Jump to content

UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த என்ன தகுதி வேண்டும்?


M.P

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இப்ப இங்கிலாந்திலை இருக்கிற எங்கடை படிச்ச கிறவுட்டுக்கும் படிக்காத கிறவுட்டுக்கும் ஒரு சிமோல் பிரச்சனை......இருந்தாலும்  காசுபலம் எல்லாத்தையும் பலன்ஸ் பண்ணிக்கொண்டு வருது.... :)
 
சங்கக்கடை மனேச்சர்மாரின்ரை வண்டவாளமும் இஞ்சை திரையேறும் போலை கிடக்கு.... :lol:
Link to comment
Share on other sites

  • Replies 175
  • Created
  • Last Reply

எங்களுக்குள் எப்போதும் ஒரு பொறாமை இருக்கு எண்டு சொல்லுங்கோ. அதுதான் போட்டி வருது. இந்த பொறாமை ஒரு ஆரோக்கியமான போட்டி இல்லை என்பதை விளங்கவேணும். கடை வைத்துள்ளவர்கள் என்ன தங்களின் பிள்ளைகளுக்கு கடையா போட்டு கொடுக்கினம். அவையும் டாக்டர், எஞ்சினியர் ஆக்க தான் ட்ரை பண்ணினம். ஆனால் என்னவோ தங்களுடன் படித்த டாக்டர், எஞ்சினியரை கண்டால் மட்டம்தட்டுறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுடைய மனேஐர் உங்களை மனிதராக மதிக்காமலும் கள்ள மட்டை காரராகவும் இருந்தால் அங்க ஏன் வேலை செய்தீர்கள்? மனேஐர் என்பது உங்களை மாதிரி ஆட்களிடம் வேலை வாங்குவதே தவிர உங்களுக்காக வேலை செய்வது அல்ல.

????

எங்களுக்குள் எப்போதும் ஒரு பொறாமை இருக்கு எண்டு சொல்லுங்கோ. அதுதான் போட்டி வருது. இந்த பொறாமை ஒரு ஆரோக்கியமான போட்டி இல்லை என்பதை விளங்கவேணும்.கடை வைத்துள்ளவர்கள் என்ன தங்களின் பிள்ளைகளுக்கு கடையா போட்டு கொடுக்கினம். அவையும் டாக்டர், எஞ்சினியர் ஆக்க தான் ட்ரை பண்ணினம். ஆனால் என்னவோ தங்களுடன் படித்த டாக்டர், எஞ்சினியரை கண்டால் மட்டம்தட்டுறது.

எல்லேரும் தங்களால் முடிந்ததை செய்கினம். நீங்களும் உங்களால் ஆனதை செய்யுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் இருவரும் தமிழர்தானே என்று யோசித்தால் எல்லாம் விளங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை M.P க்கு என்ன பிரச்சினை என்றே விளங்குதில்லை 
அண்ணை அது எல்லாம் ஒரு காலம் படித்தால் டாக்டர் இல்லை என்ஜினியர் (அதுவும் வீடு கட்டுபவர் தான் எஞ்சினியர்..அடப்பாவி எஞ்சினியரிங் இல எவ்வளவு துறைகள் இருக்கு), இதெல்லாம் மலையேறி மலையும் மறைஞ்சு போச்சு . இப்ப இங்க A/L ஏ செய்றானுகள் இல்ல , university கிடைச்சது கூட அங்க போகாம private இட்க்கு ஒடுறானுகள், பின்ன Bsc போனவன் அத முடிக்க 
Medicine போனவண்ட காலத்தை எடுத்தால்(6 வருடம் ) அப்ப Medicine போனவன் எப்ப வெளியவாறது ...?எல்லாம் வெளிய வரும்போது 28+ இங்க பிரைவட்டில முடிச்சவன் 3 வருட Experience உடன் அண்ணையை காத்துகொண்டிருப்பான்
வெளிய வந்த அண்ணைக்கு Indusrty Exp=0 எங்க அவனோட நிக்கிறது ,இதுக்குள்ள  மொரட்டுவா,கொழும்பு என்று பந்தா வேற

அண்ணை எனக்கும் இங்கே University கிடைக்கவில்லை இந்தியாவில் தான் படித்து வந்தேன் .
வந்தவுடன் அடி மாட்டு சம்பளத்தில் தான் வேலை செய்தேன் (12,500) -பதவி Trainee 
ஆனால் 3 வருடத்தில் எனது சம்பளம் அதன் 10 மடங்கு -பதவி -Technical Consultant, 
என்னுடன் படித்து இங்கே கேம்பஸ் போனவர்கள் வெளியே வரும்போது நான் அவர்களுக்கு சிபாரிசு செய்யும் நிலையில் 
வெளிய வந்த ஒரு நண்பருக்கு எனது கொம்பனியிலயே வேலை வாங்கி கொடுத்தேன். அண்ணை கொழும்பு பல்கலைக்கழகம் 
அண்ணைக்கு என்னுடைய வேகத்திற்கு நிக்கமுடியவில்லை(போதாக்குறைக்கு அவரோட Trainer வேற நான் ) ,விஷயம் தெரியாட்டியும் கேட்டு செய்ய மனம் இடம் கொடுக்கவில்லை (அவர் கொழும்பு university, நான் இந்தியா அவர் எப்படி கேக்குறது வெற்று பந்தா என்னாவது ...? :D ) கொஞ்ச நாளிலையே Technology மாறப்போகிறேன் என்று வேறு ஒரு சிறிய நிறுவனத்திற்கு குறைந்த சம்பளத்திற்கு சென்று விட்டார் 

அண்ணை இப்போ சொல்லுங்கோ 
அவரிடம் இருந்த சான்றிதழ் என்னிடம் இல்லை ....ஆனால் நான் என்ன அழிந்தா போய்விட்டேன் 
என்னிடம் இல்லாத சான்றிதழ் அவரிடம் இருத்தும் என்னை ஜெயித்தா விட்டார் .....?
இந்த சான்றிதழ் எல்லாம் பந்தா காட்டமட்டும்,at the end of the day மண்டையில் மசாலாவும் ,திறமையும் தான் கைதரும் 
எனக்கும் அவையே கை தந்தது  

Gunci மற்றும் Justin சொன்னது போல் திறமையும் விடாமுயற்சியும் உழைப்பும் தான் எமது அடையாளமே தவிர 
எங்கட சான்றிதழ் அல்ல ,வேணுமெண்டா  அத வைச்சு ஊரில பெட்டைகளுக்கு கலர் காட்டலாம் 
  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(அவர் கொழும்பு university, நான் இந்தியா அவர் எப்படி கேக்குறது வெற்று பந்தா என்னாவது ...?

100 க்கு 99.999 % மான் கொழும்பு அல்லது இலங்கை படிப்புகள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் திறமானவையே. ஆனால் பல சந்தர்பங்களில் அந்த 0.001% திறமையான இந்திய பட்டதாரிகள் எண்ணிக்கையில் எங்களை விட கூடுதலாக இருப்பார்கள் . மற்றும்படி நீங்கள் சொன்ன பல கருத்களுடன் உடன்படுகிறேன் .

Link to comment
Share on other sites

நாங்கள் கனடாவில் படித்து பட்டம் பெற்றவர்கள். இலங்கை இந்தியா ஆப்பிரிக்காவில் படித்தவர்கள் அந்த அந்த நாட்டில் வேலை பார்க்கவேண்டும். கனடாவுக்கு வந்து இங்கு படித்த எம் போன்ற கனடிய பட்டதாரிகளின் வேலை வாய்ப்புகளை பிடுங்க கூடாது. 
 
 
 
இப்படி நாங்களும் கூறலாம்.  :wub:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(அவர் கொழும்பு university, நான் இந்தியா அவர் எப்படி கேக்குறது வெற்று பந்தா என்னாவது ...?

100 க்கு 99.999 % மான் கொழும்பு அல்லது இலங்கை படிப்புகள் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் திறமானவையே. ஆனால் பல சந்தர்பங்களில் அந்த 0.001% திறமையான இந்திய பட்டதாரிகள் எண்ணிக்கையில் எங்களை விட கூடுதலாக இருப்பார்கள் . மற்றும்படி நீங்கள் சொன்ன பல கருத்களுடன் உடன்படுகிறேன் .

நிச்சயமான உண்மை அண்ணை 

கொழும்பு மற்றும் மொறட்டுவையில் இருந்து பல மண்டைக்காய்களை பார்த்திருக்கிறேன்

அனால் கொழும்பு படிப்பு மட்டும் தான் படிப்பு மற்றதெல்லாம் ஒன்றுமில்லை என்ற மண்டைக்கனம் வரும்போது தான் சிக்கலே   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொழிலைத் தொடங்குவது என்பதும் அதைத் தொடந்து நடத்துவதும் என்பதும் எத்தனை கடினமானது என்பதும் அதை நடத்தாத உங்களைப்போன்றவர்களுக்குத் தெரியப்போவதில்லை. தனி மதிதரில் உள்ள கோபத்தில் ஒரு தொழிலை எத்தனை கேவலமாக விமர்சிப்பதிலிருந்து உங்களைப் பற்றிப் புரிகிறது. சங்கக்கடையில் மாத்திரம் நீங்கள் படித்தவுடன் உடனே வேலையைத் தூக்கித் தந்துவிடுவார்களா ??? மற்றவனை எதிர்பார்க்காது உழைத்துப் பிளைக்கும் எந்தத் தொழிலையும் கேவலமாகப் பேசுவது தவறு. நீங்கள் படித்தால் உங்கள் அறிவைப் பயன் படுத்தி வாழ்வில் முன்னுக்கு வரப் பாருங்கள். அதைவிட்டுப் படித்தவன் படிக்காதவன் என்று....... பல நேரங்களில் படித்தவனே முட்டாளாகவும் படிக்காத சாதாரனனே உயரத்திலும் மற்றவர் மதிக்கவும் வாழ்கிறார்கள். 

Link to comment
Share on other sites

நான் உங்களுடன் உடன்படுகிறேன். நான் எந்த திறமையானவனையும் கீழ்த்தரமாக இங்கு சொல்ல வரவில்லை. UK ல் இருக்கும் போது பட்ட வேதனையை தான் இங்கு பகிர விரும்புகிறேன். UK ல் கடை போட்ட அநேகமானவர்கள் எதோ ஒரு களவு செய்து காசு சேர்த்து தான் கடை எடுத்தவை. களவு பலவகை. கிரெடிட் கார்டு, வங்கி லோன் எடுத்துபோட்டு ஏமாத்துறது, காஷியர் ஆக வேலை செய்யும் போது களவு எடுப்பது, வாடிக்கையாளருக்கு சரியாக மிச்சம் கொடுப்பதில்லை. இப்படி பல. UK ல் இருந்து யாரும் இருந்தால் தயவு செய்து ஏதாவது வேற வழி இருந்தால் சொல்லுங்கோ. பிறகு அவர்களுக்கு வேலை செய்ய போனால், எங்கள் மேல் அவர்களுக்கு சந்தேகம். ஏனென்றால் நாங்கள் அவர்களை விட கொஞ்சம் படிச்சனாங்கள், அவங்களையும் சுத்தி போடுவம் என்று பயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் சங்கக்கடை மனேஜர் என்ன செய்வார் என்று பார்ப்போம்.
* சிட்டை போடுவது
* விற்பனை உதவியாளரை ஏவல் செய்வது
* தினமும் நடக்கும் வியாபாரப் பணத்தையும் முத்திரைகளையும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் சமர்ப்பிப்பது.
* தேவையான பொருட்களின் விபரங்களை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் சமர்ப்பிப்பது.
* இருப்பு எடுப்பது.
* கடையைத் திறப்பது/பூட்டுவது.

சங்கக்கடை மனேஜர் செய்யும் இந்த விடயங்களை விட பெற்றோல் ஸ்ரேசன் மனேஜர் அதிக வேலைகள் பார்க்கவேண்டும். அதிலும் லீசுக்கு அல்லது சொந்தமாக நடாத்தினால் இன்னும் வேலைகள் அதிகம். 24 மணிநேரமும் பெற்றோல் ஸ்ரேசனைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பதால் நித்திரையும் ஒழுங்காகக் கொள்ளமாட்டார்.

* காஷியர் ஒருவர் பிந்தி வந்தாலோ அல்லது வராமல் விட்டாலோ அந்தரப்பட்டு மாற்று ஏற்பாடுகளைக் கவனிக்கவேண்டும்.
* களவு, drive-off போன்ற பொலிஸ் விடயங்களைப் பார்க்கவேண்டும்.
* சரியான நேரத்திற்கு எரிபொருள், கடைக்கான பொருட்கள் (முக்கியமாக பால், பேப்பர்) வருகின்றனவா என்று பார்க்கவேண்டும்.
* கஷ்டமான வாடிக்கையாளர்களை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று காஷியருக்குக் கற்றுத் தரவேண்டும்.
* ஒரே நேரத்தில் கடையையும், forecourt ஐயும் கண்காணிக்கும் திறமையைச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.
* வாடிக்கையாளர்களுடன் நயமாகக் கதைப்பது பற்றிச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.
* விற்பனையைக் கூட்டும் தந்திரங்களை அறிந்து வைத்திருக்கவேண்டும்.
* எப்படி penny penny ஆகப் பொறுக்கி உழைக்கவேண்டும் என்று சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.

மொத்தத்தில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்பவர்களும், அதனைக் கொண்டு நடாத்தும் மனேஜர்களும் சிறந்த ஆளுமையுள்ள ஆல்ரவுண்டர்களாக விளங்குகின்றார்கள். மிகவும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்வதால்தான் இந்தத் திறமைகளை வளர்த்துக்கொள்கின்றார்கள்.

இப்படி நேர்மையாக முன்னுக்கு வந்த பலரை எனக்குத் தெரியும். அப்படியானவர்கள்தான் அதிகம் பேர். அவர்களின் வசதியான வாழ்வைப் பார்த்து பொறாமைப்படுவதை விடுத்து எப்படி வாழ்வில் முன்னுக்கு வரலாம் என்று சிந்திக்க நேரத்தைச் செலவழியுங்கள்.

அரசியல்வாதிகளும், பெரும் பெரும் பணக்காரர்களும் வரி மோசடி, அந்த மோசடி, இந்த மோசடி என்று ஏய்த்து பெரும் பணக்காரர்களாக இருக்கும்போது ஆங்காங்கே ஒரு சிலர் குறுக்குவழிகளில் செயற்படுவதை வைத்து ஒட்டுமொத்தமாக யுகே பெற்றோல் ஸ்ரேசன் நடாத்துவர்களையும் ஒரே கூடைக்குள் போடுவது தவறு.
இதைச் சாதாரண பொதுப்புத்தி உள்ள ஒருவர் கூடச் செய்யமாட்டார். ஆனால் ஏட்டுப்படிப்புடன் இருக்கும் சிலருக்கு பொதுப்புத்தி குறைவாக இருக்கும் என்பதால் நீங்கள் இப்படிச் சொல்வதில் ஆச்சரியமில்லை. சட்டவிரோதமான செயலில் ஒருவர் ஈடுபட்டிருந்தால் அதனை பொலிசுக்கு முறைப்பாடு செய்திருக்கவேண்டும். ஏன் நீங்கள் அதைச் செய்யவில்லை? "எனக்கு ஏன் வம்பு?" என்று விட்டுவிட்டீர்களா?

உங்கள் கதையைப் பார்த்தால் யுகேயுக்கு ஸ்ருடண்ட் விசாவில் படிக்க வந்தவர் மாதிரித் தெரிகின்றது. பகுதி நேரமாக பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்திருக்கின்றீர்கள். ஆனால் அந்த வேலையை எள்ளளவும் விரும்பாமல் காசு வருகின்றதே என்று வெறுத்து வெறுத்து வேலை செய்திருக்கின்றீர்கள். அதனால்தான் இந்தவேலையால் கிடைக்கும் ஆளுமையையும் அனுபவத்தையும் தவறவிட்டிருக்கின்றீர்கள் போலிருக்கின்றது. ஒரு மாதிரி அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்டீர்கள். யுகே படிப்பினால் கிடைத்த சான்றிதழினால் வந்த points உதவியிருக்கும் என்று நினைக்கின்றேன்.

விருப்பமில்லாத எந்த வேலையையும் செய்யக்கூடாது. ஒன்றில் விரும்பின வேலையைச் செய்யவேண்டும். அல்லது செய்கின்ற வேலையை விரும்பவேண்டும். இல்லாவிட்டால் எல்லா நாட்களும் மனச்சோர்வுள்ள நாட்களாக அமைந்துவிடும். இது திருமணத்திற்கும் பொருந்தும்.


பி.கு. நான் ஒருபோதும் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்தது கிடையாது. காசுடன் புழங்கும் வேலை என்னை எப்படி மாற்றும் என்ற அனுபவம் இருந்ததால் காசுடன் புழங்காத கடினமான உடலுழைப்பு வேலைகளை விரும்பியே செய்தேன்.
ஆனால் பதின்ம வயதில் அத்தான் மனேஜராக இருந்த சங்கக்கடையில் வேலை செய்திருக்கின்றேன் :) அவர் வீட்டு வேலைகளை/தோட்ட வேலைகளைப் பார்க்க நானே கடையை நடத்தியிருக்கின்றேன்!!!

பெரும் பணக்காரனாக வரும் ஆசையிருந்தால் The Wolf of Wall Street படத்தைப் பாருங்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும் பணக்காரனாக வரும் ஆசையிருந்தால் The Wolf of Wall Street படத்தைப் பாருங்கள் :icon_idea:

 

எல்லாத்தையும் சீரியசாச் சொல்லிப் போட்டுக் கடைசியில அந்த மனுஷனுக்கு இந்தாள் சிபார்சு செய்திருக்கிற திரைப் படத்தைப் பாரப்பா! :o  அவர் ஏற்கனவே நொந்து போய்க் கிடக்கார், பவுடர் பெண் புரசு எண்டு இன்னும் நொந்தெல்லொ போவார்! :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

UK இல் student visa இல் உள்ளவர்கள் பகுதி நேரமாக (20 மணித்தியாலங்கள்) மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப் படுவர். ஆனால் அந்த மேனேஜர் உங்களுக்கு அதிக நேரம் வேலை செய்ய விட்டு படிப்பிக்கு உதவி செய்திருக்கிறார். உங்களால் தனக்கு வரக்கூடிய HMRC பிரச்சனைகளை தானே உள் வாங்கி ( அபராதம் £10,000 வரை ) உங்கள் படிப்பிக்கு உதவி செய்திருக்கிறார். கிருபன் சொன்ன மாதிரி ஒன்றில் நீங்கள் அவரைப் பற்றி முறைப் பாடு செய்திருக்க வேண்டும் இல்லையேல் நீங்களும் அதில் லாபம் அடைந்திருக் கிறீர்கள். உங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள், உங்கள் வருமானதிக்கு வரி கட்டினீங்களா? இல்லை சட்டப் படி வேலை செய்தீர்களா? உங்கள் மனதை புண் படுத்துவது எமது நோக்கமல்ல, புரிய வைக்கவே இந்த முயற்சி. நிச்சயம் இந்த யாழ் களம் உங்களுக்கு ஆறுதல் களமாகவே இருக்கும். வாருங்கள், படித்த நீங்கள் நன்றாகவே சிந்தித்து எழுதுங்கள். உங்கள் நிலையில் நான் இருந்தால் உங்களுக்கு தொழில் தந்த அந்த முதலாளிக்கு என்றுமே நன்றி சொல்ல கடமைப் பட்டிருப்பேன். ஒரு மரம் எப்படி எங்கு வளருது என்று நாங்கள் ஆராய்ச்சி செய்தால், எப்படி பழம் சாப்பிட முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் சீரியசாச் சொல்லிப் போட்டுக் கடைசியில அந்த மனுஷனுக்கு இந்தாள் சிபார்சு செய்திருக்கிற திரைப் படத்தைப் பாரப்பா! :o  அவர் ஏற்கனவே நொந்து போய்க் கிடக்கார், பவுடர் பெண் புரசு எண்டு இன்னும் நொந்தெல்லொ போவார்! :D

அந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் படித்ததெல்லாம் வேஸ்ற் என்ற சிந்தனை வந்தது. பங்குச் சந்தையிலும், முதலீட்டு வங்கிகளிலும் வேலை செய்யாமல் innovating technology களில் வேலை செய்ய ஆசைப்பட்டது வாழ்வில் எப்போதும் பற்றாக்குறைப் பொருளாதாரத்தை உண்டாக்கிவிட்டது. மிடில் கிளாஸ் மாதவன்தான் இப்போது எனது குருவாக இருக்கின்றார்!

Link to comment
Share on other sites

அந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் படித்ததெல்லாம் வேஸ்ற் என்ற சிந்தனை வந்தது. பங்குச் சந்தையிலும், முதலீட்டு வங்கிகளிலும் வேலை செய்யாமல் innovating technology களில் வேலை செய்ய ஆசைப்பட்டது வாழ்வில் எப்போதும் பற்றாக்குறைப் பொருளாதாரத்தை உண்டாக்கிவிட்டது. மிடில் கிளாஸ் மாதவன்தான் இப்போது எனது குருவாக இருக்கின்றார்!

 

எனக்கும் இதே எண்ணம் தான் இப்படத்தினை பார்த்த பின் ஏற்பட்டது. சேம் பிளட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் படித்ததெல்லாம் வேஸ்ற் என்ற சிந்தனை வந்தது. பங்குச் சந்தையிலும், முதலீட்டு வங்கிகளிலும் வேலை செய்யாமல் innovating technology களில் வேலை செய்ய ஆசைப்பட்டது வாழ்வில் எப்போதும் பற்றாக்குறைப் பொருளாதாரத்தை உண்டாக்கிவிட்டது. மிடில் கிளாஸ் மாதவன்தான் இப்போது எனது குருவாக இருக்கின்றார்!

 

எஞ்சினியருக்கும் கம்பியூட்டர் நிபுணருக்குமே இந்தக் கவலையெண்டால், சாதாரண உயிரியல் விஞ்ஞானியின்ர நிலைமையை யோசிச்சுப் பாருங்கோவன்! ஆனாலும் இரவில் நிம்மதியாக நித்திரை கொள்ளுறன்! கிரடிட் கார்ட் கொம்பனிகள் என்னை நம்புகின்றன! நம்பிக்கை தான் பற்றாக் குறையை நிரப்புகின்றது! (உங்களுக்கும் இப்படித் தான் இருக்கும் எண்டு ஒரு ஊகம் தான்!) :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விட்டால்.. கிருபண்ணா.. பெற்றோல் ஸ்ரேசன் நடத்திறவரை.. அப்பிள் CEO லெவலில வைச்சு கதை புனைவார் போல இருக்குது. :lol:

 

ஆனா ஒன்று.. பெற்றோல் ஸ்ரேசன் வைச்சு ஆட்டையைப் போடுறவையிட்ட ஆட்டையப் போட என்றே பலர் இருக்கிறார்கள். :)

 

மேலும் யு கே யில் பல்கலையில் இளமாணி பட்டம் படிக்கும் மாணவர்கள் 10 மணித்தியாலங்களும்.. பல்கலையில்.. பட்டமேற்படிப்பு படிப்பவர்கள் மட்டுமே 20 மணித்தியாலமும் வேலை செய்ய முடியும்.. தற்போதைய நடவடிக்கைகள். :):icon_idea:

 

 

Link to comment
Share on other sites

நான் உங்களுடன் உடன்படுகிறேன். நான் எந்த திறமையானவனையும் கீழ்த்தரமாக இங்கு சொல்ல வரவில்லை. UK ல் இருக்கும் போது பட்ட வேதனையை தான் இங்கு பகிர விரும்புகிறேன். UK ல் கடை போட்ட அநேகமானவர்கள் எதோ ஒரு களவு செய்து காசு சேர்த்து தான் கடை எடுத்தவை. களவு பலவகை. கிரெடிட் கார்டு, வங்கி லோன் எடுத்துபோட்டு ஏமாத்துறது, காஷியர் ஆக வேலை செய்யும் போது களவு எடுப்பது, வாடிக்கையாளருக்கு சரியாக மிச்சம் கொடுப்பதில்லை. இப்படி பல. UK ல் இருந்து யாரும் இருந்தால் தயவு செய்து ஏதாவது வேற வழி இருந்தால் சொல்லுங்கோ. பிறகு அவர்களுக்கு வேலை செய்ய போனால், எங்கள் மேல் அவர்களுக்கு சந்தேகம். ஏனென்றால் நாங்கள் அவர்களை விட கொஞ்சம் படிச்சனாங்கள், அவங்களையும் சுத்தி போடுவம் என்று பயம்.

இதை நான் ஆமோதிக்கின்றேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை டொக்டர் எஞ்சினியர் எக்கவுண்டன் படிப்பு படிச்சுப்போட்டு வந்து......லண்டனிலை  பெற்றோல் செட்டிலை மனேச்சர் வேலை செய்யிற மாப்பிளையளும் இருக்கினம்தானே....

Link to comment
Share on other sites

ஊரிலை டொக்டர் எஞ்சினியர் எக்கவுண்டன் படிப்பு படிச்சுப்போட்டு வந்து......லண்டனிலை  பெற்றோல் செட்டிலை மனேச்சர் வேலை செய்யிற மாப்பிளையளும் இருக்கினம்தானே....

 

இது நல்ல ஒரு கருத்து. இதை பற்றி இன்னொரு திரி எழுதலாம். எண்ட professior கேட்டார் நீங்கள் வாயை திறந்து இங்கிலீஷ் கதைக்க மாட்டியள், ஆனால் exam ல் 100% எடுக்கிறியள் எப்படி என? நான் சொன்னேன் நாங்கள் அறிவுக்கு படிப்பதை விட exam க்கு தான் படிக்கிற நாங்கள் என. நாங்கள் என்னதான் டொக்டர் எஞ்சினியர் எக்கவுண்டன் ஆக இருந்தாலும், எங்களுக்கு இங்கிலீஷ் கதைக்க ஏலாது. அதனால தான் எங்கட படிச்ச பெடியளும் UK கடை எடுத்து, பெட்ரோல் ஸ்டேஷன் போட்டு வாழ்க்கையை ஒட்டிரறினம். ஒன்று இரண்டு பேர் நல்ல technical knowledge உள்ளவே வேலை எடுக்கினம். அவையும் 60 வயது மட்டும் calculation / கம்ப்யூட்டர்ல ப்ரோக்ராம் எழுதிகிட்டு இருக்க வேண்டியது தான். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதுபவர்களுக்கு English கதைக்க தேவைஇல்லை, அதனால் கொஞ்சம் ஈசியாக வேலை எடுக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

MP உங்களுக்கு கன விடயங்கள் பிரித்தானியாவில் தெரியவில்லை புரியவில்லை. நான் பிரிதானியாவிற்கு வந்து ஒரு நிறுவனத்தில் வேலை தொடங்கும்போது மணித்தியாலத்திற்கு £ 3.50 ஆக இருந்த எனது சம்பளம் 7 வருடத்தில் மணித்தியாலத்திற்கு £ 15 ஆகவும் வருடாந்த போனஸ் £ 3500 விடுமுறை 35 நாட்கள் ஆகவும் இருந்தது.

Link to comment
Share on other sites

MP உங்களுக்கு கன விடயங்கள் பிரித்தானியாவில் தெரியவில்லை புரியவில்லை. நான் பிரிதானியாவிற்கு வந்து ஒரு நிறுவனத்தில் வேலை தொடங்கும்போது மணித்தியாலத்திற்கு £ 3.50 ஆக இருந்த எனது சம்பளம் 7 வருடத்தில் மணித்தியாலத்திற்கு £ 15 ஆகவும் வருடாந்த போனஸ் £ 3500 விடுமுறை 35 நாட்கள் ஆகவும் இருந்தது.

ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவராக இருப்பின் உங்கள் சம்பளம் இப்ப வருடம் 50000 பவுண்சை  தாண்டியிருகவேனும் . உங்கள் கணக்குப்படி இப்ப உங்களுக்கு  30,000 பவுன்ஸ். இப்பவும் அடிமாட்டு சம்பளம் தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பது பணம் ஈட்ட என்பதை மறந்து விடாதீர்கள். வேலை என்பது கூட நன்றாக படித்தால் நல்ல வேலை கிடைக்கும். இம் மூன்றும் ஒன்றாக பிணைந்தவை. படிப்பு என்பது பணம் இல்லாமல் கிடைக்கும். ஆனால் நன்றாக உழைப்பதுக்கு. சொந்த முயற்சி சற்று வித்தியாசமானது. நான் உட்பட அனேகமான ஆண்கள் படிப்பது பெண்களுக்கு கலர் காட்ட தான். ஆனால் அதை ஒரு ருமு கிரெடிட் கார்டு காரன் பரிசுகொண்டு போனால்இ படிப்புக்கு எங்கே மரியாதையை? கிரெடிட் கார்டு காரன் என்ன பிள்ளைக்கு ருமு ல் கார்டு அடிக்கவா பழககிறான்???? அவனுக்கு விழங்கியது அவளுக்கு விளங்கலியே? எல்லாம் UK பவுண்ட்ஸ்ன் மாயை?

 

அட நான் நினைத்தேன் படிக்கிறது அறிவுக்கு என்டு இப்பதான் தொியுது பெட்டடைகளுக்கு கலர் காட்ட என்டு.மற்றது அங்கு படித்து வெளி நாட்டுக்கு வர வசதிகள் இருந்தும் வராமால் அங்கையே வாழ்பவர்கள் பலரை எனக்குத்தொியும்.உங்களுக்கு அப்படியும் முடியவில்லை.இங்கு வந்தும் அடையாளப்பிரச்சனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவராக இருப்பின் உங்கள் சம்பளம் இப்ப வருடம் 50000 பவுண்சை தாண்டியிருகவேனும் . உங்கள் கணக்குப்படி இப்ப உங்களுக்கு 30,000 பவுன்ஸ். இப்பவும் அடிமாட்டு சம்பளம் தான்.

அடிமாட்டு சம்hளம் என்பது அடிப்படை சம்பளத்தை தான் குறிக்கும் . தற்போது அடிப்படை சம்பளம் £ 6.50. நான் அந்த வேலையை வீட்டு பல வருடங்களாகிறது.

Link to comment
Share on other sites

அவனவன் தனக்கு தனக்கு தெரிந்த வழிகளில் முன்னேறிக்கொண்டு  போறார்கள். அவனை ப் பார்த்து பொறாமை பட தேவை இல்லை. அவனை ப்போல் என்னால் செய்ய முடியாது. ம னத்துணிவில்லை, பயந்தநாங்கள்.   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனப்பலம் உண்டு.

 

கடன் அட்டை, ஆள் நாடு கடத்துறது. வேறு சில  பணம் சம்பாதிக்க்கும் தந்திரம்  எல்லாராலும் ஏலாது.

 

எனக்கு தெரிந்த ஒரு அம்மாவை டென்மார்க்கில  இருந்து  வேறு நாட்டுக்கு மாற்றனும். அகதி அந்தஸ்து நிராகரிப்பு. ஒரே அவசரம்   ஒருவரும் கிடைக்கவில்லை. தெரிந்த ஒருவர் சொன்னார் போன் பன்ணி விட்டு சொல்கிறேன் . திரும்ப அடித்தார். எல்லாம் சரி ஆளை ரெடியாக இருக்க சொன்னார். நாங்க போட்ட கண்டிசன் சேர்த்தா பிறகு தான் காசு. ஆள் வந்தார்.  வானில் ஏற்றினார்.  அடுத்த நாள் வேறு நாட்டில் நிற்கிறா. கேட்டம் எப்படி அம்மா பயணம் என்டு/ அவா சொன்னா எல்லையில் அருகில் தன்னை டிக்கியினுள்  இருக்கும் படி கூறினார்களாம்  . பய்ந்தாலும் ஊருக்கே போகமுடியாது . சரி ஏறி  முடங்கி இருந்தாச்சு. 10 நிமிடத்தில்  நிற்பாட்டி வெளிய வந்து. வழமையான பயணம். 15,000 டென் குறோனர்  கொடுத்தது. இப்படி பல விசயங்களை  எல்லாருலாம் செய்ய முடியாது. நம்மளுக்கு  ஏற்ற வழியில் நாம  வாழ வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவர் இந்த வயதிலும் சும்மா இருக்க மாட்டார்  அங்கே இங்கே என்று ஒடித் திரிவார். வெள்ளம்  தன்ரை வேலையை காட்டி விட்டது போலும்” 🤣😀🤣 குறிப்பு,....சும்மா பகிடிக்கு   அவர் இங்கே   வருவதில்லை தானே??  
    • தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியில் எத்தனையாம் இடம் பிடிப்பார்கள்?  1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) 2) இயக்குனர் மு.களஞ்சியம் ( நாம் தமிழர் கட்சி) 3) நடிகை ராதிகா சரத்குமார் ( பிஜேபி) 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன்  5) ஓ பன்னீர்செல்வம் ( முன்னால் முதல்வர் - சுயேச்சை வேட்பாளர், பிஜேபி கூட்டணி) 6) டி. டி. வி. தினகரன்(அம்மா முன்னேற்ற கழகம்) 7)அண்ணாமலை (பிஜேபி தமிழகத் தலைவர்) 8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) 9)துரை வைகோ ( மதிமுக - வை கோவின் மகன்) 10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி) 11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 12)வித்யாராணி வீரப்பன்( நாம் தமிழர் கட்சி- வீரப்பன் மகள் ) 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) 14) தமிழிசை சௌந்தரராஜன் ( பிஜேபி) 15) தயாநிதிமாறன் திமுக) 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) 18)ரி ஆர் பாலு ( திமுக) 19)எல் முருகன் (பிஜேபி) 20)தமிழச்சி தங்கபாண்டியன் ( திமுக) 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்?    1) 5% க்கு குறைய   2) 5% - 6%   3) 6% - 7%   4) 7% - 8%   5) 8% க்கு மேல் 25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 26)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 28)இந்திய கம்னியூஸ்ட் கச்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 30)தமிழ் மாநில காங்கிரஸ் எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்?  35)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 2ம் இடத்தினை பிடிக்கும் ? 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 41) 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) 43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.