவுப் பூச்சிகளின்

ஜல்ஜல் ஒலியை

கொலுசொலியினின்றும்

வேறுபடுத்தத் தெரியாமல்

இரவெல்லாம் விழித்திருக்கிறது

இப்படியொரு பறவையை

எப்போதும் நெஞ்சில் சுமப்பதில்

சிரமமொன்றுமில்லை

எச்சங்களைத் தவிர.

seyonyazhvaendhan@gmail.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.