Jump to content

UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த என்ன தகுதி வேண்டும்?

M.P

Recommended Posts

MP உங்களுக்கு கன விடயங்கள் பிரித்தானியாவில் தெரியவில்லை புரியவில்லை. நான் பிரிதானியாவிற்கு வந்து ஒரு நிறுவனத்தில் வேலை தொடங்கும்போது மணித்தியாலத்திற்கு £ 3.50 ஆக இருந்த எனது சம்பளம் 7 வருடத்தில் மணித்தியாலத்திற்கு £ 15 ஆகவும் வருடாந்த போனஸ் £ 3500 விடுமுறை 35 நாட்கள் ஆகவும் இருந்தது.

மீரா, உங்களுக்கும் UK பற்றி நல்ல தெரியும்போல?

Link to comment
Share on other sites

  • Replies 175
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டால்.. கிருபண்ணா.. பெற்றோல் ஸ்ரேசன் நடத்திறவரை.. அப்பிள் CEO லெவலில வைச்சு கதை புனைவார் போல இருக்குது. :lol:

ஆனா ஒன்று.. பெற்றோல் ஸ்ரேசன் வைச்சு ஆட்டையைப் போடுறவையிட்ட ஆட்டையப் போட என்றே பலர் இருக்கிறார்கள். :)

மேலும் யு கே யில் பல்கலையில் இளமாணி பட்டம் படிக்கும் மாணவர்கள் 10 மணித்தியாலங்களும்.. பல்கலையில்.. பட்டமேற்படிப்பு படிப்பவர்கள் மட்டுமே 20 மணித்தியாலமும் வேலை செய்ய முடியும்.. தற்போதைய நடவடிக்கைகள். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவர்கள் எல்லோரும் சாதித்தவர்கள் கிடையாது.சாதித்தவர்கள் எல்லோரும் படித்தவர்கள் கிடையாது.உதாரணம்.தேசியத்தலைவர்இஎம்ஜி.ஆர்.இன்னும் பலர்.நினைச்சது கிடைக்க வில்லையாயினும் கிடைத்தததை வைத்து முன்னேறணும்.தம்பி எம்பி வந்து இறங்கின உடனே யாழ்ப்பாணத்துக் கறித்தூள் போட்டு சமைச்ச ஆட்டிறைச்சிக் கறியுடன் ஒரு வெட்டு வெட்டி இருப்பார்.யூகே என்ற படியால். யெஸ்இநோ ஆவது தெரியும் சமாளிக்கலாம்.தெரிஞ்ச ஆட்கள் விமான நிலையத்தில் வந்து கூட்டிக் கொண்டு போயிருப்பார்கள்.ஆனால் நாங்க வந்து ஜேர்மனியில் இறங்கின நேரம் மொழி தெரியாது.யாரும் உதவிக்கு இல்லை.சந்திரமண்டலத்தில் போய் இறங்கிய நிலைதான். அந்தச் சூழ்நிலையில் குளிரில் வாடி வதங்கி மெதுவாக ஒழுங்கான விசாவும் இல்லாமல் வேரூன்றி மெல்ல மெல்ல சொந்த முயற்சியில் மேலெழுந்து அடிமாட்டு வேலை செய்து வந்த கடன் அடைத்து அக்கா.தங்கச்சியைக் கரை சேர்த்து தம்பிமார்இஉறவினரை வெளியில் எடுத்து விடுதலைக்கான போரில் பங்காளிகளாகி முத்தி வெடித்து பஞசாய்ப் பறக்கும் வேளையில் ஏஜென்சிக்கு காசு கட்டி ஏமாந்து எப்படியோ கலியாணம் செய்து விசா எடுத்து அப்பப்ப ஊரில் இருந்து போன் வர வங்கிகளிலும் .கடன் அட்டைகளிலும் காசு எடுத்து காசு அனுப்பி நித்தம; நித்தம் கடனாளிகளாக அலைந்தாலும் தங்கள் பிள்ளைகளுக்கு உயர்வான கல்விச் செல்வத்தை அளித்து உயர்நிலைக்கு கொண்டு வந்திருக்கம் ஒரு பாவப்பட்ட சந்ததியைப் பழிக்கிறீர்களே. அவர்களிலும் எத்தனையோ படித்தவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் எச்சிக் கோப்பையைக் கழுவும் வேலைi எந்த சங்கடமும் இக்றிச் செய்கிறார்கள்.இவர்களின் முதல் சந்ததி மட்டும்தான் கஜ்ரப்படும். அடுத்த சந்ததி சாதிக்கும்.எம்பி நினைச்சிருப்பார். இங்க வந்து இறங்கின உடனே சட்டை மடிப்புக் குலையாமல் வேலை செய்யலாம் என்று.ஆனால் இஞ்ச வந்து பார்த்தால் நிலமை தலைகீழ். ஒழுங்காய் இங்கிலிஸ் பேசத் தெரியாட்டீயும் வருமான வரித்துறைக்குத் தெரியாமல் வேலை தந்து படிப்புக்கும் பிற வெலவுக்கும் உதவினவங்களை ஒரு வழிகாட்டியாய் நினைக்க வேணும்.அந்த முதலாளி வந்து இறங்கின புதிசில் எவ்வளவு கஸ்ரப்பட்டிருப்பான் என்று நினைச்சுப் பார்க்கோணும்.ஒருசிலபேர் தப்பான வழியில் இருந்தால் எல்லோரும் தப்பானவர்கள் என்று நினைக்கக் கூடாது. வெள்ளைக்காரனிட்i வேலைக்குப் போயிஜருந்தால் அவன் உங்கட தகுதிக்கு வேலை தந்திருக்க மாட்டான்.உங்களுக்கு சுயமாய் ஒரு வேலை எடுக்க துப்பில்ல என்று சொல்லுங்கள். அந்த வேலை பிடிக்காட்டி இன்னொரு வேலை தேடி எடுக்க வேணும். மனேஜர் வேலை என்றால் வேலை வாங்கத் தெரிய வேணும்.அவருக்குப் பெயர்தான் மனேஜர்.

உங்களை பாராட்டுகிறேன். நீங்கள் நேர்மையான வழியில் இருந்த படியால்தான் இப்பவும் போராடித்தான் வாழ்க்கையை நடத்துகிறீர்கள். UK நிலைமை அப்படி இல்லை. அநேகமான பெட்ரோல் ஸ்டேஷன் சொந்தகாரர்கள், தாங்களே தங்களின் கடைக்கு மேனேஜர் என சொல்லி கொள்ளும் சில பேர் வழிகள் ஏதோ ஒரு கள்ள வழியில் தான் காசு சேர்த்தவை. UK ல் இருக்கும் ஆக்களை கேட்டுபாருங்கள்.

Link to comment
Share on other sites

முதலில் சங்கக்கடை மனேஜர் என்ன செய்வார் என்று பார்ப்போம்.

* சிட்டை போடுவது

* விற்பனை உதவியாளரை ஏவல் செய்வது

* தினமும் நடக்கும் வியாபாரப் பணத்தையும் முத்திரைகளையும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் சமர்ப்பிப்பது.

* தேவையான பொருட்களின் விபரங்களை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் சமர்ப்பிப்பது.

* இருப்பு எடுப்பது.

* கடையைத் திறப்பது/பூட்டுவது.

சங்கக்கடை மனேஜர் செய்யும் இந்த விடயங்களை விட பெற்றோல் ஸ்ரேசன் மனேஜர் அதிக வேலைகள் பார்க்கவேண்டும். அதிலும் லீசுக்கு அல்லது சொந்தமாக நடாத்தினால் இன்னும் வேலைகள் அதிகம். 24 மணிநேரமும் பெற்றோல் ஸ்ரேசனைப் பற்றியே யோசித்துக்கொண்டிருப்பதால் நித்திரையும் ஒழுங்காகக் கொள்ளமாட்டார்.

* காஷியர் ஒருவர் பிந்தி வந்தாலோ அல்லது வராமல் விட்டாலோ அந்தரப்பட்டு மாற்று ஏற்பாடுகளைக் கவனிக்கவேண்டும்.

* களவு, drive-off போன்ற பொலிஸ் விடயங்களைப் பார்க்கவேண்டும்.

* சரியான நேரத்திற்கு எரிபொருள், கடைக்கான பொருட்கள் (முக்கியமாக பால், பேப்பர்) வருகின்றனவா என்று பார்க்கவேண்டும்.

* கஷ்டமான வாடிக்கையாளர்களை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று காஷியருக்குக் கற்றுத் தரவேண்டும்.

* ஒரே நேரத்தில் கடையையும், forecourt ஐயும் கண்காணிக்கும் திறமையைச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

* வாடிக்கையாளர்களுடன் நயமாகக் கதைப்பது பற்றிச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

* விற்பனையைக் கூட்டும் தந்திரங்களை அறிந்து வைத்திருக்கவேண்டும்.

* எப்படி penny penny ஆகப் பொறுக்கி உழைக்கவேண்டும் என்று சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.

மொத்தத்தில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்பவர்களும், அதனைக் கொண்டு நடாத்தும் மனேஜர்களும் சிறந்த ஆளுமையுள்ள ஆல்ரவுண்டர்களாக விளங்குகின்றார்கள். மிகவும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்வதால்தான் இந்தத் திறமைகளை வளர்த்துக்கொள்கின்றார்கள்.

இப்படி நேர்மையாக முன்னுக்கு வந்த பலரை எனக்குத் தெரியும். அப்படியானவர்கள்தான் அதிகம் பேர். அவர்களின் வசதியான வாழ்வைப் பார்த்து பொறாமைப்படுவதை விடுத்து எப்படி வாழ்வில் முன்னுக்கு வரலாம் என்று சிந்திக்க நேரத்தைச் செலவழியுங்கள்.

அரசியல்வாதிகளும், பெரும் பெரும் பணக்காரர்களும் வரி மோசடி, அந்த மோசடி, இந்த மோசடி என்று ஏய்த்து பெரும் பணக்காரர்களாக இருக்கும்போது ஆங்காங்கே ஒரு சிலர் குறுக்குவழிகளில் செயற்படுவதை வைத்து ஒட்டுமொத்தமாக யுகே பெற்றோல் ஸ்ரேசன் நடாத்துவர்களையும் ஒரே கூடைக்குள் போடுவது தவறு.

இதைச் சாதாரண பொதுப்புத்தி உள்ள ஒருவர் கூடச் செய்யமாட்டார். ஆனால் ஏட்டுப்படிப்புடன் இருக்கும் சிலருக்கு பொதுப்புத்தி குறைவாக இருக்கும் என்பதால் நீங்கள் இப்படிச் சொல்வதில் ஆச்சரியமில்லை. சட்டவிரோதமான செயலில் ஒருவர் ஈடுபட்டிருந்தால் அதனை பொலிசுக்கு முறைப்பாடு செய்திருக்கவேண்டும். ஏன் நீங்கள் அதைச் செய்யவில்லை? "எனக்கு ஏன் வம்பு?" என்று விட்டுவிட்டீர்களா?

உங்கள் கதையைப் பார்த்தால் யுகேயுக்கு ஸ்ருடண்ட் விசாவில் படிக்க வந்தவர் மாதிரித் தெரிகின்றது. பகுதி நேரமாக பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்திருக்கின்றீர்கள். ஆனால் அந்த வேலையை எள்ளளவும் விரும்பாமல் காசு வருகின்றதே என்று வெறுத்து வெறுத்து வேலை செய்திருக்கின்றீர்கள். அதனால்தான் இந்தவேலையால் கிடைக்கும் ஆளுமையையும் அனுபவத்தையும் தவறவிட்டிருக்கின்றீர்கள் போலிருக்கின்றது. ஒரு மாதிரி அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்டீர்கள். யுகே படிப்பினால் கிடைத்த சான்றிதழினால் வந்த points உதவியிருக்கும் என்று நினைக்கின்றேன்.

விருப்பமில்லாத எந்த வேலையையும் செய்யக்கூடாது. ஒன்றில் விரும்பின வேலையைச் செய்யவேண்டும். அல்லது செய்கின்ற வேலையை விரும்பவேண்டும். இல்லாவிட்டால் எல்லா நாட்களும் மனச்சோர்வுள்ள நாட்களாக அமைந்துவிடும். இது திருமணத்திற்கும் பொருந்தும்.

பி.கு. நான் ஒருபோதும் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்தது கிடையாது. காசுடன் புழங்கும் வேலை என்னை எப்படி மாற்றும் என்ற அனுபவம் இருந்ததால் காசுடன் புழங்காத கடினமான உடலுழைப்பு வேலைகளை விரும்பியே செய்தேன்.

ஆனால் பதின்ம வயதில் அத்தான் மனேஜராக இருந்த சங்கக்கடையில் வேலை செய்திருக்கின்றேன் :) அவர் வீட்டு வேலைகளை/தோட்ட வேலைகளைப் பார்க்க நானே கடையை நடத்தியிருக்கின்றேன்!!!

பெரும் பணக்காரனாக வரும் ஆசையிருந்தால் The Wolf of Wall Street படத்தைப் பாருங்கள் :icon_idea:

*காஷியர் ஒருவர் பிந்தி வந்தாலோ அல்லது வராமல் விட்டாலோ அந்தரப்பட்டு மாற்று ஏற்பாடுகளைக் கவனிக்கவேண்டும்.

விடை: விசா இல்லாமல் வேலை செய்யும் ஆக்களை வைத்து இருப்பதே, அவர்கள் தங்களின் சொல்லை கேட்டு ஒழுங்க்காக நடப்பார்கள் என்ற படியால்தான். வழக்கமாக வீட்டில் விடிய விடிய தூங்கி கிடக்காமல், அப்படி ஓரிரு நாள் தான் வேலை செய்யதால் தான் வேலை கஷ்டம் விளங்கும்.

* களவு, drive-off போன்ற பொலிஸ் விடயங்களைப் பார்க்கவேண்டும்.

விடை: இது இலகுவானது. களவு நடக்குதோ இல்லையோ களவு நடப்பதாக காட்டி, tax ல் கழித்துவிடுவார்கள். drive off ம் இது போன்றதே. நடக்கும் கழவு, drive off க்கு CCTV யை police க்கு கொடுக்க வேண்டும்.

* சரியான நேரத்திற்கு எரிபொருள், கடைக்கான பொருட்கள் (முக்கியமாக பால், பேப்பர்) வருகின்றனவா என்று பார்க்கவேண்டும்.

விடை: ஒன்றும் கஷ்டமான வேலை இல்லை. பால், பேப்பர் company காரன் காலையில் போட்டு மிஞ்சியதை எடுத்தும் கொண்டும் போவான். எரிபொருள், அதுவும் லெவல் பார்த்து call அடிச்சா வந்து சேரும்.

* கஷ்டமான வாடிக்கையாளர்களை எப்படிச் சமாளிக்கவேண்டும் என்று காஷியருக்குக் கற்றுத் தரவேண்டும்.

விடை: வாடிக்கையாளர்களை சேவை / customer service பற்றி எல்லாம் எங்கடை ஆள்கள் கவலைபடுவதில்லை. ஏனென்றால், ஐரோப்பாவில் இருந்து களவாக எடுத்து மலிவாக விற்கும் பீர்க்கு வெள்ளை வரும் என தெரியும்.

* ஒரே நேரத்தில் கடையையும், forecourt ஐயும் கண்காணிக்கும் திறமையைச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

விடை: இது பெரிய விடயம் கிடையாது. இப்ப CCTV இருக்கு.

* வாடிக்கையாளர்களுடன் நயமாகக் கதைப்பது பற்றிச் சொல்லிக்கொடுக்கவேண்டும்.

விடை: விளங்காத English க்கும் சிரிச்சு மழுப்பும் எங்களுக்கு இது பெரிய விடயம் இல்லை.

* விற்பனையைக் கூட்டும் தந்திரங்களை அறிந்து வைத்திருக்கவேண்டும்.

விடை: 1. ஐரோப்பாவில் இருந்து களவாக எடுத்து மலிவாக விற்கும் பீர், சிகரெட்.

2. tax க்கு வருமானத்தை குறைவாக காட்டுதல்.

3. கை காசுக்கு visa இல்லாத ஆட்களை வேலைக்கு வைச்சு அடிமாட்டு சம்பளம் கொடுத்தல்.

4. களவு, drive off, எரிபொருள் ஆவியாதல் போன்றவைகளை மிக அதிகமாக காட்டுதல்.

* எப்படி penny penny ஆகப் பொறுக்கி உழைக்கவேண்டும் என்று சிந்தித்துச் செயலாற்றவேண்டும்.

விடை: இதை விட கள்ள வேலை செய்துதான் கனக்க உழைக்கலாம் என எங்கட ஆட்களுக்கு தெரியும்.

நல்லது. நன்றாகப் படிப்பதன் மூலம் வாழ்வின் உச்சங்களைத் தொடலாம் என்று பல வருடங்களை படிப்பதற்குச் செலவழித்து வேலை செய்து படிப்படியாக முன்னேற ஒரு நேர்கோட்டுப் பயணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள். இதைத்தான் படிப்பினால் மட்டும்தான் வாழ்வில் முன்னேறமுடியும் என்று பலர் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அந்த முன்னேற்றம் என்பது என்ன என்பதில் தெளிவு இருக்கவேண்டும். சிலருக்கு அதிக பணம் சம்பாதித்து பணம் மூலம் எதையும் வாங்கலாம் என்ற நோக்கம் இருக்கும். சிலருக்கு சக மனிதர்கள் அடிமைகளாக, அறிவற்றவற்றவர்களாக, பிறரால் ஏமாற்றப்படுபவர்களாக இருப்பதைத் தடுக்க பணத்தை நோக்கமாகக் கொள்ளாத தொண்டூழியம் செய்வது நோக்கமாக இருக்கும். சிலருக்கு தான், தனது குடும்பம்தான் முக்கியம்; மற்றவரைப் பற்றிய அக்கறை தேவையில்லை என்ற சிந்தனை இருக்கும்.சிலருக்கு பணத்தைவிட பேருடனும் புகழுடனும் வாழவேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

இப்படிப் பல்வேறு வகைகளில் ஒருவரின் வாழ்வின் வெற்றிவிருப்புகள் வேறுபடுகின்றன.

அதிகம் படிக்காமல் ஒருவர் தொழில் செய்து பணக்காரனாக வந்தது உங்களின் நேர்கோட்டுப் பயணத்தை விட அதிவேகமாகச் செல்லும் அடுக்கு வளர்ச்சிப் பாதை (e^x) என்பதைக் கண்டதும் உங்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணியுள்ளது என்றுதான் தோன்றுகின்றது. அதனால்தான் பெரும்பாலானவர்கள் குறுக்குவழியில், கள்ள வேலைகள் செய்து முன்னேறியுள்ளனர் என்ற நம்பிக்கையை உங்களுக்குள் ஏற்படுத்தியுள்ளது. முதலில் எல்லோருமே கள்ளர்கள் என்று சொன்ன நீங்கள் இப்போது அநேகமானவர்கள் கள்ளர்கள் என்று சொல்வதுகூட படிநிலை மாற்றமே. இறுதியில் அநேகமானவர்கள் நேர்மையான வழியில் கடின உழைப்பினால் முன்னுக்கு வந்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லது மாட்டீர்கள். இது உண்மைநிலையில் ஒரு மாற்றத்தையும் கொண்டுவரப்போவதில்லை. தொழில் செய்பவர்கள் இன்னும் இன்னும் பணக்காரர்களாக வருவார்களே ஒழிய பஞ்சத்தில் வாடப்போவதில்லை. முட்டாள்தனமான காரியங்களில் ஈடுபடும் ஒரு சிலரை சட்டமும், வரித் திணைக்களமும் பார்த்துக்கொள்ளும். அந்த ஒரு சிலரை வைத்து ஒட்டுமொத்தமாக பெற்றோல் ஸ்ரேசன், கடைகள் வைத்திருப்பவர்கள் எல்லாம் கள்ள மட்டை போடுபவர்கள் என்று சொல்லக்கூடாது!

உங்களுக்குச் சொல்லக்கூடியது ஒன்றுதான். நீங்கள் தேர்ந்தெடுத்த வழி உங்களை வாழ்வின் உச்சத்திற்கு கொண்டுசெல்லும் என்ற நம்பிக்கையுடன் அதனைப் பின்பற்றுங்கள். சந்தேகம் இருந்தால் சரியான வழி எது என்று ஆராய்ந்து, சரியானவர்களுடன் கூடிப் பேசி, உங்கள் தெரிவை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களை அடிமாட்டுச் சம்பளம் தந்து வேலை வாங்கிய தமிழனை வாழ்நாள் முழுவதும் மறக்காதீர்கள். அவரைவிட படிப்பு அதிகம் உள்ள நீங்கள், அவரை விடப் புத்தியுள்ள நீங்கள், அவரைவிட பணக்காரனாக வரவேண்டும் என்று ஆசையிருந்தால் அதற்கான நேர்மையான வழியில் முன்னேறுங்கள்.

முன்னர் எங்கோ படித்தது..

"ஒரு பிச்சைக்காரன் பணக்காரனைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. தன்னைவிட வசதியான பிச்சைக்காரனைப் பார்த்தே பொறாமைப்படுவான்."

Link to comment
Share on other sites

மீரா, உங்களுக்கும் UK பற்றி நல்ல தெரியும்போல?

அவர் அங்க வானொலி எல்லாம் நடத்தினவர் ஒரு காலத்தில் :o:icon_mrgreen::lol:

 நீங்கள் இப்படி கேட்கலாமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அங்க வானொலி எல்லாம் நடத்தினவர் ஒரு காலத்தில் :o:icon_mrgreen::lol:

நீங்கள் இப்படி கேட்கலாமா

ரிவி பேப்பர் நடத்தினதையும் சொல்லலாமே ஆரணி என்ன கண்டுபிடிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை பாராட்டுகிறேன். நீங்கள் நேர்மையான வழியில் இருந்த படியால்தான் இப்பவும் போராடித்தான் வாழ்க்கையை நடத்துகிறீர்கள். UK நிலைமை அப்படி இல்லை. அநேகமான பெட்ரோல் ஸ்டேஷன் சொந்தகாரர்கள், தாங்களே தங்களின் கடைக்கு மேனேஜர் என சொல்லி கொள்ளும் சில பேர் வழிகள் ஏதோ ஒரு கள்ள வழியில் தான் காசு சேர்த்தவை. UK ல் இருக்கும் ஆக்களை கேட்டுபாருங்கள்.

எனக்குத்தெரிய விசா பிரச்சனையிலை இருக்கிற எங்கடை பெடியளை அடிமைவேலை செய்விச்சு  முன்னேறின மனேச்சர்மாரும் லண்டனிலை எக்கச்சக்கமாய் இருக்கினம்.
அவையள் அங்கையும் றோயல்......இஞ்சையும் றோயல் எண்டு இப்ப கதை விட்டுக்கொண்டிருக்கினம். :o  :o
 
செய்யும் தொழிலை நான் மதிப்பவன்.  :wub:
 
ஆனால் பெற்றோல் செட் மனேச்சர்மாரும் இந்தியன் பலசரக்குக்கடை எக்கவுண்டன்மாரும் தமது பழைய நிலமையை மறந்து ஏதோ இங்கிலாந்து மகாராணி பரம்பரம்பரை மாதிரி பந்தா காட்டும் தண்டிகைகளை / குடில்களை ஜீரணிக்க முடியவில்லை.  :(
 
அது சரி படிச்ச கிறவுட்டுக்கு பெற்றோல் செட்டிலை/ இந்த திரியிலை என்ன வேலை????
 
அவைக்குத்தான் அங்கை டொக்டர் எஞ்சினியர் வேலையள் வரிசையிலை நிக்குதெல்லே. :icon_idea:  :D  :lol:
Link to comment
Share on other sites

UKல், ஒரு கடை எடுத்து நடத்த எந்த சிறப்பு திறமையும் தேவையில்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். நீங்கள் அந்த துறைக்குள் வெளியில் நின்று பார்ப்பதால், அதை பெரிதாக நினைக்கிறீங்கள்.
முதலில் தேவை, முதலீடும் உரிய விசாவும். அது இரண்டும் கிடைக்காதபடியால் தான், எங்கடை பெடியள் பல பேர், இப்பவும் அடிமாட்டு சம்பளத்துக்கு வேலை செய்கினம்.
அநேகமானவர்கள் UKல், இயக்கத்தை காட்டி கொடுத்து, நாட்டுப் பிரச்னையை காரணம் காட்டிதான் விசா எடுத்தவை. பிறகு கள்ள வேலை செய்து காசு பிரட்டி கடை போட்ட பிறகு, செருக்கு.
எனக்கு தெரியும் எத்தனையோ இயக்க பொடியள், நாட்டுக்காக உயிரை மறந்து தங்கள் சனம் நல்லாக இருக்கவேணும் என்ற உயர்ந்த தாயக விடுதலைக்காக போராடி, கடைசியில் UK வந்து சேர்ந்தா, இவர்களின் கடையில் தான் வேலை பார்க்கினம். அவர்களையும் சந்தேக கண் கொண்டு பார்க்கும் இந்த கடைக்காரங்கள் ******** தான் சமன்.

நியானி: கண்ணியமற்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்க்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கவெண்டு படிப்புவிசாவிலை வந்தவையும் இரண்டு/மூண்டுவருசம் படிக்கிறம் எண்டு கவுண்மேந்தை பேக்காட்டிப்போட்டு......baeren372.gif
 
ஒரு சிற்றிசன் எடுத்த அகதிப்பெட்டையை மடக்கி சிற்றிசன் லைசன்ஸ் எடுத்துப்போட்டு.....medium-smiley-126.gif
 
அரபுக்காரன் மாதிரி மீசையும் தாடியும் வைச்சுக்கொண்டு ......
பெற்றோல் ஸ்ரேசன் நடத்தீனமாம். :lol:
 
முளைச்சு மூண்டு இலை விடக்கிடையிலை பென்ஸ்சாம்....பிஎம்டபிள்யூவாம் லாண்ட் ரோவராம்... :icon_mrgreen:
பேஸ்புக்கிலை பந்தாவாம்....
 
நியானி: ஒரு படம் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

இது நடந்தது 2006 - 2010 காலப் பகுதியில். எனது நண்பன் ஒருத்தனின் அண்ணா. UK இல் தான் இருந்தார். இலங்கைக்கு சாமான்களை கொண்டேயினர் கணக்காக அனுப்பிக் கொண்டிருந்தார். டிஸ் அண்டனா பெரிய டிவி இலிருந்து மடிக்கணணி, கைத் தொலைபேசி வரை எல்லா சாமான்களும் வந்து இறங்கிக் கொண்டிருந்தது. வெள்ளவத்தையில் காணியுடன் சேர்ந்த ஒரு வீட்டையும் பல கோடிகளுக்கு வாங்கினார்கள். எனக்கோ பிரமிப்பு. அடுத்ததாக BMW ஒன்று இறக்கப் போகிறோம் என்று நண்பன்  சொல்லியிருந்தான். அவன் சொல்லியிருந்த அண்ணாவின் வேலை UK பெற்றோல் நிலைய பங்குதாரர்/குத்தகைக் காரர். எனக்கும் வெளிநாடுகளில் பல உறவினர்கள் இருந்ததால் அவர்கள் சொன்ன ஒரே விடயம் இவர் எதோ கள்ள வேலை செய்கிறார், இல்லாவிட்டால் இவ்வளவு உழைக்க முடியாது. ஒன்றில் மட்டை அடிக்கிறார் அல்லது தூள் வியாபாரம் செய்கிறார், அந்தக் காசு UK இல் சட்டவிரோதமானதால் அந்தக் காசை இலங்கைக்கு மாத்தி சொத்துக்களில் முதளிடுகிறார் என்று. ஒருவருடம் ஓடியது, கள்ளமட்டை அடித்ததில் அன்னாரைத் தேடி இன்டர்போல் வந்தது. ஆள் தப்பி ஓடி நாடு நாடாக மாறி வேறொரு பெயரில் கனடாவில் புகுந்து விட்டார். ஆள் இப்போது இருக்கும் இடம் கூட யாருக்கும் சொல்வதில்லை.

நான் படிப்பது எனது தொழில் ரீதியான ஆளுமையை வளர்ப்பதற்கும் சிறந்த நிறுவனங்களில் சிறந்த மூளைகளுடன் சிறந்த நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்குமே. வாழ்க்கையில் பணம் மட்டும்தான் குறிக்கோள் என்றால் அதை உழைக்க வேறு பல வழிகள் இருக்கு. அரியபல கண்டுபிடிப்புக்களை நிகழ்த்திய விஞ்ஞானிகள் பலர் ஏழைகளாகவே செத்துப் போயிருக்கிறார்கள். படிப்பு வாசனையே அற்ற சில வியாபாரிகள் இவற்றை வித்துக் கோடிக்கணக்கில் காசு பாத்திருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

steve-jobs-vs-dennis-ritchie.jpg

இதனை விட எனக்கு நல்ல உதாரணம் தெரியவில்லை .....உங்களில் எத்தனை பேருக்கு Dennis Ritchie ஐ தெரியும் 
ஆனால் எல்லோருக்கும் Steve Jobs ஐ தெரியும்,  Ritchie அவராகவே வாழ்ந்தார் ,மறைந்தார் ,ஆனால் C Language படிக்கும் ஒவ்வொரு மாணவனும் Unix OS படிக்கும் ஒவ்வொரு மாணவியும் Ritchie ஐ பற்றி படிப்பார்கள் ,Apple இருக்கும் வரை Steave Jobs இருக்கலாம்  ,நாளை Orange என்று ஒரு நிறுவனம் வரலாம் Apple காணாமலே போகலாம் அப்போது Jobs உம் காணாமலே போய் விடுவார் .  ஆனால் கணணி இருக்கும் வரை Denis இருப்பார் 
மென்பொருள் துறையில் இருக்கும் எங்கள் ஒவ்வொருவருக்கும் Dennis ஒரு Role-model 
jobs ஒரு சிறந்த வியாபாரி அவ்வளவே .......இந்த சிறிய வித்தியாசம் கூட உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லையாயின் 
:(  :(  :(  :(  :(

Link to comment
Share on other sites

********

நான் UKல் படிக்கும் போது பகுதி நேரமாக, தமிழர்கள் இல்லாத ஒரு இடத்தில் BP ல் 20 மணித்தியாலம் தான் வேலை செய்தேன். படிப்பு முடிய முதலே ஒரு பெரிய கம்பெனி வேலை தந்தான் நல்ல சம்பளத்தோடு (£50,000 in 2005, financial modeller). இதை விட, போனஸ் £10,000 தேறும் வருசத்துக்கு. எண்ட வீடு இப்பவும் Surreyல் இருக்கு. சில வருடங்களுக்கு முதல் என்னை ஆஸ்திரேலியாவிற்கு AUD 200,000 (£75,000) வருச சம்பளத்துக்கு கேட்டாங்கள், வந்துட்டன். வந்த பிறகுதான் தெரியுது, இங்க சிவில் பொறியியலாளர் AUD 200,000 சிம்பிளா எடுக்கிறாங்கள் என.
என் தூர உறவு ஒன்று பெட்ரோல் கடை வைச்சு இருந்தது. அவர் கிரெடிட் கார்டு போட்டுதான் கடை எடுத்து நடத்துறார். அவர் தான் தங்களின் டிமிக்கி வேலைகளை பெருமையுடன் சொல்லுவார்.

Inferiority complex காரணமாக தான் நான் இதை எழுதிகிறேன் என்றால் தவறு. நான் ஒரு நாளும் பெட்ரோல் கடை காரருடன் என்னை ஒப்பிட்டது கிடையாது. விடுதலை போராட்டத்தால் இந்த உலகில் மிகவும் நேசித்த என் உறவையும் இழந்து இப்போதும் அழுது கொண்டிருக்கும் எனக்கு என் நண்பன் ஒருவனின் துயர வடு தான் இந்த திரியை எழுத தூண்டியது. ஒவ்வொரு நாழும் பேப்பர் பார்க்கும்போதும் புலிகளின் குரல் கேட்கும்போதும், உறவின் / பிள்ளையின் பெயர் வீரவணக்க பெயர்களில் வரக்கூடாது என ஏங்கி வாழ்ந்த குடும்பங்கள் இப்பவும் கஷ்ட பட்டு கொண்டு இருக்க, அதையே மூலதனமாக்கி விசா எடுத்து பெருமை பேசிக்கொண்டு வாழும் இந்த UK தமிழ் சமுதாயத்தை பார்க்க வெறுப்பு தான் வருகுது.

நியானி: ஆங்கிலத்தில் இருந்த கண்ணியமற்ற மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கவெண்டு படிப்புவிசாவிலை வந்தவையும் இரண்டு/மூண்டுவருசம் படிக்கிறம் எண்டு கவுண்மேந்தை பேக்காட்டிப்போட்டு......baeren372.gif

ஒரு சிற்றிசன் எடுத்த அகதிப்பெட்டையை மடக்கி சிற்றிசன் லைசன்ஸ் எடுத்துப்போட்டு.....medium-smiley-126.gif

கு.சாண்ணாக்கு இன்னொரு விசயம் தெரியல்லைப் போல. இப்ப படிக்க என்றும்.. சாமத்திய வீட்டுக்கு.. பிள்ளைப் பெறு பார்க்க என்றும் வார எங்கட ஆக்கள் நாட்டுக்கு திரும்பிப் போறதே இல்லை. எல்லாரும் அசைலம் தான். படிப்பு விசாவை நம்மவர்கள் அசைலத்துக்கான வாகனமாகப் பாவிக்கிறார்கள். அதேபோல் விசிட்டர் விசாவும்.

இன்று உண்மையில் படிக்கப் பிரியப்படும் பலர் விசா இன்றி அவதிப்பபட.. அசைலம் அடிக்க மாணவர் விசாவை பயன்படுத்தும்... இந்த நாதாரிக் கூட்டத்தின் சுயநலச் செயற்பாடுகள் தான் காரணம். எங்கள் ஊடகங்கள் சில.. கொழும்பில் அவர் கைது.. இவர் கைதுன்னு செய்தி போடுவதன் பின்னால்.. அகதி அந்தஸ்து காசு விளையாடுது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

அண்மையில்.. ஒருவர் படிக்க என்று வந்து.. ஊர் போய் திரும்பி வரும் போது.. வந்த உடன் அசைலத்துக்கு போனார். ஒருவாரம் கழித்து அவருக்கு அசைலம் கிடைத்துவிட்டதாம் என்றார்கள். மாணவர் விசாவில் மல்ரி என்ரி விசாவை எடுத்திட்டு.. இங்க படிக்கிறதில்ல. ஊருக்கு போய் ஒரு நியூசை இவர்களின் பெயரில் வர வைச்சு அந்தப் பேப்பர் கட்டிங்கோட வர வேண்டியான். வந்து அசைலத்துக்கு கதை எழுதிக் கொடுக்கும் லண்டன் வாழ் சட்டத்தரணிகளிடம் சரணடைய வேண்டியான். அவர்களே மிச்சத்தை பார்த்துக் கொள்வார்கள்.

இன்றும்.. ஊரில பிரச்சனை இருக்கனும்.. என்று விரும்பிற ஆக்களில் பலர் இந்த வகையினரே. ஊரில் உள்ள மற்றும் இணைய ஊடகங்கள் சில காசை வாங்கிக் கொண்டு இதைச் செய்கின்றன. இன்னும் சிலர் தேசியத்துக்காக உழைக்கிறம் என்று லண்டனில் ஊர்வலம்.. மற்றும் தேசிய ஊடகம் என்று சொல்லிக் கொள்ளும் சில ரிவி வானொலிகளில் முகத்தை காட்டிட்டு அந்தப் படங்கள் வீடியோக்களை காட்டியும் அசைலம் அடிக்கினம். 

நம்மவர்களைப் பொறுத்தவரை அசைலம்.. ஒரு பொன் முட்டை  போடும் வாத்து. நாடு மக்கள் எப்படிப் போனால் என்ன. படிப்பென்னெ படிப்பு. அசைலம் கிடைக்குமென்றால் தமிழன் பொலிடோலும் குடிப்பானுன்னு எனி மாற்றி எழுதலாம். இப்படியாப்பட்ட இனம்.. தேச விடுதலையின் பெறுமதி அறியும். படிப்பு விசாவின் பெறுமதி அறியும்.  விசிட் விசாவின் பெறுமதி அறியும். இல்லைவே இல்லை.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசனுக்கு..

வார்த்தைப் பிரயோகங்கள் நல்லா இல்லை. எம்மவர்களின் தில்லுமுல்லுகளை அதனால்.. மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும் நீங்கள் இதய சுத்தியோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவம் அடைய வேண்டும்.

அண்மையில்.. ஒரு வங்கி பணமெடுப்பு நிலையத்தில்.. முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டு அகதி அந்தஸ்து பெற்ற ஒரு தாய் பணம் எடுக்க வந்த போது எம்மவர்களில் சிலர் அந்த தாயிடம் அவசர அவசரமாக சில பேப்பர்களைக் காட்டி விபரம் கேட்க அவரும் அவர்களுக்கு உதவிற மனப்பான்மையில் இருக்க.. அவரின் வங்கி அட்டையை உருவிய  அந்தக் கூட்டம் அவரின் வங்கியில் இருந்த பணத்தில்.. 300 பவுண்களை ஆட்டியை போட்டுவிட்டது. இதில் அவர் அரச உதவியே தான் தஞ்சம் என்று வாழ்கிறார்.

இப்படிக் கொள்ளை அடிப்பவர்கள் தான் பின்னாளில்.. ஒரு பெற்றோல் ஸ்ரேசனையோ.. கோழிக்கடையோ வைச்சு அங்கும் கொள்ளை அடிக்கிறார்கள். உங்களுக்கு தெரியுமா.. லண்டனில் எம்மவர்கள் கடைகளில்.. பெற்றோல் ஸ்ரெசனில் எம்மவர்களே வங்கி அட்டைகளை பாவித்து காசு கொடுப்பதில்லை. ஆனால் மற்ற இடங்களில்.. contactless பணப்பரிவர்த்தனை கொடிகட்டிப் பறக்குது. எம்மவர்களுக்கு அது கூடப் பயம். எதனால்.. யாரால்.. எம்மவர்களாலேயே தான்.  :)  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

steve-jobs-vs-dennis-ritchie.jpg

இதனை விட எனக்கு நல்ல உதாரணம் தெரியவில்லை .....உங்களில் எத்தனை பேருக்கு Dennis Ritchie ஐ தெரியும் 

ஆனால் எல்லோருக்கும் Steve Jobs ஐ தெரியும்,  Ritchie அவராகவே வாழ்ந்தார் ,மறைந்தார் ,ஆனால் C Language படிக்கும் ஒவ்வொரு மாணவனும் Unix OS படிக்கும் ஒவ்வொரு மாணவியும் Ritchie ஐ பற்றி படிப்பார்கள் ,Apple இருக்கும் வரை Steave Jobs இருக்கலாம்  ,நாளை Orange என்று ஒரு நிறுவனம் வரலாம் Apple காணாமலே போகலாம் அப்போது Jobs உம் காணாமலே போய் விடுவார் .  ஆனால் கணணி இருக்கும் வரை Denis இருப்பார் 

மென்பொருள் துறையில் இருக்கும் எங்கள் ஒவ்வொருவருக்கும் Dennis ஒரு Role-model 

jobs ஒரு சிறந்த வியாபாரி அவ்வளவே .......இந்த சிறிய வித்தியாசம் கூட உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லையாயின் 

:(  :(  :(  :(  :(

ஜொப்... லினிக்சுக்கு பெறுமதியை தந்த ஒருவர். சும்மா லினிக்சை எழுதி வைச்சிட்டு இருந்திருந்தா.. அப்படி எழுதிய எத்தனையோ காணாமல் போயிட்டுது. அப்படி காணாமல் போய் இருப்பார்கள். இன்று அறிவியல் என்பது வியாபாரத்துக்கே. இது வியாபார உலகம் என்ற அடிப்படையில் நின்று தான் நாம் எம் முன்னேற்றத்தை அது கல்வில்.. பொருண்மியத்தில்...சமூகவியலில்.. சூழலியலில் பார்க்க வேண்டி உள்ளது. இல்ல யாருமே கண்டுகொள்ளாமல் கிடந்த வலன்டைன்ஸ் தாத்தாக்கு இன்று.. கோடி டொலர்கள் வருவாய் கொட்டும்.. அந்தஸ்துக் கொடுத்தது யார்.வியாபாரமே தான். ஜொப்ஸ் சிறந்த வர்த்தக முகாமையாளர். அவர் அவரது துறையில் எப்பவும் பிரகாசிப்பார்.  :icon_idea:  :)

Link to comment
Share on other sites

UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த என்ன தகுதி வேண்டும்?

இந்த திரியின் தலைப்பு  hijaked செய்ய பட்டு பல்வேறு துணை துதிபாடல் / நிந்தனை வழிகளில் செல்கிறது. தலைபிற்கு பதில் அளிபது போல் குத்தல்களும் கேலிகளும் இணைக்க படுகிறது. ஆகவே கேள்விக்கு பதில்  UK ல் சொந்த கடை / பெட்ரோல் ஸ்டேஷன் நடத்த தகுதி பிரச்சினை இல்லை or தேயையும்இல்லை Phd முதல் OL வரை யாரும் செய்யலாம் /  செய்கிறார்கள். அவர்கள் செய்வது பிழையானால் தயவுசெய்து அரசாங்க நிறுவனங்களுக்கு அறிவிக்கவும். பிழை என்ன தெரிந்தும் அவர்களின் கீழ் வேலை செய்வது கூட (professional code conduct) சட்ட விரோதமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜொப்... லினிக்சுக்கு பெறுமதியை தந்த ஒருவர். சும்மா லினிக்சை எழுதி வைச்சிட்டு இருந்திருந்தா.. அப்படி எழுதிய எத்தனையோ காணாமல் போயிட்டுது. அப்படி காணாமல் போய் இருப்பார்கள். இன்று அறிவியல் என்பது வியாபாரத்துக்கே. இது வியாபார உலகம் என்ற அடிப்படையில் நின்று தான் நாம் எம் முன்னேற்றத்தை அது கல்வில்.. பொருண்மியத்தில்...சமூகவியலில்.. சூழலியலில் பார்க்க வேண்டி உள்ளது. இல்ல யாருமே கண்டுகொள்ளாமல் கிடந்த வலன்டைன்ஸ் தாத்தாக்கு இன்று.. கோடி டொலர்கள் வருவாய் கொட்டும்.. அந்தஸ்துக் கொடுத்தது யார்.வியாபாரமே தான். ஜொப்ஸ் சிறந்த வர்த்தக முகாமையாளர். அவர் அவரது துறையில் எப்பவும் பிரகாசிப்பார்.  :icon_idea:  :)

jobs ஒரு சிறந்த வியாபாரி......யாரோ எழுதிய Linux இற்கு விலைப்பட்டியல் 

ஓட்டியவர் . UK இல் சொந்த கடை நடத்த இந்த தகுதி போதும் 

இப்போது கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் ,கணணி விற்க கணணி மொழி தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை 

விற்பவரை தான் நுகர்வோருக்கு தெரியுமே தவிர அதனை தயாரித்தவரை அல்ல 

அவரது துறையில் அவர் சிறந்தவர் தான் அதே போல் தான் UK பெட்ரோல் Manager. யாரோஒருவருடைய  உழைப்பில் Jobs வாழ்ந்தது போல

Manager உம் வாழ்ந்து விட்டு போகட்டுமே  , Jobs செய்தால் சிறந்த வர்த்தக முகாமையாளர் . அதையே சக தமிழன் செய்தால் கள்ள மட்டை அடிப்பவன்

நல்ல நீதிடாப்பா சாமி ......

Link to comment
Share on other sites

இப்போ பெற்றோல் ஸ்ரேசனை கணக்கில் எடுப்பதில்லை. எல்லாம் நட்டத்தில்  போகிறது. பெரிய நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு பெற்றோல் விற்கிறார்கள்.  ..   புதிதாக வாங்க ஒருவரும் முன்வருவதில்லை...  கொமிசனுக்கு கூட எடுக்க ஆட்கள் இல்லை

நல்ல இடத்தில் இருக்கும் சில   நிரப்பு நிலையங்களே   வருமானத்தை கொடுக்கின்றன,

கோழிப்பொரியல் கடை ஒன்று தான் தற்போதைக்கு  போட்டி சந்தையை சமாளித்து  நடாத்த கூடியதாக உள்ளது.

மற்றைய  அனைத்து வியாபாரங்களும்   போட்டியை சந்திக்க முடியாமல் திணறுகினறன.   சட்டப்படி வியாபாரம் செய்வதானால்   கடையை பூட்டி  விட்டு  வரி இலாகா விடம்  திறப்பை கொடுக்கலாம்.

நந்தன்

நந்தன்

நந்தன்......... :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

********

நான் UKல் படிக்கும் போது பகுதி நேரமாக, தமிழர்கள் இல்லாத ஒரு இடத்தில் BP ல் 20 மணித்தியாலம் தான் வேலை செய்தேன். படிப்பு முடிய முதலே ஒரு பெரிய கம்பெனி வேலை தந்தான் நல்ல சம்பளத்தோடு (£50,000 in 2005, financial modeller). இதை விட, போனஸ் £10,000 தேறும் வருசத்துக்கு. எண்ட வீடு இப்பவும் Surreyல் இருக்கு. சில வருடங்களுக்கு முதல் என்னை ஆஸ்திரேலியாவிற்கு AUD 200,000 (£75,000) வருச சம்பளத்துக்கு கேட்டாங்கள், வந்துட்டன். வந்த பிறகுதான் தெரியுது, இங்க சிவில் பொறியியலாளர் AUD 200,000 சிம்பிளா எடுக்கிறாங்கள் என.

என் தூர உறவு ஒன்று பெட்ரோல் கடை வைச்சு இருந்தது. அவர் கிரெடிட் கார்டு போட்டுதான் கடை எடுத்து நடத்துறார். அவர் தான் தங்களின் டிமிக்கி வேலைகளை பெருமையுடன் சொல்லுவார்.

Inferiority complex காரணமாக தான் நான் இதை எழுதிகிறேன் என்றால் தவறு. நான் ஒரு நாளும் பெட்ரோல் கடை காரருடன் என்னை ஒப்பிட்டது கிடையாது. விடுதலை போராட்டத்தால் இந்த உலகில் மிகவும் நேசித்த என் உறவையும் இழந்து இப்போதும் அழுது கொண்டிருக்கும் எனக்கு என் நண்பன் ஒருவனின் துயர வடு தான் இந்த திரியை எழுத தூண்டியது. ஒவ்வொரு நாழும் பேப்பர் பார்க்கும்போதும் புலிகளின் குரல் கேட்கும்போதும், உறவின் / பிள்ளையின் பெயர் வீரவணக்க பெயர்களில் வரக்கூடாது என ஏங்கி வாழ்ந்த குடும்பங்கள் இப்பவும் கஷ்ட பட்டு கொண்டு இருக்க, அதையே மூலதனமாக்கி விசா எடுத்து பெருமை பேசிக்கொண்டு வாழும் இந்த UK தமிழ் சமுதாயத்தை பார்க்க வெறுப்பு தான் வருகுது.

நியானி: ஆங்கிலத்தில் இருந்த கண்ணியமற்ற மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

மாணவர் விசாவில் அல்லது தொழில் விசாவில் இருந்த உங்களால் எப்படி வீடு வாங்க முடிந்தது என்று தெரியவில்லை.

புலம் பெயர்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டு பிரச்சனையை காட்டியே விசா எடுத்தார்கள். இதில் UK யை மட்டும் குறிப்பிடுவது ஏனோ?

நீங்கள் இந்த திரியை எங்கோ ஆரம்பித்து இப்ப நாட்டு பிரச்சனையில் கொண்டு வந்துள்ளீர்கள்

Link to comment
Share on other sites

மாணவர் விசாவில் அல்லது தொழில் விசாவில் இருந்த உங்களால் எப்படி வீடு வாங்க முடிந்தது என்று தெரியவில்லை.

புலம் பெயர்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டு பிரச்சனையை காட்டியே விசா எடுத்தார்கள். இதில் UK யை மட்டும் குறிப்பிடுவது ஏனோ?

நீங்கள் இந்த திரியை எங்கோ ஆரம்பித்து இப்ப நாட்டு பிரச்சனையில் கொண்டு வந்துள்ளீர்கள்

 HSMP என்று ஒன்று இருந்ததாக ஞாபகம். அதில் இலகுவில் MP நுழைந்த்ருப்பார்- வேலை கிடைத்த பின். HSMP ல் வீடு வாங்கலாம்

Link to comment
Share on other sites

MP குறிப்பிடும் காலம் 2005 இற்கு பிற்பட்டது  ஆனால் 2011 இக்கு  முற்பட்டதென என நினைகிரேன். நான் 2009 ல் ஒரு தேவைக்கு  அவுச்ரேலியாவுக்கு காசு அனுப்பினான். அப்ப 1£ = 2.95 AUD

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.